திங்கள், டிசம்பர் 29, 2014

நினைவாய் மறைந்த ஜீவா! நெஞ்சிலே விதையாய் !!

 29.12.14
கரூர்

அந்தச் செய்தி பொய்யாய் இருக்கக்கூடாதா..... என்று பதறியது நெஞ்சம்.... காலனை வெல்ல யாரால் முடியும் என்பதை நம்பித்தான் ஆக வேண்டிய சூழலை ஏற்படுத்திவிட்டது இன்றைய பொழுது!.

தமிழ்த்தாயின் தலைமகனில் ஒருவர் மறைந்துவிட்டார்.... சமூக நீதிக்காக எந்த நேரத்திலும் தயங்காமல் களம் கண்டவர்.....தமிழ்தேசம் மலர வேண்டும் என்று தீராத தாகத்துடன் தன்னை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டவர். தன்னை இறுதி வரை ஒரு மாணவன் என்று பெருமிதத்தோடு கூறியவர்.... தமிழர் களத்தின் சட்ட ஆலோசகர்... “சட்டத்தரணி” திரு..ரா.ஜீவானந்தம்.....தோழர் என்று சக நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்......அனைத்து கட்சியிலும் உள்ள நண்பர்களோடு அன்போடு பழகக்கூடியவர் அதே சமயம் தனது விமர்சனங்களை மிக கூர்மையாக நேர்மையாக வைத்து கருத்தாடக்கூடியவர்! தினம் களம் காண்பவர்....
என்னேரமும் எங்களை படித்து விவாதிக்க வேண்டும் திறணாய்வு செய்ய வேண்டும் என்று இளையோரை ஊக்கப்படுத்துபவர்..... இப்போது நம்மிடையே இல்லை..... இறப்பை வெல்ல முடியாது ஆனால் இறந்தும் வாழ முடியும்! அதை நமக்குள் விதைத்து சென்றவர்! அவர் காணவிழைந்த தமிழர்தேசத்தை மலரச் செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்...தமிழர்களம் அதை நிறைவேற்றும்....






































புதன், நவம்பர் 19, 2014

தமிழர் பெருவிழா - 2014

19.11.14
கரூர்.

தமிழர் பெருவிழா.... ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களத்தின் சார்பில் நடைபெறும் தமிழர் பெருவிழா இந்த ஆண்டு கரூர் மாநகரில் வருகின்ற 29.11.14 அன்று மாலை 5.00மணி அளவில் நடைபெற உள்ளது. தமிழர் களத்தின் அனைத்து பொறுப்பாளர்களும் தங்கள் பங்களிப்பை நல்கிட வேண்டுமெனவும், இந்த பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.


செவ்வாய், ஜூலை 29, 2014

கண்டன ஆர்ப்பாட்டம்!











கருவூர்;28.07.2014
              கருவூரில் தமிழர்களம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழகத்தில் தமிழில்(தமிழர்) படித்தவர்க்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும் எனவும், நீர் வள ஆதாரத்தை பெருக்க ஏரி, குளம் ,வாய்க்கால்,ஆறு போன்றவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீமைகருவேல  மரங்களை அழித்திட கோரியும், மாநில அரசு அலுவலகங்களில் தமிழில் கோப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் கட்டாயம் பராமரிக்க வலியுறுத்தியும் அதை செயல் படுத்தாத அலுவலர் மீது கடும் நடவடிக்கை கோரியும், மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி,சமஸ்கிருதம் போன்றவற்றை திணிக்கும் மத்திய ஆளும்அரசை வன்மையாக கண்டித்தும்,தமிழர்களின் பண்பாட்டுக்குஎதிராக செயல்படும் சில அமைப்புகள் மற்றும் நிர்வாகத்தினை தடை செய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
          ஆர்பாட்டத்திற்கு வாகை தமிழ் முதல்வன் தமிழர்கள கருவூர் மாவட்ட செயலாளர் தலைமையில் தமிழர்களம் மேற்குமண்டல செயலாளர் அரசு முன்னிலையில் தமிழர்கள பொதுசெயலாளர்    திரு. அரிமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார், 
நிகழ்சியில் வழக்கறிஞர் ஜீவானந்தம் ,ம.காமராசு,வழக்கறிஞர் மா.புகழேந்தி, ந.சண்முகம் சமூக ஆர்வலர், இரா.சக்திவேல், கருவை முருகு , இரவிசந்திரன், மணவை பால்நிலவன் மற்றும் மணவை தமிழர்கள நட்புகள் மற்றும் மருங்காபுரி தமிழர்கள உறவுகளும் நிகழ்சியை சிறப்பித்தனர்.
ஊடகபிரிவு
தமிழர்களம் கருவூர்


வியாழன், ஜூன் 19, 2014

கண்ணீர் அஞ்சலி!

19.06.14
இராதாபுரம்

            தாய் மண்ணின் விடுதலைக்கு தன் மகனை தந்து இவ்வுலகம் தன் மகனை சான்றோன் என்றுரைத்ததை அகம் குளிர வாழ்ந்து முடித்து இறைவனடி சேர்ந்துள்ள எங்கள் அன்னையின் நல்லடக்கம் நேற்று 19.06.2014 உற்றார் உறவினர் சூழ தமிழின விடுதலை போராளி எங்கள் தலைவர் அன்னையின் உடலுக்கு தமிழர்களத்தின் கொடிபோர்த்தி தமிழ் தாய்க்கு வீரவணக்க மரியாதை செலுத்தப்பட்டு வான வேடிக்கை பட்டாசுகளுடன் அன்னையின் நல்லடக்கம் சிறப்பாக நிறைவேறியது தூத்துக்குடி ,திருநெல்வேலி ,கரூர் ,திருச்சி புதுச்சேரி என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து தமிழர்களத்தினர் கலந்துகொண்டு அன்னைக்கு வீர வணக்கம் செய்தனர் .

தமிழர்களம் ஊடகபிரிவு கருவூர் அரசு...