புதன், ஜனவரி 29, 2014

அழகான நைனா! அசிங்கமான தலைவன்!

29.1.14
மணப்பாறை

அழகான நைனா! அசிங்கமான தலைவன்!

 கோபத்தில் வயதான தங்கள் பெற்றோர்களிடம் பிள்ளைகள் எப்படி பேசுவார்கள் என்று தெரியாதா என்ன? “பார் தந்தையே, மூன்று நான்கு மாதங்களில் உன் இளைய மகன் ஸ்டாலின் இறந்துவிடுவார்” என்று மனோகரா வசனமா சொல்லியிருப்பார்? “.... பயல! கிழட்டு ... நீ வேண்ணா பார்ரா!....” இப்படி ஒருமையில் பேசியிருக்கலாம்! எந்த தகப்பனுக்குத்தான் இந்த சொற்களைக் கேட்டு பொறுத்துக் கொள்ள முடியும்? “இனிமேல் நான் இருக்கிற வீட்டுப் பக்கம் வந்து தொலைச்சிடாதடா நாதாரி! நான் செத்தாகூட என் மூச்சியில முளிக்காதடா... நா...!” இப்படி பெற்றோர் திருப்பித் திட்டுவர். கருணாநிதியும் அப்படியே திட்டியிருக்கலாம். “போயா யோவ்! (போடா டேய் என்று கூட சொல்லியிருக்கலாம்) உனக்கு எத்தனை வீடுன்னு தெரியாதா? நீயெல்லாம் ஒரு அப்பன்! குருட்டுத் .....” இப்படியெல்லாம் திட்டியிருக்கலாம். இதை நாம் பெரிதாக எடுக்கலாமா என்ன? 

        ஆனால், அடிச்சிருக்கக் கூடாது! என்ன அழகான அப்பா அவர்! கனிமொழி சிறையில் வாடியபோது வதங்கிப் போன அப்பா! ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டி மகிழும் அப்பா! அழகிரியின் அனல் சொற்கள் கண்டு கண்ணீர் விட்டுக் கருகிப் போகும் அப்பா! அப்பா, அப்பப்பா! நீயல்லவோ அழகான அப்பா! உனக்கிணை இங்கு யாருண்டு அப்பா? உலகில் நீ மட்டுமா அப்பா? 

         ஏன் நைனா! குட்டிமணி செகநாதனை நினைவிருக்கிறதா நைனா? என்னிரு கண்களும் ஈழம் காணவேண்டும் என்று துடித்த ஈழத்து இளைஞர்கள். சிங்களக் காடைகளின் கழுகுப் பார்வைக்குத் தப்பி தமிழகம் வந்து தஞ்சம் கேட்டு இருந்தனர். காட்டி கொடுத்தியே நைனா! அவர்கள் கண்ணிரண்டையும் தோண்டி உடைத்து, நாவை அறுத்து வெல்லிக் கடை சிறையில் கொன்று பிணமாக்கிவிட்டனரே நைனா! காட்டிக் கொடுத்தது நீயல்லவோ நைனா!
        கர்நாடகாவில் 91 காவிரிக் கலவரத்தில் பல்லாயிரம் தமிழர்கள் வீடிழந்து உயிரிழந்து இறுதியில் சிலர் உம்மிடம் வந்து முறையிட்டபோது, உங்கள் மருமக்கள் கர்நாடகத்தில் திரைப்பதிவு செய்து கொண்டிருந்ததை எண்ணி, “குரங்குப் புண்ணை நோண்டாதீர்கள்” என்று முறைத்து அவர்களை வெளியே அனுப்பினீரே நைனா! வைகோ தெலுங்கர்தான்! 
        ஆனாலும் நீரும் தெலுங்கர் என்ற விதத்திலே உம்மை தனது நைனாவைவிட மேலாக வைத்திருந்தார். அவர் ஈழம் சென்று எங்கள் தலைவரைத் சந்தித்துவிட்டுத் திரும்பியபோது அதை இந்திய உளவுத்துறைக்குப் போட்டுக் கொடுத்தது “நல்ல நோக்கில்தானா நைனா?” 
       தா. கிருட்டிணன் நடைப்பயிற்சிக்குப் போனபோது போட்டுத் தள்ளினார்களே நைனா? தினகரன் ஊழியர்களைப் போட்டுத் தள்ளினார்களே நைனா? மதுரை லீலாவதியைப் போட்டுத் தள்ளினார்களே நைனா? தாமிரபரணி ஆற்றுக்குள் ஒரு வயது குழந்தை உட்பட 17 தமிழர்களை போட்டுத் தள்ளினீர்களே நைனா! அவர்களெல்லாம் கொசுவா நைனா? 
               இசைப்பிரியா கொலை செய்யப்பட்டபோது, பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டபோது, ரமேசு கொலை செய்யப்பட்டபோது, ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது ஆட்சிக் கட்டிலில் காலாட்டிக் கொண்டுதானே இருந்தீங்க நைனா!
     சாராயத்தைத் தமிழகத்தில் அறிமுகம் செய்து பல்லாயிரக் கணக்கான தமிழச்சிகள் தாலியறுத்திருக்கிறார்களே நைனா! கொலைகாரன் ராசபக்சேவோடு உம் அருமை மகள் கனிமொழி கைகுலுக்கி வந்தாளே நைனா! ராசீவ்காந்திப் படுகொலையில் சிக்கித் தவிக்கும் அப்பாவிகளின் தூக்குத்தண்டனையை ஏன் நிறைவேற்றவில்லை? என்று மத்திய அரசுக்கு உம் மாநில அரசு எத்தனை முறை கடிதம் எழுதி நினைவூட்டியது நைனா? ஏன் நைனா, உன் பிள்ளைகள் என்றால் உனக்கு உசிரு! அழகிரி சொன்ன சொல்லே பலித்துவிடுமோ என்று பதறுகிற பகுத்தறிவுப் பதரே! என் தமிழ் பிள்ளைகளும் சொந்தங்களும் துடிக்கத் துடிக்கத் செத்தபோது வராத பற்றும் பதற்றமும் நாலு சொல்லுக்கே வந்துவிட்டதே! நீ பெற்ற மகனே, “நீ வீழ்ந்து மடியாயோ!” என்று ஏங்கித் தவிக்கும்போது உன்னால் வீழ்ந்த இந்த இனம் எத்துணை சாவங்களோடு நிற்கிறது நைனா?
       ஏழையின் கண்ணீர்! இல்லாததுகளின் ஏக்கம்! ஒடுக்கப்பட்டோரின் மூச்சு! தமிழினத்தின் தவிப்பு! உன்னை மட்டுமல்ல நீ நேசிக்கிற அத்துணையையுமே எரிக்கும்! இல்லாது ஒழிக்கும்!

 தமிழினமும் ஒரு “தீபாவளி” கொண்டாடும் பார்! 

உங்கள் அரிமாவளவன் தமிழர்களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக