ஞாயிறு, மே 28, 2017

தமிழர் களம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்

கரூர்
28.05.17

தமிழர் களம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மேற்கு மண்டலச் செயலாளர் திரு.அரசு அவர்களின் தலைமையிலும், கரூர் மாவட்டச் செயலாளர் திரு வாகை தமிழ் முதல்வன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தின் மையக்கருத்தை மணப்பாறை பகுதி பொறுப்பாளர் திரு. அருண்மொழிவேந்தன் அவர்கள் விளக்கினார். முன்னதாக நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர்கள் தங்களின் நிலைப்பாட்டையும், அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்கள். நிகழ்வின் இறுதியில் திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர் திரு. லூயிஸ் நன்றி கூறினார்.
     செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
  1. தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் அள்ளுவதை தமிழகஅரசே செய்வது ஒரு அவமானம். அதனால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆகவே மணல் அள்ளுவதை முறைப்படுத்தி, தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப தேவையான அளவினை மட்டும் அள்ளுவதற்கு நெறிப்படுத்த வேண்டும்.
  2. மதுபானக் கடைகளுக்கு எதிராக போராடும் அரசியல் கட்சிகள் தங்கள் உட்பகையை தீர்த்துக் கொள்வதற்காக கடைகளுக்கு தீவைப்பதும், அடித்து நொறுக்குவதும் போன்ற செயல்களில் பெண்களை ஈடுபடுத்துகிறது. அந்த போராட்டங்களை வெறுமனே கடனுக்கு தடுத்து மக்களின் வெறுப்பிற்கு ஆளாகாமல், மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை தடை செய்தும். அந்தநிறுவனங்கள் இனி தமிழகத்தில் தங்களது மது உற்பத்தியை செய்யாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  3. தமிழகத்தில் இயங்கும் அரசுடமையாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுவதை தடுத்து தமிழ் இளைஞர்களுக்கு அவ்வாய்ப்பினை பெற்றுத்தர வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு நடுவண் அரசை கட்டாயப்படுத்த வேண்டும். 
  4. குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமெனவும், அதற்காக காவிரியில் கொள்ளணை திட்டத்தினை உடனடியாக தமிழகஅரசு நிறைவேற்ற வேண்டுமெனவும்,
  5. கரூர் மாவட்ட தாதம்பாளையம் ஏரி, வெள்ளியணை பெரிய குளம், பஞ்சப்பட்டி குளம், போன்ற அனைத்து நீர் நிலைகளையும் உடனடியாக தூர்வாரி அவற்றை தூய்மைப்படுத்த வேண்டும். இயற்கையான நீர் வழித்தடங்களை கண்டறிந்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை எவ்வித சமரசமும் இன்றி அகற்றிட வேண்டும்.
  6. திருச்சி மாவட்டம், மணப்பாறை மொண்டிப்பட்டியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் இரண்டாவது நிலையில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும்.
  7. தமிழக அரசுப் பணியிடங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்பிட வேண்டும் எனவும் தமிழர் களம் கட்சி கோரிக்கைவைக்கிறது.
  8. தமிழர்களத்தின் மாநில பொதுக்குழு மற்றும் மாநில செயற்குழு என இரண்டு பிரிவுகள் அமைத்து அந்தந்த குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என பொதுச்செயலாளர் அறிவிக்க வேண்டும்.
  9. தமிழர் களம் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக திரு. அருண்மொழிவேந்தன் அவர்களை நியமிக்க வேண்டுமென இக்கூட்டத்தின் வாயிலாக பரிந்துரைக்கிறது.
  10. திருநெல்வேலி மாவட்டத்தின் செயலாளராக திரு.சு.கணேசன் அவர்களை நியமிக்க வேண்டுமெனவும் இக்கூட்டத்தின் வாயிலாக பரிந்துரைக்கிறது.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக