சனி, நவம்பர் 30, 2013

                                                      "மாண்ட வீரர் கனவு பலிக்கும்!
                                                       நாளை எங்கள் நாடு பிறக்கும்
!

அடேயப்பா, கேள்! இந்த மண்ணின் விடுதலையும் மக்களின் விடுதலையும் திடீரென ஒருநாள் வானிலிருந்து பொத்தென்று விழாது.
தமிழகத்தில் நாம் பெரும்பான்மையர்!
இந்தியாவில் நாம் சிறுபான்மையர்!
ஈழத்தில் நாம் பெரும்பான்மையர்!
இலங்கையில் நாம் சிறுபான்மையர்!
சிறுபான்மையராய் இருந்தால் சலுகைகளில்தான் காலத்தைத் தள்ளலாம்!
பெரும்பான்மையராய் இருந்தால் மட்டுமே உரிமைகளோடு வாழலாம்!
தமிழர்களின் சிக்கல்கள் பன்முகப்பட்டது.
இந்தியாவில் நாம் சிறுபான்மையராக சிறுமைப்படுகிறோம் என்பது ஒரு புறம்.
தமிழகத்திலும் நாம் சிறுபான்மையராகவே நடத்தப்படுகிறோம்.
ஆட்சி அவர்களிடம்! அதிகாரம் அவர்களிடம்! வளங்கள் அவர்கள் கையில்! வேலைவாய்ப்புகள் அவர்கள் கையில்! மேற்படிப்புகளில் அவர்களே! உயர் பதவிகளில் அவர்களே!
செருப்பு, பல்பொடி, அடுப்பு, அரிசி, ஆட்டுரல் போன்றன உங்களுக்கு!
இடங்களையெல்லாம் அவர்கள் வைத்துள்ளார்கள்! இட ஒதுக்கீடு கேட்டு நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம்!
மாண்ட வீரர் கனவு எப்படி பலிக்கும்?
திராவிடம் என்ற சுழலில் சிக்கியவர்கள் அதிலிருந்து மீள வேண்டும்!
தவிப்பவர்களை மீட்க கரையேறியவர்கள் களமாட வேண்டும்!
இது நடந்தாலேயே பாதி வேலை முடிந்தது!
பெரும்பான்மை மக்களின் ஆட்சி தமிழகத்தில் மலரும்!
பெரும்பான்மை மக்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே புரட்சி வேடம் புனைந்து நிற்கிற புல்லர்கள், எத்தர்கள், தரகர்கள் தேர்தல் புறக்கணிப்பு என்ற இருளுக்குள் நம்மைத் தள்ள முற்படுவர்!
போர்க்களம் பானிபட்டில் இல்லை! இமயமலைச் சாரலில் இல்லை!
வீட்டில், தெருவில், ஊரில் உன் நாட்டில் நகர்த்த வேண்டிய காய்கள் உண்டு! தகர்க்க வேண்டிய பாறைகள் உண்டு!
நாளை அல்ல! இன்று!
அவனல்ல! நான்!
மாண்ட வீரர் கனவு பலிக்கும்!
நாளை நமது நாடு பிறக்கும்!!
தமிழர் களம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக