செவ்வாய், அக்டோபர் 11, 2011

உலகத் தமிழர் பேரவை நிறுவனர் இம்மானுவெல் அடிகளார் அவர்கள் திருப்பி அனுப்பப்படமைக்கு அரிமா வளவன் கடும் கண்டனம் !


ஈழத் தமிழரும் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான உலகத் தமிழர் பேரவை நிறுவனர் எஸ்.ஜெ.இமானுவெல் அடிகளார் நேற்று காலை ஜெர்மனியில் இருந்து சென்னை வந்தார்.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் எவ்வித முன்னறிவிப்பும் காரணமும் இன்றி திருப்பி ஜெர்மனிக்கே அனுப்பப்பட்டார். தமிழக முதல்வரையும் மற்றும் பல தமிழக தலைவர்களையும்
சந்தித்த பின்பு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிவிட்டு ஆஸ்திரேலியா செல்ல இருந்த அவரை வலுக்கட்டாயமாக விமான நிலைய அதிகாரிகள் திருப்பி
அனுப்பிவிட்டனர். இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி பச்சையான தமிழர் விரோத நடவடிக்கையும் ஆகும்.அப்பாவி தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும்
இலங்கை அரசின் பிரதிநிதிகள் தமிழகம் வந்து சுற்றுலா பயணிகளைப் போல உல்லாசமாக சுற்றி திரிய அனுமதிக்கும் அரசு தமிழர் உரிமை குரல்வளையை நெரிப்பது எந்த வகையில் நியாயம்?
இமானுவெல் அடிகளார் திருப்பி அனுப்பப்பட்டதற்கு தமிழர்களம் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது. தமிழக அரசு உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து அவரை திரும்ப
அழைக்காவிட்டால் தமிழர்களம் போராட்டத்தில் குதிக்கும் என எச்சரிக்கின்றேன் ! என்று தமிழர்களத்தின் பொதுசெயலாளர் அரிமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.


செய்தி : ஊடகப்பிரிவு
தமிழர்களம், கரூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக