செவ்வாய், ஜனவரி 03, 2012

குஜராத்திகளுக்கு ஹிந்தி அயல்மொழி: உயர்நீதிமன்றம்

ஆமதாபாத், ஜன.3: குஜராத்தி மொழியைக் கற்று, பேசிவரும் உள்ளூர் குஜராத்திகளுக்கு ஹிந்தி மொழி, அயல்மொழிதான் என்று குஜராத் உயர்நீதிமன்ற பெஞ்ச் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.
நீதிபதி வி.எம்.சஹாய், நீதிபதி ஏ.ஜே.தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எதிரான மனு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில், நெடுஞ்சாலைகளுக்காக நிலத்தைக் கொடுத்தவர்களூக்கு இழப்பீடு தொடர்பான விசாரணை நடைபெற்றது.
ஒரு உள்ளூர் தினசரியில், நெடுஞ்சாலை ஆணையம், நிலத்தைக் கொடுத்த உள்ளூர் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு விளக்கம் அளித்து விளம்பரம் வெளியிட்டது. அதுவும் ஹிந்தி மொழியில். இதனால் இந்த விளம்பரம் தங்களுக்குத் தெரியவரவில்லை என்று உள்ளூர் மக்களின் சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற பெஞ்ச், விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஹிந்தி மொழி அறிவிக்கை, உள்ளூர் குஜராத்திகளைப் பொருத்த வரையில் அயல்மொழிதான்... என்று கூறியது.

nandri Dinamani

2 கருத்துகள்: