வன்முறைக் கும்பல்களால் கூடங்குளம் மக்கள் போராட்டத்தை நசுக்க முடியாது!
தமிழர்களம் அரிமாவளவன் கண்டனம்!
கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு எதிராக பொய்களையும் புரட்டுகளையும் ஊடகங்களில் அள்ளித் தெளித்து படுதோல்வியடைந்த வன்முறைக் கும்பல் இப்போது தண்டம் எடுத்துக் கிளம்பியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு வந்த போராட்டக்குழு பிரதிநிதிகள் மீது அந்தக் கும்பல் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டு வந்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி பெண்களின் மீதும் கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறது.
மதவெறியை மூலதனமாகக் கொண்டு இயங்குகிற இந்தக் கும்பல்களுக்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலையில் வன்முறையையே இவர்கள் காலாகாலமாக மூலதனமாக்கியிருக்கிறார்கள். முதலில் காந்தியைக் கொன்ற இவர்கள் மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள். குசராத் படுகொலைகளிலும், பாபர் மசூதி இடிப்பிலும் பச்சைப்படுகொலைகளிலும் இவர்களது கோர முகம் வெளிப்பட்டுவிட்டது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் என்பது ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் வாழ்வுரிமைப் போராட்டம் என்பதை மறந்தும் மறைந்தும் இந்த வெறிக் கும்பல் செயல்பட்டு வருகிறது. இப்போது கற்களைத் துக்கியிருக்கிற இந்தக் காட்டுமிராண்டிக் கும்பல்களுக்கு பொது மக்களே தக்க பாடம் புகட்டுவர். போராடும் மக்களுக்கு அரணாக தமிழர்களம் தொடர்ந்து நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு வன்முறையில் இறங்கியிருக்கும் இந்தக் கும்பலை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம், என்று திரு. அரிமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக