சனி, நவம்பர் 27, 2010

மாவீரர் நாள் 27.11.2010






நிகழ்வு ஒன்று :
ஈழத்தில் தாயக விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த ஈகிகளின் நினைவேந்தல் நாள் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளாக உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் அனுசரிக்கபடுகிறது . அதுசமயம் இந்த ஆண்டு கரூர் நகரில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் ஜி ஆர் திருமணமண்டபத்தில் அரங்கு கூட்டமாக நடைபெற்றது. கூட்டத்தை கரூர் மாவட்டபொறுப்பாளர் திரு . முரளி தலைமை தாங்கி நடத்தினார் . தமிழர்களத்தின் கரூர் மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் திரு . சீவானந்தம் மாவீரர் நாள் குறித்த சிந்தனைகளையும் , சீமான் தளை செய்யப்பட்டதில் ஆளும் தி மு க அரசின் சட்ட மீறல்களையும் , தமிழர்கள் இனப்பற்று கொள்ளவேண்டியத்தையும் தமது கருத்துரையில் கூறினார். இனி நாம் செய்ய வேண்டியது குறித்த உறுதிமொழியினை திரு முரளி தலைமையில் அனைவரும் எடுத்துகொன்டனர். நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏந்தி மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர் . கூட்டத்தில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர் . இந்த நாள் வெறும் இரங்கல் கூட்டத்திற்கானது மட்டுமல்ல நாம் நமது காலத்தில் தமிழர்களை சாதி கடந்து ஒருங்கிணைத்து நாம் தமிழர்களாய் ஒன்றானால் மட்டுமே எந்த போராட்டமும் சாத்தியம் என்பதை உணர்த்தியது.
நிகழ்வு இரண்டு :
அதேபோல் கரூர் பேருந்து நிலையம் அருகில் புதிய தமிழகம் கட்சியினர் சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது . கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் திரு . பாண்டியன் தலைமை தாங்கினார். திரளான பெண்கள் பங்கு கொண்ட ஒரு எழுச்சி மிகுந்த நிகழ்வாக அமைந்தது. முதலில் மாவீரர் பதாகைக்கு மலர் தூவி வீர முழக்கமிடப்பட்டது . பின்னர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர் . குழந்தைகள் அஞ்சலி செலுத்தியது கண்டு அனைவரும்நெஞ்சம் நெகிழ்ந்தனர் . கூட்டத்தில் வழக்குரைஞர் திரு .சீவானந்தம் , சந்திரன் , உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர் .
மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் காவல்துறையின் கெடுபிடிகளுக்கு நடுவே மிக அமைதியாக நிகழ்ந்தது .

செய்தி வெளியீடு : ஊடகபிரிவு , தமிழர் களம் . கரூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக