திங்கள், செப்டம்பர் 21, 2015

தமிழின எழுத்தாளர் பாசறை...... தொடக்க விழா தீர்மானங்கள்......

20.09.15
திருச்சி

1. ஐ, ஔ என்றே எழுத வேண்டும்.

ஐம்பதாயிரம் ஆண்டுப் பழைமை உடைய தமிழுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெடுங்கணக்கு உருவாகிவிட்டது. உயிர் 12 மெய் 18 என்ற வரையறை இலக்கண நூலாரால் வகுக்கப்பெற்று நிலைபெற்றுவிட்டது. தமிழில் புதுமை செய்ய விரும்புகிறோம் என்ற பெயரில் தமிழ்ப் பகைவர்கள் எழுத்துச் சீர்திருத்தம் என்றும் தமிழில் இல்லாத ஒலிக்கு எழுத்து உருவாக்குகிறோம் என்றும் அவ்வப்போது குறும்பு செய்கிறார்கள். உலகில் உள்ள மொழிகள் எல்லாவற்றிலும் எல்லா ஒலிகளும் இருப்பதில்லை. அதைப்பற்றி அந்தந்த மொழிக்காரர்கள் கவலைப்படுவதுமில்லை.

தமிழில் உள்ள ஐ, ஔ என்கிற கூட்டொலி எழுத்துக்களை அய், அவ் என்று எழுதலாம் எனச் சிலர் வம்பு செய்துவருகிறார்கள். இது தமிழ் நெடுங்கணக்கைச் சிதைக்கிற செயலாகும். உயிரும் உடம்பும் முப்பது என்ற இலக்கணத்திற்குப் பொருந்தாததாகும். இதனால், ஒலிப்புப் பிழைகள் ஏற்பட்டுப் பொருளை பிழை உணர வேண்டிவரும். ஐ என்ற வேற்றுமை உருபைப் பயன்படுத்த முடியாது. ஔ என்பதை அவ் என்று எழுதினால் அது நெடிலாகாது. சுட்டுபொருளைத் தரும். ஐகாரக் குறுக்கத்தில் அய் பொருந்தி வராது.
எனவே, தமிழில் உள்ள ஐ, ஔ என்ற உயிர் நெடில் எழுத்துக்களை ஐ, ஔ என்றே தமிழர்கள் கையாள வேண்டும்.

2. சாதிக் காழ்ப்புகளைத் தமிழரிடையே ஆழப் புரையோடச் செய்வது - தேவைப்படும் போதெல்லாம் சாதிக் கலவரங்களைத் தூண்டிவிடுவது எனும் வழிகளில் தமிழர்களிடம் தேசிய இன ஓர்மை கருக்கொள்ளாது தடுப்பதே வந்தேறி வடுக ஆண்டைகளின் தலையாய நோக்கமும் போக்குமாயுள்ளது. “திராவிடம்” என்ற நச்சுக் கருத்தியலை இதற்காகவே அவர்கள் தமிழரிடையே மேய விட்டனர்.
வடுகத் திராவிடமே தமிழர்களி்ன தேசிய இன ஒற்றுமக்கு மீப்பெரும் தடையாயுள்ளது எனும் தெளிவு தமிழிளைஞர்களிடம் கால்கொண்டுவிட்ட இன்றைய சூழலில், சாதியத்தையே மந்திரக் கோலாகவும் தந்திரக் கோலாகவும் கொண்டு தமிழரினத்தை அடிமைப்படுத்தி மயக்கி ஆண்டுவரும் திராவிடப் பகையை எதிர்த்துக் களமாடி அதைக் கூண்டோடு குழிதோண்டிப் புதைப்பதே நம்முன் உள்ள உடனடி வரலாற்றுக்கடமை.
மறையர்களும் மள்ளர்களும் அவர்களுக்கு என்றுமே அடிமைகளாயிருக்க வேண்டியவர்கள் என்னும் தீய மனநிலையை இடைப்பட்ட தமிழ்ச் சாதியினரிடம் ஆழ ஊன்றி, பொருளியலிலும் வாழ்க்கைத் தரத்திலும் மேம்படுத்திக் கொள்ள முயலும் அத்தமிழ்ச் சாதிகளை எதிர்த்துச் சாதிக் கலவரங்களுக்கு வித்திடுவதே வடுகர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளிலெல்லாம் பெரிய சூழ்ச்சியாயுள்ளது.
அதேபோல், “தலித்” என்ற போலி முத்திரையைக் குத்தி மறையர்களிடமும் சாதிவெறிக்குக் கொம்பு சீவி விடுவதும் அவ் வடுகத்தின் எதிர்வினை உத்தியாகும்.
ஒரு சாதித் தமிழனைக் கொண்டே இன்னொரு சாதித் தமிழனைக் கொல்லச் செய்து செத்தவனின் பிணத்தை வைத்துப் பொய்யாகப் புலம்பி ஒப்பாரியிட்டு வரும் வடுகர்கள் தமிழரெதிர்ப்பு அரசியலில் வஞ்சகமாய்க் காய் நகர்த்தி வருகின்றனர். இந்துத்துவமும், தலித்தியமும் அதற்குத் தோள்கொடுத்து வருகின்றன. தமிழ்ச் சாதிகள் இனியும் ஒன்றுபட்டுவிடக்கூடாது எனும் வஞ்சக நோக்குடன் சாதி அரசியலையே முதலீடாகக் கொண்டு வடுகர்கள் வினையை விதைத்து வருகின்றனர்.
“முற்போக்கு” முகமூடி அணிந்த வடுகப் பொதுவுடைமைகளும் அவர்களின் தொண்டரடிப்பொடிகளும் மறையர்களின் மீதும் பிறரின் மீதும் கட்டவிழ்த்து விடப்படும் சாதி வெறியாட்டுகளைக் கண்டு நீலிக்கண்ணீர் வடித்து வடுக மயமான வாக்குப்பொறுக்கி அரசியல் குட்டையில் தாங்களும் தம் பங்குக்கு மீன் பிடிக்கப் பார்க்கின்றனர்.
இதுபோன்ற வடுகக் கூத்துக்களையும் தந்திரங்களையும் அம்பலத்தில் ஏற்றித் தமிழர்களிடம் தேசிய இன ஓர்மையை வளர்த்தெடுக்கத் தமிழரில் எழுத்தாளர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். “தலித்” “தலித்தியம்” போன்ற போலிச் சொல்லாட்சிகளை அவர்கள் தவிர்க்க வேண்டும்.

3. தமிழர்களின் தொன்மை உலகுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்ற ஒரோ நோக்குடன் தமிழகத்தில் பெரிதாக எந்த அகழ்வாராய்ச்சிகளையும் நடத்தவிடாமல் இந்தி(ய) வல்லரசு தடுத்து வருகிறது. தொல் தமிழ் நகர்ப்புற நாகரிகத்தைக் கண்டறிவதற்கான அகழ்வாராய்ச்சிகள் தமிழ்நாட்டில் இதுவரை நடத்தப்படவில்லை. ஆதிச்சநல்லூர்ப் பறம்புக்கு அருகில் அதுபோன்ற நகர்ப்புற கட்டுமானங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதை உடனே மூடி மறைத்துவிட்டனர். தொல்லியல் தடையங்களைக் கரியம்-14 ஆய்வுக்கு உட்படுத்தும்போது, தமிழகத்தில் கிடைத்த தொல்லியல் பொருட்களை மட்டுமே காலத்தால் மிகப் பிந்தையதாகக் காட்டுவது இந்தி(ய)த் தொல்லியல் துறையின் சித்துக்களில் ஒன்றாயுள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனத்திற்கு அருகிலுள்ள கீழடிப் பள்ளிச் சந்தைத் திடலில் அண்மையில் ஒரு தொல்லியல் அகழ்வை நடத்தினர். அப்போது அங்கு ஒரு நகரமே புதையுண்டு கிடப்பதைக் காணுற்றனர். இந்த நகரம், இரண்டாம் கடற்கோளுக்குப் பின் பாண்டியரின் தலைநகராமாயிருந்த மணலூராகத்தான் இருக்கவேண்டும் எனும் கருத்து தலையெடுத்தது. இந்த உண்மையை மூடி மறைக்கும் முகமாக அங்கு பண்டை உரோமானியர்களின் மண்பாண்டங்களும் பிறவும் கிடைத்தனவென்றும், அகழ்ந்தெடுத்த பகுதி ஒரு வணிகக் குடியிருப்பே அன்றி வேறில்லை என்றும் கூறி முழுப் பூசுனைக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சியில் இந்தியம் ஈடுபட்டுள்ளது.
2015 செப்தம்பர் மாதத்தோடு அங்கு அகழ்வாராய்ச்சி முடிவடைந்துவிடும் என்கின்றனர். அந்த ஆராய்ச்சியை தொடர்வதற்குத் தில்லி ஆளவந்தார்கள் புதிய இசைவைத் தர மறுத்துவருகின்றனர். அவ்வாறு தரவில்லையெனில், இதுவரை அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட கட்டுமானங்கள் எல்லாமே மண்போட்டு மூடப்பட்டுவிடுமாம்.
கீழடியில் கிடைத்த தொல்லியல் தடயங்களை இனிமேல் பார்க்கவியலாமல் செய்யும் நோக்குடன், அதை மண்போட்டு மூடிவிடும் முடிவை இனமானமுள்ள தமிழர்கள் உறுதியுடன் எதிர்க்க வேண்டும். தமிழரின் தொன்மையை மூடி மறைக்கப் பார்க்கும் இந்தியத் தொல்லியல் துறையின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசு தில்லியிடம் வழக்குரைத்து, அதை அவ்வாறு செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

4. தமிழ்நாடு நம்மை ஆளுகிறவர்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளது. களப்பிரர் காலம் தொடங்கி இன்றுவரை நம் தமிழ் ஆட்சிமொழி நிலையிலிருந்து புறந்தள்ளப்பட்டுள்ளது. மொழியே ஓர் இனத்தின் அடையாளம். அதுவே நம் விழி, அதுவே நம் வழி. ஆட்சி மொழியாய் இல்லாததால் கல்வி மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் தமிழ் இடம்பெறவில்லை.
இன்று கல்வித்துறையில் தமிழ் முற்றாகப் புறந்தள்ளப்பட்டு ஆங்கிலம் மழலையர் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை கோலோச்சுகிறது. எதிர்காலத் தமிழ்க் குமுகாயம் விழிப்புணர்வு பெற வேண்டுமானால், தமிழ்வழிக் கல்வி இன்றியமையாததாகும்.
கல்வியைத் தனியாரிடம் தாரைவார்க்கும் போக்கைக் கைவிட்டு அரசே ஆரம்பக் கல்விமுதல் பல்கலைக்கழகக் கல்வி வரை தன் சொந்தப் பொறுப்பில் நடத்த வேண்டும். இந்திய அரசின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியைத் தமிழ்நாட்டுப் பட்டியலுக்குக் கொண்டுவந்து அனைவருக்கும் இலவயக் கல்வி அளிக்க வேண்டும்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் வேலை வழங்க வேண்டும். இப்போதாவது விழித்துக் கொள்ளாவிட்டால் தமிழ் அழிந்து போகும் மொழிப் பட்டியலில் இடம்பெறுவதைத் தடுக்க முடியாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும். இந்நிலைக்கு நம்மை ஆளாக்கிய திராவிடத் திருடர்களை அம்பலப்படுத்தியாக வேண்டும்.

“தமிழர் தேசியத் தந்தை” அறிஞர் குணா அவர்களின் 75 வது பிறந்த நாள் பவளவிழாவும் தமிழின எழுத்தாளர் பாசறையின் தொடக்க விழாவும்....

20.09.15
திருச்சி