வியாழன், டிசம்பர் 19, 2013

தமிழர் நாட்டில் யார் சிறுபான்மையர்!

             
                   
    
                        சென்னையில் கிறித்து பிறப்பு விழா நிகழ்ச்சிக்கு கருணாநிதியின் மகன் ஸடாலின் சென்றிருக்கிறார். “சிறுபான்மை மக்களின் ஒரே காவலன் தி.மு.க.தான்” என்கிறார்.
                     பாரதீய சனதாவை, “காவிக் கமண்டலங்கள் என்று வசை பாடிய கருணாநிதி கும்பல், மத்தியில் வாச்பாய் தலைமையில் அதே பாரதீய சனதாக் கட்சி ஆட்சி அமைத்தபோது அதில் பங்கேற்க முற்பட்டார். ஸ்டுவர்ட் ஸ்டெயின் போன்ற கிருத்துவ சமூகத் தொண்டர்கள் எரித்துக் கொல்லப்பட்ட
  நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டு மாபெரும் வன்முறை கட்டவிழ்க்க்பட்ட நிலையில்தான் தி.மு.க. பாரதீய சனதாக் கட்சியுடன் ஆட்சி அமைக்க முற்பட்டது. “ஓர் எள் முனையளவும் சிறுபான்மை மக்களுக்குக் கேடு நிகழுமானால் பதவியைத் தூக்கி எறிவேன்” என்று சிறுபான்மை மக்களுக்கு “ஆப்பு அடித்துவிட்டு” அவர் சொன்ன அதே காவிக் கமண்டலங்களோடு ஆட்சியில் பங்கேற்றார். நாலே முக்கால் ஆண்டு! முரசொலி மாறன் உட்பட சிலர் அமைச்சர்கள்.
ஆட்சியேற்ற கொஞ்ச நாளில் அதாவது 2002ல் நடந்ததுதான் குசராத் கலவரம். பல்லாயிரம் இசுலாமியர்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டார்கள். “ராச தர்மததோடு நடந்து கொள்ளுங்கள்” என்று வாச்பாய்கூட மோடியை எச்சரித்தார். கருணாநிதி என்ன செய்தார்? “சிறுபான்மை மக்களின் காவலன்” என்று பட்டம் சூட்டிக் கொண்டு வரும் கருணாநிதி அவர் சொன்னபடி பதவியைத் தூக்கியெறிந்தாரா? களம் இறங்கிப் போராடினாரா? குசராத் அரசைக் கலையுங்கள் என்று போராடினாரா? ஒரு மண்ணாங்கட்டியும் செய்யவில்லை. இதுதான் இவர்களுடைய “சிறுபான்மை மக்களின் காவலன்” வேடம்!
  
                    ஈழத்தில் பிரச்சனை கனன்று கொண்டிருந்தது. தமிழக மக்கள் காங்கிரசைக் கருவறுக்க வேண்டும் என்று கொதித்துப் போயிருந்த நேரம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. தமிழ்நாடு ஆயர் பேரவை, மதவாதத்தைச் சுட்டிக் காட்டி காங்கிரசை ஆதரிக்க சுற்றறிக்கை விட்டது. அதாவது சொந்த இனத்து மக்கள் ஈழத்தில் பட்ட துயரைவிட இந்தியாவில் தலை தூக்கும் மதவாதம் அவர்களுக்கு அப்போது அச்சுருத்தலாகப் பட்டிருக்கிறது. சரி! தொலையட்டும். காங்கிரசுக் கூட்டணியில் இருந்த தி.மு.க. பாசமும் ஒட்டும் உறவும்தான் அப்படிச் சொல்ல வைத்தது. தமிழ்நாட்டில் தி.மு,.க. கூட்டணி வெற்றி பெற்றது. கிருத்துவர்களின் வாக்கை வாங்க இப்படி வேடம் கட்டி ஆடும் கருணாநிதி கடந்த தனது அமைச்சரவையில் எத்தனைக் கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்தார்? ஆனால் 8 தெலுங்கர்கள் அமைச்சரானார்கள்.
               இறுதியாக,தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும்தான் சிறுபான்மையினர்! தமிழர்கள் பெரும்பான்மையர்!
இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும், அதுகள் போன்றதுகளும் சிறுபான்மையரோ அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, வைகோ, செயலலிதா போன்றதுகள்தான் சிறுபான்மையர். இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர். தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல்தான் சிறுபான்மையர்!
 நன்றி:அரிமா வளவன்  தமிழர் களம

 

புதன், டிசம்பர் 11, 2013

ஆதார் அட்டையின் மூலம் அமெரிக்காவிற்கு தகவல் சேர்க்கும் இந்திய அரசு !

                      ஆதார் அட்டையின் மூலம் அமெரிக்காவிற்கு தகவல் சேர்க்கும் இந்திய அரசு ! MongoDB என்ற அமெரிக்க நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Max Schireson, இரு வாரங்களுக்கு முன்பு புது டெல்லியில், இந்திய அரசுடன் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை முடித்திருக்கிறார். அது ஆதார் அட்டையுடன் தொடர்புடைய ஒப்பந்தம். இன்னும் இதுகுறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதில் புருவம் உயர்த்த வைக்கும் அதிர்ச்சி செய்தி...என்னவெனில், MongoDB என்பது, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ-விடம் இருந்து நிதியுதவி பெறும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவின் சுமார் 110 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை விநியோகிப்பதற்குத் தேவையான தகவல்களை திரட்டுவதிலும், அவற்றை ஆராய்ந்து தொகுத்து அளிப்பதிலும் UIDAI உடன் இணைந்து செயல்படப்போகிறது. அதாவது இந்திய மக்களின் அங்க அடையாளம் முதல் மாத வருமானம் வரை சகல விவரங்களையும் திரட்டும் ‘ஆதார்' திட்டத்துக்கு, அமெரிக்க உளவுத்துறையை துணைக்கு வைத்திருக்கிறது இந்திய அரசு. கேட்டால், ‘ஆதார் மிகவும் நம்பரமான திட்டம்' என்கிறார்கள். இந்நாட்டின் கோடிக் கணக்கான மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது தனி மனித உரிமைக்கு எதிரானது என்பதால், ஆதாருக்குத் தடைகேட்டு பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். ஆதாருக்கு எதிரான அனைத்து வழக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. ‘அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை' என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்நிலையில்தான் இப்படி ஓர் ஒப்பந்தம். இதைப்பற்றி எழுதியிருக்கும் எக்னாமிக் டைம்ஸ் கட்டுரையாளர் லிசன் ஜோசப், ‘ஆதார்' சேர்மனான நந்தன் நீல்கேனியிடன் பதில் கேட்டதற்கு அவர் பதில் சொல்லாமல் மௌனம் காத்திருக்கிறார். UIDAI-ன் மற்ற அதிகாரிகள், இப்படி ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். ‘ஆதார்' பற்றிய அனைத்தும் ரகசியம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில்தான், விக்கிலீக்ஸில் ஆதார் திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு அமெரிக்க உளவு வேலைதான் காரணம் என்பது வெளிப்படையானது. பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட உளவுத் தகவல்களை விக்கிலீக்ஸ் இடைமறித்து வெளியிட்டது. அதில் ஆதார் அறிக்கையும் ஒன்று. அந்த உளவு வேலையை இப்போது அதிகாரப்பூர்வமாக செய்யப்போகிறார்கள்
நன்றி ;மை.பா.நன்மாறன்

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

தமிழர்கள இளைஞர் இயக்கம் துவக்க விழா மற்றும் கொடியேற்று விழா

08.12.13,
மணப்பாறை
                        தமிழர் களத்தின் மேற்கு மண்டலம், மணப்பாறை வட்ட இளைஞர் இயக்கம் சார்பாக வேங்கை குறிச்சியில் இளைஞர் இயக்கம் துவக்க விழா மற்றும் கொடியேற்று விழாவும், நடைபெற்றது.

         நிகழ்வில் திரு. தினேசு அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

           நிகழ்விற்கு தமிழர்களத்தின் மேற்கு மண்டல பொறுப்பாளர் திரு.அரசு தலைமை தாங்கினார். முன்னதாக தமிழர் களத்தின் பெயர் பதாகை மணப்பாறை வட்ட பொறுப்பாளர்  திரு. பால் நிலவன் அவர்களால் திறந்து வைக்கபப்ட்டது. தமிழர் களத்தின் கொடியை ஊர் நாட்டாண்மை துரைசாமி அவர்கள் ஏற்றிவைத்தார்.

           நிகழ்வில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் தமிழர் கள இளைஞர்களை வாழ்த்தி கருவூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. வாகை தமிழ் முதல்வன் பேசினார்.

          நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கடவூர் ஒன்றிய பொறுப்பாளர் திரு. இரா . மாணிக்கம்,  அருண்மொழி வேந்தன், ஊர் தலைவர் முனியாண்டி, மற்றும் நாட்டாண்மை மணி ஆகியோர் கலந்து கொண்டனர் .

           நிகழ்வில்  வேங்கை குறிச்சி இளைஞர் இயக்க உறுப்பினர்கள் சு.சிலம்பரசன், சி.ராம், ஆ.குணசேகரன், சு.சிவபாலு, ரா.ராகுல்காந்தி, சு. சிவக்குமார், பிரசன்னா, சி.பண்ணை சரவணன், மணவை பெலிக்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் .
       
            நிகழ்வின் இறுதியில் திரு. பூபதி  அனைவருக்கும் நன்றி கூறினார் .

செய்தி
ஊடகப்பிரிவு
கருவூர்.