ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

பெரியார் ?

வரலாறு ஈவு இரக்கமற்றது . அது யாருக்காகவும் வளைந்து கொடுக்காது . உலகில் நிகழ்வன அனைத்தும் வரலாறாகி விடுவதில்லை . மக்களிடம் எது பதிவு செய்யபடுகிறதோ அவையே வரலாறாக பின்னாட்களில் படிக்கபடுகிறது . அது எந்தெந்த வகையில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறது என்பது தக்க சான்றுகளை வைத்துதான் . அவ்வாறு மெய்பிக்கப்படும் போது உண்மை பலவேளைகளில் கசக்கத்தான் செய்யும் ! அதுவே நாம் மேற்கூறியவாறு ஈவு இரக்கமற்றதாகி விடுகிறது .
திராவிடத்தின் ஆணிவேர் அழுகத் தொடங்கியுள்ளது . இந்தியம் திராவிடம் இவ்விரண்டும் எவ்வாறெல்லாம் தமிழர்களின் உண்மை வரலாற்றை இருட்டடிப்பு செய்துள்ளது என்பதை அறிந்தவர்கள் கூட வெளிபடையாக கூறுவதில்லை , எழுதுவதில்லை , ஏனெனில் அவர்கள் திராவிடத் தமிழ் தேசியவாதிகள் !
இந்தியத்தை பற்றி நாம் பயில்வது வடக்கேயிருந்து துவங்கும் வரலாற்றை மட்டும்தான் . உண்மையில் இந்தியாவின் வராலாறு தெற்கேயிருந்துதான் எழுதப் பட்டிருக்க வேண்டும் . அவ்வாறு எழுதபட்டால் தமிழன் உயர்வு பெற்று விடுவான் . வடவர்களின் வரலாறு பின்னுக்கு தள்ளப்பட்டு விடும் . தில்லியும் தலைமையிடமாக இருந்திருக்காது ! தமிழகமும் எதற்கெடுத்தாலும் தில்லியிடம் மண்டியிட வேண்டிய அவசியம் இருந்திருக்காது . ஆயினும் இன்று இந்தியாவை பற்றிய மாயை தமிழர்களிடம் மெல்ல மறைந்து வருகிறது என்பது மறைக்க முடியாத உண்மை .
திராவிடம் என்றவுடன் நினைவுக்கு வருபவர் பெரியார் என்று அழைக்கப்படும் ராமசாமி நாயக்கர்தான் ! இந்தியா நோக்கி வந்த அயலவர்கள் தமிழர்களையும் , கன்னடர்களையும் , தெலுங்கர்களையும் , மலையாளிகளையும் ஒரே இனமாக கருதி திராவிடர்கள் என்று அழைத்ததின் பிழையாக ஈ.வே .ரா . திராவிடத்தை பற்றிக் கொண்டார்! அதனால் நாம் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல . அதன் துயரத்தை இன்று வரை அனுபவிக்கிறோம்.
யார் இந்த ராமசாமி நாயக்கர் ? தமிழை காட்டு மிராண்டி மொழி எனவும் , தாய் மொழியின் மகத்துவத்தை அறிய ஒவ்வொரு தமிழ் தாயின் பாலையும் ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்தால் தெரியும் அதன் யோக்கியதை என்று அவமதித்தவர் தானே ! இதிகாசங்களும் புராணங்களும் இன்ன பிற தமிழ் இலக்கியங்களும் வேண்டாத குப்பைகள் என்றாரே அவர் .
உண்மையில் தமிழர்களின் வரலாற்றை அறிய தொன்மங்கள் தானே வழிகாட்டியாக இருக்கின்றன . இது தமிழ் அறிஞர்களுக்கும் , ஆய்வாளர்களுக்கும் தெரியாதா? எந்த விதத்திலும் தமிழன் தனித்து உயர்ந்துவிடக் கூடாது என்பதன் நோக்கம்தான் என்ன ? தமிழர் நாட்டை தமிழர் ஆள நினைப்பதில் என்ன பிழை ? அவர் சொல்கிறார் தமிழர்களுக்கு தலைவன் ஒருவரும் இல்லையாம் . யாரை முன்னேற விட்டார் இவர் . ஏமாளியாக இருந்த தமிழன் ஏற்றம் பெற கயவர்களும் , அயலவர்களும் ஒருபோதும் விரும்பியதில்லை . வளம் மிக்க தமிழகம் சுரண்டப் படுவது இவர் போன்றவர்களின் பிறங்கடைகளால் தானே !
ராமசாமி நாயக்கரின் சாதனைகளாக குறிப்பிடப்படும் அவரின் சிந்தனைகள் உண்மையில் அவருடையதா? அறிஞர் கைவல்ய சாமியாரின் எழுத்துகளும் , சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் கருத்துகளையும் அவர் தனது மேடை பேச்சுக்களில் விளக்கி சொன்னதால் தான் அவருக்கு பெருமை . அதனால் அவரை பின்பற்றுபவர்கள் மட்டுமே புரட்சியாளர் என்கின்றனர் .
இதை பாரதி தாசன் தெளிவாக்குகின்றார். பெரியார் ஒரு சிந்தனையாளர் தான் புரட்சியாளர் அல்ல . புரட்சி என்பது தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துவது . ஹோசிமின் ஒரு புரட்சியாளர் , மாவோ ஒரு புரட்சியாளர் , சிங்காரவேலரும் புரட்சியாளர் . இன்னமும் சொல்லபோனால் சிங்கரவேலரோடு புரட்சி செத்துவிட்டது என்கிறார்.
அதேபோல் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே , இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்றும் சாடியது யாரை என்பதும் , அவரின் கூற்றில் இருக்கும் பல உண்மைகளை மறைக்க முடியாது என்பதும் அனைவரும் அறிவர் . ராமசாமி நாயக்கருக்கு சில நல்ல குணங்கள் உண்டு . அதேபோல் பல தீய குணங்களும் உண்டு . தனக்கு தேவையான போது ஒருவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை வைத்து பயன் படுத்திக் கொள்வார் . தனக்கு தேவையில்லாத போது என்னதான் அவன் பயன்பட்ட மனிதன் என்றாலும் அவன் இறந்து கொண்டிருக்கும் தருவாயிலும் கூட சட்டை செய்ய மாட்டார் . அப்படி அவரால் உதாசீன படுதியவர்களில் ஒருவர்தான் சிந்தனை சிற்பி மா. சிங்காரவேலர் !
1934 குப் பின் ராமசாமி நாயக்கருக்கு பல நெருக்கடிகள் வந்தன . போது உடமை இயக்கம் தடுக்கபட்டிருந்த காலம் அது. நாயக்கரின் உடன் இருந்தவர்கள் அனைவரும் இதெல்லாம் சிங்கரவேலரால் வந்த தொல்லைகள் என்றனர் . உடனே நாயக்கரும் இனி நான் பொது உடமை பற்றி பேசமாட்டேன் என்று கூறிவிட்டு சந்தர்பவாத சுயநலத்திற்காக நீதி கட்சியை ஆதரித்தார் . சுயமரியாதை சமதர்ம கப்பலை அம்பேல் என விட்டுவிட்டு நீதிக்கட்சி எனும் சிறு படகில் சாதாரண படகோட்டியாக போகும் அவலம் ஏற்பட்டது . மேலும் சிங்கரவேலரின் கட்டுரைகள் குடியரசில் மிகுதியாக வந்துகொண்டிருந்த காலம் . நெருக்கடிக்குப் பின் படிப்படியாக குறைக்கப்பட்டு பின்னர் வாய்ப்பே இல்லாது போனது .
நாயக்கர் தன்னை பற்றியே நினைத்து தன்னை சுற்றியே உலகத்தை அமைத்துக்கொண்டு வாழ்ந்த அவர் பண்பில்லாதவர் . காரணம் அவர் தான் முனைப்பானவர் தனக்கு தேவை ஏற்படின் கூட்டையே அழித்துக்கொண்டு வெளியேறும் பட்டுபூச்சி போன்றவர் . 1930 களில் தனது சுயமரியாதை இயக்கத்தை அரசியலற்ற இயக்கமாக நடத்த வேண்டும் என அடம்பிடித்தார். மீண்டும் 1934 இல் நெருக்கடி வந்தபோது தன்னை காப்பாற்றி கொள்ள மீண்டும் அரசியலற்ற சமுதயபணிதான் நோக்கமென்று கூறினார் . சிங்காரவேலர் பெரு முயற்சி செய்து சுயமரியாதை சமதர்ம இயக்கத்தை அரசியல் சமுக சீர்திருத்த இயக்கமாக மாற்றினார் . ஆனால் ராமசாமி நாயக்கர் வழக்கம்போல் என் இயக்கம் அரசியல் இயக்கமல்ல , சீர்திருத்த இயக்கம் தான் , எனக்கும் பொது உடமைக்கும் தொடர்பு இல்லை , என் இயக்கத்தில் இருப்பவர்கள் பொது உடமை பேசினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்றார் . இதை கேட்ட சிங்காரவேலரும் தோழர் ப. ஜீவானந்தமும் பேரதிர்ச்சி அடைந்தனர் . மனம் நொந்த நிலையில் அவரை விட்டு வெளியேறினர் . அதனால் தான் அவரை பின்பற்றுபவர்களுக்கும் பண்பு இல்லாது போய்விட்டது !

சிந்திப்போம் .
நூல் அதரம் : செஞ்ஞாயிறும் வின்மீன்களும்.

தொகுப்பு : கருவை முருகு .

1 கருத்து:

  1. சாதியும் மதமும் சமயுமும் காணா
    ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

    சாதியும் மதமும் சமயமும் பொய்யென
    ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

    நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
    நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே

    அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
    வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
    வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
    யாதெனில் ..
    சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
    சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .

    உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
    கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
    கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
    கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
    காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
    பிள்ளை விளையாட்டு ....

    குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
    அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.

    See this site :
    http://www.vallalyaar.com/

    பதிலளிநீக்கு