வியாழன், செப்டம்பர் 16, 2010

தமிழர் என்ற அடையாளத்தை உலகத் தமிழர்கள் [^] இழந்து வருகிறார்கள்-மொழியியலறிஞர் ஜே.நீதிவாணன்

மதுரை: தமிழர்கள் தங்களது அடையாளத்தையும், மொழியின் மாண்பையும் இழந்து வருகிறார்கள் என்று மொழியியலறிஞர் ஜே.நீதிவாணன் தெரிவி்த்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார்.

போர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப்படுபவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், பேரரசு நிறுவியவர்கள், கலாச்சார ரீதியில் சென்றவர்கள்
என 5 வகையாக புலம் பெயர்ந்தவர்களைப் பகுக்கலாம்.

ஆப்பிரிக்கர்களும், ஆர்மீனியர்களும் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்தவர்கள். இந்தியத் தமிழர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். பிரித்தானியர் பேரரசை நிலைநாட்டப் புலம் பெயர்ந்தவர்கள்.

சீனர்களும் லெபனானியர்களும் வணிகர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். கரீபியர்கள் கலாச்சார ரீதியில் புலம் பெயர்ந்தவர்கள். ஆனால் யூதர்கள் மட்டும் முற்றிலும் வேறுபாடான வகையில் புலம் பெயர்ந்தவர்கள்.

தற்போது உலகம் [^] முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களது அடையாளத்தையும், மொழியி்ன் மாண்பையும் படிப்படியாக தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றார் நீதிவாணன்.
nandri : thatstamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக