
குணா
எழுதிய
தொல்காப்பியத்தின் காலம்
என்னும் அரிய ஆய்வுநூல்!
தமிழர்களின் வரலாறு காலம் முழுவதும் மறைக்கப்பட்டு உரு மறைப்பு செய்தே வெளியிடபடுகிறது . ஆட்சி அதிகாரம் நம்மிடம் இல்லாது போனதால் வந்தேறி கூட்டங்கள் நமக்கே பாடம் கற்பிக்கின்றன. இந்தியாவின் வரலாறு வடக்கே இருந்துதான் கற்பிக்கபடுகின்றன. சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது . ஆயினும் சில கூலிக்கார ஆய்வாளர்கள் அரசின் ஆதரவை பெறவேண்டும் என்பதற்காக தமிழர்களின் தொன்மையை இருட்டடிப்பு செய்கின்றனர். ஆனாலும் உண்மை அழிவதில்லை தமிழர்களின் முகவரியை மீட்டுத்தந்த அறிஞர் குணா இப்போது ''திராவிட + வடுக பிரமணிய'' சூழ்ச்சிகாரர்களால் தொன்மை இழந்த (செம்மொழி மாநாட்டால் ) தொல்காப்பியத்தின் காலத்தை மீளாய்வு செய்துள்ளார் . அவரது நூல்களை படித்த பின்னர் பலரும் தமிழின மீட்சிக்காக பாடுபடுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை . ஆயினும் பொருளாதாரத்தில் மிக மிக பின்தங்கியுள்ளனர் என்பதும் உண்மை . அவரது பல நூல்களை வெளியிட்ட ''வேர்கள் '' இந்த புத்தகத்தையும் வெளியிட முன்வந்துள்ளது . புத்தகம் வெளிவர தமிழர்கள் நாம்தான் முன்னிருந்து உதவ வேண்டும் . இது நமது கடமையும் கூட எனவே புத்தகம் அச்சாகி வெளிவர உதவுமாறு வேண்டுகிறோம் ! இருக்கும் நமது அடையாளங்களை காப்போம் ! இழந்த உரிமைகளை மீட்போம் !
“வரலாற்றுக் குறிப்புகள் சிலவற்றைப் பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட்டுச் செல்லுவதற்கும், ஆணித்தரமாக அறைவதற்கும், சரியான தரவுகளுடன் ஆய்வுசெய்து நிறுவுவதற்குமிடையில் வேறுபாடுகள் உண்டு.
“மொழியியல் ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரின் அடிச்சுவட்டில் நடையிட்டுக் கொண்டிருக்கின்ற ஆய்வியலார் குணா ஒப்பாய்வு முறையில் ஆய்ந்து வெளிக்கொணர்ந்துள்ள நூல்தான் இந்தத் தொல்காப்பியத்தின் காலம்.”
செய்தி வெளியீடு : ஊடகபிரிவு , தமிழர் களம் .
செய்தி வெளியீடு : ஊடகபிரிவு , தமிழர் களம் .
நம் வேர்கள்
3, திருத்தான்தோன்றிச் சாலை
உறையூர்
திருச்சி 621 308
தமிழர்நாடு
நூல் வெளிவந்து இரண்டுமாதம் ஆகிவிட்டது. திட்டமிட்டு அமைதிகாக்கிறார்கள். திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலுக்கு கொதித்தெழுந்தவர்கள். வள்ளுவத்தின் வீழ்ச்சியையும், தொல்காப்பியத்தின் காலத்தையும் அமைதிகாத்து அழிக்க எண்ணுகிறார்கள். திராவிடத்தால் வீழ்ந்தொமை நான் முழுமையாக ஆதரிக்கவில்லை குணாவின் அரசியல் எனக்கும் எர்ப்புடையதல்ல.. அதற்காக வள்ளுவத்தின் வீழ்ச்சியையும் தொல்காப்பியத்தின் காலத்தையும் அவர் அரசியலுக்காக புறக்கணிப்பது வேதனை..
பதிலளிநீக்குWHERE AVAILABLE IN BANGALORE ? i WANT TO BUY ALL GUNA BOOKS
பதிலளிநீக்குதமிழ் இனத்தின் சிறந்த போராளி குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூலை நான் படித்தேன் தமிழர்களுக்கான மிகச் சிறந்த நூல் இந்த நூலை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும் பாதுக்காக்க வேண்டும்
பதிலளிநீக்கு