வெள்ளி, டிசம்பர் 17, 2010

சயாம் - பர்மா மரண ரயில் பாதை


ஜப்பானின் வல்லரசிய வெறிக்கு பலியான 1,50,000 தமிழர்களின் துயர வரலாற்றை அறிவோம் . ''சயாம் - பர்மா மரண ரயில் பாதை '' மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு என்ற சமூக வரலாற்று ஆய்வு நூல் கடந்த 2009 ஆம் ஆண்டு சீ.அருண் என்பவரால் எழுதப்பட்டு வெளிவந்திருகிறது . அந்த நூலை தமிழர்கள் பலர் படித்திருக்க மாட்டார்கள் . அப்படியே படித்திருந்தாலும் அதை பற்றி இப்போது பேசி என்ன பயன் என்றும் இருப்பார்கள் . அந்த அளவுக்கு அடிமையாக இருப்பதிலே அதிக சுகம் கண்ட இனம் தமிழினம் . படித்து விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்கள் அந்த நூலை மற்றவர்களும் வாங்கி படிக்க செய்யலாம் . இந்தியா என்ற ஒற்றை பார்வை இன்று மட்டுமல்ல அன்றும் நம்மை அழிய செய்திருக்கிறது. அந்த அழிவையும் மறைத்துவிட்டது, ஏனனில் நாம் தமிழர்கள் என்பதால் மட்டுமே ! நேதாஜி படையணியில் வீரம் செறிந்த மகளிரும் , ஆண்களும் தமிழர்களே அதிகமாக இருந்துள்ளனர் , ஆனால் ஏனோ இறந்துபோன தமிழர்களின் சோக வரலாற்றை இருட்டடிப்பு செய்துவிட்டார் , காணாமலும் போய் விட்டார் . இப்போது ஈழத்தில் நடப்பது இன படுகொலை . தமிழர்கள் கொல்லபடுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல நேச நாடுகளுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சொத்தை காரணத்துக்காக ஆயுத உதவி செய்தது. இங்கிருக்கும் மீனவர்கள் இறந்தபோதும் மௌனம் காக்கிறது . அன்றும் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இந்தியர்கள் மௌனமாய் இருந்திருகிறார்கள் . ஏனெனில் நம் இனம் வேறு அவர்களின் இனம் வேறு என்பதில் அவர்கள் தெளிவாய் இருக்கிறார்கள் . நாம் மட்டுமே இந்தியராக கற்பிக்கப்பட்டோம்!! நம்மை அடிமைகளாக வைத்திருகின்றனர்.

ஆனால் அமெரிக்கர்கள் பலி தீர்துகொண்டனர். ஜப்பான் மீது அணுகுண்டு வீசினர் . இந்த நூலில் ஜப்பானியர்களின் வல்லரசு வெறியை படிக்கையில் அந்த தாக்குதல் சரியே என்றும் எண்ணத்தோன்றுகிறது. இப்போதும் ஜப்பான் இலங்கையில் தமிழர்கள் அழிய ஆயுத உதவி செய்வது மத நோக்கில்தான் என்பதை நமக்கு இந்த நூல் புரிய வைக்கிறது . இந்தியாவை விட்டு எப்போதோ விலகி இருக்க வேண்டிய தமிழினம் இன்றும் இந்திய தேசியம் பேசிகொண்டிருப்பது வெட்க கேடானது .
தமிழர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டிய நூல் . இன பற்று கொள்ளாதவரை எந்த மாயைகளில் இருந்தும் தமிழினம் விடுதலை காண்பது அரிது .

நூல் கிடைக்குமிடம் : தமிழோசை பதிப்பகம் ,
21/8 , கிருஷ்ணா நகர்,
மணியகாரம் பாளையம் சாலை ,
கணபதி , கோவை . 641012.
பேச ; 9788459063

விலை ; ரூ .130/-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக