வெள்ளி, டிசம்பர் 10, 2010

சீமானுக்கு சிறை கற்றுத்தந்த பாடம் என்ன ?


செந்தமிழன் சீமான் விடுதலை நமக்கு மகிழ்வான நிகழ்வுதான் . ஆயினும் அவருக்கு சிறை கற்பித்த படம் என்ன ? என்பதும் இனி அவரின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதும் தொக்கி நிற்கும் கேள்விகள் . ஆம் திராவிடம் நினைத்தால் இங்கே எதை வேண்டுமானாலும் சாதிக்கும் அதற்கும் இங்குள்ள அறிவார்ந்த தமிழர்கள் சிலர் துணைபோவர். சீமான் தமிழர் என்பதற்காகவே சிறையில் தள்ளியது குள்ளநரி கூட்டம் . ஆயினும் அவர் நம்பியிருப்பது இன்னமும் திராவிட எச்சங்களைதான். இது ஏதோ அவர்மீது குற்றம் சுமத்துவதாக தெரியலாம் . அவர் மீது களங்கம் கற்பிப்பது நமக்கு வேலையில்லை . அவரின் இயக்கத்தில் பெரும்பாலான பொறுப்பாளர்கள் தெலுங்கர்களாகவும் , மாற்று இனத்தவராகவும் இருப்பது தான் நம்மை நெருடச் செய்கிறது. இவ்வளவு காலம் கழித்து தமிழர்களுக்கு குரல் கொடுக்க நாம் தமிழர் இயக்கம் துவங்கப்பட்டது அதிலும் தமிழர் அல்லாதவரே பொறுப்புக்கு வரும் போது அது எப்படி தமிழருக்கு சேவை செய்யும் இயக்கமாக இருக்கமுடியும் என்பது தான் கேள்வி . அதற்கு பதில் அவர் ''நாம் திராவிடர் '' என்று தனது இயக்கத்துக்கு பெயர் வைத்துவிடலாமே! இது குறித்து அவர் சிந்திப்பரானால் ..... எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே ! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!! என்ற பாவேந்தரின் பாடல் வரிகளை மீண்டும் ஒரு முறை சிந்திக்கட்டும் .

மா. முருகானந்தம் , கருவூர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக