

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
புதன், டிசம்பர் 29, 2010
வியாழன், டிசம்பர் 23, 2010
பன்மொழித் திட்டம்? - உள்ளிருந்து கொல்லும் திராவிடம்!
பன்மொழித் திட்டம்? - உள்ளிருந்து கொல்லும் திராவிடம்!

மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம்பெறும் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.'
- தினத்தந்தி 16.12.2010
ஏற்கனவே தமிழகம் பிற மொழியாளர்களின் வேட்டைக்காடாகி இருக்கிறது. அரசியல் - ஆட்சி - அறிவுத் துறைகளில் தெலுங்கர்களும், ஆட்சி - வணிகத் துறைகளில் மலையாளிகளும், வங்கி - வணிகத் துறைகளில் மார்வாடி-குஜராத்திகளும் கோலோச்சி வருவது கண்கூடு.
இந்நிலையில் சிறுபான்மை மொழிகள் என்ற பெயரில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அரபி என்று ஐந்து மொழிகளைக் கற்பிக்கப் பள்ளிகளுக்கான சமச்சீர்க கல்வித் திட்டத்தில் வாரத்திற்கு நான்கு பாடவேளைகள் ஒதுக்கப்படும் என்றும், அவற்றுக்கான மொழிப் பாடங்கள் மட்டுமின்றி, மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்களும் தயாரிக்கப்படும் என்றும், அதற்கான தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் மதிப்பெண் பட்டியலிலும் இடம் பெறும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பிற மொழிப் பாடங்கள் மட்டுமின்றி, மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்கள் என்பதையும் காண்க.
ஏற்கனவே தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் உரிமை என்ற அடிப்படையில் இன்றும் அவரவர் தாய்மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. எல்லைப் பகுதிகள் மட்டுமின்றி பிற மொழியாளர்கள் செறிவாக வாழும் பகுதிகளிலும் பிற மொழி வழிக் கல்வியா?
தமிழகத் தனியார் பள்ளிகளில் பெருமளவு தமிழ்வழிக் கல்வி கைவிடப்பட்டது மட்டுமின்றி, ஆங்கில வழியிலேயே கற்று, ஒரு மொழிப் பாடமாகக் கூட (First/Second Language) தமிழைப் படிக்காமல் முன்னகரும் இழிசூழல் நிலவுகிறது. இவ்வேளையில் இப்படி ஒரு ஆணை.
திராவிட வழித் தோன்றல்களின் அரசியல் ஆதாயத்துக்கான தமிழின முழக்கமும், உள்ளார்ந்த தமிழின ஏய்ப்பும் இன்றைய வெளிப்பாடு மட்டுமல்ல.
"நம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து நிர்வாகம், மக்களின் பேச்சு இவைகளைத தமிழில் நடத்துகிறோம். சமயத்தை, சமய நூல்களை, இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே! இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்?"
"மொழி என்பது ஒருவர் கருத்தை ஒருவர் அறியப் பயன்படுகிறதே தவிர, வேறு எதற்குப் பயன்படுவது? இதைத் தவிர, மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காக - தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டு மொழி என்பதும், முன்னோர் மொழி என்பதும், மொழிப் பற்று என்பதும் ஆகியவைகளெல்லாம் எதற்கு மொழிக்குப் பொருந்துவது?"
"தமிழ்த் தாய் யாரிடமாவது அவர்களது பாலைக் கறந்து எடுத்து இரசாயன பரிசோதனை ஸ்தாபனத்தில் கொடுத்துப் பரீட்சித்துப் பார்த்தால், உடலுக்கு உரம் ஊட்டும் சாதனம் அதில் என்னென்ன இருக்கின்றது என்று கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னால், அப்போது தெரியும் - தாய்ப்பால் யோக்கியதை!"
"எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதைத் தோழர்கள் உணரவேண்டும். மற்றெதற்கு என்றால், ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ் நாட்டு மொழியாக, தமிழன் வீட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவேயாகும்."

(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி2, வே.ஆனைமுத்து, திருச்சி, 1974)
என்று பகுத்தறிவூட்டிய பெரியார் காலத்திலிருந்தே வருவது.
இராஜாஜி தமிழகத்தில் இந்தியைத் திணித்த 1938இல் பெரியார் எதிர்த்தார் என்பதையே இன்று வரை பெரியாரின் இந்தி எதிர்ப்பு என்று கூக்குரலிட்டு வரும் திராவிட இயக்கங்களும், பெரியார் வழித் தமிழ்த் தேசியர்களும், 1965இல் பக்தவச்சலம் இந்தியைத் திணித்த போது அதை எதிர்த்தெழுந்த மாணவர் போராட்டத்தைப் "பார்ப்பனர்களாலும் பத்திரிகைகளாலும் தூண்டிவிடப்பட்ட போராட்டம்" என்று கொச்சைப் படுத்தியதோடு, அதனை அரசு கடுமையாக ஒடுக்கவேண்டும் என்று முன்மொழிந்தவர் பெரியார் என்பதைச் சொல்வது கிடையாது. அப்போது இந்தியைத் திணிக்கும் அரசின் செயலை பெரியார் ஆதரித்ததும், இராஜாஜி எதிர்த்ததும், முதலில் எதிர்த்த தி.மு.கழகம் பின் சற்றே பின்வாங்கியதும் வரலாறு.
நாயக்கர் காலம் தொட்டு தமிழகத்தில் குடியேறி நிலவுடைமையாளர்களாகவும், பாளையக்காரர்களாகவும், வணிகர்களாகவும், புரோகிதர்களாகவும், கோயில் அருச்சகர்களாகவும், பல கைவினைச் சாதியினராகவும் ஆகி தமிழகத்தின் நிரந்தரக் குடிகளாகிவிட்ட தெலுங்கர்களும் கன்னடர்களும் வீட்டில் தத்தம் தாய்மொழியும், வெளிச் சமூக வழக்கில் தமிழும் பேசும் இரு மொழியாளர்களாகவே உள்ளனர். தமிழ் மண்ணில் இவர்களின் சுய இருத்தலுக்கும் நில உடைமைக்கும் அரசியல் ஆதிக்கத்திற்கும் நியாயம் கற்பித்தது திராவிடச் சொல்லாடல். அதனால்தான் எத்தனை பெயரில் திராவிட இயக்கங்கள் புறப்பட்டாலும் தெலுங்கினத்தவரே கொலுவேறுகின்றனர்.
சித்தூர், திருப்பதி, புத்தூரை தெலுங்கரிடமும், கோலார், பெங்களூரு, கொள்ளேகாலைக் கன்னடரிடமும், பாலக்காடு, தேவிகுளம், பீர்மேட்டை மலையாளிகளிடமும் இழந்ததைத் தமிழர்கள் மறந்து விட்டனர். தமிழகத்தின் உட்பகுதியையும் இழக்க முடிவு செய்கிறார் முதல்வர்.
தமிழகம் முழுக்க வாழும் பிற மொழியாளர்களுக்கும் அவர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் அவரவர் தாய்மொழியைப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் பள்ளிகளிலே கொண்டு வருவது என்பது கொள்ளிக்கட்டையை எடுத்து நம் அடிமடியில் செருகிக் கொள்வதற்கு ஒப்பானது. மாணவர் நடுவில் அவ்வளவாய் இல்லாத மொழி வழி இன வேறுபாடு வடிவு கொள்ளும். பள்ளிகளுக்குள்ளும் பாளையப்பட்டுகள் உருவாகும்.
தமிழ்ப் புலவர் பட்டயம் பெற்ற பலரும் வேலை கிடைக்காமல் அவதியுறுகின்றனர். பள்ளிகளில் இடைநிலைத் தமிழாசிரியர்களே பல இடங்களில் மேனிலை வகுப்புகளுக்கும் தமிழ்ப் பாடம் எடுக்கும் அளவிற்கு மேனிலைத் தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேனிலை வகுப்புகளில் தமிழ்மொழிப் பாடமே வாரத்தில் நான்கு பாடவேளைகள் மட்டுமே நடத்தப்படுகிறது. அதே அளவில் பிற மொழிப் பாடமும் கற்பிக்கப்படப் போகிறது!
இன்று பொதுப் பாடத் திட்டத்தில் ஐந்து பிற மொழிகள் கற்பிக்கப்படுமெனச் சொல்கிறார் முதல்வர். நாளை, தமிழகத்தில் பெருமளவில் வசிக்கும் மார்வாடி-குஜராத்தியரும் பிற வட இந்தியரும் குஜராத்தியையும் இந்தியையும் பொதுப் பாடத் திட்டத்தில் கொண்டு வரக் கோருவர். மராட்டியர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் குடியேறி, தஞ்சைப் பகுதியில் இன்றும் வாழும் (மராட்டி பிராமணர், போன்ஸ்லே, கெய்க்வாட் போன்ற) மராட்டிய இனத்தவர் மராட்டியைக் கொண்டுவரக் கோருவர். தக்காணியர் மற்றும் பல முஸ்லீம் இனத்தவரின் தாய்மொழியான் உருதுவை மட்டுமின்றி, தமிழகத்தில் பேசப்படாத அவர்களது புனித மொழியான அரபியையும் பொதுப் பாடத் திட்டத்தில் கற்பிக்கப்படும் என்கிறார் முதல்வர். நாளை இந்து மடாதிபதிகளும், இந்துத்துவ வாதிகளும் இதே அடிப்படையில் சமஸ்கிருதத்தையும் கொண்டு வரக் கோருவர். இது எங்கே போய் முடியும்?
தமிழர்களிடம் இழந்து வருகிற தம் செல்வாக்கை, பிற மொழியாளர்களைத் திருப்தி செய்வதன் ஈடுகட்ட முயலும் முதல்வரின் வாக்கு வங்கி அரசியலா இது?
மும்மொழித் திட்டத்தையே எதிர்த்துப் போராடியது தமிழகம். பன்மொழித் திட்டத்துக்கு வழிசொல்கிறதா திராவிடம்?
நன்றி : yuvabhaarathi.blogspot.com
புதன், டிசம்பர் 22, 2010
தமிழக அரசின் அன்னிய மொழித் திணிப்பு ஆணையை எதிர்த்து - நெல்லையில் தமிழர்களம் போராட்டம்




செய்தி : ஊடகபிரிவு, தமிழர் களம் , தமிழர்நாடு.
அந்நிய மொழி திணிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசின் அந்நிய மொழித் திணிப்பு ஆணையை கண்டித்து தமிழ் சமூகங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்விற்கு வழக்குரைஞர் திரு .இரா.சீவானந்தம் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது , சிறுபான்மையினர் மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் , உருது ஆகிய மொழிகள் பள்ளிகளில் இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் கற்பிக்கப்படும் என்பது தமிழ் மொழி வளர்சிக்கு விரோதமானது மட்டுமல்ல நிரந்தரமாக மாற்று மொழியினருக்கு வேலை வாய்ப்பை இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தி கருணாநிதியின் திராவிட அரசு ஏற்படுத்தி தருகிறது என்றும் . இனிமேல் ஏதோ ஒரு சூழலில் திராவிடர்களின் மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது போன்றவற்றை தமிழர்களும் கட்டாயமாக படிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளிவிடும். அது மட்டுமல்ல தமிழர்களின் வேலை வாய்ப்பு கேள்விக் குறியாகிவிடும். தமிழே தெரியாத ஒருவன் தமிழ் நாட்டில் படித்து பட்டங்கள் பெற்று இங்கேயே வேலை வாய்ப்பும் பெற்று நிரந்தரமாக வாழ வழி வகுக்கும் இந்த ஊழல் கருணாநிதி அரசு மற்ற கேரளா, கர்நாடக , ஆந்திர மாநிலங்களில் சிறு,பெரும்பான்மையினராக வாழும் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி தர முடியுமா? என்றும் அங்கே தமிழ் வழி பள்ளிகளை நிறுவ முடியுமா? என்றும் கேள்விகளை தொடுத்தார்! அடுத்து பேசிய திரு. மேகநாதன் அவர்கள் , தமிழர் தலைவர் என்று கூறிகொள்ளும் கருணாநிதி அரசு தமிழை ஆட்சிமொழியாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், இங்கே மலையாளமும் , தெலுங்கும் ,கன்னடமும் உருதும் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கினால் தமிழர்களின் நிலை என்னாவது ? ஏற்கனவே பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன . வாழ்க தமிழ் என்று கூறும் கருணாநிதி தாய் தமிழ் பாடத்திட்டங்களை கட்டாயமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் , அலுவகங்களில் இன்னமும் ஆங்கிலம் தான் கோலோச்சுகிறது! என்றும் இந்த சிறுபான்மையினர் மொழிகள் கற்பதனால் யாருக்கும் எவ்வித பலனும் இல்லை என்றும் மாணவர்களுக்கு மேலும் கல்விசுமை கூடுமே தவிர வேறில்லை என்றும் பேசினார் . அடுத்து பேசிய திருவள்ளுவர் தமிழ் சங்கத்தின் பொறுப்பாளர் திரு. ரவிச்சந்திரன், தமிழ் நாட்டில் திராவிடம் தனது இறுதிகட்ட சூழ்ச்சி வேலைகளை செய்கிறது . இந்த ஆணையானது ரத்து செய்யப்படவேண்டிய ஒன்றும் . தமிழ் வழி கல்வியினை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் எனவும் பேசினார். அடுத்ததாக தமிழர் களத்தின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. தமிழ் முதல்வன் பேசுகையில் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கான தமிழர் ஆட்சி வரும் வரை திராவிட அரசியல் வந்தேறிகள் வாழவும் ஆளவும் தங்களது சொந்த நலன்களுக்காக தமிழர் அழிவதை பற்றி கவலை கொள்ள மாட்டார்கள் என்றும், இந்த நிலை மாற தமிழர்கள் தங்கள் சாதி , மதம், கடந்து இன பற்று கொண்டு ஒன்று திரண்டு போராட முன் வர வேண்டும் .என்றும் வரும் தேர்தலில் திராவிட அரசியலுக்கு முற்றுபுள்ளி வைப்போம் எனவும் பேசினார். இறுதியாக கருவை முருகு நன்றி கூறி கண்டன முழக்கமிடபட்டு ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது. கூட்டத்தில் தமிழர் முன்னணியை சேர்ந்த திரு. தமிழ் சேரன் , திரு. முருகேசன், செந்தில் உள்ளிட்ட தமிழ் பற்றாளர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்பாட்டத்தை கரூர் மாவட்ட தமிழர் களம் ஏற்பாடு செய்திருந்தது.




சனி, டிசம்பர் 18, 2010
அந்நிய மொழியை திணிக்காதே !
- தமிழர் களம்
வெள்ளி, டிசம்பர் 17, 2010
“நாம் தமிழர் இயக்கம்” திராவிடத்தின் கடைசிச் சாவடி!
சயாம் - பர்மா மரண ரயில் பாதை

ஜப்பானின் வல்லரசிய வெறிக்கு பலியான 1,50,000 தமிழர்களின் துயர வரலாற்றை அறிவோம் . ''சயாம் - பர்மா மரண ரயில் பாதை '' மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு என்ற சமூக வரலாற்று ஆய்வு நூல் கடந்த 2009 ஆம் ஆண்டு சீ.அருண் என்பவரால் எழுதப்பட்டு வெளிவந்திருகிறது . அந்த நூலை தமிழர்கள் பலர் படித்திருக்க மாட்டார்கள் . அப்படியே படித்திருந்தாலும் அதை பற்றி இப்போது பேசி என்ன பயன் என்றும் இருப்பார்கள் . அந்த அளவுக்கு அடிமையாக இருப்பதிலே அதிக சுகம் கண்ட இனம் தமிழினம் . படித்து விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்கள் அந்த நூலை மற்றவர்களும் வாங்கி படிக்க செய்யலாம் . இந்தியா என்ற ஒற்றை பார்வை இன்று மட்டுமல்ல அன்றும் நம்மை அழிய செய்திருக்கிறது. அந்த அழிவையும் மறைத்துவிட்டது, ஏனனில் நாம் தமிழர்கள் என்பதால் மட்டுமே ! நேதாஜி படையணியில் வீரம் செறிந்த மகளிரும் , ஆண்களும் தமிழர்களே அதிகமாக இருந்துள்ளனர் , ஆனால் ஏனோ இறந்துபோன தமிழர்களின் சோக வரலாற்றை இருட்டடிப்பு செய்துவிட்டார் , காணாமலும் போய் விட்டார் . இப்போது ஈழத்தில் நடப்பது இன படுகொலை . தமிழர்கள் கொல்லபடுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல நேச நாடுகளுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சொத்தை காரணத்துக்காக ஆயுத உதவி செய்தது. இங்கிருக்கும் மீனவர்கள் இறந்தபோதும் மௌனம் காக்கிறது . அன்றும் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இந்தியர்கள் மௌனமாய் இருந்திருகிறார்கள் . ஏனெனில் நம் இனம் வேறு அவர்களின் இனம் வேறு என்பதில் அவர்கள் தெளிவாய் இருக்கிறார்கள் . நாம் மட்டுமே இந்தியராக கற்பிக்கப்பட்டோம்!! நம்மை அடிமைகளாக வைத்திருகின்றனர்.
ஆனால் அமெரிக்கர்கள் பலி தீர்துகொண்டனர். ஜப்பான் மீது அணுகுண்டு வீசினர் . இந்த நூலில் ஜப்பானியர்களின் வல்லரசு வெறியை படிக்கையில் அந்த தாக்குதல் சரியே என்றும் எண்ணத்தோன்றுகிறது. இப்போதும் ஜப்பான் இலங்கையில் தமிழர்கள் அழிய ஆயுத உதவி செய்வது மத நோக்கில்தான் என்பதை நமக்கு இந்த நூல் புரிய வைக்கிறது . இந்தியாவை விட்டு எப்போதோ விலகி இருக்க வேண்டிய தமிழினம் இன்றும் இந்திய தேசியம் பேசிகொண்டிருப்பது வெட்க கேடானது .
தமிழர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டிய நூல் . இன பற்று கொள்ளாதவரை எந்த மாயைகளில் இருந்தும் தமிழினம் விடுதலை காண்பது அரிது .
நூல் கிடைக்குமிடம் : தமிழோசை பதிப்பகம் ,
21/8 , கிருஷ்ணா நகர்,
மணியகாரம் பாளையம் சாலை ,
கணபதி , கோவை . 641012.
பேச ; 9788459063
விலை ; ரூ .130/-
''தேவை கொள்ளணை'' - அரிமா


திராவிடப் பொறுக்கிகளும் சிறுக்கிகளும் கடந்த 60 ஆண்டு காலமாக தமிழர் நாட்டை ஆண்டு இந்த மண்ணையும் மக்களையும் வந்தேறிகளின் வேட்டைக்காடாக ஆக்கிவிட்டார்கள்! மண்ணையும் வளங்களையும் ஆற்றுநீரையும் அடுத்தவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு தமிழினத்தையே இருளில் மூழ்கடித்துவிட்டனர்! “இனி என்ன செய்வது?” என்று இப்போது தமிழினம் விழிபிதுங்கிக் கிடக்கிறது! ஈழத் தமிழர்கள் 3 லட்சம் பேரைப் பலிகொடுத்தும் ஈழத்திற்கு விடிவு இல்லை! தமிழ்நாட்டுத் தமிழராகிய நாமோ மெது நஞ்சு ஊட்டப்பட்டு முடங்கிக் கிடக்கிறோம். காவிரி இல்லை! கடனாறு இல்லை! கருப்பாநதி இல்லை! பொருநை இல்லை! பெரியாறு இல்லை! பாலாறு இல்லை! அங்கே எஞ்சிக் கிடந்த மணலும் இல்லை! 534 மீனவர்கள் செத்தும் தீர்வு இல்லை! கர்நாடகத்தில் இருக்கும் பெங்களூரு குடிநீர்த் திட்டமும் தமிழ்நாட்டின் ஒக்கனேக்கல் திட்டமும் ஒரு ஒப்பந்தத்தின் இரு கூறுகள்! ஆனால் முன்னது நடந்தது! பின்னது முடங்கியது!! வந்தேறிகள் நாட்டை பிடித்து வைத்துக் கொண்டு வளங்களை அறுவடை செய்து அவனவன் நாட்டிற்கும் வீட்டிற்கும் சேர்க்கிறான்! ஆனால், உனக்கு அவன் சாராயக்கடை நடத்துகிறான்! உனக்கு சன் டிவி, கலைஞர் டிவி, செயா டிவி நடத்துகிறான்! புளுத்த அரிசியைக் கொடுத்துவிட்டு மற்றபொருட்களின் விலைவாசிகளை விண்ணைத் தொட வைத்திருக்கிறான்! சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பேரில் வளமான தமிழ்நிலங்களை மேலும் பல வந்தேறி நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறான்! மழைக் காலத்திலும் மின்வெட்டு! உன்னைச் சாதிக்குள் குறுக்கி இட ஒதுக்கீடு என்று பிச்சைக்கார அரசியலுக்குள் தள்ளுகிறான்! மண்ணுரிமை, ஆட்சியுரிமை, நாட்டுரிமை பற்றிப் பேசாதே என்கிறான்!
இனி என்ன செய்வது? இப்படிப் புலம்பிப் புலம்பி நொந்து நூலாவதில் பயனில்லை! திராவிடத்தையும் திராவிடச் சாயலில் வரும் அத்தனை இயக்கங்களையும் கட்சிகளையும் முற்றாக முழுதாகப் புறந்தள்ளுவோம்! ஆக்கபூர்வச் செயல்களில் இறங்குவோம்! தேவைப்படும்போது அதிரடியாயும் களம் இறங்குவோம்!
“கொளத்தூர் கொள்ளணை” என்று இங்கே நாங்கள் முன்மொழிந்திருப்பது அழுத்தமான ஓர் அடியெடுப்பு. ஒவ்வொரு களத்திலும் இனி இதுபோன்றவை முளைக்கும், வெடிக்கும்! ஆழப் படியுங்கள்! படித்ததைப் பரப்புங்கள்! நாடு நம்முடையாது! காடே பற்றி எரியும்போது மரங்கள் மட்டும் என்று சிரித்துக் கொண்டா இருக்கும்! நாடே அழியும்போது தனி ஆட்களும் குடும்பங்களும் தப்பித்துவிடும் என்று கனா காணாதீர்கள்! பம்மாதே, பதுங்காதே, படுக்காதே, சோர்வுறாதே, சோரம்போய்விடாதே! எழு, விழி, பரப்பு! எட்டிப்பார்.... விடுதலை அண்மித்திருக்கிறது!
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!
கொளத்தூர் கொள்ளணை வந்ததென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!
காவிரி மீண்டும் சலசலக்கும்!
நாடு மீண்டும் கலகலக்கும்!
- அரிமாவளவன்
தமிழர் களம் .
நூலின் பட வடிவ கோப்பினை பெற கீழ்க்கண்ட இணையத்தை பார்க்கவும் .
நன்றி :
தமிழ்க்கனல், தமிழம் வலை - 9788552061,
http://www.thamizham.நெட்
http://www.thamizham.net - naal oru nool -
தமிழம் வலையின் நாள் ஒரு நூல் பக்கத்தில்
வலையேற்றிய நாள் 17 - 12 - 2010,
வரிசை எண் 1878 இல்...
வியாழன், டிசம்பர் 16, 2010
இலவசத்துக்கு ஒரு சவுக்கடி !
மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு
வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத்
திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி
கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண
அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து
கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர்
வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற
விவசாயி மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப்
பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண
அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ
கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.
அதில்
‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?
துறைகள்
எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை
வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில்
அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத்
தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும்
பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக்
கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம்.
இலவசம்
என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம்
மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே
சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம்.
எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து
விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர்
பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு
நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த
டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும்,
மரியாதையும், அன்பும் உள்ளது.
எனவே,இந்த டி.வி.யை அவருக்கே
அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர்
இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும்
அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா
வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ண
அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள்.
என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும்
பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.
இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.
“நான்
ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு
விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி
வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை,
நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை
நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர
மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை
தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொ
கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க.
தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப
அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88
துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும்,
வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா
சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான்
டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.
அந்தக்
கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518
மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக
நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே
கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில்
அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும்
இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே
கிடைக்கவில்லை...
--
சிவகுமார். மு
புதன், டிசம்பர் 15, 2010
திராவிடச் சூது

ஒண்ட வந்த பிடாரி ஊரில் உள்ளவர்களையெல்லாம் விரட்டிய கதை இங்கே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆரியக் கூத்தை அழிப்பதாக கூறி திராவிட அசிங்கங்களை சுமக்கவைத்த பெரியாரின் பிறங்கடைகள் நமக்கான உரிமைகளை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை தமிழ் தேசிய வாதிகளுக்கு இப்போதும் இருக்கிறது . இதோ இன்று நம் மொழி மீது கை வைத்து விட்டான் கருணா . சிறுபான்மையினரின் மொழியை இங்கே கற்றுத்தர வேண்டியதின் அவசியம் என்ன ? அவர்களின் மொழியை ஆட்சி மொழியாக்க போகிறானா இந்த கருணா? அங்கே சிங்களவன் செய்த வேலையை இங்கே இப்போதுதான் துவங்கியிருகிறான் .ஆம் மொழியை அழித்தால் இனத்தை அழித்துவிடலாம் . தமிழ் மொழிக்கு சாவு மணி அடித்தாகிவிட்டது ! ஏற்கனவே நாம் நமது தாய் மொழியை முழுமையாக கற்க விரும்புவதில்லை . அதற்கு தகுந்தாற் போல் பள்ளிகளிலும் தமிழாசிரியர்கள் குறைவு . ஆங்கில மோகம் நம்மை அந்நியபடுத்தி விட்டது . இங்கே பிழைக்க வந்த வந்தேறிகளின் கொச்சை மொழிகளான கன்னடமும் , மலையாளமும் , தெலுங்கும், உருதும், பிறமொழிகளும் இங்கே கற்பிக்க படுமென அறிவித்ததின் நோக்கமென்ன ? இங்கேதான் திராவிடம் தன் வேலையை மிக சரியாக செய்துள்ளது. நம்மை இரண்டாம்தரமாக்க அது துணிந்து விட்டது . நம்மை ஈழச் சிக்கலை மட்டும் பேசவைத்துவிட்டு மண்பரிப்பு உள்ளிட்ட நமது உரிமைகளை களவாடும் வேலைகளை தெளிவாக செய்கிறது , எப்போதும் போல தமிழ் தேசிய வாதிகள் இப்போதும் திராவிட சூழ்சிகளை மறைக்க பார்கின்றனர் . தமிழர்களை ஒன்றிணைக்க இவர்களால் ஒருபோதும் முடியாது. இங்கே இருக்கும் அரசியல் சிக்கல்களுக்கு இவர்களால் தீர்வு காணவும் முடியாது . ஈழத்திற்காக குரல் கொடுப்பது மட்டும் தமிழ் தேசிய வாதிகளின் வேலையில்லை . இனச் சிக்கல் ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் இருக்கிறது. நமது வீட்டு தலைவனாக நாம்தான் இருக்க வேண்டுமே தவிர பக்கத்துக்கு வீட்டுக்காரன் அல்ல . திராவிடன் அயலான் . அவனை தலைமையாக கொண்டு தமிழனால் வாழமுடியாது ஆளவும் முடியாது . அடங்க மறுப்பவர்கள் இப்போது ஏன் முடங்கி கிடக்கிறார்கள் ? தமிழ்தேசிய வாதிகள் திராவிட சூழ்சிகளை , திராவிடர்கள் யார் என்பதையும் அம்பலப் படுத்தவில்லை ஏன் ? பெரியாரின் பேரன்கள் தெலுங்கர்களையும் , மலையாளிகளையும் , கன்னடர்களையும் ஒன்று சேர்த்து தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தர முடியுமா? சிந்திப்பீர் தமிழர்களே . தமிழ் நாடு தமிழர்கே ! இங்கே தமிழ் மொழியில் தான் கற்க வேண்டும் . அனைத்து பாடங்களையும் தமிழ் வழியில் கற்க நடவடிக்கை தேவை . இனம் காக்க மொழி காப்போம் ! இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம் !!
- கருவை முருகு .
"நான்தமிழன்.திராவிடன்அல்ல.
"தமிழா,
பள்ளராய், பறையராய்,
நாடாராய், தேவராய்,
ராவுத்தராய்,
வன்னியராய், பரவராய்,
மல்லராய், குயவராய்,
பிள்ளையாய், கவுண்டராய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழராய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
"தமிழ் சாதிகள், தமிழ் இனமாய் ஓன்று சேர்வோம். தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை, ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது. திராவிடம் தான் தமிழனின் முதல்
ஞாயிறு, டிசம்பர் 12, 2010
தாய்த் தமிழ்ச் சகோதரிகளுக்கு ......
எல்லாம் பெண்தான் என்று எப்போதும் பெருமை பேசும் ஆவேசக் கூட்டம் எங்கே போனது?
உலகில் எந்த மூலையில் பிறந்தாலும் பெண் எப்போதும் இரண்டாம்தரம் தான் என்பதை மெய்பிக்க சென்று விட்டனரோ? கண்ணீரும் செந்நீரும் சிந்தி ஒரு இனம் அழிந்து கொண்டிருகிறது . தாய்த் தமிழ் பெண்களே நம் ஈழத்து சகோதரிகள் அனைத்தையும் இழந்து அல்லலுற்றது போதாது என்று அவர்களின் பிணத்தையும் பாலியல் வன்மம் செய்யும் பிறப்பறியா பொறுக்கிகளின் சொல்லொணாக் கொடுமைகளுக்கு எல்லை இல்லை .
இங்கே இன்னமும் தொலைகாட்சியில் மானாட மயிலாட , மஸ்தானா மஸ்தானா தொடர்களில் மூழ்கியும் வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று ஏங்கி அலைகிறது ஒரு கூட்டம் , அறிவியல் தொழில் நுட்ப உலகில் நாங்களும் ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கிறோம் , டாலரில் புரள்கிறோம் என்கிறது ஒரு கூட்டம் . பெண்கள் தன்னிகரில்லா முன்னேற்றம் அடைந்து வந்துள்ளனர். உண்மைதான் , மொத்தக் கணக்கில் அவர்கள் ஒரு சிலரே . இன்னமும் அறியாமையில் உள்ளவர்கள் பலர். முன்பு விறகு அடுப்பில் சோறு ஆக்கியவர்கள் இப்போது நவீன பொருட்கள் பாஸ்ட் புடுடன் வாழ்கின்றனர் . தெற்கேயிருந்து மேற்கே போய்விட்டனர் நம் பெண்கள் . அறிவியல் ஊடகங்களில் ஆன்மீக வழிபாடும் பரிகாரமும் தேடிக்கொண்டிருகின்றனர் . சமுக அவலங்களை எப்படி களைந்தெடுக்க போகின்றனர் . புரட்சி பேசிய பெண்களும் கணினித் துறையில் அதிக அளவில் பணி புரியும் பெண்கள் உள்ள இந்த தமிழ் நாட்டில் தான் மிக அதிகமான விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன . இவர்கள் தான் அறிவியல் கண்ட புதுமை பெண்கள்.
''அம்மா'' ''மம்மி'' ஆகி மேற்குலக வாழ்வில் தன்னை எப்படியாவது கரைத்துக் கொள்ள துணிந்துவிட்டதால் தனது சகோதரியின் பிணம் கூட பாலியில் வன்மத்துக்கு உள்ளாவதை சாதாரணமாக சகித்துக்கொண்டு இருக்கிறாள் போல . பெண்கள் களம் காணாதவரை இன்னமும் பல சகோதரிகளின் பிணங்களையும் ,சின்னஞ் சிறு பெண் பிள்ளைகளையும் வன்புணர்ச்சி செய்து தனது ஆண்மையை நிலை நாட்டிக் கொண்டிருப்பார்கள் சிங்கள வெறி காடையர்கள். அவர்களுக்கு ஆயுத உதவி , பண உதவி செய்து தனது படை பலத்தையும் ஆயுத பலத்தையும் நிறுவி 2020 இல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் . ஒரு இனத்தை அழிப்பதில் அத்தனை பேராசை சிங்களவனுக்கு . அதை கை கட்டி வேடிக்கை பார்ப்பதில் நமது பங்கும் உள்ளது என்பதை தமிழ் பெண்களே உணர்ந்து கொள்ளுங்கள் .
மாணவர்களும் பெண்களும் புரட்சியை கையில் எடுக்காதவரை, வரலாற்றின் உண்மைகளை புரிந்துகொள்ளதவரை , நமது சகோதர சகோதரிகளின் அழிவை பார்த்துகொண்டிருக்க மட்டும்தான் முடியும் . அந்த நிலை நமக்கு வர வெகு நாட்கள் இல்லை.
மேற்குலகை நம்பி சாம்பலில் கரைய வேண்டாம் ! தமிழ் பெண்களே சிந்திப்பர் களம் காண்பீர் !!
( இப்போது இதை வெளியிட வேண்டிய கட்டாயத்தை காலம் ஏற்படுத்தியுள்ளது . எப்படியெனில் சமீபத்தில் கரூர் வருகை தந்த மு. க. ஸ்டாலினை வரவேற்க மகளிர் தன் உதவிக் குழுக்களை சேர்ந்த பலநூற்றுகனக்கான பெண்கள் ஒரு சேலைக்காகவும் , சில நூறு பணத்திற்காகவும் நீண்ட வரிசையில் நின்றது ஏதோ அறியாமையில் நிகழ்ந்ததா? அல்ல தங்களுக்கான சலுகைகளை பெற எதை வேண்டுமானாலும் செய்ய துணிந்துவிட்டனரா? எந்த அரசியல் கட்சியானாலும் பெண்களின் நிலை இதுதான் . ஏன் மகளிர் அமைப்புகள் , மகளிர் தன் உதவி குழுக்களுக்கு இது போன்ற இழி செயல்களில் பங்கேற்க கூடாது என்று சொல்லகூடாதா? அரசியல் கட்சிகளுக்கு அடிவருடியாய் போக வேண்டிய கட்டாயம்தான் என்ன? அங்கே களம் நின்று சமர் புரியும் பெண்கள் எங்கே. இங்கே பணத்திற்காக வரிசையில் நிற்கும் பெண்கள் எங்கே . இந்த இழிநிலை மாற வேண்டாமா என்பதுதான் தொக்கி நிற்கும் கேள்வி . சோற்றுக்காகவும் , பணத்திற்காகவும் கையேந்த வைத்த இந்த தரங்கெட்ட தமிழர் அல்லாதவர்களின் அரசியல் தலைமையை தூக்கி எறிய வேண்டாமா? வரும் சட்ட மன்ற தேர்தலில் தமிழரையே ஆதரிப்போம் , தமிழரையே ஆளவைப்போம். தெலுங்கு மலையாள கன்னடர் போன்ற தமிழர் அல்லாதவர்கள் இங்கே நம்மை ஆளக் கூடாது அதற்காக களம் காணுங்கள் பெண்களே ! வரலாற்றை புரட்டுவோம் ! தமிழ்நாடு தமிழர்கே !! இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம் !!)
- கருவை முருகு .
வெள்ளி, டிசம்பர் 10, 2010
சீமானுக்கு சிறை கற்றுத்தந்த பாடம் என்ன ?

செந்தமிழன் சீமான் விடுதலை நமக்கு மகிழ்வான நிகழ்வுதான் . ஆயினும் அவருக்கு சிறை கற்பித்த படம் என்ன ? என்பதும் இனி அவரின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதும் தொக்கி நிற்கும் கேள்விகள் . ஆம் திராவிடம் நினைத்தால் இங்கே எதை வேண்டுமானாலும் சாதிக்கும் அதற்கும் இங்குள்ள அறிவார்ந்த தமிழர்கள் சிலர் துணைபோவர். சீமான் தமிழர் என்பதற்காகவே சிறையில் தள்ளியது குள்ளநரி கூட்டம் . ஆயினும் அவர் நம்பியிருப்பது இன்னமும் திராவிட எச்சங்களைதான். இது ஏதோ அவர்மீது குற்றம் சுமத்துவதாக தெரியலாம் . அவர் மீது களங்கம் கற்பிப்பது நமக்கு வேலையில்லை . அவரின் இயக்கத்தில் பெரும்பாலான பொறுப்பாளர்கள் தெலுங்கர்களாகவும் , மாற்று இனத்தவராகவும் இருப்பது தான் நம்மை நெருடச் செய்கிறது. இவ்வளவு காலம் கழித்து தமிழர்களுக்கு குரல் கொடுக்க நாம் தமிழர் இயக்கம் துவங்கப்பட்டது அதிலும் தமிழர் அல்லாதவரே பொறுப்புக்கு வரும் போது அது எப்படி தமிழருக்கு சேவை செய்யும் இயக்கமாக இருக்கமுடியும் என்பது தான் கேள்வி . அதற்கு பதில் அவர் ''நாம் திராவிடர் '' என்று தனது இயக்கத்துக்கு பெயர் வைத்துவிடலாமே! இது குறித்து அவர் சிந்திப்பரானால் ..... எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே ! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!! என்ற பாவேந்தரின் பாடல் வரிகளை மீண்டும் ஒரு முறை சிந்திக்கட்டும் .
மா. முருகானந்தம் , கருவூர் .
வியாழன், டிசம்பர் 09, 2010
இந்தியமா? திராவிடமா? - கார்வண்ணன்
தி.பி.2032 மீனம் திங்கள் வேர்கள் இதழில் வந்த கட்டுரை இது.
தமிழகத்தில் இரண்டு பொய்த் தேசியமாயைகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. ஒன்று நாம் எல்லோரும் இந்தியர், நம்நாடு இந்தியா என்றும், இதற்கு மாறாக மற்றொன்று நாம் எல்லோரும் திராவிடர், நம்நாடு திராவிட நாடு என்பதாகும்.
உண்மையில் நாம் இந்தியரா? அல்லது திராவிடரா? இது புலியை நாய் என்றும் அதற்கு மாறாக பன்றி என்றும் வாதிடுவதற்கும் கீழானதாகும். முதலில் ஒரு தேசிய இனம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்பில் ஒரு பொதுவான பண்பாடு, மற்றும் பொருளாதார வாழ்வுடன் ஒரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு கூடி வாழும் குமுகம் தேசிய இனம் என்று வரையறுக்கப்படுகிறது. ஒரு தேசியம் ஒரு மொழியின் அடிப்படையிலேயே அமைகிறது.
இதில் எந்தப் பண்புகளும் இன்றி போலித் தேசியமும், (இந்தியா) போலித் தேசிய இனக் (திராவிட இனம்) கோட்பாடும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இதன் உள் நோக்கம் தான் என்ன?
இந்திய தேசியம் என்பது வடநாட்டு பிராமண, மார்வாடி, சிந்தி இனத்தவர்களின் சுரண்டலுக்காகவும், திராவிட இனக் கோட்பாடு என்பது தெலுங்கு, கன்னட, மலையாளிகளின் சுரண்டலுக்காகவும், மண்பறிப்பிற்காகவும், கட்டியமைக்கப்பட்டுள்ளது.
இதில் சுரண்டலை விட மண்பறிப்பானது மிகக் கேடானது. இன்று இந்திய தேசியத்தை விட திராவிட இனக் கோட்பாடு என்பது மிக மிகக் கேடு விளைவிப்பது ஆகும். தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும் நம்மைச் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் மண்பறிப்பு வேலையில் விரைவாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் கேட்டை உணராத அல்லது உணர்ந்தும் தம் சொந்த நலனுக்காக, திராவிட கோட்பாட்டை ஒரு சில தமிழ் தேசியத் தலைவர்கள் ஆதரிப்பது தமிழர்களுக்கு மிகப்பெரிய அழிவைத் தருவதாகும். இவ்விரண்டு அமைப்பிலும் தமிழர்கள் இல்லையா? என்றால் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களின் நலனுக்காக பால் கொடுத்த தாயின் மார்பையே அறுத்து விற்கும் கருங்காலிகளாகவே இருக்கிறார்கள்.
இந்தியத் தேசியமும், திராவிடத் தேசியமும் தமிழனின் மண்ணைப் பறித்து, அவன் குருதியை உறிஞ்சுகிறது. இதற்காக இல்லாத போலி ஆரிய திராவிடப் போரை உண்டாக்கித் தமிழரை இரண்டுபடுத்தியுள்ளது.
வங்கக் கடலில் சிங்கள நாய்ப் படையினரால் கொல்லப்படும் தமிழர்களையோ, இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாயிலும் கீழாக நடத்தப்படும் தமிழர்களையோ, மும்பாயில் சிவசேனையால் தாக்கப்பட்ட தமிழர்களையோ இந்திய தேசியம் பாதுகாக்கவில்லை. கருநாடகத்திலும், கேரளாவிலும், ஆந்திரத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டும், அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டும், துரத்தியடிக்கப்பட்ட போதும் எந்தத் திராவிடரும், தமிழர்களை மதித்து அவர்களை பாதுகாக்கவில்லை. மாறாக அங்கெல்லாம் தமிழன் பாண்டிக்காரன், கொங்கன் என்று இழிவு படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகிறான்.
இந்தியம் நம் புரத்தே இருந்து தாக்குகின்ற எதிரி என்றால் திராவிடம் நம் அகத்தே இருந்து நம்மை அழிக்கும் புற்று நோயாகும்.
இன்று இந்தியா என்பது மாயை என்று தமிழர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் திராவிடமாயை என்பதில்தான் (மக்கள் அல்ல) தலைவர்கள் தடுமாறுகின்றனர். இவர்கள் அறியாமையில் தடுமாறுகின்றனரா? அல்லது செஞ்சோற்றுக்கடனா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? திராவிடத் தலைவர்களின் கயமைத்தனம் தமிழரின் வரலாற்றில் மிகப்பெரிய வடுவுடன் நீண்டு கிடக்கிறது. நீதிக்கட்சியினரின் ஆந்திராவிற்கு ஆதரவான கயமைத்தனம், ஈ.வே.ராவின் தமிழுக்கும், தமிழருக்கும் எதிரான இரண்டகம் நிறைந்த துடுக்குத்தனமான கீழ்த்தரமான செயல்கள், அண்ணாவின் ஏமாற்று, கருணாநிதியின் இரண்டகம், மா.கோ.ராவின் மலையாளப்பற்று, வை.கோ, கிருட்டிண சாமி, இராசேந்திரன், இராமகிருட்டிணரின் தெலுங்குப்பற்று என்று திராவிட இயக்கங்களின் இரண்டக வரலாறு இன்றளவும் நம்மைத் தொடர்ந்து வருகிறது.
ஈ.வே.ரா பார்ப்பான் எதிரி என்று சொல்லிக் கொண்டே இராசாசியுடன் கூடிக் குலாவினார். அவரின் ஆலோசனைப்படி நடந்தார்.
அண்ணா டி.வி.ஸ். அய்யங்காரின் நன்கொடையைப் பெற்று அவருக்குத் துணையாக இருந்தார்.
கருணாநிதியோ சாவி, குகன், ராம் போன்றவர்களுடன் தொழிலிலும், குடும்பத்திலும் நட்பு கொண்டுள்ளார்.
மா.கோ.ரா வடுக பிராமணப் பெண்ணையே தனது பிறங்கடையாக்கினார். புரட்சி புழுதியோ சங்கரமடத்தில் ஆசி பெற்று வடநாட்டுப் பிராமணருக்கு பாதக்கழுவல் நடத்துகிறார். திராவிட மடத்து பூசாரி வீரமணியோ செயலிலாதாவின் காலைக்கழுவிக் குடிப்பதே தனது கடமை என்று அல்லும் பகலும் அம்மையாரின் காலில் தவம் கிடக்கிறார்.
இப்படித் திராவிடத் தலைவர்களும், அவர்களது அடிவருடிகளும் பிராமணருடன் கூடிக் குலாவலாம், கேட்டால் அது ஆரிய திராவிடப் போர் உத்தியாம்! என்னடா உங்கள் போர் உத்தி? ஆனால் தமிழர்கள், தமிழ் தேசியவாதிகள் தமிழ்ப் பார்ப்பனர்களுடன் பேசினாலோ அல்லது பழகினாலோ அவர்கள் இரண்டர்களாம்!
தமிழனைப் பழித்தவன், தமிழ் மொழியைப் பழித்தவன், கன்னடரான பெரியார் தமிழருக்குத் தந்தையாம்!
தமிழனை சிங்களவனுக்கு பிடித்து கொடுத்தவன், தமிழரின் நிலத்தை சிங்களவனுக்கு தாரைவார்த்த (கச்சத்தீவு) தெலுங்கரான கருணானிதி உலகத் தமிழினத்தின் தலைவராம்!
தமிழரைச் சுரண்டி தமிழ்மண்ணில் மலையாளிகளை வளர்த்து விட்டவரான மா.கோ.ரா புரட்சித் தலைவராம்!
தமிழரின் போர்வாள் தெலுங்கன் வை.கோ.வாம்!
இந்த இழிவான நிலை உலகத்தில் எந்த இனத்திற்காவது ஏற்பட்டிருக்கிறதா?
பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது தமிழினம்!
விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது தமிழினம்!
மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன், மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன் என்று மரணத்தை தழுவிய மாவீரன் குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்!
உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும், உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக்குறித்தும் உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்!
உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை தலைமை தாங்கி நடாத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்!
சிந்திப்போம் தமிழர்களே!
தமிழால் ஒன்றுபடுவோம்! தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்! தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து இனத்தால் ஒன்றுபடுவோம்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது அகவ நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்!
இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்!, புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்!!
நன்றி : தமிழர் களம் . இணையத்தளம்
திங்கள், டிசம்பர் 06, 2010
“தமிழியம்”இதழ் வெளியீட்டு விழா
தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் “தமிழியம்”இதழ் வெளியீட்டு விழா மதுரையில் 05-12-10 ஞாயிறு மாலை மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது. திரு.பொன்.மாறன் வரவேற்பில் திருவாளர்கள் “தேமதுரத்தமிழோசை” ஆசிரியர் தமிழாலயன், சோ. சேது ரத்தினம் ஆகியோர் முன்னிலையில் திரு.பறம்பை அறிவன் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. ”தமிழியம்”முதல் இதழை “வெங்காலூர் வெடிவால் சித்தன்” புலவர் மகிபை திரு.பாவிசைக்கோ வெளியிட, திரு.அரசேந்திரன் பெற்றுக்கொண்டார். வாழ்த்துரையில் திருவாளர்கள் பாவலர் இராமச்சந்திரன், புலவர் தமிழ்க்கூத்தன், பொறிஞர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்த்தேசியத்தின் தேவை குறித்து உரையாற்றினர். “எழுகதிர்”இதழாசிரியர் திரு. அரு.கோ. சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது, ”திராவிடத்தால் தமிழன் வீழ்த்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை எண்ணிப் பாருங்கள். இந்தியத்தேசியம் என்பது ஒரு மாயை. அது எப்போதும் தமிழனுக்கு எதிராகவே இருந்து வந்திருக்கிறது. சுதந்திர காலம் முதல் இன்று வரை, ஜவர்ஹர்லால் நேரு முதல் சோனியாகாந்தி வரை தமிழினம் வஞ்சிக்கப் பட்டிருக்கிறது. ஆகவே, இந்தியம் எனும் போலித்தேசியத்தால் தமிழன் பழிவாங்கப்பட்ட நிலையில் கொஞ்சமும் குறைவின்றித் திராவிடமும் தமிழனை வஞ்சித்துவிட்டது. முப்படை வைத்து, தமிழை நீதிமொழியாக்கி, தமிழனுக்கென இராணுவம், காவல்துறை அமைத்து, மிகப்பெரிய வல்லரசு நாடுகளான சீனா, இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கூட்டு இராணுவ உதவியுடன் வந்த சிங்கள இராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட தமிழ்த் தேசியத்தலைவன் பிரபாகரனின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க உதவிய இந்தியமும், திராவிடமும் தமிழினத்தின் எதிரிகள்! மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட காலத்தில் தமிழக எல்லை வரையறுக்கப்பட்ட போது, தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதிகளான, தற்போது கேரளப்பகுதிகளான இடுக்கி, திருவனந்தபுரம், மூணாறு மற்றும், கர்நாடகப் பகுதிகளான கோலார், வெங்காலூர் (பெங்களூரு), மற்றும் ஆந்திர மாநிலப்பகுதிகளான சித்தூர், திருப்பதி போன்றவைகளைத் மிழ்நாட்டுடன் இணைக்க வேண்டுமென்று எந்த “திராவிடத்தந்தை”யும் கோர வில்லை. ம.பொ.சி. போராடவில்லை என்றால் இன்று திருத்தணி நமக்கு இல்லை. நேசமணி போராட வில்லை என்றால் நமக்கு குமரி மாவட்டம் இல்லை. இராஜகோபாலாச்சாரி இல்லையென்றால் நமக்கு சென்னைப் பட்டணம் இல்லை. தமிழகத்தின் எல்லைப்பிரச்சனையில் தந்தை பெரியார் கூட தமிழனுக்காக குரல் கொடுக்கவில்லை. மாறாக மலையாளிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தார். 1944ல் சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சி “தமிழர் கழகம்” என பெயர் மாற்றப் பட்டது. மதிய உணவுக்குப்பின் “தமிழர் கழகம்” ”திராவிடர் கழகம்” எனப் பெயர் மாற்றப்பட்டு, அது பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. 1927ல் “தமிழ்நாடு தமிழருக்கே” என்று குரல் கொடுத்த தந்தை பெரியார், இந்திய விடுதலைக்குப் பின், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் “தமிழ்நாடு தமிழருக்கே” என்று குரல் கொடுத்தார். சென்னைராஜதானியில் இருந்து கேரளம், கர்நாடகம், ஆந்திரம் பிரிந்த பின்னர் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற அவரின் கோரிக்கை பலனற்றுப் போயிற்று. ”திராவிடம்” என்று ஓர் இனம் இல்லவே இல்லை. இல்லாத இனத்தைச் சொல்லி, அந்த இனத்துக்கென ஒரு நாடு வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, பின்னர் அதையும் கைவிட்டு, இன்று திராவிடம் எனும் பெயரால் தமிழனின் பூமி சுரண்டப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்? தொண்ணூறு ஆண்டுகால தமிழக வரலாற்றில், சுப்பராயன், பி.டி.இராசன், காமராசர், பன்னீர்சசெல்வம் ஆகியோர் மட்டுமே தமிழ்ச் சாதியைச் சேர்ந்த முதலமைச்சர்கள். அதிலும் இடைகால முதல்வர்களாக பி.டி.இராசனும், பன்னீர்ச் செல்வமும்! என்ன கேவலம்? இந்த நிலை ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் உண்டா? தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டாமா? திராவிடம் எனும் பெயரால் தமிழரல்லாதார் தமிழகத்தை ஆள அனுமதிக்கக் கூடாது. மதுரை விமான நிலையத்துக்கு தமிழனான பசும்பொன் தேவர் பெயர் வைக்க யோக்கியதை யில்லை. ஆனால் யாரையும் கேட்காமல் அரசு தலைமையகத்துக்கு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் எனும் தெலுங்கர் பெயரை வைக்கும் தமிழக முதல்வர் தான் ஒரு தெலுங்கர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கூறியது போல “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!” என்ற வைர வரிகளைத் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்லும் இதழாகத் “தமிழியம்” வளர வாழ்த்துக்கள்!”
திரு. பொற்கைப்பாண்டியன் நன்றி கூறினர். திருவாளர்கள் உ.அரசுமணி, நெடுஞ்சேரலாதன் ஆகியோர் நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து அரப்பா தமிழன்.
ஞாயிறு, டிசம்பர் 05, 2010
ஓவியங்கள் விற்பனைக்கு - 8
இங்கே காணும் ஓவிங்கள் அனைத்தும் நேர்த்தியான முறையில் சட்டம் போடப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது. இந்த ஓவியங்கள் விற்கும் தொகையிலிருந்து ஒரு பகுதி கரூரில் இருக்கும் நமது சக்தி தாய் தமிழ் பள்ளியின் கட்டிட பணிக்காக செலவிடப்படும் என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறோம் .
ஓவியங்கள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
மா. முருகானந்தம் ,
லலிதா கலைக்கூடம் ,
எண்: 5, திருவள்ளுவர் நகர் , 4 வது தெரு ,
வேலுசாமிபுரம், கருவூர் . 639002.
அலைபேசி : 9843955627