செவ்வாய், ஜூலை 20, 2010

நாகர்கோவில் மீனவர்கள் போராட்டம் - அரிமா

நாகர்கோயில்: மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டியும் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கொட்டிய மழையின் நடுவில் குடைகளைக்கூட பிடிக்க மறுத்து மீனவர்கள் போராடினார்கள்.

இதில் தமிழர்களம் அமைப்பின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில்,

கடந்த காலங்களில் மீனவர்களை ஒடுக்குவதிலும் அவர்களின் போராட்டங்களை நசுக்குவதிலுமே மத்திய மாநில அரசுகள் முனைப்பு காட்டுகின்றனவேயொழிய அவர்களைப் பாதுகாப்பதிலும் உயர்த்துவதிலும் இழப்பீடுகள் அளிப்பதிலும் எள்ளளவும் கரிசனை கொள்வது கிடையாது.

1974 -ல் தி.மு.க. ஆட்சியின்போது பெருந்துறை மீனவர்களை ஒருவார காலமாக அடித்து உதைத்து ரத்தம் சிந்தச் சிந்த மீனவப் பெண்களை நிர்வாணமாகச் சுடுமணலில் நெடுநேரம் உட்கார வைத்த கொடுமை இந்த மண்ணில்தான் நடந்தது.

எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் மெரினா கடற்கரையை அழகுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கடற்கரைக் குப்பங்கள் வன்முறை வழியில் அகற்றப்பட்டன. மீனவர்கள் சிந்திய குருதியில் கடற்கரை நனைந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். மீனவ நண்பனாக திரைப்படத்தில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜாங்கிட் தலைமையில் 26 வாகனங்களில் இரும்புத் தடிகளோடு தமிழகக் காவல்துறையினரை பெருமணல் கிராம மக்கள் மீது ஏவிவிட்டு பெண்டு பிள்ளைகளையும் போராடிய அத்தனைப் பேரையும் ஏன், ஒரு நொண்டிச் சிறுவனையும்கூட விட்டு வைக்காமல் அடித்துத் தள்ளி குருதி சிந்த வைத்தது செயலலிதா அரசு.

இந்தத் திராவிடங்களின் ஆட்சியில்தான், ராமேசுவரம் நாகப்பட்டிணம் உள்ளிட்ட கிழக்குக் கடலில் இதுவரை 534 தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறிக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் மத்திய மாநில அரசுகள் கொலைகாரச் சிங்கள அரசுக்குத்தான் இன்றுவரை முட்டுக் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் 50 லட்சம் மீனவர்கள் இருந்தும் அரசின் இந்த எடுத்தெறிந்த போக்கு நமக்குக் கடும் சினத்தையே உண்டு பண்ணுகிறது .

அகிம்சைப் போராட்டங்களையெல்லாம் காந்தி தேசம் இதுநாள்வரை காலிலிட்டுத்தான் மிதித்திருக்கிறது. அமைதி வழிப் போராட்டங்கள், மனுக்கொடுத்தல், உண்ணாநோன்பு போன்ற போராட்ட வடிவங்களை அரசு இன்று எட்டிக்கூட பார்ப்பதில்லை. அப் போராட்ட மொழி அரசுக்குப் புரிவதுமில்லை. ஆட்சியாளர்களின் செவிகளுக்கு எட்டுவதுமில்லை. இப்படிப் புறக்கணிப்பதன் மூலம் அரசே வன்முறை வழிகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. இருப்பினும் நாம் பொறுமையோடு சனநாயக வழிமுறைகளையே முன்னெடுப்போம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பொறுக்கி திராவிடக் கட்சிகளையும் இந்திய தேசியக் கட்சிகளையும் முற்றாகப் புறக்கணித்து மீனவத் தமிழர்களாய் நாம் எழுந்து நம் வலுவை மெய்ப்பிப்போம்.

அரசுக்குக் கோடி கோடியாய் அன்னியச் செலாவணி வருவாய் ஏற்படுத்தித் தரும் உழைக்கும் மக்களான தமிழக மீனவர்களின் போராட்டங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் செவி மடுக்காத தமிழக அரசை சனநாயக வழியில் தூக்கி எறிந்துவிட்டு புதிய சமுதாயம் படைப்போம் என்றார்.

பின்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அனைத்துக் கோரிக்களையும் அரசின் பார்வைக்குக் கொண்டு செல்வதாக வாக்களித்தார்.

திங்கள், ஜூலை 19, 2010

துரோகி கருணா.... - அரிமா

கருணாநிதி நம்மவருமல்லர்! நல்லவருமல்லர்!!
அரிமாவளவன்
“வல்லான் வகுத்ததே வழி!” என்றிருந்தது ஒரு காலம். அது தடியர்களுக்கான காலம்! உடல் வலிமை கொண்டிருந்தவன் வென்றான், அவனே மக்களில் ஆண்களை மேய்த்தான், பெண்களை மேயந்தான்! விலங்காண்டித்தனமான வாழ்க்கை!
அறிவு நுட்பத்தை வைத்து பின்னர் ஆளத்தொடங்கினான்! நம்பூதிரிகள் மாதிரி! மேய்த்தலும் மேய்தலும் சூழ்ச்சி அடிப்படையில் நடந்தது. செயேந்திர சரஸ்வதி சங்கரராமனுக்குப் பிறகும்கூட ஒரு பெருங்கூட்டத்தை சச்சரவே இல்லாமல் ஆண்டு கொண்டுதானிருக்கிறார்.
அப்புறம் மன்னராட்சி வந்தது! மன்னன், அவன் மகன், மன்னனின் பேரன், “23ஆம் புலிக்கேசி”, உதயநிதி, தயாநிதி, போன்றதுகள்கூட பட்டத்தை எடுத்து தானாகவேச் சூட்டிக் கொண்டன!
பின்னர் “சனநாயகம்” என்று பரவலாகச் சொல்லபட்ட மக்களாட்சி மலர்ந்தது! உயர்குடிகளாகக் கருதப்பட்டவர்களும், செல்வந்தர்களும் வாக்களித்து முதலில் அந்த மக்களாட்சியை பகடிக்குள்ளாக்கினர். மார்வாடி, பனியாக்கள், பிராமணர்கள், பணக்காரர்கள், நேரடி வரிச் செலுத்துவோர் ஆகியோர்தான் வாக்களித்தார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த அந்த உதவாக்கரைகள்தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்தன! பின்னர் அகவை வந்தவர்களுக்கெல்லாம் வாக்கு என்று வந்தது. பீகார், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் வாக்குச் சாவடிகளையே முழுமையாகக் கைப்பற்றி வாக்கு குத்திய காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய சனநாயக நாடு இந்தியாதான் என்று “முதல் பரிசை”த் தட்டிச் சென்று கொண்டிருந்தது. அது இன்னொரு சனநாயகப் படிமலர்ச்சிக் காலம். கரை வேட்டிக் கறைகளும் காந்திக் குல்லாத் துரைகளும் சிவப்புத் தோழர்களும் இப்படித்தான் சனநாயகத்தை ஒரு காலத்தில் வாழ வைக்க முயன்று கொண்டிருந்தார்கள். சனநாயகம் நாறிப்போன இந்த நிலையில் வாக்குச் சீட்டு சரிப்பட்டு வராது என்றும் மின்னணு வாக்கு எந்திரம்தான் செத்து நாறிப்போன சனநாயகப் பிணத்தை சடக்கென்று எழுந்திரிக்க வைத்துவிடும் என்று முயல, அழகிரியிசம் என்ற ஒரு நடைமுறைத் சித்தாந்தம் தோன்றியது! “சொல்லி அடிப்பேனடி” என்ற பாட்டு போல நாற்பது லட்சம் வாக்கு வித்தியாசம் என்றால், 40 லட்சம் சுளையாக வித்தியாசம் வந்து நிற்கிற புதிய சனநாயகப்பாதை பளிச்சென்று திறந்துவிடப்பட்டிருக்கிறது! ஒரு ஐநூறையும் அரைப் பொட்டலம் பிரியாணியையும் கால் குடுவைத் “கழனி”யையும் வாங்கிக்கொண்டு வீட்டில் குப்புறப்படுத்துத் துங்கு! சனநாயகத்தை நாங்கள் வாழ வைக்கிறோம் என்று களம் இறங்கிவிட்டார்கள். ஆக, நாறிப்போன பாரதச் சனநாயகத்தின் கதைச் சுருக்கம் இவ்வளவுதான்!
ஒரு புறம் அப்துல்காலம் பால்வாடிப் பிள்ளைகளிடம் வல்லரசுக் கனவுகளுக்கு உசுப்பேற்றிக் கொண்டு இருக்கும்போது திராவிடங்கள் பழைய விலங்காண்டி நிலையிலிருந்து அரை அங்குலம்கூட அசைய மறுக்கின்றன!
பழ கருப்பையா கருத்து சொன்னார்! கருணாநிதியின் தவறுகளைச் சுட்டிக் காட்டினார்! உதிரிக் கும்பல் வீடு புகுந்து தாக்கியிருக்கிறது. இதில் ஒபாமாவின் ஆட்கள் வந்து தாக்கியிருக்க வாய்ப்பில்லை! கருணாநிதியின் கைத்தடிகள் வந்து உசாவிவிட்டு, கருப்பையாவை லேசாக உருவிவிட்டு, உருட்டுக்கட்டையால் இரண்டு தட்டு தட்டிவிட்டுப் போக நிறையவே வாய்ப்பிருக்கிறது!
சீமான் வெகுண்டெழுந்தார்! 534 மீனவர்களைக் கொன்று குவித்திருக்கிறான் சிங்களன்! திராவிடச் சிறுக்கிகளும் பொறுக்கிகளும் கைச்சூப்பிக்கொண்டு ஒருவருக்கொருவர் எதிர்ப்பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார்கள்! சினம் வந்த சீமானோ தமிழன்! தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்கும் ஆந்திர முதல்வர் மரணத்திற்கும் தமிழ்நாட்டுக்கு விடுமுறை விடுகிற நீயோ, தெலுங்கன்! உன் உதிரம் கொதிக்காது, உன் நரம்பு புடைக்காது! காகத்தைக் கல்கொண்டு அடித்தால்கூட ஆயிரம் காகங்கள் வானத்தைக் கருப்பாக்கிக் கரைந்து கண்டனம் தெரிவிக்கிறதே! புழுவை நசுக்கினால்கூட முறுக்கி எழுந்த பின்னர்தானே அடங்கிப் போகிறது! ஆனால், என் இனம் மடியும்போதும், துடிக்கும்போதும் சாபமிடும் உரிமையைக்கூட நெரிக்கிறதே இந்தத் திராவிட அரசு!
சீமான் வன்முறையைத் தூண்டினாராம்! 20 நாட்டுப் படைகள் இந்திப் படைகளின் தலைமையில் ஈழத்தமிழரை கொன்று குவித்த காலத்திலுங்கூட 18 தமிழ் இளைஞர்கள் தங்கள் உடலை எரித்து தமிழ்த்தாயின் மடியில் சரிந்தார்களே தவிர சிங்களனையோ மலையாளிகளையோ, மாற்றினத்தாரையோ தாக்கவில்லையே! அது தமிழரின் பலவீனம் அல்ல பலம்! ஆன்ம பலம்! இயன்றவரை வன்முறையைத் தவிர்ப்பது வலியவனின் பெருந்தன்மை! ஆனால், சிறு நரிக்கூட்டம் தொடர்ந்து சீண்டுமானால், மானம் காக்க மக்களைக் காக்க பெண்டு பிள்ளைகளைக் காக்க தமிழன் திமிறி எழத்தானே வேண்டும்! வன்முறைத் தடுப்பு என்ற போர்வையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக் கையில் எடுத்திருக்கிற திராவிடர் அரசை எண்ணினால் கசாப்புக் கடைக்காரன் பேசுகிற சீவகாருண்யம் போலத்தான் தெரிகிறது!
தி.மு.க.வை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்த கட்சியாக இன்னும் ஒரு சில மனநிலை சிதைந்த மாந்தர்கள் நினைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அப்படி ஒரு நடிப்பு! திராவிடத்தை மொத்தமாகப் பிழிந்து சாறு எடுத்தால் வருவது தி.மு.க.தான்! அதன் வரலாற்றை அறிவது, தமிழகத்தின் எதிர்காலத்திற்கு இனி அவசியம் தேவை!
1973, சூலை 18. மாக்சியப் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த வி.பி. சிந்தன் தாக்கப்படுகிறார். சிம்சன் தொழிற்சங்கத்திற்கு குசேலர் தலைவராகவும் சிந்தன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தி.மு.க.விற்கு இது கடுப்பை ஏற்படுத்துகிறது. மாநிலப் பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட, சிம்சன் தொழிற்சங்கம் ஆதரவு தருகிறது. இது தொடர்பாக சென்னையை அடுத்த மாதவரத்தில் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது. சிந்தன் பொதுப் பேருந்தில் ஒரு பயணியாக அங்கு போய்க் கொண்டிருக்கிறார். இடை மறித்த 20 பேர் கடுமையாகத் தாக்கி அதில் ஒரு குத்து அவரது மூச்சுக் குழாயை அறுத்துக் கொண்டு போகிறது. சிந்தன் கடுமையான மருத்துவப் போராட்டத்திற்குப் பின்னர்தான் உயிர் பிழைத்தார்!
இந்த நிகழ்வுக்கு இரு மாதங்களுக்கு முன்னர்தான் கருணாநிதி திண்டுக்கல்லில் சூளுரைத்திருந்தார், “எனது கட்சியின் முதன்மைக் குறிக்கோளே, கம்யூனிஸ்டுகளை தமிழ்நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதுதான்” என்று! இறுதிக் குறிக்கோள், ஒட்டுமொத்தத் தமிழர்களையும் இல்லாதொழிப்பது என்று நினைத்திருக்கிறார் போலும்
இதே காலகட்டத்தில் பாளையங்கோட்டை கல்லூரிப் பேராசிரியர் ஒருவரைத் தாக்கிய நிகழ்வில் மாணவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட, கருணாநிதியின் காவல்துறை கண்மூடித்தனமாக மாணவர்கள்மீது தாக்குதல் நடத்துகிறது. அதில் மாணவர் ஒருவர் இறந்தும் போகிறார்.
திருச்சி கிளைவ் விடுதியில் விடுதி புகுந்து தாக்கியதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் குருதி வெள்ளத்தில் கிடந்ததை அன்று காணமுடிந்தது.
பெரியகுப்பத்தில் நடந்ததை மறக்க முடியுமா? ஒரு வாரம் நடந்த அட்டூழியத்தில் கழகக் கண்மணிகளும் காவல்துறை கனபாடிகளும் சேர்ந்து அந்த மீனவ மக்களுக்குச் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமா? மீனவப் பெண்களை அடித்து, கற்பழித்து, நிர்வாணமாக்கி, ஊர்வலம் நடத்தி, சுடுமணலில் உட்கார வைத்து கொடுமைப்படுத்தினர். வழக்கம்போல வீடு புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி ஆடு கோழிகளை அள்ளிச் சென்றனர்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாகச் சொல்லி வந்த தி.மு.க.வின் தொடக்க காலமே இதுதான்!
பரமத்தி வேலூரில் நடந்த மாணவர் கொலை, சட்டமன்றத்தில் செயலலிதா மீது நடத்தப்பட்ட தாக்குதல், தினகரன் ஏட்டின் ஊழியர்கள் மூவர் கொல்லப்பட்ட கொடுமை, மதுரை லீலாவதி கொலை, உட்கட்சி மோதலில் கொல்லப்பட்ட தா. கிருட்டிணன், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மீதான தாக்குதல், மாணவர் போராட்டம் ஒடுக்கப்பட்ட விதம் என்று பட்டியல் படு நீளமாக நீண்டு கொண்டே போகும்!
செம்மொழி அரிதாரம் பூசி வரும் கழகத்தின் உண்மை உரு இதுதான்!
“ஈழத் தமிழர் படுகொலையில் கருணாநிதி ஒரு போர்க் குற்றவாளி” என்று செயலலிதா இன்று குற்றம் சாட்டுகிறார். உரைப்பது செயலலிதா என்பதற்காக உண்மையை உதறித் தள்ளிவிட முடியாது! கருணாநிதி கடவுளாகவே கடந்து வந்தாலும் குற்றங்களை கழுவிக் கவிழ்த்துவிட இயலாது.
ஈழத்தமிழரும் விடுதலைப் புலிகளும் அந்தக் காலம் தொட்டே தமிழக் அரசியலைப் புரிந்தவர்களல்லர். இலங்கையிலிருந்து முதலில் விரட்டியடிக்கப்பட்டவர்கள் மலையாளிகளே! அப்படி ஒடிவந்தவர்களில் ஒரு குடுமபம்தான் கண்டியில் பிறந்து வளர்ந்த ம.கோ.இராவின் (எம்.ஜி.ஆரின்) குடும்பம். சிங்களக் காடையர்களின் மீது இருந்த கோவத்தை தீர்த்துக் கொள்ளவே விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவி செய்தார். திரைகளில் தொடர்ந்து நம்பியாரையும் அசோகனையும் புரட்டிப் புரட்டியெடுத்த அவர் நடைமுறையில் விடுதலைப்புலிகளையே வீரர்களாக நினைத்தார் என்பதில் வியப்பொன்றும் இல்லை! அது உண்மையும்கூட!! ஆனால், ம.கோ.இரா. கிழக்கே போனால் கருணாநிதி மேற்கே போய்த்தானே ஆக வேண்டும்! அவர் குளத்தின் மீது கோவப்பட்டுவிட்டால் குண்டி கழுவாமலேயே இறுதிவரை இருந்துவிடக்கூடிய “அற்புதக் குணம்” படைத்தவர். ஈழத் தமிழர்கள் இதையெல்லாம் தெரியாமல் ம.கோ.இராவுக்கு ஈழத்தில் சிலைகூட வைத்திருந்தார்கள். பல்லாயிரம் ஈழத் தமிழர்களை பல்நாட்டுக் கூட்டுப்படை கொன்று குவித்தபோது தடுக்கும் நிலையில் இருந்த கருணாநிதி நாடகம் ஆடிக் கொண்டிருந்தார். தன்னை யாரும் குற்றவாளி என்று அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக போராட்ட நாடகங்களையும் எதற்கும் உதவாத “தந்தி அடிக்கும் உத்தி”, தமிழ்ச் செல்வனுக்கு கவிதை எழுதியது, மாந்தத் தொடரிப் போராட்டம் போன்ற நாடகங்ககளை ஆடிக்கொண்டிருந்தார்.
தமிழர்களை நேரடிப் போரில் வென்றதாகப் பெரிய வரலாறு கிடையாது! தமிழினம் நம்பிக் கெட்ட இனம்! வடுகர் வந்தது அப்படியே! மன்னர்கள் வீழ்ந்ததும் அப்படியே! வீரப்பன், மலையூர் மம்மட்டியான் போன்றவர்களைக்கூட சூழ்ச்சியாலும் நாடகத்தாலும்தான் வீழ்த்தியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் வரலாற்றில் நடந்த சறுக்கல்களிலெல்லாம் நம்பிக் கெட்டதே உண்மை! தமிழர்களில் சிலர் கருணாநிதியை இன்னும் நம்புகிறார்கள்! அவருக்கே நகைப்பு வரும்!

சனி, ஜூலை 17, 2010

எரிமலை முகட்டில் இறையாண்மை - அரிமா

எரிமலை முகட்டில் இறையாண்மை!
இலக்கு நோக்கி தமிழர்களத்தின் ஓரு பார்வை!!

“மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்” என்று கருணாநிதி பற்றி ம.கோ.இரா வாயசைத்து பாடி ஆண்டுகள் பல ஆகிவிட்டன!
தன் குடும்பத்திற்காக, குடும்பப் பிறங்கடைகளுக்காக மட்டுமே கருணாநிதி தன் பதவி, அதிகாரம் ஆகியனவற்றைப் பயன்படுத்துகிறார் என்பதும், எந்த மக்கள் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாவலனாக அவரைத் தேர்ந்தெடுத்தார்களோ அவர்களுக்குக் கருணாநிதி தொடர்ந்து கடுக்காய் கொடுத்து வருகிறார் என்பதும் இப்போது உலகே அறிந்து வைத்திருக்கிற ஒரு உண்மை

அண்மையில் மீண்டும் தமிழக மீனவர் ஒருவரை அடித்துக் கொன்றும் உடனிருந்த மற்றவர்களை கடுமையாகத் துன்புறுத்திய கொடுமையும் தமிழர்களின் நெஞ்சங்களில் பதைபதைப்பையும் கடுஞ் சினத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அண்டை நாட்டுப் படைகள் நமது அப்பாவி மக்களை கிஞ்சிச்தும் அச்சமில்லாமல் சுடுவதும், கொல்வதும், வதைப்பதுமாக இருப்பது பல ஆண்டுகளாக நமது கிழக்குக் கடற்கரையோரம் நடந்தேறி வருகின்ற கொடுஞ் செயலாகும்!
ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் உருப்படியான செயற்பாடுகளில் இறங்கி சிங்களக் காடையரின் அத்துமீறல்களுக்கு முற்றாக முடிவுகட்டாமல் மீண்டும் செயலலிதாவுடன் ஒரு லாவணி பாடத் தொடங்கியிருக்கிறார், கருணாநிதி!
“செயலலிதா ஆட்சியிலிருக்கும்போது அவர் என்ன படையெடுத்துப் போனாரா?” என்ற மட்டமான ஒரு வினாவோடு கருணாநிதி அறிக்கையை வெளியிட்ட அதே வேளையில் மீண்டும் சிங்களக் காடையர் இராமேசுவரம் மீனவர்கள் 50 பேரைப் பிடித்து அடித்து உதைத்து அனுப்பியிருக்கிறார்கள். மாநில அரசு சார்பில் முதல்வர் கருணாநிதி நடுவணரசுக்கு வழக்கம்போல கடிதம் அனுப்புகிறார். இறந்தவர் குடும்பத்திற்கு நிதி ஒதுக்குகிறார். பின்னர் செயலலிதாவை மையப்படுத்தி அறிக்கை வெளியிடுகிறார். கருணாநிதியின் வீரதீரமெல்லாம் அத்தோடு முடிந்தது!
இனி, அடுத்த சாவுக்குச் சங்கு ஊதும்போது மீண்டும் தாள், நிதி, லாவணி என்று கிளம்புவார்!
நடுவணரசோ வழக்கம்போல எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறது!
இதற்கிடையில் சட்ட அமைச்சர் பொறுப்பிலிருக்கும் திரு. துரைமுருகனின் மற்றொரு அறிக்கை தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து நம்மை நிறையவே சிந்திக்க வைக்கிறது. “அயல்நாடுகளில் நடப்பவைகளை வைத்துக் கொண்டு இங்கு மத்திய மாநில அரசுகளை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இறையாண்மைக்கு எதிராகப் பேசினால் புதிய சட்டமும் கூடவே பாயும்” என்று பூச்சாண்டி காட்டியிருக்கிறார்.
ஈழம் என்பது அயல்நாடு!
ஈழத் தமிழர் என்பார் அயல்நாட்டவர்!
கருணாநிதியை, சோனியாவைத் திட்டாதே!
திட்டினால், புதுச்சட்டம் பாயும்!
இதுதான், விளக்க உரை!
துரைமுருகன் சுட்டிக் காட்டும் இந்திய இறையாண்மை குறித்த நமது ஐயங்களுக்கு அவர் சற்றே விளக்கம் கூறியாக வேண்டும்.

இந்தியாவின் வட எல்லையிலோ, வடகிழக்கு எல்லையிலோ பின்பற்றப்படும் இந்திய இறையாண்மைக்கும் தென் எல்லையில் பின்பற்றப்படும் இறையாண்மைக்கும் வேறுபாடுகள் இல்லையா? வட எல்லையில் அண்டை நாடுகளான பாக்கிஸ்தானும், சீனாவும், வங்காள தேசமும் வட இந்தியர்களைக் தொட்டால், சீண்டினால், அடித்தால், சுட்டால், கொன்றால் சீறுகின்ற இந்தியப் படைகள் 500க்கும் மேற்பட்ட தென் எல்லைத் தமிழர்களை சிங்களப் படைகள் கொன்று குவித்த பிறகும் இந்தியப் படைகள் அமைதி காப்பது ஏன்? பதிலடி கொடுக்காதது ஏன்?
உச்ச நீதிமன்ற நெறிகளுக்குப் புறம்பாகவும் உலக வழக்குகளுக்கு எதிராகவும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகளைக் கட்டி வைத்துக் கொண்டு கடைமடைப்பகுதியிலிருக்கும் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுப்பது இந்திய இறையாண்மையை காயப்படுத்துவது இல்லையா?
துரை முருகன் கொண்டு வருகிற புதிய சட்டத்தில் இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் இவர்கள் சிக்குவார்களா? சிக்கமாட்டார்களா?
தமிழகத்திற்குக் துளி தண்ணீரும் தரக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு கேரள அரசு புதிய அணையையே கட்டத் துணிகிறது!
இந்திய இறையாண்மையையே அவர்கள் கொச்சைப் படுத்திவிட்டார்களே!
பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டி தண்ணீரைத் தடுக்கிறது!
ஒக்கனேக்கல் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடகம் முட்டுக்கட்டை போடுகிறது!

கண்ணகி கோட்டம் போக கேரளம் தமிழர்களைத் தடுக்கிறது!
இந்திய இறையாண்மையோ இவை குறித்துப் பல்லிளிக்கிறது!
பிறகு படுத்துக் கொள்கிறது!
இம்மாதிரியான சூழல்களில் மாநில அரசின் கடமைகளும் பொறுப்பும் என்ன? அதுவும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அரசின் கடமை என்ன?

தனது மீனவரணியை ஏவி விட்டு சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது அதிகாரத்திலிருக்கும் ஒரு கட்சியின் கையாலாகாத் தனத்தைத்தானே காட்டுகிறது!
கையாலாகாத்தனத்தைவிட களவாணித்தனமும் கயமைமத்தனமும்தான் மிஞ்சுவதுபோலத் தெரிகிறது!
தன் மக்களில் ஒருவர் அன்னியப் படைகளால் கொல்லப்பட்டவுடன் மத்திய அரசை உலுக்கி தென் எல்லையில் படைகளைக் குவித்து இலங்கையை எச்சரித்திருக்க வேண்டாமா? இக் கொடுமைச் செய்த இலங்கைக் கடற்படையை நோக்கிச் சுட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருக்க வேண்டாமா? மக்களைக் காக்க துப்பாக்கி ஏந்தாத படை எந்த ம..ரைக் காக்க இனி துப்பாக்கி தூக்கும்? ஒரு நாய்கூட எட்டிப் பார்த்ததாகத் தெரியவில்லையே!

இதற்கிடையில் நாம் தமிழர் இயக்கத்தின் திரு. சீமான் அவர்கள் உணர்ச்சிமயமாயப் பேச, அதாவது இனி ஒரு தமிழன் தாக்கப்பட்டால் தமிழகத்தில் இருக்கும் சிங்களன் உயிரோடு திரும்ப முடியாது என்று பேசியதற்காக தமிழகக் காவல்துறை வழக்கு போட்டு அவரைக் கைது செய்யத் தேடுகிறது என்ற செய்தி இப்போது வருகிறது. ஆக, அடித்துக் கொன்றுவிட்டவனை விட்டுவிட்ட அரசு, அதை எதிர்த்து குரல் கொடுத்ததற்காகவே சீமானைத் தேடிச் சிறையில் போடத் துடிக்கிறது!
ஆனால் அதற்கிடையில் சிங்களனோ இந்தியாவையும் தமிழக அரசையும் தூசியினும் இழிவாக எண்ணி மீண்டும் 50 பேரை அடித்துவிட்டுப் போய்விட்டான்!
இவர்கள் நாணிக் குனிவதா? இல்லை நாக்கைப் பிடுங்கிச் சாவதா? கொதிப்பிலும் கொந்தளிப்பிலும் குமுறுகிற தமிழர் உள்ளங்கள் ஒரு புறம்!
ஆனால், ஞாயச் சிந்தனையோடு பார்த்தால், நேரிய எவரும் இந்திய இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கவே செய்வர்! துரைமுருகன்கூட!
1947ல் தமிழகம் இந்தியாவோடு இணைந்ததில் தமிழருக்குப் பாதுகாப்பு கிடைத்திருக்கிறதா? இல்லையே!

தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு எதிராக பல நிலைப்பாடுகளை எடுத்து அசட்டுத் துணிச்சலுடன் செயலாற்றினாலும் நடுவணரசு இதுநாள்வரை அவைகளைக் கண்டு கொள்ளவேயில்லை!
காரணம் அந்த மூன்று மாநிலங்களிலும் மத்தியில் ஆட்சிக்கு வரும் காங்கிரசு மற்றும் பாரதீய சனதாக் கட்சி போன்றவைகளுக்குக் கணிசமான வாக்கு வங்கியிருக்கிறது!
வாக்கு வங்கிக்காக அவர்கள் இறையாண்மைக்கு வேட்டு வைக்கிறார்கள்!
“செயலலிதா போர் தொடுத்தாரா?” என்று எரிச்சலோடு வினா எழுப்பியிருக்கிற கருணாநிதி இன்று தமிழகத்தின் முதல்வர். நடுவணரசில் சண்டைபோட்டு அமைச்சர் பதவிகளை பிடுங்கி வைத்திருக்கிற “தலையாயத் தலைவர்”. படை அனுப்ப வேண்டியது நடுவணரசுதான்!
நடுவணரசுக்கு எழுதிய கடிதத்திலாவது, இந்திய அரசு படையை அனுப்பவேண்டும் என்று கடமைக்குக்கூட எழுதவில்லையே!
இதுவே, கடைசி முறையாக இருக்கவேண்டும் என்று 500 கடிதத்திலும் கடைசி, கடைசி என்றுதானே எழுதினார் இவர்!
மகனுக்காகவும் பேராண்டிகளுக்காகவும் மகளுக்காகவும் நடுவணரசை அசைக்கிற கருணாநிதி மக்களுக்காக எதையுமே அசைக்கப்போவதில்லை!
தமிழர்களின் அழிவைத் தடுக்க இயலாமல் தடுமாறுகிற இவர் தமிழுக்கு விழா எடுத்து கிலுகிலுப்பைப் காட்டுகிறார்!
மக்களின் மனக் குமுறல்களை மன்னர்கள் பலநேரம் விளங்குவதேயில்லை!
அவர்கள் ஒரு மாய உலகில் உலா வருகிற மன்மதக் குஞ்சுகள்!
மஞ்சள் துண்டு காப்புகளும் மங்காத ஒளி வெள்ள மத்தாப்புகளும் அவர்களைப் போலி பாதுகாப்புக்குள்ளும் பகட்டுக்குள்ளும் பறக்க வைக்கிறது!
குறளிகளை நம்பி குழி வெட்டுகிறவனுக்கு குறளியே ஒரு நாள் குறி வைத்துவிடும்!
எரிமலை முகட்டில் குந்திக் கொண்டு சுருட்டுக்குச் சுள்ளி தேடுகிற மந்த மாந்தர்கள் இவர்கள்!
தமிழ்த் தேசிய நெருப்பு தமிழிளம் காளையரின் உள்ளங்களிலும் தமிழிளங் கன்னியரின் நெஞ்சங்களிலும் குமுறத் தொடங்கிவிட்டது!
கடலிலும் கரையிலும் நடப்பது, நடுவணரசின் நாசப் போக்கு, நயவஞ்சக ஆட்சியாளர்களின் நச்சுப் பேச்சு ஆகிய அனைத்துமே எரிதளலில் எண்ணை வார்க்கும் செயல்களே!
தேசத்திற்கு ஒரு நாடு இன்றி இனி தேசியம் காப்பாற்றப்படாது என்பதே இப்போது நடப்பது சுட்டும் அறிவு, ஆணை!




வெள்ளி, ஜூலை 16, 2010

சிறை என்ன செய்யுமடா? - அரிமாவளவன்

சிறை என்னச் செய்யுமடா?
அரிமாவளவன்
சாரய விற்பனை செய்தவர்கள் இப்போது கல்விக்கூடம் நடத்த வந்துவிட்டார்கள்! கல்விக்கூடங்களைத் திறக்க வேண்டிய அரசு, சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது!! இதுதான் இந்திய சனநாயக கூத்துக்கு ஒரு சோற்றுப் பதம்!
குருதி குடித்த இராசபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு! பக்கவாதத்தால் துடித்து பண்டுவம் தேடிவந்த பார்வதியம்மாளை தரையிறங்கவிடாமலேயே திருப்பி அனுப்புகிறார்கள்! பார்வதியம்மாள் ஈழ தேவனைத் தன் கருவறையில் சுமந்த பாக்கியவதி, அவ்வளவுதான் குற்றம்! இதுதான் காந்தி தேசத்தின் கடுக்காய்ப் பத்தினித்தனம்! இங்கு எல்லாமே தலைகீழ்தான்! மன்னராட்சி முடிந்து விட்டது என்கிறார்கள்! சோனியாவின் பேரனுக்கு பிள்ளை பிறந்துவிட்டதா? என்று காங்கிரசுத் தொண்டர்கள் அடுத்த தலைவருக்காக பிரசவஅறை வாயிலில் காத்துக் கிடக்கிறார்கள்! கருணாநிதியின் பேராண்டிகளுக்கு கிடைக்கிற மரியாதை தி.மு.க.வில் அறிஞர்களுக்கும் ஆற்றல் மறவர்களுக்கும் கிடைக்காது! கோவைத் தமிழ் மாநாட்டில் வா.மு. சேதுராமன் கால்கடுக்க நிற்கிறார். அவரது மீசையின் அளவுகூட வளராத கருணாநிதி வீட்டுக் குஞ்சுகளும் பிஞ்சுகளும் இருக்கைகளில் இறுக்கமாக உட்கார்ந்திருக்கிறார்கள்! அன்பழகன், துரைமுருகன் போன்ற தலைசிறந்த “அறிவாளிகளுக்கோ” எப்போதுமே 23ம் புலிக்கேசியின் புகழ்பாடும் ஓமணாட்டிப் புலவர்களிள் நிலைதான்!
சீமானைச் சிறைப்படுத்தியிருப்பது என்பது ஏற்கெனவே சிறுமைப்பட்டுக் கிடக்கும் சனநாயகத்தின் மீது தமிழகஅரசு மேலும் “நீர்”பாய்ச்சியிருக்கிறது! (சிறுநீர் என்று வாசித்துத் தொலைத்துவிடாதீர்கள்!) என்றுதான் எடுத்துக் கொள்ளமுடியும்! உரிமைக்குக் குரல் கொடுக்கிறவர்களுக்கும், விடுதலைக்கு வழி வகுக்கிறவர்களுக்கும் ஆண்டை அரசுகள், காலாகாலமாக அடக்குமுறைகளை ஏவியும் கொடுஞ்சிறைகளைப் பரிசாக்கியுமே வந்திருக்கின்றன! வ.உ.சி.யைச் செக்கிழுக்க வைத்தது! ஆனால் கயவன் ஆஷ் துரையைப் பாதுகாத்தது! பத்து அல்கொய்தாப் போராளிகளைத் தேடி ஆப்கான் மலைகளில் குண்டுகளை அள்ளித் தெளிக்கிறது அமெரிக்கா. பலநூறு பேரை போபாலிலிருந்து நேரே பரலோகத்திற்கு அனுப்பிவிட்ட ஆண்டர்சன்னை அதே நாடு பொத்திப் பாதுகாக்கிறது! காரணம் அவன் அமெரிக்கன். தன் இனம் தன் மக்கள் என்று வரும்போது மாந்த உரிமை, மற்றவர் உரிமை என்று எவனும் பார்ப்பது கிடையாது. ஆனால், இதிலும் இந்த நாடு தலைகீழ்தான்!
534 மீனவர்களை 25 ஆண்டுகால இடைவெளிக்குள் தொடர்ந்து சுட்டும், சுடாமலும் கொன்று குவித்த சிங்கள அரசை வலுவாக எதிர்த்து சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலாத பேடி அரசுகள், அதாவது திராவிட மற்றும் இந்திய அரசுகள் இன்று தங்களுக்குள் வாய்ச் சவடால் அடித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் லாவணி பாடிக்கொண்டு அரசியல் சித்து விளையாடிக் கொண்டு கொல்லப்பட்ட கொடுமையை நரகல் ஊற்றி மூடப் பார்க்கிறார்கள். ஆனால், மானமுள்ள தமிழருக்கோ நெஞ்சு பதை பதைக்கிறது! இதில், ஈனத் திராவிடனுக்கும், திராவிடச்சிக்கும் ஓர்மை எங்கிருந்து பொத்துக்கொண்டு வரும்? ஏமாளித் தமிழனின் எதிர்பார்ப்பை என்னவென்று சொல்வது?
“இவன் தமிழனல்லன், திராவிடன், திராவிடன், திருடன், திருடன்” என்று உயிர் சோர்ந்து போகும் அளவிற்கு உச்சக் குரலில் பல்லாயிரம்முறை கத்திக் கத்திச் சொன்னபோதும் மதியாத தமிழ் நெஞ்சங்கள் இன்று உறவை இழந்து, பல்லாயிரம் உயிர்களை இழந்து, போர் மறவர் பலரை இழந்து, கண்ணீரில் கரைந்து, கனவுகளைக் கலைத்து, நனவுகளைக் காவுகொடுத்து மீனவர் பலரை இழந்து இறுதியில் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தத் தமிழனைக் கொடுஞ்சிறையில் தள்ளி கொடுமை செய்யும்போதுதான் மெல்ல விழிக்கிறோம்! காலந் தாழ்த்தி வேதனையோடு விழிக்கிறோம்! விழிநீர் முட்ட, “திராவிடர்ஆட்சியில் தமிழர் வாழவும் முடியாது, பேசவும் முடியாது” என்று புலம்பிப் பலம்பி நொந்து அழுகிறோம்.
சாராயம் விற்று சம்பாதித்த காசை தேர்தலின் போது தமிழனின் கையில் திணித்து வெற்றி நங்கையின் கற்பைச் சூறையாடியவனாயிற்றே! கண்ணகி போன்ற உன் வீட்டுக் கற்புப் பெண்ணின் காவலுக்கு தமிழன் உன்னை நம்பி வைத்தால், எச்சில் காசை எண்ணி எடுத்துக் கொண்டு தேர்தலையேக் கற்பழிக்க விட்டுவிட்டாயே! இப்போது சனநாயகம் கற்பிழந்து கலையிழந்து நடுத்தெருவில் நாறுகிறது பார்! பத்துத் தேர்தலைப் பதம் பார்த்தவன், மொத்தத் தேர்தலையும் முழுங்க இப்போது போட்டுவிட்டான் திட்டம்! காவலனுக்குக் காசு! நொள்ளனும் கள்ளனும் கூட்டு! நாறப்போகுது நாடு!
ஒரு சேலை வாங்கினால் இன்னொரு சேலை இலவயம் என்று வணிகன் விளம்பரம் செய்கிறான். அதற்குப் பெயர் ஆடித் தள்ளுபடி என்கிறான்! நேற்று 100 ரூபாய்ககு விற்ற சேலையை இன்று 300 என்று விலை போட்டு மற்றொரு 100 ரூபாய்ச் சேலையை இலவசமாகக் கையில் திணித்து கமுக்கமாய் ஒரு 100யை அள்ளிக் கொண்டு போகிறான். இலவசச் சூழ்ச்சி இதுதான்! இழித்தவாயன், ஏமாளி, நுகர்வுவெறியர் ஆகியோர் இருக்கும்வரை வணிகனின் இவசயச் சூழ்ச்சிக்கு வெற்றிதானே! அரசியல்வாதி கற்றுக் கொண்டதும் அங்கிருந்துதான்! சாராயத்தில் சம்பாதிக்கிற கோடிக் கோடியான பணத்தை கிலுகிலுப்பை இலவசம் காட்டி விளம்பரம் தேடுகிறான். இறுதியில் சனநாயகத்தையும் மொத்தமாக விலைக்கு வாங்கிவிட்டான். வாக்கு ஒன்றுக்கு விலை இவ்வளவு என்று வெட்கமின்றி நிர்ணயிக்கிறான். சனநாயகத்தைப் பட்டப்பகலில் பச்சைப் படுகொலை செய்யும் வந்தேறிகளையும் களவாணிகளையும் தடுக்க எந்தச் சட்டம் பாய்ந்து கிளறப் போகிறது?
திராவிடச் சூழ்ச்சியின் மொத்தச் சுருக்கமும் இதுதான்! “எப்படியாவது ஆட்சியைப் பிடி, அதிகாரத்தைத் தக்க வை! அதுவரைக்கும் பொய்யைச் சொல்! பிடித்தபின் நையப் புடை!” நம்பி நம்பிக் கெட்ட தமிழினமோ மாறி மாறி திராவிட வந்தேறிக¬ளுக்கே வாக்களித்து வந்திருக்கிறது! கருணாநிதியின் துணிச்சலோ அதிஉச்சம்! தமிழை வைத்தே தமிழர்களை ஏய்க்கிறார், ஏமாற்றுகிறார்! தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இந்திக் கூட்டுக் குழுவுக்கு மனதார முட்டுக் கொடுக்கிறார். மறுபுறம் தமிழ்ச் செல்வன் மறைந்தால் கவிதை புனைகிறார். சிங்களப் படைகள் மீனவ மக்களைச் சுட்டுக் கொன்றால் வேடிக்கை பார்க்கிறார். மறுபுறம் வெகுண்டெழும் மக்களை ஒடுக்கச் சட்டம் கொண்டு வருகிறார். நண்பர்கள், நெருங்கியவர்கள் மறையும்போது, கண்ணீர்தான் வரும்! கவிதை வராது! கருணாநிதிக்கு அண்ணா இறந்தாலும் கவிதைதான், தமிழ்ச்செல்வன் இறந்தாலும் கவிதைதான்! கலைஞர் அல்லவா? கலையில் வல்லுனர் அல்லவா? ஏமாளிகள் இருக்கும்வரை ஏய்க்கிறவனுக்குப் பொற்காலம்தானே!
திராவிடம் இந்த மண்ணில் மயக்கத்தை விதைத்தே மக்களைக் காயடித்திருக்கிறது! அண்ணாவின் அடுக்குமொழிப் பேச்சில் மயங்கியவர்கள் உண்டு! ஆனால், கீழவெண்மணிப் படுகொலையின் மூலநாயகன் கோபால கிருட்டிண நாயுடுவைத் தண்டிக்காமல் தப்புவிக்க விட்டதும் அவருடைய அரசுதான்! “அடைந்தால் திராவிடநாடு அன்றேல் சுடுகாடு” என்று வசனம் பேசி மக்களுக்கு உசுப்பேற்றிய அண்ணா அவர்கள், பதவி வந்தபோது, “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுகிறோம்.. ஆனால், அதற்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன” என்கிறார். பின் எதற்காகக் கைவிடுகிறார்? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களைச் சரிக்கட்ட கருணாநிதியை எழும்பூருக்கு அனுப்பி வைத்துச் சமரசம் செய்தவரும் அவரே! பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது தவறு! பாவாணர் பசியோடுதான் இலக்கு தவறாமலும் மானம் இழக்காமலும் இருந்தார். பதவி என்று வந்தால் பத்தென்ன? பதினாரும் இவர்களுக்குப் பறக்கும்! “மானம் எங்களுக்கு வேட்டி போல, பதவி எங்களுக்குத் துண்டு போல” என்றார்கள்! ஆனால், திராவிடச் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இவர்கள் எவருமே “வேட்டி” கட்டவேயில்லை!
பின்னர் கருணாநிதியின் காலம் வந்தது. திராவிடம் என்ற நச்சுப் பயிர் கொழுகொழுவென்று வளர்ந்தது இவரது காலத்தில்தான்! சாராயம் தமிழகத்தின்மீது திணிக்கப்பட்டது! திரைப்பட மாயை புகுத்தப்பட்டது! வன்முறைவழி அரசியல் அரங்கேறத் தொடங்கியது! “அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்பது பராசக்தியில் கருணாநிதியின் திரைப்பட வசனம். ஆனால், மஞ்சள் துண்டு, சாத்திரம், சோதிடம் என்ற எல்லாப் பீடைகளும் புடைசூழ வாழ்கிறார். இவரது காலத்தில்தான் பிறங்கடை (வாரீசு) அரசியலால் நாடு நாறியது! பின்னர் இப்போது “அழகிரித்தனம்” என்ற தேர்தல் சித்து விளையாட்டினால் நொந்து அழிகிறது! திராவிட வளர்ச்சியின் மூலப்பொருள் இவைகள்தான்!
யூதனையும் மிஞ்சி வானுயர்ந்து நிற்கவேண்டிய தமிழரின் வாழ்வு இன்று சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது! தமிழரின் அறிவியலும் ஆற்றலும் விழலுக்கிரைத்த நீராகிப் போனது! தமிழரின் தன்மானமும் தனிச்சிறப்பும் ஒழிந்து போயின! மூன்று இலட்சத்திற்கும் மேலான மக்களை விடுதலைப் போரில் இழந்து நிற்கிறோம்! தமிழகமெங்கும் குடியினால் மனநலனும் உடல்நலனும் குன்றிய ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காண்கிறோம்! சிறுதிரையும் பெருந்திரையும் விதைக்கிற பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு பல்லாயிரம் மக்கள் பலியாகிக் கிடப்பதைக் காண்கிறோம்! மொழியின் சீர் இழந்து போலிகளின் வெற்று ஆர்ப்பரிப்பில் மயங்கிக் கிடக்கிறோம்! தமிழர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரஇயலா இழிநிலையில் தவிக்கிறோம்! வணிகமும் பொருளியலும் வந்தேறிகளிடம் சிக்கித் தமிழர்கள் பெரும்பாலும் எடுபிடிகளாகவும், தொண்டர்களாகவும் இருப்பதையேக் காண்கிறோம்! தன் மக்களுக்கு அரணாக, குரலாக, அரவணைப்பாக இருக்க வேண்டிய தாய்த் தமிழக மண்ணும் மானமும் திராவிடத்தால் வீழ்ந்து கிடக்கிறது! என்னே கொடுமை இது!
கேரள வனத்துறையினர் சுற்றுலா போன தமிழ்ப் பெண்களை நிர்வாணமாக்கி வதை செய்து படம் எடுத்து இணையத்தில் உலா விடுகிறார்கள்! தமிழகம் தூங்கிறது. பல காலமாக அங்கு இப்படித்தான் நடக்கிறது, ஆனால் வெளியே சொல்ல அஞ்சுகின்றனர் என்கிறார்கள்! கர்நாடக எல்லையிலும் பேருந்துகளில் தமிழ்ப் பெண்கள் நிம்மதியாகப் பயணம் செய்ய இயலாது! கன்னடக் காடையர்களின் சீண்டலுக்கு உள்ளாகி அடங்கி ஒடுங்கிப் போக வேண்டியதாயிருக்கிறது! ஆக, சிங்கள் உயிரைக் கொன்றான், கற்பைத் தின்றான் என்பது மட்டுமல்ல உண்மை! இந்திய இறையாண்மையின் அங்கங்களும் சொந்தங்களும் தமிழர்களுக்கும் தமிழச்சிகளுக்கும் இழைக்கிற கொடுமைகள் பதிவு செய்யப்படாமல் அழிந்து போகின்றன!
நடிகை ரம்பாவின் திருமணத்திற்குப் போகிறார் கருணாநிதி! ரசினிகாந்தின் மகள் திருமண அறிவித்தல் நிகழ்விலும் இருக்கிறார்! குசுப்புவை இழுத்துப் போடுகிறார், (தி.மு.க.விற்கு)! ஆனால், தமிழகப் பெண்கள் மலையாள வனத்துறையினரால் மானபங்கப்படுத்தப்பட்டதற்கு அவர் கண்டனம்கூடத் தெரிவிக்கவில்லையே! திராவிடத்தின் தலையாய முதலீடு கூத்து! வடுகக் கூத்து!! கேரளத்து நம்பூதிரிகள், தமிழகத்துப் பிராமணர்கள், (பார்ப்பனர்கள் அல்லர்) வடுகர்கள் ஆகியோருக்கிடையில் இந்தக் “கூத்து முதலீடு” பரவலாகவும் அதுவே மற்றவர்களின் (குறிப்பாகத் தமிழர்களின்) பலவீனமாகவும் இருந்திருக்கிறது! அம்மாதிரியான கூத்தின் நீட்சிதான் வெள்ளித் திரையுக் கூத்தும், சின்னத் திரைக் கூத்தும்! கன்னடப் பிராமணரான் பாலச்சந்தரின் படங்களில் திணிக்கப்பட்ட வக்கிரங்கள் எல்லாம் வடுகத்தின் நீட்சிதான்! கருணாநிதியின் பிறங்கடைகள் மிகத் தெளிவாக இன்றும் பல்வேறு சின்னத் திரை நிறுவனங்களை உருவாக்குவதிலும் வெள்ளித்திரை உலகை விழுங்குவதிலும் கருத்தாகக் கவனமாக இருப்பது உன்னிப்பாய்க் கவனிக்கத் தக்கது! உருவம் வேறுபடுகிறது! உள்ளடக்கம் அன்றும் இன்றும் ஒன்றுதான்! “சதையால் சிதை!” என்னும் எளிய உத்தி! வடுகச் சின்னத்தனம் தமிழ்ப் பண்பைச் சூறையாடிவிட்டது! அதனால்தான், தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட செய்தி திராவிடங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை! ஆனால், திராவிட நரகலில் ஊறிப்போன தமிழிளம் காளையரும் கடுப்பாகி களம் இறங்கவில்லையே! இது வருத்தத்திற்குரியது! காரணம், நச்சுத் திராவிடம் சிரசுக்கு ஏறிவிட்டது! திராவிடப் பித்து வீரமுள்ள தமிழ் இளைஞர்களை முடக்கிப் போட்டிருக்கிறது!
ஆனால் பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு! நாவில் தமிழ் என்னும் அமுதத்தையும், நடுநெஞ்சில் தமிழர் தேசியம் என்கிற அருமருந்தையும் அள்ளிப் பருகினால் நோய் நீங்கும்! திராவிடம் என்ற புரையோடிப்போன புற்றுநோய் இருந்த இடம் தெரியாது அகலும்! திரிவடுகரின் அடிவயிற்றை கலக்கோ கலக்கு என்று கலக்குவது இவை மட்டுமே!! தமிழனுக்கு ஒரு தேசம் என்று தும்மினாலேயே வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வந்தேறிகள் குரைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். எதிரும் புதிருமாய் இருப்பதுபோல நாடகமாடும் திராவிடனும் பிராமணனும் கைகோர்த்துக் கொள்கிறான். உற்றுப் பாருங்கள் கருணாநிதிக்கும் சோவுக்கும் செயலலிதாவுக்கும் ஒரே கொள்கைதான் இருக்கிறது! இவர்கள் மறைத்துச் செய்வதை அவர்கள் வெளிப்படையாயும் அவர்கள் மறைத்துச் செய்வதை இவர்கள் வெளிப்படையாயும் செய்வார்கள்! தமிழ்த்தேசியத்தைக் கழுத்தறு என்று சோ வெளிப்படையாகச் சொல்லுவார்! கருணாநிதி கமுக்கமாய் காரியம் செய்வார்! தினமலரும், தினமணியும் பிராமணக் கொடுக்கிலிருந்து நச்சை கக்குகிறது! கருணாநிதியின் காவல்துறை தடி தண்டலோடு வந்து உருட்டி மிரட்டி கைது செய்கிறது!
திராவிடங்களைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு என்பது வந்தேறிகளின் வேட்டைக்காடு! வேலியில்லா நாடு! திராவிட நாடு! வந்தவரெல்லாம் மேயலாம்! ஆனால், தமிழ், தமிழ்த் தேசம் என்பதோ எல்லை வரையறுக்கும் வேலை! வேலியில்லா காட்டுக்கு வேலி போட்டால் எந்த நாடோடிக்குப் பிடிக்கும்? உறவில் தாலிகூட ஒரு வேலிதான்! கூத்தாடிகளுக்கும் குலத்தாசிகளுக்கும் தாலி என்பது குத்தத்தான் செய்யும்! குமுறத்தான் செய்வார்கள்!
சீமானை, நெடுமாறனை, வைகோவை அடைத்து வைத்து தமிழ்த் தேசிய குமுறலை குன்ற வைத்துவிடலாம் என்பது சீப்பை ஒளித்து திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்கிற அதி நுட்ப அறிவு! கடல் அலைகளைச் சிப்பிக்குள் அடைத்துச் சிறைபிடித்துவிடலாம் என்கிற நப்பாசை!
சிறை வாழ்வு, ஆதிக்க அடக்குமுறை ஆகியன விடுதலை நாற்றுக்கு நல்ல எரு என்பது காலாகாலமாக வரலாறு சுட்டும் பாடம்! தமிழகமும் அதையே மெய்ப்பிக்கப் போகிறது!

சக்தி தமிழ் பள்ளிக்கூடம் - மாறுபட்ட கல்வி

கரூர் மாவட்டத்தில் 16 ஆண்டுகளாக மிக சிறப்பாக செயல்பட்டு வரும் சக்தி தமிழ் பள்ளிக்கூடம் தமிழ் நாட்டில் முதன் முறையாக தமிழ் வழி கல்வி பயிற்றுவிக்க அரசானை பெற்ற கல்வி நிலையம் ஆகும். அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களைவிட நல்ல மனிதர்களை வுருவாக்குவதே தமது கடமை என்று தமிழுக்காகவும் தமிழர் நலன்களுக்காகவும் சேவை செய்து வரும் திரு. சக்தி காமராசன், அவரது மனைவி திருமதி. காமாட்சி அம்மாள் ஆகிய இருவரின் தன்னலமற்ற செயல்பாடுகளை நாம் நிச்சயம் பாரட்ட வேண்டும்.
பள்ளியின் சிறப்புகள் : கல்வி சுமை கிடையாது, தனி பயிற்சி வகுப்புகள் தேவையில்லை, வீட்டு பாடம் கிடையாது, எளிய கற்றல் முறை, ஆக்கவியல் சிந்தனை , வாழ்வியல் நெறிகள், தமிழர் பண்பாட்டுடன் திருக்குறள் நெறி முறைகள், ஆகியன கற்பிக்கபடுகின்றன. ஏழை மாணவர்களுக்கு இலவய கல்வியும், நடுத்தர குடும்ப மாணவர்களுக்கு குறைந்த சேவை கட்டணமும் வாங்கி, நல்ல தரமான , அன்பான ஆசிரிய ஆசிரியைகளை கொண்டு அமைதியான சூழலில் பள்ளி சிறப்பாக செயல்படுகின்றது.
நாம் செய்ய வேண்டியது என்ன : நமது இனம் , மொழி, பண்பாடு இவற்றை காக்கவும், நமது பிள்ளைகள் நல்ல சிந்தனையலர்களவும் , சிறந்த மனிதர்களாகவும் வுருவாக தமிழ் வழிக் கல்வி தருவோம். மேலும் நாம் பல்வேறு காரியங்களுக்கு நன்கொடைகள், வுதவிகள் செய்தபோதும், நமது தலையாய கடமையாக கருதி இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட தாரளமாக பொருளுதவியும், நிதியுதவியும் செய்து தமிழர்களும் தமிழ் வுனர்வாலர்களும் இந்த பள்ளிக்கு நன்மை செய்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுகொள்கிறோம். தற்போது மன நலம் குன்றியோருக்கு சிறப்பு பள்ளியும் இலவய சேவையாக நடைபெறுகிறது. அவர்களின் நலனுக்காகவும் பள்ளிக்காகவும் தாராளமாக வுதவுங்கள். நன்றி. மேலும் பள்ளியை பற்றி அறிய www.sakthitamilpalli.co.in வலை தளத்தில் காணலாம். நிதி வுதவி செய்ய விரும்புகிறவர்கள் சக்தி தமிழ் பள்ளிக்கூடம், வங்கி கணக்கு : 480781664 இந்தியன் வங்கியில் செலுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு : 9843955627 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

மண்ணுரிமை மாநாடு

வருகின்ற சூலை 31 அன்று பாளையம்கோட்டையில் தமிழர் களம் நிகழ்த்தும் மண்ணுரிமை மாநாடு பேரணி -பொது கூட்டம் நடைபெற இருக்கிறது . அறிஞர் குணா முன்னிலை வகிக்க , அரிமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் புலவர். தமிழப்பன், நகைமுகன், செந்தில் மள்ளர், புலவர் பாவிசைகோ , மை.பா. சேசுராசு ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துவர். தொடர்புக்கு : 9443363587,
- தமிழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்க.
இவண். தமிழர் களம் , கரூர் மாவட்டம்.