திங்கள், ஜூலை 19, 2010

துரோகி கருணா.... - அரிமா

கருணாநிதி நம்மவருமல்லர்! நல்லவருமல்லர்!!
அரிமாவளவன்
“வல்லான் வகுத்ததே வழி!” என்றிருந்தது ஒரு காலம். அது தடியர்களுக்கான காலம்! உடல் வலிமை கொண்டிருந்தவன் வென்றான், அவனே மக்களில் ஆண்களை மேய்த்தான், பெண்களை மேயந்தான்! விலங்காண்டித்தனமான வாழ்க்கை!
அறிவு நுட்பத்தை வைத்து பின்னர் ஆளத்தொடங்கினான்! நம்பூதிரிகள் மாதிரி! மேய்த்தலும் மேய்தலும் சூழ்ச்சி அடிப்படையில் நடந்தது. செயேந்திர சரஸ்வதி சங்கரராமனுக்குப் பிறகும்கூட ஒரு பெருங்கூட்டத்தை சச்சரவே இல்லாமல் ஆண்டு கொண்டுதானிருக்கிறார்.
அப்புறம் மன்னராட்சி வந்தது! மன்னன், அவன் மகன், மன்னனின் பேரன், “23ஆம் புலிக்கேசி”, உதயநிதி, தயாநிதி, போன்றதுகள்கூட பட்டத்தை எடுத்து தானாகவேச் சூட்டிக் கொண்டன!
பின்னர் “சனநாயகம்” என்று பரவலாகச் சொல்லபட்ட மக்களாட்சி மலர்ந்தது! உயர்குடிகளாகக் கருதப்பட்டவர்களும், செல்வந்தர்களும் வாக்களித்து முதலில் அந்த மக்களாட்சியை பகடிக்குள்ளாக்கினர். மார்வாடி, பனியாக்கள், பிராமணர்கள், பணக்காரர்கள், நேரடி வரிச் செலுத்துவோர் ஆகியோர்தான் வாக்களித்தார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த அந்த உதவாக்கரைகள்தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்தன! பின்னர் அகவை வந்தவர்களுக்கெல்லாம் வாக்கு என்று வந்தது. பீகார், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் வாக்குச் சாவடிகளையே முழுமையாகக் கைப்பற்றி வாக்கு குத்திய காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய சனநாயக நாடு இந்தியாதான் என்று “முதல் பரிசை”த் தட்டிச் சென்று கொண்டிருந்தது. அது இன்னொரு சனநாயகப் படிமலர்ச்சிக் காலம். கரை வேட்டிக் கறைகளும் காந்திக் குல்லாத் துரைகளும் சிவப்புத் தோழர்களும் இப்படித்தான் சனநாயகத்தை ஒரு காலத்தில் வாழ வைக்க முயன்று கொண்டிருந்தார்கள். சனநாயகம் நாறிப்போன இந்த நிலையில் வாக்குச் சீட்டு சரிப்பட்டு வராது என்றும் மின்னணு வாக்கு எந்திரம்தான் செத்து நாறிப்போன சனநாயகப் பிணத்தை சடக்கென்று எழுந்திரிக்க வைத்துவிடும் என்று முயல, அழகிரியிசம் என்ற ஒரு நடைமுறைத் சித்தாந்தம் தோன்றியது! “சொல்லி அடிப்பேனடி” என்ற பாட்டு போல நாற்பது லட்சம் வாக்கு வித்தியாசம் என்றால், 40 லட்சம் சுளையாக வித்தியாசம் வந்து நிற்கிற புதிய சனநாயகப்பாதை பளிச்சென்று திறந்துவிடப்பட்டிருக்கிறது! ஒரு ஐநூறையும் அரைப் பொட்டலம் பிரியாணியையும் கால் குடுவைத் “கழனி”யையும் வாங்கிக்கொண்டு வீட்டில் குப்புறப்படுத்துத் துங்கு! சனநாயகத்தை நாங்கள் வாழ வைக்கிறோம் என்று களம் இறங்கிவிட்டார்கள். ஆக, நாறிப்போன பாரதச் சனநாயகத்தின் கதைச் சுருக்கம் இவ்வளவுதான்!
ஒரு புறம் அப்துல்காலம் பால்வாடிப் பிள்ளைகளிடம் வல்லரசுக் கனவுகளுக்கு உசுப்பேற்றிக் கொண்டு இருக்கும்போது திராவிடங்கள் பழைய விலங்காண்டி நிலையிலிருந்து அரை அங்குலம்கூட அசைய மறுக்கின்றன!
பழ கருப்பையா கருத்து சொன்னார்! கருணாநிதியின் தவறுகளைச் சுட்டிக் காட்டினார்! உதிரிக் கும்பல் வீடு புகுந்து தாக்கியிருக்கிறது. இதில் ஒபாமாவின் ஆட்கள் வந்து தாக்கியிருக்க வாய்ப்பில்லை! கருணாநிதியின் கைத்தடிகள் வந்து உசாவிவிட்டு, கருப்பையாவை லேசாக உருவிவிட்டு, உருட்டுக்கட்டையால் இரண்டு தட்டு தட்டிவிட்டுப் போக நிறையவே வாய்ப்பிருக்கிறது!
சீமான் வெகுண்டெழுந்தார்! 534 மீனவர்களைக் கொன்று குவித்திருக்கிறான் சிங்களன்! திராவிடச் சிறுக்கிகளும் பொறுக்கிகளும் கைச்சூப்பிக்கொண்டு ஒருவருக்கொருவர் எதிர்ப்பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார்கள்! சினம் வந்த சீமானோ தமிழன்! தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்கும் ஆந்திர முதல்வர் மரணத்திற்கும் தமிழ்நாட்டுக்கு விடுமுறை விடுகிற நீயோ, தெலுங்கன்! உன் உதிரம் கொதிக்காது, உன் நரம்பு புடைக்காது! காகத்தைக் கல்கொண்டு அடித்தால்கூட ஆயிரம் காகங்கள் வானத்தைக் கருப்பாக்கிக் கரைந்து கண்டனம் தெரிவிக்கிறதே! புழுவை நசுக்கினால்கூட முறுக்கி எழுந்த பின்னர்தானே அடங்கிப் போகிறது! ஆனால், என் இனம் மடியும்போதும், துடிக்கும்போதும் சாபமிடும் உரிமையைக்கூட நெரிக்கிறதே இந்தத் திராவிட அரசு!
சீமான் வன்முறையைத் தூண்டினாராம்! 20 நாட்டுப் படைகள் இந்திப் படைகளின் தலைமையில் ஈழத்தமிழரை கொன்று குவித்த காலத்திலுங்கூட 18 தமிழ் இளைஞர்கள் தங்கள் உடலை எரித்து தமிழ்த்தாயின் மடியில் சரிந்தார்களே தவிர சிங்களனையோ மலையாளிகளையோ, மாற்றினத்தாரையோ தாக்கவில்லையே! அது தமிழரின் பலவீனம் அல்ல பலம்! ஆன்ம பலம்! இயன்றவரை வன்முறையைத் தவிர்ப்பது வலியவனின் பெருந்தன்மை! ஆனால், சிறு நரிக்கூட்டம் தொடர்ந்து சீண்டுமானால், மானம் காக்க மக்களைக் காக்க பெண்டு பிள்ளைகளைக் காக்க தமிழன் திமிறி எழத்தானே வேண்டும்! வன்முறைத் தடுப்பு என்ற போர்வையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக் கையில் எடுத்திருக்கிற திராவிடர் அரசை எண்ணினால் கசாப்புக் கடைக்காரன் பேசுகிற சீவகாருண்யம் போலத்தான் தெரிகிறது!
தி.மு.க.வை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்த கட்சியாக இன்னும் ஒரு சில மனநிலை சிதைந்த மாந்தர்கள் நினைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அப்படி ஒரு நடிப்பு! திராவிடத்தை மொத்தமாகப் பிழிந்து சாறு எடுத்தால் வருவது தி.மு.க.தான்! அதன் வரலாற்றை அறிவது, தமிழகத்தின் எதிர்காலத்திற்கு இனி அவசியம் தேவை!
1973, சூலை 18. மாக்சியப் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த வி.பி. சிந்தன் தாக்கப்படுகிறார். சிம்சன் தொழிற்சங்கத்திற்கு குசேலர் தலைவராகவும் சிந்தன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தி.மு.க.விற்கு இது கடுப்பை ஏற்படுத்துகிறது. மாநிலப் பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட, சிம்சன் தொழிற்சங்கம் ஆதரவு தருகிறது. இது தொடர்பாக சென்னையை அடுத்த மாதவரத்தில் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது. சிந்தன் பொதுப் பேருந்தில் ஒரு பயணியாக அங்கு போய்க் கொண்டிருக்கிறார். இடை மறித்த 20 பேர் கடுமையாகத் தாக்கி அதில் ஒரு குத்து அவரது மூச்சுக் குழாயை அறுத்துக் கொண்டு போகிறது. சிந்தன் கடுமையான மருத்துவப் போராட்டத்திற்குப் பின்னர்தான் உயிர் பிழைத்தார்!
இந்த நிகழ்வுக்கு இரு மாதங்களுக்கு முன்னர்தான் கருணாநிதி திண்டுக்கல்லில் சூளுரைத்திருந்தார், “எனது கட்சியின் முதன்மைக் குறிக்கோளே, கம்யூனிஸ்டுகளை தமிழ்நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதுதான்” என்று! இறுதிக் குறிக்கோள், ஒட்டுமொத்தத் தமிழர்களையும் இல்லாதொழிப்பது என்று நினைத்திருக்கிறார் போலும்
இதே காலகட்டத்தில் பாளையங்கோட்டை கல்லூரிப் பேராசிரியர் ஒருவரைத் தாக்கிய நிகழ்வில் மாணவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட, கருணாநிதியின் காவல்துறை கண்மூடித்தனமாக மாணவர்கள்மீது தாக்குதல் நடத்துகிறது. அதில் மாணவர் ஒருவர் இறந்தும் போகிறார்.
திருச்சி கிளைவ் விடுதியில் விடுதி புகுந்து தாக்கியதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் குருதி வெள்ளத்தில் கிடந்ததை அன்று காணமுடிந்தது.
பெரியகுப்பத்தில் நடந்ததை மறக்க முடியுமா? ஒரு வாரம் நடந்த அட்டூழியத்தில் கழகக் கண்மணிகளும் காவல்துறை கனபாடிகளும் சேர்ந்து அந்த மீனவ மக்களுக்குச் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமா? மீனவப் பெண்களை அடித்து, கற்பழித்து, நிர்வாணமாக்கி, ஊர்வலம் நடத்தி, சுடுமணலில் உட்கார வைத்து கொடுமைப்படுத்தினர். வழக்கம்போல வீடு புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி ஆடு கோழிகளை அள்ளிச் சென்றனர்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாகச் சொல்லி வந்த தி.மு.க.வின் தொடக்க காலமே இதுதான்!
பரமத்தி வேலூரில் நடந்த மாணவர் கொலை, சட்டமன்றத்தில் செயலலிதா மீது நடத்தப்பட்ட தாக்குதல், தினகரன் ஏட்டின் ஊழியர்கள் மூவர் கொல்லப்பட்ட கொடுமை, மதுரை லீலாவதி கொலை, உட்கட்சி மோதலில் கொல்லப்பட்ட தா. கிருட்டிணன், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மீதான தாக்குதல், மாணவர் போராட்டம் ஒடுக்கப்பட்ட விதம் என்று பட்டியல் படு நீளமாக நீண்டு கொண்டே போகும்!
செம்மொழி அரிதாரம் பூசி வரும் கழகத்தின் உண்மை உரு இதுதான்!
“ஈழத் தமிழர் படுகொலையில் கருணாநிதி ஒரு போர்க் குற்றவாளி” என்று செயலலிதா இன்று குற்றம் சாட்டுகிறார். உரைப்பது செயலலிதா என்பதற்காக உண்மையை உதறித் தள்ளிவிட முடியாது! கருணாநிதி கடவுளாகவே கடந்து வந்தாலும் குற்றங்களை கழுவிக் கவிழ்த்துவிட இயலாது.
ஈழத்தமிழரும் விடுதலைப் புலிகளும் அந்தக் காலம் தொட்டே தமிழக் அரசியலைப் புரிந்தவர்களல்லர். இலங்கையிலிருந்து முதலில் விரட்டியடிக்கப்பட்டவர்கள் மலையாளிகளே! அப்படி ஒடிவந்தவர்களில் ஒரு குடுமபம்தான் கண்டியில் பிறந்து வளர்ந்த ம.கோ.இராவின் (எம்.ஜி.ஆரின்) குடும்பம். சிங்களக் காடையர்களின் மீது இருந்த கோவத்தை தீர்த்துக் கொள்ளவே விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவி செய்தார். திரைகளில் தொடர்ந்து நம்பியாரையும் அசோகனையும் புரட்டிப் புரட்டியெடுத்த அவர் நடைமுறையில் விடுதலைப்புலிகளையே வீரர்களாக நினைத்தார் என்பதில் வியப்பொன்றும் இல்லை! அது உண்மையும்கூட!! ஆனால், ம.கோ.இரா. கிழக்கே போனால் கருணாநிதி மேற்கே போய்த்தானே ஆக வேண்டும்! அவர் குளத்தின் மீது கோவப்பட்டுவிட்டால் குண்டி கழுவாமலேயே இறுதிவரை இருந்துவிடக்கூடிய “அற்புதக் குணம்” படைத்தவர். ஈழத் தமிழர்கள் இதையெல்லாம் தெரியாமல் ம.கோ.இராவுக்கு ஈழத்தில் சிலைகூட வைத்திருந்தார்கள். பல்லாயிரம் ஈழத் தமிழர்களை பல்நாட்டுக் கூட்டுப்படை கொன்று குவித்தபோது தடுக்கும் நிலையில் இருந்த கருணாநிதி நாடகம் ஆடிக் கொண்டிருந்தார். தன்னை யாரும் குற்றவாளி என்று அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக போராட்ட நாடகங்களையும் எதற்கும் உதவாத “தந்தி அடிக்கும் உத்தி”, தமிழ்ச் செல்வனுக்கு கவிதை எழுதியது, மாந்தத் தொடரிப் போராட்டம் போன்ற நாடகங்ககளை ஆடிக்கொண்டிருந்தார்.
தமிழர்களை நேரடிப் போரில் வென்றதாகப் பெரிய வரலாறு கிடையாது! தமிழினம் நம்பிக் கெட்ட இனம்! வடுகர் வந்தது அப்படியே! மன்னர்கள் வீழ்ந்ததும் அப்படியே! வீரப்பன், மலையூர் மம்மட்டியான் போன்றவர்களைக்கூட சூழ்ச்சியாலும் நாடகத்தாலும்தான் வீழ்த்தியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் வரலாற்றில் நடந்த சறுக்கல்களிலெல்லாம் நம்பிக் கெட்டதே உண்மை! தமிழர்களில் சிலர் கருணாநிதியை இன்னும் நம்புகிறார்கள்! அவருக்கே நகைப்பு வரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக