எம் பாட்டன் முப்பாட்டன்
ஆண்ட தமிழ்நாடு!
வேற்றோனுக்கு தாய்வீடு...
மாற்றான் மொழி பேசும்
தமிழ்நாடன் மொழியென்றால் ஏசும்
ஆங்கிலேயன் நயாகராவில்
வருக! வருக!!
தமிழன் பயாகராவில்
"WELCOME ENTRY TICKET 2 Rs/-" ஆடுவது மானாட மயிலாட
ஆளுவது தமிழ்நாட
நடத்துவது செம்மொழிமாநாட
பாரடா! தமிழ்ப்படும் பாட்ட
தெலுங்கன் ஆள்கிறான்
கன்னடன் அடிக்கிறான்
மலையாளி வாழ்கிறேன்
தமிழன்
அலைகிறான்!அழிகிறான்!!
கேட்டால் தமிழ்நாடென்கிறான்...
தமிழ் பேசா
வேற்றோன் நாடு!
அதற்கே தமிழீழ
தனிநாடு அண்ணன்
கட்டமைத்த செந்தமிழ்நாடு!!
தமிழர் நாதமதில்
தமிழீழமே இசைந்திடும்
குருதி கண்ட உடல்
நீர்க்கொண்ட விழிகள்
மறக்குமா? ரணங்கள்
இனியோ அலறமாட்டோம்...
அனல் காக்கும்
நெருப்பாய் போராடுவோம்!
பதுங்கும் புலிகள்
பாய புறப்படுவோம்!
பாயிந்து வென்றிடுவோம்!
தாய்நாடு புகுந்திடுவோம்!!
எதிரியை விரட்டிடுவோம்!!!
இனி,
அண்ணன்புலி ஈழநாட்டில்..
தம்பிபுலி தமிழ்நாட்டில்...
நன்றி: தமிழ் ஈழ புரட்சிகர மாணவர்கள் இணையம் .

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உணர்வுள்ளதமிழன் கருவைமுருகு அறிவது,
பதிலளிநீக்குஅருமையான கவிதை. படிக்கும்போதே இரத்தம் சூடேறுகிறது. வாழ்த்துக்கள்!!
ஒரு சிறுதிருத்தம் : மலையாளி வாழ்கிறேன் என்று உள்ளது; அனேகமாக இது அச்சுப்பிழையாகத்தான் இருக்கும். வாழ்கிறான் என்பதாகத்திருத்திவிடவும். மேலும், பாயிந்து என்பது பாய்ந்து என்பதாகத்தான் இருக்குமோ?தயவுசெய்து தவறுகளைச்சரிபார்த்து வெளியிடவும்.
பிற்குறிப்பு: திருத்தம் தனிப்பட்டமுறையிலானது.