வெள்ளிக்கிழமை, ஜனவரி 6, 2012,
நெல்லை: கேரள மசாலா கம்பெனியில் பணிபுரியும் தமிழர்களுக்கு ஊதியம் தராமல் கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அந்த நிறுவனத்தில் இருந்து தப்பி வந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் தங்களுக்கு ஊதியம் பெற்றுத் தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்கு நாச்சியபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடன் குருவிகுளம் புதூரை சேர்ந்த ராஜதுரை, சம்சியாபுரத்தை சேர்ந்த மணிகண்டன், கே ஆலங்குளத்தை சேர்ந்த அருண், கே புதூரை சேர்ந்த எம்ஜிஆர், தலைவன் கோட்டையை சேர்ந்த சுபாஷ், ஆகிய 6 பேரும் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள குமராபுரத்தில் உள்ள தனியார் மசாலா கம்பெனியில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர்.
மசாலா அரைப்பது, பாக்கெட் போடுவது, ஆகிய பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர். பெரியவர்களுக்கு 1 ஷிப்டுக்கு ரூ.200ம், சிறியவர்களுக்கு 1 ஷிப்டுக்கு ரூ.120ம் சம்பளம் தருவதாக கூறப்பட்டது. 1 ஷிப்டு 8 மணி நேரம் என்பதையும் தாண்டி கூடுதல் நேரம் வேலை வாங்கியுள்ளனர்.
இதையடுத்து இவர்கள் 6 பேரும் பொங்கல் பண்டிக்கைக்கு ஊருக்கு செல்வதாககூறி சம்பளம் கேட்டுள்ளனர். அதற்கு சம்பளம் தர மறுத்ததுடன் தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
அங்கிருந்து நேற்று முன்தினம் தப்பிய 6 பேரும் கையில் இருந்த பணத்துடன் ஹபா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வியாழக்கிழமை நெல்லை ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர்.
உடனடியாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற 6 பேரும் தங்களது ஊதியம் ரூ.40 ஆயிரத்தை பெற்றுத்தர கோரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்திரசேகரனிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து அவர்கள் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது,
முல்லை பெரியாறு பிரச்சனைக்கு பிறகு கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மசாலா கம்பெனி உரிமையாளர் ஐசக் எங்களை தனி அறையில் அடைத்து வைத்து ஊதியம் தராமல் கொடுமைப்படுத்தினார். கூடுதல் நேரம் வேலை வாங்கினார். அங்கிருந்து தப்பினால் போதும் என்ற எண்ணத்தில் பொங்கலுக்கு ஊருக்கு செல்வதாக கூறினோம். அதற்கும் அனுமதிக்க மறுத்ததால் தப்பி வந்து ரயிலை பிடித்து நெல்லை வந்தோம். எங்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை பெற்று தர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
nandri thatstamil.com

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக