திங்கள், நவம்பர் 04, 2013

இந்தியாவை அது அசைக்கவில்லை!

            " இசைப்பிரியா கொலை செய்யப்பட்ட காட்சிகள் மீண்டும் நெஞ்சை இடிபோல் தாக்குகிறது. மாந்த இனம் கண்டிராத, கேள்விப்பட்டிராத கொடுமைகளை இராசபக்சே அரசு தமிழர்களுக்கு இழைத்திருக்கிறது. கொடூரமான கொலைகள், ஈவு இரக்கமற்ற கற்பழிப்புகள், மாந்த உயிர்களை மலிவாகக் கொன்ற கொடூரங்கள் எந்த மனிதனையும் ஒரு கணம் உலுக்கிவிடும். என்னால் இந்தக் காட்சிகளைப் பார்க்கவே முடியவில்லை. தமிழ் குருதி ஓடும் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சுக்குள்ளும் ஒரு நெருப்பு மழையே பொழிந்திருக்கும்.
ஆனால்

இந்தியாவை அது அசைக்கவில்லை!
இந்தியாவை அது உலுக்கவில்லை!
இந்தியாவை அது துடிக்கவைக்கவில்லை!
           

              எவனுக்கோ எவளுக்கோ நடந்தது குறித்து நான் ஏன் இரங்க வேண்டும்? என்று இந்தியன் எண்ணுகிறான்.
              


              பின் இன்னும் நீ ஏன் இந்தியாவைக் கட்டியழுகிறாய்?
இந்தியாவோடு நாம் தொடர்ந்து இருக்கவேண்டுமா?
அதில் நாம் தொங்கித் தொலைய வேண்டுமா? என்ற கேள்விகளை சாதாரண மக்களிடம் கேளுங்கள், விதையுங்கள்! இது இனி நமது வரலாற்றுக் கடமை!
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த முன்வந்தபோதே அந்த அமைப்பிலிருந்து இந்தியா விலகியிருந்தால் இந்தியாவை எனது நாடு என்று சொல்லலாம்!
               " இலங்கையில் நடத்தித் தொலையாதே!” என்று குரல் எழுப்பியிருந்தாலாவது சரி போகட்டும் இந்த நாட்டில் இருந்து தொலைவோம் என்று இருந்திருக்கலாம்.
குறைந்தபட்டசம் “நான் இந்த மாநாட்டுக்கு வரமாட்டேன்” என்று அறிவித்தால்கூட தலையெழுத்தே என்று இன்னும் கொஞ்ச நாளுக்கு இதைக் கட்டியழலாம்.
               
ஆனால், போவேன் என்கிறான். இன்றும் சற்று ஆழமாகப் பார்தால் இவன்தான் அந்த மாநாட்டை அந்த இடத்தில் நடத்த உந்தித் தள்ளியிருப்பான் போலிருக்கிறது.
                   
               எனவே, எளிய மக்களிடம், பள்ளிச் சிறுவர்களிடம், பாட்டாளி மக்களிடம், உழவர்களிடம், மீனவர்களிடம், பனையேறுகிறவர்களிடம், கைத்தொழில் செய்கிறவர்களிடம், குடிசைவாழ் மக்களிடம் இது பற்றிப் பேசுங்கள்.
              
              நகரங்களுக்குள் 25 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த அந்த 100 பேருக்கும் கூட்டம் போட்டுப் போட்டு மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்காதீர்கள். இதுவரை உங்கள் கண்ணுக்கு எட்டாத களங்களுக்குப் போங்கள். குறிப்பாக பெண்களிடம் பேசுங்கள். செய்திகளைச் சொல்லி, “இந்தியாவோடு ஒட்டிக் கொண்டு இருக்கத்தான் வேண்டுமா?” என்ற கேள்வியை வலுவாக அழுத்தமாக எழுப்புங்கள்.
                 நம் இனத்தையே காட்டிக் கொடுத்த திராவிடத் தரகர்களை அம்பலப்படுத்துங்கள். அவர்களை எந்தப் பெரிய ஆயுதங்கள் கொண்டும் தாக்க வேண்டாம் என்று அறிவுருத்துங்கள். செருப்பு, துடப்பம் போன்ற மக்கள் பாணி பதிலடியே போதும் என்று எடுத்துச் சொல்லுங்கள்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக