செவ்வாய், மார்ச் 27, 2012

கலாமுக்கு கருப்புக் கொடி!!!

இந்தூர்: கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்து வருவதை கண்டித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மத்திய பிரதேசத்தில் கருப்பு கொடி காட்டப்பட்டது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரஷ்ய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அணு உலை மிகவும் பாதுகாப்பானது என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியிருந்தார். இதனை கூடங்குளம் போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்காக அப்துல் கலாம் நேற்று இந்தூர் வந்தார். கல்லூரி வளாகத்துக்கு அப்துல் கலாம் வந்தபோது, ஆசாதி பச்சோ அந்தோலன் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பலர் திடீரென கலாமுக்கு எதிராக கருப்பு கொடி காட்டினர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எதிர்பாராத இந்த சம்பவத்தால் கல்லூரி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விரைந்து செயல்பட்டு கருப்பு கொடி காட்டிய 10 பேரை கைது செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக