
ஏன் இந்த பெருவிழா ?
நாம் கூடி கொண்டாடி மகிழவா?
இல்லை இல்லவே இல்லை !
மலையாளி மலையாளியாக இருக்கிறான், தெலுங்கன் தெளுங்கனாக இருக்கிறான் , கன்னடன் கன்னடனாக இருக்கிறான் , நாம் மட்டும் திராவிடனாகபட்டோம்!
நமக்கான உரிமைகள் பறிபோனதும் திராவிடத்தால் வஞ்சிகபட்டதும் 1956 நவம்பர் 01 ஆம் நாள் . இந்தியமும் திராவிடமும் நம்மை பிரித்தாண்டு கொள்ளையிட்டதும் துரோகிகளால் மறைக்கப்பட்டது! ஆனால் வரலாறு ஈவு இரக்கமற்றது , அது வெளிபடுத்தும் பல உண்மைகள் கசப்பானதாக இருக்கும் , வரலாற்றை அந்த புரிதலோடு மீளாய்வு செய்ய வேண்டும் . அதற்கு நம்மை பற்றி நாம் அறிய வேண்டும் . இனி நம்மிடம் இழப்பதற்கு உயிரை தவிர வேறில்லை . அதையும் இழக்கலமா? பிறகெதற்கு தமிழரென்று பெருமை பேசி வாழ? அதற்காக அடிமையாக வாழ்வதா? இழந்த உரிமைகளை மீட்கவும், இருக்கும் உடமைகளை காக்கவும் போராட வேண்டாமா? ஆறரை கோடி நாம் இருந்தும் அடிமையாக வாழ்கிறோம் ! நம்மை ஆள்வதற்கு தலைவர்களை தியரங்குகளில் தேடுகிறோம்! இன்னும் வந்தேறிகளை வாழ வைத்து ஆள வைத்து அழகு பார்க்கிறோம்! இந்தநிலை மாறவேன்டாமா? அதற்கு வேண்டும் விடுதலை ! வரலாற்றின் பாடங்களை புறக்கணித்து விட்டு நம் இனத்திற்கான விடுதலையை பெற முடியாது ! அதற்காக நாம் சாதிகளை கடந்து தமிழர்களாய் ஒன்றிணைவோம் !!!
அக்டோபர் 31 இல் கருவூரில் தமிழர் களம் இந்த பெருவிழாவை முன்னெடுகிறது
தமிழர்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பெரும்திரளாக கலந்து கொண்டு நாம் யாரென்பதை உலகிற்கு காட்ட வாருங்கள்!
எழ மறுக்கும் இனம் பிணத்திற்கு சமம் ! சினம் கொள்ள மறுத்தால் நீயும் ஒரு பிணம்!!
உங்கள் வரவை எதிர்நோக்கும்
தமிழர் கள பொறுப்பாளர்கள் , கருவூர் மாவட்டம்.
செய்தி வெளியீடு : ஊடகபிரிவு, கருவூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக