வியாழன், மார்ச் 31, 2011

வரும் சட்டசபை தேர்தலில் தமிழர்களம் அரிமாவளவன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற பெயரில் 30 இயக்கங்கள் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளன.

மதுரை: வரும் சட்டசபை தேர்தலில் தமிழர்களம் அரிமாவளவன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற பெயரில் 30 இயக்கங்கள் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளன.

தமிழர் களம், மக்கள் மாநாடு கட்சி, தமிழக மக்கள் கட்சி, தமிழ் தன்னுரிமை இயக்கம், தமிழியம், தமிழாலயம், தமிழர் கழகம், மண்ணுரிமைக் களம், திருவள்ளுவர் பாரம்பரிய மீனவர் இயக்கம், மள்ளர் மீட்புக் களம், அகமுடையார் அரண், தேவர் இளைஞர் பேரவை, மறத்தமிழர் சேனை, அகில இந்தியப் பாரம்பரிய மீனவர் சங்கம், இந்திய மீனவர் இயக்கம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இணைந்து தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் தேசிய முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரு. அரிமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போன்று, வழக்கறிஞர் சக்திவேல், பாவலர் செம்பியன், மகேஸ், கோபி நாராயணக் கோன், பறம்பை அறிவன், தாஸ் பாண்டியன், மை.பா. சேசுராஜ், பாவலர் ராமச்சந்திரன், முனைவர் அருகோபாலன், குருமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் திராவிட மற்றும் இந்திய தேசிய அரசியலால் வஞ்சிக்கப்பட்ட தமிழகத்தை மீட்டு தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சியை மீண்டும் மலர வைக்க முன்னணி பாடுபடும் என்றும், வந்தேறிகளின் கொட்டத்தை அகற்றி மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை நிலைநாட்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

வரும் சட்டசபை தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி தோல்வி என்ற கணக்குகளைக் கடந்து தமிழ்நாடு தமிழருக்கே என்ற தாரகச் சொற்களை நனவாக்க எடுக்கும் தொடக்க முயற்சி என்ற அளவில் தொய்வின்றி தொடர்ந்து இணைந்து முயல்வோம் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.
நன்றி : தட்ஸ் தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக