புதன், மார்ச் 30, 2011

தமிழ் ஈழமும் தமிழக அரசியலும்


1.தமிழ் ஈழமும் தமிழக அரசியலும் தொடர்புடையதா ?

2. தமிழ் ஈழம் குறித்து இந்திய அரசின் பார்வை என்ன ?
3. தமிழ் ஈழம் குறித்தான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?
4. பி ஜே பி , கம்யூனிஸ்ட் கட்சிகளின் அகில இந்திய நிலைப்பாடு என்ன ?
5. ஈழம் குறித்து மக்கள் யுத்த குழுக்கள் மற்றும் மாவோயிஸ்டுகள் பார்வை என்ன ?
6. தமிழ் நாட்டு கட்சிகள் தவிர்த்து ஈழ ஆதரவு நிலைப்பாடு உள்ள கட்சிகள் எவை ?
7. தமிழ் தேசிய கட்சிகள் தவிர தமிழ் ஈழத்தை ஆதரிக்க கூடிய பிற தேசிய இனத்தவர்கள் யார்?
8. தமிழ்நாட்டு இடதுசாரி இயக்கங்கள் லெனினிய ஸ்டாலினிய வழியில் தமிழ் ஈழ சிக்கலை அணுகி உள்ளனரா?
9. தமிழ் ஈழத்தை ஆதரிக்க கூடிய திராவிட இயக்கங்கள் எவை ?
10. தமிழ் நாட்டில் தமிழ் ஈழத்தை ஆதரிக்காத திராவிட இயக்கங்ககள் எவை ?
11. தமிழ் நாட்டில் தமிழ் ஈழத்தை ஆதரிக்க கூடிய திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள் பயன் தர கூடியதா?
12. ஈழத் தமிழர் நலன் காக்க தமிழ் நட்டு திராவிட இயக்க அரசுகள் பயன் தர தக்க நடவடிக்கை எடுத்துள்ளதா?
13. நடுவண் அரசிடம் போதிய அழுத்தம் கொடுத்துள்ளனவா?
14. MGR குப்பின் வந்த திராவிட இயக்க ஆட்சியாளர்கள் ஈழசிக்களை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனரா?
15. ஈழச் சிக்கலை ஒட்டி தங்களின் இன்னுயிரை தீகிரயாகிய முத்துகுமரன் உள்ளிட்ட ஈகிகளின் உயர் தியாகம் தமிழக அரசியலில் ஏதேனும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதா?
16. ஈழச் சிக்கல் மற்றும் முள்ளிவாய்க்கால் நிகழ்வை அடுத்து தமிழ் நாட்டில் இருக்க கூடிய பிற மொழியினர் ஈகம் ஏதேனும் செய்துள்ளனரா?
17. தமிழ் நாட்டில் இயங்கும் பிற மொழி இயக்கங்கள் ஏதேனும் ஈழம் குறித்து கவனம் கொண்டுள்ளனவா?
18. ஈழம் குறித்து பெரியார் வழிவந்தவர்களின் அணுகுமுறை ஒரு தேசிய இனத்தின் விடுதலையை பெற்றுத்தர கூடியதா?
19. தமிழ் நாட்டில் இயங்கும் மனித உரிமை அமைப்புகள் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடந்தேறிய மனித உரிமை மீறல் இனபடுகொலை ஆகியவற்றின் செய்திகளை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனவா?
20. மனித உரிமை அமைப்புகள் சர்வதேச அரங்கில் அதற்குரிய அமைப்புகளிடம் முறையீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டதா?
21. தமிழ் நாட்டில் இயங்கும் பெண்கள் உரிமை அமைப்புகள் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடந்தேறிய மனித உரிமை மீறல் இனபடுகொலை ஆகியவற்றின் செய்திகளை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனவா?
22. பெண்கள் உரிமை அமைப்புகள் சர்வதேச அரங்கில் அதற்குரிய அமைப்புகளிடம் முறையீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டதா?
23. தமிழக அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காணாமல் ஈழம் மலரும் என கருதுகிறீர்களா ?
24. நாடு கடந்த தமிழ் ஈழ அரசிற்கு ஆதரவு தர வேண்டியதன் அவசியம் என்ன ?
25. தமிழக அரசியல் சிக்கல் தீர்வதற்கும் ஈழம் மலர்வதற்கும் , தமிழ் நாட்டில் இன ஒர்மையை ஏற்படுத்த நாம் செய்ய வேண்டியது என்ன ?

மேற்கண்ட வினாக்களுக்கு தகுந்த விடைகளை தாருங்கள் ! தமிழர் களத்தின் சார்பில் வரவேற்கிறோம் ! தமிழர்களை ஒருங்கிணைப்பதே எங்களின் முதற் கடமை . எதிரி யார் துரோகி யார் என்பதை அடையாளம் காணுங்கள் ! விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன .
நன்றி
ஊடகபிரிவு , தமிழர் களம் .
வினா தொகுப்பு; இரா .ஜீவானந்தம் , வழக்குரைஞர் ,
சட்ட ஆலோசகர் , தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக