ஞாயிறு, நவம்பர் 14, 2010

''தமிழர்களை திருவோடு ஏந்தவைக்கும் திராவிட அரசியல்'' - அரிமா


கோவில்பட்டி - 14.11.2010 ஞாயிறு .

மள்ளர் மீட்பு களத்தின் கொள்கை விளக்க புத்தக வெளியீட்டுவிழா கோவில் பட்டியில் நடைபெற்றது.

தமிழர் களத்தின் மாநில பொதுசெயலாளர் திரு .அரிமாவளவன் கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சி உரை நிகழ்த்தினார். அதன் விவரம் ....

திராவிட அரசியல் , நமது தமிழ் சாதிகளை மற்ற தமிழ் சாதிகளுடனே பூசல்களை உருவாக்கி மோதல் ஏற்பட வழிவகை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. தமிழர்களை வெறும் இட ஒதுக்கீட்டிற்காக திருவோடு ஏந்தி அலையும் படி செய்துவிட்டனர் .
களப் போராட்டம் என்பது வெறும் இட ஒதுக்கீட்டை மட்டும் பெறுவதற்கு அல்ல . தமிழர்கள் இழந்த மன்னுரிமையை மீட்பதற்காகவும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் நமது போராட்டம் அமைய வேண்டும்.
நமது உட்சாதி சண்டைகளை தீராப் பகையாக கருதாமல் , வெறும் குடும்ப சண்டையாக கருதி அதை தீர்க்க முயலுவோம் . அதுவே பெரிய பிரிவினையாக வளரவிடாமல் தடுப்போம் !
தமிழர்களின் பொதுவான பிரச்சினைகளைதீர்க்க , களம் அமைத்து விட்டதால் செந்தில் மள்ளரும் , அரிமாவளவனும் மட்டுமே போதும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என எண்ண வேண்டாம். ஒவ்வொரு தமிழரும் திராவிடத்திர்க்கேதிரான கருத்துகளை உள்வாங்கி , அதனால் நாம் இழந்ததை பற்றியும் , இனி என்ன செய்யபோகிறோம் என்பதை பற்றியும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் .
லச்சக்கணக்கான ஈழ தமிழர்களை கொன்று அழித்தது மட்டுமில்லாமல் , தமிழக மீனவர்களையும் பலிகொடுக்க வைத்தது சோனியாவின் காங்கிரஸ் அரசு . வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும் , அதன் கூட்டணி கட்சியையும் தமிழகத்தில் இருந்து வேரோடு அகற்ற ஒவ்வொரு தமிழரும் பாடு பட வேண்டும் .

நமக்குள் இருக்கும் அக முரண்களை களைவோம், தூய தமிழர்களை ஒன்றிணைப்போம் , இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம் !! என்று அவர் எழுச்சியுரையாற்றினார்

கூட்டத்திற்கு திரு . செந்தில் மள்ளர் ,தலைமை தங்கினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் திரு . தன்மானன் சிறப்புரை நிகழ்த்தினார் . மள்ளர் களத்தின் நிர்வாகிகளும், இளைஞர்களும் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு ; ஊடகபிரிவு , தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக