புதன், பிப்ரவரி 01, 2012

மனித உரிமைகள் பாதுகாப்பு நடுவம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

01.02.2012
துாத்துக்குடி
பன்னாட்டு முதலாளிகளின் லாப வெறிக்கான, மனிதகுலத்துக்கெதிரான கூடன்குளம் அணு உலையை முடக்கோரி மனித உரிமைகள் பாதுகாப்பு நடுவம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இன்று காலை 10 மணி அளவில் மனித உரிமைகள் பாதுகாப்பு நடுவம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் துாத்துக்குடி ராஜாஜி சிலை அருகில் நடைபெற்றது. இந்த கண்டஆர்ப்பாட்டத்திற்கு மனித உரிமைகள் பாதுகாப்பு நடுவன் அமைப்பைச் சார்ந்த மாவட்ட இணைச் செயலாளர் வழக்கறிஞர் அரிராகவன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு , மகஇக மாநில இணைசெயலாளர் தோழர் காளியப்பன், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், மனோ தங்கராஜ், சிவசுப்பிரமணியம், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
சுப உதயகுமார் பேசுகையில்... தமிழக அரசின் சார்பில் இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்டுள்ள 156 பொய் வழக்குகளை திரும்ப பெறவும், மாற்று மின் உற்பத்தி வழிகளான காற்றாலை, கடல் அலை, சூரிய ஒளி போன்ற மரபு சார்ந்த முறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அமெரிக்கா, சப்பான், போன்ற நாடுகளே படிப்படியாக அணு உலைகளை முடும் தருவாயில் இருக்கும்போது பன்னாட்டு முதலாளிகள் இந்தியாவை குப்பைக்காடாக மாற்ற இந்திய அரசியல் வாதிகள் துணைபோவது எவ்விதத்தில் நியாயம் என்றும், இந்திய அணுசக்தி கழகம் மக்களின் வரிப்பணத்தை

விளம்பரங்களில் வீணடிக்கிறது என்பதையும், அணுசக்திக்கு ஆதரவாக பேசுபவர்கள் ஏன் பின்னாளில் வரப்போகும் பாதிப்பை நினைத்துப் பார்ப்பதில்லை. அவர்களின் கயமைத் தனத்தையும், காங்கிரசு, பாஜக, இந்துத்துவ அமைப்புகள் சாதி மத மோதல்களை துாண்டிவிடுவதையும் மிக வன்மையாக கண்டித்துப் பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாலை வரை நிகழ்ந்த கண்டன ஆர்பாட்டத்தை ராமச்சந்திரன், தங்கபாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

செய்தி் - ஜெகன், தமிழர்களம்,
துாத்துக்குடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக