வியாழன், டிசம்பர் 29, 2011

அணையைக் காக்க சின்னமனூரில் 20 ஆயிரம் பேரணி – சிதம்பரத்தில் ரயில் மறியல்

வியாழக்கிழமை, டிசம்பர் 29, 2011,
சின்னமனூர்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து புதன்கிழமையன்று சின்னமனூரில் 20 ஆயிரம் பேர் கண்டன பேரணி நடத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 107 பேர் கைது செய்யப்பட்டனர்.

முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டது என்று கூறி அதனை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அணையில் இருந்து பாசன வசதி பெறும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கடந்த 23 நாட்களாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் எல்லைப் பகுதியில் கூடி தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கண்டன ஊர்வலம்

இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் கேரள அரசை கண்டித்து 41 சமுதாயங்களை சேர்ந்த மக்கள் சார்பில் புதன்கிழமையன்று கண்டன ஊர்வலம் நடைபெற்றது. சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டு பழைய பாளையம் வழியாக மார்க்கையன்கோட்டை விலக்கு பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்து அரசு மருத்துவமனை, தேரடி திடலில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர்.

ரயில் மறியல்

அணைப் பிரச்சினையில் சுமூக முடிவு காணாத மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் சிதம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பாலமான் வாய்க்கால் வழியாக அவர்கள் ஊர்வலமாக சென்ற போது அவர்களை போலீசார் தடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மறியலுக்கு முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 14 பேர் கொண்ட ஒரு குழுவினர் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பகல் 12.25 மணிக்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க தண்டவாளத்தில் சிவப்பு நிற துணியை காட்டியபடி ஊர்வலமாக சென்று உசுப்பூர் ரெயில்வே கேட் அருகே மறித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சேலம், திண்டுக்கல் கடையடைப்பு

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல் படுத்த வலியுறுத்தி திண்டுக்கல் நகர வியாபாரிகள் புதன்கிழமையன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகள் அழைப்பு விடுத்து இருந்தனர். இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய வர்த்தக கேந்திரங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இரு மாவட்டங்களிலும் நடைபெற்ற வேலை நிறுத்தம் காரணமாக 100 கோடி ரூபாய்க்கு கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

அணைப் பிரச்சினையில் சுமூக முடிவு காண வலியுறுத்தி திருவானைக்காவல் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 500-க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செவ்வாய், டிசம்பர் 27, 2011

கருத்துப்படம்!

முல்லைப் பெரியாறு: 28ம் தேதி பேரணி- ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க 40 சங்கங்கள் முடிவு!

செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 27, 2011,


சின்னமனூர்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடைசி எச்சரிக்கை விடுப்பது போல தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்த 40 சமுதாய சங்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு தீவிரப் போராட்டத்தில் குதிப்பது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து கடந்த 21 நாட்களாக தீவிரமாக போராடிய மாவட்டம் தேனி. தேனி மாவட்டத்தின் அத்தனைப் பகுதிகளிலும் கேரளாவைக் கண்டித்து கடுமையான போராட்டங்கள் வெடித்தன. தினசரி லட்சம் மக்கள் குமுளியை நோக்கி ஊர்வலம் போய் கேரளாவை அதிர வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது அங்கு போராட்டங்கள் ஓரளவு தணிந்துள்ளது. குமுளி வழியாக நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்தும் கூட சகஜமாகத் தொடங்கியுள்ளது. இருப்பினும் காய்கறி, பால் உள்ளிட்டவற்றை மட்டும் கொண்டு செல்ல மக்கள் அனுமதி மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சின்னமனூரில், 40 சமுதாய சங்கங்கள் இணைந்து ஆலோசனைக் கூட்டடம் ஒன்றை நடத்தின. மறவர் மக்கள் மன்றத்தில் நடந்த இக்கூட்டத்தில் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் செயலற்ற போக்கையும் கண்டித்துப் பேசப்பட்டது.

விவசாயிகள், பொதுமக்கள் என பெரும் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.
அகமுடையார் முன்னேற்ற சங்க தலைவர் ஆதிமூலம் தலைமை வகித்தார். மறவர் முன்னேற்ற சங்க தலைவர் மதிவாணன், பிரமலைக்கள்ளர் சங்க தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

அதன்படி,

- முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவமதித்து வரும் கேரள அரசை மத்திய அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

- இடுக்கி மாவட்டத்தை திரும்பப்பெற்று தமிழகத்தோடு மத்திய அரசே இணைக்க வேண்டும்.

- முல்லைப் பெரியாறு நீர்தேங்கும் பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28ம் தேதி 10,000 பேர் பங்கேற்கும் பேரணி நடத்துவது.

- இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை உத்தமபாளையம் தாசில்தாரிடம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து 28ம் தேதிக்குப் பின்னர் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- தளவாய் பணிவளன்

கன்னியாகுமரி தமிழர் பிரச்சனை!!

இளைஞர்களுக்கு தமிழர்களத்தின் அழைப்பு

தமிழ்நாடு தற்போது எழுச்சியான காலகட்டத்தில் பயணித்து வருகின்றது. மத்திய அரசின் தொடர்ந்த புறக்கணிப்பாலும், அண்டை மாநிலங்களின் தொடர் சதியாலும், தண்ணீர் தர மறுப்பாலும் தமிழகம் பல்வேறு சிக்கல்களையும் சவால்களை சந்தித்து வருகின்றது. கூடங்குளம், முல்லை பெரியாறு, இலங்கை தமிழர்கள் பிரச்சனை ஆகியவற்றில் மத்திய அரசின் பாராமுகமும், மக்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையும் தமிழகத்தை இன்றைய கொந்தளிப்பான நிலைக்கு தமிழர்களை தள்ளியிருக்கிறது.

இதற்கு எல்லாம் காரணமாக தமிழர்களம் பார்ப்பது தமிழகத்தை காமராசருக்கு பிறகு தமிழன் ஆளவில்லை என்பதேயாகும். இன்று தமிழகம் மலையாளிகள், கன்னடர்கள், தொலுங்கர்கள் கையில் அகப்பட்டு அவர்களின் வேட்டைக்காடாகவே மாறிவிட்டது. தமிழர்கள் திராவிடர்களின் கையில் தம் மண்ணையும், ஆட்சியையும், உரிமைகளையும் இழந்து தெருவில் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திராவிடர்கள் என்ற போர்வையில் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் இன்று தமிழகத்தை ஆள்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. நம் உரிமைகளும் இலகுவாக விட்டு கொடுக்கப்பட்டு வருகின்றது.

குமரி மாவட்டம் பல்வேறு அடக்குமுறைகளாலும், இன அடையாளத்தைக் கண்டு கொண்டதாலும் தாய் தமிழகத்துடன் சேர வேண்டும் என்று தமிழன் நேசமணியின் தலைமையில் கடும் போராட்டத்தின் மூலம் 13 தமிழர்களின் உயிர் தியாகத்திற்கு பின் தமிழகத்துடன் இணைந்த பாரம்பரியம் கொண்டது. ஆனால் இன்று அவ்வரலாறும், இன அடையாளங்களும் மறைந்து போகுமளவிற்கு குமரி மக்கள் திராவிடர்களாகவும், இந்துக்களாகவும், கிறித்தவர்களாகவும், கம்யூனிஸ்டுகளாகவும், காங்கிரசுகாரர்களாக, சாதியினாலும் பிளவுபட்டு கிடக்கின்றனர். தமிழர் என்ற அடையாளம் எங்கும் உருவாகாமல் இவர்கள் கவனமுடன் பார்த்து வருகின்றனர்.

இலங்கையில் சிங்களர்கள் இன படுகொலையின் போதும், கன்னடர்கள் கன்னட வெறியோடு மக்களை கொன்று குவித்த போதும், முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் சபரிமலை பக்தர்களை அடித்து, இழிவுபடுத்திய போதும் யாரும் அவர்களை இந்துக்களாக, கிறித்தவர்களாக, சாதீய அடையாளங்களுடன் பார்க்கவில்லை. மாறாக தமிழர்கள் என்பதாலே தாக்கப்பட்டனர், இழிவுபடுத்தப்பட்டனர், கொல்லப்பட்டனர்.

இந் நிலையில் தமிழர்களம் தமிழினம் இழந்த இன அடையாளத்தை மீட்கவும், திராவிடத்திடம் இழந்த ஆட்சியை அதிகாரத்தை தமிழர்கள் கையில் மீட்டெடுக்கவும் தொடங்கப்பட்ட இயக்கமாகும். தமிழர்களுக்கான வாக்களிக்கப்பட்ட நாடு தமிழ்நாடேயாகும் என்பது எம் கோட்பாடு. நாம் இழந்த பகுதிகளை மீட்போம். பிள்ளைகளுக்குரியதை நாய்களுக்கு போடாதீர் என்ற பழமொழி தமிழர்க்குரிய உரிமையை அடுத்தவர்க்கு விட்டு கொடுக்காதீர் என்றே தமிழர்களம் பார்க்கின்றது. விழிப்பாயிருப்போம், நம் உரிமைகளை வென்றெடுப்போம். “தமிழர்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இவ்வியக்த்தில் அரசியல் ஆர்வமும், சமூக அக்கரையும், தொண்டுள்ளமும் படைத்த இளைஞர்களும், இளம்பெண்களும் பெருவாரியாக சேர்ந்து தமிழின மீட்பை மையமாக வைத்து கீழ்கண்ட குமரியின் முக்கிய பிரச்சனைகளில் போராட அழைக்கிறோம்.

குமரியின் மைய பிரச்சனைகள்

மத்திய அரசு நடத்துகின்ற பொறியியல், மருத்துவம், சட்டம், கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளான IIT-JEE, AIPMT, AIEEE, CLAT, CUSET, AIIMS-ES, IISER-ES, DAT, IIST-ES, CPT ஆகியவற்றின் கேள்வித் தாள்களை தமிழ் வழி கல்வி பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களும் எழுதும் வண்ணம் ஆங்கிலம், இந்தியுடன் தமிழிலும் தரப்பட வேண்டும் வேண்டும்

தமிழகத்தின் ஒருபகுதியான தமிழர்கள் பெருவாரியாக வாழும் நெய்யாற்றிங்கரைத் தாலுகாவை தாய் தமிழகத்துடன் இணைக்க வேண்டும். இடதுகரைக் கால்வாய் தண்ணீர் மலையாளிகளால் திறந்துவிடப்படாத்தால் 10,000 ஏக்கர் நிலம் விளவங்கோடு வட்டத்தில் தரிசாக கிடப்பது பாசன வசதி பெறும்.

பத்மநாப்புரம் அரண்மனை, குமரி வட்டக் கோட்டை, குமரி விருந்தினர் மாளிகை ஆகியவை தமிழக நிலப்பரப்பில் மலையாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது. அதை தமிழக அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

குமரியிலுள்ள இந்து ஆலயங்களின் கட்டுப்பாட்டை மலையாளிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். தமிழர்களின் காணிக்கை பணம் கேரளாவிற்கு செல்வதை தடுக்க வேண்டும்.

தமிழரான அய்யா வைகுண்டர் நிறுவிய மதமான அய்யா வழிக்கு தனி மத அங்கீகரம் வழங்கி சிறுபான்மை தகுதி வழங்க வேண்டும். அகிலதிரட்டை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும்.

திருவிதாங்கூரில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் 9 தமிழ் வட்டங்களையும் தமிழகத்துடன் இணைக்க போராடிய குமரி தந்தை மார்சல் அ நேசமணி மற்றும் ம.பொ.சி யின் வரலாற்றையும், 11 தமிழர்களின் உயிர் தியாகத்தால் பெற்ற குமரி எல்லை வீர போராட்டத்தையும் பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும்.

கேரளாவில் அபரிமிதமான கனிமவளங்கள் (கருங்கல், ஆற்றுமணல், பாறைப்பொடி) இருந்தும் அதை வெட்டி எடுக்காமல் குமரி கனிம வளங்களை மலையாளிகள் சூறையாடுவதை, கனிமவள ஏற்றுமதியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இருக்கின்றது என்ற ஒரே காரணத்தால் மலையாளிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் திருவனந்தபுரத்திலிருந்து வள்ளியூர் வரை உள்ள இருப்பு பாதையை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.

தமிழகத்தின் பெருமையான குமரி எல்லையில் அமைந்திருக்கும் காவல்கிணறு ISRO வின் கிளை மையத்தை தமிழர்களின் பங்களிப்பை உறுதிபடுத்தும் நோக்கில் தனிமையமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களின் உழைப்பை உறிஞ்சும் மலையாளிகளின் ஏகாதிபத்தியத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

மக்களுக்கு புற்றுநோயை உருவாக்கிவரும் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணற் தொழிற்சாலையை (IRE) உடனே மூட வேண்டும்.

குமரியில் தொடங்கப்பட்டுள்ள கோந்திரிய வித்யாலயா பள்ளி மலையாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படவில்லை. குமரி உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து CBSC பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக படிக்க சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் குமரி மக்கள் பயன்பெறும் வகையில் குமரி தந்தை நேசமணியின் பெயரில் நவீன நூலகம் (அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நிகராக) உருவாக்கப்பட வேண்டும்
குமரியில் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் மொழிபெயர்ப்பு மையம் ஏற்படுத்தி பிற மொழிநூல்களை தமிழில் மொழிபெயர்க்க வசதி ஏற்படுத்த வேண்டும்.

என்றும் தமிழ் உணர்வுடன்
அன்புடன்,
"தளவாய்" பனிவளன்(+919842978005)

திங்கள், டிசம்பர் 26, 2011

பிரான்சில் தமிழீழ அஞ்சல்வில்லை வெளியீடு !






france postcard stamps tamil eelam








பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபாலர் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.
இவற்றுள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் படம் பதித்த தபால் முத்திரையும்,

தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய விலங்கு, தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.

எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.
இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.

நன்றி் - http://tamilmakkalkural.blogspot.com

வெள்ளி, டிசம்பர் 23, 2011

கருத்துப் படம் !

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை இருந்தாலும் கேரளாவுக்கு மணல் கடத்தல் குறையவில்லை!!

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை இருந்தாலும் கேரளாவுக்கு மணல் கடத்தல் குறையவில்லை
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 24, 2011,


திருச்சி: முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையால் இருமாநிலங்களிடையே பதற்றம் எழுந்துள்ள நிலையிலும் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆற்றுமணல் கடத்தப்படுவது குறைந்தபாடில்லை.

கோவை மாவட்ட செக்போஸ்ட் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஆற்றுமணல்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றனவாம்.

திருச்சி, கரூர் ஆற்றுமணல்

கேரளா மாநிலத்தில் உள்ள ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு அந்த மாநில அரசு விவரமாக தடைவிதித்துள்ளது. இதனால் அங்கு வீடு மற்றும் கட்டடங்கள் கட்டுவற்கு மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் மணல் தேவையை நிறைவு செய்வது தமிழ்நாடுதான். பால், காய்கறி உள்ளிட்டவை போக தமிழகமக்கள் மணலையும் கேரளாவுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.

திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் திருட்டுத்தனமாக அள்ளப்படும் மணல் லாரிகள் மூலமாக பல்லடம் வேலந்தாவளம் வழியாக கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.

திமுக ஆட்சிக்காலத்தில் திமுக கொடியுடன் மணல் கடத்திய லாரிகள் தற்போது அதிமுக கொடியுடன் செக்போஸ்ட் போலீசாரின் ஆசியுடன் மீண்டும் மணல் கடத்தப்படுகிறதாம். இந்த கடத்தலுக்கு ஆளுங்கட்சியினரும் ஆதரவாக உள்ளதால் அவர்களுக்கும் மாமூல் கொடுத்துவிட்டு மணலை கடத்துகின்றனர் கடத்தல்காரர்கள்.

அணைப்பிரச்சினையிலும் தொடரும் கடத்தல்

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையால் இருமாநிலங்களிடையே வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், மணல் கடத்தல் லாரிகள் மட்டும் எப்படி எவ்வித இடையூறும் இல்லாமல் சென்றுவருகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.

தமிழக பதிவு எண்களுடன் கூடிய லாரிகளில் மணல் கடத்துவதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளதால், தற்போது ஆந்திரா, புதுச்சேரி பதிவு எண்களை கொண்ட லாரிகளை கடத்தல் ஆசாமிகள் பயன்படுத்துகின்றனர்.

கடத்தல் வாகனங்களின் ஒரிஜனல் பதிவு எண் பலகைகள் மோசடியான முறையில் மாற்றப்பட்டு ஆந்திரா, கர்நாடக பதிவு எண்களுடன் இயக்கப்படுகின்றன. அதிகாரிகள் வழிமறித்தால், போலி பர்மிட் உள்ளிட்ட ஆவணங்களை காட்டி தப்பி விடுகின்றனர்.

லாரியில் கடத்தப்படும் மணல் மீது தார்பாலின் போட்டு மறைத்து, அதன்மேல் "கிரஷர் டஸ்ட் மண்' (கருப்பு மண்) போட்டு மூடி கடத்துவதாகவும் கூறப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆற்றுமணல் கடத்தப்படுவதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

மாபெரும் கடையடைப்பு மற்றும் மன்மோகன் சிங்கின் உருவ பொம்மை எரிக்க முயன்ற தமிழர் உரிமை மீட்புக் கூட்டமைப்பினர் கைது!!





மாபெரும் கடையடைப்பு மற்றும் மன்மோகன் சிங்கின் உருவ பொம்மை எரிக்க முயன்ற தமிழர் உரிமை மீட்புக் கூட்டமைப்பினர் கைது!!

கரூர் - 23.12.11
கரூரில் இன்று நடைபெற்ற கடையடைப்பு முழு அளவில் வெற்றி பெற்றுள்ளது . முல்லை பெரியாரின் அணை உரிமையை காக்கவும். இடுக்கி உட்பட தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நிலப் பகுதிகள் தமிழகத்தோடு இணக்க கோரியும் தமிழர் களம், புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் , ஆதி தமிழர் பேரவையினர் உள்ளிட்ட தமிழர் அமைப்புகளை சார்ந்தவர்கள் இணைந்து உருவாக்கிய "தமிழர் உரிமை மீட்புக் கூட்டமைப்பினர்" கடையடைப்பு நடத்த பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர் . அதை தொடர்ந்து இன்று காலை முதல் முழு அளவில் கடையடைப்பு நடைபெற்றது . அதை தொடர்ந்து இன்று தமிழர் உரிமை மீட்புக் கூட்டமைப்பினர் கடைவீதிகளில் ஊர்வலமாக சென்று இந்திய அரசை கண்டித்தும் , கேரளா முதலவர் உம்மன் சாண்டியை கண்டித்தும் முழக்க மிட்டவாறு ஊர்வலமாக சென்றனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஆதரவு தெரிவித்து இந்த போராட்டம் வெற்றியடைய செய்தனர் .
அதை தொடர்ந்து தமிழர் உரிமை மீட்புக் கூட்டமைப்பினர் மன்மோகன் உருவ பொம்மையை பாடை கட்டி தூக்கி வந்து எரிக்க முயன்றனர் . அப்போது காவல் துறையினர் தடுத்து , போராட்டக் காரர்களை கைது செய்தனர் . போராட்டக் குழுவில் தமிழர் களம், புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் , ஆதி தமிழர் பேரவையினர் உள்ளிட்ட தமிழர் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்துகொண்டு கைதாகி மாலையில் விடுவிக்கப் பட்டனர் .

செய்தி : ஊடகப் பிரிவு . தமிழர் களம்

வியாழன், டிசம்பர் 22, 2011

முல்லைப் பெரியாறு: 5 மாவட்டங்களில் மக்கள் ஆதரவுடன் கடையடைப்பு- ஒரு கடையும் திறக்கவில்லை!

வியாழக்கிழமை, டிசம்பர் 22, 2011, 12:51


மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டை கண்டித்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடந்து வரும் இந்தப் போராட்டத்தால் இந்த மாவட்டங்களில் மருந்துக் கடைகளைத் தவிர மற்ற அத்தனை கடைகளும் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளன.

முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்டவேண்டும் என்பது கேரள அரசின் நிலைப்பாடு. ஆனால் புதிய அணை கட்டப்பட்டால் முல்லைப்பெரியாறு அணையை நம்பியுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப்போகும் என்பது தமிழக விவசாயிகளின் கவலை. மேலும் தமிழகத்தின் உரிமையான முல்லைப் பெரியாறை இடிக்க ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எனவே புதிய அணை கட்ட தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. கடந்த ஒருமாத காலமாக தினம் ஒரு போராட்டம் என கேரள அரசுக்கு எதிராக தமிழக மக்கள் போராடி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு தமிழர்கள் ஒட்டுமொத்தமாக, ஒரே கருத்துடன் திரண்டு போராடி வருவதால் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது தமிழகம்.

5 மாவட்டங்கள் கடையடைப்பு

இந்த நிலையில் அணையை பாதுகாக்க வலியுறுத்தி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் 5 மாவட்டங்களிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

வெறிச்சோடிய தெருக்கள்

அனைத்து மாவட்டங்களிலும் முழுக் கடையடைப்பு முழு வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. கடைவீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மருந்துக் கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன.

தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என அனைத்து முக்கிய ஊர்களிலும் மயான அமைதி காணப்படுகிறது. எந்தக் கடையும் திறக்கப்படவில்லை.

இதே போல சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், மதுரையிலும் நிலை உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவையும் நடைபெற்றுள்ளன

கேரளாவைக் கண்டித்து மதுரையில் பல ஆயிரம் விவசாயிகள் பேரணி- தபால் அலுவலகம் சூறை!

கேரளாவைக் கண்டித்து மதுரையில் பல ஆயிரம் விவசாயிகள் பேரணி- தபால் அலுவலகம் சூறை
வியாழக்கிழமை, டிசம்பர் 22, 2011, 10:54

மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் விஷமப் போக்கைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பல ஆயிரம் விவசாயிகள் திரண்டு பேரணி நடத்தினர். அப்போது தபால் அலுவலகம் ஒன்றை சூறையாடினர்.

மதுரையைப் பொறுத்தவரை வங்கிகள், அரசு நிறுவனங்கள் மட்டுமே இயங்கின. மருந்துக் கடைகள் திறந்திருந்தன. மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. முக்கியக் கடைகள் நிரம்பியுள்ள மாசி வீதிகள், வெளி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் பந்த் நடப்பது போல காட்சி அளித்தது.

சாலைகளில் வாகனப் போக்குவரத்து நடந்தாலும் கூட மதுரை நகர் முழுவதுமே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.

மதுரை முழுவதும் கேரளக்காரர்களின் எந்தக் கடையும் திறக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பல ஆயிரம் விவசாயிகள் படையெடுப்பு

மதுரை மாவட்ட விவசாயிகள் முல்லைப் பெரியாறு நீரை நம்பி உள்ளவர்கள் என்பதால் மதுரையை நோக்கி பல ஆயிரம் விவசாயிகள் மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வேன்கள், டிராக்டர்கள், மாட்டு வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் என பல வாகனங்களிலும் திரண்டு வந்தனர்.

அனைவரும் தெப்பக்குளத்தில் கூடி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு வந்தபோது அங்கிருந்த தபால் அலுவலகம் ஒன்றை போராட்டக்காரர்கள் தாக்கி சூறையாடினர். இதனால் தபால் அலுவலகம் பெரும் சேதத்தை சந்தித்தது.

கேரள அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.அதுவரை விடாமல் போராடுவோம், எங்களது உரிமையை விட மாட்டோம் என்று விவசாயிகள் ஆவேசமாக கூறினர்.

புதன், டிசம்பர் 21, 2011

கடையடைப்பு போராட்டம் !



செய்தி் ஊடகப்பிரிவு, தமிழர் களம்.

முல்லைப்பெரியாறு: கூடலூரில் போலீஸார் திடீர் தாக்குதல்-தடியடி கண்ணீர்புகை வீச்சு- பலர் காயம்

முல்லைப்பெரியாறு: கூடலூரில் போலீஸார் திடீர் தாக்குதல்-தடியடி கண்ணீர்புகை வீச்சு- பலர் காயம்
புதன்கிழமை, டிசம்பர் 21, 2011, 17:37


கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப் பகுதியில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. குமுளியை நோக்கி முன்னேறிய மக்களை தடுத்த போலீஸார் திடீரென கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் ஓட ஓட விரட்டியடித்ததால் பெரும் பதட்டம் நிலவுகிறது. 5 முறை தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையை காக்க வலியுறுத்தி தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கம்பம், குமுளி, கூடலூர் பகுதியில் தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீண்டும் வன்முறை

இந்த நிலையில் இன்று கூடலூரை அடுத்த லோயர் கேம்ப் பகுதியில் ஒரு லட்சம் பொதுமக்கள் வரை கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போக கூறி போலீசார் அறிவுறுத்தவே, அதனை கேட்காமல் குமுளியை நோக்கி மக்கள் முன்னேற முயன்றனர். இதனால் போலீசார் லேசாக தடியடி நடத்த நேரிட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் மீண்டும் தடியடி நடத்தினர். இதில் 200 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

போலீஸ் மீது கல்வீச்சு

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸ் மீது கற்களை வீசி தாக்கினர். உடனே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், அதிக அளவில் தடியடியும் நடத்தினர். இன்று மட்டும் 5 முறை தடியடி நடத்தப்பட்டது. இதில் கூடலூர் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. போலீசார் நடத்திய தடியடியில் காயமடைந்த அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வன்முறையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் வேன் ஒன்றும் சேதமடைந்தது.

மன்னிப்பு கேட்க வேண்டும்

தமிழ்நாடு போலீசரே தங்களின் மீது தடியடி நடத்தியதில் பொதுமக்கள் கொதித்து போயுள்ளனர். தாக்குதல் நடத்திய போலீசார் மன்னிப்பு கேட்கும் வரை விடப்போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

nandri : thatstamil.com

கேரளா செல்லும் 30,000 லாரிகள் நிறுத்திவைப்பு!

கேரளா செல்லும் 30,000 லாரிகள் நிறுத்திவைப்பு


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் நீடிக்கிறது. மேலும் தமிழக லாரிகள், அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் தாக்கப்படுகின்றன.


இதைக்கண்டித்து இன்று ஒருநாள் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு பொருட்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் நிறுத்தி வைக்கபட்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம அறிவித்தது. இன்று தமிழ்நாடு

\முழுவதும் 30 ஆயிரம் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய ஊர் களில் இருந்தும் கேரளாவுக்கு லாரிகள் எதுவும் செல்லவில்லை.

கேரளாவில் ஒரே நாளில் 11 தமிழக ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் உடைப்பு!

கேரளாவில் ஒரே நாளில் 11 தமிழக ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் உடைப்பு
புதன்கிழமை, டிசம்பர் 21, 2011, 10:31



நெல்லை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் 11 வாகனங்கள் மீது கொல்லம் மாவட்டத்தில் நேற்று தாக்குதல் நடைபெற்றுள்ளது.

முல்லை பெரியாறு விவகாரத்தால் இரு மாநிலங்களிடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. கேரளாவில் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் திருச்சூரிலும், புனலூரிலும் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

11 வாகனங்கள் மீது தாக்குதல்

இந்நிலையில் முன்தினம் நள்ளிரவிலும் தமிழக ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் தொடர்ந்தது. கொல்லம் மாவட்டம் பத்னாபுரம், புனலூர், கூடல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 6 இடங்களில் தமிழக ஐயப்ப பக்தர்களின் 11 வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

பிரவந்தூர் பகுதியில் ஒரு பஸ் மற்றும் 2 வேன்கள் மீதும், வழந்தோப்பு பகுதியில் ஒரு வேன் மீதும் கடைக்காமன், பள்ளி முக்கு பகுதியில் 2 பஸ்கள், உள்பட 11 வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் அனைத்து வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இரவு 10.30க்கும் அதிகாலை 2.30 மணிக்கும் இடையே இந்த தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.

இது தொடர்பாக பத்தனாபுரம், புனலூர், கூடல் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 11 பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளதால் தமிழக ஐயப்ப பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ரயில் மூலம் கேரளாவுக்கு காய்கறி, உணவை அனுப்பும் மலையாள ரயில்வே அதிகாரிகள்!

ரயில் மூலம் கேரளாவுக்கு காய்கறி, உணவை அனுப்பும் மலையாள ரயில்வே அதிகாரிகள்!
புதன்கிழமை, டிசம்பர் 21, 2011, 11:40


கோவை: தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால் உள்ளிட்டவை தடுக்கப்பட்டு வருவதால், ரயில்கள் மூலம் இவற்றைக் கொண்டு செல்ல தமிழகத்தில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த மலையாள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உதவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின்போக்கைக் கண்டித்து, இன்று தமிழக கேரள எல்லைப்புறங்களில் மதிமுக மற்றும் தமிழ் அமைப்புகளின் சார்பில் பொருளாதார முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் கந்தைகவுண்டன் சாலை, வாளையாறு, வேலந்தாவலம், பொள்ளாச்சி அருகே நடுப்புணி, வலந்தாயமரம், ஆனைக்கட்டி ஆகிய 6 இடங்களில் மதிமுகவினர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

கடைகள் அடைப்பு

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உக்கடம் பெருமாள் கோவில் மார்க்கெட், காந்திபுரம், சாய்பாபா காலனி காய்கறி மொத்த மார்க்கெட், ராஜவீதி தியாகி குமரன் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

குனியமுத்தூர், கோவைபுதூர், போத்தனூர், மதுக்கரை உள்ளிட்ட இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதுபோல், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலும் கடையடைப்பு நடத்தப்படுகிறது. போராட்டத்துக்கு ஆதரவாக லாரிகள் இயக்கப்படவில்லை. மினி ஆட்டோ, சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவை இயக்கப்படவில்லை.

ரயில் மூலம் கேரளா செல்லும் சரக்குகள்

கேரளாவுக்கு செல்லும் 13 வழித்தடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றதால் கேரளாவுக்கு காய்கறிகள், பழங்கள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் ஏற்கனவே தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ஒரு பொருளும் போகவில்லை. மற்ற பகுதிகளிலும் கூட தடைகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனை போக்கும் விதமாக கேரள வியாபாரிகள் பலரும் ஈரோடு மற்றும் கோவை ரயில் நிலையத்திலிருந்து ரயில்களின் மூலமாக காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசியமான உணவுப்பொருட்களை கேரளாவுக்கு எடுத்து செல்கிறார்கள்.

மலையாள அதிகாரிகள் ஒத்துழைப்பு

செவ்வாய்கிழமை முதல், பெங்களூர் - எர்ணாகுளம் இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை - கண்ணனூர் பாசஞ்சர், கோவை - பாலக்காடு பாசஞ்சர், மங்களூர் -கண்ணனூர் எக்ஸ்பிரஸ், தன்பாத் எக்ஸ்பிரஸ், கோவை –திருச்சூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களில் சரக்குகளை அனுப்பி வருகிரார்கள்.

இதற்கு தமிழகத்தில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் மலையாள அதிகாரிகள் உறுதுணையாக இருந்து கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர். இதற்காக, கண்ணனூர் கோவை பாசஞ்சரில் கூடுதலாக மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டன என்று கோவை ரயில்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக பயணிகள் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும்போது இந்த மார்க்கத்தில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ரொம்பவே யோசிப்பார்கள் இந்த அதிகாரிகள். ஆனால் தற்போது காய்கறிகள் உள்ளிட்டவற்றை கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்காக கூடுதல் பெட்டிகளை இணைத்து தங்களது பேருதவியைப் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

nandri; thatstamil.com

கேரளாவில் கல்லடி; தமிழகத்தில் தடியடி: ஐயப்ப பக்தர்களின் அவல நிலை!

கேரளாவில் கல்லடி; தமிழகத்தில் தடியடி: ஐயப்ப பக்தர்களின் அவல நிலை
புதன்கிழமை, டிசம்பர் 21, 2011,

செங்கோட்டை: கேரளாவில் மலையாள ரவுடிகளிடம் அடிபட்டு திரும்பிய தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது செங்கோட்டை அருகே தமிழக போலீசார் அறிவிப்பின்றி தடியடி நடத்தியதால் பதற்றம் உருவானது.

முல்லை பெரியாறு அணை பிரச்சனையால் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் தாக்கப்படுவதோடு பக்தர்களும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்திலிருந்து கேரளாவுக்கு அரிசி மூடை ஏற்றி சென்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

லாரியை செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றார். புனலூரை அடுத்து கொன்னிகொடு பகுதியில் சென்றபோது அங்கு ஆயுதங்களுடன் வந்த கேரளத்தவர்கள் சிலர் லாரியின் கண்ணாடியை உடைத்தனர். அவரையும் தாக்கினர். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

ரவுடிகள் தாக்குதல்

இதை தொடர்ந்து செங்கோட்டையிலிருந்து காய்கறி ஏற்றி சென்ற லாரிகளும் தாக்கப்பட்டன. இதனால் பிரனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் கும்பகோணம் பகுதியிலிருந்து சபரி்மலைக்கு சென்ற கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் 2 வேன்களும் சேதப்படுத்தப்பட்டன. டிரைவர்களையும் கேரளக்காரர்கள் தாக்கினர். இதனால் காயமடைந்த தமிழக ஐயப்ப பக்தர்கள் மீண்டும் தமிழக எல்லை பகுதியான பிரனூருக்கு வந்தனர்.

போலீஸ் தடியடி

இதற்கிடையே புனலூர் பகுதியில் வெள்ளிமலை பகுதியில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவரை கேரளத்தவர்கள் அரிவாளால் வெட்டியதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அந்த வழியாக சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை பாதிக்கப்பட்டவர்கள் நிறுத்தி செல்ல வேண்டாம் என்று தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மீது தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அங்கேயம் அடிக்கிறார்கள், தமிழகத்திலும் போலீஸார் அடிக்கிறார்கள், நாங்கள் எங்கே போவது, ஏன் இந்த அவல நிலை என்று பல ஐயப்ப பக்தர்கள் புலம்பியதைப் பார்த்தபோது மிகப் பரிதாபமாக இருந்தது

nandri : thatstamil.com

திங்கள், டிசம்பர் 19, 2011

முள்ளிவாய்ககாலும் முல்லைப் பெரியாறும்! மலையாளிகளின் தொடர் அட்டகாசம்!!

முள்ளிவாய்ககாலும் முல்லைப் பெரியாறும்!
மலையாளிகளின் தொடர் அட்டகாசம்!!
“எல்லோரையும் நம்புகிற இனம் தமிழினம்” அப்படி நம்பி நம்பிக் கெட்ட இனமும் இத் தமிழினமே. ஆனால், “வந்தாரை வாழ வைக்கும் தமிழினம்” என்று வாய்ச் சவடால் அடிப்பதும் நாமே! ஆனால் தமிழன் வீழ்ந்த ஒவ்வொரு வரலாற்றின் பின்னணியிலும் வந்தேறிகளின் கைங்கரியம் இருந்திருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் மாற்றினத்தார் கொட்டம்! புடடிக்கடை முதல் வட்டிக்கடை வரை மார்வாடிகளும் மலையாளிகளும் கோலோச்சுகிறார்கள்! தமிழ்நாட்டின் நிலபுலங்களெல்லாம் மற்றவர்கள் கையில்! நம் மக்களில் பெரும்பாலோரோ கூலிகளாக, கொத்தடிமைகளாக, குற்றேவல் புரிபவர்களாக நசுக்கப்பட்டிருக்கிறோம்.
நமது வளங்களையும் வாழ்வையும் உழைப்பையும் சுரண்டுகிற இந்த வந்தேறிகள் ஒருக்காலும் நமக்கு நன்றியுள்ளவர்களாக இருந்ததில்லை. மாறாக, நம்மை இன்னும் எந்தெந்த விதங்களில் ஒழிக்கலாம் என்றே நடந்து வந்திருக்கிறன்றனர். இதில் மிகவும் முனைப்போடு செயல்படுபவர்கள் நமது அண்டை மாநிலத்தவரான மலையாளிகளே!
தமிழக கேரள எல்லையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்றைய தமிழக எல்லைக்குள் உற்பத்தியாகும் தண்ணீர் பல ஆண்டுகளாக கிழக்குநோக்கிப் பாய்ந்து தமிழகத்தை வளப்படுத்தி வந்திருக்கிறது. இதில் கருப்பாநதி, கடனாநதி உள்ளிட்டவைகளும் அடங்கும். ஆனால், அம் மலையில் 14 இடங்களில் தண்ணீரைத் திருப்பி கேரளாநோக்கிப் பாய வைக்கிறார்கள். அப்படித் திருடப்பட்டு திருப்பப்பட்ட நதிகளுள் ஒன்றுதான் பம்பை நதி! ஆக, வளமையான தமிழகத்தின் நதிகளைத் திருடி நமது பகுதியை வறட்சி நிலமாக மாற்றி விட்டனர்.
திருவனந்தபுரம், பத்மனாபுரம், இடுக்கி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் 90 விழுக்காடு மக்கள் பச்சைத் தமிழர்கள். ஆனால் 1956ல் மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது அநியாயமாக நம் மக்களையும் வளமான இந்தப் பகுதிகளையும் இழந்து விட்டோம். பணிக்கர் என்ற ஒரு மலையாளியின் சொத்துக்கள் இடுக்கி மாவட்டத்தில் இருந்ததால் அவர் இங்குள்ள சில தமிழரல்லாத திராவிடத் தலைவர்களிடம் பேசி அப்பகுதிகளையெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். இன்றைக்கு அந்த மாவட்டங்களில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள் கேரள அரசினாலும் அதிகாரிகளாலும் காவல்துறையினராலும் குற்றவாளிகள் போல நடத்தப்படுகிறார்கள். இந்தி தேசியம் திராவிட தேசியம் என்ற மாயைகளுக்குள் சிக்கிய நம் மக்களும் அந்த நாட்களில் என்ன செய்வது என்று தெரியாது விழித்தனர்.
இப்போது பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் முல்லைப் பெரியாறு அணை என்பது தமிழர்களின் உழைப்பாலும் பென்னிகுயிக் என்கிற ஆங்கிலேயரின் சொந்தப் பணத்திலும் கட்டப்பட்டது. தண்ணீர் உற்பத்தியாகும் இடமும், அணை இருக்கும் இடமும் முழுக்க முழுக்க தமிழர்களின் பகுதி! இதன் முழுப் பராமரிப்பும் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் கேரளாவிற்குப் போனது. அப்போது இரு மாநிலத்திற்கும் இடையே நடந்த ஒரு பேச்சுவார்த்தையில் தமிழகத்திலிருந்து 47 அதிகாரிகளும் கேரளாவிலிருந்து 47 அதிகாரிகளும் வந்தனர். ஆனால் மொத்தம் வந்த அந்த 94 அதிகாரிகளுள் 93 பேர் மலையாளிகள். அமைச்சர் ராஜா முகமது தவிர. அணை நம் கைவிட்டுப் போனது! நான்கு முறை தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி என்பது சிந்திக்கத் தக்கது. ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி ஒரு தெலுங்கர் என்பதும் அவரது அமைச்சரவையில் 7 தெலுங்கர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள் என்பதும் யாருடைய குற்றம்? அவருக்கு மாற்றாக நாம் தேர்ந்தெடுத்திருப்பவரோ அல்லது வரிசையில் காத்திருக்கும் விசயகாந்தும் தமிழர்களா என்ன?
ஐயயோ! நாம் வந்தாரை வாழ வைத்த இனமாயிற்றே!
ஈழத் தமிழர்கள் நம் உடன் பிறப்புகள். ஆனால் 3 லட்சம் தமிழர்கள் அந்தப் போராட்டத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்டுவிட்டார்கள். கழுத்தை அறுத்து, கற்பழித்து, மண்வெட்டியால் வெட்டி, கண்களைக் கட்டிச் சுட்டு என்று உலகமே அதிர்ந்து போகும் அளவிற்கும் நம் தமிழர்கள் அங்கு கொல்லப்பட்டார்கள். இன்றைக்கும்கூட அங்கு முள்வேலி முகாம்களுக்கும் நம் மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். விடுதலைப் புலிகள் நடத்தி வந்த அந்த அற்புதமான ஆட்சியைக் குலைத்து முள்ளிவாய்க்காலில் ஒரே நாள் காலையில் 40 ஆயிரம் தமிழர்களைக் கொன்று குவிக்க ராசபக்சேவுக்கு எங்கிருந்து துணிவு வந்தது? அந்தக் கோழை இந்தியாவின் முந்தானைக்குள் ஒழிந்து கிடந்து போர் புரிந்தான். போரை நடத்தியது இந்த காந்தி தேசம்! ஆனால் இந்த காந்தி தேசத்தின் நகர்வுகளை நடத்தியவர்கள் அத்தனைப் பேரும் மலையாள அதிகாரிகள். சோனியாகாந்தியையும், மன்மோகன் சிங்கையும், குடியரசுத் தலைவரையும் சுற்றியிருப்பவர்கள், வெளியுறவுச் செயலர்கள், இலங்கைக்கான தூதர்கள் என்று அத்தனைபேரும் மலையாளிகள்! அவர்களுடைய திட்டமிடலில்தான் ஈழத்தில் நமது சொந்தங்கள் வேட்டையாடப்பட்டனர்.
அன்று பிரபாகரனைக் கொல்லத் துடித்த இலங்கைக்கான இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் திக்சித்தும் ஒரு மலையாளிதான். தியாகி திலீபன் யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோயில் முன்பாக இந்தியாவின் துரோகத்தைக் கண்டித்து 12 நாட்கள் தண்ணீர்கூட அருந்தாமல், எச்சில்கூட விழுங்காமல் உண்ணாநோன்பு இருந்தார். இறுதியில் இறந்து போனார். காந்தி தேசம் அகிம்சையை மதிக்கும் என்று அன்று அவர் எண்ணினார். ஆனால், இதே திக்சித்தான் “அவன் செத்தால் சாகட்டும்” என்று விட்டவர். ஆக, மலையாளிகளின் வஞ்சகம் என்பது தமிழினத்தையே அழிக்கக் கங்கணம் கட்டும் வஞ்சகம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி!
தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மலையாளிகளின் வட்டிக்கடை! எல்லா நகரங்களிலும் அவர்களது தங்கக் கடைகள்! இவர்கள் வந்தபிறகு, தங்கத்தின் விலையைக் கேட்க வேண்டுமா? தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் காய்கறி, இறைச்சி, உணவுப் பொருட்கள் அத்தனையும் அவர்களுக்குப் போகிறது! விஜய் டி.வி. போட்டி நிகழ்ச்சிகளில் அவர்கள் பிள்ளைகளுக்கே வாய்ப்பு! நம்மவர்க்கெல்லாம் ஆப்பு! அவர்களுக்கு தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர் எஸ்டேட்டுகளிலும், வீடுகளிலும், நிறுவனங்களிலும் குறைந்த கூலியில் உழைக்க நம் தமிழர்கள், நமது ஆற்றுநீரை முழுக்க அவன் திருடி அவன் வாழ்கிறான்! மொத்தத்தில நம்மை வஞ்சித்து அவர் வளமாய் வாழ்கிறான் என்பதுதான் நீண்டகால உண்மை.
இப்போ முல்லைப் பெரியாறு! தண்ணீர் கீழிருந்து மேல் நோக்கிப் பாயும் என்ற அதிசய காரணத்தைச் சொல்லி வம்படி பண்ணுகிறான். அவனது வம்படியில் அணை உடையுமானால் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்கள் தண்ணீருக்கு அல்லாடும்.
இனி நாம் என்ன செய்வது?
//90 விழுக்காடு தமிழர்கள் வாழும் இடுக்கி மாவட்டத்திற்கு உள்ளேதான் இந்த முல்லைப் பெரியாறு அணை, நீர்ப்பிடிப்புப் பகுதி ஆகியன உள்ளன. ஆகவே, இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும்.
//தமிழகத்தில் வட்டிக் கடை, பெட்டிக் கடை, டீக்கடை, தங்கக்கடை என்று நடத்தி தமிழர்களைச் சுரண்டும் வந்தேறிகளை அடையாளம் காண வேண்டும்! அவர்களுடைய நிறுவனங்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்!
//தமிழ்நாட்டை வந்தேறிகளின் வேட்டைகாடாக மாற்றத் துணை புரிந்த இந்தி தேசிய வல்லாதிக்கத்தையும் திராவிட மாயையும் வேரோடு சாய்க்க வேண்டும்!

தமிழர்களம் கரூர் கிளை
தமிழர்நாடு

முல்லைப் பெரியாறு விவகாரம்: தேனியில் தீக்குளித்த வாலிபர் உயிரிழந்தார்.

முல்லைப் பெரியாறு விவகாரம்:
தேனியில் தீக்குளித்த வாலிபர் உயிரிழந்தார்


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தேனியில் வேன் டிரைவராக இருந்த ஜெயப்பிரகாஷ் தீக்குளித்தார். கேரள அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு அவர் தீக்குளித்தார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இனி இந்த மண்ணில் ஒரு தமிழனின் உயிர்கூட போகக்கூடாது என்பதில் நாம் உறுதிகொள்வோம். தமிழர் நாம் ஒன்றிணையாமல் இனி எந்த உரிமைகளையும் பெற முடியாது. இருப்பதைக் காப்போம் ! இழந்ததை மீட்போம்!!

செய்தி ஊடகப்பிரிவு தமிழர்களம்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு கோரி கூடலூரில் அமைதி பேரணி! -









முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள மாநில அரசை கண்டித்தும், உடனடி தீர்வு காண வலியுறுத்தியும் கூடலூர் நகரில் அமைதிப் பேரணி நடத்தினர்.


முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக கேரள எல்லை மாவட்டமான தேனி மற்றும் இடுக்கி மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும், புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள மாநில சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து தேனி மாவட்ட மக்கள் தாங்களாக முன்வந்து அரசியல் கட்சிகள் சார்பு இன்றி எல்லைச்சாலை முற்றுகை போராட்டங்களை நடத்த தொடங்கினார்கள்.


குறிப்பாக கடந்த 5 ந்தேதி முதல் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு மலைச்சாலைகள் அடைக்கப்பட்டன. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில், தமிழக மக்களின் போராட்டம் தீவிரம் அடையத்தொடங்கியது. கம்பம் நகரில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 16 ந் தேதி திரண்டு பேரணி நடத்தினர்.


இதன் எதிரொலியாக கூடலூர் பகுதி மக்கள் நேற்று முன்தினம் அமைதிப் பேரணி நடத்த ஊர் கூடி முடிவு எடுத்தனர். இதனை அடுத்து அனைத்து சமுதாயங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும் என ஆயிரக்கணக்கானோர் நேற்று காலை 9.30 மணியளவில் இருந்து கூடலூர் நகரில் பழைய பஸ் நிலையம் பகுதியில் குவியத் தொடங்கினார்கள்.


பின்னர் பொதுமக்கள் அமைதி பேரணியாக புறப்பட்டு கூடலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்து பெட்ரோல் பங்க் பகுதிக்கு வந்தனர். இந்த பேரணியில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர்.


பெட்ரோல் பங்க் அருகே, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளும் வகையில், ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து பொதுமக்களின் பிரதிநிதிகள் கேரள மாநில அரசை கண்டித்து பேசினார்கள்.

nandri : nakkeeran.com

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார் பேட்டி

நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார் பேட்டி
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 18, 2011, 16:31 [IST]



நெல்லை: மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறிய புகாருக்கு சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன் என்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடும் போராட்டக் குழுவின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. இதில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கி உள்ளன. இது தொடர்பாக விளக்கம் கேட்டு 6 தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இதற்காகத் தான் அவர் மீது வழக்குத் தொடரப் போவதாக போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயகுமாரிடம் நிருபர்கள் கேட்டவுடன் அவர் பதட்டமடைந்தார். வழக்கமாக போராட்டங்கள் குறித்து நிறுத்தி, நிதானமாகப் பேசும் அவர், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள், நிதி' போன்ற வாசகங்களால் அதிர்ச்சியடைந்தார்.

அவர் கூறுகையில், "எந்த நிறுவனத்தில் இருந்தும் ஐந்து பைசா கூட வரவில்லை. ஒருவேளை பணம் வந்திருந்தால், அதை காங்கிரஸ்காரர்கள் வழிமறித்து பிடுங்கியிருப்பார்கள் என தோன்றுகிறது. இத்தகைய புகார்கள் கூறும் நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்'' என்றார்.
nandri thatstamil.com

முல்லைப் பெரியாறு பிரச்சனை : கேரள நிறுவன விளம்பரங்களில் தமிழ் நடிகர்கள் நடிக்கக் கூடாது: செந்தமிழன்

முல்லைப் பெரியாறு பிரச்சனை : கேரள நிறுவன விளம்பரங்களில் தமிழ் நடிகர்கள் நடிக்கக் கூடாது: செந்தமிழன்
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 18, 2011, 16:45 [IST]

உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
திருச்சி: கேரள நிறுவன விளம்பரங்களில் தமிழ் நடிகர், நடிகைகள் யாரும் நடிக்கக் கூடாது என்று இயக்குனர் செந்தமிழன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் தமிழ்க்கலை இலக்கிய பேரவை, மக்கள் உரிமை பேரவை சார்பில் முல்லை பெரியாறு அணை பிரச்சனை தொடர்பான ஆவணப்படம் திரையிடல் மற்றும் சி.டி. வெளியீட்டு விழா நடந்தது. இதில் பாலை பட இயக்குனர் செந்தமிழன் கலந்து கொண்டு பேசியதாவது,

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் தமிழக-கேரள எல்லைகள் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. எல்லையில் போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள் யாருடைய உத்தரவின் பேரிலும் போராடவில்லை. தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சமும், இன உணர்வும் தான் அவர்களை போராட வைத்துள்ளது. இது ஒரு சிறந்த எழுச்சிப் போராட்டம் என்பதை அரசியல் தலைவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகளால் ஏன் இப்படி ஒரு போராட்டத்தை ஒருங்கிணைக்க முடியவில்லை. இவ்வளவு நடக்கும்போதும் தமி்ழ் நடிகர்கள் கேரள நிறுவன விளம்பரங்களில் நடித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அதைப் பற்றி யாரும் பேசவில்லை. எனவே, கேரள மாநிலத்தவரின் நிறுவன விளம்பரங்களில் தமிழ் நடிகர்கள் யாரும் நடிக்கக் கூடாது என்று நாம் கோரிக்கை வைப்போம்.

அணை குறித்த மலையாளிகளின் ஆவணப்படம் மிகப் பெரிய அளவில் பரப்பப்பட்டு வருகிறது. இது போல் நாமும் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாகவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து சுமார் 5 நிமிடங்கள் ஓடும் குறும்படங்களை தயாரித்து அதை சிடி வடிவில் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றார்.

கருப்புக் கொடிகளுடன் கூடங்குளத்திலிருந்து ராதாபுரம் வரை பல்லாயிரக்கணக்கானோர் பேரணி-ஆர்ப்பாட்டம்

கருப்புக் கொடிகளுடன் கூடங்குளத்திலிருந்து ராதாபுரம் வரை பல்லாயிரக்கணக்கானோர் பேரணி-ஆர்ப்பாட்டம்
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 18, 2011, 13:19 [IST]


கூடங்குளம்: கூடங்குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கருப்புக் கொடிகளுடன் இன்று காலை பேரணியாக சென்றனர். சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் நடந்த அவர்கள் ராதாபுரத்தில் பேருந்து நிலையப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்ட முதல் அணு உலை பணிகள் 99.2 சதவீதம் முடிந்துவிட்டன. இதுபோல் மற்றொரு யூனிட் பணிகளும் பெருமளவு முடிந்துவிட்டன. இதுவும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்டது. இந்த அணுஉலைகளால் மக்களுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்பதால் மூட வலியுறுத்தி மக்கள் இடிந்தகரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் கூடங்குளம் அணு மின்நிலைய பணிகள் முடங்கியது. ஆகவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்கள் அடங்கிய மாநில குழுவுடன் 3 கட்டம் நடத்திய பேச்சு வார்த்தைகளும் தோல்வி அடைந்தன.

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவரது பயணத்தின் போது கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகுமென தகவல் வெளியானது. எனவே பிரதமர் மன்மோகன்சிங்கின் ரஷ்யா பயணத்தை கண்டித்து இடிந்த கரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் நேற்று முன்தினம் கறுப்பு கொடி ஏற்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இடிந்தகரை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். கூடங்குளம், வைராவிகிணறு கிராம மக்கள் கடைகளை அடைத்து விட்டு உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அணுமின் எதிர்ப்பாளர்கள் வீடுகளிலும், கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றி இருந்தனர்.

மீனவர்கள் தங்கள் படகுகளில் கறுப்பு கொடி ஏற்றினர். ஏற்கனவே இடிந்த கரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் இருந்துவரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று 62-வது நாளை எட்டியுள்ளது.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை ஓரிரு வாரங்களில் செயல்பட தொடங்குமென பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அறிவிப்பபு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்ட தீவிரப் போராட்டத்துக்கு மக்கள் தயாராகியுள்ளனர். 3 கட்ட போராட்டங்களையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி முதல் கட்டமாக இன்று காலை கூடங்குளத்திலிருந்து ராதாபுரம் வரை பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு மாபெரும் பேரணி தொடங்கியது. கூடங்குளம் பத்ரகாளியம்மன் கோவிலிலிருந்து கருப்புக் கொடிகளுடன் பேரணி தொடங்கியது. பெரும் திரளான பெண்கள் இதில் பங்கேற்றனர். இந்தப் பேரணிக்கு போலீஸார் அனுமதி தரவில்லை. இருப்பினும் தடையை மீறி பேரணி நடந்தது.

பல ஆயிரம் பேருடன் பெண்கள், ஆண்கள் என பெரும் கூட்டமாக 10 கிலோமீட்டர் தூரம் நடந்து ராதாபுரத்தை பேரணி வந்தடைந்தது. அங்கு போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அணு மின் நிலையத்தை மூடக் கோரி அவர்கள் கோஷமிட்டனர்
.
nandri: thatstamil.com

வெறிபிடித்த மலையாள போலீஸ் : தமிழக பக்தர்கள் கதறல்!

வெறிபிடித்த மலையாள போலீஸ் :
தமிழக பக்தர்கள் கதறல்




தமிழகத்தில் உள்ள மலையாளிகளுக்கும், மலையாள நிறுவனங்களுக்கும் தமிழக போலீஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது. ஆனால், கேரளாவில் மலையாள போலீசார் வெறிபிடித்து தமிழர்களை தாக்குகிறார்கள்.

மு ல்லை பெரியாறு பிரச்சணை தொடங்கிய நாளில் இருந்து தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து செல்லும் பகதர்கள் மீது மலையாளிகள் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள்.

அதன் பிறகு தமிழின உணர்வாளர்கள் தமிழகத்தில் உள்ள மலையாளிகளின் கடைகள் மீது முற்றுகை , தாக்குதல் தொடுத்தனர்.

தோடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுவதால் கேரளாவுக்கு செல்லும் பால், காய்கறிகளை செல்லவிடாமல் தமிழர்கள் தடுத்து வந்தனர்.

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தமிழக தோட்ட தொழிலாளிகள் தாக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது.


ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தமிழக எல்லையில் உள்ள பல்வேறுகோயில்களில் மாலை கழட்டி தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்ததால் கேரள அரசுக்குவருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழக பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வர கேரள அரசு உதவி செய்யும் என்று சொன்னதால் தமிழக பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு செல்ல தொடங்கினார்கள்.


சிவகங்கை மாவட்டம் பரமக்குடி ஹரி , கார்த்திக் தலைமையில் ரெட்டை பிள்ளையார் கோயில் தெரு, மருதுபாண்டியர் நகர், வேந்தொனி மற்றும் சில கிராமங்களைச் சேர்ந்த 35 பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு சென்றனர்.


இன்று ஞாயிற்று கிழமை காலை பம்பையில் உள்ள ஒரு உணவு விடுதியில் உணவருந்திவிட்டு வெளியே வரும் போது 5 பேர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மற்றவர்கள் இதை கேட்டதால் அவர்களையும் அடித்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த மலையாள காவல் துறையும் தமிழக பக்தர்கள் மீது தாக்கி அவர்கள் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளனர். அதனால் அவர்களில் 20 பேரை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

அவர்களுடன் சென்ற மற்ற பக்தர்களின் வைத்திருந்த செல்போன்களையும் பறித்துக் கொண்டனர் மலையாள போலிஸ். இந்த தகவல் உறவினர்களுக்கு தெரிந்ததால் கதறிக் கொண்டிருக்கின்றனர்.

nandri : Thats tamil.com

கேரளாவைக் கண்டித்து கூடலூரில் 1 லட்சம் பேர் திரண்டு பேரணி-போடியில் உண்ணாவிரதம்

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 18, 2011, 15:22 [IST]



கூடலூர்: கேரளாவைக் கண்டித்து இன்றும் தேனி மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி நடத்தியுள்ளனர். மேலும் போடிநாயக்கனூரில் 3000 பேர் திரண்டு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

தேனி மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக கேரளாவைக் கண்டித்து தொடர் பேரணிகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், சாலை மறியல்கள் நடந்து வருகின்றன.

கேரளாவைக் கண்டித்து நடந்து வரும் தொடர் போராட்டங்கள், கொந்தளிப்பு காரணமாக கேரளாவுக்கான குமுளி வழியே போக்குவரத்து தொடர்ந்து முடங்கிப் போயுள்ளது.

தொடர்ந்து லட்சக்கணக்கானோர் திரண்டு தினசரி பேரணி நடத்தி காவல்துறையை திக்குமுக்காட வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் கூடலூர் வழியாக குமுளியை நோக்கி லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர். ஆனால் அவர்களை போலீஸார் தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை.

இதையடுத்து தேனி சாலையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரும் திரளான பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.

போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், கேரள அரசு புதிய அணை கட்டக் கூடாது.முல்லைப் பெரியாறு அணையை இடிக்கக் கூடாது. இடித்தால் ஆயுதப் போராட்டத்திலும் குதிக்கத் தயங்க மாட்டோம் என்று எச்சரித்தனர்.

இதற்கிடையே போடிநாயக்கனூரில் உள்ள வ.உ.சி. திடலில் 3000 பேர் கூடி உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தினர்
.

நடுநிலையாளர்கள் கவனத்திற்கு...

மூணாறு
மூணாற்றில் இன்று ஒரு முக்கியமான ஊர்வலம் நடந்திருக்கிறது. ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கிறது. அது... மூணாறு வாழ்த் தமிழர்கள் நடத்திய ஊர்வலம். ஆர்ப்பாட்டம்.

நடத்தியவர்கள் :

(இன்றைய கேரளம் வாழ்த்) தமிழர்கள். தோட்டத் தொழிலாளர்களாகவும், தானி ஓட்டுநர்களாகவும், சிறு வணிகர்களாகவும் ஜீவிக்கும் தமிழர்கள்.

கோரிக்கை :

பொது வாக்கெடுப்பு நடத்தி, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடுக்கி, மூணாறு, வண்டிப்பெரியார், உடுமஞ்சோலை, தேவிகுளம், பீர்மேடு முதலான பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.

காரணம் :

கேரள அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இடுக்கி மாவட்டம் வாழ்த் தமிழர்களுக்குச் சென்று சேர்வதில்லை. பல்வேறு விதங்களில் இனக் காழ்ப்போடு தமிழர்கள் நடத்தப்படுதல். முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் கேரளத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்று மலையாளிகளால் மிரட்டப்படுதல்.

இருக்கும் தங்கள் உயிருக்கும், உடைமைக்குமே ஆபத்து எனும் நடப்புச் சூழலிலும் தைரியமாக வந்து போராடியிருக்கும் மூணாறு வாழ்த் தமிழர்கள் உண்மையிலேயே பாரட்டுக்குரியவர்கள்.

(1950-களில், மொழிவழி மாகாணப் பிரிவினை சமயத்திலேயே எழுந்த குரல் இது. தேவிகுளமும் பீர்மேடும் தமிழகத்துடன்தான் இணைக்கப்படவேண்டும் என்று ம.பொ.சி.குரல்கொடுத்தார். ஆனால், 'குளமாவது, மேடாவது, எல்லாம் இந்தியாவுக்குள்ளதானே இருக்குண்ணேன்' என்று பெருந்தன்மையோடு பேசினார் பெருந்தலைவர். 'பணிக்கர் பேசினார், அங்கு மலையாளிகள்தான் அதிகம், கேரளத்தோடுதான் சேர்க்கணும்னு சொன்னார். சரின்னுட்டேன்' என்றார் பெரியார். பெருந்தன்மையாலேயே கெட்டானே தமிழன் என்பது இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.)

- யுவபாரதி

தொடரும் போராட்டம்!!

முல்லைப் பெரியாறு உரிமையை விட்டுக் கொடுக்கமுடியாது என போராடி வரும் தமிழர்கள் இன்றும் குமுளியை நோக்கி பல்லாயிரக்கனக்கானோர் நடைபயணம் மேற்கொண்டனர். ஐநுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பலரும் சென்றனர். ஆனால் தமிழக காவல் துறையினர் அவர்களை வாகனங்களில் போகவிடாமல் தடுத்து விட்டனர். எனினும் தமிழர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே சென்றனர். அவர்களின் போராட்ட குணத்தை தடுக்க நினைத்த தமிழக காவல்துறையினர் கூடலுாரிலேயே தடுத்து நிறுத்தி அனுப்பிவிட்டனர். வடவரான ராஜேஸ்தார் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் விதத்தில் நடந்துகொள்வது தமிழர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டு தமிழகம் நோக்கி ஏதிலிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை இங்கே ஒரு மலையாளிகூட தாக்கப்படவிலை்லை என்பதே நிதர்சனமான உண்மை. இங்கேயும் அவர்கள்
தாக்கப்பட்டால் நிலை இன்னமும் மோசமாகும். இதை தமிழக காவல் துறையினர் உணர்ந்து செயல்படவேண்டும்.
செய்தி் - ஊடகப்பிரிவு. தமிழர் களம்.

கூடங்குளம் பிரச்னை: அரசுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் டிச.31 வரை கெடு!

கூடங்குளம் பிரச்னை: அரசுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் டிச.31 வரை கெடு

Dnamani, First Published : 18 Dec 2011 12:51:13 PM IST


சென்னை, டிச.18: கூடங்குளம் அணுஉலையில் இருந்து யுரேனியத்தை அகற்ற மத்திய அரசுக்கு டிசம்பர் 31 வரை கெடு விதித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அதன்பிறகு போராட்டத்தை தீவிரமாக்க முடிவுசெய்துள்ளனர்.
முன்னதாக கூடங்குளம் அணு உலை தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்துக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ரூ 14 ஆயிரம் கோடி அணு உலையை நாம் சாதாரணமாக மூடிவிட முடியாது என ரஷ்யாவிலிருந்து திரும்பிய மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.
பிரதமரின் இந்த கருத்து கண்டிக்கத்தக்கது. டிசம்பர் 31-க்கு முன்பு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து யுரேனியத்தை அகற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். இல்லையெனில் ஜனவரி 1-ல் இருந்து போராட்டம் கடுமையாக்கப்படும் என மத்திய அரசுடன் பேச்சு நடத்துவதற்காக தமிழக அரசு நியமித்திருந்த குழுவில் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதி புஷ்பராயன் தெரிவித்தார்.

அணுமின் நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்

Dinamani, First Published : 18 Dec 2011 01:44:35 PM IST


சென்னை, டிச.18: கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மக்களின் போராட்டத்தை அமைதி வழியில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 வாரங்களில் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருப்பதும், போராட்டக்காரர்கள் வரம்பு மீறி செயல்படுகிறார்கள் என்று கூறி மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.
கூடங்குளம் பகுதி மக்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல, அவர்களின் போராட்டமும் வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. கூடங்குளம் அணுமின் நிலையத்தால், தங்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் காரணமாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை.
இதற்காக 15 உறுப்பினர்கள் கொண்ட மத்திய அரசின் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ள போதிலும், இதனால் இதுவரை எந்தப் பயனும் ஏற்படவில்லை. இக்குழுவினர் மாநில அரசு குழுவை 3 முறை சந்தித்துள்ள போதிலும், மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து எதுவும் பேசப்படவில்லை. மக்களை நேரடியாக சந்தித்து பேசவும் மத்தியக் குழு முன்வரவில்லை.
மக்களின் அச்சத்தைப் போக்க எதுவும் செய்யாமல் அணுமின் நிலையம் உடனடியாக தொடங்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பது சரியல்ல. கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை, அணுமின் நிலைய பணிகளை தொடங்கக்கூடாது என்று தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் பிரதமர் மதித்ததாக தெரியவில்லை.
பிரதமரின் பேச்சுக்கள் கூடங்குளம் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. ஜனநாயகத்தில் மக்களை மிரட்டி பணிய வைக்க மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு தவறிவிட்ட நிலையில், அடக்கு முறைகளின் மூலம் மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்யக்கூடாது.
அது தமிழ்நாட்டிலும் நந்தி கிராமங்களையும், சிங்கூர்களையும் உருவாக்கி விடும். எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து கூடங்குளம் அணு மின்நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்.
அதே போல் வடதமிழகத்து மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையமும் 2020-ஆம் ஆண்டிற்குள் மூடப்படும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இவற்றுக்கு மாற்றாக ஆபத்து இல்லாத மரபுசாரா மின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கூடங்குளத்தில் அணு மின் நிலைய எதிர்ப்புக் குழு பேரணி-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 18, 2011, 13:19 [IST]


கூடங்குளம்: கூடங்குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கருப்புக் கொடிகளுடன் இன்று காலை பேரணியைத் தொடங்கினர். ராதாபுரம் வரை சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு இந்தப் பேரணி செல்கிறது.

கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்ட முதல் அணு உலை பணிகள் 99.2 சதவீதம் முடிந்துவிட்டன. இதுபோல் மற்றொரு யூனிட் பணிகளும் பெருமளவு முடிந்துவிட்டன. இதுவும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்டது. இந்த அணுஉலைகளால் மக்களுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்பதால் மூட வலியுறுத்தி மக்கள் இடிந்தகரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் கூடங்குளம் அணு மின்நிலைய பணிகள் முடங்கியது. ஆகவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்கள் அடங்கிய மாநில குழுவுடன் 3 கட்டம் நடத்திய பேச்சு வார்த்தைகளும் தோல்வி அடைந்தன.

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவரது பயணத்தின் போது கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகுமென தகவல் வெளியானது. எனவே பிரதமர் மன்மோகன்சிங்கின் ரஷ்யா பயணத்தை கண்டித்து இடிந்த கரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் நேற்று முன்தினம் கறுப்பு கொடி ஏற்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இடிந்தகரை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். கூடங்குளம், வைராவிகிணறு கிராம மக்கள் கடைகளை அடைத்து விட்டு உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அணுமின் எதிர்ப்பாளர்கள் வீடுகளிலும், கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றி இருந்தனர்.

மீனவர்கள் தங்கள் படகுகளில் கறுப்பு கொடி ஏற்றினர். ஏற்கனவே இடிந்த கரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் இருந்துவரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று 62-வது நாளை எட்டியுள்ள நிலையில், பிரதமரின் ரஷ்ய பயணத்தை கண்டித்து நேற்று முன்தினம் தொடங்கிய 3 நாள் இரவும், பகலும் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் இன்று வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை ஓரிரு வாரங்களில் செயல்பட தொடங்குமென பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அறிவிப்பபு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்ட தீவிரப் போராட்டத்துக்கு மக்கள் தயாராகியுள்ளனர். 3 கட்ட போராட்டங்களையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி முதல் கட்டமாக இன்று காலை கூடங்குளத்திலிருந்து ராதாபுரம் வரை பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு மாபெரும் பேரணி தொடங்கியது. கூடங்குளம் பத்ரகாளியம்மன் கோவிலிலிருந்து கருப்புக் கொடிகளுடன் பேரணி தொடங்கியது. பெரும் திரளான பெண்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தப் பேரணிக்கு போலீஸார் அனுமதி தரவில்லை. இருப்பினும் தடையை மீறி பேரணி கிளம்பியது.

நடைபயணமாக கிளம்பியுள்ளவர்களுக்கு வசதியாக உணவு சமைத்து பொட்டலமாக கையில் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் பேரணி காரணமாக பதட்டம் நிலவுகிறது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: தட்ஸ் தமிழ்.

போலீஸ் உதவியோடு திருச்சூரில் 20க்கும் மேற்பட்ட தமிழக ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்!!

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 18, 2011, 13:12 [IST]

கோவை: கோவை மாவட்டம் வழியாக கேரளாவுக்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருந்த வாகனப் போக்குவரத்திலும் தற்போது சிக்கல் வந்து விட்டது. தமிழகத்திலிருந்து போன ஐயப்ப பக்தர்கள் வாகனத்தை கேரள போலீஸாரின் பெரும் துணையோடு மலையாளிகள் தாக்கி சேதப்படுத்தினர். குருவாயூரில் ஒரு பேருந்து தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் கோவை மாவட்டம் வழியாக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களாக கேரளாவில் தமிழர்களைக் குறி வைத்தும், தமிழக வாகனங்களைக் குறி வைத்தும், ஐயப்ப பக்தர்களைக் குறி வைத்தும் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக தமிழகத்திலும் ஆங்காங்கு மலையாளிகளின் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன.

இதனால் தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

அதேசமயம், செங்கோட்டை வழியாகவும், கோவை வழியாகவும் வாகனப் போக்குவரத்து பிரச்சினையின்றி நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவை வழியாக கேரளாவுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்திற்கும் தற்போது சிக்கல் வந்து விட்டது.

கோவை மாவட்டம் வாளையாறு பகுதி தமிழக, கேரள எல்லையாகும். இந்த வழியாகப் போவது எளிதானது என்பதாலும், மலைப் பிரதேசம் எதுவும் இந்த வழியில் குறுக்கிடாது என்பதாலும் வாகனதாரிகள் இந்த வழியை அதிகம் விரும்புவார்கள். மேலும் எர்ணாகுளம், கொச்சி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்ல இதுதான் எளிய வழியாகும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரச்சினை வெடித்த நிலையில் தேனி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வாளையாறு பகுதியில் பிரச்சினை இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு இந்தப் பகுதி வழியாக சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை ஒரு சமூக விரோதக் கும்பல் சரமாரியாக கல்வீசித் தாக்கியது. இதில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மேலும் ஐயப்ப பக்தர்களையும் தாக்கியுள்ளனர் அந்த சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்த மலையாளிகள்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸாரிடம் விரைந்து சென்று தமிழக பக்தர்கள் பாதுகாப்பு கேட்டபோது, நான்தாண்டா அடிக்க் சொன்னேன், ஓடுங்கடா என்று அவர்கள் வெறித்தனமாக பேசியுள்ளனர். இதனால் செய்வதறியாமல் திகைத்த தமிழக பக்தர்கள் வண்டிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் கோவை திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து பெருந்துறையைச் சேர்ந்த ஒரு பக்தர் கூறுகையில், தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் சுத்தமாக பாதுகாப்பு இல்லை. போலீஸாரின் உதவியுடன்தான் மலையாளிகள் நம்மைத் தாக்குகின்றனர். போலீஸாரே தாக்கச் சொல்லி தூண்டுகின்றனர்.

உங்கள் ஊரில் உள்ள முருகன் கோவிலுக்குப் போக வேண்டியதுதானேடா, இங்கு எதுக்குடா வர்றீங்க என்று கேட்டு படு மோசமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுகின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் ஊர் திரும்பி விட்டோம் என்றார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து வாளையாறு சோதனைச் சாவடியுடன் தமிழகத்திலிருந்து போகும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு மேல் போக போலீஸார் அனுமதி தரவில்லை. இதனால் கோவை மாவட்டம் வழியாக கேரளாவுக்கான போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி: தட்ஸ் தமிழ்.காம்

சனி, டிசம்பர் 17, 2011

கருத்துப் படங்கள்


கேரள அரசை கண்டித்து கம்பம் நகரில் மக்கள் பேரணி!

கேரள அரசை கண்டித்து கம்பம் நகரில் மக்கள் பேரணி
Print
[Hide Description] கேரள அரசை கண்டித்து கம்பம் நகரில் 1.5 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணி



கம்பம், டிச. 17 - கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையை மீட்க வலியுறுத்தியும் கம்பம் நகரில் அனைத்து சமுதாய மக்கள் 1.5 லட்சம் மக்கள் திரண்ட மாபெரும் பேரணியால் கம்பம் நகரமே ஸ்தம்பித்துப் போனது. முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப்படும். அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்கவும் கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மேலும் தற்போது கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் தாக்கப்பட்டு அகதிகளாக தேவாரம், போடி பகுதிகளுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். இதை கண்டித்து கம்பம் அனைத்து சமுதாய மக்கள், வர்த்த சங்க நிர்வாகிகள், மருத்துவ சங்கம் உள்ளிட்ட லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி பார்க் திடலில் நிறைவு பெற்றது. பேரணி வன்முறை ஏதுமின்றி அமைதியாக முடிந்தது. பேரணியின் ஒருங்கிணைப்பாளரும், ஓ.ஆர். பிரிவு காவல் தலைவருமான குமரேசன் நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழ்நாட்டில் வசிக்கும் கேரள மலையாளிகளை சகோதர, சகோதரிகளாக பழகி வருகிறோம். ஆனால் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டும், பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டும் அகதிகளாக தமிழகத்திற்கு வருகின்றனர். கேரளா, இலங்கை அரசு போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. அங்கே அதை தடுத்து நிறுத்தவும், முல்லைப் பெரியாறு அணையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 142 அடி தண்ணீரை தேக்கவும் தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை தமிழர்களுக்கு சொந்தமானது. அந்த அணையை ஒரு போதும் தமிழர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்த 1.5 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி கேரள அரசுக்கு எச்சரிக்கை மணி என்றார். பேரணியில் பங்கேற்ற பெண்கள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி உருவ பொம்மையை பாடை கட்டி தூக்கி வந்து ஒப்பாரி வைத்து துடைப்பத்தால் அடித்து உருவ பொம்மையை எரித்தனர். பேரணியில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

nandri: thatstamil.com

வெள்ளி, டிசம்பர் 16, 2011

தமிழன் என்றாலே அடி உதைதான் !




Dinamalar seithi
15.12.11

கருத்துப் படம் !


தமிழக பள்ளி மாணவர்களை இடுக்கியிலிருந்து விரட்டும் கேரள ரவுடிகள்

தமிழக பள்ளி மாணவர்களை இடுக்கியிலிருந்து விரட்டும் கேரள ரவுடிகள்
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 16, 2011, 17:05 [IST]
Save This Page
Print This Page
Comment on This Article
A A A

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தப்பி வந்தவர்கள் கூறியுள்ளனர்.

விடுதிகளில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றுமாறு அங்குள்ள மலையாளிகள் பள்ளிகளுக்கு சென்று நெருக்கடி கொடுத்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இருமாநில எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் உருவாகியுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் தஞ்சம்

பீர்மேடு, தேவிகுளத்தை உள்ளடக்கிய இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது. தமிழர்களுக்கு ஆதரவாக இடுக்கி மாவட்ட தமிழர்கள் போராடி வருவதால் அவர்களை மலையாளிகள் தாக்கி அங்கிருந்து விரட்டி வருகின்றனர்.

நெடுங்குண்டம், பாரத்தோடு, காரித்தோடு, உடும்பன் சோலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் கேரள ரவுடிகளின் தாக்குதலுக்கு குடும்பம் குடும்பமாக வெளியேறிவருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாக்குலூத்து மெட்டு, ராமக்கல்மெட்டு பாதைகளில் மலையில் இறங்கி நடந்தே தமிழகப் பகுதியான தேவாரத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

மாணவர்கள் பாதிப்பு

இந்த நிலையில் விடுதிகளில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றுமாறு அங்குள்ள மலையாளிகள் பலரும் பள்ளிகளுக்கு சென்று நெருக்கடி கொடுத்து வருவதாக அங்கிருந்து தப்பி வந்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் இருந்து வெளியேறாமல் உள்ள தமிழர்களின் பிள்ளைகளை கேரளாவில் தமிழகத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் பங்கேற்குமாறு மிரட்டி வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு பலவித நெருக்கடி கொடுக்கின்றனர்.

இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தால் போலீசார் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு நடவடிக்கை எதுவும் எடுக்க மறுக்கிறார்கள் என்று அங்கிருந்து தப்பிவந்த தமிழர்கள் கூறுகின்றனர்
.

இருப்பதையும் இழப்பதா? - - குணா

இருப்பதையும் இழப்பதா?
குணா
இந்திய அரசு என்பது கூட்டாட்சி முறையை அடியொற்றியது அன்று; ஒற்றையாட்சி முறையும் அன்று. அதாவது, ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி போன்றது அது. ‘அரசு’ (State) என்பது வேறு; ‘மாகாணம்’ (Province) என்பது வேறு. உள்ளீட்டில் மாகாணங்களாவே உள்ள இந்திய உறுப்புநாடுகளை ‘அரசுகள்’ (States) என்று அழைப்பது சிரிப்பிற்குரியது. தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்ட ‘அரசுகள்’ உள்ள அமெரிக்காவில் விளங்குவதைப் போன்ற கூட்டாட்சி முறை இந்தியாவில் இல்லை. ஆனால், ‘அரசு’ என்னும் போலிப்பெயர் மட்டுமே இந்திய மாநிலங்களின்மீது ஒட்டப்பட்டுள்ளது. எல்லாமே பித்தலாட்டம்!
‘அரசு; என்ற பெயர் தமிழ்நாட்டைப் போன்ற மாநிலத்திற்கு இருக்கும் வரையில், அப் பெயரின் பின்னால் ‘இறையாண்மை’ என்ற ஒன்று அதில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். ஆற்றுநீர் உரிமையைப் பொறுத்த வரை, தமிழகத்துக்கு அதுபோன்ற ‘இறையாண்மை’ இருக்கத்தான் செய்கின்றது. இந்த ஒப்புக்குச் சப்பு ‘இறையாண்மை’யைக்கூட இழக்கும் வகையில், முல்லைப்பெரியாற்று அணையைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கேரள அரசிடமிருந்து இந்திய அரசின் நடுவண் காவல்படையோ இந்தியப் படையோ பிடுங்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு ‘அரசே’ கேட்பது அந்த ஒப்புக்குச் சப்பு ‘இறையாண்மை’யைக்கூட தமிழகம் தானே முன்வந்து துறப்பது போலாகும். இந்த வகையில், தமிழகத்திற்கு உரிமையான முல்லைப்பெரியாற்று அணையை இந்தியப் படைகளோ உருசிய படையோ நேட்டோ படையோ வந்துதான் காவல் காக்க வேண்டும் என்பதைப் போன்ற கூப்பாடு, ஒரு கேலிக்கூத்தாகும்.
நடுவண் காவல்படை வந்து அணையைக் காவல் காக்க வேண்டுமென்று தமிழ்நாட்டுச் சட்டப்பேரவை 15.12.2011 அன்று முற்பகலில் தீர்மானம் போட, ‘அது தேவையில்லை, கேரள அரசே அப் பணியைச் செய்யட்டும்!’ என்று கூறி உச்சநீதிமன்றம் பிற்பகலில் அத் தீர்மானத்திற்கே ஆப்பு வைத்துவிட்டது.
முல்லைப்பெரியாற்று அணைமீது தமிழகத்திற்கு ஆட்சியுரிமை உண்டு என்றோ, தமிழகத்துக் காவல்படைதான் அணையின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றோ தீர்மானம் போட்டிருந்தால், இல்லாத அதன் மாநில ‘இறையாண்மைக்கு’ ஒரு பொருத்தமாவது இருந்திருக்கும்.
ஒற்றை மலையாளியான கே. எம். பணிக்கர் ஈ. வெ. இராமசாமியின் துணையுடன் மொழிவழி மாநிலப் பிரிவினை என்ற பெயரில் தமிழரிடமிருந்து பிடுங்கிச் சென்ற இடுக்கி மாவட்டத்தை தமிழகம் மீட்டுப் பெறுவதே உருப்படியானதும் நெடுநோக்கிலானதுமான தீர்வாக இருக்கவியலும். பிற எல்லாமே, தும்பை விட்டு வாலைப் பிடிக்கின்ற கோணங்கி வேலையாகத்தான் இருக்கும்.

தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கம்பத்தில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி!

தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கம்பத்தில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி!
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 16, 2011, 11:28 [IST]
Save This Page
Print This Page
Comment on This Article
A A A

கம்பம்: கேரளாவில் தமிழர்களைத் தாக்கி விரட்டியடிப்பதைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் தமிழர்களைக் காப்பாற்றக் கோரியும், கம்பத்தில் இன்று பெரும் திரளான பெண்களின் தலைமையில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர்.

இன்று காலையிலிருந்தே மக்கள் அணி அணியாக இதில் பங்கேற்க திரண்டு வந்தனர். பெருமளவில் பெண்கள் வந்திருந்தனர். கம்பம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சாரை சாரையாக திரண்டதால் கம்பத்தில் பரபரப்பு நிலவியது.

நாலாபுறமும் இருந்து ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும் குவிந்து வந்ததைப் பார்க்கும்போது அரபு நாடுகளில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய மக்கள் கிளர்ச்சியைப் போல இருப்பதாக அங்கிருந்து நமக்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

காலை 9 மணியில் இருந்தே கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் அணி, அணியாக வரத்தொடங்கினார்கள். இந்தப் பேரணிக்கு யாரும் திட்டமிடவில்லை. மக்களே தாங்களாக முன்வந்து கூடி பேரணியை நடத்தினர். மேலும் கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஒரு கடையும், வர்த்தக நிறுவனமும் செயல்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இடுக்கி மாவட்டத்தில் பெண்களையும், தமிழர்களையும் தாக்கி விரட்டியடித்த மலையாளிகளின் செயலால் கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மக்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். தமிழகத்திற்கு அகதிகள் போல வந்த தமிழர்களை தேவாரம் பகுதியில் தங்க வைத்து பொதுமக்களே உணவு கொடுத்து ஆறுதல் கூறி அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

இந்த செயல்கள் கம்பம் பகுதியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பெரிய ஆவேசத்துடன் இன்று கம்பத்தில் திரண்ட இந்த மக்கள் கூட்டம் கேரள அரசையும், தமிழர்கள் மீதான தாக்குதலையும் கண்டித்து ஆவேச கோஷமெழுப்பினர்.

மிகப் பெரிய அளவில் மக்கள் திரண்டிரு்பபதால் கம்பத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. இந்த மக்கள் கூட்டம் அப்படியே கேரளாவை நோக்கி நகரக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இதனால் எல்லைப் பகுதியில் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

nandri : thats tamil.com

இடுக்கியை திரும்ப பெறுவோம் !

தமிழர்களைத் தாக்குவதைக் கண்டித்து 1000 அடி உயர மலையில் அமர்ந்து 100 பேர் தற்கொலை மிரட்டல்!

தமிழர்களைத் தாக்குவதைக் கண்டித்து 1000 அடி உயர மலையில் அமர்ந்து 100 பேர் தற்கொலை மிரட்டல்!
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 16, 2011,

உத்தமபாளையம்: கேரளாவில் தமிழர்கள் மீது மலையாளிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து தேவாரம் அருகே உள்ள 100 அடி உயர மலை உச்சியில் 100 பேர் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலை பார்க்கும் தமிழர்களை மலையாளிகள் தாக்கி வருகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் இரவோடு இரவாக தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றன.

இந்நிலையில் கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்குவதைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் கோரியும், கேரள அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக எல்லைப் பகுதியான தேவாரத்தை அடுத்த தே.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 100 நேற்று காலை 11 மணி அளவில் திடீர் என்று அங்குள்ள சாக்குலூத்து மெட்டுப் பாறைக்கு வந்தனர்.

அவர்கள் அனைவரும் சக்கணக்குண்டுவில் 1000 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு சென்றனர். உச்சியில் நின்று கொண்டு கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்கி அங்கிருந்து விரட்டியடிப்பதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பிறகு கேரள அரசைக் கண்டித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து தேவாரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் மலைப்பகுதிக்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கீழே இறங்கவில்லை. பிடிவாதமாக மலை உச்சியில் உட்கார்ந்திருந்தனர். மாலை 5 மணிக்கு போலீசார் மைக் மூலம் மலை உச்சியில் இருந்தவர்களுடன் பேசினார்கள்.

அப்போது அவர்கள், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது, விரட்டியடிக்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்ககுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனால் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.

அதை கேட்டும் அவர்கள் கீழே இறங்கவில்லை. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாலை 6 மணியளவில் தான் அவர்கள் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கினர்

nandri : thats tamil.com
.

கேரள அரசைக் கண்டித்து போடிநாயக்கனூர் விவசாயி தீக்குளிப்பு- உயிருக்குப் போராடுகிறார்

கேரள அரசைக் கண்டித்து போடிநாயக்கனூர் விவசாயி தீக்குளிப்பு- உயிருக்குப் போராடுகிறார்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 16, 2011,

போடி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா நடந்து வரும் விதத்தைக் கண்டித்தும், அணையின் நீர்மட்டத்தை அதன் உண்மையான அளவுக்கு உயர்த்தக் கோரியும் தமிழக விவசாயி ஒருவர் தீக்குளித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சமீபத்தில் கம்பத்தில் நடந்த போராட்டத்தின்போது ஒருவர் தீக்குளித்தார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த நிலையில் இன்னொருவர் தீக்குளித்துள்ளார்.

போடி நாயக்கனூர், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்.இவர் ஒரு விவசாயி. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான போராட்டங்களில் பங்கெடுத்து வந்த ராஜ், கேரள அரசைக் கண்டித்தும், அணையின் நீர் மட்டத்தை உயர்த்தக் கோரியும் தீக்குளித்து விட்டார்.

உடனடியாக அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தால் போடியிலும், தேனி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

புதன், டிசம்பர் 14, 2011

கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது?

முத்துக்குட்டி வியாழன், 15 டிசம்பர் 2011 06:43

இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?

இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?

உங்கள் எடுத்துக்காட்டு நல்லாத்தான் இருக்கு. அதற்காகப் பதிமூன்றாயிரம் கோடி உருபா போட்ட பிறகு இன்று வந்து போராடுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

இந்தப் போராட்டம் ஒன்றும் இன்று தொடங்கியதில்லை. இப்போராட்டத்திற்கு இருபத்தைந்து ஆண்டு வரலாறு இருக்கிறது.

சொல்வதற்கு ஓர் அளவு வேண்டாமா? ஏதோ ஆறு மாதம், ஒரு வருடமாகப் போராடி வருகிறோம் என்றால் சரி! அதற்காக ஒரேயடியாக இருபத்தைந்து ஆண்டுகள் என்றால் யாராவது நம்புவார்களா?

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இருபத்தைந்து ஆண்டு வரலாறு இப்போராட்டத்திற்கு இருக்கிறது.

நீங்கள் சொல்லும் ‘இருபத்தைந்தாண்டு’க்கு ஏதாவது ஒரு சான்றாவது சொல்ல முடியுமா?

ஒன்றென்ன? நூறு சான்றுகள் காட்ட முடியும்.

vaiko_atomic_640

அ) 1986இல் தினமணி செய்தித்தாளில் அணு உலைகளின் பாதிப்புகள் பற்றி மிக விரிவான கட்டுரை வெளிவந்தது. அப்போதே அணு உலை எதிர்ப்பு என்பது தொடங்கிவிட்டது.

ஆ) அணு உலைக் கழிவுகள் பற்றித் தினமணியில் ஐராவதம் மகாதேவன் கட்டுரை எழுதியதன் அடிப்படையில் அன்றைய முதல்வர் ம.கோ. இராமச்சந்திரன் அணுமின் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று அறிவித்தார்.

ஆ) 1987இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.

இ) 1987 செப்டம்பர் 22ஆம் நாள் இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத்திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடந்தது.

ஈ) 1988இல் திருநெல்வேலியில் மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.

உ) 1988 நவம்பர் 21ஆம் நாள் பாராளுமன்றத்தில் அணு உலையை எதிர்த்து வைகோ உரை நிகழ்த்தினார்.

ஊ)1989இல் நாகர்கோவிலில் ஊர்வலம், 1989 மார்ச்சு இருபதாம் நாள் தூத்துக்குடியில் ஊர்வலம் என எல்லாவற்றிலும் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

எ) தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் ஜார்ஜ் பெர்ணான்டசு, பாலபிராசாபதி அடிகள் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஏ) எழுத்தாளர் நாகார்ச்சுனன் 1989இல் சூனியர் விகடனில் ‘கொல்ல வரும் கூடங்குளம்’ என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதினார்.

ஐ) அந்தச் சமயத்தில் இந்தியாவிற்கு வந்த சோவியத் அதிபர் மிகைல் கோர்பச்சேவிற்கு மும்பையிலும் தில்லியிலும் கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்யப்பட்டது.

ஒ) 1989 மே முதல் நாள், ‘Save Water Save Life’ என்னும் உறுதிமொழியுடன் தேசிய மீனவர் கூட்டமைப்பு தாமசு கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பத்தாயிரம் பேருக்கும் அதிகம் பேர் பங்கேற்ற பெரிய பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது; பலர் காயமடைந்தனர்.

ஓ) 1989 சூன் 3 முதல் 13ஆம் நாள் வரை மருத்துவர் குமாரதாசு தலைமையில் திருநெல்வேலியிலும் அதைச் சுற்றி உள்ள சிற்றூர்களிலும் அணு உலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன.

ஒள) 1989 சூன் பதின்மூன்றாம் நாள் கூடங்குளத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

க) கூடங்குளம் அணு உலைக்குப் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 101 தொடர் பொதுக்கூட்டங்கள் நாகர்கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நடத்தப்பட்டன.

உ) 1989இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிடும் கோரிக்கையைக் கொண்டிருந்தன.

ங) பேச்சிப்பாறை அணியில் இருந்து தண்ணீர்க்குழாய் அமைக்க நடப்பட்டிருந்த எல்லைக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடத்தப்பட்டது.

ச) முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கடராமன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் நடக்கவிருந்த மூன்று வெவ்வேறு அடிக்கல் நாட்டு விழாக்கள் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டன.

* தமிழக ஆளுநர் முன்னிலையில் மதுரையில் நடந்த மிகப்பெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராசா வெளிப்படையாக அணு உலையை எதிர்த்துப் பேசினார்.

­* இயக்குநர் பாலச்சந்தர், நடிகர் நாசர் போன்ற திரைக்கலைஞர்கள் பலர் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டுள்ளனர்.

தமிழில் கூடங்குளத்தைப் பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
மருத்துவர் இரமேசு, பிரேமா நந்தகுமார், ஞாநி, ஊடகவியலாளர் A.S.பன்னீர்செல்வன், நீலகண்டன், குமாரசாமி, மருத்துவர் தெய்வநாயகம், எழுத்தாளர் செ.திவான், சுப.உதயகுமார் எனப் பலர் கூடங்குளம் அணுமின்திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
‘பிராண்ட்லைன்’ இதழில் மார்க்சிய சூழலியலாளர் பிரபுல் பித்வாய் இருபத்தைந்து ஆண்டுகளாகக் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்தும் அணு உலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி உங்களுக்கு இவ்வளவு போதுமா? இன்னும் எதிர்பார்க்கிறீர்களா?

உங்களுக்கு என்ன சிக்கல்? கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக்கூடாது என்கிறீர்கள் அவ்வளவு தானே!

ஆமாம்! உறுதியாக அதைத்தான் சொல்கிறோம்.

ஏன் அவ்வளவு உறுதியாக வேண்டாம் என்கிறீர்கள்?

கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இடம் எரிமலைக் குழம்புகளால் ஆனது. 1990களில் கேரளப் பல்கலைக்கழகத்தில் நில இயல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜி, சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த இராம் சருமா ஆகியோர் இந்த எரிமலைக் குழம்புகள் பற்றித் தங்கள் ஆய்வுகளில் கூறியிருக்கிறார்கள். 2004 நவம்பர் மாதம் வந்த ‘கரண்டு சைன்சு’ இதழில் இவ்வாய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கூடங்குளத்தில் இருக்கும் ‘உருகிய பாறைப் பிதுங்கல்கள்’ நேரடியாக அணு உலையின் நிலைத்த தன்மையைக் குலைத்து விடும் வாய்ப்பு மிக அதிகம்.

சரி! அப்படியானால் வேறு இடங்களில் அணுமின் நிலையங்கள் அமைப்பதில் உங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை அப்படித்தானே?

இல்லை. அணுமின் நிலையங்களை எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறோம்.

எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறீர்களா? அணுமின் திட்டம் என்பது ஒரு தொழில்நுட்பம். அதை எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடாதா?

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி! ஒரு தொழில்நுட்பத்தையே எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடும் தான்! அதே வேளை அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மனித குலத்தையே அழித்து விடும் என்றால் அப்படி ஒரு தொழில்நுட்பம் நமக்குத் தேவையா எனச் சிந்திக்க வேண்டும் அல்லவா? எனவே, அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகளை எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதைக் கண்டறிந்த பிறகு அதைப் பயன்படுத்தலாம் என்று தான் சொல்கிறோம்.

அதனால் தான், மக்கள் நடமாட்டம் குறைவான கூடங்குளம் பகுதியில் அணு உலைகளை அரசு நிறுவியிருக்கிறது. அதையும் வேண்டாம் என்றால் என்ன சொல்வது?

மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் இல்லை; மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியில் தான் அணு உலைகள் நிறுவப்பட வேண்டும். இதை நாம் சொல்லவில்லை; தமிழக அரசின் அரசின் அரசாணை எண் 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) சொல்கிறது.

இவை தவிர்த்து உலகம் முழுக்கப் பின்பற்றப்பட்டு வரும் கீழ்க்காணும் விதிகளும் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

அ) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி ஐந்து கி.மீ. சுற்றளவுக்குள் இருபதாயிரம் பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. ஆனால் அணுமின் நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவிற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் இருபதாயிரம் மக்களும், இடிந்தகரை கிராமத்தில் பன்னிரண்டாயிரம் பேரும் காசா நகரில் நானூற்று ஐம்பது குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

ஆ) பத்து கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்தப் பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

இ) முப்பது கி.மீ சுற்றளவுக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் இரண்டு இலட்சம் பேர் வாழும் நாகர்கோவில் நகரம் இருபத்தெட்டு கி.மீ தொலைவிற்குள் இருக்கிறது.

ஈ) இருபது கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பதினைந்து கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படிக் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து முப்பது கி.மீ சுற்றளவுக்குள் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் அம்மக்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ நடைமுறையில் சிறிதும் இயலாத காரியமாகும்.

இவை தவிர,

உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை.
உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய இரசிய அறிவியலாளர்களின் வருத்தங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (’Site Evaluation Study’) மக்களுக்குத் தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (’Safety Analysis Report’) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, செய்தியாளர்களுக்கு என யாருக்கும் அளிக்கப்படவில்லை.

நீங்கள் சொல்வது போல் இருந்தால் உலகில் தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் பல, அணுமின் நிலையங்களை வைத்திருக்கக் கூடாது அல்லவா? ஆனால் அமெரிக்கா, இரசியா, பிரான்சு, சப்பான், செர்மனி எனப் பல நாடுகள் அணு மின் நிலையங்களை வைத்திருக்கின்றன என்று படிக்கிறோமே!

எங்கே இதையெல்லாம் படித்தீர்கள்?

என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? இரசியாவின் செர்னோபில் அணு விபத்து (நேர்ச்சி) பற்றிப் பாடப் புத்தகங்களிலேயே படித்திருக்கிறோம். கொஞ்ச நாட்களுக்கு முன் சப்பான் நாட்டில் புகுசிமாவில் அணு மின் நிலையம் நில நடுக்கம் வந்த போது பாதிக்கப்பட்டது எனச் செய்தித்தாள்களில் வந்தது.

அங்கெல்லாம் நடந்தது போல் இங்கு நடந்து விடக்கூடாது என்பதால் தான் அணு உலைகளே வேண்டாம் என்கிறோம்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உலகில் செர்நோபில் விபத்திற்குப் பிறகு எல்லா நாடுகளும் அணு உலைகளை மூடியிருக்க வேண்டுமல்லவா?

கண்டிப்பாக. செர்நோபில் நேர்ச்சிக்குப் பிறகு இரசிய அரசு அணு உலைகள் அமைப்பதை நிறுத்திவிட்டது. அன்றைய சோவியத்து குடியரசுத் தலைவர் மிகைல் கார்ப்பசேவ், “செர்நோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. மாறாக, இது மொத்த உலகத்தையே பாதித்துள்ள விடயம்” என்று சொன்னார்.

திரும்பத் திரும்ப இரசியாவையே சொல்லாதீர்கள். அமெரிக்கா முதலிய பிற நாடுகள் அணு உலைகள் அமைப்பதில் என்ன செய்கின்றன? அதைச் சொல்லுங்கள்.

அமெரிக்காவில் 1979ஆம் ஆண்டிலிருந்தே எந்தப் புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.
புகுசிமா அணு உலை நேர்ச்சி நடந்த சப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூடப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து புது உலைகளைக் கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.
இத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது.
செர்மனி 17 உலைகளைக் கலைப்பதை ஒத்திவைக்கலாம் என்று நினைத்திருந்தது. இப்போது அம்முடிவை உடனே எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறது.
சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான ஒப்புதல் நீக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் மக்களுள் அறுபத்திரண்டு விழுக்காட்டுப் பேர் அணு உலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். பதினைந்து விழுக்காட்டு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.

எதில் தான் நேர்ச்சிகள் (விபத்துகள்) இல்லை? ஒரு பேருந்தில் போனால் கூடத்தான் அடிபடுகிறது; உயிரிழப்பு ஏற்படுகிறது. இப்படி நேர்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி முன்னேறுவது?

ஒரு பேருந்து நேர்ச்சி என்றால் அதிக அளவு நூறு பேர் இறந்து போவார்கள். அத்துடன் பாதிப்பு முடிந்து விடும். ஆனால் அணு நேர்ச்சி என்பது அப்படி இல்லை. செர்நோபில் உலை வெடித்தவுடன் ஒன்பதாயிரம் பேர் தாம் இறந்து போனார்கள். ஆனால் அதன் தொடர்ச்சியாகக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஏறத்தாழப் பத்து இலட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள். அதாவது நேரடியாக இறப்போர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்! தலைமுறை தலைமுறையாக இறப்போர் இலட்சக்கணக்கில்! இப்போது சொல்லுங்கள் – அணு உலை என்பது உயிருக்கு உலை தானே?

அப்படியே விபத்து என்றாலும் ஆழிப்பேரலை (சுனாமி)யோ நிலநடுக்கமோ வரும்போது தானே!

அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்காவின் மூன்று மைல் அணு நேர்ச்சியும் செர்நோபிள் அணு நேர்ச்சியும் நேரக் காரணம் இயக்கத்தில் நடந்த கோளாறும் மனிதத்தவறுகளும் தாம்! அங்கு ஆழிப்பேரலையும் வரவில்லை; நிலநடுக்கமும் வரவில்லை.

ஏற்கெனவே ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. இப்போது இந்தத் திட்டத்தின் மூலம் மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கும் என்கிறார்கள். அதையும் போராடி நிறுத்தி விட்டீர்கள் என்றால் மின்சாரத்திற்கு என்ன செய்வது?

இந்தத் திட்டத்தால் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும் என்பதெல்லாம் வெற்றுக் கட்டுக் கதைகள் தாம்!

மலிவு விலையில் அணு மின்சாரம் என்று அரசு சொல்கிறது. நீங்கள் அது கட்டுக்கதை என்று சொல்கிறீர்கள். எப்படி என்று ஏதாவது புள்ளிவிவரம் கொடுக்க முடியுமா?

வரும் 20 ஆண்டுகளில் அணு மின்னாற்றலின் அளவை 6 விழுக்காடாகக் கூட்ட வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் முதலீடு மட்டும் ஐம்பதாயிரம் கோடி உரூபா ஆகும். இப்போது சூரியஆற்றல், காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் அறுநூறு கோடி உரூபா தான். அதிலேயே அவை ஐந்து விழுக்காட்டு அளவு மின்சாரத்தைத் தந்து விடுகின்றன. இப்போது அணு ஆற்றலுக்கு அரசு ஒதுக்கும் தொகை 3897 கோடி உரூபா. ஆனால் அவை தருவது 2.5 விழுக்காட்டு அளவு மின்சாரம் தான். ஒரு மெகா வாட்(டு) மின்சாரத்தை அணு ஆற்றலின் மூலம் உருவாக்க ஏறத்தாழ இருபத்திரண்டு கோடி உரூபா செலவாகும். ஆனால் சூரிய ஒளி மூலம் அதே அளவு மின்சாரத்தைப் பதினைந்து கோடியில் உருவாக்கிவிடலாம்.

நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என்றால் கல்பாக்கம் அணுமின்நிலையத்தைச் சுற்றி உள்ள மக்களுக்கு உடல் நலத்தில் பாதிப்பு வந்திருக்க வேண்டுமே?

நல்ல கேள்வி!

ð கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுடைய குடும்பத்தினருக்கு ‘மல்டிபிள் மைலோமோ’ என்னும் எலும்பு மச்சைப் புற்றுநோய் இறப்புவீதம் அதிகம் இருக்கிறது.

ð அப்பகுதியில் உள்ள மீனவப் பெண்கள் ‘ஆட்டோ இம்யூன் தைராய்டு’ என்னும் தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும் நோய் பற்றிய புள்ளி விவரங்கள் வெளிவந்திருக்கின்றன.

ð அணு உலையைச் சுற்றி ஐந்து கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் (சதுரங்கப் பட்டினம் போன்ற பகுதிகளில்) தைராய்டு புற்று நோய் இறப்பு வீதம் பற்றிய புள்ளி விவரங்கள் ஆகியன அதிர்ச்சியான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. தைராய்டு புற்றுநோய்க்கு அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் அயோடின் 131 என்னும் வாயுக்கழிவே காரணம் ஆகும்.

ð இப்புள்ளிவிவரங்கள் அனைத்தும் மருத்துவர் வீ. புகழேந்தி 2003, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இவற்றில் எந்த அறிக்கையையும் கல்பாக்கம் அணு உலை நிருவாகம் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுடன் ஒப்பந்தம் போட்டு வரும் திட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதைக் கெடுக்கப் பார்க்கிறீர்களே!

நாலு பேருக்கு வேலை கிடைக்க, நானூறு பேர் தங்கள் வேலையை இழப்பார்கள். அப்படிப்பட்ட திட்டம் நமக்குத் தேவையா?

எப்படி நானூறு பேர் வேலை இழப்பார்கள் எனச் சொல்கிறீர்கள்?

தாராப்பூர் (மும்பை) அணு உலை தொடங்கிய போது அந்தக் கிராமத்தில் மொத்தம் எழுநூறு மீன்பிடி படகுகள் இருந்தன. இன்று அங்கு வெறும் இருபது படகுகள் தாம் இருக்கின்றன. மீன்பிடித் தொழில் அழிந்து போனதால் அங்கிருந்த மீனவர்கள் அனைவரும் தினக்கூலிகளாக வேறு தொழில் பார்த்துப் போய்விட்டார்கள். கல்பாக்கம் அணு உலை கடலில் கலக்கவிடும் ‘குளோரினால்’ மீன்வளம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ‘சிங்க இறால்’ போன்ற மீன் வகைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதே நிலை தான் நாளை கூடங்குளத்திலும் நடக்கும். மிகப்பெரிய மீன் பிடி மையமாகத் திகழும் தமிழகத்தின் தென்பகுதியில் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் மீன்கள், கடல் உயிரினங்கள் ஆகியவற்றால் வணிகம் நடந்து வருகிறது. இது அப்படியே நசிந்து போகும். பேச்சிப்பாறை அணையில் இருந்து கூடங்குளம் அணு உலைக்கு நீர் எடுக்கும் நிலையில் அந்த அணையை நம்பி வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான வேளாண் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும். இப்போது சொல்லுங்கள் –சிலர் வாழ, பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வாழ்க்கையையே இழந்து நாடோடி வாழ்க்கை நடத்த வேண்டி வரும். இது தேவையா?

chernobyl_child_370அப்படி என்ன உடல் நலக்குறைவு கதிர்வீச்சால் ஏற்பட்டு விடும் என்கிறீர்கள்?

கதிரியக்கத்தின் பாதிப்பு நம் உடலின் மற்ற பகுதிகளை விட, குழந்தைப் பேறு சார்ந்த உறுப்புகள் மீது தான் அதிகமாக இருக்கும். கதிரியக்கம் விந்து, சினை முட்டைகளை எளிதாகத் தாக்கி அவற்றின் தன்மையை மாற்றிவிடும். அதனால் கருச்சிதைவுகள், குறைமாதப் பிறப்பு, பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எனப் பல பாதிப்புகள் ஏற்படும். தைராய்டு புற்றுநோய், தோல் புற்று நோய், குருதி சார்ந்த புற்றுநோய் எனப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டோருக்கு மிக அதிகம்.

அணுமின்நிலையம் வேண்டாம் என்று தமிழ்நாட்டில் மட்டும் தானே போராடிவருகிறீர்கள்? இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் அமைதியாகத் தானே இருக்கின்றன?

ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்லிவந்த அமைச்சர்களை மராட்டியத்தில் உள்ள மக்கள் புகுசிமாவிற்கு அனுப்ப முடிவு செய்தனர்.

ð அதற்கான போக்குவரத்துக் கட்டணத்தைத் தலைக்கு ஒரு உரூபா வாங்கிச் சேர்த்து, காசோலைகள் அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டன.

ð குசராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கட்சிப்பாகுபாடு இல்லாமல் அமெரிக்கா நிறுவும் அணு உலையை எதிர்த்து வருகிறார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை மூவர் உயிரை விட்டிருக்கிறார்கள்.

ð அரியானா மாநிலத்தின் பத்தேபாத்தில் மக்கள் தொடர் போராட்டம், பட்டினிப் போராட்டம் எனப் போராடிவருகிறார்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களே கூடங்குளம் அணுமின்திட்டம் வேண்டும் என்கிறாரே!

‘அணுமின் திட்டம் வேண்டும்’ என்று சொல்வதற்கு அவர் என்னென்ன காரணங்கள் சொல்கிறார்?

23) அன்றாடம் செய்தித்தாள்களைப் படித்தாலே அவருடைய கருத்துகள் உங்களுக்குப் புரிந்திருக்கும். சரி! இருந்தாலும் சொல்கிறேன்.

அணு மின்சாரம் மலிவானது.
கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.

என்று உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் நெற்றியடி அடித்துச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லியும் உங்களுக்குப் புரியவில்லையா?

முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் கருத்துகளை நன்றாக ஊன்றிப் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் அக்கருத்துகளையே ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1.கலாம்: அணு மின்சாரம் மலிவானது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறும் இக்கணக்கானது, ‘ஒரு கிராம் யுரேனியத்தின் விலையால் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவை வகுத்துச் சொல்வதாகும்’. ஆனால் அணு மின்சாரத்தைக் கணக்குப் போடும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை:

ð அணு உலைகளுக்குச் செய்யப்படும் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவு. (இதுவே பிற முறைகளுக்கு ஆகும் செலவை விடப் பல நூறு மடங்கு அதிகம்)

ð அணு உலையை ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பின் பிரித்துக் கலைத்துவிடவேண்டும். இப்போது கூடங்குளத்திற்குப் பதின்மூன்றாயிரம் கோடி உரூபா செலவாகியிருப்பதாக அரசு சொல்கிறது. இவ்வுலையைப் பிரிக்க இன்றைய கணக்கில் இருபதாயிரம் கோடி உரூபா ஆகும் என்று அரசு கூறி வருகிறது. (அப்படியானால் இன்னும் முப்பதாண்டுகளில் அத்தொகை ஐம்பதாயிரத்தில் இருந்து அறுபதாயிரம் கோடி உரூபா தேவைப்படும்.). ஆகக் கூடங்குளத்திற்கு ஆகப்போகும் தொகை (கட்டுவதற்கும் பிரிப்பதற்கும் மட்டும்) ஏறத்தாழ எண்பதாயிரம் கோடி உரூபா.

ð அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கும் ஒன்று என்றால் “Wall street நிறுவனங்கள் அணு உலைகள் அமைக்க உதவ மாட்டோம்” (“Wall street does not vote for Nuclear Industries”) என ஏன் சொல்கிறார்கள்?

ð நாட்டின் அணுஆற்றல் துறையை அரசு ‘அலுவல் கமுக்கச் சட்டத்தின்’ (‘Official Secret Act’) கீழ் பாதுகாத்து வருகிறது. எனவே அங்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்குச் சொல்லப்பட மாட்டாது. கதை இப்படியிருக்க, அணு மின்சாரம் மலிவானது என்று எந்தக்கணக்கில் கூறுகிறார்கள்?

2. கலாம்: கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.

ð இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசு, இரசிய அரசுடன் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி, கூடங்குளம் அணு உலையில் நேர்ச்சி ஏதும் ஏற்பட்டால் இந்த அணு உலையை நிறுவியிருக்கின்ற “ஆடம்சுதுரோயெக்சுபோர்ட்டு” (“Atomstroyeksport”) நிறுவனத்தின் மீது யாராலும் வழக்குத் தொடர முடியாது. இந்த ஒப்பந்தத்தின் பெயர் தான் ‘அணு உலை நேர்ச்சி இழப்பீட்டு ஒப்பந்தமாகும்’. அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது என்றால் இந்த ஒப்பந்தம் எதற்கு?

ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் அணு உலைகளைக் காப்பீடு செய்ய முன்வருவதில்லை?

ð மற்ற எரிபொருள் ஆற்றல் தொழில்களைக் காட்டிலும் அணு ஆற்றல் தொழிலுக்கு ‘Wall Street’ வங்கிகள் ஏன் கூடுதல் வட்டி வாங்குகின்றன?

3.கலாம்: அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ð கழிவுகளைப் பாதுகாக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் இரசியா ஏன் (முன்பு ஒப்புக்கொண்டதற்கு மாறாகக்) கழிவுகளை எடுத்துச் செல்ல முடியாது எனக் கைவிரிக்கிறது?

ð அணுக் கழிவுகள் என்று சொல்வது ஏதோ நம்முடைய வீட்டில் இருந்து கொட்டும் சமையல் கழிவுகளைப் போல என எண்ணி விடாதீர்கள். அணுக்கதிர் தனிமமான புளூட்டோனியத்தின் ஒரு கிராமில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியே புற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்தக் கழிவு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்.

ð இரண்டு இலட்சம் ஆண்டுகள் (சரி! வெளியில் பேசப்படுகிற இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்). இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருளை எட்டாண்டுகள் மட்டும் பாதுகாத்துவிட்டு அதன் என்ன செய்யப் போகிறோம்?

ð அணுக்கழிவை நிலநடுக்கமும் நீர் ஒட்டும் வாய்ப்பும் அறவே இல்லாத யூக்கா மலையில் ஆழப் புதைக்கும் திட்டத்திற்குப் பல்லாயிரம் கோடிச் செலவழித்த பிறகு, அதுவும் பெரிய தீங்கு விளைவிப்பது தான் என அமெரிக்கா அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்?

4.கலாம்: சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.

ð ஒருவர் கூடச் சாகாத புகுசிமா நேர்ச்சிக்கு ஏன் ‘நேர்ச்சி அளவு: ஏழு’ என உச்ச அளவு சொல்லப்பட்டது?

ð ‘செர்நோபிளைப் போல இருபது மடங்கு கதிர்வீச்சு வெளிப்பட்டுள்ளது’ என அமெரிக்காவில் அணுத் தொழிலில் துணைத்தலைவராக இருந்த அர்னாடு கண்டர்சன் என எப்படிச் சொன்னார்? (http://www.aljazeera.com/indepth/features/2011/06/201161664828302638.html)

ð ஒருவர் கூடச் சாகவில்லை என்றால் ஏன் சப்பான் அரசு தன்னுடைய நாட்டில் அணு உலைகளை நிறுவுவதை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?

ð ஒருவர் கூடச் சாகாத ‘சிறிய’ நேர்ச்சிக்குச் சப்பான் அரசு ஏன் அங்கு வாழ்ந்து வந்த எழுபதாயிரம் பேரை உடனடியாக வெளியேற்றியது?

ð புகுசிமாவில் பயிரான நெல்லை ஏற்றுமதி செய்யக்கூடாது எனச் சப்பான் அரசு ஏன் தடை விதித்தது? (http://www.dnaindia.com/world/report_japan-bans-shipment-of-rice-harvested-in-fukushima-after-high-cesium-level-detected_1619606)

5.கலாம்: நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.

ð இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின் இரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் எத்தனைப் பேர் இறந்தார்கள்? அதன் பிறகு எத்தனைக் குழந்தைகள் ஊனமாக, மனவளர்ச்சி குன்றியதாக எனப் பல்வேறு குறைகளுடன் தொடர்ந்து பிறந்திருக்கின்றன என்பது நீங்கள் அன்றாடம் செய்தித்தாள் வாசிப்பவராக இருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதைப் போல நூறு மடங்கு கதிர்வீச்சைச் செர்நோபில் அணு விபத்து வெளிப்படுத்தியது என்றால் எவ்வளவு பெரிய அவலம் நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

ð ஐம்பத்தேழு பேர் இறந்து போவது என்பது ஒரு பேருந்து நேர்ச்சியைப் போலத்தான்! அப்படியானால் அதை ஏன் ஆசியாவின் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘சுற்றுச்சூழலியல்’ துறை பாடத்திட்டத்தில் வைத்துப் பொறியியல் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள்? கலாம் அவர்களே அப்பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றினாரே!

ð செர்நோபிள் நேர்ச்சியால் ஒன்பது இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேர் இறந்து போனார்கள் என்று இரசிய அரசு அறிக்கையே சொல்கிறது. (இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘Chernobyl: Consequences of the Catastrophe for People and the Environment’ என்னும் அறிக்கையைப் படித்துப் பாருங்கள்).

ð செர்நோபிள் நேர்ச்சியால் செர்நோபிளைத் தாண்டி ஐரோப்பாவில் 1 இலட்சம் சதுர கி. மீ. நிலம் வேளாண்மை செய்ய முடியாத அளவு மாசுபட்டுள்ளது.

6.கலாம்: யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.

ð செருமன் நாட்டின் அதிபர் (சான்சலர்) ஆங்கெலா மார்க்கெல் நம்முடைய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே ‘சப்பான் நேர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்ப்பால் தான் அணு உலைகளை மூடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். இது கலாம் அவர்களுக்குத் தெரியாதா?

ð யுரேனியம் கிடைக்காமல் தான் செருமனி அணு உலைகளை மூடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நம்முடைய நாட்டில் யுரேனியம் கிடைக்கிறதா? இல்லையே! இந்த யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்குத் தானே மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது!

ð யுரேனியத்தை நம்முடைய நாட்டிற்கு இறக்குமதி செய்ய முன்வந்துள்ள ஆசுதிரேலியாவில் ஓர் அணு உலை கூடக் கிடையாது! ஏன்?

அப்படியானால் அப்துல் கலாமும் காசு வாங்கிக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறார் என்று சொல்கிறீர்களா?

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாடு போற்றுகிற ஒரு தலைவர். இளைஞர்கள் பலர் அவரை முன்னோடியாகக் கொண்டு இயங்கிவருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்முடைய பகுதியைச் சேர்ந்தவர்; தமிழ்வழியில் படித்தவர்; ஏழை மீனவக் குடும்பத்தில் இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தவர்; எளிமையானவர் என்று பெயர் பெற்றவர். இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் காசு வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார் என்றெல்லாம் கண்மூடித்தனமாக நாங்கள் சொல்லவில்லை; சான்றுகள் எவையும் இன்றி அப்படிச் சொல்வது பொருத்தமும் இல்லை. அப்துல் கலாம் ஆனாலும் சரி! அன்னை தெரசாவானாலும் சரி! அறிஞர் அண்ணாவானாலும் சரி! ‘சரி என்றால் சரி என்று சொல்வோம்! தவறென்றால் தவறு என்று சொல்வோம்!’ ‘நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!’ என்றல்லவா தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு கலாம் அவர்கள், செல்லும் இடமெல்லாம் திருக்குறள் சொல்லும் இயல்புடையவர். அந்தத் திருக்குறள்

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் கேட்ப(து) அறிவு” என்று தானே நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! ஆக, ஒரு கருத்தைக் கலாம் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி, ‘மெய்ப்பொருள் காண்பது’ நம்முடைய கடமையாகிறது அல்லவா?

நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். உங்கள் போராட்டத்தை அறிஞர்களுள் ஒருவராவது ஆதரிக்கிறாரா?

புகழ்பெற்ற அணுவியலாளர்களுள் ஒருவராகத் திகழும் முனைவர் பரமேசுவரன் (பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்), சப்பான் (புகுசிமா) அணுமின் திட்டத்தில் பணியாற்றிய முனைவர் யமுனா, பேராசிரியர் வி. சிவசுப்பிரமணியன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் முனைவர் டி.டி. அசித்குமார் என அடுக்கிக்கொண்டே போகலாம். (http://www.dnaindia.com/india/report_top-indian-scientists-to-launch-nation-wide-protest-for-ban-on-nuclear-plants_1600845-all)

நீங்கள் சொல்வதை எல்லாம் பார்க்கும் போது கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் அங்கு போராடுபவர்களுக்கு (கூடங்குளம் திட்டத்தில் இரசியாவின் பங்கு இருப்பதால்) அமெரிக்கா பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

கூடங்குளத்தில் மக்கள் சாதி, மதம், கட்சி என எல்லாவற்றையும் தாண்டி ஒற்றுமையாக அரசை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். அதை ஒடுக்க விரும்பும் அரசே இது போன்ற பொய்ச்செய்திகளைப் பரப்புவது வருத்தப்பட வேண்டியது மட்டுமில்லை; வெட்கப்பட வேண்டியதும் ஆகும்.

அரசு பொய் சொல்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

ð இப்போராட்டத்தை நடத்துபவர்கள் அமெரிக்கத் துணையுடன் அமைக்கப்பட்டுள்ள தாராப்பூர் அணு உலை, பிரான்சு துணையுடன் அமையும் செய்தாப்பூர் அணு உலை ஆகியவற்றையும் சேர்த்தே எதிர்த்து வருகிறார்கள். தன்னுடைய துணையுடன் அமைந்துள்ள உலைகளை எதிர்ப்பவர்களுக்குக் காசு கொடுத்து அமெரிக்கா வளர்த்துவிடுமா? இது சொந்தக் காசில் ‘சூனியம்’ வைத்துக்கொள்வது போல் அல்லவா ஆகிவிடும்?

ð ஏற்கெனவே இப்போராட்ட வரலாற்றை உங்களுக்குச் சொல்லிவிட்டேன். இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்து வரும் போராட்டம் இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அவ்வளவு தான்! அமெரிக்கா தான் இப்போராட்டத்தைத் தூண்டுகிறது என்று சொன்னால் பாபா அணு ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர் முனைவர் பரமேசுவரன், இசையமைப்பாளர் இளையராசா, நடிகர் நாசர், முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசு (அமெரிக்காவின் கோககோலா நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை விதித்தவர் இவர்!) ஆகியோருக்கு இருபத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்கா பணம் கொடுத்து வருகிறது என்று பொருளாகிறது. ‘கேட்பவன் கிறுக்கனாக இருந்தால் கேப்பைச் சட்டியில் நெய் வடிகிறது என்று சொல்வதையும் நம்புவான்’ என்று ஊர்ப்புறத்தில் பழமொழி ஒன்று உண்டு. அரசு நம்மைக் கோமாளியாக்குவதுடன் தானும் வழிதவறிச் செல்கிறது.

சரி! கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது என்னும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அப்படியானால் மின்வெட்டைத் தீர்க்க என்ன தான் வழி?

மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது. 1962ஆம் ஆண்டே, ‘இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள் 20000 மெ.வா. மின்சாரத்தை அணு உலைகள் வழியாக உற்பத்தி செய்து விடுவோம்’ என்று சொன்னார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டு ஆயிரம் மெ.வா கூடக் கிடைக்கவில்லை. அதன்பின் இரண்டாயிரமாவது ஆண்டில் நாங்கள் மொத்தத் தேவையில் பத்து விழுக்காட்டு அளவுக்கு மின்சாரம் உருவாக்கி விடுவோம் என்றார்கள். ஆனால் மூன்று விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. எனவே கூடங்குளம் அணு உலை நமக்கு மின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான்! அது கறிக்கு உதவாது.

சரி! மாற்று என்ன? அதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?

ð தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும்.

ð தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இது போல் காற்றடிக்கும் கடற்கரை குசராத்து முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி.மீ. நீளத்திற்கு உள்ளது. அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

ð இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி.மீ வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை ஆய்ந்து 4-5 கி.மீ வேகத்தில் காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

ð ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

ð நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில் 5000 ச.கி.மீ பரப்பளவில் (5000 * 35 = 175000 மெ.வா.) சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற முடியும்.

ð தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருந்து எரிவாயு உருவாக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இருபது இலட்ச உரூபா முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாதம் ஓர் இலட்ச உரூபா அளவுக்குப் பணம் மிச்சமாகிறது.

ð இதே போல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர், நகராட்சிகள், பேரூராட்சிகள் என எங்கெல்லாம் கழிவுநீர் அரசால் சேர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ‘கழிவு நீர் மேலாண்மை’ மூலம் மின்சாரம் பெற முடியும். ஏறத்தாழ ஐந்து மெ.வா. மின்சாரத்தை ஒவ்வொரு நகராட்சியில் இருந்தும் நம்மால் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நகர்ப்பகுதிகளில் மின்வெட்டை உடனடியாகக் குறைக்கலாம்.

- முத்துக்குட்டி ( muthukutti@zoho.com)

தொகுப்புக்குத் துணை நின்ற படைப்புகள்:

அணு உலைகள் குறித்து, கீற்றில் வெளியான படைப்புகள் அனைத்தும்
‘கூடங்குளம் பொய்யைப் பிளந்து வாழ்வைக் காக்கும் போர்’, அ.முத்துக்கிருட்டினன், உயிர்மை, 2011 திசம்பர் இதழ்
‘கூடங்குளம்: கலாம் சொல்வதெல்லாம் உண்மை தானா?’, அ.மார்க்சு, குமுதம் தீராநதி, 2011 திசம்பர் இதழ்
­www.dianuke.org இணையத்தளத்தின் சில கட்டுரைகள்
‘அப்துல் கலாமுக்குச் சில கேள்விகள்’, மாலெ தீப்பொறி, 2011 திசம்பர் தொகுதி 10, இதழ் 5

‘மாற்றுவழியில் மின்சாரம்’, நெல்லை கவிநேசன், கோகுலம் கதிர், 2011 திசம்பர் இதழ்


nandri: keetru.com