செவ்வாய், மே 15, 2012

இந்திய அரசே! அணு உலை போராட்டத்தை ஒடுக்காதே: சர்வதேச மன்னிப்பு சபை வேண்டுகோள்


செவ்வாய்க்கிழமை, மே 15, 2012, 10:46

லண்டன்: கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு சர்வதேச மன்னிப்பு சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசும் இந்திய அரசும் தொடர்ந்து அணு உலை போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கின்னஸ் சாதனையாக 5,000 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது. கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்டோர் மீது பிரிவினைவாத வழக்குகளும், பல்வேறு வழக்குகளும் போட்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

உதயகுமாரின் மீது போடப்பட்ட பொய் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமாயின் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை வாசம் கிடைக்கக்கூடும். இயற்கையை பாதுகாக்க பாடுபாடும் உதயகுமார் போன்றோருக்கு இந்திய அரசு கொடுக்கும் பரிசு இது. மேலும் இடிந்தகரையை சுற்றிலும் 144 தடை உத்தரவு போட்டு ஊருக்குள் யாரும் போகவோ வெளியே வரவோ முடியாதபடி செய்துள்ளது அரசு.

இதை சர்வதேச மன்னிப்பு சபை மனித உரிமை மீறலாகவே கருதுகிறது. அதனால் உலகில் உள்ள அனைவரையும் இந்திய அரசுக்கு தகவல் அனுப்புமாறு சர்வதேச மனிப்பு சபை கேட்டுக்கொள்கிறது. உலகில் உள்ள யாவரும் இந்த கோரிக்கையை இந்திய அரசுக்கு எழுதலாம்.

1. அமைதியாக போராட்டம் நடத்தி வரும் போராளிகளின் மேல் போடப்பட்ட பொய்யான வழக்குகளை திரும்பப் பெறு.

2. சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் முகிலனை விடுதலை செய்.

3. 144 தடை உத்தரவை உடனே நீக்கு. ஊர் மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதி.

4. சர்வதேச, இந்திய சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்படும் அமைதி வழிப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கு. அவர்களின் கருத்துரிமைக்கு மதிப்பளி.

இந்த கோரிக்கைகளை வரும் ஜூன் மாதம் 22ம் தேதிக்குள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nandri thatstamil.com

திங்கள், மே 14, 2012

அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம்


இடி ந்தகரை போரட்ட மக்களுடன் தமிழர் களம் பொது செயலாளர் அரிமாவளவன்  
நாள் 09.05.2012

ஞாயிறு, மே 13, 2012

இடிந்தகரை 
போராட்டம் வெல்லும் !

அணு உலை எதிர்ப்பு போராட்டம்

 
கூத்தங்குளி 

கூடங்குளம்


இடிந்தகரை 

கூடங்குளம்


இடிந்தகரை மக்கள் போராட்டம் 

கூடங்குளம் அணு உலைஎதிர்ப்பு


மக்கள் போராட்ட நிகழ்வுகள் !

வெள்ளி, மே 11, 2012

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம்



இன்றைய நாளில் மட்டும் கிட்டத்தட்ட 100 பேர் உண்ணாவிரத போராட்டதில் பங்கேற்றனர். மீதமுள்ள போராட்டத்தினர் தங்கள் பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியில்  உள்ளனர். 

-போரட்ட இடத்திலிருந்து தொடர்பாளர்  

நூல் அறிமுகம்



நற்றமிழ் பெயர்கள் (மகளிர்) 
ஆசிரியர் ஒப்புரவன்
வெளியீடு : நம் வேர்கள் பதிப்பகம்
விலை:ரூ . 200/-
நூலைப்பற்றி: எல்லா இமாலய கனவுகளும் இருக்கிற இடத்திலிருந்துதான் அடிஎடுக்கவேண்டும். தமிழை ஆட்சி மொழி ஆக்கிட நெருப்பாற்றில் நீந்தி வருவேன் என்று சொல்லி வருகிறவன் வீட்டுக்குள் விளையாடுகிற ஷீலாவையும் ஷில்பாவையும் விரட்டிவிட்டு நல்ல தமிழ் பெயர்களை நாவிலும் நடுவீட்டிலும் வலம் வர வைக்க வேண்டும். 
- தமிழ்த் திரு அரிமாவளவன், பொதுசெயலாளர் தமிழர் களம், தமிழர் நாடு.

பெண் குழந்தைகளுக்கு சூட்டும் இனிய தமிழ்ப்பெயர்கள் அடங்கிய அரிய நூல்.

தொடர்பு எண்: 9943275926

sinthippeer


வியாழன், மே 10, 2012

கூட்டு வழிபாடும் கூடன்குளமும்...









இடிந்தகரை 10.05.12

 இன்று காலை முதல் இடிந்தகரையிலும் அதைச் சுற்றியுள்ள உவரி, கூத்தன்புளி, போன்ற கிராமங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி கூட்டு வழிபாட்டு நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு நடைபெற்ற ஒவ்வொரு சிறப்பு வழிபாட்டு நிகழ்விலும் தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் திரு.அரிமாவளவன் கலந்து கொண்டு கூடன்குளம் அணுஉலை குறித்துப் பேசினார். மேலும் பொதுமக்கள் கண்ணீர்மல்க இறைவனிடம் மன்றாடி வழிபட்டனர். அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என்ற சிலப்பதிகார பொன்மொழிக்கொப்ப அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமானது முறியடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நிச்சயமாக அந்த மக்களின் பேராற்றல் வாய்ந்த வழிபாடு வீண்போகக்கூடாது என்று நாமும் வேண்டுகிறோம். ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களும் செய்தனர். 

செய்தி ஊடகப்பிரிவு
தமிழர்களம்.

செவ்வாய், மே 08, 2012

வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பித்தரும் போராட்டம்!!





 
 

இடிந்தகரை 06.05.2012 
இடிந்தகரையில் வெகு நீண்ட நாட்களாக அறவழிப்போராட்டம் நடத்திவரும் பொதுமக்களை தமிழக அரசும், நடுவண்அரசும் எள்ளளவும் கண்டுகொள்ளாத நிலையில் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். தற்போது போராட்டக்குழுவில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமான சூழல் ஏற்பட்டதையடுத்து. தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் தலைமையில் உதயகுமார் மற்றும் போராட்டக் குழுவினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து தங்களை வெறும் வாக்கு எந்திரமாகவே கருதும் மாநில அரசுக்கும், நடுவண் அரசுக்கும் நெருக்கடியைத் தரும் வகையில் இன்று இருபத்திஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடமே திருப்பித் தரும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத எந்த அரசும் நீடித்து நிலைத்து ஆண்டதாக வரலாறு இல்லை. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் சப்பான் தனது கடைசி அணுஉலையையும் மூடிவிட்டது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். அனைத்து வகையிலும் முன்னேற்றம் கண்டுள்ள சப்பான் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்பத்தை ஒருபோதும் சப்பானுடய அறிவியல் தொழில் நுட்பத்துடன் ஒப்பிட முடியாது. அப்படிப்பட்டவர்களே அணுமின் சக்தி தேவையில்லை மாற்றுவழியை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் என்று அறிவித்துள்ள நிலையில் எந்த விதத்தில் திருடலாம், கொள்ளையடிக்கலாம், ஊழல் செய்யலாம் என்பதற்காகவே ஆட்சிக்கு வருபவர்களாலும், அவர்களுக்கு அடிவருடியாக இருக்கும் இரக்கமற்ற அறிவியலாளர்களாலும் ஒருபோதும் நன்மை விளையாது. மக்களுக்கான ஆட்சியை நடத்தவும் முடியாது. எனவே இடிந்தகரை மக்களின் போராட்டம் அவர்களுக்கானது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்திற்கானதும் என்பதை நாம் உணரவேண்டும். அறம் வெல்லட்டும்!!

-கருவைமுருகு

ஞாயிறு, மே 06, 2012

சிலப்பதிகாரத்தில் காணப்படும் கற்பு நெறி



கண்ணகி... மாதவி...கோப்பெருந்தேவி...
கவிக்கோ இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோப்பெருந்தேவி மற்றும் மாதவி என நாம் 3 கற்புக்கரகியர்களை காணலாம். இந்த மூவரில் கற்பு நெறியில் சிறந்தவர் யார் என்பதை ஆராயப் போகிறோம். சிலப்பதிகார கற்பு நெறியை 3 வகையாக பிரிக்கலாம், அது முதற்கற்பு, இடைக்கற்பு மற்றும் கடைக்கற்பு ஆகும்.

கோவலனை மணந்ததால் கண்ணகி அவனது மனைவியானாள். மனைவி என்பவள் கணவனுக்கு கட்டுப்பட்டவள். கோவலன் என்ன தவறு செய்தாலும் அதை கண்ணகி பொறுத்து கொள்ளதான் வேண்டும். கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டவளாக, கற்பு நெறி காப்பவளாக இருப்பது ஆச்சரியமில்லை. அது அவளது கடமை. எனவே கண்ணகியின் கற்பு நேறி கடமையாகிவிடுகிறது.

ஆனால் மாதவி அப்படியல்ல. தேவதாசி குடும்பத்தில் பிறந்தவள். கோவலனின் ஆசை நாயகி. அவனது மகளான மணிமேகலையை கருவில் சுமந்து பெற்றெடுத்து, அப்பெண்னை துறவியாக வளர்த்தவள். கோவலன் பிரிந்து சென்ற பிறகு மாதவி நினைத்திருந்தால் வேறொரு செல்வந்தருக்கு ஆசை நாயகி ஆகி இருக்கலாம். ஆனால் அவள் அப்படி செய்யவில்லை. கோவலனை மானசீக கணவனாக ஏற்று வாழ்ந்தவள், கற்பு நெறி காத்தவள். மாதவியின் கற்பு நெறி போற்றுதலுக்குரியது.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பதற்கு எடுத்துக் காட்டு, மதுரையை ஆட்சி செய்த பாண்டியன் நெடுஞ்செழியன் மன்னன். கோவலனுக்கு தவறான தீர்ப்பு வழங்கியதாலும் கண்ணகிக்கு அநீதி இழைத்ததாலும், அவையில் உடைபட்டு கிடந்த சிலம்பை போல நெஞ்சு வெடித்து உயிரிழந்தான். நெடுஞ்செழிய மன்னரின் மனைவி, அரசி கோப்பெருந்தேவி கணவன் உயிரிழந்ததை கண்ட அதிர்ச்சியில் அவளும் உயிரிழந்தாள். கணவன் இறந்த பிறகு உயிர் வாழ நினைக்காத மனைவியின் கற்பு நெறி போற்றுதலுக்குரியதுதான், இருந்தாலும் கண்ணகியை போல கோப்பெருந்தேவியின் கற்பு நெறியும் கடமையாகிவிடுகிறது.

எனவே சிலப்பதிகாரத்தில் காணப்படும் கற்பு நெறி ஆய்வுபடி முதற்கற்பு மாதவிக்கும் இடைக்கற்பு கோப்பெருந்தேவிக்கும் கடைக்கற்பு கண்ணகிக்கும் கிடைக்கிறது. கண்ணகிக்கு ஏன் கடைக்கற்பு? கோப்பெருந்தேவிக்கு ஏன் இடைக்கற்பு? என்றால், கணவன் கொலையுண்டதால் கண்ணகி மதுரையை எரித்தாள். ஆனால் கோப்பெருந்தேவி, கணவன் உயிரிழந்தால் தனது உயிரையே நீத்தாள். உயிரைவிட கண்ணகியின் கோபம் பெரிதல்ல என்பதால் கோப்பெருந்தேவிக்கு இடையும் கண்ணகிக்கு கடையும் கொடுக்கப்பட்டுள்ளது.

nandri: http://vinayaganickson.blogspot.in

மங்கலதேவி கண்ணகி கோவில்!


சேதமடைந்த நிலையில் கண்ணகி கோயில் பகுதி
மங்கலதேவி கோவில் அல்லது மங்களா தேவி கண்ணகி கோயில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்ட அளவில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டுக்கு சித்திரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோயில் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கிருந்து ஒரு பக்கம் கிழக்கு மலைத்தொடர்களையும், அதனுடன் தமிழ் நாட்டில் இணைந்திருக்கும் சில கிராமப்பகுதிகளையும் நன்றாக காணலாம்[1].

தல வரலாறு

கோவலனுக்கு பாண்டிய மன்னன் முழுமையாக விசாரிக்காமல் மரண தண்டனை அளித்துக் கொன்று விட்டதறிந்து கோபத்துடன் கண்ணகி பாண்டிய மன்னனின் அரச சபையில் அவன் தவறை உணர்த்தித் தவறாக நீதி வழங்கிய மதுரை மாநகரமே தீப்பற்றி எரியட்டும் என்று சாபம் விட்டு மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் எனும் மலையில் இருந்து தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது. இந்த இடத்தில்தான் மங்கலாதேவி கண்ணகி கோயில் இருக்கிறது.

துர்க்கையம்மன் கோயில்

இக்கோயில் வளாகத்தினுள் கேரள மக்கள் வழிபடும் துர்க்கையம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகள் நடத்துகின்றனர். தமிழ்நாடு, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த அனைவரும் இக்கோயிலில் வழிபட்டுச் செல்கின்றனர்.

எல்லைப் பிரச்சனை

தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த மங்கலதேவி கண்ணகி கோயில் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கண்ணகி கோவிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896 -ல் நடத்திய சர்வேயும், 1913, 1915 -ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976 -ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், கூடலூரில் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு துவக்கப்பட்டு கோவிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. 1976ல் இந்த சீரமைப்புக் குழு,அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது. கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு ரோடு போடுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை பாதி நடந்து கொண்டிருந்த போது கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.
இந்த நிலையில் 1976-ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது.

கண்ணகி கோயில் விழா

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் கேரளா அரசு சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சித்திரை முழுநிலவு திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். மற்ற நாட்களில் இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.

கோயில் நிலை

கேரள அரசின் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு இடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சித்திரை முழுநிலவு தினத்தன்று மட்டும் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சித்திரை முழுநிலவு தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லாததால் இந்தக் கோயில் பராமரிப்பின்றி கோவிலின் பல பகுதிகள் சிதைந்து போய்விட்டன.கோவில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன. கண்ணகி சிலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. தற்போது, சித்திரை முழுநிலவு விழா நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.இப்படியே சில காலம் கவனிக்காத நிலை தொடர்ந்தால் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் அழிந்து போகும். கோவிலைக் காப்பாற்ற  மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கோயிலின் பக்தர்களும் தமிழ் மேல் பற்றுடைய ஆர்வலர்களும் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை

தமிழ்நாட்டில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகி கோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகிறது. இந்த அமைப்பு தமிழ்நாட்டின் கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகி கோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.

புதிய கோயில்

கூடலூர் பளியங்குடி வழியாக மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் செல்லும் வழியில் கூடலூரைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் அவருக்குச் சொந்தமான இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு மங்கலதேவி கண்ணகி கோயில் என்ற பெயரில் புதிய கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். இந்தக் கோயிலுக்கும் பக்தர்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் பழமையான கோயில் தமிழ்நாடு- கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் நிலையில் புதிய கோயில் பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இது மங்கலதேவி கண்ணகியைக் களங்கப்படுத்துவதாகவும் அமையும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினரால் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடல்- மக்கள் கொண்டாட்டம்


ஞாயிற்றுக்கிழமை, மே 6, 2012, 13:00 [IST]
 Japan Nuclear Power Free As Last Reactor Shuts

Experts in the Elec. Power Industry Fast Return on Investment
டோக்கியோ: ஜப்பானில் இயங்கி வந்த ஹொக்கொய்டோ அணுமின் நிலையம் பரமாரிப்புப் பணிக்காக மூடப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் 40 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அணுமின்சாரம் இல்லாத நிலை உருவாகி உள்ளது.

ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு பேரழிவைச் சந்தித்த பிறகு அணு உலைகளின் பாதுகாப்புக்காக அவற்றை மூடி பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜப்பானைப் பொறுத்தவரையில் ஒரு அணு உலை மூடப்பட்டால் உள்ளாட்சி அமைப்பின் அனுமதி பெற்ற பிறகே திறகப்பட வேண்டும். இதுவரை மூடப்பட்ட அணு உலைகள் திறக்கப்படவில்லை. பொதுமக்களின் கடும் எதிர்ப்பும் இதற்கு ஒரு காரணம்.

இந்நிலையில் ஹொக்கொய்டோவில் இயங்கி வந்த அணுமின் நிலையமும் நேற்று மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பானில் அனைத்து அணுமின் நிலையங்களும் மூடப்பட்டு அணுமின்சாரம் இல்லாத ஒரு நிலை உருவானது. இதைக் கொண்டாடும் வகையில் தலைநகர் டோக்கியோவில் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலம் நடத்தினர். அவர்கள் தமது நாட்டில் அணு சக்திக்கு இடமில்லை என்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இருப்பினும் ஓஹி என்ற இடத்தில் உள்ள அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்பதால் அதனை மட்டுமாவது திறக்க ஜப்பான் அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு நீடித்து வருகிறது.

சனி, மே 05, 2012

மீண்டும் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம்




திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மீண்டும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் தொடங்கியது.
அணுஉலையை மூட வேண்டும், போராட்டக் குழுவினர் மீதான பொய் வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும், நிலவியல்-நீரியல் மற்றும் கடலியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த...ி இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோர் ஏற்கெனவே காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்களது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும், பல்வேறு கிராம மக்கள் சார்பில் சில மாதங்களாக தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் தெரிவித்தபடி அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதைக் கண்டித்து மே 1-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, சில நாள்கள் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இது தொடர்பாக இடிந்தகரையில் பொதுமக்களுடன், போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதில், அரசு கேட்டுக் கொண்டிருக்கும் காலஅவகாச தினமான வியாழக்கிழமை வரை ஆண்கள் மட்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே செவ்வாய்க்கிழமை பிற்பகலில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்த எஸ்.பி.உதயகுமார் கூறியதாவது:
எங்களது போராட்டம் இந்தப் பகுதி மக்களின் போராட்டம். மக்களின் கருத்துப்படிதான் நாங்கள் போராட்டத்தைத் தொடர்கிறோம். இப்போதைக்கு உண்ணாவிரதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கிறார்கள். அரசு தெரிவிக்கும் பதிலை எங்கள் மக்கள் ஏற்றுக் கொண்டால் போராட்டம் கைவிடப்படும். எங்களது கோரிக்கைகளை அரசு புறக்கணித்தால் வெள்ளிக்கிழமை முதல் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணாவிரதம் மேற்கொள்வர்.
அணுஉலையை மூட வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். அந்தக் கையெழுத்துப் பட்டியலை முதல்வரிடமும், பிரதமரிடமும் அளிப்போம். ஜனநாயக நாட்டில் மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

வியாழன், ஏப்ரல் 19, 2012

மின் கட்டண உயர்வும் தனியார் மயமும்

தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் மார்ச்1_2012 

கடுமையான மின்வெட்டில் சிக்கித் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் கொந்தளித்துப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் நெருக்கடி காலத்திற்கான அவசர உதவியாகக் கூட இந்திய அரசு தனது உடைமையாக உள்ள நெய்வேலி மின் நிலையத்திலிருந்து மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க முன்வரவில்லை. இன்னொரு பக்கம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் விற்றுவரும் சில தனியார் நிறுவனங்கள் மின்சாரம் வழங்காமல் முடக்கிப்போட்டுள்ளன. இவற்றின் விளைவாக தமிழ்நாடு இருட்டில் அமிழ்ந் துள்ளது.

கடுமையான மின்வெட்டு இருக்கும் இந்த நிலையில் கூட மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது பற்றி கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

மின்வெட்டை நீக்கி மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கத் திராணியற்ற தமிழக அரசு 9741 கோடி ரூபாய்க்கு மின் கட்டண உயர்வைக் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனுப் போட்டுள்ளது. கேட்டால் 53,300 கோடி ரூபாய் இழப்பில் சிக்கி மின்சார வாரியம் மரணப்படுக்கையில் கிடக்கிறது என சட்ட மன்றத்தில் அறிக்கை படிக்கிறார் முதலமைச்சர் செயலலிதா.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இவ்வளவு கடன் சுமை உயர முதன்மைக் காரணம் எது? இவ்வினாவிற்கு விடையளிப்பதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.

தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக அரசு நிறுவனமாகும். மின்சார வாரியம் தனது மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்த மின்சாரம், நெய்வேலி நிறுவனம் மற்றும் இந்திய அரசு தொகுப்பிலிருந்து பெறப்பட்ட மின்சாரம் ஆகியவற்றை வழங்கி வந்தது. உற்பத்தி செலவை விட பெரும்பாலான மக்களுக்கு விலை குறைவாக மின்சாரம் வழங்கியதால் அது ஓரளவு இழப்பை சந்தித்தது.

ஆயினும் பெரிய நிறுவனங்களுக்கும் வணிக வளாகங்களுக்கும் கூடுதல் கட்டணம் விதித்து பெற்ற நிதியை வீடு களுக்கும் வேளாண்மைக்கும் குறைந்த கட்டணத்திற்கு மின் சாரம் வழங்கப் பயன்படுத்திக் கொண்டது. சேவைத் துறை என்ற முறையில் ஆண்டு தோறும் ஏற்பட்ட இந்த இழப்பு 2002 ஆம் ஆண்டு 1970 கோடி ரூபாய் என்ற அளவை எட்டிய போது இத்தொகையை தமிழக அரசு மின்சார வாரியத்திற்கான கடன் பத்திரமாக மாற்றி சரி செய்தது. இந்த கடன் தொகை யையும் மின்சார வாரியம் பின்னர் அடைத்து விட்டது.

ஆனால் அதற்கு பத்தாண்டு களுக்கு முன்பு பிரதமராக பி.வி. நரசிம்மராவாவும் நிதியமைச் சராக மன்மோகன் சிங்கும் பதவி வகித்த காலத்தில் புதியப் பொரு ளாதாரக் கொள்கை என்ற பெயரில் அறிமுகப் படுத்திய தனியார்மய- தாராள மயக் கொள்கை மின்சாரத் துறையையும் தாக்கியது. மின் சாரத்துறையை தனியார் முதலா ளிகளின் கைகளுக்கு மாற்றி விடும் திட்டம் தலையெடுத்து வேக மாகப் பரவியது.

1994 ஆம் ஆண்டிற்கு பிறகு மின்சார வாரியங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங் குவதை இந்திய அரசு அனு மதிக்க வில்லை. அரசின் மின் வாரியங்கள் மின் உற்பத்தி நிலையங்களை தொடங்க வேண்டுமென்றால் நடுவண் மின்சார ஆணையத்திடம் (CENTRAL ELETRICITY AUTHORITY) முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆணையம் அரசு மின் உற்பத்தி நிலையங்களுக்கு எல்லா வகையிலும் தடை ஏற்படுத்தி வந்தது. அதே நேரம் அரசின் தனியார்மயக் கொள் கை தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஊக்குவிப்பு வழங்கியது. இதற்கேற்ப மின் வழங்கல் சட்டத்தில் 1994 ஆம் ஆண்டு திருத்தங்கள் செய்யப் பட்டன.

E.B._370இந்திய அரசு 2003 ஆம் ஆண்டு கொண்டு வந்த மின்சாரச் சட்டம், மின்சாரக் கட்டணம் நிர்ணயிப் பது தொடர்பாக மாநில அரசுக்கு இருந்த அதிகாரத்தை பறித்து இந்திய அரசின் கட்டுப் பாட்டில் அமைந்த மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஒப்படைத்தது. தமிழக அரசு மின் கட்டணத்தைத் தானே தீர்மா னிக்க முடியாது, தனது தேவையை இவ்வாணையத் திடம் கோரி அதன் ஆணைக் கேற்ப மின் கட்டணம் தீர்மா னிக்கப்படவேண்டும். இந்த மின்சாரச் சட்டம் மாநில அரசுகள் வழங்கி வந்த எளியோருக்கான மானியத்தை குறைக்க வேண்டு மென்று வலியுறுத்தியது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் இக்கொள் கையை செயல் படுத்தும் அமைப்பாக விளங் கியது.

இந்திய அரசின் தனியார் மயக் கொள்கை, மேற்கண்ட சட்ட ஏற்பாடுகள் வழியாக மின்சாரத்துறையில் நிலை நிறுத்தப்பட்ட பிறகுதான் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு பல மடங்காக உயர்ந் தது. அரசுத் துறை நிறுவனமான மின்வாரியம் தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை தானே உற்பத்தி செய்துகொள்ள முடியாமல் முடக்கப்பட்டது. மறுபுறம் மின்சாரத் தேவைகள் மிக வேகமாக அதிகரித்தன. இதனை ஈடுகட்ட தனியார் மின் உற்பத்திக் குழுமங்களிடம் அவர் கள் சொல்லும் விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் உள்ளாக்கப் பட்டது.

பெரிதும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து காசு கொடுத்து மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு வழங்கும் முகமை நிறுவனமாக தமிழ்நாடு மின்சார வாரியம் மாறிப் போனது.

தனியார் மின் உற்பத்திக¢ குழு மங்களிடம் மின்சாரம் வாங்குவதற்த் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் பெரு மளவுக்கு மின்வாரியப் பணத்தை தனியாருக்கு வாரி வழங்குவதற்கு ஏற்ற வகை யிலேயே அமைந்தது. இவற் றிடம் மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங் கியது மட்டுமின்றி , மின்சாரம் உற்பத்தி செய்யாமல், வழங் காமல் சும்மா இருந்த காலத் துக்கும் நிலைக்கட்டணம் என்ற பெயரால் பல நூறு கோடி ரூபாயை மின்வாரியம் கொட்டிக் கொடுத்தது. ஒரு தனியார் மின் உற்பத்தி நிலையம் மின் உற்பத்திக்கு அணியமாக இருப் பதாக ஒப்பந்தம் ஆகி விட் டாலே போதும், உற்பத்தி செய்யாத காலத்திற்கும் ஒரு நாளைக்கு ஏறத்தாழ ஒருகோடி ரூபாய் அந்நிறுவனத்திற்கு மின் வாரி யம் அழவேண்டும்.

எடுத்துக்காட்டாக நாகை மாவட்டம் சீர்காழி அருகி லுள்ள பிள்ளைப்பெருமாள் நல்லூரில் ஆந்திராவின் டாக்டர் சி.பிரதாப்ரெட்டி குழுமத் திற்கு மின் உற்பத்தி நிலையம் அமைத்துக்கொள்ள இசைவு வழங்கப்பட்டது. பிள்ளைப் பெருமாள் நல்லூர் மின் உற் பத்திக் குழுமம் என்ற பெயரா லேயே பிரதாப் ரெட்டி குழுமத் தினர் அந்நிலையத்தை நிறு வினர். ரெட்டி லேப்ஸ், அப்பல் லோ மருத்துவமனை ஆகியவற் றின் முதலாளிதான் இந்த பிரதாப்ரெட்டி.

இந்த பிபிஎன் நிறுவனத் திடமிருந்து ஒரு யூனிட் 17 ரூபாய் 80 காசுக்கு மின்சாரம் வாங்குகிறது தமிழக அரசு. மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி நிலையங்களில் 1 யூனிட் உற்பத்தி விலை 2 ரூபாய் 15 காசு என்பதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கொள்ளை யின் அளவு புரியும்.

கடந்த ஆண்டு முழுவதும் இந்நிறுவனம் மின்சார வாரியத் திற்கு விற்றது 24.4 கோடி யூனிட் மின்சாரம். ஒப்பந்தபடி இந்த மின்சாரம் 35 நாள்கள் உற்பத்திக்குச் சமமானது

எஞ்சிய 330 நாள்களுக்கு இந்த நிலையம் உற்பத்தியே செய்ய வில்லை என்றாகிறது. ஆயினும் சும்மா இருந்த நாள்களுக்கு நிலைக் கட்டணமாக 330.04 கோடி ரூபாயைத் தட்டிச் சென்றது.

இது போல் ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 1006 கோடி ரூபாயை உற்பத்தி இல்லாத காலங்களுக்கு நிலைக் கட்டண மாக மின்சார வாரியம் வழங்கி யுள்ளது.

ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், முடைக் காலத்தில் வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களிடம் அவ்வப்போது வாங்கிக் கொண் டதற்கும் மட்டும் கடந்த ஆண்டு 8884.4 கோடி ரூபாய் மின்வாரியம் வழங்கியிருக் கிறது.

சட்டமன்றத்தில் முதல மைச்சர் செயலலிதா அளித்த அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்ட தாகக் கூறினார். மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை கட்டுப் படுத்தியிருந்தாலே இந்த இழப் பில் ஏறத்தாழ 8 ஆயிரம் கோடி ரூபாயைக் குறைத்திருக்க முடி யும்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் மின்சாரத் தீர்ப் பாயமும் எவ்வாறு தனியார் நிறுவ னங்களின் கொள்ளைக் குத் துணைபோய் மின் வாரியத் தை கடன் சேற்றில் சிக்க வைக் கின்றன என்பதற்கு ஓர் எடுத் துக்காட்டைப் பார்க்கலாம்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2010 ஆம் ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்திய போது பன்னாட்டு வடநாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறு வனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1.80 முதல் ரூ.2.50 வரை கட்டணச் சலுகை வழங்கி அறிவித்தது. இவ்வாறு கட்டணச்சலுகை வழங்குமாறு தமிழக அரசும் கோரவில்லை; அந்த நிறுவ னங்களும் கோரவில்லை. மக்கள் கருத்தும் கோரப்படவில்லை. தானடித்த மூப்பாக தகவல் தொழில்நுட்பக் குழுமங்களுக்கு இக்கட்டணச்சலுகையை வாரி வழங்கியது ஆணையம்.

ஒழுங்குமுறை ஆணையம் தான் இவ்வாறு என்றால் மின்சாரக் கட்டணம் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரிக்கும் உச்ச அமைப்பான மின்சாரத் தீர்ப்பாயமும் அதற்கு மேல் இருக்கிறது. பிரதாப் ரெட்டியின் பிபிஎன் நிறுவனம் தனக்கு மின்சார வாரியத் திலிருந்து 189 கோடி ரூபாய் பணம் நிலுவையுள்ளது என வழக்குத் தொடர்ந்தது. அவ் வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பிபிஎன் குழுமம் கேட்டதை விடப் பல மடங்கு அதிகமாக இழப் பீட்டை கணக்கிட்டு ரூ 1050 கோடி வழங்குமாறு மின்சார வாரியத்திற்கு ஆணை யிட்டது.

இப்போதும் பிபிஎன் உள் ளிட்ட நான்கு தனியார் நிறு வனங்கள் மின்சாரம் வழங்கு வதை நிறுத்தி வைத்திருப்பதால் மின்வெட்டு இன்னும் கூடுதல் ஆகிறது.

இந்திய அரசு திணித்து தமிழக அரசு ஏற்றுக்கொண்ட தனியார்மயம் தமிழ்நாட்டு மின்சாரத்துறையில் திரும்பியப் பக்கமெல்லாம் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. தனியார் நிறுவனங்களுக்கு ஞாயமே இன்றி மின்உற்பத்தியும் மின் வழங்களும் இல்லாத காலத் திலும் ஆண்டுதோறும் வழங்கப் படும் நிலைக் கட்டணமான ரூபாய் 1000 கோடியை நிறுத்தி வைத்து மின்சார வாரியம் மின்உற்பத்தி நிலையங்களை நிறுவியிருந்தால் கடந்த பத் தாண்டுகளில் அரசுத் துறையில் 9000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை கூட்டி யிருக்க முடியும்.

தேவையற்ற - ஞாயமற்ற தனியார் கொள்ளையை மின்சாரத் துறையில் அனுமதித்துவிட்டு அதில் ஏற்படும் இழப்பை மக்கள் தலையில் கட்டுவது எந்த வகையில் ஏற்கத்தக்கது-?

சிலர் நினைப்பது போல் உழவர்களுக்கு வழங்கும் விலை யில்லா மின்சாரமோ, நெச வாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த கட்டண மின் சாரமோ மின் வாரிய இழப் பிற்குக் காரணமல்ல. தனியார் கொள்ளையே காரணம்.

தமிழ்நாடு மின்சாரத் துறையை தனியார் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு அரசுத் துறையை ஓங்கச்செய்வதே தாறுமாறான மின் கட்டண உயர்விலிருந்து மக்கள் தப்பிப்பதற்கு உள்ள ஒரே வழி ஆகும்.

நன்றி:தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்

திங்கள், ஏப்ரல் 16, 2012

கூடங்குளத்தில் கூடாத உலை! - பகுதி2


கூடங்குள அணு உலை வேண்டாம் என்றால்
மின்சாரத்திற்கு மாற்று என்ன? என்ற கேள்வி
ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுவது இயற்கை.
அதே வேளையில் மாற்று பற்றி எழுதுபவர்கள்
எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல.

உயர்சக்தி துறையில் பணி புரியும் எல்லாப்
பொறிஞர்களும் அறிஞர்களும் அணு உலைகளுக்கு
மாற்று பற்றி மிகநன்றாஅறிவர்.
அவர்களால் மட்டுமே மிகத் துல்லியமாக, சிறப்பாக
மாற்றுக்களைக் கூறமுடியும்.

அப்துல் கலாமுக்கு அணுமின்னுக்கு மாற்று தெரியாதா?
கலாமைப் போன்ற புகழ்பெற்ற தமிழக அறிஞர்,
பொறிஞர் பலருண்டு. அவர்களுக்கெல்லாம் தெரியாததா?

அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை
நிறுவச் சொன்னால் அருமையான மாற்றுத்திட்டங்களைச்
செய்யக் கூடியவர்கள்.

ஆனால் அவர்களாலும் அவர்களைப் போன்றவர்களாலும்
கூடங்குளம் வேண்டாம் என்று சொல்லவே முடியாது.
அரசாங்கப் பணி செய்து கொண்டு அரசாங்கத்தின் அரசியல்
விருப்புகளுக்கு மாறாக ஞாயத்தையும் உண்மையையும்
குடியரசு நாட்டில் சொல்ல முடியாது.

அணு உலைக்கு மாற்றாகப் பலரும் கூறுவது,
மரபுசாரா மின்சக்தி உற்பத்தியையே. அது கதிரொளி,
காற்று, கழிவு, கடலலை போன்றவற்றைப் பயன்படுத்தி
உற்பத்தி செய்யப்படுகிறது.

காற்றாலைகளை எடுத்துக் கொள்வோம். இந்தியாவிடம்
மிக நீண்ட கடற்கரை உள்ளது. அதில் தமிழகத்தின்
கடற்கரை நீளம்தான் மிக அதிகம் (1076 கி.மீ).
மண்டலம் மண்டலமாகப் பிரித்து அந்தந்த மண்டலத்திற்குத்
தேவையான மின்சாரத்தைச் சிறிய சிறிய காற்றாலைகளில்
பெற்றுக்கொள்ளலாம். தற்போது தமிழ்நாடு/இந்தியா முழுவதும்
மின்சாரத்தை அனுப்புவதால் உண்டாகும் வழிஇழப்பையும்
தவிர்க்கலாம்.

ஒரு மெகாவாட்டு மின்சாரம் தயாரிக்கும் முனையலுக்கு
ஆகும் செலவென்ன தெரியுமா? 5 கோடி உரூவாய்.
இது ஒன்றும் ஆதாரமில்லாத வெற்றுத் தரவல்ல.
தமிழக அரசாங்கத்தின் காற்றாலைத் திட்டத்திற்கான
ஆவணத்தில் சொல்லப்பட்டிருக்கும் அரசாங்கத் தரவு.
(படிக்க வேண்டிய ஆவணம்)
http://www.tn.gov.in/citizen/teda.pdf

அப்படியென்றால், 2000 மெவா காற்றாலை
மின்சாரத்திற்கு ஆகக்கூடிய செலவு 10,000 கோடி
உரூவாய்.

கூடங்குளத்தில் 2000 மெவா அணு மின்சாரம் உற்பத்தி
செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதில் 1000 மெவா
அளவுக்கு மட்டுமே வேலை முடிந்திருக்கிறது.

அதற்குள் ஆகியிருக்கும் செலவு என்ன தெரியுமா?
யாருக்கும் தெரியாது. ஆனால், 2007ஆம்
ஆண்டுக்குள்ளாக 17,000 கோடி உரூவாய்
செலவாகிவிட்டது என்பது எல்லோருக்கும்
தெரியும்.

10,000 கோடி உரூவாயில் யாருக்கும் இன்னல்
இல்லாமல், ஒரே இடத்தில் என்று இல்லாமல்
பரவலாக அமைக்கக் கூடிய எளிமையான,
மாசுக்கேடு இல்லாத காற்றாலை மின்சாரத்தை
விட்டுவிட்டு, குறைந்தது 25,000 கோடி உரூவாய்
செலவாகக் கூடிய இன்னலும் இடரும் மிகுந்த
அணு உலைத் திட்டம் எதற்கு?

கடற்கரையில் மட்டும்தானா காற்று? தமிழ்நாட்டில்
மேற்கு, கிழக்கு மலைத்தொடர்கள் உள்ளன.
அதுவன்றி பல குன்றுகள் உள்ளன. இவையெல்லாம்
காற்றாலைக்கு மிகப் பொருத்தமான சூழல்கள்.

வடகிழக்கு, தென்மேற்குப் பருவக்காற்றுகள்
என்றும் வளமையானவை காற்றாலைக்கு.

உள்ளூர் ஆதாரங்களைக் கணக்கில் கொன்டு
திட்டங்கள் செய்ய வேண்டும். கடனுக்குக்
கிடைக்கிறதே என்றும், பகட்டாக இருக்கிறதே என்றும்
வெளிநாட்டுக்கு ஓடி ஓடி இந்தியர்களின் பணம்
வீணடிக்கப் படுகிறது.

உலகிலேயே பெரிய காற்றாலை நிறுவனங்களில்
இந்தியாவின் சுசலான் நிறுவனமும் ஆகும்.
துவங்கி பன்னிரண்டாண்டு காலத்துக்குள் இந்தியா முழுதும்
5000 மெகாவாட்டு மின் உற்பத்தியை அவர்களின்
காற்றாலைகள் செய்கின்றன. கூடங்குளத்திலும்
ஒரு சுசலான் காற்றாலை உண்டு. உலகின்
ஆறாவது பெரிய காற்றாலை நிறுவனம் சுசலான்.
http://www.suzlon.com/images/Media_Center_News/185_SEL%20-%20SE%20Press%20Release%20%205%20GW%2024.9.2010.pdf

இந்தியா வருங்காலத்தில் 31,000 மெவா
உற்பத்தியை 30 அணு உலைகளைக் கொண்டு
செய்யவிருக்கிறது. 2,000 மெகாவாட்டுக்கே 25,000 கோடி
என்றால் இந்த 31,000மெகாவாட்டுக்கு எவ்வளவு
செலவு? எவ்வளவு காலம் பிடிக்கும் என்று
எண்ணிப் பார்க்க வேண்டாமா?

காற்றாலை நிறுவனங்களை மேலும்
வளர்த்துத் தேவையான மின்சாரத்தில்
கணிசமான பகுதியை காற்றாலைகளின்
மூலம் விரைவில் பெறலாமன்றோ?

காற்றாலை மட்டும் போதுமா? என்றால்
போதாதுதான். கதிரொளி, கழிவுகள் என்று
வேறும் வழிகள் எவ்வளவோ உண்டே!

அரசாங்கங்கள் மேலும் பொறுப்புடன்
செயல்பட்டால் எவ்வளவோ செய்யலாம்தான்.

இலவசங்களை வாரி வாரி வழங்கும்
அரசாங்கங்கள் அவைகளை எல்லாம்
கதிரொளியில் இயங்கும் அரவைகள்,
கதிரொளியில் இயங்கும் தொலைக்காட்சிகளாக
இலவசமாகக் கொடுக்கலாமே?

பள்ளிக்கூடத்திலும் பிள்ளைகளுக்கு காலை,
மதியம் என்று இரண்டு வேளை சோறுபோட்டு,
வீட்டுக்கும் இலவசமாக அரிசி கொடுக்கும் மடத்தனம்
இந்த நாட்டு அரசுகளுக்கு மட்டுமே உண்டு.

நன்கு சிந்தித்துப் பாருங்கள். இரண்டு பிள்ளைகள்
படிக்கிற 4 பேர் குடும்பம் என்றால், பிள்ளைகளுக்கு
இருவேளைச் சோறு பள்ளிக்கூடத்தில்.
அவர்களுக்கும் சேர்த்து வீட்டிற்குத் தேவைக்கு மேல்
இலவச அரிசி. தேவைக்கு மேலே உள்ள அரிசி
எங்கே போகும்?

பொருளாதார மேதைகள் ஆளும் நாட்டில் மட்டும்தான்
இந்தப் பொருளியல் கொள்கைகளுக்கு வாய்ப்பு உண்டு.

அரிசி இலவசம் கவர்ச்சியாக இல்லையென்றால்
கணி இலவசம்!

இப்படியெல்லாம் செய்வதற்குப் பதில்,
கதிரொளியில் இயங்கும் மின்விளக்குகள்,
மின்விசிறிகள் போன்றவற்றைப் பள்ளிப்
பிள்ளைகளுக்கு இலவசமாய்க் கொடுக்கலாமே?

மக்களுக்கு அந்தவகையில் மின்சாரம்
தரவேண்டிய கடப்பாடு குறைந்துவிடுகிறதல்லவா?

அணு உலைக்குக் கொட்டும் காசை
கதிரொளி மின்வளர்ப்பிற்குத் திருப்பலாமே?

குசராத்தில் சுடுகாட்டையே
கதிர்-மின்-சுடுகாடாக்கியிருக்கையில்
கதிர்-மின் ஆற்றலை எப்படியெல்லாம்
அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம்
என்று எண்ணிப் பார்க்க நிறைய இருக்கிறதே!

வெளிநாட்டு நிறுவனங்கள் என்றால் கையைக்
கட்டி வாயைப் பொத்தி மின்சாரத்தைத்
தடையின்றி தரும் தமிழக இந்திய
அரசாங்கங்கள் காற்றாலை வழியாக,
பெரிய இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள்
அவரவர் மின்சாரத்தை அவரவர்
பார்த்துக் கொள்ளவேண்டும் என்று
சொல்லலாமே?

1000 கோடிக்கு மேல் முதலீடு செய்யும்
எந்த நிறுவனமாயினும் அவரவர் மின்சாரத்தை
அவரவரே தயாரித்துக் கொள்ள முடியுமே?

சிறிய நடுத்தர நிறுவனங்களை விட்டுவிட்டு
1000 கோடிக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு
மின்சாரத்தில் சிறு பகுதியை மட்டும்
கொடுத்து, பெரும் பகுதியை அவர்களையே
மரபுசாரா முறையில் தயாரித்துக் கொள்ளச்
செய்ய முடியுமே.

அதை விடுத்து அப்பாவி பொதுமக்களை
நாளைக்கு 6 மணி நேரம் மின்சாரத்தை இழந்து
வாடவைத்துத்தான் வல்லரசு ஆக முடியுமா?

பல்வேறு வகையானும் அறிவுக்கூர்மையுடன்
அரசாங்கங்கள் செயல்படாமல், மக்களை
வாட்டி வதைப்பதோடு அணு உலைகள்
போன்ற ஆபத்துகளையும் அருகே
குடியேற்றுவதில் ஞாயம் இல்லை!

ஒருங்கிணைந்த பன்முகத்திட்டத்தைச்
செய்யவேண்டுமேயன்றி, மக்களை
வாட்டி வதைத்து நாட்டை முன்னேற்றுவோம்
என்பது அரசுகளின் கையாலாகாத நிலையையே
காட்டுகிறது.

கடந்த 8/10 ஆண்டுகளாக அரசியலைக்
கவனிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
ஒரு பாராளுமன்ற, சட்டமன்றக்
கூட்டத் தொடராவது அடிதடியில்லாமல்
அசிங்கமில்லாமல் நடந்திருக்கின்றனவா?

இவர்களா அணு உலைகள் போன்றவற்றை
முறையாகப் பாதுகாக்கத் தக்கவர்கள்?

போபாலில் சொந்த நாட்டு மக்களுக்குப் பெரும் சேதம்
விளைவித்த யூனியன் கார்பைடு நிறுவன முதலாளியை
தனிப் பறனையில் இரகசியமாகத் தப்ப வைத்த
அரசாங்கங்களா நீண்ட நாளைக்கு அணு உலையில்
பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் பக்கம் நிற்கும்?

அம்மக்களுக்கு நீதி கிடைக்க 24 ஆண்டுகள் ஆயின.
24 ஆண்டுகள் கழித்து கிடைத்த இழப்பீட்டுத் தொகையை விட
சிறு கோயில் வாசலில் பிச்சையெடுத்து வாழும் பிச்சைக்காரன்
பன்மடங்கு சம்பாதித்திருப்பான்.

மிகப் பெரிய அறிவியல் அறிஞர்களை
எல்லாம் சமாதான ஏற்பாட்டிற்கு அனுப்புகிறார்களாம்.

கலாம் உள்ளிட்ட எந்தப் பெரிய அரசுப் பணி செய்த
பொறிஞராயினும், அறிவியல் அறிஞராயினும்
"போபால் விசவாயு விதயத்தில் அரசாங்கம் நடந்து கொண்டது
சரியில்லை; அம்மக்களுக்கு 24 ஆண்டுகள் கழித்துக் கொடுக்கப்
பட்ட மிகச்சிறு பணம் ஞாயமற்றது", என்று அறிக்கை விடுக்க
துணிவு உடையவர்களா? அது போலச் செய்திருக்கிறார்களா?

கண்டுபிடிப்புகள், அல்லது கட்டி அமைத்தல் ஆகியவற்றை
மட்டும்தான் அரசாங்கப் பொறிஞர்கள் அறிஞர்கள் செய்ய முடியும்.
அதைத்தாண்டி குமுகத்தில் மக்களுக்கு இன்னல் ஏற்பட்டால்
இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பேசமாட்டார்கள்.
அதற்குத் துணிவும் அவர்களுக்குக் கிடையாது.
ஆழ்ந்த அனுதாபங்களைக் கூட உயர் அரசுப்பணியாளர்களால்
சொல்ல முடியாது.

அப்படியென்றால், மக்களின் மனநிலைக்கு
எதிராக இவர்கள் சமாதானம் சொன்னால்,
இவர்கள் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும்
மக்கள் ஏன் கேட்கவேண்டும்?

அன்புடன்
நாக.இளங்கோவன்
நன்றி: நயனம் .ப்லொக்ச்பொட் .காம்

கூடங்குளத்தில் கூடாத உலை!


மின்தடையால் நான்கு வருடங்களாகத் தவித்துக்
கொண்டிருக்கும் அதே தமிழகம் மின்சார உற்பத்திக்காக
கட்டப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ள
கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்துக்
குரல் கொடுக்கிறது.

மின்விசிறி, மின்விளக்கின் பயனை கடந்த 60/70
ஆண்டுகளில் துய்த்திருக்கும் தமிழகம், அதனை
உற்பத்தி செய்யும் விதங்களைத் தற்போது
ஊன்றிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது என்பது
மிக நல்ல மாற்றம்.

பொறியியல், அறிவியல் வயப்பட்ட தமிழகம்
அதில் தனது வாழ்வாதாரங்களையும், தனது
சந்ததிகளையும் தொலைக்கக் கூடிய ஒன்றை,
அது எப்பேறுபட்ட அறிவியலாயினும்
தூக்கி எறியத் தயாராகியிருப்பது மிக நல்ல
மாற்றம்.

1986ல் உருசியாவின் செர்னோபில் அணு உலை
வெடித்து பேரழிவை ஏற்படுத்திய ஆகப்பெரிய
அறிவியலைக் கண்டு உலகமே நடுநடுங்கிக் கிடந்தாலும்,
அவசர அவசரமாக 1988ல், அதே உருசியாவிடம்
சென்று கூடங்குளத்தில் உருசியாவின் அணு உலையைக்
கட்ட இந்தியா ஒப்பந்தம் போட்டது.

அதுவும் 4% வட்டி கட்டுகிறோம், இரண்டரை பில்லியன்
வெள்ளி கடனுக்கு அதைக் கொடுங்கள் என்று
ஒரு கடன்கார ஒப்பந்தம் போட்டது இந்தியா.
அன்றைய நிலையில், உருசியாவுடன் இவ்வளவு பெரிய
ஒப்பந்தங்களைக் கண்ட அமெரிக்காவிற்குக்
கண்கள் சிவக்காமல் இருந்திருக்குமா? என்பது தனிக்கதை.

1986ல் வெடித்த உருசிய அணு உலை, உடனடியாகவும்,
கதிரியக்கத்தால் ஏற்பட்ட பல படு பயங்கர நோய்களாலும்,
1986 தொடங்கி 2004ஆம் ஆண்டு வரை மட்டும் 9,85,000
மக்களைக் கொன்றுள்ளது.

http://www.redfortyeight.com/2011/05/01/chernobyl-death-toll/
http://richardbrenneman.wordpress.com/2011/03/25/the-chernobyl-death-toll-1000000-not-4000/

இன்னும் செர்னோபில் அணு உலையால் தொடர்ந்து
கொண்டிருக்கும் சாவுகளையும், எதிர்காலத்தில்
தொடரக்கூடிய சாவுகளையும் கணக்கிடும் அறிஞர்களின்
கூற்றுகள் நடுங்க வைக்கின்றன.

அணுத்துறை அறிஞர்களும் இந்திய உருசிய அரசியல்வாதிகளும்,
"செர்னோபில் அணு உலையில் இருந்த குறைபாடுகளைக்
கண்டறிந்து கூடங்குளம் அணு உலையில் அவ்வாறு
ஏற்படாதவாறு செய்யப்பட்டு விட்டது" என்று சொல்வது,
"கூடங்குளம் அணு உலை ஒருவேளை வெடித்துச் சிதறினால்,
அதில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அதன்பின்
கட்டப்படும் அணு உலைகளைச் சரி செய்துவிடுவோம்"

என்று சொல்வதாகவே எடுத்துக் கொள்ளமுடிகிறதே தவிர
பெரிதாக அணு உலை நுட்பத்தின்பால் பற்று
ஏற்படுத்துவதாக இல்லை.

"எந்த ஆலையானாலும், எந்திரங்களானாலும்
ஆபத்துகள் நிறைந்தே இருக்கின்றன - அதற்காக
நாம் அணு உலையை விட்டுவிடவேண்டுமா? -
என்று சில அரசியல், அறிவியல் துறைகள்
பரப்புரை செய்தாலும், "ஒரு தடவை வெடித்தால் -
நூறு தலைமுறை சாவும்" என்ற உண்மையை
செர்னோபில் நிறுவியிருக்கையில்,
தமிழகத்தில் அணு உலை தேவையா என்று
எண்ணிப் பார்க்க வேண்டியது மனிதசாதியின்
கடமை அல்லவா?


"கட்டத் தொடங்கும் போது என்ன செய்தீர்கள்? -
இப்பொழுது வந்து எதிர்க்கிறீர்களே" என்று
கேட்கும் அரசியல் பீடங்களும், அறிவியல் பீடங்களும்
ஒன்றை எண்ணிப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள்.

"கற்றலும் பட்டறிவு என்பதும் வாழ்வியலின்
தொடர் கல்வி" என்பதை அவர்கள் தங்கள்
வசதிக்காக மறந்து விடுகிறார்கள். தாங்கள்
செய்ததை ஞாயம் என்று நிறுவ இயற்கையையும்
சந்ததிகளையும் காவு கொடுக்கத் தயாராகிவிடுகிறார்கள்.

நாசகார அறிவியலோடு அரசியலும் சேர்ந்து
கொள்ளும்போது அது மாபெரும் அழிவு
சக்தியாக உருவெடுத்துவிடுகிறது. அதன் பற்கள்
நீண்டு வெளியே தெரிகின்றன.

இந்தச் சக்தியை கேள்வி கேட்க சாதாரண
மக்களுக்கு எந்தநாளும் துணிவு ஏற்படுவதில்லை
தமிழகத்தில்.

அரசியல்வாதிகளே, அறிவியல் அறிஞர்களே,
"எமது வாழ்க்கையையும் எமது சந்ததியையும்
காவு கொடுக்கக் கூடிய ஒரு அறிவியலை
எமது நிலத்திலே எங்கள் பணத்திலே
விதைக்கும் முன்னர், எம்மை
ஒரு வார்த்தையேனும் கேட்டீர்களா?"

"இது இன்னது இது இத்தன்மையது
என்று எங்களுக்குக் கல்வியூட்டியபின்
கட்டினீர்களா?"


"நாங்களாகக் கற்ற கல்வி! எங்கள் கல்வி
உலகில் நடந்த பேரழிவுகளை அலசிப்
பார்க்கச் செய்திருக்கிறது". அதன்
அடிப்படையிலேதான் இந்த அணு உலைகளை
மறுக்கிறோம் - என்று கூடங்குளத்திலே
மக்கள் எழுந்து, நாசகார அறிவியலின்
முகத்திலே கரிபூச நிற்பதிலே ஒரு
பெரிய அறிவு எழுச்சியை காணமுடிகிறது.

ஆனால், அரசும் அறிவியலும் தமது
கல்வியால் ஆணவத்தையே பெற்றிருக்கின்றன.
அந்த ஆணவத்தை கோடிக் கணக்கான
மக்கள் முன்னர் கொடியேற்றி வைக்கின்றனர்.

1988லே துவங்கப்பட்ட கூடங்குளம் அணு உலை
இன்றைக்கு 23 ஆண்டுகளாகி பல்லயிரம் கோடிகளை
ஏப்பமிட்டுள்ளது. அரணவ இரகசியங்கள் போல,
இதன் செலவுகள் வெளியே சொல்லப்படுவதில்லை.
2007ஆம் ஆண்டு வரைக்கும் ஆன செலவு மட்டுமே
17,000 கோடி உரூவாய்.

உருசியாவின் நட்பிற்கு விலை கூடங்குளம்.
அமெரிக்காவின் நட்பிற்கு அதைப்போல
20 உலைகளுக்கான ஒப்பந்தங்களை
இந்தியா போட்டிருக்கிறது. நீண்ட காலம் எடுக்கும்
அணு உலைத் திட்டங்களுக்கு நீண்ட கால நோக்கில்
போடப்பட்டிருக்கும் பொக்கீடு (budget)
20 இலட்சம் கோடிகள். இவ்வளவிற்கும் பின்னர்
இதன் உழைப்பு காலம் வெறும் 25 ஆண்டுகள்தான்.

அதாவது, இன்றைய கூடங்குளத்திலே 2000 மெகாவாட்
மின்னுற்பத்திக்கு உலை கட்டப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவொடு திட்டமிடப்பட்டுள்

20 இலட்சம் கோடிகள், 20,000 மெகாவாட்டிற்கு
திட்டமிடப்பட்டிருக்கிறது. ஓவ்வொரு ஆயிரம் மெகாவாட்
மின்னளவிற்கும் ஒரு இலட்சம் கோடிகள்
திட்டமிடப்பட்டிருக்கிறது.

அறிவியல் அறிஞர்கள் சிலர், அணு உலையை
மறுப்பவர்களை "சாணியுகத்துக் காரர்கள்" என்று
சொல்கிறார்கள். அந்தச் சாணியைப்
பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் எளிய
முறையை கிராமந் தோறும் நிறுவினால்
பல இலட்சம் கோடிகள் தேவையே இல்லை.

தமிழகத்திலே 17,000 கிராமங்கள் இருப்பதாகப்
புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கும்
தேவையான அடிப்படை மின்சாரத்தை 20-30 கோடி உரூவாய்
செலவில் செய்துவிட முடியும். அதாவது இரண்டு
2ஞீ அலைக்கற்றைப் பணத்திலேயே மிக எளிதாகச்
செய்ய முடிந்த ஒன்று.

கூடங்குளத்திலே உலை கட்டினால் 10,000 பேருக்கு
வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்களாம்
அப்போது. ஆனால், இது வரைக்கும் பத்தே பத்து
பேரை தேடித்தான் விளம்பரங்கள் தமிழ்நாட்டில்
வந்துள்ளன என்று கூடங்குளம் போராட்டத்தில்
முக்கிய பங்கு வகிக்கும் உதயகுமார் சொல்கிறார்.
அதுவும் உருசிய மொழி தெரிந்திருக்க வேண்டும்
என்று வேண்டுகோளோடு வந்த விளம்பரமாம்!

சாணியுகம் என்று தாழ்வாகக் கருதக் கூடாது.
அந்தச் சாணியை வைத்து கிராமந்தோறும்
மின்சாரம் தயாரித்தால் பல்லாயிரக்கணக்கான
பேருக்கு உண்மையிலேயே வேலை கிடைக்கும்
என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

அணு உலைகளுக்கு ஆபத்து தானாகவும் வரும்;
இயற்கையின் சீற்றத்தாலும் வரும்.
அதாவது,
ஆபத்து வரும் என்றால் அது எப்படி வேண்டுமானாலும்
வரும் என்பதுதான் அணு உலைகளின் நிலையாமை.
உருசியாவின் செர்னோபில் விபத்து தானாக வந்தது.
சப்பானின் புகுசிமா விபத்து இயற்கை சீற்றத்தால் வந்தது.

"தானாக வந்த விபத்தா?
இப்போது சரி செய்து விட்டோம்!

பூகம்பத்தால் விபத்து வருமா?
இந்தப் பக்கம் பூகம்பமே வராதுங்க! "

இப்படித்தான் சொல்கிறார்கள் கூடங்குள உலை
ஆதரவாளர்கள்.

அணுத்துறையில் இந்தியாவிலும் கனடாவிலும்
பல்லாண்டு காலம் பணிபுரிந்த முதிர்ந்த தமிழ்
அறிஞர் திரு.சி.செயபாரதன் அவர்கள்
கூடங்குளம் உலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி
குறிப்பிடுகையில் அது கடல்மட்டத்தில் இருந்து 25 அடி
உயரத்தில் முன்னேற்பாடாகச் செய்யப்பட்டிருக்கிறது
என்று சொல்கிறார்.

http://jayabarathan.wordpress.com/kudangulam-reactor-safety/

இது பாதுகாப்பாகத் தோன்றலாம். ஆனால், சப்பானில்
அண்மையில் வந்த பேரலை 50 அடி உயரத்திற்கு
எழுந்தது. 3 மீட்டரில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை
பொதுவாக சுனாமி அலைகள் எழும். ஆனால்,
சப்பான் அலை 14 மீட்டர் (50 அடி) உயர்ந்தது.

இதைவிட, சப்பானில் 1993ல் ஒக்கைடோவில்
அடித்த சுனாமிப் பேரலையின் உயரமான அலை
32 மீட்டர் (100 அடி) எழுந்துள்ளது.


கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகளில்
ஆகப் பெரியது அலாசுகாவில் 1958ல் நிகழ்ந்தது.
அதன் உயரம் 524 மீட்டர் (1720 அடி) என
பதிவாகியிருக்கிறது.


http://geology.com/records/biggest-tsunami.shtml

இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படும் பேரலைகளின்
உயரத்தை முன்கூட்டி அளந்துவிட முடியாது. வந்தபின்
அளப்பதைத்தான் அறிவியல் செய்துவருகிறது.

அவ்வளவு ஏன்?

2004 சுனாமி பேரலைகளால் தமிழகமும் தமிழீமும்
பேரழிவைச் சந்தித்தன. அப்போது தமிழர் கடற்கரைகளில்
எழுந்த அலைகளின் உயரம் 10.4 மீட்டர் (35அடி).
அதன்பின்னர் கடற்கரைகள் அப்படியேதான் இருக்கின்றன.
மூழ்கிவிடவில்லை.

ஆனால், தமிழக வரலாற்றில்
"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள"

என்று சிலப்பதிகாரம் சொல்லவில்லையா?

சிலப்பதிகார வரிகள், ஒரு மலையையே கடல்
விழுங்கியிருப்பதைக் கூறுவது நாம் அறிந்ததுதானே?

சோழர் தலைநகரமாக ஒரு காலத்தில் விளங்கிய
பூம்புகார் கடலுக்குள் மூழ்கி முகவரி இழக்கவில்லையா?

மாமல்லபுரம் மூழ்கிக் கிடப்பதை நாம் கண்டு
கொன்டுதானே இருக்கிறோம்?

கேரளத்திலே வஞ்சி மாநகரம் கடலில்
மூழ்கிப் போகவில்லையா?

1970களில் தனுசுகோடி கடலால் மூழ்கிப் போனதை
மறந்துவிட்டோமா?

இப்படித் தமிழகத்தின் கடலோரம் இயற்கைச் சீற்றத்தினால்
குறுகிப் போய்க் கொண்டிருப்பதை வரலாற்றிலும்,
நம் காலத்திலும் கண்டிருந்தும், போன நூற்றாண்டில்
1720 அடி உயர சுனாமி அலையை அலாசுகாவில்
பார்த்திருந்தும், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமியின்
கொடுமையை நாம் பட்டிருந்தும், வெறும் 25 அடி உயரத்தில்,
கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் கூடங்குளம்
உலை பாதுகாப்பற்றது என்று மறுப்பதில்
தமிழ் மக்களிடம் என்ன குறையை யார் காண முடியும்?

அணு அறிஞர் செயபாரதன் கூறுவது போல, சில
பாதுகாப்புக் கருவிகளை கூடங்குள உலையில்
நிறுவியிருக்கலாம். ஆனால், கால காலமாக
கடற்கரையை மூழ்கடிக்கும் அலைகளைப் பார்த்து
வரும் தமிழகத்தின் முன் இந்த அணு உலைகள்,
"நிறுவப்பட்டிருக்கும் அணுகுண்டாகத்" தெரிவதில்
வியப்பென்ன?

மிக அதிகமாக அணு உலைகளை நிறுவிவரும்
சீன நாடு, புகுசிமா விபத்திற்குப் பின்னர்

தற்போது நிறுவத்தில் இருக்கும் 7 உலைகளை
தற்காலிகமாகவேனும் நிறுத்தியிருக்கிறது. உலகில்
பல்வேறு நாடுகளும் அணு மின் உலைகளை
மீளாய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

அணுத்துறை அறிஞராக சி.செயபாரதன்,
அணு உலையை ஆதரித்தாலும், அவருக்கும் இருக்கும்
அச்சத்தினால்தான் அவர் அணு உலைகளை
"நாட்டுக்குத் தேவையான தீங்குகள்" என்று வருணிக்கிறார்.

அவருக்கும் கூடங்குள மறுப்பாளர்களுக்கும் இருக்கின்ற
ஒரே வேறுபாடு "நாட்டுக்குத் தேவையற்ற தீங்கு" என்பது
மறுப்பாளர் கருத்தாகவும், "நாட்டுக்குத் தேவையான தீங்கு"
என்பது அணு அறிஞர் செயபாரதனொடு அவரைப் போன்ற
ஆதரவாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

ஆக, யாருமே இதனை "நல்லது" என்று சொல்லவில்லை.
மாறாக "தீங்கு" என்றே சொல்கிறார்கள்.

அமெரிக்காவில், 104 உலைகள் உள்ளன. 77% அமெரிக்க மக்கள்
1977ல் அணு உலை ஆதரவாளராக இருந்துள்ளனர் என்றும்
திரிமைல் விபத்து, செர்னோபில் விபத்து, புகுசிமா விபத்து
ஆகியவற்றிற்குப் பின்னர் அமெரிக்கர்களின் அணு உலை
ஆதரவு என்பது மிகக் குறைந்து 43% ஆகி விட்டது
என்று திரு.செயபாரதன் கூறுவது கவனிக்கத் தக்கது.

http://jayabarathan.wordpress.com/2011/10/18/nuclear-power-status-2011/

அது மட்டுமல்ல, அணு உலைகளையும் அணுவியலையும்
முழுமையாக ஆதரிக்கும் செயபாரதன் அவர்களே,
"இந்த அணு உலைகள் பூமிக்கடியிலே, பாதாளத்திலேதான்
கட்டப்படவேண்டும்; அதுவே சிறந்த பாதுகாப்பு" என்று
கூறுகிறார்.


http://jayabarathan.wordpress.com/2011/10/05/world-nuclear-power-status/

"கரணம் தப்பினால் மரணம்" என்ற அறிவியலின்
அணு உலைகளை தமிழத்தில் அமைப்பதை
முழுமையாக நிறுத்த வேண்டும்.

நமது கடற்கரைகள் வரலாற்றுக் காலந்தொட்டு
பேரலைகளுக்கும் இயற்கை சீற்றங்களுக்கும்
உட்பட்ட பகுதியாகும்.

இதை மறுத்து செய்யப்படும் கூடங்குள முயற்சி
தமிழ் மக்களின் வாழ்வுக்குப் பொருத்தப்படும்
"2000 மெகாவாட் அணுகுண்டன்றி வேறல்ல".

1977ல் அணு உலைகளை ஆதரித்த அமெரிக்கர்கள்
இன்று அதனைக் கண்டு அச்சப்படுகிறார்கள்.

1988ல் அணு உலையைப் பற்றிக் கவலை கொண்டிராத,
அல்லது அறியாதிருந்த தமிழர்கள் இன்று
மறுத்தெழுந்திருக்கிறார்கள்.

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை" அன்றோ?
இப்பொழுது கட்டிவிட்டார்களே என்ன செய்யலாம்?

தமிழகம் நெற்களஞ்சியம்தானே!
தென்னைமர உயர அண்டாக்களையும்
கும்பாக்களையும் கட்டியிருக்கும் கூடங்குள அணு உலையை
உலகத்திலேயே ஆகப்பெரிய அரிசி ஆலையாக மாற்றலாம்.
அதைத்தவிர வேறேதும் செய்ய முடியுமா என்பதை
அப்துல்கலாம், செயபாரதன் போன்ற தமிழக அறிவியல்
அறிஞர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுத்தலாம்.

அணு மின்சாரத்திற்கு மாற்று பற்றியும் பிறவற்றையும்
தொடர்ச்சியில் காணுவோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

திங்கள், ஏப்ரல் 02, 2012

கூடன்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் விடுவிப்பு

கூடன்குளம் அணுஉலையை எதிர்த்து போராடிய பொதுமக்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி நடுவண் சிறையில் இருந்தனர். தற்போது அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் கைதான 178 பேரில் 148 பேர் மட்டும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 86 ஆண்கள், 41 பெண்கள், 21 சிறுவர்கள் ஆவர். இதில் சிறுவர்களை நான்குநேரி சிறையில் அடைத்து வைத்திருந்தனர். விடுதலையானவர்களை தமிழர்களத்தின் மேற்கு மண்டல பொறுப்பாளர் அரசு அவர்கள் திருச்சியிலிருந்து அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார்.

மின்பற்றாக்குறை => மாற்றுச் சிந்தனை + மாற்று எரிபொருள்

மின்பற்றாக்குறை => மாற்றுச் சிந்தனை + மாற்று எரிபொருள்


“அறிவியலின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முனைந்தால், புதியதாகப் பத்துப் பிரச்சினைகள் உருவாகும்” இது ஜார்ஜ் பெர்னார்ட்ஷாவின் கூற்று. உலகெங்கும் அணுசக்திக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன. மின்சாரம் என்னும் இந்தப் பிரச் சினையைத் தீர்ப்பதற்குக் கண்டு பிடிக்கப்பட்ட அணுமின் உலைகள் எதிர்பார்த்தபடி மின்சாரத் தேவையையும் நிறைவேற்றவில்லை என்பது கூடுதல் பிரச்சினை. இந்தப் புரிதலின் தொடர்ச்சியாகத்தான் நாம் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தைப் பார்க்க வேண்டும்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூட வலியுறுத்தி மக்கள் நடத்திவரும் போராட்டம் இதுவரை இத்தேசம் காணாத ஓர் எழுட்சி. தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு நடத்தும் இந்தப் போராட்டம் இப்போது ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் போராட்டக்காரர்களைப் பிளவுபடுத்த முயல்கின்றன இந்த மக்கள் விரோத அரசுகள்.
ஒருபுறம் மக்கள் அணுசக்திக்கு எதிராகப் போராடுவதும் மற்றொரு புறம் மின்சாரம் வேண்டும் அதனால் கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று கூறி வேறு பகுதி மக்கள் வீதிக்கு வருவதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. இச்சமயத்தில் நாம் ஒரு முக்கியமான அம்சத்தை நினைவில்கொள்ள வேண்டும், “மின்சாரம் வேண்டும்” என்று கேட்கும் உரிமை மக்கள் அனைவருக்கும் உள்ளது. ஆனால் “கூடங்குளத்திலிருந்துதான் மின்சாரம் வேண்டும்” என்று கேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது. கூடங்குளம் பகுதியில் வாழும் மக்கள் அணுமின் உலையை - கூடங்குளம் மட்டும் என்றில்லை எந்தப் பகுதியில் வாழும் மக்களும் ஒரு திட்டத்தை - எதிர்த்தால் அதற்குச் செவி சாய்க்க வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் கடமை.

அணு உலைகள் பற்றியும் அதன் கொடூர விளைவுகள் பற்றியும் நாம் நன்றாக அறிந்திருந்தாலும் இரண்டு அம்சங்களை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். அணு விஞ்ஞானிகள், எல்லாம் அறிந்த காங்கிரஸ் கட்சியினர், அணு உலைகளைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள் (நிச்சயமாக அப்துல் கலாமைக் குறிப்பிடவில்லை!), அணு மின்நிலையம் வந்தால் இந்த நாடு சுபிட்சமாகிவிடும் என்றும் நம்பும் அதிமேதாவிகள், அணுசக்தி மட்டுமே நம்முடைய நாட்டை ‘வல்லரசு’ ஆக மாற்றும் என்று நம்பும் தேசபக்தர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள். இவர்கள் கூறுவதுபோல் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால் ஏன் எந்த நாடும் அணு உலை விபத்து இழப்பீட்டிற்கு ஒத்துகொள்ள மறுக்கிறது? மனசாட்சி உள்ளவர்கள் இந்தக் கேள்விக்கு விடையை அறிந்துகொண்டு பின்னர் அணு உலைகளை ஆதரியுங்கள்.

தொழில்நுட்பத்திலும் பேரிடர் மேலாண்மையிலும் மிகவும் தேர்ச்சி பெற்ற ஜப்பானே புகுஷிமா விபத்தைக் கையாள முடியாமல் திணறிய. போபால் அனுபவம் பேரிடரை எதிர்கொள்வதில் நமது லட்சணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது. கால்நூற்றாண்டைக் கடந்தும் நாம் இன்னும் போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியவில்லை. இந்த நாட்டின் ‘மேலாண்மையே’ பெரிய ‘பேரிடராக’ இருக்கும்போது நாம் எப்படிப் “பேரிடர் மேலாண்மை”யை மேற்கொள்ளப்போகிறோம்?

அணு உலைகள் வெறும் இயந்திரங்களே! உலகில் பழுதடையாத இயந்திரங்களே இல்லை எனலாம். ஆனால் இந்த இயந்திரம் பழுதானால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். கல்பாக்கத்தில் ஒரு விபத்து நடந்தால் நாம் சென்னையில் வாழும் கோடிக்கும் அதிகமான மக்களை எப்படி வெளியேற்றுவோம்? அதற்கு என்ன திட்டங்கள் இருக்கின்றன? அதற்கு எவ்வளவு பணம் செலவு ஆகும்? இந்தக் கேள்விகளுக்கு யாருக்கும் விடை தெரியாது. புகுஷிமாவில் இப்போது நடந்த விபத்தால் ஏற்பட்ட பொருள் செலவு சுமார் ஐந்து லட்சம் கோடி. இது போக அணு உலைகளைச் செயலிழக்கச் செய்ய சுமார் எண்பதாயிரம் கோடி செலவு பிடிக்கும் என்றும் சுமார் நாற்பது வருடங்களாகும் என்றும் உறுதியான அறிக்கைகள் சொல்கின்றன (இதனால்தான் எந்த அணு உலை தயா ரிப்பாளர்களும் இழப்பீடு தர மறுக்கிறார்கள்).

நாம் அனைவரும் அறிந்தபடி ஓர் அணு உலையின் ஆயுள் காலம் சுமார் நாற்பது ஆண்டுகள்தாம். அதற்குப் பிறகு நாம் அதைச் செயல் இழக்கச் செய்ய வேண்டும். ஆனால் நமது நாட்டில் தாராப்பூர் அணு உலை நிறுவி கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் நாம் இன்னும் அதைச் செயலிழக்கச் செய்வது பற்றிப் பேசவே ஆரம்பிக்கவில்லை. இந்தியாவில் “De-commissioning Authority of India” இல்லவே இல்லை. இதுதான் நாம் நம் அணுஉலைகளுக்குப் பாதுகாப்புத் தரும் லட்சணம்!
அணுசக்தி மோசமானதுதான் என்று ஏற்றுக்கொண்டாலும், மின்சாரத்துக்கு என்னசெய்வது என்ற கேள்வி எழாமல் இல்லை.

பொதுவாகவே நம் எல்லாக் காரியங்களுக்கும் இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று நல்ல காரணம். இன்னொன்று உண்மையான காரணம். அணுசக்தியைப் பொறுத்தமட்டில் கூறப்படும் நல்ல காரணம் மின்சாரம். உண்மையான காரணம் என்ன என்பது எல்லோரும் அறிந்ததுதான். அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது என்பது ஈயைக் கொல்வதற்குப் பீரங்கியைப் பயன்படுத்துவதைப் போல. தண்ணீரை நீராவி ஆக்குவதற்கு மட்டுமே அணுசக்தி பயன்படுகிறது. ஆனால் இந்த உலைகளில் வரும் கழிவுகளை என்னசெய்வது என்பதற்கு எந்த நாட்டிடமும் தொழில் நுட்பம் இல்லை. இந்தக் கழிவுகளை நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்க வேண்டும். நாம் என்ன தான் அணுசக்திக்கு எதிராக வாதங்களை வைத்தாலும் “மின்சாரம்” என்னும் ‘நல்ல காரணத்தை’ வைத்து இந்த அரசுகள் மக்களை நம்பவைத்து விடும். நாம் நமக்கு மின்சாரத்தை எவ்வாறு பெறமுடியும் என்பதைப் பார்ப்போம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த எரிசக்தித் தேவையில், மின்சாரத்தின் பங்கு என்பது வெறும் 18 சதவீதம்தான். இதற்குத்தான் நாம் இவ்வளவு போராடுகிறோம். இந்தியாவின் இன்றைய மின் உற்பத்தி திறன் 1,80,000 விகீ. இந்த அளவில் சுமார் 89, 000 விகீ அனல் மின்சார நிலையங்களில் இருந்து நமக்குக் கிடைகிறது. இது போக சுமார் 18, 000 விகீ இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தியும் டீஸலைப் பயன்படுத்தி 1, 800 விகீ மின்சாரமும் புனல் மின்நிலையங்களில் இருந்து 39, 000 விகீ மின்சாரமும், புதுப்பிக்கக்கூடிய சக்திகளில் இருந்து 19, 000 விகீ மின்சாரமும் அணுசக்தியைப் பயன்படுத்தி 4,780 விகீ மின்சாரமும் பெறப்படுகிறது. இதிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்ள முடிகிறது என்றால், இத்தனை ஆண்டுகள் (சுமார் 60 ஆண்டுகள்) கடந்தாலும், பல லட்சம் கோடிகள் செலவுசெய்த பின்னும் நம்முடைய மின்தேவையில் வெறும் 2. 7 சதவீதம் தான் இந்திய அணுமின் சக்திக் கழகத்தால் பூர்த்திசெய்ய முடிகிறது.

தமிழ்நாட்டில் (தமிழ்நாடு மட்டும்) உள்ள குண்டு பல்புகளை மாற்றிவிட்டு LED விளக்குகளைப் பயன்படுத்தினால் நம்மால்இந்த மின்சாரத்தை - 2, 000 MW - பெற முடியும். இதை இந்தியா முழுவதும் நிறைவேற்றினால் எவ்வளவு மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

மின்சாரத்தைப் பொறுத்தமட்டில், எவ்வளவு மின்சாரத்தைச் சேமிக்கிறோமோ அவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம் என்று அர்த்தம்.

இந்தியாவில் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் மோட்டார்கள் சுமார் 30 சதவீதம் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இவை 45 சதவீதம் குறைவான திறனில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் சுமார் 160 லட்சம் மோட்டார்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றைத் திறன் மேம்பட்ட மோட்டார்களாக (சுமார் 15 சதவீதம் இழப்பு) மாற்றினால் நமக்கு 14, 400 MW மின்சாரம் கிடைக்கும். இதற்கு ஆகும் செலவு (ஒரு மோட்டாருக்கு ரூ 4,000 என்று வைத்துக்கொண்டால்) சுமார் 6, 400 கோடி. இதே அளவு மின்சாரத்தை நாம் அனல் மின் நிலையத்தில் உற்பத்திசெய்வதற்கு ஆகும் செலவு (ஒரு விகீக்கு 5 கோடி) சுமார் 72,000 கோடிகள் ஆகும். இந்த சிறிய அளவிலான செலவு மூலம் நமக்கு மிச்சமாகும் பணம் 65,600 கோடி ரூபாய். இதைத் தவிர தொழிற் சாலைகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் திறனை மேம்படுத்தினால் நமக்கு நிறைய மின்சாரம் மிச்சமாகும். ஓர் உதாரணத்தை நாம் பார்க்கலாம். இந்தியாவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், சர்வதேசத் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் சுமார் 30 சதவிகித மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்துகின்றன. இந்த இயங்திரங்களைச் சர்வதேசத் தரத்துக்கு மேம்படுத்தினால் கூடுதலாகச் செலவழிக்கப்படும் மின்சாரத்தைச் சேமிக்கலாம். இந்தியாவின் வீடுகளில் உள்ள மின்னணுச் சாதனங்களைப் புனேவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வுசெய்தது. இந்த ஆய்வின் முடிவில் நாம் இப்போது பயன்படுத்தும் திறன் குறைந்த சாதனங்களை மாற்றிக் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் திறன்மிக்கச் சாதனங்களைப் பயன்படுத்தினால் சுமார் 1, 00, 000 MW மின்சாரம் சேமிக்கப்படும் என்று தெரியவந்தது.
இந்தியாவில் மின்சார உற்பத்தித் திறனை மேம்படுவதன் மூலம் நமக்கு 35 சதவீதம் மின்சாரம் மிச்சமாகும் என்று ‘ஒன்றும் படிக்காத சுப. உதயகுமார்’ சொல்லவில்லை, இந்தியா அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட Bureau of energy efficiency என்ற நிறுவனம் சொல்கிறது. இந்த மின்சாரம் தற்போது அமைக்கப்படவுள்ள அணு மின்நிலையன்களிலிருந்து பெறப்போகும் மின்சாரத்தின் அளவைவிட அதிகமானது. தவிர இந்தியாவின் AT&C (Aggregate Technical & Commercial loss) இழப்பு என்பது 32 சதவீதம். அதாவது மின்சாரத்தை உற்பத்திசெய்யும் இடத்திலிருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் இடத்திற்குக் கொண்டுசெல்லும் போதும் அதை விநியோகிக்கும் போதும் ஏற்படும் இழப்புகளும் மின்சாரத் திருட்டு ஏற்படுத்தும் இழப்பையும் சேர்த்து இந்த இழப்பு கணக்கிடப்படுகிறது.

நெல்லையில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘தேசாபிமானி’ ப. சிதம்பரம் அவர்கள் சீனா அப்படி முன்னேறுகிறது, இப்படி முன்னேறுகிறது என்று ஒவ்வொன்றுக்கும் சீனாவை உதாரணம் காட்டியே சொற்பொழிவாற்றினார். ஆனால் அவர் மறைக்கும் உண்மை சீனாவின் AT&C இழப்பு என்பது வெறும் 8 சதவீதம் என்பதை. தென்கொரியாவின் AT&C இழப்பு வெறும் 4 சதவீதம். இப்போது நமக்குப் புலப்படுகிறது, நாம் நம்முடைய முதலீட்டை எங்கே செய்ய வேண்டும் என்று? இந்தியாவின் இழப்பை 15 சதவீதமாகக் குறைத்தால் நமக்கு 20,000 MW அளவுக்கு உற்பத்தித் தேவை குறையும். இவை அனைத்தும் மக்களுக்கோ மண்ணுக்கோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதைத் தவிர நம்முடைய மின்னுற்பத்தி நிலையங்களின் செயல்திறன்களை மேம்படுத்தினால் இன்னும் நிறைய மின்சாரம் தயாரிக்க முடியும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றல் மூலங்கள் மூலமான மின்சாரத்தை மனித குலம் முழுமைக்கும் அளிப்பதற்கான இயக்கம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதிலும் குறிப்பாக 2012ஆம் ஆண்டு, “நீடித்து நிலைக்கும் (மின்) ஆற்றலை அனைவருக்கும் அளிப்பதற்கான சர்வதேச ஆண்டாக”க் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் யாரையும் பாதிக்காத வகையில் முக்கியமாகச் சூழலியலுக்கு இசைவான வகையில் நாம் எரிபொருளைத் தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சுமார் 5900 துணை மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 80 சதவீதம் துணை மாவட்டங்களுக்கு 15 முதல் 20 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தேவை. மிகக் குறைந்த அளவிலான இந்த மின்சாரத்தை அந்தந்தப் பகுதிகளிலேயே நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றல் மூலங்களிலிருந்து தயாரிக்க முடியும். இந்தக் குறைந்த அளவு மின்சாரத்தைச் சூரிய சக்தி, காற்றாலை, பயோ-மாஸ் மூலமாக ஒரு மேம்படுத்தப்பட்ட அமைப்பின் மூலம் பெறமுடியும்.

இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் இங்கிலாந்தில் இருந்த ஷூமாகர் எனும் பொருளியல் நிபுணர் ஒரு விஷயத்தை முன்வைத்தார், “சிறியது எப்போதுமே அழகானது” என்று. காந்தியின் சீடரும் ஊரகப் பொருளாதார நிபுணருமான J. C. குமரப்பா ஒரு சித்தாந்தத்தை முன்வைத்தார், “India does not require Mass production, it requires production by Masses” என்று, இந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையில் பார்த்தாலும் பரந்துபட்ட எரிசக்தி உற்பத்தியே சரியான தீர்வாக அமையும்.

அடிப்படையில் ஒரு கேள்வி? கல்பாக்கத்தில் மின்சாரம் தயாரித்து ஏன் கடப்பாவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்? எங்கே என்ன கிடைக்கிறதோ அதைவைத்து மின்சாரம் தயாரித்துக்கொள்ளலாமே? மின்சாரம் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு அதன் சுற்றுப்புறத்தில் பகிர்மானம் செய்யப்பட்டு அங்கேயே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த முயற்சியில்தான் சூழலுக்கு இசைவான மின்சாரத்தைப் பெற முடியும்.
சூழலுக்கு இசைந்தும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் மின்சாரத்தைத் தயாரிப்பதற்கு மாற்று வழிகள் இருந்தும் அதிகச் செலவு பிடிக்கும், எதிர்காலத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் அணுமின் நிலையங்களை ஆதரிப்பது சாமானிய மக்களின் அறியாமையே. ஆனால் அணுமின் நிலையங்களை அரசியல் கட்சிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் ஆதரிப்பது அறியாமையால் அல்ல. மக்களின் நலனை அடகுவைத்துப் பெரும் பொருளீட்டும் கயமைச் செயலே.

அணுசக்தியின் அறிவியல், பொருளியல், அரசியல் குறித்துப் பொது மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வும் ஒன்றுபட்ட எதிர்ப்புக் குரலுமே நமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பாக அமைப்பதற்கு உதவும்.

இந்தியாவில் முன்னர் பயன்படுத்தப்பட்ட காற்றாலைகள் சுமார் 200 கிலோ வாட் மின் உற்பத்தித் திறனைக் கொண்டிருந்தன. தற்போது சுமார் 2 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட காற்றாலைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எனவே தற்போது பயன்பாட்டில் உள்ள உற்பத்தித் திறன் குறைந்த காற்றாலைகளின் திறனை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு உற்பத்தித் திறன் மேம்பட்ட காற்றாலைகளைத் துணை மாவட்டம் ஒன்றுக்குச் சுமார் 10 வீதம் பொருத்தினாலே அப்பகுதியின் மின்சாரத் தேவையை நிறைவு செய்ய முடியும். இந்தக் காற்றாலைகள் அனைத்தும் தரையிலிருந்து சுமார் 150 அடி உயரத்தில் சுழல்கின்றன. இதையும் சற்று மாற்றி அமைத்து இரண்டு வேறு உயரங்களில் இரண்டு அடுக்குக் காற்றாலைகள் அமைக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளிகளிலேயே இந்தக் காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. இதன் கீழே காலியாக இருக்கும் வெற்றிடங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பானல்களை நிறுவலாம். அல்லது இதன் இடையே உள்ள இடங்களில் மாற்று எரிபொருளாகப் பயன்படத்தக்க தாவரங்களைச் சாகுபடி செய்ய முடியும்.

இவ்வளவு இருந்தும் நம்முடைய அரசுகள் ஏன் இந்த அணு உலைகளைப் பிடித்துத் தொங்கிகொண்டு இருக்கின்றன என்று ஆராய்ந்தால் நமக்கு ஒரு விடயம் புலப்படும். அணு உலைகள் மற்றும் பெரிய மின் திட்டங்கள் எல்லாம் பல லட்சம் கோடிகள் முதலீடு உடையவை, இவை அனைத்தும் பெரும் முதலாளிகள் செய்யக்கூடியவை. ஆனால் சூரிய சக்தி, காற்றாலை போன்றவை சின்ன அளவினாலான முதலீடு உள்ளவை. சிறு, குறுந்தொழில்நடத்துனர்தாம் இதில் ஆர்வம் காண்பிப்பார்கள். அரசுகளுக்குப் பெரு முதலாளிகள் மீதுதாம் அக்கறை. காரணம் சொல்லத் தேவை இல்லை. இதைத் தான் சங்க இலக்கியத்தில் நான்மணி கடிகையில் சங்கப் புலவன் படியுள்ளான்,
கல்லில் தோன்றும் கதிர்மணி
காதலி சொல்லில் தோன்றும் உயர் மதம் மற்றும்
உன் அருளில் தோன்றும் அறநெறி எல்லாம்
பொருளில் தோன்றிவிடும்

-கோ. சுந்தர்ராஜன்


சென்னையில் வசித்துவரும் பொறியாளரான கட்டுரையாளர் “பூவுலகின் நண்பர்கள்” என்னும் சுற்றுச்சூழலுக்கான அமைப்புச் செயல்பாட்டாளர்களில் ஒருவர்.