செவ்வாய், ஜனவரி 17, 2012

கொதிநீரை ஊற்றி திரு. சாந்தவேலைக் கொன்ற மலையாளிகளை நீதியின் முன் அடையாளம் காட்டுக!

தமிழக அரசே, தமிழர்களின் அரசாகச் செயல்படுக!!
அரிமாவளவன் கடும் கண்டனம்!
ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற சென்னையைச் சேர்ந்த திரு. சாந்த வேலின் மீது பம்பையிலுள்ள மலையாள தேனீர் கடைக்காரனொருவன் தேனீர் போடுவதற்கு வைத்திருந்த கொதீநீரை ஊற்றிக் கொன்றிருக்கிற செய்தி இப்போதுதான் கசிந்து வருகிறது. கடந்த 11ஆம் தேதி நடந்த இந்தக் கொடூர நிகழ்வில் பாதிக்கப்பட்ட சாந்தவேலுவை அவரது குடும்பத்தார் சென்னை மருத்துவமனைக்குக் கொண்டுவந்து மருத்துவம் செய்திருக்கின்றனர். இருப்பினும் தமிழர் திருநாளாம் பொங்கலன்று அவர் இறந்து போயிருக்கிறார்.
மீளாத் துயரில் மூழ்கியிருக்கும் அவரது குடும்பத்தாருக்குத் தமிழர்களம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.
அதே வேளையில் பட்டப் பகலில் தமிழர் ஒருவரை இனவெறி கொண்டு பச்சைப் படுகொலை செய்திருப்பது தமிழர்களின் உள்ளங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயலன்றி வேறெதுவும் இல்லை.
சாந்த வேலைப் படுகொலை செய்த அந்த மாபாதகக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்! சாந்த வேலு உள்ளிட்ட 80 பேரை அங்கு அழைத்துச் சென்ற சந்திரன் என்ற மலையாளியையும் கைது செய்து உரிய முறையில் விசாரித்து உண்மைகளை வெளிக் கொணர வேண்டும்.
சாந்த வேலுவின் மரணம் குறித்து கள்ள மவுனம் காக்கும் கட்சிகளையும் ஊடகங்களையும் தமிழர்களம் கண்டிக்கிறது. இவ்வாறு தமிழர்களப் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

seithi : ஊடகப்பிரிவு. தமிழர்களம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக