சனி, அக்டோபர் 26, 2013

கலைஞர்......

கலைஞர்
தமிழினத் தலைவர், திராவிடர்களின் தலைமகன், கலைத்தாய் பெற்றெடுத்த கலைமகன், முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர்......
     தன்னலம் கருதாத இந்த தமிழர் தலைவருக்கு பொதுநலமே உயிர்மூச்சு. கல்லிலே கட்டி கடலிலே போட்டாலும் கட்டுமரமாய் மிதந்து கடமையாற்றுவாரே தவிர கபடவேசதாரியல்ல. வார்த்தைகளால் அலங்கரித்துப்பேசும் வல்லமை பெற்றவர். வாய்மை காப்பாற்றியவர். கண்ணகியை மீட்டவர், குமரியில் வள்ளுவருக்கு சிலை அமைத்தவர். காலஅமல்லாம் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் மட்டுமே வாழும் இவரின் தாராள குணம் யாருக்கு வரும்.
     அஞ்சுகத்தாய் பெற்றெடுத்து ஆளாக்கி அனைவருக்குமாய் பாடுபட இன்றும் வாழ்கிறார் பெருந்தலைவர் கலைஞர். தமிழனுக்கு ஒரு கேடு என்றால் துடித்தே போய்விடுவார். தன்மானத் தலைவர் இவர் தரணியெங்கும் புகழ் பெற்றவர். எத்தனை சொந்தங்கள், எவ்வளவு சொத்துக்கள் அள்ள அள்ள குறையாது அள்ளித்தரும் வள்ளல் இவரே வாழும் வள்ளுவர்.
     இன்னும் எவ்வளவோ சொல்லி இவரை வாயார வாழ்த்த வயதில்லாமல் வணங்கித் தாங்கும் அன்பு உடன் பிறப்புகள். முரசொலியில் கடிதம் எழுதியே உடன்பிறப்புகளை உசுப்பேற்றும் மாயக்காரர். கனிமொழியின் கவிதை வரிகளில் கனவுகாணும் கழகத்தின் ஆணிவேர். எவ்வளவோ நல்லவைகள் எண்ணிலடங்கா காரியங்கள் எப்போதும் உற்சாகத்துடன் “குருவியையும் பார்க்கும் குறும்புக்காரர் இவரோ சினிமாவுக்கு தலைப்பிள்ளை, கவிதைக்கு மட்டும் என்றும் மாப்பிள்ளை. இன்னும் இருக்கு எவ்வளவோ....
     இதைச்சொல்ல மறந்துட்டோமே....... ஆம் காவிரிக்காக கெஞ்சிடுவார். ஒகேனக்கலை விட்டுக்கொடுப்பார். பவானி, முல்லைப்பெரியாறு இப்போ கண்ணகி கோயில் என தமிழர்களின் அடையாளங்களை அழிக்கத்துடிக்கும் அண்டை மாநில விசமிகளை அன்போடு அரவணைத்து இந்திய இறையாண்மையை காத்திடுவார். சனநாயகம் பேசிடுவார். உலக அமைதியே இங்கிருந்துதான் என்பதுபோல தமிழர்களை தாலாட்டி உறங்கவைக்க இலவசங்களை அள்ளித்தருவார். இல்லாமை இருள்போக்க ஆயிரம் கோயிலுக்கு கும்பாபிசேகம் நடத்திடுவார். தங்கத்தேரும் தந்திடுவார் பகுத்தறிவுப் பாசறைத்தலைவர். இளிச்சவாயன் தமிழன்தானே.
     ஏதோ உளறிட்டேன் .... டாஸ்மாக்கில் ஊத்திக் கெட்டேனே. நாளைக்கு மீட்டிங்கு தமிழர் தலைவர் சிறப்புரையாற்றுவார் கழக உடன்பிறப்புகள் தவறாது கலந்து கொள்வோம்! கோசங்கள் முழங்குவோம். கொள்கையை உதறுவோம். தமிழர் தலைவா நீ வாழி... இந்திய இறையாண்மை வாழி.....
     எல்லாம் உலகமயம் தாராள மயம் தனியார் மயம் என பன்னாட்டு நிறுவனங்கள் பலஇங்கு வந்தாச்சு. டாலரில் சம்பாதிக்கலாம். கோடீசுவரனாய் வாழலாம். இப்போதைக்கு டாஸ்மாக்கில் கொஞ்சம் ஊத்திக்கலாம். 2020ல் இந்தியா வல்லரசு! தமிழ்நாடு யாருக்கு?......

- கருவைமுருகு
09.05.2008
கரூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக