வெள்ளி, நவம்பர் 04, 2011

மீண்டும் ஓர் ஐராவதப் புரட்டு! - குணா

மோரியர்களுக்கு முன்பு கீழைக்கங்கைக்கரையில் நன்னர் என்னும் தமிழ் அரசக்குடி ஆண்டுவந்தது. நன்னர் அரசக்குடி மிக மிகத் தொன்மையான அரசக்குடி. செங்கம் கணவாய், கொண் கானம், திருவாதவூர் எனப் பலவிடங்களில் இந் நன்னர்கள் ஆண் டதைப் போன்றே வடக்கே சோணையாறு கங்கையாற்றில் கலக் கின்ற பட்டினம் (இக் காலத்துப் பட்னா) என்ற நகரத்தைத் தலை நகராகக் கொண்டும் நன்னர்கள் ஆண்டுவந்தனர். நன்னர் என்ற தமிழ்ப்பெயரே பாகத மொழியில் ‘நந்த’ என்றானது. இதனால், நந்தர் அரசக்குடி, தமிழ்க்குடியேயாகும்.

இந்தியத் துணைக்கண்டத்தின் நடுப்பகுதி, மக்கள் எளிதில் நடமாடவியலா இருண்ட பகுதியாகப் பல்லாயிரம் ஆண்டுகள் இருந்தபோது அங்கு வடுகர் என்ற அநாகரிக மக்கள் வாழ்ந்து வந் தனர். பண்டை உரோமைச் செருமானிய அநாகரிகர் பன்னூறு ஆண்டுக்காலம் அலைக்கழித்துப் பின்னர் அந்த உரோமப் பேரர சையே வீழ்த்தி உரோமானியமயமானதைப்போல், கீழைக்கங்கைக் கரையிலிருந்த தமிழரசுகளை ஓயாது அலைக்கழித்துவந்த வடுகர் களும் ‘நந்தர்’ என்றான தமிழ் நன்னர்களின் அரசைக் கைப்பற்றி மோரிய அரசு என்ற முதல் வடுக அரசை நிறுவினர்.

இவ் வடுகர்கள் தமிழர் நாகரிகத்தையே தமதாக்கிக்கொண்டு ஒரு கலப்பு நாகரிகத்தைத் தோற்றுவித்தனர். எழுத்தும் இலக்கிய மும் சமயமும் இல்லாத அவ் வடுகர்கள், தமிழ்ப் பேச்சுவழக்கோடு வடுகம் என்ற கொடுந்தமிழைக் கலந்து பாகதம் (பிராகிருதம்) என்ற ஒரு புதிய மொழியை உருவாக்கினர். கி. மு. 3ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழ் வரிவடிவத்ததைத் தழுவிப் புதிதாக உரு வான பாகத மொழிக்கு வரிவடிவத்தை முதன்முதலில் அமைத் தவன் மோரியன் அசோகனேயாவான். மோரியன் அசோகனுக்கு முன் பாகத மொழிக்கு எழுத்தே இருந்ததில்லை.
தமிழ் வரிவடிவத்தைத் தழுவி அசோகனால் வடிவமைக் கப்பட்ட பாகத மொழி எழுத்திற்குப் பிராமண வரலாற்றாசிரியர் களும் ஆய்வாளர்களும் ‘அசோகன் பிரமி’ என்னும் திருப்பெயர் சூட்டினர். பின்னர், அந்த அசோகன் ‘பிரமி’யிலிருந்தே தமிழுக்கு வரிவடிவம் வந்ததெனப் பொய்யாகப் புரட்டிக் கூறி வரலாயினர். இத்தகைய பிராமண வரலாற்றாய்வாளர்களில் ஒருவராக ஓயாது ஒழியாது ‘பிரமி’ என்னும் காயைத்திரி மந்திரத்தை ஓதிக்கொண் டிருப்பவர்தாம் ஐராவதம் மகாதேவன்.

தமிழையும் பாகதத்தையும் கலந்து கி. பி. 2ஆம் நூற்றாண்டில் (ஐரோப்பியச் சரக்கான எசுப்பராந்தோ என்னும் செயற்கை மொழியினைப் போன்று) செயற்கையாக உருவாக்கப்பட்டுப் பேச்சுவழக்கில் என்றுமே இருந்திராத சவமொழியாயிருந்ததே பிராமணர்கள் கண்ணெனப் போற்றும் சங்கத (சமற்கிருத) மொழியாகும். இந்தச் சங்கதத்திற்கெனத் தனி வரிவடிவம் ஏதும் நெடுங்காலம் வரை இருக்கவில்லை. ‘அசோகன் பிரமி’ என்ற பாகத வரிவடிவத்தைத் தழுவி வடஇந்தியாவில் கி. பி. 11ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் தேவநாகரி என்ற வரிவடிவம் சங்கதத்திற்கு உருவாக்கப்பட்டது. தென்னிந்தியாவிலோ, தமிழ் வரிவடிவத்தைத் தழுவிப் பல்லவ வடுகர் தோற்றுவித்த கிரந்தம் என்னும் வரிவடிவத்திலேயே சங்கத நூல்கள் எழுதப்பெற்றன. தமிழ் நான்மறையின் திருட்டு வடிவ மாகிய இருக்கு முதலான நான்கு வேதங்களையும் கி. பி. 5ஆம் நூற் றாண்டில் பல்லவக் கிரந்த எழுத்தமைதியில் தமிழகத்தில்தான் மொழிபெயர்த்து எழுதிவைத்தனர். கி. பி. 19ஆம் நூற்றாண்டில்தான் சங்கதப் புலவர்களெல்லாம் கூடி இனிச் சங்கத நூல்களைத் தேவ நாகரி வரிவடிவத்தில்தான் எழுத வேண்டுமென முடிவெடுத்தனர்.

சங்கத மொழிக்கெனப் பொதுவான வரிவடிவம் அதுவரை இருக்கவில்லையென்ற பேருண்மையை மறைக்கவே ஐராவதங்கள் அசோகனுக்கு முன்பு தமிழுக்கும்கூட எழுத்தே இருந்ததில்லை யெனப் பொய்யுரைத்து முழுப் பூசுனைக்காயைச் சோற்றில் மறைக் கின்ற திருவிளையாடலை அரங்கேற்றி வருகின்றன.

பொருந்திலாற்றங்கரையில்...

இத்தகு நிலையில், 2009ஆம் ஆண்டில் பழனிக்கு 12 கட்டை தொலைவில் மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் பொருந்திலாற்றின் கரையிலுள்ள பொருந்தில் என்ற ஊரில் கண்டெடுக்கப் பட்ட பெருங்கற்படைக் காலத்திற்குரிய கல்லறையொன்றில் மாந்த மண்டையோட்டுடன் எலும்புக்கூட்டு எலும்புகளும் அடங்கிய நான்கு கால்களைக் கொண்ட தாழி யொன்று அகழ்ந்தெடுக்கப் பட்டது. வயிர என்று தமிழில் எழுதப்பெற்ற இரண்டு புரிமணை களுடன், இரண்டு கிலோ எடையளவிலான நெல்லும் அங்குக் கிடைத்தது.

இவை போக, சூதுபவழம் (Carnelian), நுரைக்கல் (Steatite), படிகக்கல் (Quartz),, வச்சிரக்கல் (Agate) முதலானவற்றாலான 7,500 மணிகளும், குதிரையேற உதவும் மூன்று இணை அடிக்கொளுவிகளும் (Stirrups) இரும்பு வாள்களும், கத்திகளும், நான்குகால் சாடி களும் தாழிகளும் பூக்குவளைகளும், தட்டுகளும் கிண்ணங்களும் கிடைக்கப்பெற்றன. தலைமகன் ஒருவனின் கல்லறையாக அக் கல்லறை இருந்திருக்க வேண்டும் என்று அக் கல்லறையை அகழ்ந் தாராய்ந்த புதுவைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கே. இராசன் கூறுகின்றார்.

இந்தக் கல்லறையில் கிடைத்த நெல்லின் காலத்தை அறிவ தற்காக அதனை அமெரிக்காவின் மியாமி நகரத்திலுள்ள பீட்டா அலசல் கூட்டிணைவு (Beta Analysis Inc) என்னும் ஆய்வுநிறுவனத் திற்கு விடுத்தனர். முடுக்கிநிறை நிறமாலை அளவியல் (Accelerator Mass Spectrometry/AMS) என்னும் காலக்கணிப்பு முறையில் அந் நெல்லின் காலம் கி. மு. 700க்கும் கி. மு. 490க்கும் இடைப்பட்டது என்று முடிவு கூறப்பட்டது. தமிழ்நாட்டில் கிடைத்த ஒரு தொல் பொருளை ‘முநிஅ’ (AMS) காலக்கணிப்பிற்கு ஆட்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.

எச்சரிக்கை

‘முநிஅ’(AMS) காலக்கணிப்பில் ஒரு பெரிய குறைபாடு உண்டு. அக் குறையை 2400 சிக்கல் (2400 Problem) என்று குறிப் பிடுவர். கி. மு. 2500ஆம் ஆண்டிற்கும் கி. மு. 2400ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த தொல்லியல் பொருள்களின் காலத்தை அம் ‘முநிஅ’ (AMS) காலக்கணிப்பு, கி. மு. 750ஆம் ஆண் டிற்கும் கி. மு. 400ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்டதாகத் தவறாகக் காட்டுமாம். இதனாலேயே அக் குறைபாட்டை ‘2400 சிக்கல்’ என்று அழைக்கலாயினர் (Charles Keally,Yayoi Culture).

‘முநிஅ’ (AMS) காலக்கணிப்பிலான அந்த ‘2400 சிக்கலைக்’ கணக்கில் கொண்டால், பொருந்தில் பெருங்கற்படைக் கல்லறை யின் காலம் உள்ளபடியே கி. மு. 2500ஆம் ஆண்டிற்கும் கி. மு. 2400ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்டதாயிருத்தல் வேண்டும். மேற் கூறிய ‘2400 சிக்கலைக்’ கருத்தில் கொள்ளாமலேயே பொருந்தில் கல்லறையில் காணும் எழுத்தமைதியின் காலம் கி. மு 700க்கும் கி. மு. 400க்கும் இடைப்பட்டதெனக் கூறப்படுகின்றது.

வயிற்றெரிச்சல்

தமிழகத்தில் கிடைக்கின்ற தொல்லெழுத்துகளையெல்லாம் அசோகனின் ‘பிரமி’ எழுத்தெனக் கீறல் விழுந்த இசைத்தட்டாய் உடனே ஒலித்துவரும் ஐராவதம் மகாதேவனிடம் பொருந்தில் எழுத்தமைதியைப்பற்றிக் கூறியபோது, அவர் தேள் கொட்டினாற் போன்று துடித்துப் போய்விட்டாராம். பொருந்தில் கல்லறையில் கிடைத்த எழுத்து அசோகனின் ‘பிரமி’ எழுத்துக்கு முந்தைய தமிழ் எழுத்தே என்பதைச் சுட்டிக்காட்டியதால்தான் அவ்வாறு நொந்து போனாராம். ‘இல்லை, இல்லை, அது அசோகன் பிரமியே!’ என்று ஓலமும் இட்டாராம்.

புதுவைப் பிரெஞ்சுக் கழக இந்தியவியல் துறையின் தலைவ ராயுள்ள முனைவர் சுப்பராயலு என்ற வடுகரும் ஐராவதத்திற்கு ஒத்து ஊதினார்.

வயிரம் என்பது தூய தமிழ்ச்சொல். வல்-வயிர்-வயிரம் என்னும் வழியில் ‘மீவலிமையானது’ என்றே அது பொருள்படும். ‘வயிரம்’ என்னும் சொல்லை ‘வைரம்’ என்று திரித்தும் ஒலிப்பர். ‘வயிர’ என்ற சொல் பொருந்தல் கல்லறையில் இருப்பதால், அது பாகத மொழிச் சொல் என்று சுப்பராயலு வகையினர் திரித்துக் கூறுகின்றனர். பொருந்தில் கல்லறை எழுத்து, கி. மு. முதல் நூற் றாண்டிற்குரியது என்றும் இவர் போன்றோர் வேண்டுமென்றே குறைத்துக் கூறுகின்றனர்.

மறுபுறத்தில் - இந்தியத் தொல்லியல் அளத்தல் துறையின் இயக்குநராயிருந்து ஓய்வு பெற்ற கே. வி. இரமேசு, அப் பொருந்தில் எழுத்துகள் அசோகனின் காலத்திற்கு முந்தியன என்று நேர்மை யாகக் கருத்துரைத்தார்.

பிரிட்டனின் காம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியரான திலிப் கே. சக்ரபர்த்தி என்பாரும்கூடக் கூறப்படும் தமிழ் ‘பிரமி’ என்ற வரிவடிவம் கி. மு. 500ஆம் ஆண்டிற்கு முந்தையது என்று கூறுகின்றார்.

சேரலத்துக் கள்ளிக்கோட்டைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் மேனாள் பேராசிரியராகிய எம். ஆர். இராகவ வாரி யார் பொருந்தில் எழுத்தின் காலத்தைப் பற்றிய அமெரிக்க ஆய் வகத்தின் காலக்கணிப்பு ‘வியத்தக்க நல்ல முடிவு’ என்று பாராட்டி யதுடன், பொருந்தில் கல்லறையில் கிடைத்த எழுத்தமைதி கி. மு. 5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதெனக் கருதுகின்றார்.

என்னே புரட்டு!

புதிய கற்காலக் கற்கோடரிகள் செம்பியன் கண்டியூரில் கண் டெடுக்கப்பட்டபோது அவற்றில் ஒன்றின் மீதிருந்த எழுத்துகள் ‘சிந்துவெளித்’ தமிழ் எழுத்துகளே என்று கூறியவர்தாம் ஐராவதம்.

ஆனால், அதே ஐராவதமும் அவருக்கு ஒத்து ஊதும் சுப்பரா யலுவும் மட்டும் பொருந்தில் கண்டுபிடிப்பு என்னும் ஒரேயொரு கண்டுபிடிப்பை வைத்துத் தமிழ் எழுத்துகள் அசோகனின் ‘பிரமி’ எழுத்துகளுக்கு முந்தியனவெனக் கூறலாகாதென்று இன்று வஞ் சனை பேசுகின்றனர்.

தமிழ் எழுத்து அசோகனுக்கும் மீமிக முந்தையது என்பதைக் காட்டும் தொல்லியல் சான்றுகள் பல தமிழகத்தில் கிடைத்திருப் பினும், பொருந்தில் எழுத்து என்னும் ஒற்றைச் சான்றை வைத்துத் தமிழ் எழுத்து அசோகனின் ‘பிரமி’க்கு முந்தையதெனக் கூறலாகா தென்னும் அவர்களின் புரட்டுகளிலும் சரடுகளிலும் புதைந்துள்ள உள்நோக்கத்தைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐராவதத்தின் தமிழ் ‘பிரமிக்’ கோட்பாடு மிகவும் தவறான தென்பதை அண்மையில் வெளியிடப்பட்ட தொல்காப்பியத்தின் காலம் என்னும் நூலில் சற்று விரிவாக நான் மறுத்துள்ளதையும் ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டுமென்பது என் பணி வான எதிர்பார்ப்பு.

ஆரிய-திராவிடக் காழ்ப்பின் வழிவந்த ஐராவதங்களின் கூற் றுகள் பிழையானவை என்பதைத் தமிழ் வரலாற்றாய்வாளர்கள் கடிந்து கொள்ளாததன் கரணம் புரியவில்லை. தமிழ் எழுத்து வர லாற்றுக்குத் தானே அதிகாரி என்றும் - தான் பெரிய கொம்பன் என்றும் - காற்றூதிய தவளைபோல் புடைத்துக் காட்சி தரும் ஐராவதங்களைப் பார்த்துத் தமிழ் ஆய்வாளர்கள் ஏன்தான் அரண்டு மிரண்டு வெற்றுப் பார்வையாளர்களாய்க் குன்றிக் குறுகி நிற்கின்றனரோ தெரியவில்லை. ஐராவதத்தின் ஆய்வுகள் தமிழின் - தமிழரினத்தின் - தொன்மையை மறுக்கவும் சிறுமைப்படுத்த வும் செய்யும் ஒரே நோக்கம் கொண்டவை.

ஐராவதங்களைத் தமிழ்ப் பகை என்று அடையாளப்படுத்தத் தமிழ் ஆய்வாளர்கள் துணிந்தாரில்லை. அராபியனின் கூடாரத் தில் புகுந்த ஒட்டகத்தைப்போல் தமிழர் வரலாற்று ஆய்வுத்துறை யில் ஐராவதம் புகுந்துகொண்டு தமிழெதிர்ப்புக் காழ்ப்புடன் குழப்பி வருவதைத் தமிழர்கள் அகலக் கண்திறந்துப் பார்த்தல் வேண்டும்.

ஆய்வு என்ற புலத்தில் தமிழையும் தமிழரினத்தின் வரலாற் றையும் இழிவுபடுத்தும் ஐராவதங்களின் போலி ஆய்வுகளைத் தமிழுலகு புறக்கணிக்க வேண்டும்; வெற்றுப் பித்தலாட்டங்கள் என்று அவற்றை வெறுத்தொதுக்க வேண்டும்.
பெரும்பாலும் ஆரியக்கூத்தாடும் தாண்டவக்கோனாகவும் - சில வேளைகளில் திராவிடக் கூத்தாடும் கூத்தாண்டவராகவும் - விளங்கும் ஐராவதங்களை எதிர்த்து இனி வீடு கட்டி அறிவுச் சிலம்பம் ஆட வேண்டாமா?

எண்ணித் துணிக!
2.9.2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக