வெள்ளி, பிப்ரவரி 03, 2012

கூடன்குளம் அணு உலையை முடக்கோரி 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

கூடன்குளம் அணு உலையை முடக்கோரி 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட மாபெரும்
கண்டன ஆர்ப்பாட்டம் !

பாளையங்கோட்டை
03.02.12

அனைத்து தமிழர் அமைப்புகளும் கலந்துகொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலைகண்டித்து முழக்கமிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே போராட்டக்
குழுவினர்கள் மைபா சேசுராசு, புஸ்பராயன் உள்ளிட்டோர் மீதும் பெண்களின் மீதும் தாக்கியவர்களை காவல்துறை தடுக்கவில்லை ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. மேலும் தமிழக அரசானது போராட்டக் குழுவினருக்கு ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பொய் அவதுாறு செய்திகளை பரப்பிவரும் தினமலர் நாளேட்டை கண்டித்து முழக்கமிடப்பட்டது. மேலும் இன்று நடைபெறும் காங்கிரசாரின் பொதுக்கூட்டத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்கியதன் முலம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை மாநில அரசே ஏற்படுத்துவது போல் இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள்
கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களம், நாம்தமிழர், ம தி மு க, உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்பினர் திரளாக கலந்து கோண்டதைத் தொடர்ந்து இன்று நடைபெற இருக்கும் காங்கிரசு பொதுக்கூட்டத்தை கண்டிக்கும் வகையில் கூட்டப்புளியிலிருந்து விஸ்வநாதபுரம் வரை கருப்புக்கொடிஏந்தி பேரணிவர முடிவுசெய்துள்ளனர்.

செய்தி ் ஜெகன், ஊடகப்பிரிவு
தமிழர் களம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக