செவ்வாய், நவம்பர் 16, 2010

சுப . வீக்கு கலங்கியிருப்பது பித்தமல்ல! சித்தம்! - அரிமா


16.11.2010 செவ்வாய்

கீற்று இணையத்தில் மீண்டும் ஒருமுறை சுபவீரபாண்டியன் திராவிடம் குறித்துத் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்! “சுபவீக்குப் பதிலடி கொடுக்க வேண்டும்” என்று பலமுறை என்னை உந்தும், நச்சரிக்கும், கேட்டுக் கொள்ளும் நண்பர்களுக்கு முதலில் நான் சொல்வது, சுபவீயைப் பற்றியோ அவரது வீம்பு மிகுந்த கருத்துக்கள் பற்றியோ பதில் அளித்துக் கொள்ள நமக்கு நேரமில்லை. நம் நாடு, நம் மக்கள், நம் மக்களின் விடுதலை என்று பயணப்பட்டுக் கொண்டிருக்கிற வேளையில் சுபவீ போன்றவர்களுக்கு பதில் அளித்துக்கொண்டிருப்பது நேரத்தை வீணடிப்பதுதான் என்று கருதுகிறேன்!
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் எவராவது ஒருவர் இன்னும் திராவிடத்தைத் தூக்கிப் பிடிக்கிறார் என்றால் அந்தக் கயமைக்கும், கழிசடைத்தனத்திற்கும் என்ன பெயர் சூட்டுவது? நாட்டுப்புறத்திலே சொல்வார்கள். ஒருவன் வெளிக்கு இருந்து கொண்டே வெள்ளரிக்காயைத் தின்று கொண்டிருந்தானாம்! பெரியவர் ஒருவர், “ஏண்டாப்பா, இருந்துக்கிட்டே தின்னுறியே! கால் கழுவிவிட்டு பிறகு உண்டால் என்ன?” என்றாராம். பையன் வீம்புக்கு, “நீ என்னவே சொல்லுறது? நான் இருந்துக்கிட்டும் சாப்பிடுவேன்! தொட்டுக்கிட்டும் சாப்பிடுவேன்!! உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போவும்” என்றானாம்.
சுபவீ திராவிடத்தைத் தொட்டுக்கிட்டுதான் சாப்பிடுவார்!
பாவாணரை சற்று இழுத்திருக்கிறார்! பாவாணராகட்டும், பாவேந்தர் ஆகட்டும், மறைமலையடிகளாகட்டும், அறிஞர் குணாவாகட்டும்! இவர்கள் அனைவருமே தத்தமது ஆய்வின் வழியாக முற்றான உண்மைகளை முழுமையாக நமக்கு ஆக்கித் தருகிறவர்கள் அல்லர்! அப்படி அவர்கள் சொல்வதும் இல்லை! ஆனால், வலுவான திருப்புமுனைகளை அவர்கள் நமக்கு காட்டித் தந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் கிடைத்த தரவுகளின் வழியாக அதிர்வை ஏற்படுத்தும் ஆய்வுகளை அரும்பாடுபட்டு படைத்திருக்கிறார்கள். குணா ஐயா அவர்கள் சொல்வார்கள். “பாவாணரின் தோள்மேல் உட்கார்ந்திருக்கிற பிள்ளைகள் நாம். பாவாணருக்கு ஒரு தொலைவு தெரியுமென்றால், அவரது தோள்மீது அமர்ந்திருக்கிற நமக்கு சற்று அதிகமாகவேத் தெரியவேண்டும்!” என்பார்.
திராவிடத்தை வேரறுக்கும் திருப்பணியைச் செய்கிற நமக்குத் தோள் கொடுத்தவர் அந்த மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரே! அவர் பாதம் தொட்டு வணங்குவோம்!
அவருக்கு “திராவிட மொழிநூல் ஞாயிறு” என்ற ஒரு பட்டம் கொடுக்கப்பட்டதாகவும் அதை மறைத்துவிட்டார்கள் என்றும் சுபவீ புலம்பியிருக்கிறார். பட்டத்தைக் கொடுத்தது, ஈ.வெ.இரா. அவர்கள்! அதாவது, “நான் ஒரு கன்னடன்” என்று அறிவித்த பெரியார் அவர்கள்! “தமிழர் கழகமாய் தொடங்க முடிவு செய்ததை திராவிடர் கழகமாக அறிவித்தவர்” “வீட்டு மொழியாக, தெரு மொழியாக ஆங்கிலம்தான் வரவேண்டும் என்று மொழிந்தவர்” “வேலைக்காரியோடு ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று அறிவுருத்தியவர்” “தமிழ், காட்டுமிராண்டி மொழி என்றவர்” இதுமட்டுமா? பாவாணரும் பெரியாரும் சந்தித்தார்களா? என்றால், ஆம்! அப்படிப்பட்ட சந்திப்புகளுள் ஒன்றுதான் இதோ!
பெரியார், ஆங்கிலப்பள்ளிகள் தொடங்கிக் கொண்டேயிருந்தார். பாவாணரிடம் சிலர், தமிழ் மொழி ஆய்வுக்காக தமிழ்ப் பள்ளி ஒன்று தொடங்க பெரியாரிடம் சென்று பேசுங்கள் என்றார்கள். பாவணரும் மிகுந்த நம்பிக்கையோடு போனார். காசு பெரியாரிடம்தானே இருந்தது! “பள்ளியில் இறைவாழ்த்துக்குப் பதிலாக உங்கள் வாழ்த்தே பாடுவோம்” என்றெல்லாம் சொல்லிப் பாவாணர் தமிழ்ப் பள்ளி அமைக்க பெரியாரிடம் வேண்டினார்! பெரியார் ஒப்புக் கொள்ளவே இல்லை! இப்படிப்பட்ட பெரியார் எப்பேர்ப்பட்ட பாவாணருக்கு “திராவிட மொழிநூல் ஞாயிறு” என்று பெயர் சூட்டியதிலும் உள்நோக்கம் இருந்திருக்கும்! இன்று அவரது பிறங்கடையான சுபவீ அதைச் சுட்டுவதிலும் உள்நோக்கம் இருக்கும்!
1947ல் திராவிட நாடு ஏட்டில் “ஐ.என்.ஏ. திராவிடர்” என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டார் பெரியா£! நேத்தாஜியின் இந்திய தேசியப் படையில் சேர்ந்து உழைத்தது, உயிர் கொடுத்தது, உயரிய ஈகம் செய்தது அனைத்தும் தமிழர்கள் ஆனால், கட்டுரையில் வரிக்கு வரி, திராவிடர் என்றே தமிழர்களைச் சுட்டுகிறார்! அதை அண்மையில் தெலுங்கர் ஒருவரால் நடத்தப்படும் இதழ் ஒன்று மறுபதிப்பு செய்திருக்கிறது! இவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றவில்லை! விஷ ஊசி ஏற்றுகிறார்கள்! நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
“திராவிடத்தை எதிர்த்துக் கொண்டு தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் அல்லது அமைப்புகள் பார்ப்பனருக்கு ஆதரவு” என்று முடித்திருக்கிறார். முதலில் மென்மையாக ஒன்றைச் சொல்வோம். “பார்ப்பனர் வேறு! பிராமணர் வேறு!” பிராமணர் தமிழரல்லர்! பிராமணர் வடுகர்! தமிழ் பேசும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பார்ப்பனர்கள் சிலர் இருக்கிறார்கள்! தமிழ்நாட்டில் இவர்கள் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருப்பார்கள்! இவர்களுள் இனத்திற்கும் மொழிக்கும் விடுதலைக்கும் இரண்டகம் செய்வோரைக் கட்டி அணைத்து முத்தமிட எந்தத் தமிழனும் சொல்லவில்லை! எந்தத் தமிழ்த் தேசிய அமைப்பும் சொல்லவில்லை! திராவிட எதிர்ப்பில் முனைப்போடு நிற்கிற எத்தனைப் பேர், எத்தனை அமைப்புக்கள் பார்ப்பனரோடுக் கொஞ்சிக் குலவிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்!
ஆனால், நீங்கள் கருணாநிதியோடு கொஞ்சிக் குலவுவது எப்படி? திராவிடன் என்கிற பேரிலே தெலுங்கனையும் கன்னடனையும் மலையாளிகளையும் ஆளவிட்டு சுரண்டவிட்டு தமிழனை நடுத்தெருவில் கொண்டுவந்து விட்டபிறகும் என்னடா இது திராவிட ஓர்மை! மண்ணாங்கட்டி ஓர்மை!
காமாட்சி நாயுடு திராவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழகம் தொடங்கியபோது தெலுங்கு பிராமணர் உள்ளிட்ட 18 சாதிகளை இணைத்துத்தான் கட்சி கண்டார்! அப்போது, சுபவீ எதைச் சூப்பிக் கொண்டிருந்தார்!
தமிழ்ப் பார்ப்பனர் காஞ்சி மடத்திற்கும் மடாதிபதியாக இயலாது! காமாட்சி நாயுடு கட்சியிலும் சேர இயலாது! தெலுங்கு, கன்னடர்தான் வடுகர்! அவர்தான் திராவிடர்! பிராமணர் என்பார் வடுகர்! அதாவது, தெலுங்கு, கன்னட இனத்தைச் சேர்ந்தவர்கள்! செயேந்திர சரஸ்வதி, செயலலிதா, சோ, கருணாநிதி, விசயகாந்து ஆகியோர் இனத்தால், திராவிடர் அல்லது வடுகர்! சாதியால் ஒருத்தர் பிராமணர், நாயக்கர், சின்ன மேளம் அல்லது பொட்டுக்கட்டி!
நாங்க, மறையர், மள்ளர், வன்னியர், நாட்டுக் கோட்டை செட்டியாரு, நாடார், பரவர், கரையார், முக்குவர், வேளாளர், தேவர், கள்ளர், மறவர், பார்ப்பனர் இது போன்ற நாங்களெல்லாம் தமிழர்!
“தமிழர் என்று சொன்னால், பார்ப்பனர் உள்ளே வந்துவிடுவர்! அதனாலத்தான், திராவிடர் என்கிறேன்” என்றார் பெரியார்! ஆனால், அவர் பிராமணரோடு மிக நெருக்கமாக இருந்தார்!
பெரியார் குற்றாலத்திலே ராஜாஜியோடு தீவிர ஆலோசனை செய்து கட்சிச் சொத்தைத் தொண்டர்களிடம் விடாமல் வாரீசு அரசியலுக்காக மணியம்மையைத் திருமணம் செய்யப் பரிந்துரைத்தது இருவருக்கும் இடையில் நடந்த கொஞ்சலா? குலாவலா? பெரியார் கன்னடர், ராஜாஜி தெலுங்கர்! அவர் பலிஜா நாயுடு! இவர் தெலுங்கு பிராமணர்!
ஆக, நீங்க இனமாக ஒன்று சேர்ந்தால் அது, அரசியல்! பகுத்தறிவு! ஆனால், ஒடுக்கப்பட்டுக் கிடக்கிற நாங்க ஒன்று சேர்தால் திராவிடம், பார்ப்பனீயம் என்றெல்லாம் பிதற்றுகிறீர்கள்!
தமிழ்நாட்டில் நிறைய பேருக்குத் திராவிட நோய் கண்டிருந்தது! நல்ல தமிழ்த் தேசிய மருந்து கண்டு அதில் பலர் நோய் நீங்கி நலமுடன் திடமுடன் இருக்கின்றனர்! ஆனால், சுபவீக்கு நோய் கண்டமாதிரித் தெரியவில்லை! திராவிடப் பேய் பிடித்திருக்கிறது போல இருக்கிறது! வேப்பிலை, வெத்திலை எல்லாம் சரிப்பட்டு வராது! நல்ல மனநல மருத்துவர் வேண்டும்! சுபவீ விரைவில் நலமடைய வாழ்த்துவோம்!

- அரிமாவளவன்

செய்தி வெளியீடு : ஊடகப் பிரிவு , தமிழர் களம் . தமிழர்நாடு .

3 கருத்துகள்:

  1. பொருத்தமான தலைப்புத்தான் இட்டிருக்கிறீர்கள்.இன்னும் ஒன்று சொல்லலாம்; சுபவீ நல்ல அறிவாளி”; ஆனால், சேர்ந்தஇடத்தைப் பொறுத்துச்சின்னாபின்னப்படுகிறார் - கௌரவர்களிடம் அகப்பட்ட கர்ணன்போல.
    இதேமனிதர்தான் முன்பொருமுறை, கருணாநிதியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் இப்படியும் திருவாய்மலர்ந்தருளினார் ஐரோப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் - எப்படித்தெரியுமா?
    ”ஜெயலலிதா நெஞ்சிலேயே குத்தினார்; கருணாநிதியோ முதுகிலல்லவா குத்துகிறார். இரண்டும் ஏறத்தாழ ஒன்றுதான் ;ஆனாலும் இதைவிட அது மேலானது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது ”
    இப்படி முழங்கியவர்தான் இன்று ஒரு கருங்காலியின் காலில்விழுந்து கிடக்கிறார்.
    சரியான சந்தர்ப்பவாதி

    பதிலளிநீக்கு
  2. அவனெல்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்கு பதில் சொல்லிட்டு இருக்காதீங்க. சின்ன மேளம் கருணாநிதி பேச முடியாமல் வாய் வலிக்கும் பொழுது திராவிடம் பேசுபவர்கள் தான் இந்த சுபவீயும் வீரமணியும்.

    பதிலளிநீக்கு