சனி, மார்ச் 23, 2013

தமிழர்கள அலுவலகம் திறப்பு விழா

நெல்லையில் தமிழர்களத்தின் செயல் அலுவலகம் திறப்பு விழா கடந்த  23.03.13 சனிக்கிழமை   அன்று நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழர்களத்தின் மாநில பொதுச்செயலாளர் தமிழ்த்திரு. அரிமாவளவன் அவர்கள், நமது அலுவலகத்தை திறந்துவைத்து சிறப்புரை நிகழ்த்தினார். விழாவிற்கு தமிழர்களத்தின் இளம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிறைவில் நெல்லைமாவட்டப் பொறுப்பாளர் நன்றி அனைவருக்கும் கூறினார்.

வியாழன், மார்ச் 21, 2013

கருத்துரை

Panico Mukilan

 // இவர்கள் எல்லாம் பிறப்பால் தமிழர்கள் இல்லை ஏற்றுகொள்கிறான் , ஆனால் பிறப்பால் தமிழர்களாக பிறந்து தமிழ் மொழிக்கும், தமிழ் நிலத்திற்கும், தமிழர் வாழ்வுக்கும் கிழித்து என்ன. எத்தனையோ தமிழன் தன்னுடைய முகவரியை கூட வெளிபடுத்த அஞ்சி தமிழை மறந்து வாழ்கின்றான் அவங்களுக்கு உன் பதில் என்ன. பிறப்பால் தமிழராக இல்லாவிட்டலும் எத்தனயோ பிற மொழியினர் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் தொன்றாட்டி உள்ளனர் எனபதை மறக்க வேண்டாம்.//

 தமிழர்கள் கிழித்தது என்ன என்று கேள்வி கேட்கும் 
Panico Mukilan  அவர்களே, இதுவரை கிழித்துள்ள தமிழர்களைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? எத்தனை தமிழ் ஈகிகள் தமிழர் நாட்டில் போராடி வாழ்ந்து மறைந்துள்ளனர் என்பதை அறிவீரா? திராவிட வந்தேறிகளுக்கு அடிவருடியாக நக்கிப் பிழைக்கும் எந்த நாய்க்கும் தமிழர்களின் களப் போராட்டங்களைப் பற்றி பேச அருகதை இல்லை! தன் முகவரி இழந்த தமிழன் யாரால் நிலைகுலைந்தான் என்பதை அறிய வரலாற்றை திரும்பிப் பாருங்கள். முடிந்தால் தமிழர்நாட்டில்  பிழைப்பு நடத்துவதற்காகவாவது ஏதாவது செய்துவிட்டு நகருங்கள். இல்லையேல் மௌனமாக நின்று இத்தனை ஆண்டுகாலம் வேடிக்கை பார்த்தது போல வேடிக்கை பாரும்!!
இன்னமும் ஆரியமும் திராவிடமும் தமிழர்களை அடிமையாக வைத்திருக்கவே நினைக்கின்றன என்பது உம்மைப் போன்ற தமிழின துரோகிகளின் நஞ்சு வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. உங்களைப் போன்றவர்கள்  பொழுதுபோக்கிக்கொள்ள எத்தனையோ இடங்கள் உள்ளது. தமிழர்தேச விடுதலைக் களத்தில் விளையாட எத்தனிக்க வேண்டாம்!

கருத்துப்படம்

புதன், மார்ச் 20, 2013

கழுவிலேற்றப்பட வேண்டியது ராசபக்சே மட்டுமல்ல!

20.03.13

மணப்பாறை நகரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழீழம் கோரி நேற்று உண்ணாநோன்பு இருந்தனர்.  மாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நகரின் வீதிகள் வழியாக தமிழீழம் ஒன்றே தீர்வு என்று முழக்கமிட்டு நகர்வலம் வந்தனர்.  அவர்கள் நடுவில் உரையாற்றிய திரு. அரிமாவளவன், “ராசபக்ச ஒரு போர்க்குற்றவாளி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  அனைத்துலக நீதி மன்றத்தின் முன்பாக அவன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு செய்த படுகொலைகளுக்கும் பாதகங்களுக்கும் தண்டனையாக அவனைத் தூக்கிலிட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு அணு அளவும் இடமில்லை.  ஆனால் ஈழத்தில் நடந்த மாந்தப் படுகொலைகளுக்கு அவன் மட்டுமா காரணம்?  இலங்கைப் படைகள் மட்டும் தனித்து நின்று விடுதலைப் புலிகளோடு மோதியிருக்குமானால் தலைவர் பிரபாகரன் தலைமையில் என்றைக்கோ தமிழீழம் அமைந்திருக்கும்.  ஆனால், இனவெறி பிடித்த நாடுகள் உடனிருந்து ஓர் இனப்படுகொலையை நிகழ்த்தின.  அவைகள் இன்று இலங்கை என்ற முகமூடிக்குள் ஒளிந்து கிடக்கின்றன.  இலங்கைக்கு ஆயுதங்களும், இராசயண ஆயுதங்களும், கொத்துக் குண்டுகளும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கியது இந்தியா இல்லையா?  இலங்கைக்கு ஆதரவாக படைகளை அனுப்பியது தில்லி ஆட்சியாளர்கள் இல்லையா?  உளவு சொன்னது இவர்கள் இல்லையா?  போருக்குப் பணம் கொடுத்தது இவர்கள் இல்லையா?  அங்கு அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது இவர்கள் இல்லையா?  உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே தீர வேண்டும்!  இந்திய இலங்கைக் கூட்டோடு சீனாவும், பாக்கிஸ்தானும் கூடிச் சேர்ந்து கோரத் தாண்டவம் ஆடவில்லையா?  இவர்களுக்கு எல்லாம் மேலாக தமிழினத்தின் காவலனாக வேலேந்தி நிற்க வேண்டிய கடமையிலிருந்த தமிழக அரசு என்ன செய்தது?  மேனனும், நாராயணனும் கொழும்புக்கு ஓரோடிச் சென்று ஆதரவு அளித்த போது சென்னைக் கோபாலபுரத்தின் கதவுகளைத் தட்டி ஆலோசனையும் ஆதரவும் பெற்ற பின்னர்தானே சென்றார்கள்.  9 ஆண்டுகாலம் அவர்களோடு கூடிக்குலவி ஆட்சி சுகம் கண்ட கருணாநிதி இன்று பதவியைத் தூக்கி எறிவதால் மட்டும் குற்றாவாளிக் கூண்டில் இருந்து இறக்கிவிடலாமா?  இப்படி இவர்களையெல்லாம் தப்பவித்துவிட்டு இராசபக்சேவை மட்டும் தூக்கிலிட்டால் தமிழீழ மண்ணில் உயிரை விதையாக்கிய ஆயிரமாயிரம் பச்சைக் குழந்தைகளின் உயிர்கள் அதை மன்னிக்குமா?  உயிர் கொடுத்த போராளிகளும், உயிர் நீத்த அப்பாவி மக்களும், ஏற்றுக் கொள்வார்களா?  எனவே ஒரு கயவனை மட்டுமல்ல பல கயவர்களின் கணக்குகளை சரி பார்க்கும் நேரமிது” என்று அரிமாவளவன் தன் உரையில் குறிப்பிட்டார்.

செவ்வாய், மார்ச் 19, 2013

கேள்வி கேட்டு கொல்லாதீர்கள்? - டி.எஸ்.எஸ்.மணி

காங்கிரசுடன் ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்கிறாரா?
காங்கிரஸ் தலைமையிலான நடுவணரசு "தமிழர்களின் நியாயத்தை " ஏற்கவில்லை என்பது கலைஞரின் வாதம்.அப்படியானால் 2009 போர் நேரம் காங்கிரஸ் தமிழர்களின் நியாயத்தை ஏற்றதா? என்று பெரியவரிடம் எதிர்கேள்வி கேட்காதீர்கள். காங்கிரஸ் தலைமையில் உள்ளாஅமைச்சரவைளிருந்து, திமுக விலகி கொல்லும் என்ற பெரியவரின் சொல்லுக்கு, நாடாளுமன்றதிலிருந்தும், திமுக வின் 18 உறுப்பினர்களும் விலக கூடாதா? இருந்து என்ன பயன்? என்று பெரியவரிடம் எதிர் கேள்வி கேட்காதீர்கள்.
திமுக அமைச்சர்கள் ஓரிரு நாளில் "ராஜினாமா" கடிதத்தை கொடுப்பார்கள் என்று கூறியதற்காக, வன்னி போர் நேரத்தில் ஏன் "ராஜினாமா" கடிதத்தை நீங்களே வாங்கி வைத்து கொண்டீர்கள்? என்று எதிர்கேள்வியை பெரியவரிடம் கேட்க வேண்டாம்.

காங்கிரஸ் உடன் நிரந்தர "முறிவு" என்றால், எதற்காக "கெடு நாள் "அறிவிக்க வேண்டும் என்று எதிர் கேள்வி கேட்காதீர்கள். ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் "துரோகம்" செய்ததாக கலைஞர் கண்டுபிடித்திருந்தால், இதுவரை "ஏமாந்து விட்டேன்?" என்று ஒப்புக் கொள்வாரா? என்று பெரியவரிடம் எதிர் கேள்வி கேட்காதீர்கள். ஈழத்தமிழர் நலனுககவே முடிவு எடுகிறேன் என்று கலைஞர் சொல்வதால், "டெசோ" கூட்டத்திற்கு ஏன் காங்கிரசை கூப்பிட்டீர்கள்? என்று பெரியவரிடம் எதிர் கேள்வி கேட்காதீர்கள். "டெசோ" வில் கூட்டு, ஐ.நா.மனித உரிமை கழகத்தில் "பகையா?" என்று பெரியவரிடம் கேட்டு துன்புறுத்தாதீர்கள். 2009 இல் லட்சக்கணக்கான தமிழர்கள் கொள்ளப்படும் போது காங்கிரசுடன் உறவு, இப்போது தமிழகம் மாபெரும் மாணவர் போராட்டத்தை சந்தித்து வருவதால், "பகை" என்பதாக புரிந்து கொண்டு பெரியவர் மனதை புண்படுத்தும் கேள்விகளை கேட்காதீர்கள்.

காங்கிரஸ் உடன் சேர்ந்து நடவனரசில் அங்கம் வகித்ததால், "ஈழத் தமிழர்" கண்ணுக்கு தெரியவில்லை என்றும் பெரியவரை கேள்வி கேட்டு துன்புறுத்தாதீர்கள். நடுவணரசில் காங்கிரசுடன் இருந்ததால், "மாணவர் பட்டினி ஒராட்டதை" நிறுத்த சொன்ன கலைஞர் இப்போது மாணவர்கள் போராட்டத்தை "தொடரட்டும்" என்ருகூருவாரா? எனக்கேட்டு பெரியவரை துன்புறுத்தாதீர்கள். நடுவணரசை எதிர்த்து போராட்டங்களை உற்சாகப்படுத்தாமல், இருந்த நிலை மாறி, திமுக இனி நடுவணரசை எதிரத்த போராட்டங்களை நடத்துமா? என்று பெரியவரிடம் கேள்வி கேட்க வேண்டாம்.

தூக்கிலிடப்பட வேண்டியவன் கருணாநிதி! - அரிமா ஆவேசம்!

19.03.13
திருச்சி.
இராசபக்சேவுக்கு இணையானவர் திரு. கருணாநிதி. மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று கூவிக்கூவி கடந்த ஒன்பது ஆண்டுகளாக பதவி சுகம் அனுபவித்த கருணாநிதி திடீரென பாசம் பொங்கி காங்கிரசு அரசுக்கு ஆதரவு விலக்குவது ஏதோ தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பாசம் அல்ல. பச்சையான சந்தர்ப்பவாத அரசியல். இதே மதவாத சக்திகளோடு நாலே முக்கால் ஆண்டு ஆட்சி சுகம் கண்ட கருணாநிதி அவர்களுக்கு அடுத்த ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்றவுடன் கைகழுவி வந்த இரண்டகன் கருணாநிதி. இப்போது எரிகிற வீட்டில் பிடுங்கிப் பிணம் தின்ன வந்திருக்கிறார் கருணாநிதி. இவர்களுடைய அமைச்சர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதானே ஈழத்தில் பச்சைப் படுகொலைகள் நடந்தன. இவர் சொல்கிற இன அழிப்பு நடந்தது. கடற்கரையில் 3 மணி நேர சாதனை உண்ணாநோன்பு நடித்து நாடகம் ஆடிய இந்தப் படுபாவியினால்தானே தமிழர்கள் ஏமாற்றமடைந்து பல்லாயிரம் உயிர்களைக் காவு கொடுத்தோம். இன்னும் பிணம் பொறுக்க வந்திருக்கிறானா இந்தக் கருணாநிதி? தமிழினமே விழித்தெழு. தெலுங்கன் கருணாநிதியின் பதவி விலகல் நாடகம் உலகத் தமிழர்களை ஏமாற்றி பதவி சுகம் காணத் துடிக்கும் ஓர் ஈனப்பிறவியின் இழி செயல்! இராசபக்சே துமுக்கி கொண்டு நெஞ்சில் சுட்டான். இவனோ இளித்து இளித்து முதுகில் சுடுகிறான். இவனும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இவனது குற்றங்களும் மெய்ப்பிக்கப்பட்டால் தூக்கிலிடப்பட வேண்டியவன் கருணாநிதி!

திங்கள், மார்ச் 18, 2013

மாணவர்களின் அறப்போராட்டம் - 6

ஆறு நாள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு இன்று கரூரில் ஆரசு கலை கல்லுரி மாணவர்கள் 8 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளார்கள் .
அந்த வீர தம்பிமார்களின் விபரம்

1. T .சக்திவேல்
2. D .சதீஷ் குமார்
3. P .ஸ்ரீனிவாசன்
4. T .யோகேஸ்வரன்
5. A .மணிகண்டன்
6. M .பிரபாகரன்
7. R .பாலமுருகன்
8. C . கார்த்திக்

தொடர்பு எண் : 089406-00568.

தங்களுடிய வாழ்த்துகளை தெரிவிக்குமாறு வேண்டுகிறோம் .

- தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு. ( கரூர் மாவட்டம் ).

ஞாயிறு, மார்ச் 17, 2013

எங்கேப் போகிறோம், மாணவர்களே? உதயக்குமார்

எங்கேப் போகிறோம், மாணவர்களே?
உதயக்குமார்

சேர்ந்து உட்கார்ந்து சிந்திப்போம், பேசுவோம், செயல் திட்டம் வகுப்போம். இடிந்தகரை விடிந்தகரை ஆகும்! வீழ்ந்து கிடக்கும் தமிழினம் வீரியத்தோடு எழுந்து நிற்கும்!

கனவா, கற்பனையா, காட்சிப்பிழையா என்று நம்மை கிள்ளிப்பார்க்கச் செய்கிறது தமிழத்தில் தற்போது நடந்துவரும் மாணவர் புரட்சி.

நீண்ட காலமாக எல்லோராலும் வஞ்சிக்கப்பட்டிருக்கும் தமிழினம், ‘பொறுத்தது போதும்’ எனப் பொங்கி எழுந்து கொண்டிருக்கிறது. இந்த எழுச்சி 2009-ம் ஆண்டே முழு வீச்சில் வரவேண்டியது. ஆனால் சில சுயநலவாத இனத்துரோகிகளால் அது மழுங்கடிக்கப்பட்டு, முடக்கப்பட்டது. தொடங்கிவிட்ட மாணவர்கள் எப்படித் தொடரலாம் என்பது பற்றி எனக்குத் தெரிந்த சில கருத்துக்களை இங்கேப் பதிவிடுகிறேன். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம், தெரிவு, உரிமை.

[1] களத்தில் நிற்கும் கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் கல்லூரியில் ஓர் ஒருங்கிணைப்புக் குழு உடனடியாக ஏற்படுத்தியாக வேண்டும். இறுதியாண்டில் இருக்கும் மாணவர்கள் ஓரிரு மாதங்களில் வெளியேப் போய்விடுவார்கள் என்பதால் அவர்களைத் தவிர்க்கலாம். பெண்கள், சிறுபான்மையினர், தலித் போன்ற அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய 10 பேர் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தி, பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தலைவர், செயலாளர் எனும் அடுக்கதிகார முறை (hierarchy) வேண்டாம். பொது நிர்வாகம், மேடை நிர்வாகம், நிதி நிர்வாகம், தகவல் தொடர்பு, வெளியுறவு, சுகாதார வசதி என ஒவ்வொரு ஒருங்கிணைப்பாளருக்கும் ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டு, அனைவருமாகக் கூடி ஒருமித்த முடிவுகளை (consensual decision-making) எடுங்கள்.

[2] இந்த ஒருங்கிணைப்புக் குழு அவ்வப்போது கூடி இடம், பொருள், ஏவல் அறிந்து போராட்ட முடிவுகளை எடுக்கட்டும், தொடரட்டும். பெற்றோர், கல்லூரி நிர்வாகத்தினர், அரசியல், சமூகப் பிரமுகர்கள் யார் வேண்டுமானாலும் வரட்டும், ஆதரவு தரட்டும்; பேசவிடலாம், கருத்துக்களைக் கேட்கலாம். ஆனால் அவர்களை முடிவெடுக்க விடவேண்டாம். போராட்டம் நடக்கிற இடம் உங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கட்டும். பாதுகாப்பு உணர்வு, ஏற்பாடுகள் மிக முக்கியம். சமூக விரோதிகள் விஷமங்கள் செய்யாமலிருக்க, புழுப் பூச்சிகள் அண்டாமலிருக்க, காவல்துறையினரோடு மோதல் வராமலிருக்க முன்னேற்பாடுகள் அவசியம்.

[3] உடனடியாக உங்கள் மாவட்டத்திலுள்ள ஊர்களில் நடக்கும் கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டங்களை ஓர் ஒருங்கிணைப்பாளர் தொலைபேசி அல்லது முகநூல் வழியாகவோ, அல்லது நேரில் சந்தித்தோ தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது மிக முக்கியம். அனைவருமாக சேர்ந்து ஒரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. இன்னொரு ஒருங்கிணைப்பாளர் பிற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுடனும் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது, தகவல் பரிமாறிக் கொள்வது மிக அவசியம்.

[4] மாணவர்கள் பலம் மிக்கவர்கள். ஆனால் நம்மைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு வேண்டாம். நாமெல்லாம் சே குவாராக்களும் அல்ல, இங்கே நடப்பது கியூபா புரட்சியுமல்ல. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரிடும்போது, முன்னதாகவே கூடிப்பேசி முடிவெடுத்துவிட்டு, கருத்துப் பரிமாற்றக் கலையில் தேர்ச்சி பெற்ற வெளியுறவு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பேசலாம். அரசு அதிகாரிகளிடம், காவல் துறை அதிகாரிகளிடம் மரியாதையாக ஆனால் உறுதியாகப் பேசுவதும், நமது இலக்கு இவையெனக் குறிப்பிட்டுச் சொல்வதும், அதற்காக நமக்கு உதவக் கேட்டுக்கொள்வதும் நல்ல அணுகுமுறையாக இருக்கும். அதிகாரிகள் நம்மைப் பார்த்து பயப்படும்படியான, வெறுக்கும்படியான மொழி, உடல்மொழி, கோஷம், அணுகுமுறை, அராஜகம் வேண்டாம்.

[5] அதுபோல ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வது முக்கியமானது. அவர்கள் கேட்கும் கேள்விகள் நமக்குப் பிடிக்கவில்லையென்றாலும், எரிச்சல் தந்தாலும், அவர்களை இணைத்துக் கொண்டு நடப்பதுதான் நல்லது. ஊடகங்களோடு ஒருவரே பேசுவது சிறப்பு; வீண் குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

[6] நமது கோரிக்கைகள் என்னென்ன, நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்க் கடலின் அந்தப்பக்கம் இருக்கும் நம் சொந்தங்கள் தங்கள் தாயகமாம் தமிழீழம் அமைத்துக்கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இம்மாத இறுதியில் ஜெனீவாவில் நடத்தப்படும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்குப் பதிலாக இந்தியா மாற்றியமைக்கப்பட்டத் தீர்மானம் கொண்டுவர வேண்டும். இனப்படுகொலை செய்த ராஜபக்சே கும்பல் மீது சுதந்திரமான (ஆசிய நாடுகள் தவிர்த்த) சர்வதேச நீதி விசாரணை வேண்டும். இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் அகற்றப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் பெரும்பாலும் அனைத்து மாணவர் குழுக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்க்கடலின் இந்தப் பக்கம் உள்ள தமிழர் நிலையைப் பொறுத்தவரை, தமிழக மீனவர் பாதுகாப்பு பிரச்சினை அனைத்து மாணவர்களாலும் ஏற்கப்படுகிறது.

[7] மத்திய, மாநில அரசுகள் போராட்டங்களையும் விரும்புவதில்லை, சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடுகளை மாற்றியமைக்கவும் விரும்புவதில்லை. கையாலாகாத மக்கள் விரோத மன்மோகன் சிங் அரசு மேற்காணும் எந்த கோரிக்கையையும் ஏற்காது. முடிந்தால் ராஜபக்சே குடும்பத்துக்கு இன்னும் அதிகமாக உதவிகள் செய்யும், தமிழர்களை முறியடிக்கும். தேசிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. முதலைக் கண்ணீர் வடிக்கும். மார்க்சிஸ்ட் தோழர்கள் ஒன்றுபட்ட இலங்கை என்று பிதற்றிக் கொண்டிருப்பர். இவர்கள் யாரையும் நம்ப முடியாது, நம்பக்கூடாது.

தி.மு.க.—அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை, அவர்களுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வேண்டும், தில்லியிலே அதிகாரம் வேண்டும், அமைச்சர் பதவி வேண்டும், ஏராளமானப் பணம் வேண்டும்.
தி.மு.க.வைப் பொறுத்தவரை நாமெல்லாம் முட்டாள்கள், நம்மை இன்னும் தொடர்ந்து ஏமாற்றலாம் என்று பகற்கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் முற்றிலுமாக முறியடிக்கப்படவேண்டும்.

மதிற்மேல் பூனையாய் உட்கார்ந்து கவனமாய் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவின் அரசு சும்மா இருப்பதாக நினைக்கக் கூடாது. பாராளுமன்றத் தேர்தல், அனைத்து தரப்பினரின் வாக்கு, 40 தொகுதிகளில் வெற்றி,– எனும் கணக்குத்தான் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறதே தவிர அங்கே ஈழத்தமிழர் பாசமோ, இங்குள்ள தமிழர்மீது அன்போ எதுவும் கிடையாது. பெரிய அடக்குமுறை நேரடியாக வராது; ஆனால் காலுக்குக் கீழே கட்டையை உருவும் வேலை கச்சிதமாக நடக்கும். மாணவர்களுக்கு. சற்றே கால அவகாசம் கிடைக்கலாம். அதை எப்படி அறிவுக்கூர்மையுடன் பயன்படுத்துவது என்று சிந்திப்பது நல்லது.

[8] போராட்டம் நடக்கட்டும். தொலைநோக்குப் பார்வை, அறிவுபூர்வமான அணுகுமுறை அவசியம் வேண்டும். நமது கையில் இருக்கும் ஒரே மிகப் பெரிய ஆயுதம் பாராளுமன்றத் தேர்தல்தான். அதை எப்படி பயன்படுத்துவது என்று சிந்திப்பது மிக முக்கியமானது. இதற்காக எதிர்வரும் ஏப்ரல் 7-ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, காலை 9 மணிக்கு இடிந்தகரையில் ஒரு மாபெரும் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறோம். இது ஒரு புதுக்கட்சி தொடங்கும் முயற்சியோ அல்லது கூட்டணி அமைக்கும் திட்டமோ அல்லது யாரை ஏமாற்றி நாம் எம்.பி. ஆகலாம் எனும் கபட நாடகமோ அல்ல.

நம்மைப் போல தமிழின விடிவு பற்றி, தமிழரின் வருங்காலம் பற்றி சிந்திக்கும் நண்பர்களோடு வாருங்கள். தமிழகமெங்கும் உள்ள ‘மக்கள் அரசியல்’ நடத்தும் சிறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், சேவை நிறுவனங்கள், மக்கள் மன்றங்கள், நண்பர் குழுக்கள் என யாராக இருந்தாலும் வரலாம். 144 தடை உத்தரவு நம்மைக் கட்டுப்படுத்துவது இல்லை. வரும்போது ஒரு மின்னஞ்சல் (koodankulam@yahoo.com) அல்லது ஒரு குறுஞ்செய்தி (9865683735) அனுப்புங்கள்; நாங்கள் வழி சொல்கிறோம். எளிய உணவுக்கு ஏற்பாடு செய்கிறோம். பயணச் செலவை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.

வாருங்கள். வருவதற்கு முன்னால் உங்கள் கருத்துக்களை அறியத்தந்தால் (koodankulam@yahoo.com) நமது நேரத்தை கச்சிதமாக உபயோகிக்கலாம். சேர்ந்து உட்கார்ந்து சிந்திப்போம், பேசுவோம், செயல் திட்டம் வகுப்போம். இடிந்தகரை விடிந்தகரை ஆகும்! வீழ்ந்து கிடக்கும் தமிழினம் வீரியத்தோடு எழுந்து நிற்கும்!

சுப. உதயகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

இடிந்தகரை
மார்ச் 14, 2013

மாணவர்களின் அறப்போராட்டம்!! 4

16.03.13
திருநெல்வேலி

                     திருநெல்வேலி சட்டக் கல்லுாரி மாணவர்கள்  தொடங்கி மாபெரும் எழுச்சியுடன் நடந்து வரும் அறப்போராட்டத்தினை ஆதரிக்கும் வகையில் தமிழர் களத்தின் பொதுச்செயலாளர் திரு .அரிமாவளவன் நேரில் சென்று மாணவர்களை சந்தித்து வாழ்த்தியதுடன் மாணவர்களிடையே எழுச்சியுரையாற்றினார். மாணவர்கள் தனிதமிழீழம் ஒன்றே தீர்வு என்ற இலக்கை நோக்கி தங்களது போராட்டத்தை நகர்த்தத் தொடங்கியிருப்பது நடுவண் மற்றும் மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை தருவதாக அமைந்துள்ளது.

குருதியில் பூக்கும் ஈழம்! கருத்தரங்கம்.

15.03.13
திருநெல்வேலி

                         திருநெல்வேலியில் குருதியில் பூக்கும் ஈழம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன், தமிழ்தேச பொதுஉடைமைக் கட்சியின் நிறுவனர் திரு.பெ.மணியரசன் மற்றும் பலர் கலந்து கொண்ட நிகழ்வானது எழுச்சிமிகுந்ததாக இருந்தது.

சனி, மார்ச் 16, 2013

மாணவர்களின் அறப்போராட்டம்!! 3

சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று நள்ளிரவில் சென்னை கடற்கரை காந்தி சிலையின் கீழ் மெழுகு வர்த்தி ஏற்றி அற வழியில் தங்கள் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடங்கினார்கள் . காலை வரை அங்கேயே உண்ணா நிலையில் இருப்பதாகவும் காவல் துறையிடம் அனுமதி கேட்டனர் . இருப்பினும் காவல் துறை அதற்கு செவி சாய்க்கவில்லை . சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் எங்கும் அறவழியில் போராட மக்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டு உள்ளது . டெல்லியில் கூட பத்து நாட்கள் வரை போது திடலில் மக்கள் போராட அனுமதி உண்டு . அன்னா ஹசாரே கூட ராம் லீலா மைதானம் என்ற திடலில் பத்து நாட்கள் உண்ணா நிலையில் இருந்து போராட்டம் நடத்தினார் . அதுபோல் தமிழகத்தில் ஒரு பொது இடம் இல்லை . தமிழ்கள் கூடி நின்று அழுவதற்கு கூட ஒரு இடம் இல்லை தமிழகத்தில் . அந்த அளவிற்கு தமிழக அரசு மக்களின் மேல் அடக்குமுறையை மேற்கொண்டுள்ளது . இந்நிலையில் மாணவர்கள் வேறு வழியின்றி தடையை மீறி காந்தி சிலையின் கீழ் உண்ணா நிலை போராட்டத்தை தொடர்ந்தனர் . ஆனால் தமிழக அரசோ அவர்கள் போராட்டத்தை வழக்கம் போல் மதிக்கவில்லை .

காவல்துறை உச்சகட்ட வன்முறை மாணவர்கள் மீது கட்டவிழ்கப்பட்டது. அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மீது உச்சகட்ட வன்முறையை ஏவி விட்டது காவல்துறை. காலை 6 மணி உண்ணாவிரதம் இருந்துவிட்டு சென்றுவிடுகிறோம் என்று கூறியும் மாணவர்களை அடித்து, தரதரவென இழுத்து சென்றது. உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் அனைவர் மீதும் மனிதநேயமற்ற முறையில் வார்த்தைகளால் குறிப்பிட முடியாத அளவுக்கு வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த செய்தியை உடனடியாகப் பரப்பவும். மாணவர்களை மீட்டு அவர்களின் போராட்டதிற்க்குத் துணை நிற்க வேண்டும் என மாணவர்கள் பொது மக்களை கேட்டுக் கொண்டனர் .

மாணவர்களின் அறப்போராட்டம்!! 2

கோவையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த போதும் மாணவர் போராட்டம் இன்றும் தீவிரமாக நடைபெற்றது. ஆங்காங்கே சாலை மறியல் முற்றுகை என பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தனித்தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவையில் இன்றும் மாணவர் போராட்டம் பல இடங்களில் நடைபெற்றது.கோவை சட்ட கல்லூரி மாணவர்கள்  6வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபக்‌ஷே படத்தை எரித்த மாணவிகள்

அவர்களுக்கு ஆதரவாக சட்ட கல்லூரி மாணவிகள் ராஜபக்சேவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், விளக்குமாறால் அடித்தும் தீ வைத்து எரித்தனர்.அப்போது தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கேரள மாணவர்களும் போராட்டட்தில் குதிக்க வேண்டும் என சட்ட கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்

இந்நிலையில் சட்ட கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காந்திபுரம் பகுதியில் தீடீர் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.அப்போது காவல் துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.அப்போது காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்..காவல் துறையினரின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது என திராவிடர் விடுதலை இயக்க தலைவர் கொளத்தூர் மணி கண்டனம் தெரிவித்தார்.

இலங்கை நிறுவனம் முற்றுகை

இந்நிலையில் கோவை சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள 'டம்ரோ' என்ற இலங்கையை சேர்ந்த பர்னிச்சர் நிறுவனத்துக்குள் நுழைந்து அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக பர்னிச்சர் வாங்க வந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.இதனையடுத்து போராடத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட மானவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

களமிறங்கிய பள்ளி மாணவர்களும் கைது

இதே போன்று ஓண்டிபுதூர் பகுதியில் திருச்சி சலையில் இலங்கையில் தனி ஈழத்துக்கு பொது வாக்ககெடுப்பு நடத்த கோரி மறியலில் ஈடுபட்ட மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

இதே போன்று கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 30க்கும் சட்ட கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரதியார் பலகலை கழக மாணவர்கள் 25 பேர் ஐந்தாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இதே போன்று கோவை சக்தி சாலையில் உள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்களும்,இன்போ டெக் பொறியியல் கல்லூரி மாணவர்களும் சத்தியமங்கலம் சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கோவையில் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- நன்றி - தமிழ்மக்கள்குரல்

மாணவர்களின் அறப்போராட்டம்!!

17.03.13
சென்னை.

                இலங்கை அரசின் போர்க்குற்றங்களை கண்டித்து ராஜபக்சேவை தண்டிக்க கோரியும், தனிதமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும், இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்கக் கோரியும். இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலைதான் என ஐநா மன்றத்தில் பகிரங்கமாக அறிவிக்ககோரியும், மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டத்தை கடந்த ஒரு வார காலமாக நடத்தி ஓர் எழுச்சி அலையை ஏற்படுத்தியுள்ளனர். சென்னை டாக்டர்.அம்பேத்கர் சட்டக் கல்லுாரி மாணவர்கள்.

                       தமிழகமெங்கும் இன்று பற்றி எரியும் மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டங்களைக் கண்டு ஆட்சிஅதிகாரத்திலிருப்பவர்களே அஞ்சுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியாத கோழைத்தனத்தால் கல்லுாரிகளுக்கு காலவரையறையின்றி விடுமுறை அளித்து மாணவர்களின் போராட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது. ஆயினும் கடந்தகால அரசியல் நிகழ்வுகள் மாணவர்களின் மனதில் பதிந்திருக்கும் என்றே நினைக்கின்றோம். அதனடிப்படையில் மாணவர்கள் பின்வாங்காமல் தொடர்ந்து எழுச்சியுடன் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் நிலைக்கு சென்று ஆட்சியாளர்களுக்கு கடும் நெருக்கடியைத் தந்து போராட்டத்தில் வெற்றி பெறுவார்கள் என்றே நம்புகின்றோம். 

                        அரசியல் ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு ஆட்சியிலிருப்பர்களுக்கும் ஓட்டுப் பொருக்கிகளுக்கும் ஆதரவாக போராட்ட நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்தாலும் எரிமலையாய் வெடித்துக் கிளம்பும் மாணவர்களின் கேள்விக் கணைகளுக்கு பதிலளிக்க முடியாமல் காகிதப் போர் நடத்திக்கொண்டிருக்கும் கருணா போன்றவர்கள் அச்சத்தில் உறைந்துதான் போயிருக்கின்றனர். தங்களின் உண்மையான இன உணர்வுகளை காட்டவேண்டிய கட்டாய காலத்தில் மாணவர்கள் இருக்கின்றனர். புரட்சிகர வேடமணிந்து  “இந்திய ஒற்றுமையை கட்டிக்காக்க வேண்டியது நமது கடமை“ என்று கருத்து கந்தசாமிகளாக வலம்வரும் குள்ளநரிகளை மாணவர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். எதிரிகளைவிடவும் இவர்கள் கொடியவர்கள். கடந்த கால போராட்டங்களில் தமிழ்தேசியத்திற்கெதிராகவே திரும்பி தனி தமிழீழம் தேவையற்றது அங்குள்ள தமிழர்களுக்கு சமஉரிமை போதுமானது என்று நஞ்சை கக்கினார்கள். மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். எனவே இந்த முறை மாணவர்கள் தமிழர் தேசிய அரசியல் எது என்பதை நன்கு புரிந்து கொண்டு அதனடிப்படையில் ஒன்றிணைந்து போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என வேண்டுகிறோம்.

                  தமிழினப் படுகொலை இலங்கையில் மட்டும் நிகழவில்லை இங்கும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்ந்துள்ள மாணவர்கள் பல்வேறு இன்னல்களையும் தாண்டி போராடி வருவது நிச்சயம் போராட்டம் வெல்லும் காலத்தை முன்னறிவிக்கின்றது என்பதையே காட்டுகின்றது. தமிழர்களின் உரிமைகள் மீட்கப்படப்போவது மாணவர்சக்தியால்தான் என்பதை இந்த சட்டக்கல்லுாரி மாணவர்கள் போராட்டம் தெளிவுபடுத்துகிறது. 

             தங்கள் உடல்வருத்தி போராடும் இவர்கள் நிச்சயம் எதிர்கால தமிழர்நாட்டின் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தமிழின உணர்வாளர்கள் எப்போதும் இவர்களுக்கு துணை நிற்பார்கள் என்று உறுதிகூறுகிறோம்! தயங்காமல் தளராமல் போராடி 
வெற்றியை  அடைவார்கள் இந்த இளையோர்கள். இவர்களுடன் அனைவரும் கைகோர்த்து வலுசேர்க்க வேண்டியது பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரின் கடமையாகும். இப்படிப்பட்ட மாணவர்களை பெற்றதற்காக இவர்களின் பெற்றோர்கள் பெருமைப்படவேண்டும் என வேண்டுகிறோம்!

- கருவைமுருகு

கருத்துப்படம்