செவ்வாய், செப்டம்பர் 07, 2010

தமிழனும் மலையாளிகளும்! இதுவும் கடிதம்தான்


மார்ச் 11, 2010 by tamizhanban

தமிழனும் மலையாளிகளும்! இதுவும் கடிதம்தான் !


அன்புள்ள த!

வணக்கம் தமிழன்பன். நீங்கள் முன்னர் வினவு குறித்த கட்டுரையில் மலையாளிகளை சேட்டன்கள் சேச்சிகள் என்று விளித்து எழுதி இருந்தீர்கள் அது என் மனதை காயப்படுத்திவிட்டது. நாட்கள் பலவாகியும் நீங்கள் அதனை இன்னும் உங்கள் தளத்திலேயே வைத்து இருக்கிறீர்கள் அதனால் மனது பொறுக்காமல் இதனை எழுதுகிறேன்.தமிழர்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி என் பெயரை பெயரை வெளியிடவேண்டாம் ( தனக்குத்தானே கடிதம் எழுதும் பொழுது பின்நவீனத்துவ ‘லூசு’ செய்வது போலே இப்படி ஒரு வரி இருக்க வேண்டும் அல்லவா?)

மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் என்று வினவு எழுதியதை படித்த பின்நவினத்துவ பெருமாள்கள் அதே தோசையை திருப்பிபோட்டு தமிழர்கள் தங்களை இழிவுபடுத்துகிறார்கள் என்று எழுத்துலக கோமாளிக்கு கடிதாசி போட்டு இருக்காங்க . வினவு தளத்துள சங்கரன் வந்து வாழ்த்திய பொழுதே எதையோ ‘நோட்’ பண்ணுறாய்ங்கண்ணு சிறிது சந்தேகம் வந்துச்சு அதை இந்த கடுதாசி தீர்த்து வைச்சிருச்சு.

மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபிறகு கருணாநிதி முதல்வராக வந்தபொழுது மலையாளிகள் தமிழகத்தில் டீக்கடை நடத்த முடியாத சூழல் உருவாகிப்போனதாக இவனுக கதைவிடுரானுங்க. ஆனா மொழிவாரி மாநிலப்பிரிப்பிற்கு பின்னர் முல்லை பெரியாரில் தமிழனுக்கு உரிமை மறுக்கப்பட்டதோடு தண்ணீரும் மறுக்கப்பட்டு ராமநாதபுரத்தமிழன் விவசாயத்திற்கு மாத்திரமல்ல குடிக்ககூட தண்ணியில்லாம அல்லாடுகிறான் இதுல இவனுக தமிழ்நாட்டில் தேநீர்கடை நடத்தமுடியவில்லையாம் என்ன கொடுமை சார் இது.

எப்பவுமே கேரளத்தானுங்க எங்க பூமி செங்கொடி பறக்கும் பூமி என்று ஓவரா பில்டப் கொடுப்பார்கள். உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று ‘பெர்பாமன்ஸ்’ கொடுப்பார்கள் ஆனால் பக்கத்து மாநிலத்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டர்கள். ‘பென்னிகுக்’ என்ற புண்ணியவான் கட்டிக்கொடுத்த முல்லைப்பெறியாரை தகர்ப்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்று அச்சுதானந்தம் என்னும் செங்கொடி தோழர் இன்னும் கேரளமண்ணில் வாழ்ந்து வருகிறார். முல்லைபெரியார் அணையில் குமுளி சாக்கடை நீரை தாரளமாக கலந்து விடுவது கூட தோழர்களின் புரட்சிகரமான செயல்பாடுகளின் தொடர்ச்சிதான்.

எனது கல்லூரி காலங்களில் எனது நண்பன் வீட்டு திருமணத்திற்கு மதுரைக்கு போயிருந்தோம் வாகனம் ஓட்டிவந்தவர் மலையாளி. நண்பனின் ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்துவருபவர். எங்களோடு பயணம் நெடுக எதுவுமே பேசவில்லை. தாகம் என்ற பொழுது நாங்கள் கொடுத்த நீரை குடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டான். எனக்கு ‘கோக்’ வேணும் என்றான் நாங்களும் வாங்கி கொடுத்தோம் திருமணவிருந்தில் சாப்பிடும்பொழுதும் ‘கோக்’தான் வேண்டும் என்றான். ‘கோக்’ இல்லை என்றால் சாப்பாடு வேண்டாம் என்றான் ஏன் அப்படி என்று கேட்டால் தமிழ்நாட்டில் ‘இவர்கள்’ ‘கழித்துவிட்ட கழிவுகள் கலந்த நீரை குடிக்கிறோமாம் அதனால் அவரு தமிழ்நாட்டில் தண்ணீர் குடிக்க மாட்டாராம். “அட லூசுப்பயலே தமிழ்நாட்டில் இருந்து தண்ணி எடுத்த்துத்தான் ‘கோக்’ செய்யுராண்டா அப்புறம் எதுக்குடா அதை குடிக்கிற?” என்று கேட்டால் ” அது வேற ரிவராக்கும்னு” நமக்கே பாடம் எடுக்குறான் மக்களே இவய்ங்கள நாம புண்படுத்துறோமாம் “என்ட அம்மே!”

மேலும் தமிழர்களுக்காக தம்வாழ்நாளை அர்பணித்த கம்யுனிஸ்டு தலைவர்களை மலையாளத்தான் என்ற காரணத்தால் நாம் மதிப்பதில்லையாம். தமிழர்கள் தம் வரலாற்றில் ஒரு மனிதருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுத்தார்கள் என்றால் அது மருத்தூர்கோபாலராமச்சந்திரமேனன் (எம்ஜிஆர்) தவிர வேறு யாரு? மூன்றுமுறை தொடர்ச்சியாக தமிழகத்தின் ஆட்சிக்கட்டில் உட்கார்த்தி அழகு பார்த்தவர்கள் தமிழர்கள் எம்ஜிஆரை மலையாளி என்று செய்யப்பட்ட பிரச்சாரங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழ்நாட்டு தமிழன் மாத்திரமல்ல ஈழத்தமிழனும் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவனாக பார்த்தார்கள். ஆனால் ஒரு மலையாள பப்ளிசிட்டி பைத்தியம் தனது வலைப்பூவில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த பொழுது ‘உங்களுக்கு படிப்பு இருக்கிறது பண்பு இல்லை!” என்பதற்கு பதிலாக “உங்களிடம் பைப்பு இருக்கிறது பம்பு இல்லை” என்றார் என்று கீழ்த்தரமாக விமர்சித்தது சோடாவிற்காக மைக் பிடிக்கும் உருப்படாத உடன்பிறப்புகளை மிஞ்சும் விதத்தில் மக்கள் திலகத்தை அவதூறு செய்தது அனைவருக்கும் நினைவு இருக்கும் இப்பொழுது மலையாளப்பெருமாலு அந்த பப்ளிசிட்டி பைத்தியத்திற்க்கே கடிதம் எழுதுகிறது தமிழர்களுக்காக உழைத்த மலையாளிகளை தமிழர்கள் மலையாளிகள் என்ற ஒரே காரணத்திற்க்காக ஒதுக்கி வைத்தார்கள் என்று. இதை எங்கே போய் சொல்லி அழுவது தமிழன்பா!

தமிழனின் தொப்புள்கொடி உறவுகளை கூட்டு சேர்ந்து கொன்று அழித்த மலையாளிகள் சிவச்சங்கரமேனங்களும் நாராயணன்களும் நம்பியார்களையும்விட தமிழன் ரெம்ப மோசமானவன் என்று எதோ ஒரு பைத்தியம் தனக்கு தானே கடிதம் எழுதி கொள்ளுமாம் பின்னால பின்னூட்ட பெருமாளு ஆமாப்பா தமிழன் ரெம்ப மோசம்னு எழுதுவாராம். இதுல இவனுக வீட்டுல தனியா உக்காந்து அழுதானுங்கலாம் ஏன் தமிழன் இம்புட்டு மோசமா இருக்காய்ங்கன்னு.
இப்படித்தான் வினவுல ஒருத்தரு எழுதுறாப்ல கேராளாவுல கம்யுனிசம் வளந்திடுச்சு தமிழ்நாட்டு சரியா வளரலன்னு அட போங்கடா இவனுகளா அண்டை மாநிலத்திற்கு தண்ணி விடாதே! உலகத்தொழிலாளிகளே ஒன்று சேருங்கள் தமிழகத்தொழிலாளிகளே நாசமாப்போங்கள் என்பதுதான் கேரளா காம்ரேட்டுகளின் புதுவகையான கண்டுபிடிப்பு போலும். மலையாளத்தான் கொடுத்த தேநீருக்கு நன்றி சொல் என்று புத்திமதி வேறு கூறுகிறார்கள். ஏதோ தமிழ்நாட்டுல எவனுக்குமே தேநீர் போடவே தெரியாத மாதிரி.

கடிதம் எழுதும் போது ரெம்ப தெளிவா இருக்காய்ங்கப்பா அதாவது மொழிவாரி மாநிலத்திற்கு பிறகு தமிழர்கள் மலையாளிகளை விரட்டி அடிச்சது மாதிரியும் தமிழர்கள் கேரளாவிற்குள் காலடி வைத்ததே தமிழ்நாட்டில் பஞ்சம் வந்தபிறகுதான் என்பது போலவும் நல்லாவே கதை காட்டுரீங்கப்பா. தமிழக முதல்வராகவே ஒரு மலையாளி வரமுடிகிறது கேரளாவுல அது முடியுமா?. ஆனால் இவனுக தமிழர்களுக்கு கேரளா ரேசன்காடு எல்லாம் கொடுத்து இருக்கு தெரியுமான்னு நமக்கே காது குத்துரானுங்க. மலையாளிகள் மிகுதியான நாகர்கோயில் தமிழ்நாட்டோடு இணைந்தது போல தமிழர்கள் நிறைந்த கோட்டயம் கேரளாவோடு இணைந்தது வரலாறு. இதுல எர்ணாகுளத்துப்பக்கம் தமிழர்கள் பல பஞ்சாயத்துப்பக்கம் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்று கணக்கு எடுத்திருக்கிறார்கள்.

இன்னைக்கு இருக்குற முதல்வரு ஓனம் வந்தா உடனே வாழ்த்து சொல்லுறாரு. அதுமாத்திரமில்லாம அரசு விடுமுறைவேறு அறிவித்து இருக்கிறாரு. பொங்கலுக்கு அச்சுக்குட்டி வாழ்த்து சொன்னதுண்டா? தமிழ்நாட்டு திரைத்துறையில் ராதமேனன் கவுதம்மேனன்னு எத்தனை எத்தனையோ மேனன்கள் வந்து கல்லா கட்டுறானுங்க. மலையாளியை ‘தல’ என்று கொண்டாடுறான் தமிழ்நாட்டு சினிமா ரசிகன். அந்த தறுதலையும் தமிழ்நாட்டு பிரச்சனை நாங்க ஏன் போராடணும்னு பேசிக்கிட்டு திரியுது. ஜோய் ஆலுக்காஸ் முதல் மலபார் கோல்டு வரைக்கும் எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருக்கு. இன்னும் இவர்களுக்கு என்னதான் வேணும்? ஒருவேளை தமிழ்நாட்டை காலிபண்ணிகொடுத்தாத்தான் தமிழனை நல்லவன்னு சொல்லுவானுங்க போல.

அய்யா தமிழன்பரே இப்படியே வரலாற்று உறவு அவர்கள் நமது சேட்டன்கள் சேச்சிகள் என்று கூறி அவர்கள் எவ்வளவு எச்சி துப்பினாலும் நாம சகிச்சுக்கனும்னு சுண்ணாம்பு தடவிப்புடாதீங்கய்யா. ஏதோ சொல்லனும்னு தோணிச்சு சொல்லிப்புட்டேன். தமிழகத்தில் மும்தாஜை கேரளப்பெண்ணாக காட்டி சேச்சிகளை அவமானப்படுத்தி புட்டானுங்கலாம் இதை கண்டுபிடித்த அறிவாளிகளுக்கு ஒரே ஒரு கேள்வி நீங்கள் சொல்லுற அந்தத்திரைப்படத்துல கொழுப்பெடுத்து பேசிய விவேக்கின் நாக்கில் மும்தாஜு சேச்சி வல்லிய சூடு வைக்காம்போலே சீனு உண்டு பச்சே நிங்கலண்ட படத்தில தமிழனை பாண்டின்னு சம்சாரிக்கும் பட்டிக்கு எங்கணும் சூடுவைக்கும்?”

இப்படிக்கு….

(பறையாம்பாடில்லே!)

நன்றி ; தமிழன்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக