சனி, அக்டோபர் 26, 2013

கலைஞர்......

கலைஞர்
தமிழினத் தலைவர், திராவிடர்களின் தலைமகன், கலைத்தாய் பெற்றெடுத்த கலைமகன், முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர்......
     தன்னலம் கருதாத இந்த தமிழர் தலைவருக்கு பொதுநலமே உயிர்மூச்சு. கல்லிலே கட்டி கடலிலே போட்டாலும் கட்டுமரமாய் மிதந்து கடமையாற்றுவாரே தவிர கபடவேசதாரியல்ல. வார்த்தைகளால் அலங்கரித்துப்பேசும் வல்லமை பெற்றவர். வாய்மை காப்பாற்றியவர். கண்ணகியை மீட்டவர், குமரியில் வள்ளுவருக்கு சிலை அமைத்தவர். காலஅமல்லாம் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் மட்டுமே வாழும் இவரின் தாராள குணம் யாருக்கு வரும்.
     அஞ்சுகத்தாய் பெற்றெடுத்து ஆளாக்கி அனைவருக்குமாய் பாடுபட இன்றும் வாழ்கிறார் பெருந்தலைவர் கலைஞர். தமிழனுக்கு ஒரு கேடு என்றால் துடித்தே போய்விடுவார். தன்மானத் தலைவர் இவர் தரணியெங்கும் புகழ் பெற்றவர். எத்தனை சொந்தங்கள், எவ்வளவு சொத்துக்கள் அள்ள அள்ள குறையாது அள்ளித்தரும் வள்ளல் இவரே வாழும் வள்ளுவர்.
     இன்னும் எவ்வளவோ சொல்லி இவரை வாயார வாழ்த்த வயதில்லாமல் வணங்கித் தாங்கும் அன்பு உடன் பிறப்புகள். முரசொலியில் கடிதம் எழுதியே உடன்பிறப்புகளை உசுப்பேற்றும் மாயக்காரர். கனிமொழியின் கவிதை வரிகளில் கனவுகாணும் கழகத்தின் ஆணிவேர். எவ்வளவோ நல்லவைகள் எண்ணிலடங்கா காரியங்கள் எப்போதும் உற்சாகத்துடன் “குருவியையும் பார்க்கும் குறும்புக்காரர் இவரோ சினிமாவுக்கு தலைப்பிள்ளை, கவிதைக்கு மட்டும் என்றும் மாப்பிள்ளை. இன்னும் இருக்கு எவ்வளவோ....
     இதைச்சொல்ல மறந்துட்டோமே....... ஆம் காவிரிக்காக கெஞ்சிடுவார். ஒகேனக்கலை விட்டுக்கொடுப்பார். பவானி, முல்லைப்பெரியாறு இப்போ கண்ணகி கோயில் என தமிழர்களின் அடையாளங்களை அழிக்கத்துடிக்கும் அண்டை மாநில விசமிகளை அன்போடு அரவணைத்து இந்திய இறையாண்மையை காத்திடுவார். சனநாயகம் பேசிடுவார். உலக அமைதியே இங்கிருந்துதான் என்பதுபோல தமிழர்களை தாலாட்டி உறங்கவைக்க இலவசங்களை அள்ளித்தருவார். இல்லாமை இருள்போக்க ஆயிரம் கோயிலுக்கு கும்பாபிசேகம் நடத்திடுவார். தங்கத்தேரும் தந்திடுவார் பகுத்தறிவுப் பாசறைத்தலைவர். இளிச்சவாயன் தமிழன்தானே.
     ஏதோ உளறிட்டேன் .... டாஸ்மாக்கில் ஊத்திக் கெட்டேனே. நாளைக்கு மீட்டிங்கு தமிழர் தலைவர் சிறப்புரையாற்றுவார் கழக உடன்பிறப்புகள் தவறாது கலந்து கொள்வோம்! கோசங்கள் முழங்குவோம். கொள்கையை உதறுவோம். தமிழர் தலைவா நீ வாழி... இந்திய இறையாண்மை வாழி.....
     எல்லாம் உலகமயம் தாராள மயம் தனியார் மயம் என பன்னாட்டு நிறுவனங்கள் பலஇங்கு வந்தாச்சு. டாலரில் சம்பாதிக்கலாம். கோடீசுவரனாய் வாழலாம். இப்போதைக்கு டாஸ்மாக்கில் கொஞ்சம் ஊத்திக்கலாம். 2020ல் இந்தியா வல்லரசு! தமிழ்நாடு யாருக்கு?......

- கருவைமுருகு
09.05.2008
கரூர்.

வியாழன், அக்டோபர் 24, 2013

தமிழ் இனிக்கும்! அத் தமிழே இனி எரிக்கும்!!

          "வேணும்னா பாருங்களேன்.....
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தில் நேற்று இடிந்தகரையில் இருந்தேன்!
        
        பல விவாதங்களுள் “தேர்தல் காலம்” என்பது குறித்தும் ஒரு விவாதம் எங்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது...
“தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள், தேர்தலில் பங்கேற்காத இயக்கங்கள்” என்று இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் குழுவினர் இரு வகைப்படுவர்.
      
ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, த.மு.மு.க. போன்றன தேர்தலில் பங்கேற்கும் ஆனால் அணுஉலை எதிர்ப்பில் தீவிரம் காட்டும் கட்சிகள்.
தேர்தல் வந்ததும் அற்றகுளத்து அறுநீர் பறவைபோல ஓடிவிடுவார்களா அல்லது தொடர்ந்து களம் காண்பார்களா என்பது போகப் போகத் தெரியும். வரப்போவது, நாடாளுமன்றத் தேர்தல்! காங்கிரசு, பாரதீய சனதா என்ற இரு அணிகளில் கட்சிகள் நிற்கும். பா.ம.க. போன்றன தனி அணி காணும்.


       தமிழர்களின் வாழ்வையும் மானத்தையும் வளங்களையும் பாதிக்கிற பல்வேறு பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைக்கின்ற நேரம் இது. கூடங்குளம் அணுஉலையும் அவற்றில் ஒன்று! ம.தி.மு.க ஒருவேளை பா.ச.க. அணியில் சேர்ந்தது என்று வைத்துக் கொள்வோம்! (ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்! ஏன்யா கோவப்பட்ற..) “கூடங்குளம் அணுஉலை கூடவே கூடாது!” என்று அதன் அறிக்கையில் இருக்குமா? இருக்காதா? “ஈழம் அமைய உதவிடுவோம்” என்று இருக்குமா? இருக்காதா? “மணல் கொள்ளையர்களை பிடித்து உள்ளே போடுவோம்” போன்ற மக்களின் உள்ளக்கிடக்கைகளை எதிரொளிப்பதாக அந்த அறிக்கை இருக்குமா? இல்லை வழக்கம்போல, “மண்ணாங்கட்டி! ஸ்டெர்லைட்டும் இருக்கிறது நமது போராட்டமும் இருக்கிறது! ஸ்டெர்லைட் இருக்கும்போதே நாங்கள் மத்திய அமைச்சரவையில் இருந்தோம். இல்லாதபோது தெருவில் இறங்கி போராடினோம். அந்த இழவு போல இந்தக் கூடங்குளம் அணுஉலையும் இருக்கும். வசதிப்படும்போது கூக்குரலிட்டு, லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்” என்று வாய் பிழிற உரையாற்றுவோமா! எனக்குத் தெரியாது. இடிந்தகரை ஊருக்கு வெளியே ஒரு பதாகை இருக்கிறது, “அணுஉலையை எதிர்க்காத கட்சி ஓட்டு கேட்டு நுழையக்கூடாது” என்று. மைக் டெஸ்டிங்.... ஒன்று.... இரண்டு... மூன்று...”
       
அதே மாதிரி நம்ம விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க. கூட்டணி அதன் வாயிலாக (எவண்டா அது...? “எந்த வாய்?” என்று சும்மா சும்மா கிளறுறது) காங்கிரஸ் கூட்டணி என்று தூள் கிளப்பும் போலத் தெரிகிறது. “மதவாதக் கட்சிகளோடு கூட்டணி இல்லை” என்று அண்ணன் அடித்துச் சொல்லிவிட்டார். அப்புறம் என்ன? “சோனியாவே வருக. சுகமான ஆட்சி தருக” என்று பதாகை வைத்துவிடுவோம். இராமநாதபுரம் தொகுதியில் பசில் ராசபக்சே நின்னாலும் நிப்பான். “அண்ணே, இசைப்பிரியா, பாலச்சந்திரன், ஒன்றரை லட்சம் மக்கள், காங்கிரஸ் கொடுத்த ஆயுதம், ஆதரவு.... ராசபக்சே...”மண்ணாங்கட்டி! கண்ட நேரத்திலயும் கண்டதையும் பத்திப் பேசிக்கிட்டு.... கசவாளிப் பயல்க... ஒரு மேனர்ஸ் கிடையாது. போர்னா.... பூவானம், தூவானம், அடிவானம், மப்புவானம், மந்தார வானம் எல்லாம் இருக்கும்!

       “அண்ணே... இடிந்தகரையில பதாகை வச்சிருக்கானுங்க அண்ணே...”
மட ராஸ்கல், எந்த நேரத்தில என்னத்தப் பேசுறதுனே ஒரு விவஸ்தை கிடையாதா? தேர்தல் கூட்டணி என்பதற்கு ஒரு தனி வரலாறும், தர்மமும், தத்துவமும், சித்தாந்தமும், சீரிய சிந்தனையும், பொறுக்கித்தனமும், போக்கிரித்தனமும், விளங்காத்தனமும், விவஸ்தை கெட்ட தனமும்.... (ஐயோ.... எப்படி இருந்த என்னை? இப்படி ஆக்குறான்களே!)
"

புதன், அக்டோபர் 23, 2013

“அணுஉலையே வெளியேறு” இயக்கம் தொடங்குவோம்!! அரிமாவளவன் எச்சரிக்கை!!!

மத்திய அரசு மக்களை மட்டும் ஏமாற்றவில்லை! மாநில அரசையும் ஏய்க்கிறது!  

        கூடங்குளம் அணு உலையிலிருந்து இதோ வந்துவிட்டது மின்சாரம் அதோ வந்துவிட்டது மின்சாரம் என்று மத்திய அரசு நம் காதில் பூ சுற்றி வருகிறது. 
      
    மத்திய அரசின் மதிகெட்ட பரப்புரைகளைக் கேட்டு மயங்கிக் கிடந்த அணு உலை ஆதரவாளர்கள்கூட இப்போது தலையில் துண்டுபோட்டுக்கொண்டு உலவுகின்றனர்.  பொது மக்களின் வரிப்பணத்தை வீணடித்து உருவாக்கிய ஒரு நாசகார ஆலையை மத்திய அரசு வேண்டுமென்றே நியாயப்படுத்தி வந்தது.  தரம் குறைந்த உதிரிப்பாகங்கள், ஊழல்கள், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத உதவாக்கரை அரசியல் ஆகியனவற்றின் வடிவமாகத்தான் இன்று கூடங்குளம் அணுஉலை தலை குனிந்து நிற்கிறது.  இதற்கிடையில் சில ஆண்டுகளாகவே, மத்திய அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் கைக்கெட்டும் தூரத்தில் மின்சாரம் வந்துவிட்டது என்று பூச்சாண்டி அரசியல் செய்து வந்தார்கள்.  மக்களை மடையர்கள் என்று எண்ணி அரசியல்செய்யும் இவர்கள் இப்போது மாநிலத்தில் இருக்கும் அரசையும் தொடர்ந்து ஏமாற்றும் விதமாக நடந்து கொள்கின்றனர். 
   
 மணல் கொள்ளை, மீனவர் படுகொலை போன்ற மக்களை வதைக்கும் நிகழ்வுகளில் பாரமுகத்தோடு செயல்படும் மாநில அரசு இப்போது கூடங்குளம் அணுஉலை விவகாரத்திலும் மத்திய அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது என்று அறிந்தும் அமைதி காத்து வருவது தமிழ் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது.  தமிழக மக்களின் காவலரணாக இருக்க வேண்டிய மாநில அரசு தில்லி அரசின் எடுபிடியாக ஏவலாளியாக மாறிக் கிடப்பது யானை தன் தலையில் மண்ணையள்ளிப் போட்ட கதையாகிவிட்டது.  “கூடங்குளத்தை விட்டு வெளியேறுங்கள்” என்று இந்த பம்மாத்துப் பேர்வழிகளுக்கு தமிழக அரசு வெளியேற்றும் வழி காட்டாவிட்டால் ஆளும் கட்சியை தமிழக மக்கள் வெளியேற்றும் நாள் தொலைவில் இல்லை என்பதை அவர்கள் அறிய வேண்டும். 
    
 கூடங்குளம் அணுஉலையை மாநில அரசு வெளியேற்ற முனைப்பு காட்ட மறுத்தால், “அணு உலையே வெளியேறு இயக்கத்தை தமிழர்களம் தொடங்கும் என்று எச்சரிக்கிறேன், என்று தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் இன்று அறிவித்திருக்கிறார்.

வெள்ளி, அக்டோபர் 18, 2013

இது தமிழர்களம்....இது போர்களம்...."!!!


 "பொதுவுடமை என்ற பேரில், கிறித்துவம் என்ற பேரில், சர்வதேசியம் என்ற பேரில் சமத்துவம் பேசுவார்கள், ஞாயம் பேசுவார்கள், 

என் மக்கள் செத்தபோது எவனடா குரல் கொடுத்தது?

தில்லியில் பெண் ஒருத்தி கற்பழிக்கப்பட்டபோது உலகமே கொதித்தது! கொந்தளித்தது! இசைப்பிரியா சிதறியபோது எந்தத் திருச்சபை குரல் கொடுத்தது? எந்த சர்வதேசியப் பொதுவுடமைப் பிடுங்கிகள் குரல் கொடுத்தார்கள்? எந்தப் புரட்சியாளர்கள் கிழித்தார்கள்? இசைப்பிரியாபோல பல்லாயிரம் பெண்கள் சிக்கிச் சீரழிந்தபோது இந்த இனத்தைப் பற்றிக் கவலைப் படாதவர்கள் கண்டு கொள்ளாதவர்கள் நாங்கள் தமிழர்கள் என்று எங்கள் உரிமைகளைப் பற்றி முனுமுணுக்கத் தொடங்கியவுடனேயே, எங்கள் விடுதலைக்கான களம் அமைக்கத் தொடங்கியவுடனேயே “உனக்கு அதிகாரம் இருக்கிறதா?” என்று கேட்கத் தொடங்குகிறார்கள். ராசபக்சேவும், சிங்கள இனவெறியர்களும், கன்னடக் காடையர்களும், மலையாள பக்கிரிகளும் எங்களைச் சீரழித்த காலத்திலெல்லாம் வாய்க்குள் என்ன கொழுக்கட்டையா வைத்திருந்தீர்கள்?

தமிழன் என்கிற போர்வையில் ஞாயம் பேசுவதுபோல அக்கிரமம் புரிகிற அயோக்கியர்கள் ஆண்டைகளானாலும் சரி, அதிகாரிகளாலும் சரி! அவர்களைத் துரோகிகளாக தூர நிறுத்துவது மட்டுமல்ல இன எதிரிகளாக அடையாளம் காட்டி அவர்கள் மீதும் போர் தொடுப்பதே இனி நமது வேலை! களம்.... இது தமிழர்களம்....இது போர்களம்...."

வெள்ளி, அக்டோபர் 11, 2013



மணல் நிறுவன முதலாளிகளைக் கைது செய்- அரிமாவளவன் கோரிக்கை!!!

மணல் நிறுவன முதலாளிகளைக் கைது செய்து, சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழர்களம் அரிமாவளவன் கோரிக்கை!
“தென் கடலோர மீனவ மக்களோடு இணைந்து தமிழக அரசிடம் தமிழர்களம் வைத்த மூன்று கோரிக்கைகளுள் ஒன்றான மணல் அள்ளுவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதும் மணல் ஆலைகள் மீது விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதையும் தமிழர்களம் நெஞ்சாரப் பாராட்டி வரவேற்கிறது.
நடந்திருப்பது பகல் கொள்ளை!  வரலாறு காணாத கொள்ளை!  பல அரசியல் கட்சிகளையும் தனி நபர்களையும் வளைத்துப் போட்டு செய்த அதி நுட்ப ஊழல்தான் மணல் கொள்ளை!  இதில் பலியாகியிருப்பது கடல் வளங்களும் சுற்றுச் சூழலும்தான்.  அப்பாவிக் கடலோர மக்கள் மணல் அள்ளியதன் விளைவாக ஏற்பட்ட கதிரியக்கத்தினால் பல்வேறு கொடிய நோய்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.  இத்தகைய சமூக் குற்றங்களின் கடுமைத் தன்மையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, மணல் கொள்ளையில் ஈடுபட்ட முதலாளிகளையும் அவர்களது கைக்கூலிகளையும் உடனடியாகக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும்.  கடற்கரைகளையும் ஆற்றோரங்களையும் கபளீகரம் செய்து ஈட்டிய சொத்துகளைப் பறிமுதல் செய்து முடக்க வேண்டும்” என்று தமிழர்களம் தமிழக அரசை மிகுந்த பற்றுதியோடு கேட்டுக் கொள்கிறது.  இவ்வாறு தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

புதன், அக்டோபர் 09, 2013

தமிழர்களம் திரு. அரிமாவளவன் கடும் கண்டனம்.


தமிழரைக் கொன்று குவித்த நாட்டில் காமன்வெல்த் மாநாடா?
தமிழர்களம் கடும் கண்டனம்.
வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் களம் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.  மாநிலச் செயலாளர் திரு. அழகர் தலைமையில் நடைபெற்ற அந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.  அதில் கண்டன உரை ஆற்றிய திரு. அரிமாவளவன் அவர்கள், “எங்கோ இருக்கிற கனடாவும் ஆஸ்த்திரேலியாவும் இலங்கையில் ஈவு இரக்கமில்லாத மனிதப் படுகொலைகள் நடந்திருக்கின்றன, இனப்படுகொலை நடந்திருக்கிறது என்று வெளிப்படையாக அறிவித்து நாங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.  ஆனால், முதல் ஆளாக துடித்துக் கிளம்பி இலங்கையில் நடபெறப்போகும் இந்த மாநாட்டைத் தடுத்திருக்க வேண்டிய இந்தியா இன்றுவரை கள்ள மவுனம் சாதித்து வருகிறது.  பச்சிளம் குழந்தைகள் பிணக்குவியல்களாகக் கிடந்ததை இந்தியா காணவில்லையா?  எம் குலப் பெண்கள் சீரழிக்கப்பட்டு சின்னாபின்னமாய்க் கிடந்ததை இந்தியா காணவில்லையா?  அனைத்துலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ரசாயண ஆயுதங்களையும், கொத்துக்குண்டுகளையும் இலங்கை அரசு அப்பாவி மக்கள் மீது பயன் படுத்திக் கொன்றதை இந்தியா காணவில்லையா?  இப்படி ஒன்றரை லட்சம் மக்களைக் கொன்று குவித்து வெறியாட்டம் போட்ட ராசபக்சே அரசு எஞ்சியிருந்த தமிழர்களையும் சும்மா விட்டார்களா?  அவர்களது நிலங்களையும் வீடுகளையும் பறிந்து நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். எஞ்சியிருந்த இளைஞர்களைக் கொன்றார்கள், இளம்பெண்களை கற்பழித்துக் கொன்றார்கள்.  இந்த ஒரு நாட்டில்தான் மாந்த உரிமைகளை மையப்படுத்தி இயங்கும் காமன் வெல்த்


நாடுகளின் மாநாடு நடக்கவிருக்கிறது.  காந்தி தேசம் என்று தன்னை மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவும் அதில் கலந்து கொள்ளப் போகிறது.  அந்த மாநாட்டிற்கு ராசபக்சே தலைமை வகிக்கப் போகிறார்.  இனிவரும் இரு ஆண்டுகளுக்கு அவரே அக்கூட்டமைப்பின் தலைவராகவும் இருப்பார்.  என்னே கொடுமை இது!  மனித உயிர்கள் மலிவாகக் கொல்லப்படுவதை நாம் ஆதரிக்கிறோமா?  தமிழர்கள் நாம் அப்படிக் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டதை இந்தியா வரவேற்று வாழ்த்துக்கிறதா?
இந்தியா யார் பக்கம் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது!  குருதிச் சேறு படிந்த கைகளோடும் கொலை வெறிக் கண்களோடும் நிற்கிற ராசபக்சேவுடன் இதுநாள் வரை மறைமுக உறவாடிவந்த இந்தியா இப்போது வெளிப்படையாக கைகுலுக்கப் போகிறது!  தமிழர்களாகிய நாம்தான் “இந்தியா எங்கள் தாய் நாடு, தாய்நாடு” என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறோம்.  ஆனால் தில்லி ஆட்சியாளர்களோ “நீங்கள் அயல்நாடு, அயல்நாடு” என்று வெறுத்துத் தள்ளுகிறார்கள்.  “இந்தியர் எங்கள் உடன்பிறப்பு” என்று தமிழர் நாம் சொல்லி வருகிறோம்.  ஆனால் நம் உடன்பிறப்புகளைக் கொன்று வெறியாட்டம் போட்டவனுடைய வீட்டில் தடபுடலான விருந்துக்கு இந்தியா தயாராகி வருகிறது.  “நீங்கள் இந்தியர்கள் இல்லை!  நீங்கள் தமிழர்கள்!” என்று வெறுப்போடும் உறுதியோடும் இந்தியா சொல்லி வருகிறது.
தொடர்ந்து சொந்த பந்தங்களை இழந்து வருகிற நாம் அதைத் தடுத்தாள வேண்டிய நிலையில் இருக்கிற இந்தியாவை நம்பி நம்பி இன்னும் கெட்டழிய வேண்டுமா? இல்லை தன்மானத்தோடு தனிஉரிமை வேண்டி, இந்திய வரைபடத்தை மாற்றியமைக்க வேண்டுமா? என்று கேட்டாக வேண்டும்!  இந்தியாவை நம்பி நம்பி நம் இனத்தை முற்றாக அழியக் கொடுக்க வேண்டுமா?  இல்லை இப்போதாவது விழித்தெழுந்து எஞ்சியிருக்கிற நம் மக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றுவோமா?  நமது எச்சரிக்கைகளையும் மீறி இந்தியா இலங்கையில் நடைபெறப் போகும் காமன் வெல்த் மாநாட்டிலிருந்து விலகாவிட்டால் நாமும் இறுதி முடிவு எடுப்போம்!” என்று தனது கன்டன உரையில் திரு.  அரிமாவளவன் குறிப்பிட்டார்.

திங்கள், அக்டோபர் 07, 2013

"கருணாநிதியின் மண்ணாங்கட்டி அறிக்கை!



இலங்கை சுட்டுக் கொண்டே இருக்கிறது! அதை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது!” கருணாநிதி கனிமொழி வழியாக பிரதமருக்குக் கடிதம்! இது இன்றைய செய்திகளில் ஒன்று!
என்னைக் கருணாநிதி கெட்ட வார்த்தை போட வைத்துவிடுவார் போலவே இருக்கிறது! கனிமொழி பிரதமரைச் சந்தித்துப் பழக வேண்டும்! அந்த ஒரு மயி..க்குத்தான் இப்போது இந்த நாடகம்! அதற்கும் நாங்கள்தான் இவருக்கு வேண்டுமா?
தமிழ்நாட்டில் பல முறை ஆட்சியில் இருந்தபோது கிழிக்க முடியாததை, மத்தியில் பல முறை பல அமைச்சர்களை வைத்துக் கொண்டு கிழிக்க இயலாததை இப்போது கடிதம் எழுதிக் கிழிக்கப் போகிறாராம்!
அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., போன்ற கட்சிகள் தில்லியில் அமைச்சர்களை வைத்திருந்தன! மாநிலத்தில் ஆட்சியிலும் ஆட்சிக்கு ஆதரவு நிலையிலும் பலமுறை இருந்திருக்கின்றன!
ஆனால் இவர்களால் ஈழப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை! ஈழத் தமிழர்களின் சாவைத் தடுக்க முடியவில்லை! நமது மீனவர்களை சிங்களன் தாக்கும் கொடுமையைத் தடுக்க முடியவில்லை! காவிரிப் பிரச்சனை தீரவில்லை! முல்லைப் பெரியாறு பிரச்சனை தீரவில்லை! பாலாறு பிரச்சனை தீரவில்லை! ஸ்டெர்லைட்டை மூடமுடியவில்லை! கூடங்குளம் அணுஉலையைத் தடுக்க முடியவில்லை! திண்டுக்கல் தோல் பதனிடும் கொடிய நச்சு ஆலைகளைத் தடுக்கவில்லை! தேனியில் வரும் நியூட்ரினோ திட்டத்தைத் தடுக்கவில்லை! கிரானைட் கொள்ளையைத் தடுக்கவில்லை! தாது மணல் கொள்ளையைத் தடுக்கவில்லை! மாறாக அத்தனையிலும் கூட்டு, கையூட்டு, கமிஷன் என்று கொள்ளையிலும் இழிவான மலிவான கொள்ளையடிக்கிற கும்பல்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் இவர்களின் வசூலுக்கு வசதியான அமைச்சர் பதவிகளைப் போராடிப் பெற்றிருக்கிறார்கள். சொந்த பந்தங்களுக்காக கடுமையாகப் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்! ஆனால், அப்பாவி மக்களுக்கு, அதாவது வாக்களித்து இவர்களை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிய மக்களின் உரிமைகளைக் காக்க எதுவுமே செய்யவில்லை!
இப்போது நாடகம்! டெசோ நாடகம்! கடித நாடகம்! போராட்ட நாடகம்! அறிக்கை நாடகம்! போக்கிரிகள்! தமிழர்களின் நாட்டில் பொறுக்கித் தின்ன வந்திருக்கும் வந்தேறிப் பொறுக்கிகள்!"