சனி, மார்ச் 31, 2012

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு கனடாவில் எதிர்ப்பு

[ புதன்கிழமை, 28 மார்ச் 2012, 01:39.22 PM GMT +05:30 ]
கனடாவாழ் தமிழ் மக்கள் சார்பில், 'கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு' போராட்டக்குழுவினருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் கனடாவில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன்பு அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வினைக் கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஒழுங்கமைத்திருந்தனர்.
மோசமான காலநிலையையும், உறைபனிக் குளிரையும், 'ஓ' வென்று அடித்த குளிர் காற்றையும் மக்கள் எதிர்கொண்டாலும் கூடங்குளத்தில் பெருத்த அடக்குமுறைக்கு மத்தியிலும் இந்திய அரச இயந்திரத்தை எதிர்த்துப் போராடும் நம் தமிழ் உறவுகளுக்கு எமது ஆதரவைத் தெரிவித்தே ஆகவேண்டும் என்ற உறுதியோடு கனடியத் தமிழ் உறவுகள் இவ் அடையாள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது பெருமளவு வேற்றின மக்கள் நிகழ்விடத்துக்கு ஆர்வமாய் வந்து கூடங்குளம் அணு உலை குறித்தும், அதன் பாதிப்புக் குறித்தும் போராட்டக் குழுவினரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.
நிகழ்விடத்தின் இருமருங்கிலும் உள்ள தெருவில் இறங்கி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, இடிந்தகரை மக்கள் போராட்டம் தொடர்பான செய்திகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை தமிழ் உறவுகள் வேற்றின மக்களுக்குக் கையளித்தனர்.
ஆர்ப்பாட்ட ஒருங்கினைப்பாளர்களில் ஒருவரான அருண்மொழி வர்மன் தெரிவிக்கையில், இயற்கை வளங்களைக் கொண்டே போதுமான மின்சாரம் பெறக்கூடிய வாய்ப்பு இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது. அப்படி இருந்தும் பேரழிவு தரக்கூடிய அணு உலையில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று தெரிவித்தார்.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தை சேர்ந்த திரு. தங்கவேலு (நக்கீரன்) அவர்கள் கூறுகையில், 'ஜப்பான் போன்ற நாடுகளே புக்கிஷிமா அணுக் கசிவு போன்ற அபாயகரமான சூழலை எதிர்கொள்ளமுடியாமல் அணு உலைகள் அனைத்தையும் மூடியுள்ள நிலையில் இந்திய அரசு தமிழ் மண்ணில் இது போன்ற அணு உலையைத் திறக்க எத்தனிப்பது விவாதத்துக்குரியது. புக்கிஷிமா மக்களின் அச்சம் நியாயமானது. இவ்வுலகம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.
தமிழறிஞர் திரு. சிவம் பரமநாதன் அவர்கள் தெரிவிக்கையில், 'நாங்களும், அவர்களும் ரத்த உறவு கொண்ட மக்கள். அவர்களால் தமது துன்பத்தை உலகுக்கு எடுத்துரைக்கமுடியாத வகையில் இந்திய இறையாண்மை ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறது.
அவர்கள் துன்பத்தை உலகுக்கு எடுத்துரைப்பது எம் வரலாற்றுக் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றவே நான் இங்கு வந்துள்ளேன்' என்றார்.
அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களின் அறப்போராட்டத்தினைக் காவல்துறையின் வன்முறைகொண்டு அடக்கமுயலும் இந்திய நடுவண் அரசு மற்றும் தமிழக அரசுகளின் அராஜகத்தைப்போக்கைக் கண்டித்தும், பேரவலத்தை ஏற்படுத்தவல்ல அணு உலை எமது தமிழ் மண்ணுக்கு வேண்டாம் என்று குரல்கொடுத்துக் கடந்த 23 ஆண்டுகளாகப் போராடிவரும் இடிந்தகரை கிராம மக்களுக்கும் அணு உலை எதிர்ப்புப் போராளிகளுக்கும் எமது தார்மீக ஆதரவைத் தெரிவித்தும், இடிந்தகரை மக்களின் போராட்டத்தை முற்றிலுமாக இருட்டட்டிப்புச் செய்யும் இந்திய ஊடகங்களை கண்டித்தும் இந்நிகழ்வில் குரல் எழுப்பப் பட்டது.
இந்நிகழ்வில் 'அணு உலை வேண்டாம்' 'எங்கள் குழந்தைகளே எதிர்காலம், அவர்களுக்கு இயற்கையைப் பரிசளிப்போம்', 'உயிரைக் கொல்லும் அணு உலை வேண்டாம்' 'இந்திய அரச படையே.. கூடங்குளத்தை விட்டு வெளியேறு' 'இனியொரு புக்கிஷிமா, செர்நோபில் வேண்டாம்', 'எங்கள் குழந்தைகளை வாழவிடுங்கள்' 'அணு உலை: தவறான முடிவு' போன்ற பல பதாகைகள் ஏந்தப்பட்டிருந்தன.
புலம்பெயர் தமிழர்களாகிய நாம் இடிந்தகரை மக்களின் போராட்டத்தை உலக அரங்குக்கு வெளிக்கொணர்ந்து அம்மக்களின் குரலாய்ச் செயல்படுவோம் என ஆர்ப்பாட்டத்தில் உறுதி எடுக்கப்பட்டது.
இதற்கு முன்பு, இந்நிகழ்வுக்கு 'க்ரீன்பீஸ் கனடா' என்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போராட்டக் குழுவினருக்குத் தமது தார்மீக ஆதரவைத் தெரிவித்த 'கிரீன்பீஸ் அமைப்பினர், கூடங்குளம் அணு உலைக்கு எதிராகக் கனடா முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அமைப்புகளைத் தாம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
கடந்த 1979 ஆம் ஆண்டு முதல்கொண்டே சுற்றுச் சூழல் குறித்த அக்கறையோடு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, உலக அளவில் 40 நாடுகளில் செயல்படுகிறது என்பதும், 2.9 மில்லியன் தொண்டர்களைக் கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், மார்ச் 27, 2012

இடிந்தக்கரை போராடும் மக்களின் கோரிக்கைகள்!!!

தமிழக அரசு துரோகம் செய்துவிட்டது: உதயகுமார்

தமிழக அரசு துரோகம் செய்துவிட்டது: உதயகுமார்
செவ்வாய்க்கிழமை, மார்ச் 27, 2012,

- கூடங்குளத்திலிருந்து கே. என். வடிவேல்

கூடங்குளம்: தமிழக அரசு துரோகம் செய்துவிட்டதாக கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.


தமிழகத்தில் கடும் மின்வெட்டால் புழுங்கிக் கொண்டிருக்கின்ற தமிழக மக்கள் ஒவ்வொரு நிமிடமும் விவாதித்துக் கொண்டிருப்பது கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறந்தது சரியா? தவறா ? என்பது பற்றி தான்.

கூடங்குளம் அணு உலை குறித்து ஒரு பிளாஷ் பேக்...

1988ல் அணு மின் நிலையம் அமைப்பதற்கான இந்திய-ரஷ்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. 1998ல் கூடங்குளத்தில் அணு உலை அமைப்பது என முடிவானது. 2001ல் இதற்காக ரூ.13,121 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2002ல் அணு உலைக்கான காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. 2011ல் அணு உலைக்கான பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.

கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று விஞ்ஞானிகள் உறுதியளித்தனர். மத்திய, மாநில அரசுகளின் ஆய்வுக் குழுக்களும் இதையே தெரிவித்தன. இந்த நிலையில் தான் கடந்த 7 மாதங்களாக அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

கூடங்குளத்தில் உள்ள சிறுவர்கள், பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள் என பலரும் அணுஉலை வேண்டவே வேண்டாம் என்று தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி இடிந்தகரையில் ஆரம்பித்த இந்த மக்களின் அறவழிப் போராட்டம் மேலும் மேலும் உக்கிரமாகிக் கொண்டே போக, ராதாபுரம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

ரஷ்ய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியிருந்தார். இதனை போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்காக அப்துல் கலாம் இந்தூர் சென்றார்.

அப்போது கல்லூரி வளாகத்துக்கு அப்துல் கலாம் வந்தபோது, ஆசாதி பச்சோ அந்தோலன் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பலர் திடீரென அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். எதிர்பாராத இந்த சம்பவத்தால் கல்லூரி நிர்வாகிகளும், போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து கருப்புக் கொடி காட்டிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம் என்ற பதட்டத்தில் உள்ள இடிந்தகரையில் உள்ள போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரிடம் பேசினோம்.

போராட்டம் எந்த நிலையில் உள்ளது ?

கடந்த 16 நாட்களாக 7 பேர் உண்ணாவிர போராட்டத்தை மன உறுதியுடன் நடத்தி வருகின்றனர்.

போராட்டக் குழுவின் கோரிக்கை என்ன?

நாங்கள் அரசிடம் 5 கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.

1. கைது செய்யப்பட்ட போராட்டக்குழுவினர் அனைவரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.

2. போராட்டக்குழுவினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குளை வாபஸ் பெற வேண்டும்.

3. இந்த பகுதியில் மக்கள் நலன் கருதி நிலவியல் ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும்.

4. அதே போல நீரியல் ஆராய்ச்சியும் நடத்த வேண்டும்.

5. ரஷ்யா-இந்தியா போட்டுள்ள ஒப்பந்தத்தில் ஆபத்து ஏற்படும்போது, பொது மக்களுக்கு வழங்க உள்ள ஒப்பந்த நகலை வழங்க வேண்டும்.

கூடங்குளம் அணு உலை ஆரம்பிக்கும்போதே அதை தடுத்து இருக்கலாம். அதை விடுத்து பல கோடி ரூபாய் முதலீடு போட்டுவிட்டு, அணு உலை துவங்கும் நேரத்தில் தடுப்பது முறையா என காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும், மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றதே?

கடந்த 1988ம் ஆண்டு கூடங்குளம் அணுஉலை ஒப்பந்தம் போடப்பட்டது. 1989ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நாகர்கோவில் வருவதாக இருந்தார். ஆனால் மே 1ம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி சிலர் குண்டடிபட்டனர். இதனால் அவர் நாகர்கோவில் வரவில்லை. தனது பயணத்தையே ரத்து செய்தார். இதனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

ஆனால் அடுத்து வந்த தேவே கவுடா அரசு தான் 2002ல் இந்த திட்டத்தை தூசு தட்டி எடுத்தது. அப்போது முதலே சிறிய அளவிலும், பெரிய அளவிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. அப்போது இந்த மீடியாக்கள் இல்லை என்பதால் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. தற்போது உண்மையை வெளிக்கொண்டுவர பல மீடியாக்கள் இருப்பதால் மக்களிடம் விழுப்புணர்வு அதிகமானது. குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை வெடித்து பல லட்சம் பேர் பலியானார்கள். பல ஊர்கள் நாசமாகின. அப்பொழுதுதான் உலகமே விழிப்புணர்வு பெற்றது.

இந்த போராட்டத்தில் நீங்கள் அக்கரை கொள்வது ஏன்?:

என் தாத்தாவும் பாட்டியும் புற்றுநோயால் இறந்து போனார்கள். குமரி மாவட்டம் முழுவதும் புற்றுநோய் பரவி வருகிறது. இந்தப் பேரழிவு நமது சந்ததியினருக்கும் வந்து விடக்கூடாது. போபால் விஷவாயு கசிவு விஷயத்தில் ஆன்டர்சன் எப்படி பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டாரோ, அதேபோல இங்கும் நடக்குமானால், அணு உலையைச் சேர்ந்த ரஷியாக்காரர்கள் அவரவர் நாட்டுக்குப் போய் விடுவார்கள். நாம் தான் தெருவில் நிற்போம்.

கூடங்குளம் அணு உலையில் விபத்து நடந்தால் நாகர்கோவில் வரையுள்ள 15 லட்சம் மக்கள் இரண்டு மணி நேரத்தில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசால் இது முடியுமா ?

நானும், என் மனைவியும் வெளிநாட்டில் பணி புரிந்தவர்கள். எங்களுக்கு இப்போது பணம் தேவையில்லை. மக்கள் நலனே முக்கியம். அதற்காகவே எங்களது உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றோம்.

உங்கள் போராட்டத்தை காவல்துறை ஒடுக்க முயல்வதாக நினைக்கிறீர்களா?

ஆம். காவல்துறை அராஜகம் அதிக அளவில் தான் உள்ளது. குறிப்பாக எங்களை கைது செய்ய வேண்டும் என்று அது துடிக்கிறது. இடிந்தகரையில் இருப்பவர்களை வெளியே விடாமலும், வெளியே இருந்து உள்ளே வருபவர்களை தடுப்பதுமாக உள்ளனர். மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கூட தடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சரி, நீங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது என்ன உறுதி கொடுத்தார். அதை அவர் நிறைவேற்றினாரா?

அவர் எங்களுக்கு எந்த உறுதிமொழியையும் தரவில்லை. எங்கள் தரப்பு கருத்தை கேட்டார். நாங்களை அதை விளக்கமாக சொன்னோம். அவ்வளவு தான்.

உங்கள் பகுதியில் உள்ள சில பஞ்சாயத்து தலைவர்களை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறித்து உங்கள் கருத்து?

அரசு இது போன்று ஏதாவது செய்து போராட்டக்காரர்களை பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. பன்னாட்டு முதலாளிகளுக்காக வேலையாள் போல வேலை செய்கின்றது. இந்த பகுதி வளர்ச்சிக்கு என 13 பஞ்சாயத்துக்களுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கி, அதை பிரித்துக் கொடுக்கும் கூட்டம் நடத்தியுள்ளது. இதில் கூடங்குளம், ஊத்தங்குளி, விஜயபாதி போன்ற பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. மேலும், மற்ற பஞ்சாயத்து தலைவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவிட்டு வந்துள்ளனர். இது போன்ற செய்கை மூலம் மக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆபத்தான திட்டங்களை அரசே கொடுப்பது எவ்வளவு வேதனை என்பதை நினைத்துப் பாருங்கள்.

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என மத்திய அமைச்சர் நாராயணசாமி 100 சதவீதம் உறுதி அளித்துள்ளார். ஆனால் நீங்கள் தான் பிடிவாதம் பிடிப்பதாக கூறப்படுகின்றதே?

ஜனநாயக நாட்டில் தான் இது போன்ற திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றது. மக்கள் கேட்பது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. உயிர் சம்பந்தப்பட்டது. டெல்லியில் உள்ளவர்களும், சென்னையில் உள்ளவர்களும் பாதுகாப்பு என்று சொன்னால் உடனே பாதுகாப்பு கிடைத்துவிடாது. அதற்காக பல பணிகளை முறையாக செய்ய வேண்டும்.

ஆனால் இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர் நாராயணசாமி திசை திருப்புகிறார். நாங்கள் எல்லாம் தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார். இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருப்பது நாங்கள் அல்ல. மத்திய அரசும், மாநில அரசும் தான்.

கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு ஒரு சேர இருப்பதால் உங்கள் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கவைக்க ஏதாவது முயற்சி செய்கிறீர்களா?

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேச வேண்டும் என்றால் பணம் கொடுத்தால் தான் பேசுவார்கள் என்று ஒரு காலத்தில் இருந்தது. நாடாளுமன்றத்தில் உள்ள பல உறுப்பினர்கள் கோடீஸ்வர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் பேராட்டக்காரர்களை தேடி வர வேண்டுமே தவிர போராட்டத்தில் பசியோடும், பட்டினியோடும் இருப்பவர்கள் எப்படி போய் அவர்களை சந்திக்க முடியும். ஏழை, எளிய மக்கள், தலித் மக்கள் போன்றவர்கள் வாழ்வாதாரத்திற்காக நடத்தும் போராட்டம் எல்லாம் அவர்களுக்கு தெரியாமல் போனது துரதிஷ்டம்.

கூடங்குளம் அணுஉலையை திறக்க வேணடும் என தமிழகத்தின் மிக முக்கிய கட்சியான திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

அவர் தமிழ் மக்களுக்கான தலைவர் அல்ல. தனது குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி செயல்படும் தலைவர். அவரைப் பற்றி தற்போது பேசாமல் இருப்பது நல்லது.

தங்களுக்கு சொந்தமான பள்ளிக்கூடத்தை ஒரு மர்ம கும்பல் இடித்துள்ளது. அதன் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்களா ?

ஏழை எளிய மக்களுக்கு கல்வி கொடுக்கும் ஒரு கல்விக்கூடத்தை ஒரு தேச விரோத கும்பல் இடித்து நாசம் செய்துள்ளது. இது குறித்து காவல் துறையில் புகார் கொடுத்தோம். ஆனால் புகார் மீது விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இது வேதனையான செயல்.

தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?

தமிழக அரசுக்கு நாங்கள் தேவைப்பட்டபோது எங்களுக்கு உதவி செய்தது. எங்களது உபயோகம் முடிந்துவிட்டாதல் எங்களை முடிக்க பார்க்கின்றனர். எங்களை பொறுத்தவரை தமிழக அரசு துரோகம் செய்துவிட்டது.

தமிழக காவல்துறையின் செய்லபாடு எப்படி உள்ளது ?

காவல்துறை ஆரம்பத்தில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது. தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்த பிறகு எங்களது போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது. அடக்குமுறையை கையாள்கிறது.

பொதுமக்களுக்கு நீங்கள் விடுக்கும் கோரிக்கை ஏதாவது உள்ளதா?

மத்தியிலும், மாநிலத்திலும் பணக்காரர்கள் தான் ஆட்சி செய்கின்றனர். அவர்கள் மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுவதில்லை. உலக பணக்காரர்கள் லாபம் அடையத் தான் பணியாற்றுகினறனர்.

அதனால் மிகவும் ஆபத்தான அணுஉலை போன்ற திட்டங்களை எல்லாம் மக்கள் தலையில் கட்டுகின்றனர். மக்கள் பெருக்கம் உள்ள சென்னை போன்ற இடங்களில் சிறிய விபத்து என்றால் கூட அவர்களை காப்பாற்ற முடிவதில்லை. அப்படி இருக்கும் போது மிகப் பெரிய ஆபத்தை பல லட்சம் மக்கள் உயிரோடு விளையாடும் அணுஉலை போன்ற திட்டங்களில் ஏற்படும் ஆபத்தில் இருந்து அரசு மக்களை எப்படி காப்பாற்ற போகின்றது. மின்சாரம் தயாரிக்க நாட்டில் பல வழிகள் உள்ளது. அதை கண்டுபிடித்து செயல்படுத்த வேண்டும். வெள்ளைக்காரன் வழியில் சென்று அனைவரையும் அரசு அடிமைப்படுத்த வேண்டும் என நினைப்பது தவறானது.

எனவே, தமிழக இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். இல்லை எனில் நமது உரிமை எல்லாம் பறிபோன பிறகு சிந்தித்து பயன் இல்லை. எதிர்காலத்திற்கு தேவையான பாதுகாப்பை இப்போதே உறுதிபடுத்த வேண்டும். மிகவும் ஆபத்தான அணுஉலைகள் இப்போது தேவையில்லை என்பதை வலியுறுத்த வேண்டும் என்றார்.

Nandri : Thats tamil.com, KN Vadivel

கலாமுக்கு கருப்புக் கொடி!!!

இந்தூர்: கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்து வருவதை கண்டித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மத்திய பிரதேசத்தில் கருப்பு கொடி காட்டப்பட்டது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரஷ்ய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அணு உலை மிகவும் பாதுகாப்பானது என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியிருந்தார். இதனை கூடங்குளம் போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்காக அப்துல் கலாம் நேற்று இந்தூர் வந்தார். கல்லூரி வளாகத்துக்கு அப்துல் கலாம் வந்தபோது, ஆசாதி பச்சோ அந்தோலன் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பலர் திடீரென கலாமுக்கு எதிராக கருப்பு கொடி காட்டினர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எதிர்பாராத இந்த சம்பவத்தால் கல்லூரி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விரைந்து செயல்பட்டு கருப்பு கொடி காட்டிய 10 பேரை கைது செய்தனர்

திங்கள், மார்ச் 26, 2012

கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது?

கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது?
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17794%3A2011-12-14-18-09-35&catid=1%3Aarticles&Itemid=264

ஞாயிறு, மார்ச் 25, 2012

இடிந்தகரையிலிருந்து (மார்ச் 25) உதயகுமார் அறிக்கை!

இடிந்தகரையிலிருந்து (மார்ச் 25) உதயகுமார் அறிக்கை

அன்பு நண்பர்களே!

புஷ்பராயனும், நானும் இன்னபிற 12 நண்பர்களும் மிகவும் சோர்வாகாவும், பலவீனமாகவும் ஆகி வருகின்றோம், ஆனால் இன்றும் நாங்கள் மக்களுடன் அமர்ந்து பேசும் பலத்துடனே உள்ளோம். தொடர்ச்சியான (சாகும்வரை) உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கி இன்றோடு ஏழாவது நாள் ஆகிவிட்டது. மாநில அல்லது மத்திய அரசில் இருந்து யாரும் வந்து எங்களைப் பார்க்கவோ, எங்களிடம் பேசவோ இல்லை. 23ஆம் திகதி ஒரு மருத்துவக் குழு எங்களது உடல்நிலையைப் பரிசோதிக்க வந்தது. ஆனால் மார்ச்19லிருந்து இங்கு 10,000த்திற்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து குழுமி வருகின்றனர். இவர்களுக்கு உதவ எந்த ஒரு சுகாதார அலுவலரும் இங்கு வரவேயில்லை. 144 தடையுத்தரவு இன்னும் இங்கு அமலில் இருப்பதால் மக்கள் இங்கேயே தூங்கி வருகின்றார்கள். அவர்களுக்காக ஒரு எளிய உணவை இங்கு இடிந்தகரையில் உள்ள நண்பர்களே சமைத்துத் தருகின்றார்கள். புனித லூர்து ஆலயத்தைச் சுற்றியுள்ள இந்த கால்பந்து மைதான அளவுள்ள இடத்தை விட்டு அவர்கள் வெளியே செல்ல அஞ்சுகின்றார்கள். எனது, புஷ்பராயனுடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்து நாங்கள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்வோம்; அப்பொழுது எங்களை கைது செய்யலாமென காத்திருக்கின்றார்கள் காவல்துறையினர். எவ்வளவு குரூரமாகவும், மக்களுக்கு எதிராகவும் நம் அரசுகள் மாறிவிட்டன!

அணுஉலையினால் தங்களது இடங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்தவர்களுக்காக அரசு ஒதுக்கியுள்ள 500 கோடி ரூபாயை தமிழக அரசு இங்குள்ள 13 உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர்களைக் கூட்டி எப்படி அந்தத் தொகையை செலவு செய்யலாம் என திட்டமிட்டுள்ளது. மாநில காவல் துறை மக்களைக் கைது செய்வதையும், பொய்வழக்குகள் போடுவதையும் தொடர்ந்து வருகின்றது. நேற்று கூடங்குளத்தில் மூவரை கைது செய்ய முயன்று முடியாமல் வாரண்டை மட்டும் கொடுத்துச் சென்றுள்ளார்கள். சில கடற்கரை கிராமங்களுக்குச் சென்ற காவல்துறை இயல்புநிலை திரும்பிவிட்டதெனக் காட்டுவதற்காக அங்குள்ள மீனவர்களை மீன்பிடிக்கச் செல்லக் கட்டளையிட்டுள்ளார்கள். அதேபோல இடிந்தகரை மக்களுக்கு இங்கிருந்து எந்த உணவுப்பொருளும் படகில் எடுத்துச் செல்லக்கூடாதென்றும், அவ்வாறு எடுத்துச் சென்றால் வழக்கு பதியப்படும் என்றும் மிரட்டியுள்ளார்கள். மக்கள் இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சுவதில்லை.

இந்தப் போராட்டமானது (எங்கள் எதிரிகளின் பார்வையில் இது “போர்”) பணக்கார, பிரபலமான, அதிகாரபலம் கொண்ட உயர்ந்த வகுப்பிற்கும், பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவான உயர்சாதியைச் சேர்ந்தவர்களுக்கும், ஏழை, முகம் தெரியாத, அதிகாரமற்ற நீடித்து நிலைக்கக்கூடிய வளர்ச்சிக்காகப் பாடுபடும் கீழ்தட்டு, தாழ்த்தப்பட்ட சாதிமக்களுக்கும் இடைப்பட்டதாகும். இங்கிருக்கும் அரசோ இந்திய மக்களுக்கு ஆதரவாக செயல்படாமல் இரசியாவில் உள்ள ஒரு சிலரின் இலாபத்திற்காக செயல்பட்டு வருகின்றது. மேலும் அதிகப்படியான செயற்கையான மின்வெட்டை உருவாக்கி பெரும்பாலான மக்களை எங்கள் மேல் கோபம்கொள்ளும்படியும், எங்கள் போராட்டத்திற்கு எதிராக செயல்படவும் தூண்டுகின்றது அரசு.

இப்பொழுது கூடங்குளம் அணுஉலைப் பணிகள் தொடங்கிவிட்டன, இவ்வுலைகளில் இருந்து மின்னுற்பத்தி தொடங்குவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியாதென அங்குள்ள அலுவலர்கள் கூறுகின்றனர். இன்றைய மின்பற்றாக்குறைக்கு கூடங்குளம் காரணமல்ல என்பது இப்பொழுது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்திருக்கும். இதுபோலவே பேச்சிபாறை அணையிலிருந்து அணுஉலைக்கான நீரெடுப்பது பற்றியும், அந்நீரை சுத்திகரிப்பதற்கான ஆலை அமைப்பது பற்றியும், இவ்வுலையில் உருவாக்கப்படும் அணுகுண்டுகள், அணுக்கருவிகள் பற்றிய உண்மையும் இன்னும் கொஞ்சகாலத்தில், தமிழ்நாட்டு, இந்திய மக்களுக்குத் தெரியவரும்.

இந்தியா மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள ஒரு நாடு. அணுஉலைகளில் ஏற்படும் ஒரு சிறிய பிரச்சனையோ, ஊழியர்களின் கவனக்குறைவோ அதைச் சுற்றி வசிக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பறிப்பதற்கும், பேரழிவை உருவாக்குவதற்கும் போதுமானதாகும். இந்த நாட்டின், மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். ஆனால் அந்த வளர்ச்சி எங்கள் அடுத்த தலைமுறைக்கும் பயன்படக்கூடிய ஒரு நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்றே போராடுகின்றோம். நமக்கு ஒரு நாற்பது ஆண்டு மின்னுற்பத்தி செய்வதற்காக நமது இயற்கை வளங்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் நஞ்சு புகட்டுவதற்கு நமக்கு எந்த உரிமையோ, அறமோ கிடையாது. இரசிய, அமெரிக்க ஐக்கிய, பிரெஞ்சு நாடுகளின் அடிமையாக இந்தியா இருப்பதைவிட, உள்நாட்டு வளங்களையும், புதிய எண்ணங்களையும் கொண்ட ஒரு மின்னுற்பத்தித் திட்டத்தைக் கொண்டு உலகில் ஒரு முன்னோடியாக இந்தியா இருக்க வேண்டும் என எண்ணுகின்றோம்.

இங்கிருக்கும் அரசுகள் எங்களுக்கு எதிராக அடுத்த கருவியை எடுத்து விட்டன, நக்சலுடன் (மாவோயிசுட்டுகள்) எங்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் பொய்க்குற்றச்சாட்டுதான் அது. எங்களுக்கும் நக்சல் இளைஞர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறும் பொய்யான தரவுகளையும், சாட்சியங்களையும் அவர்கள் உருவாக்கி எங்கள் போராட்டத்தை வன்முறையான போராட்டம் என முத்திரை குத்தத் துடிக்கின்றனர். துளிகூட வன்முறையோ, பயங்கரவாத செயல்களோ அன்றி கடந்த எட்டு மாதங்களாக அமைதியான முறையில் நாங்கள் போராடிவருவது இவ்வுலகத்திற்கு நன்கு தெரியும். “வெளிநாட்டுப் பணம்”, ”வெளிநாட்டு சதி” என்று பொய்யான குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைத்து அவர்கள் தோற்றுப் போனது போலவே இதிலும் அவர்கள் தோல்வியடைவார்கள்.

இந்த அரசுகள் ‘சாதாரண குடிமகன்கள்’ குறித்த தங்களது மதிப்பீட்டை அவர்களே ஒத்துக்கொள்ளுமாறு செய்ய வெளிப்படையாகத் தூண்டுகிறது. சாதாரண குடிமகன்களுக்கு சொந்த மூளை கிடையாது; அவர்களுக்கு சுயமாக சிந்திக்கத் தெரியாது; அவர்களது உரிமைகளுக்காக அமைதியான முறையில், ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுக்கத் தெரியாது; மீனவர்கள், தலித்துகள், நாடார்கள், இசுலாமியர்கள், பெண்கள், குழந்தைகள் இவர்களெல்லாம் சென்னை, தில்லியை மையமாகக் கொண்ட சில கோடீசுவரர்களின் வளர்ச்சிக்காகத் தூக்கி எறியப்பட வேண்டியவர்கள். சாதாரண குடிமகன்கள் குறித்த அரசின் கோட்பாடு இதுதான்.

இதுதான் உலகமயமாக்கத்தின் கோட்பாடாகும், இதைத்தான் நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.

மக்கள் சக்தியா அல்லது அணுசக்தியா? அறம் சார்ந்த சக்தியா அல்லது பணம் சார்ந்த சக்தியா? குடிமக்கள் சக்தியா அல்லது அரசு சக்தியா? நீங்கள் எந்த பக்கம்? என்று தமிழ்நாட்டு, இந்திய மக்கள் யோசிக்க வேண்டிய தருணமிது.

இந்த மக்களும், நானும் இந்த உண்ணாநிலைப் போராட்டத்திலோ அல்லது முதுமை அடைந்தோ ஒரு நாள் இறந்து போவோம், ஆனால் நாமும், நம் தலைமுறையும் வாழ வேண்டிய நாடு, உலகம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டிய தருணமிது. இதில்தான் மனித அரசியலின் சாராம்சம் அடங்கியிருக்கின்றது. செர்மானிய மதபோதகர் கூறிய வைர வரிகளுடன் இவ்வறிக்கையை நிறைவு செய்கின்றேன்.

முதலில் அவர்கள் கம்யூனிசுட்டுகளைக் கொல்ல வந்தார்கள்,
நான் அவர்களுக்காக பேசவில்லை,
ஏனென்றால் நான் கம்யூனிசுட்டு அல்ல.

பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைக் கொல்ல வந்தார்கள்.
நான் அவர்களுக்காக பேசவில்லை,
ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி அல்ல.

பின்னர் அவர்கள் யூதர்களைக் கொல்ல வந்தார்கள்.
நான் அவர்களுக்காக பேசவில்லை,
ஏனென்றால் நான் யூதனுமல்ல.

இறுதியாக அவர்கள் என்னைக் கொல்ல வந்தார்கள்,
அன்று எனக்காகப் பேச ஒருவருமில்லை.

உதயகுமார்
இடிந்தகரை
மார்ச் 25, 2012.

தமிழில் - ப.நற்றமிழன்

சோம்பலால் சொந்தக்குழந்தையைத் தின்கிறது நம் சமூகம்!!

கூடங்குளம்

இந்தியா, இயற்கை, சமூகம்
Mar 232012
இன்று கூடங்குளம் விஷயத்திற்காக நடந்த ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்காகச் சென்றபின் நண்பர்களுடன் கூடங்குளம் போக முயன்றேன். வழியிலேயே போலீஸ் பிடித்துத் திரும்பச்சொல்லிவிட்டார்கள். அஞ்சுகிராமத்திற்கு அப்பாலேயே ‘தடை’ ஆச்சரியமாக இருந்தது. நெல்லைப்பகுதி கடற்கரையே முழுமையாக போலீஸிடம் இருக்கிறது. ஆனால் ஊடகச் செய்திகள் வேறுவகையாக உள்ளன.



அணு உலைக்குப் பெரிய அளவில் எங்கும் மக்கள் எதிர்ப்பு இல்லை. காரணம் இது ஊடகங்களால் கிறித்தவ மீனவ எதிர்ப்பாகச் சுருக்கப்பட்டுவிட்டது. அதைவிட மக்கள் மின்சாரத்துக்காக எதையும் செய்யலாம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். மிகுந்த மனச்சோர்வுடன் திரும்பி வந்தேன்.

இந்தப்போராட்டமும் அண்ணா ஹசாரே போராட்டம் போலத்தான் முடிகிறது என நினைக்கிறேன். அதே காரணங்கள்தான். ஒன்று, ஊடகங்களால் இது ஒழிக்கப்பட்டது. இரண்டு, நடுத்தரவர்க்கத்தின் அன்றாட அயோக்கியத்தனத்தால் ஒழிக்கப்பட்டது.

அண்ணா ஹசாரே தப்பானவர், லோக்பாலை வென்றெடுக்கவும் ஊழலை ஒழிக்கவும் வேறு நல்ல வழி இருக்கிறது என்றெல்லாம் கட்டுரைகளை எழுதிக்குவித்து ஊடகங்களை நிறைத்திருந்த எல்லாச் சிந்தனையாளர்களும் இப்போது காணாமலாகிவிட்டார்கள். ஊழல் பற்றிய பேச்சே இல்லை. வரலாற்றில் ஒரு மெல்லிய வழி திறந்து வந்தது. அறிவுஜீவிகள் பேசிப்பேசியே அதை மூடிவிட்டுத் திருப்தியாகத் திரும்பிவிட்டார்கள்.

இந்தப்போராட்டம் இதுவரை மிக எளிய செலவில், மிக எளிமையாக, வன்முறை இல்லாமல் காந்தியப்போராட்டமாக நிகழ்ந்தது. ஆனால் ஊடகங்கள் முழுக்க முதலாளிகளால் நடத்தப்படும்போது காந்தியப்போராட்டத்திற்கு வேறு வழிகள் தேவையா என்றெல்லாம் யோசிக்கச்செய்தது.

இன்னும் தூரமிருக்கிறது. போராடும் தரப்பு சோர்வில்லாமல் இன்னும் தங்களைத் திரட்டிக்கொள்ளமுடியும். காந்திய வழியிலான எந்தப்போராட்டமும் கடைசியில் அதன் இலக்கை அடையத்தான் செய்யும். தற்காலிகமான பின்னடைவுகளை நீண்டகால வெற்றியாக அது மாற்றிக்கொள்ளகூடும். உதயகுமாருக்கும் பிறருக்கும் வாழ்த்துக்கள்.

ஆனால், என்ன சொன்னாலும் இதுவரையில் இந்தப் போராட்டம் தோல்விதான். ஒரே ஒரு பொறுப்பான அதிகார அரசியல்வாதியைக்கூட கொண்டுவந்து மக்களிடம் பேசவைக்கமுடியவில்லை. நம் அரசிகளும் அரசர்களும் உப்பரிகையை விட்டு இறங்கவே இல்லை. அப்படி என்றால் இதெல்லாம் எதற்காக…?

இனிமேல் எந்தப் போராட்டத்தைப்பற்றியும் பேசக்கூடாதென வெயிலில் வதங்கித் திரும்பி வரும்போது நினைத்தேன். மொத்தத்தில் இங்கே இருப்பது, கையில் இருக்கும் இயற்கை வளங்கள் அனைத்தையும் நக்கி நக்கிக் கடைசித்துளிவரை தின்கிற, சந்ததிகளுக்கு விஷத்தையும் பாலைவனத்தையும் விட்டுச்சென்றாலும் சரி என எண்ணுகிற, லாபவெறி பிடித்த, மத்தியவர்க்கம். அவர்களின் அரசு.

குட்டிபோட்டதுமே வேட்டைக்குப் போகமுடியாவிட்டால் பன்றி சொந்தக்குட்டியைத் தின்னும். சோம்பலால் சொந்தக்குழந்தையைத் தின்கிறது நம் சமூகம்.

சனி, மார்ச் 24, 2012

அணு உலைக்கு எதிராக ஐ.டி. துறையினர் உண்ணாவிரதம்



கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி சென்னையில் நடைபெற்று வரும் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் இன்று தகவல் தொழில்நுட்ப துறையினர் கலந்துக்கொண்டனர்

கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது, அது, ஆபத்தானது என்று கூறி அப்பகுதி மக்கள் நெடு நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.
இதனையடுத்து, அங்கு, பணிகளும் தொடங்கி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆனால், போராட்டத்தை கைவிடாத மக்கள் அடக்குமுறைகளையும் மீறி தீவிரமாக தங்கள் எதிர்ப்பை அற வழியில் காட்டி வருகின்ற்னர்.

இவர்களுக்கு ஆதரவாகவும், சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 22-ந்தேதி முதல் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

மூன்றாவது நாளான இன்று, தகவல் தொழில்நுட்ப துறையினர் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டு உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

nandri: webduniya.com

புதன், மார்ச் 21, 2012

சிறிலங்காவே உலகில் இனவாத அரசுக்கான வரைவிலக்கணம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் கரன் பார்கர் அம்மையார் உரை

சிறிலங்காவே உலகில் இனவாத அரசுக்கான வரைவிலக்கணம் ! ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் கரன் பார்கர் அம்மையார் உரை

உலக அரங்கில், இனவாத அரசுக்கான வரைவிலக்கணமாக, சிறிலங்காவை முன்னுதாரணமாக கொள்ளலாம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞரும், IEDஅமைப்பின் பிரதிநிதியுமாகிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச் சபையில், இனவாதம், இனத்துவேசம் தொடர்பில் இடம்பெற்ற விவாத அமர்வில், கரன் பார்கர் அம்மையார் அவர்கள் உரையாற்றியிருந்தார்.

உலகில் எங்கு இனநெருக்கடி இருக்கின்றதோ, அங்கு இனவழிப்பு ஏற்படுத்துவதற்கான வழிநிலையுள்ளது என்ற ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனானின் கூற்றினை மூலதாரணமாக கொண்டு தனது உரையை வழங்கிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள், இனவாத மேலாதிக்க நிலையில், இனவழிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.

ஜெனீவா ஐ.நா உரிமைகள் சாசனத்தில், இனவாத அரசுக்கான வரைவிலக்கணம் இல்லை என்பதனைச் சுட்டிக்காட்டிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள், இன்றைய உலகில் சிறிலங்காவை ஒரு இனவாத அரசுக்குரிய முன்னுதாரணமாக கொள்ளாம் என் வலியுறுத்தினார்.

இலங்ககைத் தீவின் பெருன்பான்மை இனவாத சிறிலங்கா அரசானது, தமிழ் தேசிய இனத்தின் மீது கட்டவிழ்த்து வரும் இனவழிப்பை, அடுக்கிப் பேசிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள், 1948ம் ஆண்டு முதல் சிறிலங்கா இனவாத அரசனாது, தமிழர்களின் அரசியல், சமூக ,பொருளதார, கலாச்சார உரிமைகளை பறித்தெடுத்து வருகின்றமையை குறித்து கோடிட்டுக்காட்டினார்.

தமிழர்கள் மீது பயங்கரவாத முலாம்பூசி, சர்வதேச மனிதச் சட்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் சிறிலங்கா அரசானது, தமிழர்கள் மீது இனவாதத்தை கட்டவிழ்த்து வருவதாக குறித்துரைத்த கரன் பார்கர் அம்மையார் அவர்கள், தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் மீதும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிறிலங்கா பயங்கரவாத முத்திரையை குத்தி வருவனைக் கோடிட்டு, தன்மீதும் இத்தகைய முத்திரையை, சிறிலங்கா இனவாத அரசு குத்தியுள்ளதாக இடித்துரைத்தார்.

மானிடத்துக்கான உரிமைகளும் , பாதுகாப்பும் எனும் ஐ.நாவின் உயரிய சாசனக் கோட்பாட்டுக்கு முன்னால், சர்வதேச சமூகத்தால் கைவிடப்பட்ட இனமான, தமிழினம் பெரும் அழிவைச் சந்தித்துள்ளமையை, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையே தெளிவாக எடுத்துரைத்துள்ள நிலையில், இனவாத அரசுக்குரிய வரைவிலக்கணத்தை ஐ.நா விரைந்து வரைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

நாதம் ஊடகசேவை
தகவற்துறை அமைச்சகம்

கூடங்குளத்தில் அச்சத்தைப் போக்குவோம் என்று சொன்ன அரசு இப்போது அச்சத்தைத் திணிக்கிறது - அரிமாவளவன் கடும் கண்டனம்

புதன்கிழமை, மார்ச் 21, 2012


கூடங்குளம்


கூடங்குளத்தில் அச்சத்தைப் போக்குவோம் என்று சொன்ன அரசு இப்போது அச்சத்தைத் திணிக்கிறது என்று தமிழர் களம் தலைவர் அரிமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தமிழர் களம் தலைவர் அரிமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது

மத்திய அரசு விரித்த மாய வலையில் தமிழக அரசு இப்போது சிக்கிக் கொண்டது. கூடங்குளத்தில் 15 நாட்களில் மின் உற்பத்தியைத் தொடங்குவோம் என்று சொன்ன மத்திய அரசு இப்போது ஆகஸ்டு மாதம் என்று இழுக்கத் தொடங்கிவிட்டது.


ஏதோ கூடங்குளம் அணுமின்நிலையம் திறந்துவிட்டால் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையே முடிவுக்கு வந்துவிடும் என்று பொய்களைக் கட்டவிழ்த்துவிட்ட மத்திய அரசும் சில ஊடகங்களும் போராடும் மக்களின் ஞாயமான கோரிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலுள்ள மக்களைத் திசைதிருப்பிவிட்டனர்.


இப்போது மாநில அரசும் அந்த மாய வலையில் சிக்கியது மட்டுமல்லாமல் வரலாறு காணாத அளவில் மத்திய மாநில அரசுகளின் படைகளை அப்பாவி கிராம மக்களுக்கு எதிராகத் திருப்பி வைத்துள்ளது. ஏதோ ஒரு எதிரி நாட்டைக் கைப்பற்றப் போகும் படைகள் போல கிராமத்து மக்களுக்குச் செல்லும் குடிநீரையும், மின்சாரத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. குழந்தைகளுக்குத் தேவையான பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் உள்ளே கொண்டு செல்லதைத் தடுத்து வருகிறது. சிங்களப் படைகள் தமிழீழ மக்களுக்குச் செய்த அதே கொடுமைகளே இப்போது மனதில் வந்து நிழலாடுகிறது.


எட்டு மாதங்களுக்கும் மேலாக நடந்துவரும் இந்தப் போராட்டம் முழுக்க முழுக்க அகிம்சை வழியில் நடக்கின்ற ஒரு போராட்டம். ஆனால் ஏதோ ஒரு பெரிய தீவிரவாதக் கும்பலைக் பிடிப்பது போன்ற நாடகத்தை அரசு திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது.


சுங்கரன் கோயில் இடைத் தேர்தல்வரை காந்திருந்து மறுநாளே தலைகீழ் மாற்றத்திற்குப் போயிருக்கும் தமிழக அரசு நடத்துவது நாடகமன்றி வேறேது?
எட்டு மாதங்களாக போராட்டக்குழுவின் பல்வேறு போராட்டங்களுக்கு நேரிடையான மற்றும் மறைமுக ஆதரவு கொடுத்து வந்த மாநில அரசு திடீரென குட்டிக் கர்ணம் போட என்ன கட்டாயம் வந்தது என்பது யாருக்கும் தெரியாது. போராட்டக்குழு பேச்சுவார்த்தைக்குச் சென்றபோது மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் அதில் உறுப்பினர்களாகப் பங்கேற்றது முதல் பல்வேறு போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததும் இந்த மாநில அரசுதான்.


ஆனால், தாங்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு தங்களின் அச்சத்தைப் போக்கும், வாழ்வாதாரத்தை காக்கும், அணுஉலையை இழுத்து மூடும் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்த மக்களின் எதிர்பார்ப்பில் மண்ணையள்ளிப் போட்டது மட்டுமல்லாமல் அப்பகுதியிலுள்ள மக்களுக்குப் பேரச்சத்தை உருவாக்கும் விதமாக அரச படைகளை அங்கே அமர்த்தியிருப்பது ஒரு சனநாயக நாட்டில் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு செயலேயன்றி வேறெதுவும் இல்லை. இவ்வாறு தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறு கூறினார்.


கூடங்குளம், பொது மக்கள், போராட்டம், அச்சம், மத்திய அரசு, தமிழர் களம், அரிமாவளவன் , கண்டனம்.

செவ்வாய், மார்ச் 20, 2012

கூடங்குளம் இன்னுமொரு முள்ளி வாய்க்காலா ?

தமிழகம் இருண்டு போனதற்கு கூடங்குளம் அணு உலையை இவ்வளவு காலம் திறக்காதது தான் காரணம் என்பதுபோல் பதருகள் பதறுகின்றன . வந்தேறிகள் எக்காளமிடுகின்றன. ஈழத்தின் முள்ளி வாய்க்காலில் நடந்தது இன படுகொலைஎன்றால் தமிழகத்தின் ஒரு பகுதி மக்களை இன்று கடி காவல் நாய்கள் கொத்தி குதற காத்திருப்பது மீண்டும் முள்ளி வாய்க்காலை நினைவு படுத்துகிறது. அணு சக்தி நம் நாட்டிற்கு தேவையில்லை என்று இந்துவான வேதாத்திரி மகரிசி கூட தெரிவித்துள்ளார் அவர் இப்போது உயிரோடு இல்லை என்பதற்காக அவர் சொன்னது பொய்யாகிடாது. இப்போது மதவாதம் பேசுபவர்கள் யாரும் அவரின் கருத்துகளை மறுத்து விடுவார்களா ? அணு உலை எதிர்பாளர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஊளையிடும் காங்கிரசார்தான் உண்மையான தேச பக்தர்களா ? இப்போது விண்ணை முட்டும் ஊழல்களை செய்துள்ள இதுகள்தான் மக்களுக்கான ஆட்சியை நடத்துகிறதா ? திராவிடத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நாட்களில் அதன் கோர முகம் மீண்டும் அம்பலமாகியுள்ளதை எத்தனை தமிழர்கள் அறிவர் ? தமிழர்களை அழிப்பதில் பிராமண ஜெயாவுக்கும் , குள்ளநரி கருணாநிதிக்கும் , எந்த வேறுபாடும் இல்லை என்பதுதான் உண்மை . அடங்க மறுப்பவர்களும் , அத்து மீறலை எதிர்கொள்பவர்களும் இப்போது என்ன செய்ய போகிறார்கள் என்பதும் , தமிழர்கள் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதும் தெரிந்ததே . இருப்பினும் இவ்வளவு காலம் தடையின்றி தமிழர்களுக்கு கிடைத்த மின்சாரம் பல நூறு கோடி கமிசன் தொகைக்காக பன்னாட்டு முதலைகளுக்கு வழங்கபடுவது குறித்து யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழர்களுக்கு புதிதல்ல ! தினமலம் போன்றதுகள் தமிழர்களுக்கு வழிகாட்டுவது போல பிதற்றிகொள்வது இன்னமும் நாம் திராவிட நாய்களுக்கு அடிவருடியாய் இருப்பதுதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது . எனவே நாம் அப்போது இருந்தது போலவே இப்போதும் கண்மூடி மௌனமாய் இருப்போம் ! இன்னுமொரு முள்ளி வாய்க்காலை எதிர்கொள்வோம் ! தியாகிகளின் வரிசையில் அணு உலை எதிர்பாளர்களை மறந்துவிடுவோம் !!!!

- கருவை முருகு

வெள்ளி, மார்ச் 02, 2012

கொள்ளைக் கூட்டணி !!

கருணாநிதி சொல்லும் திராவிடம்!

திராவிடத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் அரும்பாடு பட்டுவரும் இந்நேரத்தில் அவர் விடுத்துவரும் அறிக்கைகள் தமிழர்களைக் குழப்பத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது.
தமிழும் திராவிடமும் ஒன்றுதான் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் தெலுங்கு திராவிடமில்லையா? தெலுங்கரான நீங்கள் திராவிடரில்லையா? மலையாளியான எம்.ஜி.ஆரும் கன்னடரான செயலலிதாவும் திராவிடரில்லையா?
இல்லை, கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம், தமிழ் ஆகியனதான் திராவிடம் என்றால், “ஏன் திராவிட ஆட்சியில் ஒரு தமிழர்கூட தலைமைப் பதவிக்கு வரஇயலவில்லை?” ஆக, திராவிடம் என்பது தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் அரசியல் கருத்தியலா? இல்லையா?
திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று அச்சிட்டது, சிலை வடித்தது, விருது கொடுத்தது போன்ற மேலோட்டமான செயற்பாடுகளைப் பட்டியலிடுகிற நீங்கள் திராவிடம் ஆட்சிக்கு வந்தபின் நடந்த கேடுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
கீழ வெண்மணிப் படுகொலை, குறிஞ்சாக்குளம் படுகொலை, உஞ்சனை, மேலவளவு, கொடியன்குளம், தாமிரபரணி, பரமக்குடி என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும் சாதி மற்றும் இன ஒடுக்குமுறைகளும் திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள்தானே!
பார்ப்பன எதி£ப்பு என்ற போர்வையைக் போர்திக்கொண்டு வந்த திராவிட இயக்கங்கள் தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத்தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது!
தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆடசிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது? பெயர்ப்பலககையில் இருக்கிறதா? ஆட்சி மொழியாக இருக்கிறதா? வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா? பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா? இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்ததுதானே திராவிட இயக்கங்களின் சாதனை?
ஆட்சிக்கு வந்த அத்தனைத் திராவிட இயக்கத் தலைமையின் மீதும் அடுக்கடுக்காக வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யா? வீராணம் முதல் அலைக்கற்றைவரை ஊழலில் தி.மு.க. செய்தது சாதனையா? அல்லது தி.மு.க.வின் எதிரணியில் இருக்கிற அ.தி.மு.க.வின் தலைமை இன்றைக்கும் பெங்களூர் நீதி மன்ற வளாகங்களிலே படியேறி இறங்குகிறதே இவையெல்லாம் சாதனைகளா? இல்லை வேதனைகளா?
தமிழகத்தில் திராவிடம் மலர்ந்ததாக மார் தட்டிக் கொள்ளும் இதே காலகட்டத்தில்தானே ஈழத்தில் தமிழர்கள் தன்னுரிமைக்காகப் போராடி வந்தார்கள். பல கோடித் தமிழர்களின் தலைமையை ஏற்ற திராவிடம் சில லட்சம் தமிழர்கள் ஈழத்தில் அல்லலுற்றபோது என்ன செய்தீர்கள்? குட்டிமணி செகனைக் காட்டிக் கொடுத்ததிலிருந்து முள்ளிவாய்க்கால் படுகொலை வரை நீங்கள் போட்ட நாடகங்கள் எத்தனை எத்தனை?
காவிரியைக் கன்னடர்களிடம் காவு கொடுத்தது எப்போது?
பாலாறு பாழனாது திராவிடத்தின் ஆட்சியில் இல்லையா?
முல்லைப்பெரியாறு சிக்கல் முற்றியதிலும் உங்கள் கையாலாகாத்தனமும் காட்டிக் கொடுப்பும் இல்லையா?
கிழக்குக் கடற்கரையில் 550 மீனவத் தமிழர்கள் அன்னியநாட்டுப் படையால் காக்கைக் குருவி போல சுட்டுத் தள்ளப்பட்டபோது கைசூப்பிக் கொண்டு கடுதாசி போட்டீர்களே தவிர உருப்படியாக எதைச் செய்து அப்படுகொலைகளைத் தடுத்தீர்கள்?
கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டபோது என்ன செய்தீர்கள்?
இறுதியில் திராவிடத்தின் சாதனைதான் என்ன?
ஊழல் சாதனைகள், கொள்ளையடித்து குடுமபத்தை வளர்த்த சாதனைகள், தமிழரல்லாதவர்கள் கொற்றத்தை இந்தத் தமிழ் மண்ணில் வேறுரூன்ற வைத்த சாதனைகள்! தமிழ்ச் சாதிகளுக்குள் மோதல் போக்கை உருவாக்கி குளிர்காய்ந்த சாதனை! சாராயத்தை ஆறாக ஓடவிட்ட சாதனை! திரை மாயையைத் திணித்த சாதனை! இவைகள் போக, வேறு என்ன சாதனை செய்தீர்கள்?
இப்படிப்பட்ட திராவிடம் தமிழ் மண்ணில் இருக்க வேண்டுமா? இல்லை இல்லாது போக வேண்டுமா?
என்னதான் நீங்கள் எட்டி எட்டி குட்டிக்கர்ணம் போட்டாலும் தமிழர்கள் இன்னும் ஏமாற மாட்டார்கள் என்று மட்டும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.