வியாழன், ஏப்ரல் 28, 2011

ஏக்கம் தீர்க்குமா தாதம்பாளையம் ஏரி - மனோகரன்






நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்றி அமையாது ஒழுக்கு -
என்ற குறளுக்கொப்ப தமிழக மக்களின் வாழ்க்கையிலும் , வரலாற்றிலும் குளங்களும் , ஏரிகளும் பிரிக்க முடியாத அளவிற்கு பின்னிப் பிணைந்து கிடக்கின்றன . எனவேதான் குளம், ஏரி ஊர் பெயருக்கு முன்னாலோ , பின்னாலோ சேர்ந்திருக்கின்றன . தாதம்பாளையம் குளத்திற்கு அருகில் இருக்கும் ஊர் என்பதால் குளதூர்பட்டி என்று பெயர் வைத்துள்ளனர் . இதிலிருந்து இந்த குளத்தின் பெருமையை அறியலாம் .
கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி வட்டம் , பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சியில் அமைந்துள்ளது தாதம்பாளையம் குளம் , பரமத்தி ஒன்றியம் அமராவதி ஆற்றின் வடபகுதியில் அமைந்து இருந்தாலும் மிகுந்த வரட்சியான பகுதியாகும் . இங்கு ஆண்டுக்கு சுமார் 200 முதல் 300 மி .மீட்டர் மழை பெய்கிறது . இந்த மழையும் , மழைகாலம் நவம்பர் , டிசெம்பர் மாதங்களில் பெய்கிறது . அவ்வாறு பெய்கின்ற மழைநீர் பரமத்தி , ஆரியூர் வழியாக உப்பாறு என்ற பெயரில் தாதம்பாளயதிற்கு கிழக்கே அமராவதியில் கலந்து வந்தன . இதை அறிந்த ஆங்கிலேய அரசு 1881 ஆம் ஆண்டு பெரிய அணைக்கட்டு போன்று குளத்தை வடிவமைத்து நீர்போக்கி அமைத்து முறைபடுதினார்கள் . இதன் பரப்பளவு சுமார் 420 ஏக்கர் ஆகும் . இந்த குளம் நீர்த்தேக்கத்தில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் பஞ்சத்தை போக்கின . பள்ளபாளையம் ராச வாய்க்கால் வறட்சியான நேரத்தில் உயிர்த்தண்ணீர் பெற்றன. இந்திய விடுதலைக்கு பின்னர் இக்குளம் பராமரிப்பு இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தூர்ந்து போய்விட்டது . 1990 குப் பின் பொதுபணிதுறைஇடம் இருந்து வனத்துறைக்கு கைமாறியது .
நம் முன்னேற்றத்திற்கும் உணவு உற்பத்திக்கும் , தொழில் வளர்சிக்கும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு உன்னதமான திட்டம் திராவிட ஆட்சியாளர்களால் பயனற்று கிடப்பதை கண்டு நமது விவசாய சங்க தலைவர்கள் , ஊராட்சிமன்ற தலைவர்கள் , பொதுமக்களும் பல்வேறு முயற்சிகள் எடுத்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர் . அதன் ஒரு பயனாக திரு . புளியம்பட்டி ராமசாமி , மொச்சகொட்டம்பாளையம் மனோகரன் போன்றவர்கள் எடுத்த கடும் முயற்சியினால் கடந்த 2002 ஆம் ஆண்டு பொதுபணிதுறை பொறியாளர் திரு . கண்ணப்பன் அவர்கள் தாதம்பாளையம் குளத்திற்கு அமராவதி ஆற்றின் வெள்ளஉபரி நீரை கொண்டு வந்தால் இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்ற நோக்கத்தில் ருபாய் 12 கோடி மதிப்பீட்டில் மேற்கே நஞ்சைத் தலையூரிளிருந்து அமராவதி நீரை தாதம்பாளையம் குளத்திற்கு கொண்டு கொண்டு வரலாம் என்று ஒரு திட்டத்தை தயார் செய்து கொடுத்தார் . ஆனால் ஆண்டுகள் மட்டுமே போனது திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது . அடுத்து வருகின்ற ஆட்சியாளர்களாவது இந்த குளத்தை வனதுறையிடமிருந்து மீட்டு மக்களுக்கு பயனளிக்க செய்வார்களா ? என்பதுதான் தொக்கி நிற்கும் கேள்வி .
கரூர் நகரம் முழுவதும் பயனளிக்க இருக்கும் இந்த குளத்தின் தற்போதுள்ள நிலையை படத்தில் காணுங்கள் .

இத்திட்டம் நிறைவேறினால் ஏற்படும் நன்மைகள் :
1. 13 ஆண்டுகள் வெள்ள நீர் மற்றும் உபரிநீர் காவிரியில் எவ்வளவு கலந்தது என்பதை ஆய்வு செய்த பின்பே இத்திட்டம் தயாரிக்கப்பட்டது .
2. பரமத்தி ஒன்றியம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் .
3. கரூர் நகரம் ஆண்டாங்கோயில் மேற்கு கிழக்கு பகுதி , கருப்பம்பாளையம், கொடையூர், அப்பிபாளையம் ஊராட்சி பகுதிக்கு குடிநீர் ஆண்டு முழுவதும் கொடுக்க முடியும் .
4. பள்ளபாளையம் ராச வாய்க்கால் பாசனம் இரண்டு போகத்திற்கு வாய்ப்பு.
5. விவசாயம் செழிக்கும் , நிலத்தடி நீர்மட்டம் உயரும் , கால்நடைகளாலும் பெரிய பயன் உண்டாகும் .

ஒளிப்படம் : அரசு , முருகானந்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக