ஞாயிறு, அக்டோபர் 30, 2011

தமிழர் எழுச்சிப் பெருவிழா 2011

காணொளியின் இணைய இணைப்பு

http://www.youtube.com/watch?v=jrpD0dOFrGs


ஊடகப் பிரிவு
தமிழர் களம், கருவூர்

புதன், அக்டோபர் 26, 2011

அணு உலை வெடித்தபின் திருநெல்வேலி இப்படித்தான் இருக்கும்





மேலே கண்ட புகைப்படங்களில் இருப்பதுபோல நாம் துடிதுடித்து சாகவேண்டியதில்லை. நொடியில் சாம்பலாகிவிடலாம். ஒருவேளைதிராவிட, இந்திய எதிரிகள் மனம் மாறி இந்த அணு உலையை வெடிக்கச்செய்யாமல் "தானாகவே அடித்துக்கொண்டு சாகபோகும்தமிழனுக்காக ஒரு அணு உலையை வீணாக்கவேண்டுமா" என்று கூறி, மின் உற்பத்தியோடு மட்டும் நிறுத்திக்கொண்டாலும் தமிழர்கள்கவலைபடவேண்டாம். நமக்கு அணு உலையில் ஏற்படும் கசிவு காரணமாக கிழ்கண்டவாறு நம் ஊரில் குழந்தைகள் பிறக்கும்.கொண்டாட்டம்தான். இப்படி பிள்ளை பிறந்தால் 365 நாளும் பிச்சை எடுத்து சம்பாதிக்கலாம். கருணாநிதி காஞ்சி ஊத்துவான்.ஜெயலலிதா ஊறுகாய் கொடுப்பாள். நக்கி நக்கி தென்மாவட்டத் தமிழர்கள் சாப்பிடலாம்.
எச்சரிக்கிறோம். ஒட்டுமொத்த தமிழினமே, பர்மாவில் நீ செத்தாய்; பெங்களூரில் நீ செத்தாய்; இலங்கையில்செத்துக்கொண்டிருக்கிறாய்; ஒட்டுமொத்தமாய் தமிழ் நாட்டிலும் சாகபோகிறாய். ஒன்றுபடு. போராடு. இன்று கோட்டைவிட்டால் நாளைஉன் கதி இதுதான். கிழ்காணும் படங்களை பார்த்தாவது புரிந்துகொள்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பேரழிவு ஏற்படும் என்று பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் தமிழன் செத்து மடிவதை பார்த்து ரசித்து ரசித்து மகிழ்ச்சியடையும் தெலுங்கன் கருணாநிதி, கன்னடத்தி ஜெயலலிதா,ரத்தக்காட்டேரி சோனியா போன்ற கொலைகார பாவிகள் நாடாளும் இந்நேரம் மக்களின் ஞாயமான போராட்டத்திற்கு விடைகிடைக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இருப்பினும் கட்டுமானப் பணியின்போதே பலகோடி ரூபாய் ஊழல்களில் சிக்கித்தவிக்கும் இந்த ணு உலை வெடிக்கும்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, துத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும்மக்களுக்கு கிழ்கண்ட படங்களில் உள்ளவர்களின் நிலை ஏற்படாது என்பதுதான் ஒரே நல்ல செய்தி. ஏனென்றால் ரத்தக்காட்டேரிசோனியாவின் ஆதரவுடன் காட்டப்படும் இந்த உலை வெடிக்கும்போது நமது சாம்பல் கூட மிஞ்சாது. நம்மை வலியே இல்லாமல்கொன்று விடுவார்களாம். நாம் சாகும்போதுகூட தமிழன் மீது அன்னை சோனியாவிற்கு எத்தனை அக்கறை!!!

வெள்ளி, அக்டோபர் 21, 2011

தமிழ்நாடா இல்லை வந்தேறிகளின் வேட்டைக்காடா?


தமிழர்களம் மாவட்டச் செயலாளர் திரு. அமலரசு கைது நடவடிக்கையைக் கண்டித்து அரிமாவளவன் கண்டனம்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழர்களின் ஒரு வாழ்வுரிமைப் போராட்டமாக மாறி நிற்கிறது. இவ்வேளையில் இப்போராட்டத்தின் ஒரு கட்டமாக 25க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கூடங்குளம் அருகில் அமைதிவழியில் அறப்போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர். நள்ளிரவு மட்டில் அந்த இடத்திற்கு வந்த திருநெல்வேலி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் விஜயேந்திரப் பிதரி என்பவர் அவர்களைத் தாக்கிக் காயப்படுத்தி பந்தலைப் பிரிந்து வீசியிருக்கிறார். அப்படி அவர் தாக்கும்போது இனவெறிச் சொற்களைக் கையாண்டிருக்கிறார். “தமிழ்த் தேவ...மக்களே, ஓடுங்கடா!” என்று விரட்டியிருக்கிறார். இதை நேரடித்தாக்குதலுக்கு உள்ளான மணிகண்டன் என்ற இளைஞர் தனது பேட்டியில் குறிப்பிட்டு ஊடகங்களில் வந்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு காட்டுமிராண்டித் தனமான நிகழ்வைக் கண்டித்து தமிழர்களம் தமிழகமெங்கும் சுவரொட்டி ஒட்டியது.
தூத்துக்குடி நகருக்குள் சுவரொட்டி ஒட்டியபோது காவல்துறையினர் ஒட்டிக் கொண்டிருந்த மற்றுமொரு மாற்றுத் திறனாளி முருகன் என்பவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் தமிழர் களத்தின் மாவட்டச் செயலாளர் திரு. அமலரசுவையும் கைது செய்ய முற்பட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விஜயேந்திரப் பிதரி கர்நாடகத்தைச் சேர்ந்தவர். தமிழகக் கர்நாடக அரசுகளால் நியமிக்கபட்ட சதாசிவம் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் பிதரியின் மகன். தமிழக கர்நாடக எல்லையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த பல்வேறு மாந்த உரிமை மீறல்கள், கொடுமைகள், கற்பழிப்புகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைச் சுமந்து நிற்பவர் சங்கர் பிதரி. 12 வயது சிறுமி ஒருவரைக் கற்பழித்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உண்டு. இனவெறியோடு தமிழர்களை நோக்கும் சங்கர் பிதரியின் மகன் இன்று தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாவட்டத்தின் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருக்கும்போதுகூட அதே இனவெறியோடு செயல்பட்டது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் விடப்பட்ட சவால் என்பது ஒரு புறம் இருந்தாலும் சனநாயக வரம்புகளுக்கு உட்பட்டு எதிர்ப்பைத் தெரிவித்த தமிழர்களத்தின் மாவட்டச் செயலாளர் மீது மிரட்டல் அடிப்படையில் வழக்குகள் தொடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது தமிழ்நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடாக மாறி நிற்கிறது என்ற உண்மையை மெய்ப்பிக்கிறது.
அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதன் வாயிலாக உண்மைகளை ஒழித்துவிடலாம் என்று கனவு காணும் எடுபிடிகளுக்கு தமிழர்களம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. ஆதிக்க வெறி ஒழிப்போம்! அடக்குமுறைகளுக்கு அஞ்சோம்! விடுதலை வேள்வியில் வீரக் களமாடுவோம்! என்று தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், அக்டோபர் 18, 2011

நெல்லைக் கண்காணிப்பாளருக்கு தமிழர்களம் கடும் கண்டனம்.



மாற்றுத் திறனாளிகளை தாக்கி இனவெறிச் சொற்களால் இழிவுபடுத்திய நெல்லைக் கண்காணிப்பாளருக்கு தமிழர்களம் கடும் கண்டனம்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு கட்டமாக மாற்றுத் திறனாளிகள் பலர் திரண்டு கூடங்குளம் அருகில் ஓர் உண்ணாநோன்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது இரவு நேரத்தில் அங்கே ஒரு காவலர் படையுடன் வந்த நெல்லை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் விஜேயந்திரப் பிதரி அங்கிருந்தவர்களைத் தாக்கி “தமிழ்த் தேவ... மக்களே, ஒடுங்கடா” என்று மிக அசிங்கமாகத் திட்டி அங்கிருந்த பந்தலையும் பிற பொருட்களையும் அவருடன் வந்த காவல்துறையினர் பிரித்து வீசியிருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகள் என்றும்கூடப் பாராமல் தாக்கப்பட்ட அந்த நிகழ்வில் பலர் காயமுற்றனர். தாக்குதல் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட மக்கள் திரண்டுவந்து அவர்களை மருத்துவமனையில் சேர்க்க முற்பட்டபோது அங்கேயும் வந்த காவல்துறையினர் அவர்களை அங்கே சேர்ப்பதைத் தடுத்துள்ளனர்.
வீரப்பனைத் தேடுகிறோம் என்ற போர்வையில் அப்பாவி மலைவாழ் மக்கள் மீது நடந்த கற்பழிப்புகள், இனவெறித் தாக்குதல்கள், சித்திரவதைகள், கொலைகள் என்று பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக சதாசிவம் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டவர் சங்கர் பிதரி என்ற காவல்துறை அதிகாரி. அவர் 12 வயதுச் சிறுமி ஒருவரையும் பாலியல் வன்முறை செய்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த சங்கர் பிதரியின் மகன்தான் இந்த விஜேயந்திரப் பிதரி.
தமிழ்நாட்டுக்குள் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்துகொண்டு இனவெறியோடு மண்ணின் மக்கள் மீது தாக்குதல் செய்திருப்பதும், அதுவும் மாற்றுத் திறனாளிகளின் அறப்போராட்டத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்கியிருப்பதும் தமிழ் மக்கள் நடுவில் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட இனவெறியர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இடமாற்றம் போன்ற போலி நடவடிக்கைகள் செய்து இதுபோன்ற இனவெறியர்களை ஊக்கப்படுத்தாது தமிழக அரசு உரிய தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு புறம் சிங்கள இனவெறியர்கள், மறுபுறம் மலையாளிகள் எப்போதும் கன்னடர்கள் என்று பார்க்கும்போது “நாற்புறமும் பகைவர் கூட்டம் நடுத்தெருவில் நம் தமிழ்த்தாய்” என்ற பாவேந்தரின் சொற்கள்தான் நம்மைக் குத்துகிறது. தமிழக அரசு இவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழரின் தன்மானத்தையும் தனிஉரிமைகளையும் காக்க நாங்கள் களமிறங்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன் என்று தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் எழுச்சிப் பெருவிழா !!

திங்கள், அக்டோபர் 17, 2011

தமிழர் நாட்டில் வந்தேறிகள் !

தமிழர் நாட்டில் இன்றுவரை தமிழர்களுக்கு வேலையில்லாத நிலை இருந்துவருவதன் காரணம் வந்தேறிகள் நிலையாக இங்கே தங்கிவிட்டதுதான் . தமிழர்கள் வெளி இடங்களுக்கு வேலை தேடி போகும் நிலையும், அல்லது உள்ளூரிலேயே கூலிகளாக இருக்கும் நிலையும் கவலைக்கிடமானது. தமிழர்கள் இட ஒதுக்கீட்டு மாயையில் வந்தேறிகளை வாழ வைத்தும் ஆள வைத்தும் அழகு பார்ப்பது கேவலமான ஒன்று . தொல் தமிழர்களை ஆதி திராவிடர்கள் என்றாக்கி , வந்தேறி சக்கிளியரை ஆதி தமிழர் என்றும் , அருந்தமிழர் என்றும் கூறி நமது உரிமைகளை அவர்களுக்கு பங்கிட்டுவிட்டு மிச்சத்தை நமக்கே சலுகையாக வழங்குவதும் , அதுவும் கிடைக்காத நிலையில் அதற்காக தமிழ் தேசிய தலைவர்கள் போராடுவதும் அசிங்கமல்லவா ? ஆளவேண்டிய தமிழினம் அகதியாக திரிவதும் , சலுகைகளுக்காக ஏங்குவதும் நியாயமா ? சிந்திப்பீர் !
தமிழர் நாட்டில் வந்தேறிகள் : தெலுங்கு கன்னட பிராமணர்கள் , தெலுங்கு கன்னட சக்கிலியர்கள் , தெலுங்கு கன்னட கம்மவார் , பலிஜா ,
கவரா நாய்டு , கம்பளத்து நாய்டு , வளையல் கார நாய்டு , கம்மா நாய்டு , ரெட்டியார்கள் , ராஜுக்கள் , ஆரிய வைசியர் , கோமுட்டி செட்டி , தெலுங்கு கன்னட தேவாங்கு செட்டி , 24 மனை தெலுங்கு செட்டி, தொட்டிய நாயக்கர் , புதிரை வண்ணார் , ஒட்டர்கள் , சாளியர்கள் , தொம்பர்கள் , கன்னட ஒக்கிலியர், கன்னட லிங்காயத்து , பட்டுநூல் ( எ ) சௌராச்டிரர் , பொட்டுகட்டி (எ)சின்னமேளம் (எ) இசைவேளாளர் ,ராயர்கள் , நரிகுறவர்கள் , குஜராத்தி மார்வாடிகள் , மலையாளிகள் , போன்றோர் ஆவர் .

மேற்கண்டவர்களை நாம் புறக்கணிக்க வேண்டாம் . மாறாக தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுப்போம் ! பாவாணர் காட்டிய வழி அதுதான் . தமிழர் நாட்டை தமிழர்தான் அதுவும் நல்ல தமிழர்தான் ஆளவேண்டும் !!! இருக்கும் உடைமைகளையாவது நமது தலைமுறையினருக்காக காப்போம் ! இழந்த உரிமைகளை மீட்போம் !!! சாதிகளை தெரிந்துகொள் ! தமிழா இணைந்துகொள் !!!

வியாழன், அக்டோபர் 13, 2011

கூடங்குளம் அணுஉலை திட்டத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும், ஏன்?

கூடங்குளம் அணுஉலை திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுவதற்கான நான்கு அடிப்படைக் காரணங்கள்: 1) இந்த அணுஉலை அமைந்துள்ள இடத்தின் சுற்றுச்சூழல் பற்றி அணுசக்தித் துறை இதுவரை எந்த ஆராய்ச்சியும் நடத்தவில்லை 2) நடைபெற வாய்ப்புள்ள பின்விளைவுகளைப் பற்றி எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் தொழில்நுட்ப முடிவுகள் மனம் போன போக்கில் எடுக்கப்பட்டுள்ளன 3) இந்திய – அமெரிக்க அணுஒப்பந்தத்துக்குப் பின் அரசு தொழில்நுட்ப நிர்வாகத் துறையினரின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினைகள் 4) சட்டப் பிரச்சினைகள். இவற்றை விரிவாகப் பார்ப்போம். 1) அந்த இடத்தின் சுற்றுச்சூழல் தொடர்பாக அணுசக்தித் துறை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் சிவில் சமூகத்தினரே ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இந்தப் பகுதியின் நில இயல் இயல்பு தொடர்பாக அரசு நிர்வாகத்துக்கு எதுவும் தெரியாது. அந்த இடத்தின் புவிஇயற்பியல் தொடர்பாக எந்த வகையான நுண்ணிய அளவிலான ஆராய்ச்சியோ, பெரிய அளவிலான ஆராய்ச்சியோ நடத்தாமல், கூடங்குளம் அணுஉலை இவ்வளவு அளவு கொண்ட நிலஅதிர்ச்சியைத் தாங்கக் கூடியது என்று பொத்தாம்பொதுவாக அரசு அமைப்புகள் கூறி வருகின்றன.
சிவில் சமூகத்தினரான எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆராய்ச்சியை செய்திருக்கிறோம். இந்த ஆராய்ச்சி பற்றி அரசு நிர்வாகத்திடம் நேரடியாக பகிர்ந்து கொள்ள முயற்சித்தோம், பிறகு ஊடகங்கள் மூலமாகவும், கடைசியாக 2002 மே மாதம் உச்சநீதிமன்றத்திலும் சமர்ப்பித்தோம். ஆனால் நீதிமன்றம் உள்பட அனைவராலும் எங்களது ஆராய்ச்சி புறக்கணிக்கப்பட்டது, கணக்கில் எடுக்கப்படவில்லை.
ஆனால் 2002 ஆராய்ச்சியில் ( R.Ramesh - Listen to the Voice of Geology, May 2002, Doctors for Safer Environment) நாங்கள் எழுப்பிய முக்கிய பிரச்சினைகளஇல் ஒன்று, சார்னோகைட் பாறை அஸ்திவாரத்தின் மேல் 14 கார்பனாடைட் டைக்ஸ் இருக்கிறது (இவை உறுதியற்ற நிலப்பகுதிகள். பண்டைய புவி யுகங்களில் உறுதியாக மாறிய எரிமலைக் குழம்புகளால் உருவானவை. 90களில் கேரள பல்கலைக்கழகத்தின் நில இயல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜு, பேராசிரியர் ராம சர்மா ஆகிய இருவரும் இதை கண்டுபிடித்திருக்கிறார்கள்), என்ற விஷயத்தை சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த டாக்டர் பூமிநாதன் என்பவர் எதிர்பாராதவிதமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். 2004 நவம்பர் மாத கரண்ட் சயின்ஸ் இதழில் “அணுஉலைகள் தொடர்பான இந்திய அனுபவங்கள்” என்ற ஆராய்ச்சி கட்டுரையில் அவர் இதைத் தெரிவித்திருக்கிறார்.
டாக்டர் பிஜு கண்டுபிடித்ததை அவர் உறுதிப்படுத்தினாலும், கூடங்குளம் அணுஉலை அமைந்துள்ள அதே முறிவுப் பாதையின் (fault line) மீது 1998 – 2002 வரை உருகிய பாறைப் பிதுங்கல்கள் (Rock Melt Extrusions - RME) ஏற்பட்டுள்ளன என்பதை டாக்டர் பூமிநாதன் உறுதிப்படுத்தவில்லை. 2003ஆம் ஆண்டில் இந்த பலவீனமான இடங்களைப் பற்றி கண்டறிந்த பிறகு, அது தொடர்பாக அரசு நிர்வாகம் நிறைய நேரத்தையும் பணத்தையும் செலவழித்துள்ளது. இந்த இடத்தை அகழ்ந்தெடுத்து, இந்தப் பகுதிகளை வலுப்படுத்த அதற்குள் காங்கிரீட்டை ஊற்றியிருக்கிறார்கள். இருந்தபோதும், இந்த உறுதியற்ற பாறை கூட்டங்களின் ஆழத்தைக் கண்டறிவதன் அவசியத்தை அவர்கள் உணரவில்லை.
பேராசிரியர் ராம சர்மா தனது கட்டுரையில், இந்த உறுதியற்ற பாறை கூட்டங்கள் பூமியின் மேலோடு வரை, அதாவது 30 கி.மீ. ஆழத்துக்கு நீண்டிருக்கலாம் என்று எச்சரித்திருக்கிறார். எங்களது கருத்து இதுதான் 1) கூடங்குளம் அணுஉலை தொடர்பாக ரஷ்யர்கள் தயாரித்து, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் (ஏ.இ.ஆர்.பி) சமர்ப்பித்த முதல்கட்ட பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் மேற்கண்ட விஷயம் பற்றி எந்தத் தகவலும் இல்லை; இதற்குக் காரணம் என்னவென்றால் இந்த அறிக்கைக்கான ஆய்வு 1998ஆம் ஆண்டு கடைசி மாதங்களில் நடத்தப்பட்டு, 1999 தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அதாவது இந்த உருகிய பாறைப் பிதுங்கல் நிகழ்வுகள் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகள் நில இயல், அறிவியல் இதழ்களால மறுஆய்வு செய்யப்பட்டு 2001ஆம் ஆண்டுக்குப் பிறகே வெளி வந்தன. அதற்கு முன்னதாகவே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்தப் பகுதியில் உள்ள பலவீனமான கார்பனாடைட் டைக்ஸ் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நிலஅதிர்ச்சி, ஆழிப் பேரலையால் எப்படி பாதிக்கப்படும், மேலும் அவற்றின் இயல்பு என்ன என்பது பற்றி புரிந்துகொள்ள ஆழமான நிலஇயற்பியல், நிலஅதிர்வு ஆராய்ச்சிகள் அவசியம் நடத்தப்பட வேண்டும். 2002 ஜனவரி மாதத்தில் இருந்து இந்த கோரிக்கையை நாங்கள் முன்வைத்து வருகிறோம். இந்தப் பகுதியில் விரிவான நுண்ணிய நில இயல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாமல், இந்த அணுஉலை அமைந்துள்ள இடத்தில் நிகழ்ந்துள்ள உருகிய பாறைப் பிதுங்கல்கள் நிகழ்வை சாதாரணமாக புறமொதுக்கிவிட முடியாது.
எனவே, இந்த ஆராய்ச்சிகளுக்குப் பிறகு வி.வி.இ.ஆர். 1000, வி 392 அணுஉலைகளில் அந்த பகுதியின் நில இயல்புக்கு ஏற்ப வடிவ மாறுதல்கள் தேவை. இந்த இடத்தில் உள்ள பலவீனமான பகுதிகள் காரணமாக மிதமான நிலஅதிர்வுகள்கூட அணுஉலையை பாதிக்கக் கூடும். மேலும் உருகிய பாறைப் பிதுங்கல்கள் வெளியே வந்து நேரடியாக அணுஉலையை பாதிக்கலாம் அல்லது மறைமுகமாக தீவிபத்துகளை தூண்டிவிடலாம் என்ற வாதங்களை புறக்கணித்துவிட முடியாது. ஆனால் அரசு அணுசக்தித் துறை இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் தப்பிக்கப் பார்க்கிறது.
இந்த இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்தால், அதிலும் மோசமாக ஆழிப் பேரலை, நிலஅதிர்வு, உருகிய பாறைப் பிதுங்கல்கள் போன்றவை ஒரே நேரத்தில் ஏற்பட்டால், அவற்றைக் கையாள அணுசக்தித் துறையிடம் அறிவியல்பூர்வமான, தொழில்நுட்ப வல்லமையும் திறமையும் இருக்கிறதா? சுத்தமாக இல்லை என்பதே உண்மை. 2) கூடங்குளம் அணுஉலையில் அணுசக்தித் துறை மேற்கொண்ட முக்கிய தொழில்நுட்ப மாற்றங்கள் இந்த விவகாரத்தை இன்னும் சிக்கலாக்குகின்றன. கன்னியாகுமரியில் உள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து அணுஉலையின் முதன்மை குளிர்விப்பு குழாய்களுக்கு தண்ணீர் எடுக்கப்படும் என்று 2006 அக்டோபர் வரை கூறப்பட்டு வந்தது. இந்த அணை கூடங்குளம் அணுஉலையில் இருந்து வடமேற்கில் 65 கி.மீ. தொலைவில் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன் ஆட்சி நடத்திய திருவாங்கூர் மாநிலத்தால் இந்த அணை கட்டப்பட்டது. ராஜிவும் கோர்பசேவும் 1988ஆம் ஆண்டு கூடங்குளம் அணுஉலை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நேரத்தில் பேச்சிப்பாறை அணை நீரை பயன்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.
2005ஆம் ஆண்டில் 4 வி.வி.இ.ஆர் கூடுதல் அணுஉலைகளுக்காக நாக்பூரை மையமாகக் கொண்ட நீரி அமைப்பு நடத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலும் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுஉலை திட்டத்தின் தலைமைப் பொறியாளர் எஸ்.கே.அகர்வால், நியூக்ளியர் எஞ்சினியரிங் அண்ட் டிசைன் இதழிலில் 2006ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் திருநெல்வேலியில் 2006 அக்டோபரில் நடப்பதாக இருந்து, பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட முதல் மக்கள் கலந்தாய்வு கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு திடீரென மாற்றிக் கொள்ளப்பட்டது.
2006ஆம் ஆண்டின் கடைசியில் இருந்து கூடங்குளம் அணுஉலைக்கு பேச்சிப்பாறை அணை தண்ணீர் பயன்படுத்தப்படாது, அதற்கு பதிலாக புதிய கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம் உருவாக்கப்படும் என்று அரசு நிர்வாகம் ஊடகங்களில் தெரிவிக்க ஆரம்பித்தது. இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி ஏற்படவில்லை.
ஏனென்றால், அணையின் கொள்ளளவு தொடர்பான முதல் ஒருங்கிணைந்த ஆய்வைப் பற்றி எடுத்துக் கூறி, அந்த நீராதாரத்தை அணுஉலைக்கு பயன்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்பதை மக்கள் கலந்தாய்வு மூலம் அதிகாரிகளுக்கு தெரிவித்ததே நாங்கள்தான். அந்த அணுஉலை செயல்படுவதாகச் சொல்லப்பட்ட 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பல்வேறு தொழில்நுட்ப, அரசியல் பின்விளைவுகளை எதிர்நோக்காமல் அந்த அணையில் இருந்து தண்ணீரைப் பெற முடியாது என்பதை இந்த ஆராய்ச்சி நிரூபித்தது. 1992ஆம் ஆண்டில் உலக வங்கி நிதியுதவியுடன் அந்த அணையில் நடைபெற்ற வண்டல்படிவு ஆராய்ச்சியை பற்றியும் இந்த கட்டுரை குறிப்பிட்டிருந்தது. அந்த அணையில் நூறு ஆண்டுகளாக ஏற்பட்ட வண்டல்படிவு, அணையின் உண்மையான கொள்ளளவில் பாதியை மூடிவிட்டது.
தனது முதன்மை அணுஉலை திட்டத்துக்கான தண்ணீர் விநியோகத்துக்கான அணையின் கொள்ளளவு தொடர்பாக ஆராய்ச்சி நடத்துவது பற்றி அணுசக்தித் துறை எந்த வகையிலும் கவலைப்படவில்லை. இந்த அம்சத்தை 18 ஆண்டுகளாக புறக்கணித்து வந்த அணுசக்தித் துறை, சிவில் சமூகம் தனது ஆராய்ச்சியை பகிர்ந்து கொண்ட பின்னர்தான் விழித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகப் பெரிய உண்மை.
பேச்சிப்பாறை திட்டத்தை கைவிட்ட பிறகு அணுசக்தித் துறை என்ன செய்தது? தனது கடல்நீர் சுத்திகரிப்பு திட்டத்துக்காக பாரம்பரிய மல்டி ஸ்டேஜ் ஃபிளாஷ் அல்லது மல்டி எஃபெக்ட் டிஸ்டிலேஷன் தொழில்நுட்பங்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. ஏனென்றால் பேச்சிப்பாறை அணை தண்ணீரைப் பெறும் திட்டத்துடன் அணுஉலைகள் ஏற்கெனவே வடிவமைக்கப்பட்டு விட்டனவே ஒழிய, தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அணுஉலைகள் வடிவமைக்கப்படவில்லை. எனவே, இந்த பாரம்பரிய தொழில்நுட்பங்கள் வி.வி.இ.ஆர் அணுஉலையின் வடிவமைப்பில் ஏற்படுத்தும் “செருப்புக்கு ஏற்ப காலை வெட்டும்” மாற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி ஆராய வேண்டி இருக்கிறது. (இதுவரை எந்த வி.வி.இ.ஆர். 1000 அணுஉலையும் கடற்கரையில் அமைக்கப்பட்டது இல்லை. கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 அணுஉலைகள்தான் முதன்முறையாக தனது முதன்மை, பதிலி குளிர்விப்பான்களுக்கு கடல்நீரை பயன்படுத்தப் போகின்றன). இந்த பிரச்சினையில் சிக்கி அடிபடாமல் இருக்க, அணுசக்தித் துறை ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடித்தது. அணுத் தொழிலில் இதுவரை பரிசோதித்துப் பார்க்கப்படாத, விலை அதிகமான மெக்கானிகல் வேபர் கம்ப்ரெஷன் என்ற புதிய தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையில் எடுத்தது.
கூடங்குளம் அணுஉலை அமைந்துள்ள இடத்தில் அணுஉலைகள் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், ஆழிப்பேரலை வந்தால் இந்த அணுஉலைகள் பாதிக்கப்படாது என்று அணுசக்தித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் ஆழிப் பேரலையோ அல்லது புயலோ இந்த தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்படுத்த வாய்ப்புள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் பரிசீலிக்கவில்லை. (2004 ஆழிப்பேரலையின்போது கூடங்குளம் அணுஉலை ஊழியர்கள் குடியிருப்புக்கு தண்ணீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையம் உண்மையிலேயே பாதிக்கப்பட்டது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது); ஆழிப்பேரலை நிகழும் நேரத்திலேயே கார்பனாடைட் டைக்ஸில் நிலஅதிர்வு ஏற்பட்டு உறுதி குலைந்தால், உருகிய பாறைப் பிதுங்கல்கள் வெளியே வந்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
3) இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் வி.கே.சதுர்வேதி மற்றொரு மிகப் பெரிய முக்கியமான பிரச்சினையை உருவாக்கி இருக்கிறார். 2008ஆம் ஆண்டில் அனில் திருபாய் அம்பானியின் அணு முன்முயற்சி குழுவில் அவர் சேர்ந்துள்ளார். அதற்குப் பிறகு இந்திய அணுசக்தித் துறையில் உள்ள சிறந்த திறமையாளர்களை ரிலையன்ஸ், தனியார் நிறுவனங்களில் சேருமாறு அவர் பிரசாரம் செய்து வருகிறார். இப்படியாக ஏற்கெனவே கவனக்குறைவாகவும் பொறுப்பில்லாமலும் உள்ள அணுசக்தித் துறை, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தை இன்னும் பொறுப்பில்லாததாக மாற்றி வருகிறார்.
4) எல்லாம் மிகவும் மோசமடையும் நிலையில், ஃபுகுஷிமா நெருக்கடியைப் போல் இல்லாமல், கூடங்குளம் அணுஉலையில் ஏற்படும் அணுஉலை நெருக்கடியை அந்த உலையின் காவலர்கள்தான் கையாளுவார்கள் போலத் தெரிகிறது. ஏனென்றால் அதற்குள் அணுசக்தித் துறையில் உளஅள நிபுணர்கள் அனைவரும் மற்ற நிறுவனங்களுக்கு இடம்பெயர்ந்து இருப்பார்கள். 2004 ஆழிப்பேரலையின் போது கல்பாக்கத்தில் இது நடந்திருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் கூடங்குளத்திலும் இது மீண்டும் நடப்பதற்கு ஆயிரம் மடங்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி நடப்பதற்கான வாய்ப்பு நிதர்சனமானது.
கூடங்குளம் அணுஉலை ஏன் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான எங்களது வலியுறுத்தல் மேற்கண்ட காரணங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
- டாக்டர் ஆர்.ரமேஷ், டாக்டர்.வீ.புகழேந்தி, டாக்டர்.வி,டி.பத்மநாபன் பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழு (Doctors for Safer Environment)

நன்றி : கீற்று .காம்

செவ்வாய், அக்டோபர் 11, 2011

உலகத் தமிழர் பேரவை நிறுவனர் இம்மானுவெல் அடிகளார் அவர்கள் திருப்பி அனுப்பப்படமைக்கு அரிமா வளவன் கடும் கண்டனம் !


ஈழத் தமிழரும் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான உலகத் தமிழர் பேரவை நிறுவனர் எஸ்.ஜெ.இமானுவெல் அடிகளார் நேற்று காலை ஜெர்மனியில் இருந்து சென்னை வந்தார்.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் எவ்வித முன்னறிவிப்பும் காரணமும் இன்றி திருப்பி ஜெர்மனிக்கே அனுப்பப்பட்டார். தமிழக முதல்வரையும் மற்றும் பல தமிழக தலைவர்களையும்
சந்தித்த பின்பு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிவிட்டு ஆஸ்திரேலியா செல்ல இருந்த அவரை வலுக்கட்டாயமாக விமான நிலைய அதிகாரிகள் திருப்பி
அனுப்பிவிட்டனர். இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி பச்சையான தமிழர் விரோத நடவடிக்கையும் ஆகும்.அப்பாவி தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும்
இலங்கை அரசின் பிரதிநிதிகள் தமிழகம் வந்து சுற்றுலா பயணிகளைப் போல உல்லாசமாக சுற்றி திரிய அனுமதிக்கும் அரசு தமிழர் உரிமை குரல்வளையை நெரிப்பது எந்த வகையில் நியாயம்?
இமானுவெல் அடிகளார் திருப்பி அனுப்பப்பட்டதற்கு தமிழர்களம் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது. தமிழக அரசு உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து அவரை திரும்ப
அழைக்காவிட்டால் தமிழர்களம் போராட்டத்தில் குதிக்கும் என எச்சரிக்கின்றேன் ! என்று தமிழர்களத்தின் பொதுசெயலாளர் அரிமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.


செய்தி : ஊடகப்பிரிவு
தமிழர்களம், கரூர்.

வெள்ளி, அக்டோபர் 07, 2011

மனம்போல் மன்மோகன் பல்டி!



தமிழர்கள் மீதுஅணுஉலையைக் திணிக்கத் துடிக்கும் காங்கிரசைக் கருவறுக்க
அரிமாவளவன் அழைப்பு!!
காலை நடந்த பேச்சுவார்த்தையில் உயர்மட்டக்குழு என்றும், கூடங்குளத்தில் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படும் என்றும் மக்கள்தான் முக்கியம் என்றும் பேசிய தலைமையமைச்சர் மன்மோகன்சிங் மாலையில் வல்லுனர் குழு என்றும் உரிய காலத்தில் தொடங்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பல்டிக்கு மேல் பல்டி அடித்துள்ளார்.
உலகநாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கான அரங்குகளும் கட்டடங்களும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே இடிந்து விழுந்தது குறித்து உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. இந்தியா தலை குனிந்து நின்றது. இதற்குக் காரணமான கல்மாடி போன்ற மலைவிழுங்கிகளை அமைச்சரவையிலேயே வைத்திருந்த மன்மோகன்சிங் இன்று கூடங்குளம் அணுஉலையால் எந்த ஆபத்தும் இல்லை என்று அடித்துச் சத்தியம் செய்கிறார். அவர் மூக்கின் கீழேயே நடந்த உலக மகா ஊழல்களை உணராத உத்தமர் அவர். அலைக்கற்றை ஊழலில் ஒரு லட்சத்து 76ஆயிரம் கோடிகளை விழுங்கிய எமகாதர்கள் ஏப்பம் விட்டது உலகத்திற்கே கேட்டது. ஆனால், அருகிலிருந்த தனக்கு தெரியவே தெரியாது என்று சத்தியம் செய்கிறார். இந்த மகா உத்தமர்தான் இப்போது, கூடங்குளம் பற்றி அடுத்த சத்தியம் செய்கிறார். ஆதர்ஷ் அடுக்குமாடிக் கட்டட ஊழல், அரங்குகளும் பாலங்களும் சரிந்து விழுந்த கல்மாடி ஊழல், அலைக்கற்றைத் திருட்டு ஊழல் போன்றனவெல்லாம் மன்மோகன்சிங் அருகில்தான் நடந்தன. ஆனால், கூடங்குளம் என்பது ஊழல் உலை மட்டுமல்ல! ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் உலை வைக்கும் அணு உலை அது!
பாதுகாப்பானது என்றால், பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே! பாராளுமன்றத்தைத் தாக்கியதையே தடுக்க முடியாது அசகாயச் சூரர்கள் அணுஉலை வெடித்தால் காப்பாற்றிக் கரை சேர்த்து விடுவார்களாம்! முதல் அணுஉலையைக் கட்டும்போது எச் சி எல் என்ற நிறுவனம் ஒதுக்கீட்டுத் தொகையை 46 விழுக்காட்டுக்குத்தான் டெண்டர் கோரி ஒப்பந்தம் எடுத்தது. கடல் மணலைக் கலந்து கட்டடம் கட்டுகிறார்கள் என்று அப்போதைய சட்ட மன்ற உறுப்பினர் புகார் அளித்தார். இப்படியெல்லாம் கண்ணெதிரேயே தில்லு முல்லு செய்து கட்டிய அணுஉலை வரைபடத்திலும் விளம்பரத்திலும் வேண்டுமானால் பாதுகாப்பானதாக இருக்கலாம். நடைமுறையில் அதுவும் ஒரு காமன் வெல்த் “கலக்கல்” கட்டடம்தான்.
தில்லி உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே இரண்டு முறை குண்டு வெடித்தது. அதையே தடுக்க முடியவில்லை. மும்பை நகரின் நட்ட நடு வீதியில், நடுப்பகலில் சுட்டுத் தள்ளியதை நேரடி ஒளிபரப்பினார்களே! இப்படி மையத்தையே காப்பாற்ற இயலாத இவர்கள் கடைக்கோடியில் கடைபரப்பி வைத்திருக்கிற அணுஉலைகளைக் காப்பாற்றப் போகிறார்களாம்!
வெடித்தபிறகு மன்மோகன்சிங், எழுதி வைத்து இரங்கல் வாசிப்பார். கேட்க நாம் இருக்க மாட்டோம். தமிழகத்திற்கு எதிராக இருக்கிற இலங்கைக்கும் கேரளாவிற்கும் மின்சாரம் வழங்கத்தான் திட்டம். எஞ்சியிருப்பது தமிழ்நாட்டிற்கு என்று காடை காட்டுகிறார்கள்! கண்ணை விற்றா சித்திரம் வாங்குவோம்? உயிரை விலை பேசியா எச்சில உணவு தேடுவோம்? தமிழனைக் காவு கொடுத்து மின் உற்பத்தியா?
மத்தியில் இருக்கிற காங்கிரசு அரசு தமிழர் விரோத அரசு என்று எண்ணற்ற முறை மெய்ப்பித்து விட்டது. இரு நாட்களுக்கு முன்பாக ராமேசுவரம் பகுதியிலிருந்து சிங்கள இனவெறி கடற்படையால் பிடிக்கப்பட்ட படகுகள் இந்தியப் படைகளின் முன்பாகத்தான் கடத்தப்பட்டிருக்கின்றன. 550 மீனவர்களைக் கொன்ற பின்னரும் இந்தியா தமிழ் மீனவர்களைக் காப்பாற்றவில்லை. ஈழத்தில் மிகப்பெரிய ஒரு இனப்படுகொலையை சிங்களப் இனவெறி அரசோடு சேர்ந்து செய்து முடித்த காங்கிரசு ஆட்சி கூடங்குளத்தில் மட்டும் தமிழினத்தின் மீது பாசமழையையா கொட்டப்போகிறது? மீண்டும் ஒரு தமிழினப் படுகொலைக் களத்தைத்தான் அங்கே உருவாக்கி வைத்திருக்கிறது.
ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தொழிக்க நினைக்கும் காங்கிரசுக் கட்சிக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாடை கட்டுவோம்! ஈழத் தமிழர் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை அள்ளிப்போட்டுக் கொன்ற இதே அரசு இன்று தமிழ்நாட்டுத் தமிழர்களை அழித்தொழிக்கும் ஆயுதத்தை நம் நடுவில் நிறுவுகிறது. வெடித்த பின்னர் வேதனைகளைக் கொட்டக்கூட நாம் இருக்கமாட்டோம்! நம்மைக் கொல்லத் துடிக்கும் இன எதிரிகளை இந்தத் தேர்தலிலும் அடையாளம் காண்போம். எங்கெங்கு காங்கிரசுக் கட்சி நிற்கிறதோ அங்கெல்லாம் அக் கட்சியை வேரடி மண்ணோடு சாய்ப்போம். இவ்வாறு தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .