ஞாயிறு, அக்டோபர் 31, 2010

தமிழர் பெருவிழா ! நிகழ்வுகள் - பதிவுகள்






தமிழர் களம் நிகழ்த்திய தமிழர் பெருவிழா கருவூரில் அக்டோபர் 31 ஞாயிறு மாலை நடைபெற்றது. நிகழ்வின் விவரம் பின்வருமாறு....
சரியாக மாலை நான்கு மணிக்கு வெங்கமேட்டில் இருந்து கலை நிகழ்வுடன் பேரணி துவங்கியது. பேரணியை திரு.புகழேந்தி தங்கராசு துவக்கி வைத்தார். பின்னர் பேரணி முதன்மை சாலைகள் வழியே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தது . பேரணியின் முழக்கத்தில் கருவூர் நகரமே அதிர்ந்தது .இளைஞர் படையின் சீரான அணிவகுப்பு நமது இயக்கத்தின் கட்டுபாட்டை மக்களின் கவனத்தை ஈர்த்தது. வழக்கம் போல் காவல்துறையினர் குழப்பம் விளைவித்தனர். ஆயினும் பேரணி அமைதியாக நடந்தது.
பொதுக்கூட்டம் மாணவர்களின் பறை இசை முழக்கத்துடன் துவங்கியது. சென்னை கல்லூரி மாணவர்களின் வீதி நாடகம் காண்போரின் கருத்தை கவர்ந்தது . பலருக்கு நம் களத்தின் வலிமையும் புரிந்தது. பின்னர் திரு.சீவானந்தம் வழக்குரைஞர் நிகழ்விற்கு வந்த அனைவரயும் வரவேற்று தமது கருத்துகளை முன்மொழிந்தார். தமிழர் களத்தின் பொது செயலாளர் களத்தின் மாநாட்டு தீர்மானங்களை எடுத்துரைத்தார்.
பின்னர் திரு. புலவர் பாவிசைகோ, திரு. மை.பா.சேசுராசு, திரு. நகைமுகன், திரு.செந்தில் மள்ளர் , திரு.தயாளன், திரு. புதுமலர் பிரபாகரன், திரு. பொன்னிறைவன், திரு. பேரா. செல்வராசு, திரு. செரோன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திரு.அரு .கோபாலன், திரு. காசியானந்தன் ஆகியோரின் சிறப்புரை எழுச்சி மிக்கதாக இருந்தது. கூட்டத்தின் தலைமை உரையை களத்தின் பொதுசெயலர் திரு. அரிமாவளவன் நிகழ்த்தினார். இறுதியாக கரூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. வாகை. தமிழ் முதல்வன் நன்றியுரை வழங்கினார்.
திராவிடதிற்கேதிரான கருத்துகள் வலிமையாகவும், மிக கூர்மையாகவும் முன்வைகபட்டன . கரூர் மக்களுக்கு இந்த நிகழ்வு புதுமையாகவும் பேரதிர்வாகவும் இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. இளைஞர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் இனப்பற்றும் ஏற்படும் வகையில் அனைவரும் உரை நிகழ்த்தினர். விரைவில் இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம் !!

செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் , கருவூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக