சனி, நவம்பர் 30, 2013

                                                      "மாண்ட வீரர் கனவு பலிக்கும்!
                                                       நாளை எங்கள் நாடு பிறக்கும்
!

அடேயப்பா, கேள்! இந்த மண்ணின் விடுதலையும் மக்களின் விடுதலையும் திடீரென ஒருநாள் வானிலிருந்து பொத்தென்று விழாது.
தமிழகத்தில் நாம் பெரும்பான்மையர்!
இந்தியாவில் நாம் சிறுபான்மையர்!
ஈழத்தில் நாம் பெரும்பான்மையர்!
இலங்கையில் நாம் சிறுபான்மையர்!
சிறுபான்மையராய் இருந்தால் சலுகைகளில்தான் காலத்தைத் தள்ளலாம்!
பெரும்பான்மையராய் இருந்தால் மட்டுமே உரிமைகளோடு வாழலாம்!
தமிழர்களின் சிக்கல்கள் பன்முகப்பட்டது.
இந்தியாவில் நாம் சிறுபான்மையராக சிறுமைப்படுகிறோம் என்பது ஒரு புறம்.
தமிழகத்திலும் நாம் சிறுபான்மையராகவே நடத்தப்படுகிறோம்.
ஆட்சி அவர்களிடம்! அதிகாரம் அவர்களிடம்! வளங்கள் அவர்கள் கையில்! வேலைவாய்ப்புகள் அவர்கள் கையில்! மேற்படிப்புகளில் அவர்களே! உயர் பதவிகளில் அவர்களே!
செருப்பு, பல்பொடி, அடுப்பு, அரிசி, ஆட்டுரல் போன்றன உங்களுக்கு!
இடங்களையெல்லாம் அவர்கள் வைத்துள்ளார்கள்! இட ஒதுக்கீடு கேட்டு நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம்!
மாண்ட வீரர் கனவு எப்படி பலிக்கும்?
திராவிடம் என்ற சுழலில் சிக்கியவர்கள் அதிலிருந்து மீள வேண்டும்!
தவிப்பவர்களை மீட்க கரையேறியவர்கள் களமாட வேண்டும்!
இது நடந்தாலேயே பாதி வேலை முடிந்தது!
பெரும்பான்மை மக்களின் ஆட்சி தமிழகத்தில் மலரும்!
பெரும்பான்மை மக்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே புரட்சி வேடம் புனைந்து நிற்கிற புல்லர்கள், எத்தர்கள், தரகர்கள் தேர்தல் புறக்கணிப்பு என்ற இருளுக்குள் நம்மைத் தள்ள முற்படுவர்!
போர்க்களம் பானிபட்டில் இல்லை! இமயமலைச் சாரலில் இல்லை!
வீட்டில், தெருவில், ஊரில் உன் நாட்டில் நகர்த்த வேண்டிய காய்கள் உண்டு! தகர்க்க வேண்டிய பாறைகள் உண்டு!
நாளை அல்ல! இன்று!
அவனல்ல! நான்!
மாண்ட வீரர் கனவு பலிக்கும்!
நாளை நமது நாடு பிறக்கும்!!
தமிழர் களம்"

இன்று தலைவரின் 59வது பிறந்த நாள்!!! 27.11.2013





 

                  தாகத்தில் தவித்த தமிழினத்திற்குக் கிடைத்தத் தடாகம்தான் தலைவர்!

தமிழினம் ஆயிரமாயிரம் சறுக்கலுக்குள் சிக்கித் தவித்த போது கிடைத்த ஊன்றுகோல் அவரே!
இதிலெல்லாம் எனக்கு இரு வேறு கருத்துக்கள் கிடையாது!
இத் தலைவன் விண்ணிலிருந்து ஒரு நாள் குதித்துக் கிளம்பிய தெய்வப் பிறவி அல்லன்!
சதையும் குருதியும் கொண்டு குழைத்து உருவான மனிதன்!
ஆனால் எச்சில் பொறுக்கும் ஏராளமான அரசியல் விற்பனர்கள் நடுவில் தமிழினம் காக்க நெருப்பாய் நின்றவன் இவன்!

இவனையும் எப்படி விற்பனைப் பொருளாக்கலாம் என்று அன்றும் இன்றும் பொறுக்கியவர்கள் உண்டு!
சமரசமில்லா சரித்திர நாயகன் இவன்!
ஆனால் நீயும் நானும் என்ன செய்தோம்?

அவனையும் விடுதலைப் புலிகளையும் தன்னந்தனியே களமாடவிட்டு வீட்டு இருக்கைகளில் அமர்ந்து “விடுதலைப் போர்” என்ற படம் பார்த்தோம்.

பூநகரியை வென்றபோது, ஆனைஇரவை வென்றபோது, வான்புலி பறந்தபோது, கடற்புலி சீறியபோது, கொழும்பு வானூர்தி நிலையம் தகர்க்கப்பட்ட போது நாம் விண் கிழிய சீட்டி அடித்தோம்!
படம் பார்த்தோம்!

காட்சிகளில் திருப்பம்!
சோகம் இழையோடியது!
யாழ் வீழ்ந்தது! பூநகரி போனது! கிளிநொச்சி தகர்ந்தது! முல்லைத் தீவு வீழ்ந்தது! முள்ளிவாய்க்கால் ......
இரு கைகளுக்குள்ளும் முகத்தைப் புதைத்து வைத்துக் கொண்டு அழுதோம்!
படம் பார்த்தோம்!
அசையவில்லை!
காண்பது படமல்ல! கண்டது பிம்பங்கள் அல்ல!
நடப்பது திரையில் அல்ல!
சதையும் எலும்பும் குருதித் துளிகளும் என் அருகே விழுந்து துடித்தபோதுதான் அதிர்ந்து துடித்து எழுந்தோம்!
ரமேசு போய்விட்டான், இசைப்பிரியா போய்விட்டாள், பாலச்சந்திரன் போய்விட்டான், ஆயிரமாயிரம் குழந்தைகள் போய்விட்டன, பெண்கள், பிள்ளைகள்...
எட்டு கோடிப் பேர் அருகில் இருந்தும் இழந்து விட்டாயேடா!
விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் இங்கே விற்றுக் கொண்டிருந்தார்கள். விற்பனர்கள்.
இன்னும் அவர்கள் நடமாடுகிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல் சீர்படாமல் ஈழம் மலராது!
வந்தேறிகளோடு சமரசம் செய்து கொண்டு அலைகிற விற்பனர்களை அடையாளம் காட்டாமல் தமிழ்நாடு சீர் அடையாது!
மாண்டவர்களை வைத்து இன்னும் வணிகம் செய்ய நினைக்கிற சாக்கடை அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் திராவிட வந்தேறிகளுக்குப் பாய்விரிக்கும் பச்சைத் துரோகிகள் இங்கே இருக்கிறார்கள்.
படம் பார்ப்பதை நிறுத்து!
களமிறங்கு!
எதிரிகளையும் துரோகிகளையும் கிழித்துக் குப்பையில் போட்டு எரிக்கக் களமிறங்கு!

வாடா வாடா தோழா!
இது வேலவனின் நாளடா!
ஒரு வேலோடு ஓடிவா!
வேலை இனி இருக்குடா!

காத்திருக்கு களமடா!
களமாட நாமடா!
நாடெல்லாம் நமதடா!
வாடா வாடா தோழா!

பொறுக்கி சிறுக்கி பாரடா!
கொன்ற கூட்டம் இதாண்டா!
போட்டு இதைத் தாக்கடா!
நாடு நமது ஆகுண்டா!

வேங்கை பிறந்த நாளடா!
வேண்டும் நமக்கு நாடடா!
நீ பிறந்த நாடடா!
நாடு நமக்கு வேணுண்டா!

வாடா வாடா தோழா!
ஆனைவெறி காட்டடா!
வேலைக் கையில் ஏந்தடா!
வாடா வாடா தோழா!

அரிமாவளவன்
தமிழர்களம்"

திங்கள், நவம்பர் 18, 2013

நெல்லையை உலுக்கிய தமிழர்களப் பேரணி!!!

 
                 தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளை முன்னிட்டு தமிழர்களம் திருநெல்வேலி நகரில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியது.  தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
 
               காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்தும், முள்ளிவாய்க்கால் முற்றத்தை தமிழக அரசு இடித்ததைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரியும், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கோரியும், தமிழகப் பள்ளிகளில் அரசே முன்னின்று நடத்தும் தமிழ் அழிப்பு மற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்தும், தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் தொடர்பாகவும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 
               பாளையங்கோட்டையில் மாணவர் போராட்டத்தில் உயிர் நீத்த லூர்து நாதனுக்கு அமைக்கப்பட்ட சிலை அருகிலிருந்து தொடங்கிய ஊர்வலம் நெல்லை நகரின் தெருக்கள் வழியாகச் சென்று பாளை சவகர் திடலை அடைந்தது.
 
              தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நடத்திய இப்பேரணி மிகுந்த கட்டுப்பாட்டுடனும், எழுச்சியுடனும் அமைந்தது மட்டுமல்லாது நகரின் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாவண்ணம் நடந்தது நகர மக்களைக் கவர்ந்தது.
 
            பெரும் எழுச்சியுடனும், மிகுந்த உணர்வுப் பெருக்குடனும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் நடத்திய இந்தப் பேரணியில் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  நகரின் வீதிகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி நிகழ்வுகளை கூடி நின்று கவனித்தனர்.
ஈழ மக்களின் விடுதலை தொடர்பாகவும், ராசபக்சேவை விசாரித்துத் தூக்கிலவேண்டும் போன்ற முழக்கங்கள் எழும்பிய போது தெருவோரங்களில் நின்றவர்களும் சேர்ந்து முழக்கமிட்டது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
பேரணி பொதுக்கூட்ட மைதானத்தை அடைந்தபோது தேனிசைச் செல்லப்பாவின் உணர்ச்சி மிகு பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டிருந்தன.  பாடல்கள் முடியும்போதெல்லாம் ஒட்டுமொத்த மக்கள் திரளும் “தமிழ்நாடு தமிழருக்கே” என்று எழுப்பிய முழக்கம் மாநாட்டுத் திடலே அதிரும் வண்ணம் இருந்தது.மொத்தத்தில் தமிழர்களத்தின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றான தமிழ்நாட்டைத் தமிழரே ஆண்டால்தான் உலகத் தமிழரின் சிக்கல்கள் தீரும் என்ற கொள்கை தென் தமிழகத்தில் அழுத்தமாகவே காலூன்றி இருக்கிறது என்பதற்கான பதிவாகவே தமிழர்களத்தின் பேரணி அமைந்தது

அரிமா வளவனின் நெல்லை உரை காணொளி!!

ஞாயிறு, நவம்பர் 17, 2013

தமிழர் பெருவிழா - நெல்லை -2013

 
 நெல்லை 16.11.13,

                 தமிழர் களத்தின் சார்பில் நெல்லை பாளையம்கோட்டை நகரில் களத்தின் பொது செயலாளர் தமிழ்த்திரு அரிமாவளவன் தலைமையில் மிக எழுச்சியான பேரணியுடன் துவங்கியது. பேரணியில் களத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். பேரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.
                   பாளை சந்தைத் திடலில் நடைபெற்ற பொதுகூட்டத்தின் துவக்கத்தில் 'பாசறைப் பாணர்' தேனிசை செல்லப்பா அவர்கள் குழுவினரின் தமிழர் எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன.
                  அடுத்து துவங்கிய பொதுகூட்டத்தை ஆசிரியர் அல்போன்சு அவர்கள் வரவேற்று தொடர்ந்து நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிகழ்விற்கு அறிஞர் குணா, மை.பா. நன்மாறன், சுப.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.                
                கூடங்குளம் 'அடி வயிற்றில் அணுகுண்டு' என்ற தலைப்பில் திருமதி. இளம்பிறை அவர்களும், கச்சதீவு - 'தாய்மண்ணே வணக்கம் ' என்ற தலைப்பில் திரு. சீதையின் மைந்தன் அவர்களும், அயல்மொழிக்கல்வி - 'உச்சிமீது உருவி விழும் பட்டகத்தி' என்ற தலைப்பில் பேராசிரியர் மணி அவர்களும், ஈழம் - 'என்று தணியும் எங்கள் விடுதலை தாகம்' என்ற தலைப்பில் வழக்குரைஞர் இ.அங்கயற்கண்ணி அவர்களும், மணற்கொள்ளை -'கண்ணை விற்று ஓவியமா மண்ணை இழந்து வாழ்வோமா' என்ற தலைப்பில் திரு. பெர்லின் அவர்களும், ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு - சலுகைக்கு சாவுமணி உரிமைக்கே போடுவழி ' என்ற தலைப்பில் திரு. ஞானபிரகாசம் அடிகளார் அவர்களும் உரையாற்றினார்கள்.  

























                 விழாவில் அறிஞர் குணா அவர்கள் எழுதிய நாற்றாங்கால்  என்ற புத்தகமும், பா.வா.மணிகண்டன் எழுதிய ஐயோ தமிழா என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
                 இனம் காக்க உயிர் நீத்த ஈகியர்க்கு ஒளி வணக்கம் திரு.அருன்மொழிவேந்தன் தலைமையில் செலுத்தபட்டது. தமிழர் பெருவிழா தீர்மானங்கள் புதுவை மாநில செயலாளர் திரு. அழகர் அவர்களால் வாசிக்கப்பட்டது. பின்னர் இறுதியாக அண்ணன் தமிழ்த்திரு அரிமாவளவன் அவர்கள் நிகழ்வின் பேருரை நிகழ்த்தினார். நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு. அமலரசு நன்றி தெரிவித்தார்.

செய்தி ஊடகபிரிவு  கருவூர் 

திங்கள், நவம்பர் 11, 2013

நவம்பர் 11 அணுசக்திக்கு எதிரான நாள்!!

 
 
                       இந்தியாவில்  19 5 ஆகத்து 6 நாள் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு விசப்பட்டது. சில மணித்துளிகளில் 1 3 5 ௦ ௦ ௦ பேர் பாதிக்கப்பட்டனர். இது உலகையே உலுக்கிய ஒரு நிகழ்வு. 1898 ஆண்டு மேரி cueri அணுசக்தி குறித்த ஆக்க செயிதிகளை வெளியிட்டாலும் முதன்முதலில் 1949 ரச்யவில் அனுகுண்டுக்குதன் பயன்படுத்தப்படது.அதனால் அணுசக்தியின் நோக்கம் அழிவுக்குரியதகத் தான் தொடங்க்கியது.
இப்பின்னணியில் இந்தியாவும் 1954 இல் அணுசக்திதுறையை அமைக்கின்றது. கைகா, கோரக்பூர், நரோர, தாராப்பூர், கல்ப்பக்கம், இராஜஸ்தான், புதுடில்லி ஆகிய இடங்களில் கட்டிமுடிகப்பட உலைகளும், ஜைத்தாபூர், கூடன்குளத்தில் உலைகளுக்கான வேலைகளும் நடக்கின்றன. 2012 வரை அணுசக்தித்துறை 4,780 MW தான் உற்பத்தி செய்கிறது. இது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 2% தான். வரும் 2032க்குள் 63,000MW உற்பத்தி இலக்கை எட்ட உத்தேசித்துள்ளது. சுமார் 69 ஆண்டுகளாக அணுசக்திக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணத்தை கண்ணக்கிட்டு பார்த்தல் நாட்டின் ஒட்டுமொத்த மின் தேவையையும் நிவர்த்தி செய்திருக்கலாம்.
எரிசக்திக்கு தேவையான மூலப்பொருட்கள் குறைவதாலும் அனல் மின்நிலையங்களால் சுற்றுபுரசுழல் பதிக்க படுவதாலும் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் அணுசக்தி தான் எதிர்காலத்தில் நாட்டை காப்பாற்றும் என்று சொல்லும் அணுசக்தி துறையிடம் சில கேள்விகளை முன்வைக்கின்றோம். 1 அணுஉலையினால் ஏற்படும் கதிர்விச்சு மக்களை அழிக்காதா?
2 அணு உலைக்கு எடுக்கப்படும் நன்ன்னிரினால் வேளாண்மை பாதிக்காதா?
3 அணு உலையிருந்து வெளிவரும் கழிவுநிரினால் கடல்வளம் அழியாதா?
4 விபத்து ஏற்ப்பட்டால் மொத்த இடமும் சுடுகாடாக மாறுவதை ஏற்க்கமுடியுமா? அழியும் உயிர்களுக்கு ஈடுகொடுக்க முடியுமா?
5 35-40ஆண்டுகள் கழித்து உலையையும், அதன் கழிவையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் காப்பதற்கு செலவு யார்செய்வார்?
மின்சாரத்திக்காக மொத்த மக்களையும் கவுகொடுக்க அரசு அணுசக்தியை முன்வைக்க்றது என்றால் அதைத்தாண்டி ஏதோவொரு நோக்கம் இருப்பதாகவே படுகிறது. அதுதான் வல்லரசு கணவு, அதற்கு அணுகுண்டு தேவைபடுகின்றது. அதற்க்கான மூலப்பொருளை உற்பத்தி செய்ய மின்சாரத்தின் பேரில் அணு உலைகள் கட்டப்படுகின்றன.
வரலாற்றில் தவறான அறிமுகம் பெற்று இன்றுவரை தவறாகவே பயன்படுத்தப்படும் இந்த அணுசக்தி நமக்கு வேண்டாம் என்ற உருதிஎர்க்கதந் இன் நாளை முன்மொழிகிறார்கள் அணுசக்தி எதிர்ப்பாளர்கள்."


நன்றி;மை.பா. நன்மாறன்

தமிழனுக்குத் தனிநாடுதான் தீர்வு!

:                           "தனிநாடு கேட்டுப் போராடிய தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்!
தனிநாடு கேட்டுப் போராடும் தமிழர்களுக்குத் தனிஈழம் அமைத்துக் கொடுக்க வேண்டும்!
நேர்மையாக சிந்தித்தால் இவை இரண்டும்தான் தீர்வுகள். மற்ற அனைத்தும் பித்தலாட்டத்தின் பல்வேறு வடிவங்கள்!
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வழக்கமாக இரண்டு குழி வெட்டுவார்கள். ஒன்றை தில்லி வெட்டும்! மற்றொன்றை திராவிடம் வெட்டும்! தில்லி வெட்டிய குழியில் தமிழ்நாட்டுத் தமிழன் விழாமல் தப்பித்தால் திருட்டுத் திராவிடம் வெட்டிய குழி இவனை விழுங்கக் காத்திருக்கும்!
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று வரிந்து கட்டி கருணாநிதி ஆடும் ஆட்டம், பச்சையான பித்தலாட்டம்! தில்லி காங்கிரசு சொல்லிக் கொடுத்து கருணாநிதி ஆவேச நடனம் ஆடுகிறார்.
நீ போனால் என்ன? போய்த் தொலையாமல் இருந்தால் என்ன?
கொலைகாரனுக்கு என்ன தண்டனை? என்பது பற்றி மட்டும் பேசு!
ஆடுகளையும் நரிகளையும் ஒரு பட்டியில் எப்படியடா அடைப்பாய்?
கொலையுண்ட மக்களின் பிறங்கடைகளும் கொலைவெறித் தாண்டவம் ஆடியவனும் ஒரு வீட்டுக்குள் எப்படியடா குடும்பம் நடத்தச் சொல்லுகிறாய்?
தமிழனுக்குத் தனிநாடுதான் தீர்வு!
அதற்காகத்தான் எங்கள் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன!
தமிழர் களம்
தமிழர் நாடு"

தமிழா, ஏமாறாதே!


                          "இன்றைய நாளேடுகளில் இந்திய அரசு ஒரு முழுப்பக்க விளம்பரத்தைக் கொடுத்துள்ளது, “இலங்கையில் இந்தியா ஆற்றும் பணிகளை” படங்களோடு போட்டிருக்கிறார்கள்.
முடமான ஒருவருக்கு செயற்கைக் கால்கள் வழங்குவதும் அப்படங்களுள் ஒன்று! புதிய வீடுகள் கட்டப்பட்டிருப்பது மற்றொரு படம். இப்படிச் சில அந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளன.
ஏன் முடமானார்கள்? ஏன் வீடிழந்தார்கள்? ஏன் நிலங்களையும் வசதிகளையும் இழந்தார்கள்?
நிவாரணம் பற்றிப் பேசும் இந்தியா நடந்தது என்ன என்று ஏன் பேச மறுக்கிறது? இலங்கை அரசுப் படைகள்தான் ஊனமாக்கின, நாசமாக்கின என்றால் இந்தியா ஏன் போய் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறது?
நாசமாக்கியதிலும் ஊனமாக்கியதிலும் ஏதோ தொடர்பு இருப்பது போலவே இந்தியா நடந்து கொள்கிறது!
ஊனமுற்றவனுக்குச் செயற்கைக் கால் கொடுக்கிறது! வீடிழந்தவருக்கு வீடு கட்டிக் கொடுக்கிறது?
கற்பிழந்த எம் பெண்களுக்கு கற்பைத் திரும்பத் தருவார்களா? உயிரிழந்த எம் மக்களுக்கு உயிரைத் திரும்பத் தருவார்களா? நீ உடைத்த ஈழத்தை திரும்பத் தருவாயா?
இனியும் இப்படி நடக்கக் கூடாது என்றால், நமக்கு நிவாரணம் தேவை இல்லை! தாக்கியவனுக்குத் தண்டனை வேண்டும். தாங்கியவனுக்கு பாதுகாப்பு வேண்டும்.
தாக்கிய இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்! அப்படியானால்தான் மீண்டும் ஒரு முறை இப்படிப்பட்ட ஈனச் செயல்களில் அவர்கள் இறங்கமாட்டார்கள். மற்றவர்களுக்கும் அது பாடம்! அதை மட்டுமே நம்பி எஞ்சியிருக்கும் பெண்களையும் மக்களையும் காணிகளையும் சிங்களரிடம் கையளித்துவிட முடியாது. எனவே, நமக்கு நிலையான பாதுகாப்பு என்பது தனி ஈழமே!
கருணாநிதியும் செயலலிதாவும் வைகோவும் அவர்போன்றோரும் இப்போது ஏதோ புரட்சி வேடம் கட்டி நாடகம் ஆடுவதை நம்பத் தொடங்கிவிடாதீர்கள். “இந்தியா இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது” என்கிற கோரிக்கை தமிழர்களின் முதன்மையான கோரிக்கையான, “இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணையும் நடவடிக்கையும் தேவை” என்ற நிலையிலிருந்து இவர்கள் நம்மை இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது ராசபக்சேவைத் தப்ப வைக்க இந்தியா முன்னெடுத்துக் கொடுத்திருக்கிற ஒரு நடவடிக்கை. இதில் இந்தியா கலந்து கொள்வது அல்லது கூடாது என்கிற உப்புச் சப்பற்ற கோரிக்கை ஒரு திசை திருப்பல் நாடகம்.
தில்லி பெரிய நாடகம் ஆடுகிறது. தமிழ்நாட்டுத் திராவிடங்கள் இந்தியாவோடு சேர்ந்துகொண்டு கொடுத்த பாத்திரத்தைப் பத்திரமாக நடிக்கின்றன! தமிழா, ஏமாறாதே!
தமிழர்களம்
தமிழர்நாடு!"

புதன், நவம்பர் 06, 2013

சுப. உதயகுமாரன் ம.க.இ.க. தோழர்களுக்கு ஒரு திறந்த கடிதம்!!



 தோழர்களே,

                                வணக்கம். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்துக்கு எதிராக இடிந்தகரை, கூடங்குளம் பகுதி மக்கள் ஆதரவுடன் 2011 ஆகஸ்ட் முதல் ஓர் உச்சமான போராட்டத்தை நாங்கள் தொடங்கி நடத்தி வருகிறோம். போராட்டம் தொடங்கி சுமார் மூன்று மாதங்கள் கழி...த்து உங்கள் இயக்கத்தைச் சார்ந்த ஒரு குழு இடிந்தகரைக்கு வந்து எங்களை சந்தித்தனர். உங்கள் இயக்கத்தைப் பற்றி, செயல்பாடுகள் பற்றி எங்களில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உங்கள் எண்ணங்களை, ஆலோசனைகளை நான் கவனமாகக் கேட்டேன், உங்களோடு ஒரு கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டேன்.

                          உங்களின் கொள்கைகளில், செயல்பாடுகளில் முழு உடன்பாடு இல்லையென்றாலும், நீங்கள் ஒரு மதவாத, சாதீய, பிற்போக்கு சக்தியல்ல என்பதன் அடிப்படையில் உங்களோடு தொடர்ந்து இணைப்பில் இருந்தேன். எங்கள் நிகழ்வுகளை உங்களுக்கு அறியத் தந்தேன். கூடங்குளம் போன்ற பிரச்சினைகள் ஓர் இயக்கத்துக்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவுக்கோ மட்டுமே சொந்தமல்ல என்பதில் நானும், எங்கள் போராட்டக் குழுத் தோழர்களும் தெளிவாகவே இருந்து வருகிறோம். அந்த அடிப்படையில் உங்கள் இயக்கம் நடத்திய போராட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவாகவே செயல்பட்டோம். தூத்துக்குடியில் நீங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நானும், சில தோழர்களும் கலந்து கொண்டோம்.

                      பிப்ரவரி 11, 2012 அன்று கூடங்குளம் அணுமின் நிலைய முற்றுகைப் போராட்டம் ஒன்றை அறிவித்து, கூத்தங்குழி மக்களை சந்தித்து அந்தப் போராட்டத்துக்கு வரும்படி அழைத்தீர்கள். “உதயகுமார் சொன்னால்தான் வருவோம்” என்று அவர்கள் சொன்னதன் அடிப்படையில் ஒருநாள் இரவு இடிந்தகரைக்கு வந்து எங்களை சந்தித்து, கூத்தங்குழி மக்களை அனுப்பும்படி கேட்டுக் கொண்டீர்கள். ஏன் ஒரு குறிப்பிட்ட ஊர் மக்களை மட்டும் அழைக்கிறீர்கள், உங்களின் உண்மையான செயல் திட்டம் என்ன என்று விவாதித்த நாங்கள், இன்னொரு இயக்க நிகழ்வுக்கு நம் மக்களை அனுப்புவது சரியாக இருக்காது என்று தீர்மானித்தோம். இந்த நிலையில் கூடங்குளம் நண்பர்கள் ஒரு சிலரின் உதவியோடு எனக்கு எதிராக எங்கள் இயக்கத்துக்கு ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டீர்கள். கூடங்குளம் ஊருக்கு அடிக்கடிச் சென்று அங்குள்ள தோழர்களிடம் நிறையப் பேசி அவர்களை மசிய வைக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நான், அந்த நிலையிலும் உங்களை உதாசீனப்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தேன்.

                     மார்ச் 19, 2012 அன்று தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கூடங்குளம், கூட்டப்புளி, செட்டிக்குளம் தோழர்களைக் கைது செய்தபோது, அவர்களைப் பிணையில் எடுப்பதற்கு உதவ முன் வந்தீர்கள். நெல்லையைச் சார்ந்த வேறு பல சார்பற்ற வழக்கறிஞர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்ததால், அவர்களையும் இணைத்துக் கொண்டு செயல்படும்படிக் கேட்டு, அந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தோம். தாங்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்று அவர்கள் ஆதங்கப்பட்ட நிலையிலும், உங்களோடு தொடர்ந்து செயல்பட்டோம் நாங்கள். ஆனால் உங்களின் “புதிய ஜனநாயகம்” இதழின் மார்ச் 2012 தலையங்கத்தில் இப்படி எழுதினீர்கள்: “புலிகள் பிரபாகரனைப் போல ஜெ உதவியுடன் வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார். முள்ளிவாய்க்காலுக்கு நேர்ந்த முடிவு இடிந்தக்கரையிலும் ஏற்படக் கூடாது.”

                     “ஜெ உதவியுடன் வெற்றி பெற முடியுமென்று” நான் எங்கேயும், எப்போதும் சொல்லவுமில்லை, அப்படி நம்பவுமில்லை, யாரையும் நம்பச் சொல்லவுமில்லை. தமிழக அரசியல் நிலை, யதார்த்தம், கட்சிகள், ஆளுமைகள் பற்றியெல்லாம் எனக்கு நன்றாகவேத் தெரியும். கூடங்குளம் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதாலும், மத்திய அரசையும், மாநில அரசையும் ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராடுவது கடினமென்பதாலும், சில நடைமுறை தந்திரங்களைக் கைக்கொண்டோமே தவிர எங்களை, மக்கள் போராட்டத்தை யாரிடமும் நாங்கள் அடகு வைக்கவில்லை.

                         கைதானத் தோழர்களை பிணையில் எடுப்பதற்காக நாம் சேர்ந்து முயற்சிகள் மேற்கொண்டிருந்த நேரத்திலேயே, “கூடங்குளம் போராட்டத்தின் தலைமை சரியில்லை” என்ற கருத்தை ஏப்ரல் 21, 2012 அன்று திருநெல்வேலியில் நடந்த ஒரு கருத்தரங்கில் தெரிவித்தீர்கள். அதை ஒரு விமர்சனமாக கருதி உங்கள் மேல் கோபம் கொள்ளாமல், உங்கள் கருத்துரிமையாக எடுத்துக்கொண்டுக் கடந்து சென்றோம் நாங்கள்.

                            2012 மார்ச் மாதம் நானும், புஷ்பராயனும், இன்னும் சில தோழர்களும் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதத்தின் காரணமாக, எங்கள் மக்கள் குழுவோடு அரசு தரப்பு நடத்தியப் பேச்சுவார்த்தையில், கைதாகி சிறையில் இருப்பவர்கள் அனைவரையும் அரசு தரப்பில் எந்த ஆட்சேபணையும் இன்றி பிணையில் விடுவதற்கு முன்வந்தனர். அதற்கான செலவாக, உங்களுக்கு இடிந்தகரை மக்கள் ரூ.1,25,000 தந்தார்கள்; கூட்டப்புளி மக்கள் ரூ. 65,000 தந்தார்கள்; கூடங்குளம் நண்பர் ஒருவர் ரூ. 5,000 தந்தார். மொத்தம் ரூ. 1,95,000 தந்தோம். இதில் ரூ. 69,267-க்கானச் செலவு விபரங்களை தெளிவாக, முறையாக எழுதி என்னிடம் தந்தீர்கள்; நான் அந்த ஆவணத்தின் ஒரு நகலை இடிந்தகரை நிதிக் குழுவிடம் கொடுத்துவிட்டு, முதல் படியை பத்திரமாக வைத்திருக்கிறேன்.

                       நானோ, எனது தோழர்களோ வெளியாரிடம் ம.க.இ.க. தோழர்கள் வழக்குச் செலவுகளுக்கு இவ்வளவு பணம் வாங்கினார்கள் என்றோ, இவ்வளவு செலவு ஆயிற்று என்றோப் பேசியதே கிடையாது. அதற்கானத் தேவையும் எழவில்லை. ஆனால் நீங்கள் போகும் இடங்களில் எல்லாம் “ஒரு ரூபாய் கூட வாங்காமல், வழக்கு நடத்தினோம்” என்று ஒரு சுய விளம்பரத்தைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். இதைப் பற்றி சிலர் எங்களிடம் விசாரித்தபோதுதான், வழக்குச் செலவுகளுக்காக நாங்கள் ரூ. 1,95,000 கொடுத்தோம் என்று சொல்ல வேண்டியதாயிற்று. “எங்களுக்கானக் கட்டணம் எதுவும் வாங்கவில்லை, செலவுகளுக்கு மட்டும் காசு வாங்கினோம்” என்ற உண்மை விபரத்தை நீங்கள் சொல்லியிருக்கலாம்.

                       அக்டோபர் 9, 2013 அன்று இடிந்தகரைக்கு உங்கள் குழு ஒன்று வந்து, உங்களின் தாது மணல் போராட்டம் பற்றி சுமார் பத்து நிமிடம் என்னிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றீர்கள். அந்த மிகக் குறுகிய காலகட்டத்திலேயே உங்களில் ஒருவர் இடிந்தகரைக்கு வந்திருந்த ஜூனியர் விகடன் நிருபர், தம்பி மகா. தமிழ்ப்பிரபாகரனிடம் “இவர்களிடம் காசே வாங்காமல் நாங்கள் வழக்கு நடத்திக் கொடுத்தோம்” என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர் எங்களிடம் கேட்டார். சுமார் இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் உங்கள் சேவை பரப்புரையை நீங்கள் கைவிட்டபாடில்லை. இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே, இப்போது இந்த பணப் பிரச்சினை பற்றி இங்கே நான் குறிப்பிடுகிறேன். தயவு செய்து இனிமேல் “எங்களுக்கானக் கட்டணம் எதுவும் வாங்கவில்லை, வழக்குச் செலவுகளுக்கு மட்டும் ரூ. 1,95,000 வாங்கினோம்” என்ற உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் “காலத்தினாற் செய்த” உதவியை இதுவரை நாங்கள் காசால் அளக்கவுமில்லை, உதவியை மறக்கவும் மாட்டோம். தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள பல வழக்கறிஞர்கள் உங்களுக்கும், எங்களுக்கும் பணம் ஏதும் பெறாமல் உதவியதையும் நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும் (அவர்களையும் இணைத்துக் கொண்டு, போராட்டத்தின் வழக்கறிஞர்கள் குழுவை ஒருங்கிணையுங்கள் என்று நான் கேட்டுக் கொண்டபோது, முதலில் இணக்கம் தெரிவித்த நீங்கள், பின்னர் ஏதோ காரணத்தால் பதிலேதும் சொல்லாமல் விலகிச் சென்ற கதையை எல்லாம் இங்கேப் பேசி பலனில்லாததால், விட்டுவிடுகிறேன்).

                                   இந்த நிலையில் “புதிய ஜனநாயகம்” மே 2012 இதழில் “கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்” என்ற கட்டுரையில் அபாண்டமானக் குற்றச்சாட்டுக்களை அடுக்கினீர்கள்:

[1] “போராட்டங்களுக்கு அணிதிரண்ட மக்கள் மீது, அவர்களை வழிநடத்திய தலைமை மற்றும் முன்னணியாளர்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை. அம்மக்களைப் பற்றிய குறை மதிப்பீடு கொண்டிருந்தார்கள்.”

[2] “எத்தகைய எதிரிகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும் என்ற உண்மை அங்கு போராடும் மக்களிடம் சொல்லப்படவே இல்லை.”

[3] “கூடங்குளம் திட்டம், ஆட்சியாளர்கள், அமெரிக்க-ரஷ்யா முதலிய மேலைநாடுகள், இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆகியோருக்கு எவ்வளவு முக்கியமானது; என்ன விலை கொடுத்தாவது, என்ன காரியம் செய்தாவது கூடங்குளம் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் எவ்வளவு மூர்க்கமாகவும் உறுதியாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்கிற விவரம் போராடும் மக்களைச் சென்றடையவே இல்லை.”

[4] “பால்குடம் எடுப்பதும், பட்டினி கிடப்பதும் என்ற அமைதி வழியிலேயே, காந்திய வழியிலேயே போராடி வருவதாகத் திரும்பத் திரும்ப உதயக்குமார் முதலியவர்கள் மன்றாடினர்.”

[5] “குறைந்தபட்சம் சிங்கூர், நந்திகிராமம் போராட்டங்களுக்கு திரண்டதைப்போன்று பரவலான மக்கள் ஆதரவைத் திரட்டியிருக்கவேண்டும்.”

[6] “கூடங்குளம் போராட்ட முன்னணியாளர்கள் ஜெயலலிதா போன்ற பிழைப்புவாதக் கழிசடைகளின் மீது நம்பிக்கை வைக்கும்படி சொன்னார்கள். இப்போது அவர்கள் நம்ப வைத்து வஞ்சகம் செய்து விட்டதாகப் புலம்புகிறார்கள். ஆக, மக்கள், மக்கள் மட்டுமே நம்பிக்கைக்குரிய மகத்தான சக்தி என்ற கொள்கையில் ஊன்றி நிற்கும்போதுதான் இலட்சியத்தை எட்டமுடியும் என்பது கூடங்குளம் போராட்டங்கள் நமக்குக் கற்றுத் தரும் படிப்பினை.”

                           எங்கள் மக்களைப் பற்றி எந்த மாதிரியான மதிப்பீடு நாங்கள் கொண்டிருக்கிறோம்; அவர்கள் எங்களை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்று எங்கள் மக்களிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே? எதற்காகப் போராடுகிறோம், யாரை எதிர்த்துப் போராடுகிறோம், அவர்களின் பலம் எத்தகையது என்றெல்லாம் உங்களுக்கு பாடமே எடுப்பார்களே எங்கள் மக்கள்? இடிந்தகரைக்கு வருகிற ஒவ்வொரு பத்திரிகையாளரும் இவை பற்றிய தகவல்களை எத்தனையோ முறை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார்களே? மேலும் உங்களின் 37 வருட புரட்சி வரலாற்றில் எந்த பரவலான மக்கள் ஆதரவையும் எந்தப் பிரச்சினைக்கும் திரட்டாத நீங்கள், எங்களுக்கு மக்கள் சக்தி பற்றியும், போராட்ட முறை பற்றியும் வகுப்பு எடுப்பது நகைச்சுவையாக இருக்கிறது.

                   விசுவாமித்திரர் கோவிலுக்கு பால்குடம் எடுத்தது கூடங்குளத்தைச் சார்ந்த இந்து மக்களே தவிர, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமோ, போராடிக்கொண்டிருக்கும் பொதுமக்களோ அல்ல. நான் அந்த மக்களோடு விசுவாமித்திரர் கோவிலுக்குப் போனேன் அவர்களுடைய மத உணர்வுகளை அவமதிக்காமலிருப்பதற்காக; எங்கள் போராட்டம் எந்த ஒரு மதத்தையும் முன்னிறுத்துவது அல்ல என்று நிரூபிப்பதற்காக. மேலும் ‘பொருள் முதல்வாதம்’ மட்டுமே சமூக மாற்றத்துக்கான அடிப்படையாக முடியாது, மக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவையும் முக்கியமானவை என்று நம்புகிறவன் நான்.

                  “ஜெயலலிதா போன்ற பிழைப்புவாதக் கழிசடைகளின் மீது நம்பிக்கை வைக்கும்படி” நான்/நாங்கள் சொன்னது போலவும், “அவர்கள் நம்ப வைத்து வஞ்சகம் செய்து விட்டதாகப்” புலம்பியது போலவும் எழுதினீர்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எங்கள் எழுத்தோ, பேச்சோ ஏதாவது இருக்கிறதா உங்களிடம்? அல்லது இதுவும் ஓர் அடிப்படையற்ற புரட்சிகரக் குற்றச்சாட்டுதானா?

                     மேற்கண்ட கட்டுரையில் ஒரு சுவாரசியமான தகவலை குறிப்பிட்டிருக்கிறீர்கள்: “கூடங்குளத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள சென்னை மக்களிடம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர இயக்கங்கள் அணு சக்தி அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை எடுத்துச் சென்றபோது கூட முதலில் கடும் எதிர்ப்பையே கண்டார்கள். ஆனால், அவர்கள் பிரச்சார முயற்சியில் அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்தபோது, ஆதரவு தருபவர்களாக மக்கள் மாறினர்.” அற்புதமானப் புரட்சியாக இருக்கிறதே? இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்? “அணு சக்தி அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை” எப்படி எடுத்துச் சென்றீர்கள்? என்னென்ன நிகழ்வுகள், எங்கெங்கு, எத்தனை முறை, எப்படியெல்லாம் நடத்தினீர்கள்? எந்தவிதமான “கடும் எதிர்ப்பை” எதிர்கொண்டீர்கள்? “அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்த” வித்தை பற்றியும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்?

                     சிங்கூர், நந்திகிராமம் போல கூடங்குளம் போராட்டத்தை மாற்ற வேண்டும் என்று பல இடங்களில் உங்களில் சில தோழர்கள் பேசியிருக்கிறீர்கள். அப்படிப் பேசுவது, நம்புவது உங்கள் கருத்துரிமை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஒருமுறை உங்கள் கலைக்குழுவினர் இடிந்தகரை மேடையில் இதே கருத்தை வலியுறுத்திப் பாடினார்கள். இந்த வன்முறைக் கருத்துக்கு நான் உங்களிடம் எதிர்ப்பு தெரிவித்தபோது, “சும்மா ஒரு எழுச்சிக்காகவே அப்படிப் பாடினார்கள்” என்று விளக்கம் அளித்தீர்கள். உங்களின் புரட்சியையும், அதன் தீரத்தையும், உண்மைத் தன்மையையும் நான் அன்றைக்கு தெளிவாகப் புரிந்துகொண்டேன்.

                      கடந்த 2012 செப்டம்பர் மாதம் நாங்கள் கடலோரத்தில் நடத்திய அணுஉலை முற்றுகைப் போராட்டத்தின்போது முதல் நாளும், இரண்டாம் நாளும் பல்வேறு அமைப்பினர் பங்கு கொண்டதைப் போல நீங்களும் கலந்து கொண்டீர்கள். காவல்துறை தாக்குதலின்போது என்னையும், தோழர்கள் புஷ்பராயனையும், முகிலனையும் மக்கள் படகுகளில் ஏற்றி அப்புறப்படுத்தியபோது, மை.பா. நன்மாறன் (சேசுராசு), பங்குத்தந்தை செயக்குமார், மில்டன், கெபிஸ்டன் போன்றோர் இடிந்தகரையில் இருந்து போராட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டிய நிலை எழுந்தது. அவர்களுக்கு ஒத்தாசையாக நீங்களும் இருந்து உதவியதை எங்கள் மக்கள் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். பின்னர் நாம் நேரில் சந்தித்தபோது, நான் எனது நன்றியைத் தெரிவித்தேன்; அதை மேடையிலும் அறிவித்தேன். ஆனால் நீங்கள் உங்களை மட்டுமே முன்னிறுத்தி ஒரு மாற்று வரலாற்றையே வடித்திருந்தீர்கள் உங்கள் இணையதளத்திலும் (“கூடங்குளம்: போர்க்குணம் கமழும் எழுச்சி – போராட்டத் தொகுப்பு” அக்டோபர் 8, 2012), உங்கள் இதழிலும் (புதிய ஜனநாயகம், அக்டோபர் 2012).

                       பின்னர் நீண்ட நாட்களாக எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தோம் நாம். இந்நிலையில் அக்டோபர் 18, 2013 அன்று மதியம் எங்கள் போராட்டத் தலைவியர் திருமதி. சுந்தரி, திருமதி. சேவியர் அம்மா போன்றோரின் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தாது மணற்கொள்ளை சம்பந்தமாக விண்ணப்பம் ஒன்றைக் கொடுக்க திருநெல்வேலிக்குச் சென்றிருந்தார்கள். நீங்களும் அதேப் பிரச்சினை சம்பந்தமாக ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்குப் போயிருக்கிறீர்கள். உங்கள் புரட்சியை மட்டுமே நடத்துவதற்குப் பதிலாக, எங்கள் குழுவில் தலையிட்டு, வந்திருந்தப் போராளிகளில் ஒருசிலரைத் திசைதிருப்பி அங்கிருந்த பத்திரிகையாளர்களோடும், காவல்துறையினரோடும் மோதச் செய்து, அவர்களைக் கைது செய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறீர்கள். எங்கள் போராளிகளின் தெளிவானப் பார்வையால், புரிதலால், செயல்பாட்டால் அவர்கள் தங்களை காத்துக் கொண்டார்கள். அழையா விருந்தாளிகளாக நீங்கள் உள்ளே நுழைந்து, தலைவராக எத்தனித்தது, தவறாக வழிநடத்தியது கண்டிக்கத் தகுந்தது.

                       வழக்கம்போல உங்கள் இணைய தளத்தில் (“மணல் கொள்ளையர்களை எதிர்த்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை,” அக்டோபர் 21, 2013) வரலாறு ஒன்றை எழுதி, உலகுக்கே அணுசக்தியின் அழிவிலிருந்து உய்வடையும் வழி சொல்லிக் கொண்டிருக்கும் எங்கள் போராளிப் பெண்களை “ஆட்சியர் அலுவலக கட்டிடத்தினுள் அழைத்துச் சென்று அமரச் செய்து கோஷங்கள் எழுப்பச் செய்தோம்” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். “நேற்று நடந்த போராட்டத்தில் ம.உ.பா.மைய வழக்குரைஞர்கள் மக்களுடன் உறுதியாக களத்தில் நின்றது, வழிகாட்டியது மற்றொருமுறை ம.உ.பா.மையம் மக்களுடன் உறுதியாக முன்னணியில் நிற்கும் என்ற நம்பிக்கையை இடிந்தகரை உள்ளிட்ட கடலோர மக்களுக்கு ஏற்படுத்துவதாக அமைந்தது” என்று நீங்கள் எழுதியிருப்பது உங்களைப் பற்றி உங்களுக்கே ஒருவித சந்தேகம் இருப்பது போலவேப்படுகிறது.

                      கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை, தாதுமணற் கொள்ளை பிரச்சினை பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் கடலோர மக்கள் மத்தியிலேயே நீங்கள் தொடர்ந்து பரப்புரை செய்வது ஏன்? இந்தப் பிரச்சினைகள் பற்றி போதிய விழிப்புணர்வில்லாத உட்பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் பரப்புரை செய்யலாமே? கடலோர ஊர்களிலுள்ள இளைஞர்களைப் பிடித்து, என்னைப்பற்றி, எங்கள் இயக்கத்தைப் பற்றி அவர்களிடம் தவறாகப் பேசி, மூளைச்சலவை செய்வது உண்மையிலேயே தேவைதானா? இக்கேள்விகளைக் கேட்பதற்காகத்தான் இக்கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.

                      நான் உங்களை இன்னும் தோழர்களாக, தோழமை இயக்கங்களாகத்தான் பார்க்கிறேன். ஆனால் ‘மக்களை நம்பாத, மதிக்காத, போராட்டம் நடத்தத் தெரியாத நீயும், புரட்சியாளர்களாகிய நாங்களும் எப்படி தோழர்களாக இயங்க முடியும்’ என்று நீங்கள் கேட்கலாம். என்னைப் பொறுத்தவரை, மக்களுக்காக, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் அனைவரும் தத்தம் அடிப்படைக் கொள்கைகளில், சித்தாந்தங்களில் சமரசமின்றி, ஒரு பொது வெளியை உருவாக்கி, ஒன்றாக நிற்பதும், சேர்ந்து உழைப்பதும் முக்கியம் என்று நினைக்கிறேன். அம்மாதிரியான இணக்கம் இயலாமற்போனால், நாகரிகமாகப் பிரிந்து தத்தம் வழிகளில் அந்த இலக்கை நோக்கி நடக்கலாம். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதும், குறை சொல்வதும், குற்றம் காண்பதும், தம்மை முன்னிலைப் படுத்துவதும், பிறரைப் பழிப்பதும் முதிர்ச்சியற்ற அணுகுமுறை என்றே நினைக்கிறேன். தமிழக அரசியலில், பொது வெளியில், இம்மாதிரியான நேர்மைக்கோ, நாகரிகத்திற்கோ, உரிமையோடு இடித்துரைக்கும் பண்புக்கோ மரியாதை கிடையாது என்பதையும் அறிவேன். “நடந்ததைக் கேட்டால், அடுத்தது பகைதான்” இங்கே.

                           உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அறிவோ, ஆற்றலோ, அனுபவமோ எனக்கு இல்லையென்றாலும், என்னுள் தோன்றும் ஓரிரு கருத்துக்களைச் சொல்வதற்கு தயவு செய்து என்னை அனுமதியுங்கள்.

[1] நீங்கள் அனைவருமே மக்கள் பிரச்சினைகளில் அக்கறையுள்ளவர்கள், மக்களுக்காக உழைக்கும் உத்வேகம் உடையவர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சொல்லில் முழு உண்மையைப் பேணி, செயலில் முழு நேர்மையைக் கைக்கொண்டால், உங்கள் பணி இன்னும் சிறக்கும்.

[2] நீங்கள் பிறரோடு ஒன்றிணைந்து நடத்தும் போராட்டத்தில் தவறுகள் நடந்தால் பிறரைப் பழிப்பதும், சமூக மாற்றங்கள் நடந்தால் உங்களின் வெற்றியாகக் கொண்டாடுவதும், உங்களையே உயர்த்திப் பிடித்துக் கொள்வதும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமாகவேக் கொள்ளப்படும்.

[3] காக்கைக் கூட்டில் முட்டையிடும் குயில் போல, அடுத்தவர் நடத்தும் போராட்டத்தில் நுழைந்து புரட்சி செய்யாதீர்கள். ஒரு தலைமையில் ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருந்தால், அவர்களுடன் நின்று உதவுங்கள், அல்லது விலகிச் செல்லுங்கள். போராடும் மக்களிடையேப் போய் புதிய புரட்சியாளர்களைத் தேடுவது, உள்ளேபோய் நின்று குழிபறிப்பது, குழு அமைப்பது, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது – இவையெல்லாம் நேர்மையானப் புரட்சியல்ல.

[4] “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்றியங்கும் ‘புரட்சி’ ஓர் அற்புதமான சொல், செயல். இது தமிழகத்தின் அரசியலிலும், மக்கள் இயக்கங்களிலும், சினிமாவிலும் படும்பாடு வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. நாமனைவருமாகச் சேர்ந்து இந்தச் சொல்லின், கோட்பாட்டின் மகத்துவத்தைக் காப்பாற்ற முயல்வோம். “கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் எவையென அறிவுமிலார்” நிறைந்து கிடக்கும் நம் நாட்டில், நம்மைப் போன்ற சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் சேர்ந்து நிற்பதும், தேர்ந்து செயலாற்றுவதும் புரட்சியின் அடிப்படைத் தேவை. காந்திப் பெருமகனார் சொன்னது போல, நாம் காண விரும்பும் மாற்றத்தை நாமே வாழத் துவங்குவதுதானே கற்றுணர்ந்த நமது கடமை.

அன்புடன்,

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
அக்டோபர் 26, 2013

(வேர்கள், நவம்பர் 2013 இதழில் வெளியிடப்பட்டது)
நன்றி: நம் வேர்கள் மாத இதழ் 

காமன்வெல்த் நாடகம்!

 
                     ஓர் அமைப்பை உருவாக்குகிறோம்.  சமத்துவம், மாந்த உரிமை, இன உரிமை போன்ற உயரிய கொள்கைகளுக்காக அந்த அமைப்பில் 53 பேர் இணைகிறார்கள்.  அதில் ஒருவன் ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அமைப்பிலிருந்த ஒருவரை வெட்டிச் சாய்க்கிறான். மீதி பேரும் அதைப் பார்க்கிறார்கள்.  ஒன்று அவன் கொலைவெறியோடு வெட்டும் போது தடுத்திருக்க வேண்டும்.  அல்லது அவனைப் பிடித்து உதைத்து உரிய தண்டனை கொடுத்திருக்க வேண்டும்.  “நீ இந்த அமைப்பிற்கே லாயக்கு இல்லை” என்று அவனை அமைப்பிலிருந்து விலக்கியிருக்க வேண்டும்.  கொலையின் கொடூரத்தை முன்னிட்டு அவனுக்கு உச்சத் தண்டனையைக் கொடுத்திருக்க வேண்டும்.
 
                  இனப்படுகொலை செய்த இலங்கை அதிபருக்கும் அந்நாட்டின் குற்றவாளிகளுக்கும் தண்டனை அளிக்க இந்த காமன் வெல்த் நாடுகள் முன் வந்திருந்தால் அந்த அமைப்பின் நோக்கம் சிதையாமல் இருந்திருக்கும்.
ஆனால், நடப்பதோ தலை கீழாக இருக்கிறது.  இனப்படுகொலை நடந்த உடனேயே, முதலில் இலங்கையை காமன் வெல்த் நாடுகளின் அமைப்பிலிருந்து விலக்கி இருக்க வேண்டும்.  விசாரணையை முடுக்கிவிட்டு ராசபக்சேவையும் இலங்கை ராணுவத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை பெற உதவியிருக்க வேண்டும்.  ஆனால், காமன் வெல்த் மாநாடே ராசபக்சேவின் அக்குளுக்குக் கீழேதான் நடக்கப் போகிறது.
இந்தியாவின் இழிவான நிலைப்பாடு!
 
                  இந்த நீதி கேட்கும் போராட்டத்தில் முன்னிலையில் இருக்க வேண்டிய இந்தியா கொலையாளிக்கு முட்டுக் கொடுக்கிறது.  ஒருவேளை சர்வதேசிய அரங்கில் இலங்கைக்கு அதிக ஆதரவு இருப்பதாக இந்தியா கருதினால் குறைந்தபட்சம் அந்தக் கொலைகார இலங்கை இருக்கும் அந்த காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகிவிட்டால்கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் இந்தியா அதைவிட மட்டமான ஒரு நிலைக்குப் போகிறது.  இலங்கையில் அதே கொலைகாரன் தலைமையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கப் போவதாகக் கூறுகிறது.  தமிழ்நாட்டிலிருக்கும் திராவிடக் கட்சிகளும் சில தமிழ் தேசிய அமைப்புகளும் ஒன்றுக்கும் உதவான ஒரு வேண்டுகோளை இந்தியா முன் வைக்கிறது, “மாநாட்டில் கலந்து கொள்ளாதே!” என்று.என்ன மட்டமான சிந்தனை இது!  கொலையாளிக்குத் தண்டனை என்ற நிலையிலிருந்து சறுக்கிச் சறுக்கி “மாநாட்டில் கலந்து கொள்ளாதே!” என்கிற உப்புச் சப்பு இல்லாத கெஞ்சலுக்கு இறங்கி இருக்கிறது.  இதுதான் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானம்!  இதுதான் திரு. கருணாநிதி உள்ளிட்ட திராவிடத் தலைவர்களின் போராட்டம்!
 
           ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொடுமையாகப் பறிகொடுத்த தமிழினத்தின் ஒரே கோரிக்கை, “இலங்கையை தண்டி!  தனி ஈழம் அமை!” என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.
 
              உலக நாடுகளின் அனைத்து அவைகள், அமைப்புகள் முன்பாகவும் நாம் வைக்க வேண்டியது இரண்டே கோரிக்கைகள்தான்!
 
                              “இனப்படுகொலை செய்த இலங்கையைத் தண்டி!”
                    “தனிநாடு கேட்டுப் போராடும் தமிழருக்குத் தனிநாடு கொடு!”
 
                  போராட்டம், கோரிக்கை, வற்புறுத்தல் என்று அனைத்துமே இவைகள் நோக்கியதாகவே இருக்க வேண்டும்!  மீதி அனைத்துமே சறுக்கல், சமரசம்!
இனப்படுகொலை விவகாரத்தில் சறுக்கல், சமரசம் என்பதெல்லாம் பித்தலாட்டம், பிறதேசித்தனம்!  தலைவர்களுக்கு ஆயிரம் அழுத்தங்கள் இருக்கலாம்!  அவர்கள் ஒரு புறம் இருக்கட்டும்.  தமிழர்களே, நாம் இணைவோம்!  உலக நாடுகளின் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேட்போம்!  இவ்வாறு தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், நவம்பர் 04, 2013

தாது மணல் கொள்ளையர்களைக் கைது செய்யக் கோரி கரூரில் தமிழர்களம் ஆர்ப்பாட்டம்!!

 
 
              “60 ரூபாய் பிக்பாக்கெட் அடிக்கிறவனை உள்ளே தூக்கிப் போடுகிற இந்த அரசு 60 லட்சம் கோடி அடித்தவர்களை நாட்டில் சுதந்திரமாகச் சுற்றித் திரிய அனுமதித்திருக்கிறது.  இது சட்டத்தின் ஆட்சியா?  அல்லது மாஃபியாக்களின் ஆட்சியா?” என்று தமிழர்களப் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் கேள்வி எழுப்பினார்.
 
                 நேற்று கரூர் நகரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் உரையாற்றினார்.  தாது மணல் கொள்ளையில் ஈடுபடுகிறவர்கள் தனியொரு ஆட்சியே நடத்தி வருகிறார்கள்.  கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்த அரசு, நிலக்கரி ஊழலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த அரசு, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த அரசு மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை மட்டும் முட்டுக் கொடுத்துத் தாங்குகிறது என்றால் இந்த ஆட்சியில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கும் உள்ள நெருக்கத்தைத்தானே அது காட்டுகிறது.  எதிர்க்கட்சிகளும் வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றன என்றால் பணம் பாதாளம் வரை பாய்ந்திருக்கிறது என்பதுதானே பொருள்.
திரு. ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு செய்யச் சென்றபோது அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் மணல் மாஃபியாக்களால் தடுத்து நிறுத்தப்படுகிறார்.  சில ஊடகவியலார்கள் அவர் முன்னிலையிலேயே கடத்தப்படுகிறார்கள்.  இத்தனையையும் பார்த்தபிறகு, காவல்துறை கை கட்டி நிற்கிறது.  அப்படியானால் இது யாருக்கான ஆட்சி?  மாஃபியாக்களின் ஆட்சி இல்லையா?
 
                250 ஆண்டுகளில் படிப்படியாகவும் முறைப்படியும் அள்ளி அரசுக்கும் மக்களுக்கும் வருவாய் ஈட்ட வேண்டிய தமிழகத்தின் மணல் வளத்தை 20 ஆண்டுகளில் மொத்தமாக வழித்தெடுத்து முடித்துவிட்டார்கள்.  ஆறு அங்குலத்திற்கு வழிக்க வேண்டிய மணலை அரக்க எந்திரங்களைக் கொண்டு அள்ளி எடுத்திருக்கிறார்கள்.  கடற்கரைகளில் பாறைகள் தென்படும் அளவிற்கு மணலை கொள்ளை கொண்டு போய் இருக்கிறார்கள்.  30 அடி 40 அடி ஆழத்திற்கு மணலை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.  அரசுக்கு 60 லட்சம் கோடி இழப்பீடு என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் கூறுகிறது.  இவையெல்லாம் அத்தான காட்டுக்குள் யாருமறிய இருளுக்குள் நடந்த குற்றங்கள் இல்லை.  பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் நடந்த கொள்ளை இது.  அரசு அதிகாரிகள், காவல் துறையினர், வருவாய் அதிகாரிகளின் கண்களுக்கு முன்பாகவே இவை நடந்தன.  20 ஆண்டுகளாக இவர்கள் வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை.  அந்த மாஃபியாக் கும்பலோடு கை கோர்த்து மக்களை அடித்து நொறுக்கினார்கள்.  20 ஆண்டுகளுக்கு முன்பாக பெருமணல் என்ற கடற்கரை கிராமத்தில் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தபோது ஜாங்கிட் என்கிற காவல் அதிகாரியின் தலைமையில் 26 வண்டிகளில் வந்து தாக்கி அந்தப் போராட்டத்தை ஒடுக்கினார்கள்.  இப்படி அரசே இவர்களுக்கு ஒத்துழைத்த காலமும் கடந்து அரசே இவர்களின் காலடி மண்ணுக்கு சேவகம் செய்யும் இழி நிலைக்கு மாறிப்போனது.
 
               

  
                   மாஃபியாக்களின் ஆதிக்கம் இன்று கொடிகட்டிப் பறக்கிறது.  கடற்கரை கிராமங்களில் இவர்களே வெடிகுண்டுகளை தாராளமயமாக்கி ஊர்களையும் மக்களையும் இரு கூறாக்கி சமூக விரோதிகளின் கூடாரங்களாக இன்று மாற்றிவிட்டார்கள்.  இந்த மாஃபியாக்களின் வளர்ச்சி சனநாயகத்தின் வீழ்ச்சி!  எனவேதான், இவர்களைக் கைது செய்யாமல் எந்த விசாரணையும் முறைப்படியும் நடக்காது.  நேர்மையாகவும் நடக்காது என்கிறோம். நீதியை நிலை நாட்ட வேண்டுமென்றால் இவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று அரிமாவளவன் குறிப்பிட்டார்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு கரூர் மாட்ட ஆட்சியரைச் சந்தித்து இது தொடர்பாக தமிழர்களத்தினர் மனு ஒன்றை அளித்தனர்.

தரகு வேலைக்குத்தான் முள்ளிவாய்க்கால் முற்ற நிகழ்வு பயன்படப்போகிறது !!


                     "நேற்றைக்கு முந்தைய நாள் மலேசியாவில் வாழும் ஈழத் தமிழர் ஒருவர் அதாவது எனது மதிப்பிற்குரிய பெரியவரும் தமிழ்த் தேசிய அரசியலின் அறிவுத் தளத்தில் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவருமான நண்பர் ஒருவர் இணையவழி இணைப்பில் வந்தார். “தேர்தலில் செயலலிதாவை ஆதரிக்க வேண்டும்” என்று அறிவுருத்திய அவர், அதுவே சிறந்த கள உத்தி என்ற நோக்கில் பேசினார். அதன் பின்னர் நடந்த வாக்குவாதத்தில் நான் கடுஞ்சினத்தோடு பேசத் தொடங்கி, “அப்படியானால் தமிழ்நாட்டு அரசியலில் இனி நம்பிக்கை இல்லை” என்று அவர் இறுதியாக முடித்துக் கொண்டார்.
                   தலைவர் பிரபாகரன் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் எனக்கு அளவுகடந்த பற்றும் மரியாதையும் உண்டு. ஆனால், அண்மைக் காலங்களில் நான் சந்திக்கிற சில ஈழத் தமிழர்கள், “தமிழ்நாட்டு அரசியலையும் உலகத் தமிழர் அரசியலையும் தாங்களே நிர்ணயிக்க வேண்டும்” என்ற நோக்கில் கட்டளையிடுவதும் பரிந்துரைப்பதுமாக இருக்கிறார்கள். அண்மையில் தமிழகத்திற்கு வந்துபோன மற்றொரு ஈழத் தமிழரும், தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சொல்லி, எல்லாரும் அவர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தொனியில் பேசினார். எனக்கு ஐயம் வலுத்து கடைசியில், “ஆமாம் நாங்கள் நெடியவன் தலைமையில் செயல்படுகிறோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.
இவர்களுக்கெல்லாம் நாங்கள் பணிவோடும் அன்போடும் அழுத்தமாகச் சொல்லிக் கொள்வது என்னவென்றால், “தமிழ்நாட்டு அரசியலை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.”

             “உடனடியாக தமிழ்நாட்டு அமைப்பினர் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்” என்பது இவர்களது அழுத்தமான அழைப்பு. இதில் கருத்தளவில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஓர் இயங்கியலை இவர்கள் புரிய வேண்டும். கருத்துகள் மாறுபடுவதாலும் முரண்படுவதாலும்தான் இவ்வுலகில் கட்சிகள், மதங்கள், கருத்துருக்கள் இருக்கின்றன.
                ஒற்றுமை பற்றி பேசுகின்ற இவர்கள் என்றைக்காவது ஒற்றுமையாக இருந்திருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்தாலேயே இந்த எதார்த்தம் அவர்களுக்குப் புலப்பட்டுவிடும்.
கருணாவுக்கு இணையான இரண்டகர்கள் இங்கே உண்டு. டக்ளசுக்கு இணையான இன எதிரிகள் இங்கே உண்டு. இவர்களோடு கை கோர்க்கச் சொல்கிறார்களா?
 

              முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கிறார்கள். “பீர் காசில் போர் முற்றம்?” என்று தமிழ்நாட்டு இளைஞர் ஒருவர் சீறுகிறார். அதாவது சாராய வியாபாரி நடராசனின் காசில் ஈழப் போர் முற்றம் கட்டலாமா என்பது அவரது வினா! தமிழ்நாட்டு இளைஞர்கள் குருதியும் வேர்வையும் சிந்திக் கட்ட வேண்டிய நினைவிடத்தை சாராயக் காசில் கட்டி முடித்துவிட்டார்களே என்பது பலரது வேதனை. அதையும் கடந்து அந்த முற்ற விழாவில் நடக்கும் அரசியல் தரகு வியாபாரம், அசர வைக்கிறது. குசராத்தின் நர வேட்டை நாயகன், குசராத்தின் ராசபக்சே, அப்பாவி இசுலாமியர்களைக் கரிக்கட்டையாக்கிய நரேந்திர மோடியின் தமிழ்நாட்டுத் தரகர்கள் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தமிழின உரிமைக்காகப் போராடும் பல தமிழர் அமைப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன. திராவிடத் தரகர்கள் இந்த விழாவிற்கு வருகிறார்கள். ஆனால், திராவிட அரசியலைத் தோலுரிக்கும் பலர் விடுபட்டிருக்கிறார்கள். அப்படியானால் என்ன நடக்கிறது?
ஈழத்தில் சிந்திய ரத்தம் விலை பேசப்பட்டுவிட்டது! அப்படித்தானே! இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முற்றத்தில் ஈழத்து முள்ளிவாய்க்கால் ரத்தம் கூறுபோட்டு கூவி விற்கப்படுகிறது. கேட்டால், அரசியல் கள உத்தி என்று பேசுவார்கள்.

                சட்ட மன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க. இரண்டு தொகுதி பிச்சை போட்டால் அதை வாங்கி நக்கிப் பிழைப்பது கள உத்தியா? அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் நுனி நாக்கில் மட்டும் ஈழம் பேசும் தெலுங்கு வந்தேறிகளுக்கு வாய்ப்பளித்தால் அது மாபெரும் வெற்றியா? தெலுங்கருவி மணியனின் இயக்கத்தில் நடராசனின் முதலீட்டில் “சில நாடக நடிகர்கள்” இப்போது நடிக்கிறார்கள்.
              பாரதீய சனதாக் கட்சியின் ஈழ நிலைப்பாடு என்ன? அணுஉலை நிலைப்பாடு என்ன? ஸ்டெர்லைட் நிலைப்பாடு என்ன? (ஐந்து ஆண்டு வாச்பாய் அரசில் .தி.மு.க. இருந்தது. இரண்டு அமைச்சர்கள் இருந்தார்கள். ஸடெர்லைட்டின் கழிப்பறைக் கதவுகளைக்கூட அவர்கள் மூட எத்தனிக்கவில்லை என்பது தேர்தல் களத்தில் பேச வேண்டிய செய்தி) மணல் மாஃபியா குறித்த நிலைப்பாடு என்ன? தேவாரம் நியூட்ரினோ நிலைப்பாடு என்ன? தொடர் மீனவர் படுகொலை நிலைப்பாடு என்ன? (மீண்டும் வாச்பாய் ஆட்சியின் ஐந்து ஆண்டில் நடந்த மீனவர் படுகொலைகளை நினைத்துப் பார்ப்போமா?) சுஷ்மா சுவராஜ் ராசபக்சேவைச் சந்தித்ததன் விளக்கம் என்ன? காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு நிலைப்பாடு என்ன? இவைகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல் தில்லியின் நரகல் அரசியலுக்கு மூடி மாற்ற வந்திருக்கிறீர்களா? தில்லியின் நாதாரித்தனத்தை புது மூட்டைகளில் கட்டித் தமிழன் தலையில் சுமத்த வந்திருக்கிறீர்களா?
தில்லி அரசியலை, நரித்தனத்தை தமிழகத்தின் மீது திணிக்கிற தரகர்களாகத்தான் இதுநாள் வரை தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. செயற்பாடுகள் இருந்திருக்கின்றன. 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தரவல்ல தமிழகம் தனது நலனை தில்லியின் நெற்றியில் அடித்துச் சொல்ல வேண்டுமானால் முதலில் தரகர்களை களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். ஈழக் குருதியைப் பார்த்த பின்னும் தரகு வேலை பார்க்கிறவன் ஒன்று தமிழனில்லை அல்லது அவன் கருணாவினும் இழியவன்.
தரகு வேலைக்குத்தான் முள்ளிவாய்க்கால் முற்ற நிகழ்வு பயன்படப்போகிறது என்றால், தரகர்களைத் தகர்ப்பதே நமது வேலையாக இருக்க வேண்டும்"

இந்தியாவை அது அசைக்கவில்லை!

            " இசைப்பிரியா கொலை செய்யப்பட்ட காட்சிகள் மீண்டும் நெஞ்சை இடிபோல் தாக்குகிறது. மாந்த இனம் கண்டிராத, கேள்விப்பட்டிராத கொடுமைகளை இராசபக்சே அரசு தமிழர்களுக்கு இழைத்திருக்கிறது. கொடூரமான கொலைகள், ஈவு இரக்கமற்ற கற்பழிப்புகள், மாந்த உயிர்களை மலிவாகக் கொன்ற கொடூரங்கள் எந்த மனிதனையும் ஒரு கணம் உலுக்கிவிடும். என்னால் இந்தக் காட்சிகளைப் பார்க்கவே முடியவில்லை. தமிழ் குருதி ஓடும் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சுக்குள்ளும் ஒரு நெருப்பு மழையே பொழிந்திருக்கும்.
ஆனால்

இந்தியாவை அது அசைக்கவில்லை!
இந்தியாவை அது உலுக்கவில்லை!
இந்தியாவை அது துடிக்கவைக்கவில்லை!
           

              எவனுக்கோ எவளுக்கோ நடந்தது குறித்து நான் ஏன் இரங்க வேண்டும்? என்று இந்தியன் எண்ணுகிறான்.
              


              பின் இன்னும் நீ ஏன் இந்தியாவைக் கட்டியழுகிறாய்?
இந்தியாவோடு நாம் தொடர்ந்து இருக்கவேண்டுமா?
அதில் நாம் தொங்கித் தொலைய வேண்டுமா? என்ற கேள்விகளை சாதாரண மக்களிடம் கேளுங்கள், விதையுங்கள்! இது இனி நமது வரலாற்றுக் கடமை!
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த முன்வந்தபோதே அந்த அமைப்பிலிருந்து இந்தியா விலகியிருந்தால் இந்தியாவை எனது நாடு என்று சொல்லலாம்!
               " இலங்கையில் நடத்தித் தொலையாதே!” என்று குரல் எழுப்பியிருந்தாலாவது சரி போகட்டும் இந்த நாட்டில் இருந்து தொலைவோம் என்று இருந்திருக்கலாம்.
குறைந்தபட்டசம் “நான் இந்த மாநாட்டுக்கு வரமாட்டேன்” என்று அறிவித்தால்கூட தலையெழுத்தே என்று இன்னும் கொஞ்ச நாளுக்கு இதைக் கட்டியழலாம்.
               
ஆனால், போவேன் என்கிறான். இன்றும் சற்று ஆழமாகப் பார்தால் இவன்தான் அந்த மாநாட்டை அந்த இடத்தில் நடத்த உந்தித் தள்ளியிருப்பான் போலிருக்கிறது.
                   
               எனவே, எளிய மக்களிடம், பள்ளிச் சிறுவர்களிடம், பாட்டாளி மக்களிடம், உழவர்களிடம், மீனவர்களிடம், பனையேறுகிறவர்களிடம், கைத்தொழில் செய்கிறவர்களிடம், குடிசைவாழ் மக்களிடம் இது பற்றிப் பேசுங்கள்.
              
              நகரங்களுக்குள் 25 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த அந்த 100 பேருக்கும் கூட்டம் போட்டுப் போட்டு மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்காதீர்கள். இதுவரை உங்கள் கண்ணுக்கு எட்டாத களங்களுக்குப் போங்கள். குறிப்பாக பெண்களிடம் பேசுங்கள். செய்திகளைச் சொல்லி, “இந்தியாவோடு ஒட்டிக் கொண்டு இருக்கத்தான் வேண்டுமா?” என்ற கேள்வியை வலுவாக அழுத்தமாக எழுப்புங்கள்.
                 நம் இனத்தையே காட்டிக் கொடுத்த திராவிடத் தரகர்களை அம்பலப்படுத்துங்கள். அவர்களை எந்தப் பெரிய ஆயுதங்கள் கொண்டும் தாக்க வேண்டாம் என்று அறிவுருத்துங்கள். செருப்பு, துடப்பம் போன்ற மக்கள் பாணி பதிலடியே போதும் என்று எடுத்துச் சொல்லுங்கள்!"