மொழிபெயர்ப்பு; திரு .இரா.சீவானந்தம். வழக்குரைஞர் . கரூர்
மேதகு ராஜபக்ச , திருமதி ராஜபக்ச , மாண்புமிகு மக்களவை பெண் உறுப்பினர் ஷீலா சக்சன் லீ , மாண்புமிகு தூதரக பெருந்தலைவர் அரோரா , மற்றும் மரியாதைக்குரிய விருந்தினர்களே, சீமாட்டிகளே , கனவான்களே ....
மேதகமை ராஜபக்ச அவர்களுக்கு இம்மாநகரின் நல்வரவு.
நீங்கள் ஓக் மரங்களையும் , பாடும் பறவைகளையும் பொருட்படுத்தாமல் இருந்தால் நான் பேசுவது இலங்கையின் பொருட்டு எளிதில் தவறாக எடுத்து கொள்ளலாம் . இலங்கை நான் பிறந்த மண் , என் தாய் , என் மனைவி சாந்தியின் பெற்றோர் , எங்கள் தாத்தா, பாட்டி ஆகியோர் என் தாயகத்தின் புனித மண்ணில் புதைகபட்டுள்ளனர்.
மேதகமையே , நான் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து கொழும்பிற்கு இடம் பெயர்ந்த போது பத்து வயது சிறுவன்! படுல்லாவை சேர்ந்த என் மனைவி ''தியத்லவாவில்'' வளர்ந்தவள் . அங்கே அவளின் தந்தை எல்லோராலும் மதிக்கப்பட்ட ஒரு படையணி தலைவர், யாழ்ப்பாணத்தில் நான் வேப்ப மரத்தின் இனிமையை நுகர்ந்துள்ளேன் . நான் கொழும்பில் பள்ளிக்கு செல்லும்போது நான் சுவைத்த சிவப்பு நாவற்பழங்கள் என்னுடைய வெள்ளை சட்டையை கரை படுத்தியுள்ளன . மரங்களில் பழுத்து கனிந்திருக்கும் பலா பழங்களை காகங்கள் உடைத்து திறக்க முயலும் வண்ணம் உள்ள பலா பழங்களின் ஈர்ப்பையும் நான் அறிவேன் !
விசாகத் திருவிழாவின் போது போடப்படும் பளிச்சிடும் வண்ண பந்தல்களை நான் கண்டுள்ளேன் . ஏழைகளுக்கான தானசாலைகளில் கூச்சமின்றி உணவு உண்டுள்ளேன் . கோவில்களின் மணியோசையும் கேட்டதுண்டு. மல்லிகை மற்றும் ஊதுபத்திகளின் மணத்தையும் நான் நுகர்ந்துள்ளேன் .
ஹீரத் பாதிரியார் அப்பமும் திராட்சை ரசமும் கொடுக்கும் சடங்கிற்காக நான் அவருக்கு துணையாக இருந்தபோது அனைத்து புனித தேவாலயத்தின் மணியோசைகளை கேட்டதுண்டு .
ஆனால் நான் 1975 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வந்த பிறகு எனக்கு வலி, துயரம், மனஉளைச்சல் இருந்துவருகிறது. நெல் வயலுக்கு தண்ணீரை கொண்டு வரும் மாபெரும் மகாவளி கங்கை சிங்கள மற்றும் தமிழரின் குருதியாக பாய்ந்தது .
நான் இங்கே அமெரிக்க ஐக்ய நாடுகளிலிருந்து , எனது முன்னோர்கள் பூமி நரகத்தின் ஆழத்தில் மூழ்குவதை கவனித்து வருகிறேன் . இங்கு யாரை குற்றம் சொல்வது என ஒருவராலும் உறுதியாக சொல்ல முடியாது, ஆனால் குற்றம் சொல்வதற்கான காலம் நீண்டு செல்கிறது.
மேதகமையே தாங்கள் துட்டகாமினி வழி வந்தவர், எமது மக்கள் எல்லாளன் வழி வந்தவர்கள். துட்டகாமினி தனது யானை ''கண்டுலா'' மீதிருந்து எல்லாளன் உடன் போரிட்டு வென்று கொன்றது எவ்வாறு என்பதை நினைவில் கொள்ளுங்கள் . துட்டகாமினி முதன் முறையாக இலங்கை முழுவதையும் ஒன்றுபடுதியதற்காக இன்றும் நினைவு கூறபட்டாலும் மற்றொரு வகையிலும் நினைவு கூறபடுகிறார். எல்லாளனை வென்று கொன்றபிறகு தனக்கு தக்க சமமான எதிரி என மதித்து எல்லாளனுக்கு ஒரு நினைவு சின்னத்தை கட்டினான் . தன்னுடைய குடிகள் எள்ளலாலனை அவமதிப்பதை நிறுத்தி அவனுக்கு மரியாதை செய்ய வேண்டும் என ஆணையிட்டான் . அவ்வாறு செய்ததின் மூலம் தான் எத்தகைய பெருந்தன்மையாளன் என காட்டியது மட்டுமின்றி தான் ஒரு பெரிய அரசியல் வாதி எனவும் மெய்பித்தான். எல்லாளனின் தோல்விக்கு பிறகு தமிழ் மக்களையும் தான் ஆள வேண்டியுள்ளது என்பதை அறிந்திருந்தான் .
மேதகமையே விதியும் நல்வாய்ப்பும், தங்களின் மாபெரும் அரசியல் திறனும் தங்களை வரலாற்றின் தனித் தன்மையுள்ள புள்ளியில் வைத்துள்ளது. வருகின்ற ஆண்டுகளில் தனக்கு முன்பு பலரும் தோற்ற போதும் 25 ஆண்டுகளுக்கு பிறகு கலக காரர்களை இறுதியாக தோற்கடித்தார் மஹிந்த ராஜபக்ச என்ற மாபெரும் தலைவர். மாவீரர் என வரலாற்று நூல்களில் வாசிப்பார்கள். அவர்கள் தங்களை 21 நூற்றாண்டின் துட்டகாமினி எனக் கூட சொல்வார்கள். ஆனால் தாங்கள் துட்ட காமினியின் ஒளி வட்டத்தை சூடிக்கொள்ள வேண்டும் என்றால் மேதகமையே தங்களும் ஒரு நினைவு சின்னத்தை கட்ட வேண்டும். அதுகூட ஒரு டோகொபவா , கட்டிடமோ அல்ல . அமுல்படுததக்க அதிகாரங்களுடன் உள்ள சட்ட பாதுகாப்புள்ள ஒரு புதிய கொள்கையே அது. 1958 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கலவரத்தில் எர்புடுதிய தவறுகளை தாங்கள் செய்யாதீர்கள் . பல்கலை கழகங்களுக்கு செல்ல வேண்டிய இளைஞர்களை தளைபடுததீர்கள் .
தமிழ் மக்கள் தங்களை இரண்டாம் தர குடிமக்கள் என என்னும்படி செய்யவேண்டாம் . அவர்களுடைய மதத்தையும் , மொழியையும், மதியுங்கள். தமிழ் மக்களை பற்றி சிலவற்றை அறிந்துகொள்ளுங்கள். மேதகமையே அவர்களுக்கு மொழி கடவுள் போன்றது . உலகில் சில நாகரிகங்களே தம்முடைய மொழி மீது பக்தியும் அர்பணிப்பும் கொண்டன .
தாங்கள் ஒரு வழக்கறிஞராக பயிற்றுவிகபட்டவர் , தாங்கள் துவக்க காலத்தில் ஒரு உறுதியான மனித உரிமை காவலராக இருந்துள்ளீர்கள். தற்போது தாங்கள்
மிக பிரபலம் பெற்றுள்ளீர்கள். தம்முடைய வெற்றிகளுக்கு பின் ரோமுக்கு திரும்பும் ஜூலியஸ் சீசரை போல வெற்றி நாயகனாக அதிகாரம் பெற்றுள்ளீர்கள் .எவர் ஒருவரும் தங்களை மறுக்கவோ கேள்வி கேட்கவோ இயலாது. சட்டப் பள்ளியில் ''சொல்ச்பெரியின்'' அரசமைப்பு சட்டத்தை நீங்களும் நானும் பயின்றவர்கள் . வலிமையான சட்ட விதிகளை இயற்றி கோருங்கள் அது தொடர்பாக என்னுடைய உதவி ஏதேனும் தேவைப்படின் நான் இலவசமாக தருகிறேன் என சபை முன்பாக தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ் மக்கள் நிர்வாணமாக பசியோடு எங்களுக்கு ஒரு இடம் உண்டு என்ற உத்திரவாதத்தை தங்களிடமிருந்து எதிர்பார்த்து கொண்டிருகிறார்கள். அதை தாங்கள் உறுதிபடுத்துங்கள். தாங்கள் ஒரு பிரபாகரனை கொன்றுள்ளீர்கள்.ஆனால் மற்றொருவர் வளர இடம் தராதீர்கள் . மற்றொருவர் வாளோடும் , துப்பாகியோடும் வருவதை தங்களால் தடுக்க இயலாது . மனதாலும் மதி நுட்பத்தாலும் மட்டுமே செய்ய இயலும் . தாங்கள் புத்தரிடம் கற்ற கருணை, உண்மை, நீதி ஆகிய ஆயுதங்களே தங்களுக்கு தேவை.
எந்தஒரு காலத்திலும் வெறுப்பு வெறுப்பை ஒழிக்காது ! அன்பே வெறுப்பை ஒழிக்கும் என்பது பழைய பாடம் என தம்மை பீடத்தில் புத்தர் போதித்துள்ளார்.தாங்கள் இந்த அழகான நகரத்திலிருந்து விடை பெற்று இலங்கைக்கு செல்லும்போது அங்கே 10 வயது பையன் பள்ளிக்கு செல்லும் போது அவனது வெள்ளை சட்டையில் நாவற்பழ கரையை தவிர வேறு கரை படியாது என்றும் , காலையில் காகம் பலா பழத்தை தவிர வேறு எதையும் கொத்தி தின்னாது எனவும் , வேப்ப மரங்களில்நான் நுகர்ந்த தவிர வேறு எதுவும் வேப்ப மரத்தில் தொங்காது எனவும் இங்கே எனக்கு உறுதிமொழி கொடுங்கள் .மேதகமையே எங்களை சொர்கத்துக்கு திரும்ப விடுங்கள் , தாங்களும் சொர்கத்துக்கு வாருங்கள்!!
இம்மொழி பெயர்ப்புக்கான ஆதார காட்சி வடிவ ஆவணம் :
http://www.youtube.com/watch?
நன்றி; திரு .இரா.சீவானந்தம். வழக்குரைஞர் . கரூர்.
செய்தி வெளியீடு; ஊடகபிரிவு. தமிழர் களம் , கரூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக