




தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
கலைகள் வாழ்வியலின் அன்றாட விடயங்களை வெளிப்படுத்தி நின்றதால், காலத்தின் கண்ணாடியாக அவை விளங்கின. சாதாரண மக்களின் இன்ப துன்பங்களையும், தலைவன் தலைவிக்கு இடையிலான ஒழுக்கங்களையும், காதலையும், வீரத்தையும் காட்டுவனவாகவே தமிழ்க்கலைகள் எழுந்தன. செளிப்போடு வளர்ந்தன. சிறப்பாக வாழ்ந்தன. அவற்றின்மூலம் அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் நிலைபற்றியும், வாழ்க்கை முறைபற்றியும் இன்றுவரை நாம் அறியக்கூடியதாகவிருக்கின்றது.
பல்வேறு கடவுள்களைப் பாத்திரங்களாக்கி, இல்லாத நடைமுறைகளைச் சம்பவங்களாக்கி சொல்லுகின்ற கலைகள் தமிழர்களிடம் இருந்ததில்லை. இலக்கியங்களும் அப்படி எழுந்ததில்லை. அதனாற்றான் பண்டைய தமிழகத்தின் கலப்பற்ற தன்மையை பறைசாற்றும் விதமாக உண்மையான இலக்கியங்கள் அந்நாளில் உருவாகின. அன்றைய தமிழகத்தினை அறிவதற்கு இன்று நமக்கு உதவுவன அத்தகைய இலக்கியங்களும் கலைகளுமே.
பரதநாட்டியம் தமிழ் நாட்டியமே. இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னரே செந்தமிழ் மக்களிடையே சீரோடு வளர்ந்த கலை, சிறப்போடு இருந்த கலை, வளமோடு அமைந்த கலை, வனப்போடு மிளிர்ந்த கலை நமது தமிழ் நடனக்கலை
அந்த நடனக்கலை தான் பரதநாட்டியக்கலை. தில்லையிலே சிவபெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுவதும் அந்த நாட்டியம்தான் சிலப்பதிகாரத்திலே மாதவி ஆடியதாகச் சித்தரிக்கப்படுவதும் அந்த நாட்டியம் தான்.
காலங்காலமாக காவிரிப்பூம் பட்டினத்திலே ஆண்டுதோறும் நடந்தவந்த இந்திரவிழாவிலே ஆடப்பட்டது பரதநாட்டியம். சோழமன்னன் கரிகால் வளவன் காலத்திலே கலையரசி மாதவியின் கலைநிகழ்ச்சிகள், இந்திரவிழாவிலே நடைபெற்றனவென்பதையும், அக்கலை நிகழ்ச்சிகளிலே பரதநாட்டியமும், இசைப்பாடல்களும், மற்றும் பதினொருவகையான ஆடல்களும் இடம்பெற்றன என்பதையும் சிலப்பதிகாரம் மூலம் அறிகின்றோம்.
சிலப்பதிகாரம் சங்கமருவிய காலத்து நூல். அதற்கும் முந்திய சங்ககாலத்திலேயே நன்கு வரையறுக்கப்பட்ட ஆடல்வகைகள் தமிழில் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. அந்த ஆடல் வகைகளைப்பற்றிய இலக்கணங்களை வகுத்த நூல்கள் எழுதப்பட்டுள்ளன. நாட்டியக்கலை முத்திரைகள் அக்காலத்திலேயே நயம்பட விளக்கப்பட்டுள்ளன.
ஆரியர்களின் வருகையும் அரசர்களிடம் ஆரியப் பிராமணர்கள் கொண்டிருந்த செல்வாக்கும், அதன்காரணமாக 500 ஆண்டுகளுக்குமேலாக தமிழ் அரசவைகளிலே வடமொழி கொலுவீற்றிருந்ததும் தமிழ்மக்களின் மொழிச்சிதைவுக்கும், பண்பாட்டுச்சிதைவுக்கும் காரணமாயின. அக்காலங்களில் ஆரியப்பண்பாடுகள் தமிழர்களிடையே கலந்தன. அவர்களின் வழிபாட்டுமுறைகள் புகுந்தன. நமது பாரம்பரியங்கள் சிதைந்தன. அதனால் இலக்கியங்களும் தமிழ்ப்பண்பாடுகளைப் புறந்தள்ளின.
நாட்டியம்பற்றிய தமிழ் நூல்களை ஆரியர்கள் வடமொழியில் மொழிபெயர்த்துவிட்டு, மூலத்தமிழ் நூல்களை யாருக்கும் கிடைக்காமல் மறைத்தார்கள். அக்கினியிலே போட்டு எரித்தார்கள். அதனால், பரதநாட்டியம் வடமொழியிலிருந்து நமக்கு வந்து சேர்நததாக இப்போது நம்மவர்களே வாதிடுகிறார்கள்.
அக்காலத்தில் நிலவிய சமுதாய நிலமைகளுக்கேற்பவே கலைகளும் இலக்கியங்களும் எழுந்தன. வடமொழியையும் ஆரியப்பண்பாடுளையும் பரப்புவதிலும் தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாடுகளையும் சிதைப்பதிலும் மிகுந்த அக்கறைகாட்டிய பிராமணர்களே பெரும்பாலான இலக்கியங்களை ஆக்கினர். பிராமணருக்கே கல்வி என்கின்ற பிற்போக்கான கோட்பாடும் அன்று திணிக்கப்பட்டதால் கல்வியில் உயர்ந்தோர் பிராமணர்களாகவே இருந்தனர்.
இலக்கியங்களை ஆக்குகின்றவர்களும் பிராமணர்களாகவே இருந்தனர். இலக்கியங்களும் அவர்களது எண்ணங்களுக்கு ஏற்பவே எழுந்தன. அதனால் தமிழில் வடமொழி கலந்தது. தமிழ்ப் பண்பாட்டில் ஆரியம் புகுந்தது. இவைஎல்லாவற்றையும் உள்ளடக்கி இலக்கியம் எழுந்தது. இவற்றின் காரணமாக உருவான கலையும் இலக்கியமும் அன்றைய காலத்தைக்காட்டி நின்றன.
கர்நாடக இசைக் கலையும், பரதநாட்டியக் கலையும் உண்மையிலேயே வடமொழியிலேயே முதன்முதலில் தோன்றியிருந்தால், வடமொழிக்கே சொந்தமான கலைகளாகவிருந்தால், இந்திய துணைக்கண்டத்திலே வடமொழி தோன்றி வளர்ந்த வடமாநிலங்களிலே அந்த இசைக்கலையும், நாட்டியக் கலையும் வளர்ந்து நிலைத்திருக்க வேண்டும். வாழ்ந்து சிறந்திருக்க வேண்டும். அவற்றின் சான்றுகளாக வானுயர்ந்த கோபுரங்கள் எழுந்திருக்க வேண்டும். அழகிய சிற்பங்கள் அவற்றிலே அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவுமே அங்கே நடைபெறவில்லை. இசைக்கலையும்சரி, நடனக்கலையும்சரி, சிற்பக்கலையும் சரி எல்லாமே தென்னிந்தியாவிலேயே சிறப்புற்றோங்கியிருப்பதன் காரணம் அவை தென்னிந்தியக் கலைகள் என்பதால்தான். தொன்மைமிகு தென்னிந்திய மொழியான செந்தமிழ் மொழிக்குச் சொந்தமான கலைகள் என்பதால்தான்.
ஆரியர்கள் தமிழகத்தில் வாழவந்தார்கள். அந்தணர்கள் என்று பிராமணர்கள் ஆலயங்களைச் சூழவந்தார்கள்;. ஆடல் மகளிரை ஆலயங்களுக்கு அருகாமையில் வாழவைத்தார்கள். ஆலயங்களிலெல்லாம் அவ்வப்போது ஆடவைத்தார்கள்.
மன்னர்களும் பிரதானிகளும் இந்த மகளிரிடம் வந்து போகத்தொடங்கினார்கள்;. அதனால் ஆடல்மகளிர் ஆரியர்களினால் கூடல் மகளிர் ஆனார்கள். பரதநாட்டியமாக இருந்ததை பரத்தையர் நாட்டியமாக்கினார்கள். உயர்வான கலையாக இருந்ததை இழிவான தொழிலாக மாற்றினார்கள்.
ஆரியரின் வருகையினாலும் வடமொழி வெறிபிடித்த பிராமணர்களாலும் தமிழ் மொழி சிதைந்தது. தமிழ்ப் பண்பாடு சிதைந்தது. தமிழ் வணக்கமுறைகள். மாறின. அதேபோல பண்பட்ட இந்தப் பரதநாட்டியக்கலையும் புண்பட்டுப் போயிற்று. அதனால் கணிகையர் மட்டுமே ஆடுகின்ற அளவுக்கு இந்தக்கலை தமிழ் மக்களிடம் சுருங்கியது. நடனம் ஆடுபவர்கள் எல்லோருமே கணிகையர் என்ற விசக்கருத்து மக்களிடத்தே நெருங்கியது.
பண்பாடுமிக்க தமிழ் மக்கள் பரதக்கலையில் ஆர்வம் குறைந்தார்கள். ஆடியவரும் பழிச்சொல்லுக்கஞ்சி ஆடுவதை மறந்தார்கள். ஆட்டத்தையே துறந்தார்கள்.
அதனால் கணிகையராய் இருந்தோர் மட்டும் இந்தக் கலையியலே சிறந்தார்கள். தமிழ் மொழியிலேயிருந்து கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் தோன்றியபோது பண்டைய தமிழ்க் கலைகளும் பறிபோயின. கொண்டவர் நினைத்ததுபோல் உருமாறின.
நமது கலையை நாம் ஒதுக்கினோம். மற்றவர்கள் அந்தக்கலையின் மகிமையை உணர்ந்தார்கள். தமக்குச் சொந்தமாக்கி மகிழ்ந்தார்கள். அன்று நமக்குச்சொந்தமாயிருந்த பரதநாட்டியம் இன்று மற்றவரிடமிருந்து இறக்குமதியான சொத்தாக நம்மை எண்ணவைக்கிறது.
தமிழிலிருந்து திரிந்து இப்போது தனியாக விளங்குகின்ற எந்த மொழிகளுமே சிலப்பதிகாரக் காலத்திலே இருந்ததில்லை.
தில்லைக்கூத்தனே தென்பாண்டி நாட்டானே என்று மணிவாசகர் திருவாசகம் பாடியபோது இன்று பரதநாட்டியத்திற்குப் பக்கப்பாட்டுப் பாடுகின்ற சில மொழிகள் தோன்றியிருக்கவேயில்லை.
ஆக நாட்டியமும் நம்முடையது. கூத்தும் நம்முடையது. இவற்றுக்கான பாட்டுக்களும் நமக்கென்று உள்ளன. ஆனால் என்ன செய்வது? மற்றவர்கள் நமது குழந்தைக்குப் பட்டுச்சட்டை போட்டு தமது குழந்தை என்கிறார்கள். நம்மவர்களும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
இன்று சிங்கள இனத்தவரும் பரதநாட்டியத்திலே சிறந்து வருகிறார்கள். தமிழ் ஆசிரியைகளிடம் பயின்று வருகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் இலங்கையில் என்ன நடைபெறப்போகிறது. சிங்களப்பாடல்களில் பரதக்கலை ஜொலிக்கும். நம்மவர்க்கும் அது மிகவும் பிடிக்கும். எதையும் உள்வாங்கிக்கொள்வதில் இன்புறுகிற தமிழன் அதையும் உள்வாங்கிக் கொள்வான். சிங்களமே பரதநாட்டியத்தின் மூலமாகும். நம்மர்க்கும் அதுவே வேதமாகும்.
இப்படியே தொடர்ந்தால் என்னவாகும்? செந்தமிழ் நம்மவர்க்குப் பாரமாகும்;. நமது கலை நம்மைவிட்டுத் தூரமாகும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆடும் சதங்கைகள் செந்தமிழ்ப் பாடல்களுக்கே ஆடவேண்டும்.
பாடும் கலைஞர்கள் பைந்தமிழ்ப் பாடல்களையே பாடவேண்டும். வாழும் பரதக்கலை நம் வண்ணத்தமிழ் மொழிக்கே செந்தமென ஊரும் உலகும் உணரவேண்டும். நமது மொழியில் நாம் பாடினால் நமது பாட்டுக்கு நாம் ஆடினால் நல்ல புதுமைகளை நாம் தேடினால் நமதுகலை நம்மை விட்டு எங்கே போகும?; எப்படிப் போகமுடியும்?
இன்னும் எத்தனை நாட்களுக்கு ஐவருக்கு மனைவியான பாஞ்சாலியை தெய்வம் என்று சொல்லுவது போன்ற ஆரியரின் பொய்யான கதைகளையும், தமிழ்ப்பண்பாட்டுக்கு ஒவ்வாத கதைகளையும், பண்டைத்தமிழ் இலக்கியத்திலே இல்லாத கதைகளையும் கையாளப் போகின்றோம்.?
இன்னும் எத்தனை நாட்களுக்கு வெண்ணெய் உண்ட கண்ணனின் விளையாட்டுக்களை வேடிக்கை காட்டப்போகிறோம்?
இன்னும் எத்தனை நாட்களுக்கு கோபியரோடு கொஞ்சுகின்ற கோபாலனின் குறும்புகளைக் கூறியாடப்போகின்றோம்?.
இன்னும் எத்தனை நாட்களுக்கு ஆரியக்கலாச்சாரத்தின் அடிமைகளாய் இராமனையும் சீதையையும் பராயணம் செய்யப் போகின்றோம்?.
இன்னும் எத்தனை நாட்களுக்கு சொன்னதையே சொல்லிக்கொண்டு புதிதாய் எதுவுமே செய்யாமல் சோம்பேறிகளாய் இருக்கப்போகிறோம்?
எப்படிப்பட்ட கலைஞராக நாம் இருந்தாலும் முதலிலே தமிழர் என்பதை நினைக்கவேண்டாமா?
கலை என்பது காலத்தின் கண்ணாடியாக இருக்கவேண்டாமா?
நமது கலையினால் நமது நிலையை வெளிப்படுத்த வேண்டாமா?
அகன்ற உலகெங்கும் தமிழ்மக்கள் பரந்துவாழும் காரணத்தை சிறந்த நாட்டியமாய் சித்தரிக்க வேண்டாமா?
புலம்பெயந்த தமிழர்கள் உளம் பெயந்த காரணத்தால் மொழிமறந்து, இனம் இழந்து அனாதைகளாய் ஆகும்நிலை இன்று உருவாகிக்கொண்டிருக்கின்றதே அது பற்றிப் பாடி ஆடக்கூடாதா?
தாயகத்திலே நமது இனம் தவித்துக் கொண்டிருக்கின்றதே அதைப்பற்றி அபிநயம் போடக்கூடாதா?
வாழத்துடிக்கின்ற ஈழத்தமிழர்கள் கூழுக்கும் வழியற்று குற்றுயிராய்க்கிடக்கிறார்களே காலின் சதங்கைகள் அதுபற்றிக் கணீரென்று ஒலிக்கக்கூடாதா?
சிறையிலே வாடுகின்ற தமிழ் இளஞர்களின் நிலையினைச் சித்தரித்து நாட்டியம் போடக்கூடாதா?
முறைகெட்ட வகையிலே சிதைபட்டுப் போன நம் சகோதரிகளின் கண்ணீரையெல்லாம் காவியமாய் ஆடக்கூடாதா?
கதையாய் மட்டுமே இருக்கின்ற கண்ணனையும் இராமனையும் விதவிதமாய் கதைபின்னி ஆடுகிறோமே, கதையாகவல்ல, கற்பனையாகவல்ல, உண்மைக்கு உண்மையாய் வரலாறாய் நின்று, மாபெரும் சேனைகளை வென்று இமயத்தில் கொடிபதித்தார்களே முடியுடை மூவேந்தர்கள். நாட்டியமாய் அவர்களது வீரமிகு சாதனைகளை நாட்டவேண்டாமா?
நாட்டவேண்டும். நடனக் கலைமூலம் காட்டவேண்டும்.
கப்பல் கட்டிக், கடல்கடந்து உலகெங்கும் வாணிபம் செய்து பெயர் பெற்ற தமிழன், இன்று அகதியாய் நடுக்கடலில் நாதியற்று மாண்டுபோகிறானே அவன்கதையை நாட்டியமாய் ஆடக்கூடாதா?
சொந்த நாட்டிலும், உயிர்காக்கப் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளிலும் முகாம்களிலே முகம்தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்களே எண்ணிக்கையற்ற ஈழத்தமிழர்கள் அவர்களின் சோகக் கதைகளை நாட்டியத்தில் சொல்லக்கூடாதா?
இவையும் கலைதான். இவைதான் உயிர்த்துடிப்பான கலைகள் உண்மையான கதைகள். இவைதான் கலைஞரின் ஆற்றலை வெளிப்படுத்தும் கலைகள்.
தமிழ் இனத்தின் தனித்துவத்தை நிலைநாட்டும் கலைகள்.
காலத்தைக் காட்டுகின்ற கலைகள். காலத்தை வென்றுநிற்கும் கலைகள்.
ஆடுவோரும் பாடுவோரும் இதனை உணரவேண்டும்.
தாயின்றி நாமில்லை தமிழின்றி நம் இனமில்லை என்பதை ஆடவல்லோரும் பாடவல்லோரும் ஆடலும் பாடலும் பயிற்றுவிப்போரும் உணரவேண்டும்.
தாய்மொழி தொடர்பாக தமக்கொரு கடமை உண்டு என்று கருதவேண்டும். தமிழினம் தொடர்பாக தமக்கொரு கடப்பாடு உண்டு என்று நினைக்க வேண்டும்.
கலைஞர்கள் இதனைச் செய்யவேண்டும்.தமிழினத்தின் வரலாற்றை கலைகளிலே நெய்யவேண்டும்.
நன்றி: இனிஒரு.காம்
Subject: யூனிகோடு தமிழைச் சமசுகிருத மயமாக்கும் சதிநாசம் *...மிகப்பயங்கரமான மோசடி நாம் அனைவரும் இணையத்தில் பயன்படுத்தும் யுனிகோடுவை சிறீரமண சர்மா என்பவர், தற்போது இருக்கும் தமிழ், கிரந்த எழுத்துக்களோடு பிற ஏற்கனவே தமிழ் எழுத்தில் Ja Jaa Ju Juu எழுத்துக்கள் இருக்கின்றனவே என்று யுனிகோடு சேர்த்தியம் (unicode consortium) வழியாக யாரும் அறியாமல் எல்லா இப்போது Extended என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்வதால் தமிழ் வளர்ச்சியைத்தானே தமிழ் யுனிகோடுவை இப்பொழுதுதான் தமிழக அரசு அங்கீகரித்தது என்பது *யுனிகோடு சேர்த்தியத்திற்கு மறுப்பினை தமிழக அரசாங்கம் சொல்லக் கடைசி நாள் 25 அதற்குள் மறுப்பு போய்ச் சேரவில்லை என்றால் தமிழ், நீள்தமிழ் ஆகி, Ja Jaa Ju *மேலும் படிக்க:-* http://pettagam.blogspot.com/2010/10/unicode.html *இதைத் தடுத்து நிறுத்த நம்மால் ஆன முயற்சி.. நம்முடைய எதிர்ப்பைத் உங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து அஞ்சல் அனுப்பவும். unic...@unicode.org, x...@unicode.org r...@unicode.org e...@infitt.org kaviara...@yahoo.com sman...@pacific.net.sg - *நன்றி:- பெட்டகம் வலைப்பதிவு* |
கல்+நாடு=கன்னாடு. கன்னாடு என்பது மலைகள் நிறைந்த நாடு . மலைகள் நிறைந்த பகுதியாதலால் தமிழர்கள் அதனை இவ்வாறு அழைத்தார்கள்.
ஆங்கிலத்தில் கில் என்ற சொல் சொல்லும் கல் என்பதிலிருந்து கிடைத்ததே என ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். சோமேசபுல்லேகமால் என்ற மன்னன் தவறுதலாக கூறியது நிலை பெற்றுவிட்டது. ஆனால் பார்ப்பனர்கள் அது தமிழ்நாட்டு இசையல்ல என்று காட்டுவதற்காகவே திட்டமிட்டு கர்நாடக இசை என்று பயன்படுத்திவருகிறார்கள்.
கர்நாடக இசை என்பதே தமிழிசைக்கு பார்ப்பனர்கள் இட்டுக்கட்டிய பெயர் என்றும், தமிழிசை தான் கர்நாடக இசை என்றும் ஒத்துக் கொள்ளும் பார்ப்பன இசையறிஞர்கள் மறந்தும் தமிழிசை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது கிடையாது. இன்று சில சங்கீத நூலாசிரியர்கள் சிலர் தமிழிசை வேறு என்று சாதுர்யமாகவும்,சமரசமாகவும் எழுதிவருகின்றனர்.
“ஆதி இசை வகைகள் 12000 .பண்கள் 103வகை. இசைகுறிப்பெயர்கள் ” என்று தமது ஆராச்சிமுடிவுகள் குறித்து நூலாக எழுது முன்பே ஆப்ரகாம் பண்டிதர் , சுதேச மித்ரன், த இந்து போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பினார் ஆனால் அவை இருட்டிப்பு செய்யப்பட்டன..
சங்கீதமும் மூர்த்திகள் :
1.தியாகய்யர்(1767- 1847)
2.சியாமாசாஸ்திரி(1762- 1827)
3.முத்துஸ்வாமிதீட்கிதர்(1776- 1835)
தமிழருக்குப் புரியாத மொழிகளில் பாடு முன்னரே தமிழில் கீர்த்தனைகள் எழுதியும் பாடியும் த்மிழிசையை வளர்த்த மூவர் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்தார்கள். அவர்கள்
1.சீர்காழி முத்துதாண்டவர்(1525- 1605)
2.சீர்காழி அருனாசலகவிராயர்(1711- 1779)
3.மாரி முத்தாபிள்ளை(1712_ 1787)
தாம் வாழ்ந்த காலத்திலேயே புகழ் பெற்ற இந்த மூவரின் அடியொற்றியே பின் வந்த மூவர்களும் மும் மூர்த்திகள் ஆனார்கள். முத்துத்தாண்டவர் தான் முதன் முதலில் கீர்த்தனை வடிவத்தை அமைத்தார். பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் அமைப்பு முறையையும் வகுத்தவர் அவரே.
கீர்த்தனை இசை வடிவம் தமிழ்நாட்டு மக்களுடையது. புரந்தரதாசருக்கோ, அன்னமாச்சாரியாருக்கே இந்த வடிவம் தெரியாது. இறைவனின் பெயர்களை வரிசையாககூறும் தேவர்நாமா என்ற வடிவத்தை புரந்தாதாசரும், நாமபஜனை என்பதைதான் அன்னமாச்சாரியாரும் எழுதியுள்ளனர். அவர்களும் கீர்த்தனைகள் இயற்றவில்லை.
இராமபிரமம் என்பவர் பிழைப்பு தேடி தமிழ்நாட்டில் குடியேறிய தெலுங்கு பிராமணர். அவரின் புதல்வர்களில் ஒருவர் தான் தியாகய்யர் என்று அறியப்படுகின்ற தியாகராஜர்.இவர்களது தாய் மொழி தெலுங்கு .தியாகய்யர் தான் வாழ்நாளிலே ஒரே ஒரு தடவை தான் ஆந்திரா சென்றுள்ளார். தமிழ் நாட்டில்பிறந்து வளர்ந்த அவர் தமிழ்நாட்டு இசையைத்தான் கேட்டார் .
கோவில்களில் இசைக்கப்பட்ட தேவார இசையையும்,நாதஸ்வர இசையையும், தமிழ் கீத்தனங்களையுமே அவர் கேட்டிருப்பார்.இவ்விதம் தமிழர்களிடமிருந்து தான் பெற்ற இசை அறிவை பயன்படுத்தி தனது தாய் பாசையில் பாடல்களாக எழுதினார்.
அவரது பாடல்கள் கொச்சை தெலுங்கில் எழுதப்பட்டவை என்றும் இன்று விளங்குவது போல் விருத்தி பெற்ற இசையாக இருக்கவில்லை என்பதும், பின் வந்த இசைக்கலைஞர்கள் பாடும் முறைகளில் பல விருத்திகளை செய்தார்கள் என்பதும் . இசை ஆராய்ச்சியாளர்கள் கூற்று.
தியாகய்யர் எந்தெந்த தமிழ் கீத்தனங்களை தேவாரங்களை எல்லாம் “காப்பி” அடித்து தெலுங்கில் பாடல்களாக்கினார் என்று நீண்டதொரு பட்டியலை இசை அறிஞர் ச . ராமநாதன் வெளியிட்டு பாடியும் காண்பித்தார். தியாகய்யர் ஒரு பார்ப்பனர் என்பதால் அவரை தலையில் வைத்துக் கொண்டாடும் பார்ப்பனர்கள் இவற்றை எல்லாம் கேட்டும் செவிடர்கள் போல நடிக்கிறார்கள் அறிவால் வெல்லும் தகுதி அற்ற பார்ப்பனர்கள் சூழ்ச்சியாலும், சதியாலுமே தமது காரியங்களை சாதித்து வருகிறார்கள்.
தமிழர்கள் உருவாக்கிய இந்த இசை என்னென்றும் பக்திசார்ந்த இசையாக இருந்ததில்லை. தமிழ் கவிதை யாப்பு , இலக்கண நூல்களிலும், ,அவற்றின் உரைகளிலும் பக்தி மார்க்கம் குறித்த கவிதைகள் பற்றி விவாதிக்கப்படவில்லை. அது பற்றிய தவல்களுமில்லை. இலக்கியமும், இசையும் கி.பி.7 ம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமயப்போராட்டங்களின் பின்னர் தான் பக்திமார்க்கத்தில் இணைக்கப்பட்டன. இலக்கியமும் அவ்வாறே . ஆரம்பகால பக்தி இலக்கியங்கள் இலக்கியம் என்றளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.என்பதும் சந்தேகமே.
சைவ ,வைணவ வளர்ச்சிக்காகவும் ,பெளத்த ,சமண சமயங்களுக்கு எதிராகவும் இசை திருத்தப்பட்டது. பார்ப்பனர்கள் தங்கள் தேவைக்காக கடவுளையே உருவாக்கக் கூடியவர்கள் . கணபதி, முருகன் கதைகள் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். சிவபெருமானின் பிள்ளையான முருகனை வட இந்தியர்கள் வழிபடுவதில்லை என்பது சிறிய உதாரணமாகும். இசை தமிழ்நாட்டில் இறைவனுக்கும்.அல்லது பக்திக்கும் என என்றென்றும் இருந்ததில்லை.
அக்கால (கி.பி.7ம் நூற்றாண்டு) அரசியலே அதனையும் தீர்மானித்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
இவ்விதம் தமிழிசை பக்தி இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்பது தமிழ் மக்கள் மத்தியில் இசைக்கு இருந்த செல்வாக்கினையே காட்டுகிறது . பின் அதுவே சம்பிரதாயமாகவும் மக்கள் மேல் திணிக்கப்பட்டது. தமிழிசையின் வ்லிமையால் தான் பிற சமயங்களிலிருந்து சைவத்தையும், வைணவத்தையும் காப்பாற்றமுடிந்தது. பார்ப்பனர்கள் உண்டாக்கிய இறைவனால் அல்ல. இந்த மத்ப் போராட்டங்களால் தான் தாழ்த்திவைக்கப்பட்டிருந்த (சாதிகள்) பாடகர்களின் தேவை முக்கியமாகியது. பாடல்களைப் பாடக்கூடியவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு கோயில் மண்டங்களுக்குள் நிறுத்தப்பட்டனர். பின்னர் இவர்களை “இசை வேளாளர்கள்” என உயர்த்தப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் பாலர் வகுப்புக்களில் நான் படித்த சைவ சமய பாடத்தில் சொல்லித்தரப்பட்ட நம்பியாண்டார்நம்பி என்பவரின் கதை இதை எழுதும் போது என் நினைவுக்கு வருகிறது . இந்த சைவ சமயம் என்பதை ஒரு பாடமாக படிப்பதில் என்ன லாபம் இருக்கிறது. எனநான் பல முறை சிந்தித்ததுண்டு ,சமணர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டார்கள்.
நம்பியாண்டார் நம்பி ஓர் அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த ஆரம்பகால தேவாரப்பாடல்களை எவ்விதம் மீட்டெடுத்தார் போன்ற கதைகளின் முழுப்பரிமாணமும் இப்போது தான் புரிகிறது.
சமணர்கள் கழு மரத்தில் ஏற்றப்பட்டார்கள் என்பதை நான் அவர்கள் ஏதோஒரு மாமரம் போன்ற ஓர் மரத்தில் ஏற்றப்பட்டார்கள் என்றே நீண்ட காலம் எண்ணியிருந்தேன். (தவறு செய்யும் மாணவர்களை ப்ள்ளி ஆசிரியர்கள் பெஞ்சில் ஏற்றுவதுபோல ) .நம்பியாண்டார்நம்பியும் ,பேரரசன் இராஜராஜ சோழனும் தேவாரப்பாடல்களை மீட்டெடுக்கச் சென்றபோது பார்ப்பனர்கள் எப்படி எல்லாம் சதி செய்து நாடகமாடினார்கள் என்பதை சிவாஜி கணேசன் நடித்த ராஜராஜசோழன் என்ற தமிழ் சினிமாவில் மிக அழகாகக் காண்பித்தார்கள்.
சமணர்களை வெறுப்பதில் புகழ் பெற்றிருந்த சம்பந்தரைப் புகழ்ந்து பாடல் புனைந்த நம்பியாண்டார் நம்பிக்கும் காரியம் இலகுவாக இருக்கவில்லை .நம்பியின் பாடல்களில் சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதை காணலாம் பார்பனியத்திற்கு என்னென்ன விதமாக சேவை செய்தாலும் தமிழ் தமிழர்விரோதம் என்பதே அவர்களது கொள்கையாக இருந்து வருகிறது.
தமிழில் பாடு என்ற கோசம் எழும்பும் போதெல்லாம் ‘துவேசம்’ பேசுகிறார்கள் என்றும்’தமிழ்வெறியர்கள்’ என்றும் கூறுபவர்கள்’ இசைக்கு மொழி இல்லை என்பார்கள் . இசைக்கு மொழி இல்லை என்பது தமிழில் பாடு என்று சொல்லும் போதே வருகிறது. இசைக்கு மொழி இல்லை என்பதும் அரை உண்மையே.
அப்படி கூறும் பார்ப்பனர்கள் யாராவது நாதஸ்வரத்தையோ, தவிலையோ தொட்டிருக்கிறார்களா? வாசிப்பார்களா? மதம் மொழி கடந்து பலரும் நாதஸ்வரக்கலைஞர்களாக இன்று திகழ்கிறார்கள்.முஸ்லீம்கள்.பெண்கள் என பலர் நாதஸ்வரக்கலைஞர்களாக உள்ளனர். இசைக்கு மொழி இல்லை என்று மற்றவர்களின் வாயை அடைக்கும் பார்ப்பனர்கள் யாராவது நாதஸ்வரக்கலைஞர்களாக உள்ளனரா? இதற்கு காரணம் நாதஸ்வரம் தவில் சாதி என்ற பாகுபாட்டுடன் உள்ளடங்கி இருப்பதே. பறையும் இதைப்போலவே. இதற்கான இதற்கான சாதிகளையும் உருவாக்கியவர்கள் பிராமணர்கள்தான்.
தேவடியாள்கள் நட்டுவர்கள் பறையர்கள் கூத்தியர்கள் என இழிவு படுத்தப்பட்ட இந்த மக்களால் தான் நாதஸ்வரமும் சதிராட்டமும் தமிழிசையும் காலங்காலமாக தமிழ் மக்கள் மத்தியில் நிலைபெற்று வருகிறது. தேவடியாள்களால் ஆடப்பட்ட சதிராட்டமும் தமிழ்நாட்டு நடனமே. இந்த சதிராட்டம் என்பதே இன்று பரதம் எனப்படுகிறது. 2000 வருடங்களுக்குமேலாக ஆடப்பட்டு வரும் இந்த சதிராட்டம் வரும் இந்த சதிராட்டத்தை முதன் முதலாக ஒரு பிராமணப் பெண் ஆடியது 1931ம் ஆண்டுதான்.
ஆடிய அந்த சிறுமியின் பெற்றோரை கும்பிட்டு மன்றாடி பெரும்பாடுபட்டே நடாத்தப்பட்டது. ஆனால் 1994 ல் நடைபெற்ற தமிழிசைச் சங்க பண் ஆராய்ச்சி மாநாட்டில் பத்மா சுப்ரமணியம் என்பவர் “பரதம் ஒன்றிற்குதான் இருக்கிறது, வட மொழியில் தோறியது தான் அது. தமிழ்நாட்டில் இந்த நடனம் தோன்றியத்ற்கான ஆதாரம் ஏதுமில்லை . இதோடு ஆரியர்கள் ,திராவிடர்கள் என பேசுகின்ற இனவாதத்தை உடனே நிறுத்த வேண்டும். என்னைக்கேட்டால் இந்த நாட்டில் திராவிடர்கள் இருந்தார்கள் ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்தார்கள் பிறகு பண்பாட்டு ரீதியாகவும் ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கின்ற எல்லா பாட நூல்களையும்தடை செய்ய வேண்டும் ” என தமிழிசை சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அந்த இயக்கத்தின் வீழ்ச்சி பார்ப்பணியத்துடனான அதன் சமரசத்தின் பின்னனிகளை சிந்திப்பது பயன் தரும்.
இந்த அடிப்படையிலிருந்து தான் கர்நாடக இசை என்பது களவாடப்பட்ட இசை என்று தெரிந்திருந்தும், தமிழிசையைப்பற்றி ஏராளமான தகவல்களைக் கொண்டுள்ள தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய 1360 பக்கங்கல் கொண்ட “கானமிர்த சாகரம்” மற்றும் சிலப்பதிகாரத்தில் இசை பற்றிய பகுதியான “அரங்கேற்றுக்காதை” சங்கீத பாடத்திட்டதில் சேர்க்கப்படவில்லை.
தமிழில் பாடுவது அவசியம் என்பது மற்றைய மொழிகளின்மீதான வெறியல்ல. இதை எல்லாம் தன் வாழ்நாளில் உணர்ந்து தெலுங்குமொழி தெரியாமல் சங்கீத வித்துவான்கள் சங்கீத கொலை செய்வதைக் கண்ட பார்ப்பணியத்தின் “மாந்தப்பற்று” முகம் கொண்ட பாரதி பின்வருமாறு கண்டனம் செய்கிறான்.
“இசை ஞானமில்லாதபடி பல்லவிகளும் ,கீத்தனங்களும் பாடுவோர் சங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இந்த காலத்தில் சங்கீத வித்துவான்களிலேயே பலர் சங்கீதத்திற்கும் ரசங்களே உயிர் என்பதை அறியாதவர் .முக்காலே மும்மாகாணி வித்துவான்களுக்கு இந்த கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது . எழுத்துக்களையும், பத்ங்களையும் கொலைசெய்தும், விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு ரசம் தெரிய வாய்ப்பில்லை.
நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக்கொண்டே வருகிறேன். பாட்டுக்கச்சேரி தொடங்குகிறது .’வாதாபிகணபதிம்’ என்று ஆரம்பம் செய்கிறார். ‘ராம நீ சமானமெவரு’…மரியாத காதூரா’…’வரசொசரி’….அய்யய்யோ அய்யய்யோ. ஒரே கதை ஒரேகதை;….” இப்படி மேலும் எழுதிக் கொண்டே போகிறான் பாரதி.
பொறுமையிழந்த பாரதியின் வாக்குமூலம் அது. கர்நாடக இசையின் தோற்றம் பற்றி கூறும் பார்ப்பணர்கள் அது சாம கானத்தில் பிறந்தது என்பர் . K.B.தேவாஸ், கிளைமென்ட்ஸ் போன்ற இசையறிஞர்களுக்கு ஆப்ராகாம் பண்டிதர் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு அறுதியிட்டு கூறுகிறார்.
“மேலும் ஆரிய சங்கீதமென்ற ஒரு சங்கீதம் இருப்பதாக நாம் கேட்டதுமில்லை. நூல்களில் பார்த்துமில்லை , ஆரியர்கள் பாடிக்கொண்டிருப்பதினால் மாத்திரம் ஆரிய சங்கீதம் என்றும் , சமஸ்கிருதத்தில் எழுதியதெல்லாம் ஆரியருக்குச் சொந்தமென்றும் சொல்வது பொருந்தாது”.
கர்நாடக இசை இன்று பெரும்பாலான மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருப்பதற்கான முக்கிய காரணம் அது பக்தி என்ற ஒரு உணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தி நிற்பதே. அதைத்தான் பாரதி’ ஒரே கதை”என்றான். சினிமாஇசையின் தோற்றம் பெரும்பாலான மக்கள் புதிய இசை வடிவங்களைக் கேட்க வழிசமைத்தது. சினிமா இசையையும் மட்டம்தட்டவும் ,இருட்டிப்பு செய்யவும்,குட்டுவைக்கவும் எத்தனையோ முயற்சிகளை எல்லாம் அவர்கள் செய்தார்கள். சினிமா சங்கீதத்தை வானொலியில் இருட்டிப்பு செய்தார்கள்.
சினிமா இசை உலக மக்களின் உழைப்பில் தோன்றிய இசை வடிவங்களைச் சாரமாக பலவடிவங்களில் நமக்கு அறிமுகம் செய்து பார்ப்பனர்களின் இருட்டடிப்புகளை எல்லாம் முறியடித்துள்ளது. மக்களின் பல விதமான உணர்வுகளையும் பிரதிபலித்தது சினிமாஇசை.
கர்நாடக இசையும் பெரும்பாண்மையான மக்களைச் சென்றடைய வேண்டுமாயின் அது பக்திஉணர்ச்சி என்ற தடையை கடக்க வேண்டும்.
நன்றி ; இனி ஒரு .காம்
கருணாநிதி ஸ்ரீமச்சாசனம்
ஊர்வச சிரோபபிஷசேகரி…”
இச்செப்பேடு
செப்புவது யாதெனில்,
“காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!”
என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே
பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு
விடாது கடிதமெழுதியதோடு,
அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து
காலை உணவுக்கும், மதிய உணவுக்கும்
இடைப்பட்ட மணித்துளியில்
அன்ன ஆகாரம் உண்ண மறுத்து,
ஈழத்தமிழர் செத்த பின்பு
போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன்
கருணாநிதிச் சோழனின்
மற்ற கைங்கர்யங்களாவன:
சோழநாடு சோறுடைத்ததைப்
பின்னுக்குத் தள்ளி
ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்!
பகை முடித்தார்!
வண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு,
மனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி,
மகப்பேறு உதவித்தொகை…
எனக் குடிதானம் ஏராளம்.
மக்களைத் தானாக வாழவிடாமல்
தடுத்தாண்ட சிறப்பிவைகள்.
மற்றபடி,
இடைத்தேர்தல் எதிர்ப்பட்டால்
வாக்காள பெருங்குடிக்கு
பொன்முடிப்பு தாராளம்!
காணியுடையோராய் இருந்த
தொல்குடிகள் நீக்கி,
காடு, மலை, நதியென
அந்நியப் பன்னாட்டுக் கம்பெனி
வேண்டுவன தட்டாமல் வழங்கும்
தகைமையில் விஞ்சுவாரின்றி
கருணையும், நிதியும் ஒன்றாய் ஆனார்!
யாதும் ஊரே; யாவரும் கேளிர்
ஹூண்டாயும், ஃபோர்டும் நம் உடன்பிறப்பே,
எனப் பன்னாட்டு உறவில் புது எல்லை கண்டான்!
அண்ணலும் ‘நோக்கியா’ அவளும் ‘நோக்கியா’
என கம்பநாட்டாழ்வரையே கற்பனையில் விஞ்சி
திருப்பெரம்புதூரில் தென்கொரியாவையே கொண்டான்!
அறக்கொடைகள் அம்மட்டோ!
வேளாண்வகை ஏரிகள் மாற்றி
பெப்சி, கோக்குக்கு சதுர்வேதி மங்களங்கள்!
திருவண்ணாமலை வேடியப்பன் மலையை எடுத்து
‘ஜிண்டால்’ கம்பெனிக்கு தேவதானம்!
சிறுவணிகத்தை மடைமாற்றி
ரிலையன்சு டாட்டாவுக்கு இறையிலி.
பாலியல் கொலைகாரன் காஞ்சி சங்கரனுக்கு
சட்டமும் போலீசும் பிரம்மதேயம்…
அண்டி நிற்கும் வீரமணிக்கும்
அவ்வப்போது அறச்சாலாபோகம்!
இத்தனை ஆட்சிக்குப் பிறகும்
எஞ்சியிருக்கும் தமிழ்க்குடிக்கு
தனது வீட்டையே தானம் கொடுத்தார்!
இன்னும் கொடுப்பதற்காய்
தமிழ்நாட்டையே எடுத்துக் கொண்டார்!
சாதனைகள் சொல்ல
செப்பேடு போதாது…!
காவிரிக்கு குறுக்கேதான்
கல்லணை அமைத்தான் கரிகாலன்..
காவிர, முல்லைப்பெரியாறு இரண்டிலுமே
நீதிமன்றத்திலேயே அணையைக்கட்டி
பிரச்சினை நிரம்பி வழியாமல்
பார்த்துக் கொண்டவர் கருணாநிதி!
பாடிச் சொரிந்த புலவர்க்கு மட்டும்
மதுவை ஊற்றிக் கொடுத்தனர்
பழைய வேந்தர்கள்,
வாடிக்கிடக்கும் தமிழரையே
டாஸ்மாக்கால் ஈரப்படுத்தி
‘குடி’மகன்களை பாடவைத்துத்
தமிழ் வளர்த்தவர் தானைத் தலைவர்!
ஊனாடும்
ரோமாபுரி அடிமைப் பெண்களை
அந்தப்புரத்தில் ஆடவைத்து
தான்மட்டும் கண்டுகளித்தனர்
பழைய மன்னர்கள்
‘மானாட மயிலாட’ என
மற்றவரையும் பார்க்க வைக்கும்
தமிழினத் தலைவரின் பரந்த உள்ளத்தை
கலைஞர் தொலைக்காட்சி பறைசாற்றும்!
மழலையர் உதடுகளில் ஆங்கிலம் வளர்த்து
பெயர்ப்பலகையில் மட்டும் தமிழ் வளர்க்கும்
தந்திரம் முன்
பராந்தகச் சோழனே பயந்து போவான்!
‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ எனப் போலியாக புலம்பி
ஊரறிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போட்டுவிட்டு
சத்தம் போடாமல் உச்சநீதிமன்றத்தில்
வடுக வந்தேறி பார்ப்பன மனுநீதிக்கு பங்கம் வராமல் பாதுகாக்க
அந்த முள்ளை எடுத்தே வேலிகட்டும்
இரண்டகத் திறமையில்
பார்ப்பன குலமே மயக்கமுறும்!
இயற்றமிழ் அழகிரி
இசைத்தமிழ் கனிமொழி
நாடகத்தமிழ் தளபதி
என முத்தமிழையும் வளர்த்து
தமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்க
முயலும் திறமை முடியுமோ யாராலும்?
பிறப்பொக்கும் இவர் பேரன், பேத்தி
வாரிசு வரைக்கும்
மதுரை தினகரன் அலுவலகத்தில்
கொலையான ஊழியர்கள்
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகள்!
இருப்பினும் வாழும் வள்ளுவர்…
திருவள்ளுவர் அதிகாரங்களுக்கு மட்டுமல்ல,
அழகிரியின் அதிகாரத்திற்கும்
உரையெழுதும் திறமுடையார்!
இலக்கியக் கவர்ச்சிக்கு கண்ணகி
அரசியல் கவர்ச்சிக்கு குஷ்பு
அகமும், புறமும், மணிமேகலை,
சிலப்பதிகாரம், குண்டலகேசியுடன்
‘சின்னத்தம்பி படத்தையும்’ சேர்த்து
தமிழ்ப்பெருமை உருவாக்க தயங்காதார்!
வழிபாட்டுக் கருவறையில்
தமிழன் நுழைய முடியவில்லை..
வழக்காடு மன்றத்தில்
தமிழ் நுழைய முடியவில்லை..
என்னடா இது வீண் இரைச்சல்
என்று சாலையைப் பார்த்தால்…
கூஜாக்கள் குலுங்க…
ஜால்ராக்கள் சிணுங்க…
கோடம்பாக்கத்து காக்கைகள்
குறிபார்த்துக் கரைய…
பல்கலை நரிகள் பாசாங்கு முழங்க…
கரைவேட்டி முதலைகள்
மத்தளம் கொட்ட
வயிற்றெரிச்சலோடு
கொடநாட்டு மதயானை பிளிற…
களைகட்டுகிறது கருணாநிதிச் சோழரின்
கோவையலங்காரம்…
பேச்சு மறுக்கப்பட்ட
கோவை சிறுதொழில் உதடுகளில்
அறுந்து கிடக்கும்
ஓசையற்ற கைத்தறியில்
இறந்து கிடக்குது நம் தாய்மொழி…
தமிழகத்தை உய்ப்பிக்க
உழைக்கும் மக்களிடமிருந்து
உருவாக வேண்டும் ஒரு செம்மொழி…
சுரங்கள் நுட்பமாகப் பிரிக்கப்படும் போது அவை “சுருதிகள்” என்று அழைக்கப்படுகின்றன. தொன்மைக் காலத்தில் அவை “அலகுகள்” என்றும், ”மாத்திரைகள்” என்றும் அழைக்கப்பட்டன. பண்டைய தமிழ் ராகங்கள் வடமொழியில் மாற்றம் செய்யப்பட்ட உண்மை அம்பலமானது.
தமிழ்ப் பெயர் | வடமொழிப் பெயர் |
செம்பாலைப்பண் | -சங்கராபரணம் |
படுமலைப்பண் | -கரஹரப்பிர்யா |
அரும்பாலைப்பண் | -கல்யாணி |
கோடிம்பாலைப்பண் | -கரிஹாம்போதி |
விளரிப்பாலைபண் | -நடனபைரவி |
செவ்வழிப்பண் | -தோடி |
மேற்செம்பாலைப்பண் | -சுத்ததோடி |
இங்கே பண் என்பது தமிழிசை ராகத்தையே குறிக்கும். இது மட்டுமா?…
தமிழ்ப் பெயர் | வடமொழிப் பெயர் |
பஞ்சமம் | - ஆவகிரி |
சீகாமரம் | - நாதநாமக்கிரியை |
புறநீர்மை | - பூபாளம் |
வியாழக்குறிஞ்சி | - செளராட்டிரம் |
கெளசிகம் | - பைரவி |
செந்துருத்தி | - மத்யமாவதி |
அந்தாளகுறிஞ்சி | -சாமா |
தக்கேடு | -காம்போதி |
கொல்லி | - நவரோஜ் |
மேககுறிஞ்சி | - நீலாம்பரி |
சாதாரி | - பந்துவராளி |
நாட்டுப்புற இசையில் இருந்து தோன்றியனவே தமிழ்ப்பண்களில் இருந்து விருத்தியானதே செவ்வியல் இசை
தமிழில் தோன்றிய பண்கள் இன்று ராகங்கள் எனப்படுகின்றன . செவ்வியல் இசையான தமிழிசையே பார்ப்பனர்கள் “கர்நாடக இசை” என பெயரிட்டுச் சொந்தம் கொண்டாடத்தலைப்பட்டனர்.
சாஸ்திரிய சங்கீத இலக்கணம் என்று எதை எதையோ எல்லாம் சாதிக்கத்தலைப்பட்டனர். பண் ‘ என்றால் இன்று சம்பூரணராகம் என்றும் ‘பண்ணியம்’ என்பது இன்று சாடவராகம் என்றும் .’திறம்’ என்பது ஒளடவராகம் என்றும் ‘திறத்திறம்’ என்பது ஸ்வராந்தர ராகம் எனவும் அழைக்கப்படுகின்றன.
வட மொழி ஏடுகளில் இருக்கும் பாடல்களுக்கும் அவை பாடப்படும் முறைகளிலும் உள்ள முரண்பாடுகளை விளக்கி ஆப்ரகாம் பண்டிதர் கேட்ட கேள்விகளுக்கு மைசூர் அரண்மனை வீணைபண்டிதர் சேசண்ணா
“அவை நியாயமானவை, ஆனால் எம்மிடம் தான் பதில் இல்லை” என்று ஒத்துக்கொண்டார்.
தமிழிசை என்பது வெறும் வாய்ப்பாட்டு மட்டுமன்று.
தமிழிசைக்குப்பயன்படும் இசைக் கருவிகள் கூட தமிழ் நாட்டுக்கும் , தமிழ்மக்களுக்கும் சொந்தமானவை. குழல்,யாழ், குழவு என்பன இவ் உண்மையாகுச் சான்ராக பழந்தமிழ் நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
இவை மட்டுமல்ல ,வீணை,பிடில்,மிருதங்கம் ,,நாதஸ்வரம், தவில் என்பனவும் தமிழிசைக் கருவிகளே.
நாட்டிய சாத்திர நூலை எழுதிய பரதர் கி.பி.5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அந்தப் பரதரே” தென்னிந்திய மக்கள் பல விதமான நடனங்களிலும், வாய்ப்பாட்டிலும், வாத்திய சங்கீதத்திலும் த்னித்துவமான கலையார்வம் காட்டுகிறார்கள்.
அவர்களின் கலைகளில் அழகும் ,மதுரமும் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன” என்கிறார்.
பண்டைத் தமிழகத்தில் பண் இசைத்த ஆடவரை பாணர்கள் என்றும் பெண்டிரை பாடினி என்றும் அழைத்தனர்.
இசைப் பாடல்களைப் பாடியவர்கள் இசைப்பாணர்கள், யாழ் இசைத்தவர்கள் யாழ்ப்பாணர்கள். இதே போல் நடனமாடிய பெண்கள் விறலியர், கூத்தியர் எனஅழைக்கப்பட்டனர்.
கர்நாடகைசை வட மொழியில் இருந்து தான் தோன்றியது .அது தமிழ் நாட்டில் தோன்றவில்லை”. என்று வாதிடுபவர்கள் அதன் தொன்மைக்கு வட மொழியில் இருந்து காட்டும் ஆதாரமாக சாரங்க்குதேவர் என்பவர் எழுதிய இசை இலக்கண நூலாகிய “சங்கீதரத்னாகரம்” என்பதே இவர் கி.பி.12 ம் நூற்றாண்டைச்சேர்ந்தவர். கார்ஷ்மீர் தேசத்தைச் சேர்ந்த சொட்டில்தேவர் என்பவரின் மகன்.
பெளலதபாத் என்ற தேவகிரிராஜ்ஜியத்தை ஆண்ட சிம்மண ராஜசபையில் சமஸ்தான வித்துவானாக இருந்தவர் இவர் தமிழ்நாட்டில் நன்றாக வளர்ந்திருந்த த்மிழிசையை நன்கு பயின்ற பின்னரே தமது நூலை எழுதினார். அந்நூலில்(சங்கீதரத்னாகரம்) அவர் இத்தளம் ,காந்தாரபஞ்சமம், கெளசிகம், நட்டராகம், தக்கராகம்,தக்கேசி, நட்டபாடை,செவ்வழி,செஞ்துருத்தி, தேவாரவர்த்தினி, காந்தாரம்,குறிஞ்சி முதலான தமிழ்ப்பண்களைக் குறிப்பிடுகின்றார்.
சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகரத்துக்குப் பதினொரு நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூல் தான் சிலப்பதிகாரம்.
சிலப்பதிகாரத்தில் வரும் அரங்கேற்றுக்காதை,வேனிற்காதை , ஆச்சியர்குரவை, நடுநற்காதை, ஆகிய நாங்கு காதைகளும் தமிழிசை பற்றிய குறிப்புகளை தெளிவாக விளக்குகின்றன. அத்துடன் யாழாசிரியன்,அமைதி, குழலோன் அமைதி, தண்ணுடையோன் அமைதி, ஆடலாசிரியன் அமைதி என அந்நூல் விவரிக்கும் விளக்கங்கள் தமிழிசையின் தொன்மைக்கு சான்றாகவுள்ளன.
சிலப்பதிகாரத்தை அடியொற்றியே சங்கீதரத்னாகரம் எழுதப்பட்டது என்பது தான் வரலாற்றுண்மை.
பார்ப்பணர்கள் வகுத்தவிதிகளின் படி அவர்கள் ஆடலிலோ , பாடலிலோ ஈடுபடக் கூடாது. அப்படி அக்கலைகளில் ஈடுபட்ட பார்ப்பணர்களை அவர்களே விலக்கி வைத்தார்கள் என சிலப்பதிகாரத்தில் கூறப்ப்ட்டுள்ளது. பார்ப்பணசேரிகள் என அவை அழைக்கப்பட்டன.
சிலப்பதிகாரம் மட்டுமல்ல அடியார்க்கு நல்லார் தாம் வாழ்ந்த காலத்தில் வழங்கிய இசைச் சொற், அடியார்க்கு நல்லார் காலத்திலும் தமிழிசையின் தொன்மைக்கு சான்றாக இன்ன ,இன்ன நூல்கள் இருந்தன என்பதற்கும் தேவையான ஆதாரங்கள் உள்ளன.
சில சான்றுகள்
1.அகத்தியம்
2 .இசை நுணுக்கம்
3. இந்திரகானியம்
4.குணநூல்
5. கூத்தநூல்
6.சயுந்தம்
7.செயிற்றியம்
8. தாளவகை கோத்து
9. நூல்
10. பஞ்சபாரதீயம்
11. பஞ்சமரபு
12.பரதம்
13. பரதசேனாதீயம்
14.பெருங்குருகு
15.பெருநரரை
16.மதிவாணர் நாடகத்தமிழ்நூல்
17. முறுவல்
அடியார்க்கு நல்லார் தாம் வாழ்ந்த காலத்தில் வழங்கிய இசைச் சொற்களையே தமது நூலுரையிலும் கையாண்டார்.
உதாரணமாக குரல் ,துத்தம் , கைக்கிளை, உழை , இனி, விளரி,தாரம் என்பவை . இவை சுரங்களைக்குறிப்பிட தமிழர்கள் பாவித்த சொற்கள் ஆகும். அதுமட்டும் அல்ல ஒரு ஸ்தாயியை ஒரு இலக்கு என்றும் மண்டிலம் என்றும் த்மிழில் வழங்கினர்.
ச.ரி .க. ம .ப. த.நி என்ற குறியீட்டு எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களே. இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதரத்னாகரம் என்ற நூலை சாரங்கதேவர் சமஸ்கிருத பெயர்களை கொடுத்து அவை வடமொழியிலிருந்து வந்தவை போன்ற புரட்டை ஏற்படுத்த உதவினார் .
தமிழ்’ச’வுக்கு வடமொழி ‘ஸ’ வலிந்து திட்டமிடப்பட்டது. இந்தப்புரட்டை மறைத்த நாராயண சாத்திரிகள் கீழ்க்கண்டவாறு வன்மையாகக் கண்டிக்கிறார்.
“சாரங்கதேவர் விபரித்த ‘ச ரி க ம ப த நி’ என்ற ஏழு சுரக்குறிகள் காரணப் பெயருள்ளவை என்பது, இடுகுறிப்பெயர்கள் என்று மெய்ப்பித்து விளக்குகிற சிகண்டி மாமுனிவர் அருளிச் செய்த இசை நூலுக்கும் விரோதப்படுகிறது.
அன்றியும் ஷட்ஜா என்ற பதத்திலிருந்து “ஸ” வும்,
ருஷப என்ற பதத்திலிருந்து “ரி” யும்,
காந்தார என்கிற பதத்திலிருந்து “க” வும்,
மத்திம என்ர பதத்திலிருந்து “ம” வும்,
பஞ்சம என்கிற பதத்திலிருந்து “ப” ,
தைவத என்கிற பதத்திலிருந்து “த” வும் ,
நிசாத என்கிற பதத்திலிருந்து “நி” யும் வந்ததென்று உரைக்கில்” ஸ” என்கிற சமஸ்கிருத அட்சரம் “ஸ” என்கிற மாறுதலை அடைவதற்கும் “,ரு” என்கிற உயிரெழுத்து “ரி” என்று சமஸ்கிருதத்தில் மெய் எழுத்தாக மாறுவதற்கும், “கா” என்கிற நீட்டம் “க” என்று குறைவதற்கும் தைவதம் என்பது “த” என்று அகர வடிவமைந்து யாதொரு சமஸ்கிருத வியாகரண பிரமாணமும் காண முடியாமையாலும் , ஷட்ஜா முதலிய ஏழு பதங்களும் காரணச் சொற்களென்று காட்டுவதற்கு “ரிஷப, காந்தார ,தைவத” என்கிற மூன்று பதங்களின் பொருள் ஆராச்சியில் சுரங்களைச் சம்பந்தித்தவைகளாகவே சாரங்கதேவர் விபரிப்பதால் ஷட்ஜா, மத்திம, பஜ்சம , நிஷத என்கிற உரைகள் சுரங்களையே சம்பந்தித்ததெனக் கூறுவது கிரமமில்லாமையாலும் அபந்தியாயத்தையும் ஷண்ட , ருதம், காத்ரம், மதுரம், பட்டலம், தைரியம் முதலான சமஸ்கிருதப் பதங்களில் முதல் அட்சரமாக அதிப்பிரசிங்கப்பதாலும் திராவிடர்கள் அமைத்த இடுகுறிப்பெயரை மாற்றுவதற்கு எடுத்த புரட்டு என்று தீர்மானிக்கப்படுகிறது”.
இப்படி தமிழிசையை ஒழித்துக்கட்ட வடமொழியாளர்கள் செய்த சதிகள் கொஞ்சமல்ல. இன்றைய கீர்த்தனை வகை இசைப்பாடல்கள் தேவாரத்திலிருந்தே தோன்றின .கீர்த்தனையில் நிரவல், விருத்தி முதலிய இசை அமைப்புக்கள் எல்லாம் தேவாரபாடல்களைக் கொண்டே அமைந்தவை.
கர்நாடக இசை , கர்நாடக இசை என்று நாம் இங்கே குறிப்பிடும் இசைக்கும் இன்றைய தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்வுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? இல்லை, இல்லவேஇல்லை.
கி.பி.10ம் நூற்றாண்டில் மகராட்டிரத்தை ஆண்ட மன்னனான சோமேச புல்லேகமால் என்ற என்பவன் இசைக்கலை மீது தீவிர நாட்டம் கொண்டவனாக விளங்கினான். தென்கோடியில்(தமிழ்நாட்டில்) வழங்கி வந்த இசையை ஒரு குறியீட்டிற்காக கர்நாடக இசை என தவறுதலாக கூறியதன் விளைவே இத் தவறு என்பது வரலாறு. தனது நாட்டுக்கு தெற்கே உள்ள நாட்டு இசை என்பதை சொல்ல கர்நாடகத்தை குறிப்பிட்டு சொன்னதே அது . மலையைக் கல் என்பது தமிழ் வழக்கு , இமயமலையை வடபெருங்கல் என்று தொல்காப்பியம் சொல்கிறது.
(இன்னும்வரும்…)
நன்றி: இனிஒரு.காம்
கடந்த வருடம் ஏப்ரல் மாதம், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன் சார்ள்ஸ் அன்ரனிக்கு, போராட்ட உணர்வுள்ள சீக்கியர் ஒருவர் தமிழீழ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்கால நிலைப்பாடுகளை விளக்கி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச சமூகம் உடனே தமிழீழ வீரர்களுக்கும், மக்களுக்கும் ஆதரவாக இலங்கை பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று ஒரு சீக்கிய எழுத்தாளர் www.worldsikhnews.com இணைய தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழன் காசில் தின்று கொழுக்கும் துரோகிகள், பத்திரிகைகள் இதை படிக்கட்டும். ஒரு சீக்கியருக்கு இருக்கும் உணர்வும் மனிதாபிமானமும் மானங்கெட்ட தமிழினத் துரோக தமிழ் ஊடகங்களுக்கும், (தினம…ம்) தமிழன் நடத்தும் ஆங்கில பத்திரிகைக்கும் (தி சந்து ) இல்லையே.
அன்புள்ள சார்ள்ஸ் அன்ரனிக்கு,
உங்களது வாழ்வுரிமை, அடையாளம் மற்றும் விடுதலைக்கான போராட்டத்துக்கு எனது ஆதரவை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் உங்களது மக்களும் உயிர் வாழ எப்படிப்பட்ட போராட்டத்தில் தற்போது இருக்கிறீர்கள் என்பதை பஞ்சாப்பில் நடந்த போராட்டங்களை அருகில் இருந்து கவனித்தவன் என்ற முறையில் நான் நன்கறிவேன்.
ஊடகங்களில், உங்கள் தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு நாள் நண்பர், மற்றொரு நாள் எதிரி. சில நாட்கள் அவர் பாதுகாக்கப்பட்டவர். இன்று அவர் கைவிடப்பட்டவர். சிலருக்கு அவர் தீவிரவாதி. பலருக்கு அவர் இரட்சகர். அவர் எப்படிப்பட்டவர் என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும் என்று விடுவதே நல்லது. நான் போர்க் குணம் மிக்க இனத்தைச் சேர்ந்தவன். போராட்ட குணத்துக்கு பெயர் பெற்றவர்கள் சீக்கியர்கள். பஞ்சாப்பில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்களது வாயைத் திறக்கவில்லை என்றாலும், அச்சமின்றி அறிக்கை வெளியிடவில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களின் துணிச்சல், உறுதி, போர்த் திறன் ஆகியவற்றை அங்குள்ள பலர் பாராட்டுகின்றனர். இதை நீங்கள் நம்பியே ஆக வேண்டும். சமீப காலமாக உங்கள் போராட்டம் சந்தித்து வரும் வீழ்ச்சி பற்றிய செய்தியைக் கேட்டு பெரும்பாலான சீக்கியர்கள் கவலை கொண்டுள்ளனர்.
போர் பகுதியில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற சில மணி நேரங்கள் மட்டுமே அளித்த நிலையில், உங்கள் மக்களும், வீரர்களும் இலங்கை இராணுவத்தின் விஷ வாயு குண்டு வீச்சுக்கும், இரசாயன குண்டு வீச்சுக்கும் ஆளாகியுள்ள நிலையில் உங்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இலங்கையில் தமிழீழ மக்கள் படும் துன்பத்தால் மனம் நொந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். துன்பப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து மலைகளே அசைய வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. உங்கள் வலிகளையும் துன்பங்களையும் கண்டு கொள்ளாமல் மொத்த உலகமும் இயங்கி வருகிறது. அதற்கு 24 மணி நேர டி.வி. சேனல்களுக்கு நன்றி கூற வேண்டும்!.
தமிழீழ தாயகத்தை விட்டும், தமிழீழ வீரர்களை விட்டும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வெளியேறுவதைக் கண்டு எனது இதயம் அழுகிறது. இதை எழுதும் போது எனது உள் மன உணர்வுகளை வெளிப்படுத்த இது ஒரு வழி மட்டுமே என்ற குற்ற உணர்வே மிஞ்சுகிறது. இருந்தபோதிலும் ஒரு சீக்கியனாக என்னால் செய்ய முடிந்தது உங்களது போராட்டத்தில் உங்களுடன் சேர்ந்து கொள்வது மட்டுமே. எனது பிரார்த்தனையும், எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு உண்டு.
உலகில் உள்ள மற்ற அமைப்புகள் போன்று தமிழீழத்திற்கும் வரலாற்று ஆவணங்கள் இருந்தபோதும், இலங்கையில் துன்பப்படும் பல்லாயிரம் மக்களின் துயரை, வலியைத் துடைக்க பன்னாட்டு சமூகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா எப்படி சீக்கியர்கள், காஷ்மீரிகள், வடகிழக்கு மாநில மக்களின் போராட்டங்களை அழித்ததோ, அதே போல் இலங்கை அரசு உங்களது போராட்டத்தை பகல் நேரக் கொலை மற்றும் பேரழிவின் மூலம் நசுக்கி வருகிறது.
ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் வீதிகளில் இறங்கி போராடி இருக்கும் பேச்சுகளைத் தொடங்க வைத்த புலம் பெயர் தமிழர்களின் போராட்டம் இதயத்தை வருடுவதாக உள்ளது. குறிப்பாக நோர்வே தலைமையிடம் கூர்மையாக வாதாடிய புலம் பெயர் தமிழர்களால் இம்.ஆஸ்லோவில் எம் மலம் பிரதமரின் அலுவலகத்தை நோர்வே வாழ் புலம் பெயர் தமிழர்கள் முற்றுகையிட்டு, அரசாங்கத்துடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது, சர்வதேச வளர்ச்சிக்கான நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹைம், ‘என்னால் நோர்வே தமிழர்களது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் என்னால் மாயவித்தை புரிய முடியாது’ என்றார். இதை செய்திகளில் நான் படித்தேன். நோர்வே அரசின் என்ஆர்கே பத்திரிகை நிருபர்கள் இது குறித்து கேள்வி கேட்ட போது, ‘என்னால் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் மீண்டும் ஒருமுறை பேச இலங்கையில் போரை நிறுத்த ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்’ என்றார்.தமிழ் எழுத்தாளர் கே.பி.அறிவானந்தம் எரிக்கின் இந்த பதில் குறித்து அளித்த பதில்:‘மாய வித்தைகள் புரிய சொல்ஹைமால் முடியாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அவர் தவறுகள் செய்வதில் இருந்து தள்ளி நின்றிருக்கலாம். முடிந்தவற்றை செய்வது மட்டுமே இராஜதந்திரம் என்பதாக இருக்கலாம்.
ஆனால் முடியாததையும் நடத்திக் காட்டுவதுதான் விடுதலைப் போராட்டம்’. இந்த பதில் மிகச் சரியானது. ஒரு காவியம் போன்றது. துணிவுக்கும், மனித உரிமை போற்றுதலுக்கும் ஸ்காண்டிநேவிய நாடுகள் பெயர் பெற்றவை. அதனால் தான் சமாதான பேச்சுக்கு நோர்வேயை உங்கள் தலைமை தேர்ந்தெடுத்திருக்கும்.‘முக்கியமான கருத்தை நோர்வே உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டது. சமாதான பேச்சில் நடுநிலை வகித்ததால், புலிகள் ஆயுதங்களை கீழே போடுமாறு கோரிக்கை விடும் இணைத் தலைமை நாடுகளுடன் சேர்வதில் நியாயம் இல்லை. கொழும்பின் இனப்படுகொலை கரங்களுக்குள் வன்னி மக்களை செல்லுமாறு கூறுவது பெரும் கவலை அளிக்கிறது. அவர்களுடைய செயல்முறைத் தோல்விகளால், பன்னாட்டு அமைதித் தூதுவர் என்ற மதிப்பை நோர்வே குறைத்துக் கொண்டுள்ளது.
சுதந்திரமாகவும், வல்லரசுகளின் புவிசார் அரசியல் குறிக்கோளில் இருந்து விலகியும், உலக மனித குலத்துக்கு உண்மையாக நடந்து கொள்ள விரும்பியும் வருவதற்கு நோர்வேக்கு இன்னும் நேரம் உள்ளது’ என்று நோர்வேயின் தலையில் ஆணி அடித்தது போல் அறிவானந்தம் கூறியிருக்கிறார். தொடர்ந்து துன்பப்படும் தமிழீழ மக்களானவர்கள், இந்தியா மற்றும் உலக நாடுகளின் வெளிப்படையானதும், மௌனமானதுமான ஆதரவால் சிங்களப் பேரினவாத இராணுவத்திடம் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களின் சகோதரர்களின் அபயக் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 13 தமிழ் சகோதரிகள் உங்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்தியா முழுவதும் தேர்தல் களேபரத்தில் உள்ள நேரத்தில் அவர்களைப் பற்றி இந்த ஊடகங்கள் கண்டு கொள்கின்றனவா?தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பொய்யாகவும் ஏமாற்றும் விதமாகவும் குரல் கொடுக்கின்றனர்.
அவர்கள் நேர்மையாக உங்களை ஆதரிக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்கு அவர்களைப் பற்றி நன்கு தெரியும். தமிழ் தலைவர்களைப் போன்று இந்தியத் தலைவர்களும் உங்களுடனும் உங்களுடைய இலட்சியத்துடனும் தங்கள் சாணக்கியத் தனத்தை காட்டி வருவதாக நான் கருதுகிறேன். இந்தியா உங்கள் நண்பனா, எதிரியா என உலகத்தால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது. அந்த வகையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது. இலங்கை இராணுவத்துக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுப்பதைத் தொடர்ந்து கொண்டே ஒன்றும் தெரியாதது போல் மென்மையாக நடந்து கொள்கிறது.
நான் பாதுகாப்பு ஆய்வாளர் கிடையாது. ஆனால், நோர்வே தலைமையிலான அமைதிப் பேச்சு தொடங்கியபோதே உங்கள் மக்களின் போராட்டத்துக்கு பெரிய அடி விழுந்து விட்டது. சீக்கியர்கள், காஷ்மீரிகள், நாகா, மிசோ மக்களின் போராட்டத்திலும் இந்தியா இந்த முறையையே கடைபிடித்தது. 9/11 சம்பவத்துக்குப் பிறகு உலகின் புவிசார் அரசியல் மாற்றமும் உங்கள் போராட்டத்தின் தன்மையை மாற்றிவிட்டது. இதுவும் கூட நோர்வேயின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.கடந்த ஆண்டு இதே நேரம் கொசோவா என்ற புதிய நாடு பிறந்தது. அதற்கு ஓராண்டு முன்பு கிழக்குத் தைமூர் விடுதலை அடைந்தது. 2009-ல் தமிழீழம் விடுதலை பெறும் என்று நினைத்தேன்.
இந்த ஆண்டு அது நடைபெறாது போல் இருந்தாலும் எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. உங்களுடைய போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்துவிட்டது என்று உலக அளவில் ஒரு தோற்றம் உள்ளது. கள நிலைமைகள் குறித்த உண்மைகள் தெளிவாகத் தெரியாத நிலையில் இருந்தாலும் உங்கள் போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. உங்கள் போராட்டம் தொடர வேண்டும். உங்கள் சுதந்திரக் கொடியை தொடர்ந்து நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும்.அமெரிக்க குடியுரிமை பெற்ற கோத்தபாய ராஜபக்ச, பச்சை அட்டைதாரர் பொன்சேகா ஆகியோரின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதில் முன்னாள் அமெரிக்க அரசு வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் வெற்றி பெற்றுள்ளார் என்று நம்புகிறேன்.
நியூயோர்க்கில் உள்ள இனப்படுகொலை தடுப்பு அமைப்பு உலகில் உள்ள 8 நாடுகளில் இனப்படுகொலை நடைபெறுகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் இலங்கையும் ஒன்று. உங்களது தாயகத்தில் இனப்படுகொலை நடக்கிறது என்பதை உலகிற்கு அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நாம் நம்புவோம்.ஒரு நாட்டின் மக்களை காப்பாற்றுவதில் யாருக்கு பொறுப்பு உள்ளது என்ற ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டதில் எழுப்ப மெக்ஸிகோ தூதர் கிளாட் ஹெலன் முயற்சி செய்தார். தெற்காசியாவின் புவியியலையே மாற்றும் வல்லமை கொண்டவரின் மகன் சார்ள்ஸ் அவர்களே, நீங்கள் உங்கள் போராட்டத்தை தொடர்வீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் உங்களுக்கு கூறுவது இதுதான், கொசோவா விடுதலை அடைந்ததும் நான் கூறியதும் இதுதான்.
சீக்கியர்களின் 10-வது குரு, குரு கோபிந்த் சிங் அவர்களின் வாக்குதான் அது.‘யாரும் உங்களுக்கு விடுதலையை தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள் அதைப் பெற்றவர்கள், தங்களுடைய சொந்த முயற்சி, துணிவு, உறுதி, வலிமையாலேயே பெற்றார்கள்’ என்பது தான் அந்த வாசகம். விரைவில் அல்லது காலம் தாழ்த்தியோ நீங்கள் அதை அடைவீர்கள். இந்த தலைமுறையிலேயே நீங்களும் உங்கள் மக்களும் விடுதலையை அடைவீர்கள் என வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் தமிழ் மக்களுக்கு ஆசி வழங்கட்டும். அவர்களது துன்பத்தை நிறுத்தட்டும். இந்த உலகில் சுதந்திர மக்களாக அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கட்டும்.
உண்மையுள்ள,
ஜக்மோகன் சிங்
sbigideas@gmail.காம்
நன்றி : நெருடல்.காம்