புதன், டிசம்பர் 11, 2013

ஆதார் அட்டையின் மூலம் அமெரிக்காவிற்கு தகவல் சேர்க்கும் இந்திய அரசு !

                      ஆதார் அட்டையின் மூலம் அமெரிக்காவிற்கு தகவல் சேர்க்கும் இந்திய அரசு ! MongoDB என்ற அமெரிக்க நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Max Schireson, இரு வாரங்களுக்கு முன்பு புது டெல்லியில், இந்திய அரசுடன் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை முடித்திருக்கிறார். அது ஆதார் அட்டையுடன் தொடர்புடைய ஒப்பந்தம். இன்னும் இதுகுறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதில் புருவம் உயர்த்த வைக்கும் அதிர்ச்சி செய்தி...என்னவெனில், MongoDB என்பது, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ-விடம் இருந்து நிதியுதவி பெறும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவின் சுமார் 110 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை விநியோகிப்பதற்குத் தேவையான தகவல்களை திரட்டுவதிலும், அவற்றை ஆராய்ந்து தொகுத்து அளிப்பதிலும் UIDAI உடன் இணைந்து செயல்படப்போகிறது. அதாவது இந்திய மக்களின் அங்க அடையாளம் முதல் மாத வருமானம் வரை சகல விவரங்களையும் திரட்டும் ‘ஆதார்' திட்டத்துக்கு, அமெரிக்க உளவுத்துறையை துணைக்கு வைத்திருக்கிறது இந்திய அரசு. கேட்டால், ‘ஆதார் மிகவும் நம்பரமான திட்டம்' என்கிறார்கள். இந்நாட்டின் கோடிக் கணக்கான மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது தனி மனித உரிமைக்கு எதிரானது என்பதால், ஆதாருக்குத் தடைகேட்டு பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். ஆதாருக்கு எதிரான அனைத்து வழக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. ‘அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை' என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்நிலையில்தான் இப்படி ஓர் ஒப்பந்தம். இதைப்பற்றி எழுதியிருக்கும் எக்னாமிக் டைம்ஸ் கட்டுரையாளர் லிசன் ஜோசப், ‘ஆதார்' சேர்மனான நந்தன் நீல்கேனியிடன் பதில் கேட்டதற்கு அவர் பதில் சொல்லாமல் மௌனம் காத்திருக்கிறார். UIDAI-ன் மற்ற அதிகாரிகள், இப்படி ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். ‘ஆதார்' பற்றிய அனைத்தும் ரகசியம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில்தான், விக்கிலீக்ஸில் ஆதார் திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு அமெரிக்க உளவு வேலைதான் காரணம் என்பது வெளிப்படையானது. பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட உளவுத் தகவல்களை விக்கிலீக்ஸ் இடைமறித்து வெளியிட்டது. அதில் ஆதார் அறிக்கையும் ஒன்று. அந்த உளவு வேலையை இப்போது அதிகாரப்பூர்வமாக செய்யப்போகிறார்கள்
நன்றி ;மை.பா.நன்மாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக