செவ்வாய், ஜனவரி 28, 2014

பெரும்பான்மையரின் பயங்கரவாதம்!


ஒரு மோசமான அரசியல்வாதியை அல்லது கொடுமையான ஓர் அதிகாரியை துப்பாக்கியால் சுடுவது தீவிரவாதம் என்று வைத்துக் கொள்வோம். 
ஓர் ஊருக்குள் சண்டை நடக்கிறது. திடீரென வாய்த்தகராறு வன்முறையாகிறது. உணர்ச்சிவசப்பட்ட ஒருவர் கையில் கிடைத்த கட்டையை எடுத்து அடித்துவிட்டார். அதில் ஒருவர் பொட்டென்று போய்விட்டார். கொலைதான்! ஆனால் அதைத் தீவிரவாதம் என்று அழைப்பதில்லை. தீவிரவாதத்திற்கு அடித்தளமாக கருத்தியல் இருக்கிறது. அமைப்பியல் இருக்கிறது. ஊர்ச்சண்டையில் அது இல்லை. இதுதான் வேறுபாடு.
இதனால்தான் அரசுகள் கொலைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! கொள்கைகளைப் பற்றித்தான் பேரச்சம் கொள்கின்றன. கொலைகள் ஆதிக்கத்தைத் தக்க வைக்க நடக்கின்றன. கொள்கைகள் ஆதிக்கத்தை அசைக்கின்றன. எனவேதான் அரசுகள் கொள்கைகளை வெறுக்கின்றன. கொலைகளை ஆதரிக்கின்றன!
வறுமையால் நடக்கிற பட்டினிச் சாவுகள் பயங்கரவாதமில்லையா? பட்டினிச் சாவில் அமைப்பியல் கொடுமைகள் இல்லையா? என்னைப் பொறுத்தமட்டில் வறுமையும், பட்டினிச் சாவுகளும், பஞ்சமும், பசியும் பிணியும் இந்த நாட்டின் கொடுமையான தீவிரவாதத்தின் விளைவுகளே!
அப்படிப் பார்த்தால் இந்த நாட்டை ஆண்டு, கொள்ளையடித்து குப்பைமேடாக்கி வைத்திருக்கிற அரசியல்வியாதிகள், பெரும்பான்மையான அதிகார அகவம் (வர்கம்) ஆகியனதான் மிக மோசமான குற்றவாளிகள்.
அப்படியானல் இந்த நாட்டில் இப்படிப்பட்ட மோசமான குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. அதிலும் மிக மோசமானவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கிடைக்கிறது. அது எப்படி?
அதுதான் பெரும்பான்மை பலம் ஆடும் பித்தலாட்டம்!
தனியாக ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் இந்த நாட்டில் அது மாபெரும் குற்றம். கூட்டாக சேர்ந்து கும்பலாக நாட்டையே சுருட்டினால் அது அரசியல் தந்திரம்! சனநாயகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு இங்கே கொலை செய்யலாம், கொள்ளையடிக்கலாம்!
கருணாநிதியுடைய எம்.எல்.ஏ. பதவிக்கான வருமானத்தை வைத்து மட்டும் (அவருடைய அத்தனைக் குடும்பங்களுக்கும் அரிசி பருப்பு புளி வாங்கிப் போக) அவர் இவ்வளவு சொத்து சேர்த்திருக்க முடியுமா?
செயலலிதாவின் நீண்ட நாள் “எளிய வருமானத்தை” வைத்து மட்டும் கொடநாடு எஸ்டேட்டோ பிற சொத்துக்களோ வாங்கியிருக்க முடியுமா?
அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் கொள்ளையடிக்காமல் அவர்களுடைய சொத்துக்களை சேர்த்திருக்க முடியுமா என்ன?
இன்று நான் வீட்டுக்கு மின் கட்டணம் கட்டவில்லை என்றால் நாளை இணைப்¬ப் பிடுங்கி விடுகிறார்கள். இப்படி கோடிக்கணக்கான எளிய மக்கள் கடமையுணர்வோடு மறுபேச்சின்றி கட்டும் வரியில்தான் அரசுக்குப் பணம் வருகிறது. அதை வைத்துத்தான் திட்டம் போடுகிறார்கள். அதில்தான் இந்தப் பொறுக்கிகள் கை வைக்கிறார்கள். மொத்தமாய் சுருட்டிவிடுகிறார்கள். ராசீவ் காந்தி சொன்னார், “இறுதியில் 100க்கு 5 ரூபாய்தான் பயனாளிகளுக்குப் போய் சேருகிறது” என்று.
அதனால்தான் வறுமை! அதனால்தான் பற்றாக்குறை! அதனால்தான் பஞ்சம்! அதனால்தான் பட்டினிச்சாவுகள்! இவைகள் சாவுகளல்ல! இவைகள் கொலைகள்! இந்தக் கொலைகளை பயங்கரவாதத்தின் விளைவுகள் என்று சொல்ல இந்த நாட்டில் திராணியில்லை. கொள்ளையடிக்கிற, கைநீட்டுகிற, லஞ்சம் வாங்குகிற, லஞ்சம் தராவிட்டால் கோப்புகளை இழுத்தடிக்கிற, கேட்ட காசு கிடைக்காவிட்டால் “இன்று போய் நாளை வா!” என்று விரட்டுகிற அதிகாரிகள், அரசியல்வாதிகள்தான் பயங்கரவாதிகள்!
“9 சிலிண்டர்கள்தான் தருவேன்” என்று நேற்றுவரைப் பொருளாதாரக் கணக்கு சொன்ன பொறுக்கிகள் இன்று ராகுல்காந்தி சொன்னான் என்பதற்காக 12 சிலிண்டர் தருகிறேன் என்று அறிவிக்கிற ஷிண்டே மனநிலை பாதிக்கப்பட்டவனா இல்லையா? ராகுல் காந்தி வெரோனிக்கா என்ற போதைப்பொருள் கடத்தல்காரனின் மகளோடு பாஸ்டன் விமான நிலையத்தில் பிடிபட்டபோது கைப்பற்றிய கொள்ளைப் பொருளிலிருந்தா நீ இந்த 3 அதிக சிலிண்டர்களைக் கொடுக்கிறாய்? எமது வரிப்பணத்தில் விளைந்ததை எவனோ ஒரு தனிப்பட்ட அரசியல்வாதி சொல்கிறான் என்பதற்காக எடுத்துக் கொடுக்கிறாய் என்றால், இது என்னடா பொருளாதாரக் கணக்கு?
ஒரு மாதத்திற்கு குறைந்தது 600க்கும் மேற்பட்ட கற்பழிப்புகள் இந்தப் பாரதத் தெருநாட்டின் தலைநகரில் நடக்கிறது என்று ஊடகங்கள் புலம்புகின்றன! அரசியல் பொறுக்கிகளுக்கும் சிறுக்கிகளுக்கும் கொடுக்கிற பாதுகாப்பில் 10 விழுக்காட்டை வெட்டி இந்த அப்பாவிப் பெண்களுக்கு இந்த நாட்டின் தலைநகரிலேயே கொடுக்க முடியாத உனக்கு ஒரு துறை! அதுவும் உள்துறை!...... தூ......!
பாராளுமன்ற வளாகத்திற்குள் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்து சுட்டதற்கு தூக்குத்தண்டனை கொடுக்கிறாய்! உன்னைப் பாரளுமன்றத்தில் அமர்த்திய எங்கள் மக்களில் 600 பேர் சிங்களக் காடையர்களால் சுட்டுத் தள்ளப்பட்டபிறகும் ஒரு .... யும் பிடுங்கமுடியாத நீ இந்த நாட்டை இறையாண்மை மிக்க நாடு என்கிறாயே?
தில்லியில் தற்போது (டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ) ஒரு பெண் கற்பழிக்கபட்ட நிகழ்வில், “ஏன் அவசரப்படுகிறீர்கள்? ஒரு மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை தரச் சொல்லியிருக்கிறோமே!” என்கிறாய். ஏண்டா டேய்! தில்லிக்குள் இதுவரை ஒரு கற்பழிப்புதான் நடந்திருக்கிறதா? இது வரை நீ எத்தனை அறிக்கைகளைத் தாக்கல் செய்திருக்கிறாய்? எத்தனை நடவடிக்கைகள் எடுத்திருக்கிறாய்? சொல்லு பார்ப்போம்!
குசராத் கலவரம் நடந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? அறிக்கை வந்து அயோக்கின்களைப் பிடித்துவிட்டாயா? பாபர் மசூதி இடித்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? எவனாவது கம்பி எண்ணுகிறானா? தூக்குக் கயிற்றில் தொங்குகிறானா? தில்லியில் நடந்த சீக்கியர் படுகொலையில் டைட்லர் உள்ளிட்ட காடைகள் எல்லாம் சிறைக்குள் களியா தின்கின்றன? ஈழத்தில நீ நடத்திய இன அழிப்புக் கொடுமைகளுக்குத் தண்டனை கிடைத்துவிட்டதா?
அறிக்கை! ஆணையம்! வெள்ளை அறிக்கை! விசாரணை ஆணையம்! இதுவெல்லாம் உண்மையின் தலையில் பாறாங்கல்லைப் போடுவதற்காக எடுக்கும் நடவடிக்கைள்! காலத்தைத் தள்ளினால் புதிய பிரச்சனைகள் வரும்! பழையதை மக்கள் மறந்து போவார்கள்!
தள்ளிப் போடுவது என்பது பயங்கரவாதத்தின் மற்றொரு உத்தி!
சான்றிதழ் ஒன்று வாங்க அலுவலகம் போகிறீர்கள். லஞ்சம் கொடுக்கக்கூடாது என்ற முடிவோடு உள்ளே போகிறீர்கள். எல்லாக் கழுகுக் கண்ணன்களும் உங்கள் கை¬யே பார்க்கிறார்கள். காசு கைமாறினால் அடுத்த நிமிடமே தந்து தொலைக்கிற அந்தச் சான்றிதழ் உங்களுக்குக் கிடைக்காது. “அடுத்த வாரம் வா!” என்பான். உங்களுக்கு அவசரம் என்றால், மடியை அவிழ்த்து மனதுக்குள் காரித் துப்பிவிட்டு தவம் கலைத்துவிடுவீர்கள்!” ஊழலும் கையூட்டும்தான் இந்த நாட்டை அரித்துத் தின்றுவிட்ட பயங்கரவாதங்கள்! அதற்கு உங்களையும் ஒத்துழைக்க வைப்பதுதான் காலத்தைத் தள்ளும் கயமை!
“ஒரு மாத அறிக்கை” என்பது காலத்தைத் தள்ளும் கயமை! கையூடடு வாங்க, கசடுகளை அள்ளிவீச, சாட்சிகளைக் கலைக்க அல்லது மிரட்ட, கழிசடைத்தனம் செய்ய அரசு எடுக்கும் வாய்தா!
“கேசரிவாலா, ஒரு பைத்தியம்” என்கிறார் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே!
பைத்தியக்கார மருத்துவமன¬யில் (கீழ்ப்பாக்கத்தில், நிம்மான்சில்) பைத்தியங்கள்தான் பெரும்பான்மையர். பெரும்பான்மையர் நடுவில் நடக்கிற மருத்துவரை அங்கிருக்கிற பெரும்பான்மையர் பைத்தியமாகத்தான் கருதுவர். “நாமளெல்லாம் கோணிக் கோணி நடக்கும்போது இந்தப் பய மட்டும் என்னா நேரா நடக்கிறான்?” என்று நினைத்துக் கொண்டு “சரியான பைத்தியம்” என்று புலம்புவார்கள்.
ஷிண்டேவும் புலம்புகிறது!
காலையில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்ற பிறகு மாலையில் சிதம்பரத்தை வெற்றியாளராக அறிவித்து, எம்.பி.ஆகி, அமைச்சராகி, ஐந்து ஆண்டுகளை உன் ஓட்டிவிட்ட அவுக “பதவி வெறிப் பைத்தியம்” இல்லையா?
நேரு காலத்துக் கரட்டுந்து ஊழல், இந்திரா காலத்து நகர்வாலா கொலை கொள்ளை, ராசீவின் போபர்சு கொள்ளை, சோனியாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல், ராகுலின் பாஸ்டன் சொல்லும் தொடர்புகள் போன்றனவெலலாம் “பணவெறிப் பைத்தியம்” இல்லையா?
இந்தா, பக்கத்திலேயே ஒன்றை வைத்திருக்கிறாயே? சசி தரூர் என்கிற ..... அவன் “காமவெறிப் பைத்தியம்” இல்லையா?
இரவு பகலாக இந்த நாட்டை, நாட்டின் வளங்களை அன்னியர்களுக்கு அடகு வைக்கிற, விற்றுத் தொலைக்கிற நீங்கள் “அன்னிய வெறிப் பைத்தியம்” இல்லையா?
கொலையாளிகளைச் சுற்றவிட்டுவிட்டு அப்பாவிகளை மரண தண்டனைப் பிடியில் உள்ளே வைத்திருக்கிற உனக்கு “செலக்டிவு அமனீஷியா” இல்லையா?
இறையாண்மை பற்றிப் பேசுகிற நீ இத்தாலிக்காரியை தலையில் தூக்கி வைத்திருக்கிறாயே இது “ஸ்பிளிட் பெர்னாலிட்டி” இல்லையா?
ஈழத்தில் மக்களைக் கதறக் கதறக் கொன்றது “கொலை வெறிப் பைத்தியம்” இல்லையா?
மணிப்பூரில் உனது படைகள் பெண்களைத் துகிலுரித்து துய்த்தக் கொடுமை ஃபோபியா இல்லையா?
உன்னுடைய அமைச்சர்களும், அமைச்சர் பிள்ளைகளும் அடிக்கடி “செக்சுவல் டிஸ்ஆர்டர் சின்டரோமில்” சிக்கித் தொலைக்கிறார்களே! அது பிரச்சனை இல்லையா?
புதுச்சேரிக்கும் தில்லிக்குமாக ஒரு “மேனியா” சுற்றுகிறதே! அதான், ஒரு “கருமேனி”யா! அதை என்ன செய்யச் சொல்கிறாய்?
ஈ.வி.கே.எஸ். என்ற ஒரு “அகோர ஃபோபியா” சுற்றுகிறதே! அதை என்ன செய்ய?
உன் அமைச்சரவையில், உன் கட்சியில் இருக்கிற பல நூறு “கிளப்டோமேனியா”க்களை என்ன செய்வது? (கிளப்டோமேனியா என்றால் கண்டதையெல்லாம் திருடும் மனநோய்)
உன்னுடைய கட்சித் தலைமையான அந்த சிங்காரிக்கும் ரசிய உளவுத்துறைக்கும் உள்ள தொடர்பை மறந்து போக உனக்கு என்ன “அல்சமையர்” என்கிற மறதி நோயா?
ஏண்டா டேய்! ஒரு பைத்தியக்கார மடத்தையே உள்ளே வைத்திருக்கிற நீ! கேசரிவாலா தெருவில் இறங்கிப் போராடுகிறான் என்பதற்காக “பைத்தியக்காரன்” என்கிறாயே!
நீ என்ன வகைப் பைத்தியம் என்று தெரியவில்லை! பார்த்தால் “டிரிக்கோடில்லோ மேனியா” மாதிரித் தெரிகிறது. (மயிர் பிடுங்கும் மன நோய்)
ஏம்பா, ஷிண்டே அடுத்த பாராளுமன்றக் கூட்டத்தை கீழ்பாக்கத்திலேயே நடத்தலாமே! அல்லது ஏர்வாடி வாரீகளா? தெற்கே குமரி மாவட்டத்தில் ராசாவூர் என்றும் ஒரு ஊர் இருக்கிறது! (தேர்தலில் கன்யாகுமரியில் ராகுலை நிறுத்துவோம என்று தமிழ்நாடு காங்கிரஸ் பரிந்துரைக்கிற முடிவு சரிதானோ!)
வருக! நலம் பெறுக!!
அரிமாவளவன்
தமிழர்களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக