திங்கள், நவம்பர் 11, 2013

தமிழா, ஏமாறாதே!


                          "இன்றைய நாளேடுகளில் இந்திய அரசு ஒரு முழுப்பக்க விளம்பரத்தைக் கொடுத்துள்ளது, “இலங்கையில் இந்தியா ஆற்றும் பணிகளை” படங்களோடு போட்டிருக்கிறார்கள்.
முடமான ஒருவருக்கு செயற்கைக் கால்கள் வழங்குவதும் அப்படங்களுள் ஒன்று! புதிய வீடுகள் கட்டப்பட்டிருப்பது மற்றொரு படம். இப்படிச் சில அந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளன.
ஏன் முடமானார்கள்? ஏன் வீடிழந்தார்கள்? ஏன் நிலங்களையும் வசதிகளையும் இழந்தார்கள்?
நிவாரணம் பற்றிப் பேசும் இந்தியா நடந்தது என்ன என்று ஏன் பேச மறுக்கிறது? இலங்கை அரசுப் படைகள்தான் ஊனமாக்கின, நாசமாக்கின என்றால் இந்தியா ஏன் போய் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறது?
நாசமாக்கியதிலும் ஊனமாக்கியதிலும் ஏதோ தொடர்பு இருப்பது போலவே இந்தியா நடந்து கொள்கிறது!
ஊனமுற்றவனுக்குச் செயற்கைக் கால் கொடுக்கிறது! வீடிழந்தவருக்கு வீடு கட்டிக் கொடுக்கிறது?
கற்பிழந்த எம் பெண்களுக்கு கற்பைத் திரும்பத் தருவார்களா? உயிரிழந்த எம் மக்களுக்கு உயிரைத் திரும்பத் தருவார்களா? நீ உடைத்த ஈழத்தை திரும்பத் தருவாயா?
இனியும் இப்படி நடக்கக் கூடாது என்றால், நமக்கு நிவாரணம் தேவை இல்லை! தாக்கியவனுக்குத் தண்டனை வேண்டும். தாங்கியவனுக்கு பாதுகாப்பு வேண்டும்.
தாக்கிய இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்! அப்படியானால்தான் மீண்டும் ஒரு முறை இப்படிப்பட்ட ஈனச் செயல்களில் அவர்கள் இறங்கமாட்டார்கள். மற்றவர்களுக்கும் அது பாடம்! அதை மட்டுமே நம்பி எஞ்சியிருக்கும் பெண்களையும் மக்களையும் காணிகளையும் சிங்களரிடம் கையளித்துவிட முடியாது. எனவே, நமக்கு நிலையான பாதுகாப்பு என்பது தனி ஈழமே!
கருணாநிதியும் செயலலிதாவும் வைகோவும் அவர்போன்றோரும் இப்போது ஏதோ புரட்சி வேடம் கட்டி நாடகம் ஆடுவதை நம்பத் தொடங்கிவிடாதீர்கள். “இந்தியா இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது” என்கிற கோரிக்கை தமிழர்களின் முதன்மையான கோரிக்கையான, “இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணையும் நடவடிக்கையும் தேவை” என்ற நிலையிலிருந்து இவர்கள் நம்மை இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது ராசபக்சேவைத் தப்ப வைக்க இந்தியா முன்னெடுத்துக் கொடுத்திருக்கிற ஒரு நடவடிக்கை. இதில் இந்தியா கலந்து கொள்வது அல்லது கூடாது என்கிற உப்புச் சப்பற்ற கோரிக்கை ஒரு திசை திருப்பல் நாடகம்.
தில்லி பெரிய நாடகம் ஆடுகிறது. தமிழ்நாட்டுத் திராவிடங்கள் இந்தியாவோடு சேர்ந்துகொண்டு கொடுத்த பாத்திரத்தைப் பத்திரமாக நடிக்கின்றன! தமிழா, ஏமாறாதே!
தமிழர்களம்
தமிழர்நாடு!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக