செவ்வாய், ஜனவரி 31, 2012

அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதல்: அரிமா வளவன் கடும் கண்டனம்.



நேற்று கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புக் குழுவைச்சார்ந்தவர்கள் திரு.உதயகுமார் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றனர் அப்போது இந்துமுன்னனியைச் சேர்ந்தவர்கள் காங்கிரசார் சிலரின் துனையோடு போராட்டக் குழுவினரை திட்டமிட்டே தாக்கியுள்ளனர். இது மதரீதியான மோதலாக உருவெடுக்கும் அப்போது அப்பாவி மக்களை இந்திய அரசின் துணையோடு அழித்தொழித்துவிடலாம் என்ற எண்ணத்துடனேயே இந்த வெறிச்செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. எனவே கொலைவெறி தாக்குதல் நடத்திய சதிகாரர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடன்குளம் அணுஉலையை முட தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் தமிழர்களத்தின் மாநில பொதுச்செயலாளர் அரிமாவளவன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தி ஊடகப் பிரிவு. தமிழர்களம் கரூர்.

கன்னட இனவெறி....

திங்கள், ஜனவரி 30, 2012

கூடன்குளம் மாதிரி எரிப்பு போராட்டம்!






31.01.2012
இடிந்தகரை.

காந்தி நினைவு நாளான நேற்று இடிந்தகரையில்கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து ஒப்பாரி போராட்டம் மற்றும் மாதிரி அணுஉலை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. தேச தந்தையே இந்த கொள்ளை கும்பல்களிடம் விட்டு விட்டு சென்று விட்டாயே என போராட்டம் நடத்தியவர்கள் குமுறி அழுது ஒப்பாரி வைத்தனர். மேலும் இன்று நடக்கும் பேச்சுவார்தையில் தாங்கள் பங்கேற்கபோவதில்லை என்றும் போராட்டக்குழுவின் சார்பில் தமிழர்களத்தின் தென் மண்டல பொறுப்பாளர் மை பா சேசுராசு தெரிவித்தார்.
செய்தி ஊடகப்பிரிவு, தமிழர்களம்.

செவ்வாய், ஜனவரி 17, 2012

கொதிநீரை ஊற்றி திரு. சாந்தவேலைக் கொன்ற மலையாளிகளை நீதியின் முன் அடையாளம் காட்டுக!

தமிழக அரசே, தமிழர்களின் அரசாகச் செயல்படுக!!
அரிமாவளவன் கடும் கண்டனம்!
ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற சென்னையைச் சேர்ந்த திரு. சாந்த வேலின் மீது பம்பையிலுள்ள மலையாள தேனீர் கடைக்காரனொருவன் தேனீர் போடுவதற்கு வைத்திருந்த கொதீநீரை ஊற்றிக் கொன்றிருக்கிற செய்தி இப்போதுதான் கசிந்து வருகிறது. கடந்த 11ஆம் தேதி நடந்த இந்தக் கொடூர நிகழ்வில் பாதிக்கப்பட்ட சாந்தவேலுவை அவரது குடும்பத்தார் சென்னை மருத்துவமனைக்குக் கொண்டுவந்து மருத்துவம் செய்திருக்கின்றனர். இருப்பினும் தமிழர் திருநாளாம் பொங்கலன்று அவர் இறந்து போயிருக்கிறார்.
மீளாத் துயரில் மூழ்கியிருக்கும் அவரது குடும்பத்தாருக்குத் தமிழர்களம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.
அதே வேளையில் பட்டப் பகலில் தமிழர் ஒருவரை இனவெறி கொண்டு பச்சைப் படுகொலை செய்திருப்பது தமிழர்களின் உள்ளங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயலன்றி வேறெதுவும் இல்லை.
சாந்த வேலைப் படுகொலை செய்த அந்த மாபாதகக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்! சாந்த வேலு உள்ளிட்ட 80 பேரை அங்கு அழைத்துச் சென்ற சந்திரன் என்ற மலையாளியையும் கைது செய்து உரிய முறையில் விசாரித்து உண்மைகளை வெளிக் கொணர வேண்டும்.
சாந்த வேலுவின் மரணம் குறித்து கள்ள மவுனம் காக்கும் கட்சிகளையும் ஊடகங்களையும் தமிழர்களம் கண்டிக்கிறது. இவ்வாறு தமிழர்களப் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

seithi : ஊடகப்பிரிவு. தமிழர்களம்.

ஞாயிறு, ஜனவரி 15, 2012

திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் !





கரூர்
16.01.2012
திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் !
கரூர் மாவட்ட தமிழ் அமைப்புகளின் சார்பில் திருவள்ளுவர் நாளான இன்று அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் திருக்குறளின் பெருமைகளையும், நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களையும் குறித்து பேசப்பட்டது . தாய் மொழி பற்றும் , தாய் மண் உரிமைகளை காப்பதும் இன்றைய அவசியமான தேவை என்பதை வலியுறுத்தியும் பேசப்பட்டது. நிகழ்வில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை .பழனியப்பன் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் திருக்குறள் நூலும் , எழுதுகோலும் , வழங்கினார் . மேலும் இந்த விழாவனது இன்னமும் சிறப்பாக தமிழர்கள் அனைவராலும் , குறிப்பாக இளைஞர்கள்தான் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார் . பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவர் பரமத்தி சண்முகம் , உலக தமிழ் கழகம் குரழகன் , வ உ சி பேரவை செயலாளர் , தமிழர் களத்தின் மாநில ஊடகபிரிவு செயலாளர் முருகானந்தம் ,சீனிவாசன் , பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் க .ந. சதாசிவம் , சாமியப்பன் , கோபால் , தி மு க வைச் சேர்ந்த தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் , இந்த நிகழ்வை தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பை சேர்ந்த வழக்குரைஞர் ராசேந்திரன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார் . முடிவில் பரமத்தி சண்முகம் நன்றி கூறினார் .

செய்தி ; ஊடகபிரிவு தமிழர் களம் .

சூரியசக்தி மின்சாரமே மாற்று தீர்வு: நார்வே விஞ்ஞானிகள்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை மற்றும் நார்வே ஓஸ்லோ பல்கலைக்கழகம் இணைந்து சூரியசக்தி மின்சாரம் குறித்த கருத்தரங்கத்தை நடத்தியது. இதில் பல்கலைக்கழகத்தின் மெட்டீரியல்ஸ் சயின்ஸ் துறை தலைவர் ஆர்.சரஸ்வதி வரவேற்றார்.

வேதியியல் துறை தலைவர் ராமு தலைமை தாங்கினார். முன்னாள் பேராசிரியர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். நார்வேயில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் எனர்ஜி டெக்னாலஜி மூத்த விஞ்ஞானி கராஜானவ், இத்தாலி பேராசிரியர் செர்ஜியோ பிஜ்ஜினி, லண்டன் பாத் பல்கலைக்கழக பேராசிரியர் பஞ்சமாதியா, நார்வே ஓஸ்லோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் பொன்னையா ரவீந்திரன், நவீன்கவுத் ஞானகோனா, லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய ஆய்வகத்தின் ஆன்ட்ரூஸ் நிக்கோல்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

"நாடு முழுவதும் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் 21 ஆம் தேதி வரை தேசிய எரிசக்தி சேமிப்பு வாரவிழா கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மின்சக்தியும் தேவைப்படுகிறது.

இதற்கிடையே ஜப்பானில் சுனாமி தாக்குதல், அணு உலைகளின் பாதிப்பு ஆகியவற்றால் மாற்று மின்சாரத்தை மக்கள் நாடுகின்றனர். ஆனால் அந்த மின்சக்தியானது பாதிப்பு இல்லாததாகவும், இயற்கையைச் சீரழிக்காமலும், செலவு குறைவாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

சூரியசக்தி மின்சார கருத்தரங்கில் கலந்து கொண்டோர்

சூரியசக்தி மின்சார கருத்தரங்கில் கலந்து கொண்டோர்
இந்த நிலையில், சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் வளர ஆரம்பித்துள்ளது. இதில் முதல் தலைமுறையில் ஒருமுனை படிவ சிலிகான் சூரிய செல்கள் மூலம் 10 சதவீதம் வரை மின்சாரம் தயாரிக்கப்பட்டது. 2 ஆம் தலைமுறையில் பலமுனை படிவ சிலிகான் மற்றும் பகுதி கடத்தி மூலம் மின்சக்தி தயாரிக்கப்பட்டது.

தற்போது 3 ஆம் தலைமுறையில் ஒளி மூலமாக மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய மின்சார தேவைக்குச் சூரியஒளியின் பங்கு முக்கியமானது. அதனைப் பயன்படுத்தி வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் தேவையைக் குறைந்த செலவில் நிறைவு செய்ய முடியும். அதற்கான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தொடங்கியுள்ளன."

இவ்வாறு அவர்கள் பேசினர்.

கருத்தரங்கில், உயர்ந்த செல்திறன் கொண்ட கலப்பின சூரிய மின்கலம், ஒளி பண்புகளில் ஹைட்ரஜனின் செல் விளைவுகள், சூரியஒளியில் மின் வேதியியல் ஆற்றல் சேமிப்பு, குறைந்த விலை சூரிய மின்கலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.

சூரிய ஒளியில் இயங்கும் பொருள்கள் குறித்த செயல்முறை கண்காட்சியும் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளைத் தொழில்நுட்ப அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவி பேராசிரியர் ஜெயந்திநாத் ஆகியோர் செய்து இருந்தனர்.



Thanks; www.inneram.com

திங்கள், ஜனவரி 09, 2012

கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான கருத்தரங்கு.






தமிழர் களத்தின் கிளை அலுவலகம் திறப்புவிழா.





புதுவை 08.1.2012

தமிழர் களத்தின் கிளை அலுவலகம் திறப்புவிழா.
கடந்த 08.1.2012 அன்று காலை புதுவையில் தமிழர்களத்தின் கிளை அலுவலகம் திரு.அரிமாவளவன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. நிகழ்விற்கு புதுவை மாநிலசெயலாளர் திரு.பிரகாசு தலைமைதாங்கினார். விழாவில் அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார். தமிழர்களத்தின் புதுவை மாநில பொறுப்பாளர்கள் தானே புயலின் பாதிப்பையும் கடந்து ஏற்கனவே முடிவு செய்திருந்த இந்த நிகழ்வை தள்ளிப்போடாமல் குறித்த காலத்தில் அலுவலகதிறப்பு பணியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் மைபா சேசுராசு, அமலரசு, தமிழ்மணி, உள்ளிட்ட தமிழர்கள நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

வெள்ளி, ஜனவரி 06, 2012

கேரள மசாலா கம்பெனியில் தமிழர்களுக்கு கொடுமை-இளைஞர்கள் கண்ணீர்!

வெள்ளிக்கிழமை, ஜனவரி 6, 2012,

நெல்லை: கேரள மசாலா கம்பெனியில் பணிபுரியும் தமிழர்களுக்கு ஊதியம் தராமல் கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அந்த நிறுவனத்தில் இருந்து தப்பி வந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் தங்களுக்கு ஊதியம் பெற்றுத் தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்கு நாச்சியபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடன் குருவிகுளம் புதூரை சேர்ந்த ராஜதுரை, சம்சியாபுரத்தை சேர்ந்த மணிகண்டன், கே ஆலங்குளத்தை சேர்ந்த அருண், கே புதூரை சேர்ந்த எம்ஜிஆர், தலைவன் கோட்டையை சேர்ந்த சுபாஷ், ஆகிய 6 பேரும் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள குமராபுரத்தில் உள்ள தனியார் மசாலா கம்பெனியில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர்.

மசாலா அரைப்பது, பாக்கெட் போடுவது, ஆகிய பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர். பெரியவர்களுக்கு 1 ஷிப்டுக்கு ரூ.200ம், சிறியவர்களுக்கு 1 ஷிப்டுக்கு ரூ.120ம் சம்பளம் தருவதாக கூறப்பட்டது. 1 ஷிப்டு 8 மணி நேரம் என்பதையும் தாண்டி கூடுதல் நேரம் வேலை வாங்கியுள்ளனர்.

இதையடுத்து இவர்கள் 6 பேரும் பொங்கல் பண்டிக்கைக்கு ஊருக்கு செல்வதாககூறி சம்பளம் கேட்டுள்ளனர். அதற்கு சம்பளம் தர மறுத்ததுடன் தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

அங்கிருந்து நேற்று முன்தினம் தப்பிய 6 பேரும் கையில் இருந்த பணத்துடன் ஹபா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வியாழக்கிழமை நெல்லை ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர்.

உடனடியாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற 6 பேரும் தங்களது ஊதியம் ரூ.40 ஆயிரத்தை பெற்றுத்தர கோரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்திரசேகரனிடம் மனு அளித்தனர்.

இதனையடுத்து அவர்கள் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது,

முல்லை பெரியாறு பிரச்சனைக்கு பிறகு கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மசாலா கம்பெனி உரிமையாளர் ஐசக் எங்களை தனி அறையில் அடைத்து வைத்து ஊதியம் தராமல் கொடுமைப்படுத்தினார். கூடுதல் நேரம் வேலை வாங்கினார். அங்கிருந்து தப்பினால் போதும் என்ற எண்ணத்தில் பொங்கலுக்கு ஊருக்கு செல்வதாக கூறினோம். அதற்கும் அனுமதிக்க மறுத்ததால் தப்பி வந்து ரயிலை பிடித்து நெல்லை வந்தோம். எங்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை பெற்று தர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
nandri thatstamil.com

மனித உரிமை இயக்கங்களும் தேசிய இனமும்!

முல்லைப் பெரியாறு சிக்கலில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களின் செயல்பாடு தமிழின உணர்வாளர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அத்துடன் தமிழ்த் தேசிய இனம் குறித்து இந்தியாவில் இயங்கும் மனித உரிமை இயக்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் அணுகுமுறை பற்றியும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நாமும் பிற தமிழின உணர்வாளர்களும் பெரிதும் மதிக்கும் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர். முல்லைப் பெரியாறு அணையை இடிக்கக் கோரி கேரளத்தில் 09.12.2011 அன்று நடைபெற்ற மனிதச் சங்கிலியில் பங்குபெற்றார். மலையாள இனவெறியர் அச்சுதானந்தனோடு கைகோத்து நின்றார்.

அதற்கு மேலும் கொச்சியில் 10.12.2011 அன்று செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என வலியுறுத்தினார் (தி இந்து, திருச்சி 11.12.2011).

தனது கருத்துக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் குறித்த ‘ரியோ பிரகடனத்தை’ எடுத்துக்காட்டினார். “முல்லைப் பெரியாறு அணையின் வலு குறித்த ஐயம் எழுந்தாலோ, அவ்வணை இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் எழுந்தாலோ அதனை இடித்து விடுவதுதான் சூழலுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பானது. இதற்கு அறுதியான முழு அறிவியல் ஆதாரத்தைக் கேட்கக் கூடாது.இதனை ரியோ டி ஜெனிரோ மாநாட்டு தீர்மானத்திறகு இணங்கவே வலியுறுத்துகிறேன். இப்பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது” என்றார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 1992 சூன் 14 அன்று வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த ஐ.நா மாநாட்டு அறிக்கையே ரியோ பிரகடனம் எனப்படுகிறது. இதன் 15-ஆவது கோட்பாட்டைதான் கிருஷ்ணய்யர் கூறுகிறார். “எந்த ஒரு நிகழ்விலும் கடுமையான அல்லது மீளமுடியாத பேரழிவு ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் இருக்குமானால் அதில் முழு அறிவியல் அறுதிப்பாடு இல்லை என்பதற்காக செலவுக் குறைவான மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு சுற்றுச்சூழல் அழிவைத் தடுக்கும் செயல்பாடுகளில் இறங்குவதைத் தள்ளிப்போடக்கூடாது.” என்பதே இக்கோட்பாடு.

முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டதாகவும், அது உடைந்து பேரழிவை ஏற்படுத்திவிடும் என்றும் கேரள அரசு கூக்குரல் எழுப்பியதற்கு பிறகு அதில் உண்மை இல்லை என்று தெரிந்தும் ‘முழு அறிவியல் அறுதிப்பாட்டிற்காக‘ காத்திராமல் அணையை வலுப்படுத்தும் மாற்று நடவடிக்கைகள் 1980 முதல் 1994 வரை தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. இதனை உச்சநீதிமன்றம் நியமித்த பல்துறை வல்லுநர் குழு விரிவாக ஆய்ந்தது. அணை வலுவாக இருப்பதை உறுதி செய்தது. அணை சீரமைப்புப் பணிகள் போதுமானவை என சான்றளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் உடனடியாக 142 அடி தண்ணீர் தேக்கலாம் என ஆணையிட்டது.

ரியோ கோட்பாடு வலியுறுத்துவது போல் முழு அறிவியல் ஆதாரத்திற்காக காத்திராமல் அணையை வலுபடுத்தும் நடவடிக்கை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அண்மையில் கேரள அரசின் தலைமை வழக்குரைஞரே கேரள உயர்நீதிமன்றத்தில் இதனை உறுதி செய்துவிட்டார்.

எனவே கிருஷ்ணய்யர் கூறுவது போல் ரியோ கோட்பாடு மீறப்படவில்லை. இனப்பகை உள்நோக்கத்தோடு மலையாள வெறியர்கள் கிளப்பிவிடும் ஐயங்கள் எந்த அனைத்து நாட்டு சட்டத்தின் முன்னும் செல்லத்தக்கதல்ல.

நீதிபதி கிருஷ்ணய்யருக்கு இது புரியாமல் இருக்காது. கேரளாவில் கிளப்பிவிடப்பட்டுள்ள மலையாள இனவெறி கிருஷ்ணய்யரையும் தொற்றிக்கொண்டுவிட்டது.

இச்செய்தியாளர் கூட்டத்தில் கிருஷ்ணய்யரோடு கலந்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி நாராயண குரூப் “கேரள அரசு இன்னும் தைரியமாக இருக்க வேண்டும்.புதிய நிலைமை எழுந்துள்ளதை கருத்தில் கொண்டு 1886 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட 999 ஆண்டுக்கான குத்தகை ஒப்பந்தத்தை கேரள அரசு ஒரு தலைப்பட்சமாக ரத்து செய்துவிட வேண்டும். ” எனக்கொக்கரித்தார்.

“இப்போதுள்ள நிலைமை (Rebus Sic Standibus)” என்ற அனைத்து நாட்டு சட்டக் கோட்பாட்டை இதற்கு துணைக்கு அழைத்துக் கொள்கிறார் நாராயண குரூப். இரு நாடுகளுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டதற்கு பிறகு முற்றிலும் புதிய சூழ்நிலை உருவாகிவிட்டால் அப்புதிய நிலைமைக்கு ஏற்கெனவே உள்ள ஒப்பந்தம் பொருந்தி வரவில்லை எனக்காரணம் கூறி ஒப்பந்தத்தின் ஒரு தரப்பு நாடு ஒரு தலைபட்சமாக அவ்வொப்பந்தத்தை ரத்து செய்யலாம் என இச்சட்டக் கோட்பாடு உரிமை வழங்குகிறது.

“இப்போதுள்ள நிலைமை (Rebus Sic Standibus)” என்பதற்கு சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் பெரும் புகழ் பெற்ற சட்ட அறிஞருமான ஹெர்ஷ் லாட்டர்பேட் தரும் விளக்கம் கவனிக்கத் தக்கது.(காண்க: The Function of Law in the International Community PP 271-272) போர் வலிமையை கொண்டு வெற்றி கொண்ட நாடு தோற்ற நாட்டின் மீது வலுவந்தமாக திணித்த ஒப்பந்தத்திற்கே இக்கோட்பாடு பொருந்தும் என்றும் சுதந்திரம் பெற்ற முற்றிலும் புதிய நிலையில் பழைய ஒப்பந்தத்தை அந்நாடு ஒரு தலைபட்சமாக ரத்து செய்துகொள்ள உரிமை உண்டு என்றும் பல்வேறு ஒப்பந்தங்களை விரிவாக ஆய்வு செய்து விளக்கம் அளிக்கிறார் ஹெர்ஷ்.

திருவாங்கூர் சம்ஸ்தானத்திற்கும், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்திற்கும் இடையே 1886-ஆல் செய்துகொள்ளப்பட்ட முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் எந்த அச்சுறுத்தலின் கீழும் செய்து கொள்ளப்பட்டதல்ல. மேலும் சுதந்திர இந்தியாவில் 1970-ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட துணை ஒப்பந்தங்கள் முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தை மறு உறுதி செய்தன. தங்களது மலையாள இனச்சார்பை மறைக்க சட்டவாதங்களை வி.ஆர்.கிருஷ்ணய்யரும், நாராயண குரூப்பும் முகமூடியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இச்செய்தியாளர் சந்திப்பில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் வர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது எனக்கூறி கடும் கண்டனத்தை வெளியிட்டார். தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு சென்ற தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர்கள் மலையாள வெறியர்களால் பலமுறை அவமானப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டனர்.பொதுப்பணித்துறை அடிக்கடி தாக்கப்படுகிறது. தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அச்சமின்றி அணைக்கு சென்று வரமுடியாத நிலை பல்லாண்டுகளாகவே இருக்கிறது. இது பற்றி ஒரு முறை கூட நீதிபதி கிருஷ்ணய்யர் கேள்வி எழுப்பியது கிடையாது.

கிருஷ்ணய்யர் மட்டுமல்ல; வடநாட்டு மனித உரிமை இயக்கத்தினர் பெரும்பாலானோர் தமிழினம் பாதிக்கப்படும் போது நம்பக்கம் இருப்பதில்லை.

ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும், தமிழக மீனவர்கள் சிங்கள் கடற்படையினரால் மீண்டும் மீண்டும் தாக்கப்படும் போதும் மனித உரிமை போராளிகளான மேதா பட்கர், அருந்ததி ராய், ராஜேந்திர சச்சார் போன்றவர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக வலுவாக குரல் கொடுத்தது இல்லை.

மனிதர்கள் இனமாக-தேசிய இனமாகத்தான் பெரிதும் வாழ்கிறார்கள். அனைத்து மனித உரிமைகளுக்கும் தாய் உரிமையாக தேசிய இன உரிமைகளே விளங்குகின்றன. ஆனால் இத்தாய் உரிமையில் பெரும்பாலான மனித உரிமை இயக்கங்கள் கருத்து செலுத்துவதில்லை. குறிப்பாக தமிழ்த் தேசிய இனத்தின் இன உரிமை பறிப்புகளில் இவ்வியக்கங்கள் பெரும்பாலும் “நடுநிலை” வகித்து ஒடுக்குமுறைக்கு மறைமுகமாக துணைபோகின்றன. 1991 காவிரி கலவரத்தின் போது இலட்சக் கணக்கான தமிழர்கள் கன்னட வெறியர்களால் அடித்து விரட்டப்பட்ட போதும் இதே நிலைதான் நிலவியது.

தமிழ்நாட்டில் இயங்கும் மனித உரிமை அமைப்புகள் தான் தமிழர் பிரச்சினைகளில் அக்கறை செலுத்துகின்றன. முல்லைப் பெரியாறு சிக்கல் தீவிரம் அடைந்ததில் இருந்து கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்த கரை போராட்டத்திற்கு மலையாள அறிவாளர்கள் வருவது குறைந்துவிட்டது என போராட்ட குழுவிற்கு நெருக்கமான நண்பர்களே குறைபட்டு கொள்கிறார்கள்.

தமிழர்களைப் பொருத்த வரை யார் எங்கே பாதிக்கப்பட்டாலும் சகோதரக் கரம் நீட்டுவது நமது இயல்பு. வங்காள தேச விடுதலைப் போராட்டம், பாலஸ்தீன போராட்டம், குஜராத் நிலநடுக்கம், மும்பை தாக்குதல் என எல்லா நேரத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தே வந்திருக்கிறது. ஏனெனில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழர் அறநெறி.

ஆயினும் தமிழ்த்தேசிய இன உரிமையிலிருந்தே இங்குள்ள தனிமனிதர்களின் மனித உரிமைப் பாதுகாப்பு தொடங்குகிறது. இதில் அக்கறை செலுத்தாத மனித உரிமை இயக்கங்கள் முரணற்ற மனித உரிமை இயக்கங்களாக விளங்கமுடியாது.

இன உரிமை பறிப்பிற்கு ஆளாகிற போதும், இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகிற போதும் ஒடுக்கும் இனத்திற்கு எதிராக தற்காப்பு தாக்குதல் நடத்துவதும், அடிப்படை மனித உரிமை தான். இதனை வன்முறை என்றோ, இனவெறி என்றோ புறந்தள்ளுவது மனித உரிமைப் பார்வையாகாது.

மனித உரிமை இயக்கங்கள் இந்த கவனத்தோடு செயலாற்றுவதே இன்றைய தேவை.

nandri : tamilar desiya tamilar kannottam.

செவ்வாய், ஜனவரி 03, 2012

குஜராத்திகளுக்கு ஹிந்தி அயல்மொழி: உயர்நீதிமன்றம்

ஆமதாபாத், ஜன.3: குஜராத்தி மொழியைக் கற்று, பேசிவரும் உள்ளூர் குஜராத்திகளுக்கு ஹிந்தி மொழி, அயல்மொழிதான் என்று குஜராத் உயர்நீதிமன்ற பெஞ்ச் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.
நீதிபதி வி.எம்.சஹாய், நீதிபதி ஏ.ஜே.தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எதிரான மனு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில், நெடுஞ்சாலைகளுக்காக நிலத்தைக் கொடுத்தவர்களூக்கு இழப்பீடு தொடர்பான விசாரணை நடைபெற்றது.
ஒரு உள்ளூர் தினசரியில், நெடுஞ்சாலை ஆணையம், நிலத்தைக் கொடுத்த உள்ளூர் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு விளக்கம் அளித்து விளம்பரம் வெளியிட்டது. அதுவும் ஹிந்தி மொழியில். இதனால் இந்த விளம்பரம் தங்களுக்குத் தெரியவரவில்லை என்று உள்ளூர் மக்களின் சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற பெஞ்ச், விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஹிந்தி மொழி அறிவிக்கை, உள்ளூர் குஜராத்திகளைப் பொருத்த வரையில் அயல்மொழிதான்... என்று கூறியது.

nandri Dinamani

திங்கள், ஜனவரி 02, 2012

மலையாள குசும்பு ....

02.1.2012
ராஜாகாடு ,

புதுவையிலிருந்து சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் இன்று காலை தாங்கள் செல்லும் வழியில் ராஜாகாடு என்ற ஊரில் இருக்கும் ஒரு மலையாளி உணவகத்தில் உணவருந்த சென்றனர் . அப்போது கடையில் உணவு பரிமாறுபவர் ஐயப்ப பக்தர்களை வரவேற்று உட்கார வைத்து இலையை போட்டு தண்ணீர் கொண்டுவந்து வைத்துவிட்டு உள்ளே சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை . தமிழகத்திலிருந்து சென்ற பக்தர்கள் மிகவும் குழம்பிய நிலையில் ஏன் இலையை போட்டுவிட்டு உணவு கொடுக்கவில்லை என்று கடை உரிமையாளரிடம் கேட்டதற்கு நீங்கள் தண்ணீருக்காக தானே எங்களிடம் சண்டை போடுகிறீர்கள் அதனால் உங்களுக்கு நாங்கள் பரிதாபப்பட்டு தண்ணீர் கொடுத்துள்ளோம் ஒழுங்காக குடித்துவிட்டு சென்றுவிடுங்கள் என்று எள்ளி நகையாடினார். அதை அங்கிருந்த அத்தனை மலையாளிகளும் கண்டு ஏளனப்படுத்தி கைகொட்டி சிரித்து கேவலப் படுத்தியுள்ளனர் . இந்த சம்பவத்தால் மனம் நொந்த நிலையில் அவர்கள் பட்டினியுடன் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர் .
செய்தி : ஊடகபிரிவு தமிழர் களம் .

முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் ஒரு பாதிப்பும் இல்லை- நிபுணர் குழு: கேரள வாதம் தூள் தூள்!

திங்கள்கிழமை, ஜனவரி 2, 2012,

டெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐந்து பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழு பல்வேறு நிபுணர்களின் ஆய்வறிக்கைகள் மற்றும் நேரடிய ஆய்வு முடிவுகளை வைத்து விசாரித்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கேரள அரசு புகார் கூறியதைத் தொடர்ந்து சமீபத்தில் தத்தே, தத்தா ஆகிய நிபுணர்களைக் கொண்ட குழுவை இந்த ஐவர் குழு அணைக்கு நேரடியாக அனுப்பி ஆய்வு செய்தது. அப்போது தங்களது இஷ்டத்திற்கு நடக்குமாறு குழுவினரை கேரளத் தரப்பு வலியுறுத்தியது. ஆனால் அதை நிபுணர் குழு நிராகரித்து விட்டது. இதனால் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

இந்தநிலையில் இன்று ஐவர் குழு கூடியது. அப்போது குழு உறுப்பினர்களுடன் தமிழக, கேரள வக்கீல்களும் ஆஜராகினர். அப்போது தத்தே, மேத்தா ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் தாங்கள் சமீபத்தில் அணைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது குறித்த விவரங்களையும், முடிவுகளையும் இரு நிபுணர்களும் தெரிவித்திருந்தனர். அதில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் மிக மிக சிறிய அளவிலேயே ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால், அணைக்கு நிலநடுக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தமிழகமும் இதைத்தான் கூறி வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய அரசும் கூட, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மிக மிக குறைந்தஅளவிலான நிலநடுக்கமே ஏற்பட்டதாகவும், அவை கூட பதிவாகவில்லை என்றும் விளக்கியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் கேரள அரசுதான் பிடிவாதமாக நிலநடுக்கத்தால் அணை உடையும் என்று கிளிப்பிள்ளை போல சொன்னதையே திரும்பத் திரும்பச்சொல்லி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

nandri thatstamil.com