ஞாயிறு, நவம்பர் 17, 2013

தமிழர் பெருவிழா - நெல்லை -2013

 
 நெல்லை 16.11.13,

                 தமிழர் களத்தின் சார்பில் நெல்லை பாளையம்கோட்டை நகரில் களத்தின் பொது செயலாளர் தமிழ்த்திரு அரிமாவளவன் தலைமையில் மிக எழுச்சியான பேரணியுடன் துவங்கியது. பேரணியில் களத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். பேரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.
                   பாளை சந்தைத் திடலில் நடைபெற்ற பொதுகூட்டத்தின் துவக்கத்தில் 'பாசறைப் பாணர்' தேனிசை செல்லப்பா அவர்கள் குழுவினரின் தமிழர் எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன.
                  அடுத்து துவங்கிய பொதுகூட்டத்தை ஆசிரியர் அல்போன்சு அவர்கள் வரவேற்று தொடர்ந்து நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிகழ்விற்கு அறிஞர் குணா, மை.பா. நன்மாறன், சுப.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.                
                கூடங்குளம் 'அடி வயிற்றில் அணுகுண்டு' என்ற தலைப்பில் திருமதி. இளம்பிறை அவர்களும், கச்சதீவு - 'தாய்மண்ணே வணக்கம் ' என்ற தலைப்பில் திரு. சீதையின் மைந்தன் அவர்களும், அயல்மொழிக்கல்வி - 'உச்சிமீது உருவி விழும் பட்டகத்தி' என்ற தலைப்பில் பேராசிரியர் மணி அவர்களும், ஈழம் - 'என்று தணியும் எங்கள் விடுதலை தாகம்' என்ற தலைப்பில் வழக்குரைஞர் இ.அங்கயற்கண்ணி அவர்களும், மணற்கொள்ளை -'கண்ணை விற்று ஓவியமா மண்ணை இழந்து வாழ்வோமா' என்ற தலைப்பில் திரு. பெர்லின் அவர்களும், ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு - சலுகைக்கு சாவுமணி உரிமைக்கே போடுவழி ' என்ற தலைப்பில் திரு. ஞானபிரகாசம் அடிகளார் அவர்களும் உரையாற்றினார்கள்.  

























                 விழாவில் அறிஞர் குணா அவர்கள் எழுதிய நாற்றாங்கால்  என்ற புத்தகமும், பா.வா.மணிகண்டன் எழுதிய ஐயோ தமிழா என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
                 இனம் காக்க உயிர் நீத்த ஈகியர்க்கு ஒளி வணக்கம் திரு.அருன்மொழிவேந்தன் தலைமையில் செலுத்தபட்டது. தமிழர் பெருவிழா தீர்மானங்கள் புதுவை மாநில செயலாளர் திரு. அழகர் அவர்களால் வாசிக்கப்பட்டது. பின்னர் இறுதியாக அண்ணன் தமிழ்த்திரு அரிமாவளவன் அவர்கள் நிகழ்வின் பேருரை நிகழ்த்தினார். நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு. அமலரசு நன்றி தெரிவித்தார்.

செய்தி ஊடகபிரிவு  கருவூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக