புதன், டிசம்பர் 22, 2010

அந்நிய மொழி திணிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கருவூர். 22.12.2010 புதன்
தமிழ்நாடு அரசின் அந்நிய மொழித் திணிப்பு ஆணையை கண்டித்து தமிழ் சமூகங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்விற்கு வழக்குரைஞர் திரு .இரா.சீவானந்தம் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது , சிறுபான்மையினர் மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் , உருது ஆகிய மொழிகள் பள்ளிகளில் இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் கற்பிக்கப்படும் என்பது தமிழ் மொழி வளர்சிக்கு விரோதமானது மட்டுமல்ல நிரந்தரமாக மாற்று மொழியினருக்கு வேலை வாய்ப்பை இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தி கருணாநிதியின் திராவிட அரசு ஏற்படுத்தி தருகிறது என்றும் . இனிமேல் ஏதோ ஒரு சூழலில் திராவிடர்களின் மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது போன்றவற்றை தமிழர்களும் கட்டாயமாக படிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளிவிடும். அது மட்டுமல்ல தமிழர்களின் வேலை வாய்ப்பு கேள்விக் குறியாகிவிடும். தமிழே தெரியாத ஒருவன் தமிழ் நாட்டில் படித்து பட்டங்கள் பெற்று இங்கேயே வேலை வாய்ப்பும் பெற்று நிரந்தரமாக வாழ வழி வகுக்கும் இந்த ஊழல் கருணாநிதி அரசு மற்ற கேரளா, கர்நாடக , ஆந்திர மாநிலங்களில் சிறு,பெரும்பான்மையினராக வாழும் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி தர முடியுமா? என்றும் அங்கே தமிழ் வழி பள்ளிகளை நிறுவ முடியுமா? என்றும் கேள்விகளை தொடுத்தார்! அடுத்து பேசிய திரு. மேகநாதன் அவர்கள் , தமிழர் தலைவர் என்று கூறிகொள்ளும் கருணாநிதி அரசு தமிழை ஆட்சிமொழியாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், இங்கே மலையாளமும் , தெலுங்கும் ,கன்னடமும் உருதும் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கினால் தமிழர்களின் நிலை என்னாவது ? ஏற்கனவே பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன . வாழ்க தமிழ் என்று கூறும் கருணாநிதி தாய் தமிழ் பாடத்திட்டங்களை கட்டாயமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் , அலுவகங்களில் இன்னமும் ஆங்கிலம் தான் கோலோச்சுகிறது! என்றும் இந்த சிறுபான்மையினர் மொழிகள் கற்பதனால் யாருக்கும் எவ்வித பலனும் இல்லை என்றும் மாணவர்களுக்கு மேலும் கல்விசுமை கூடுமே தவிர வேறில்லை என்றும் பேசினார் . அடுத்து பேசிய திருவள்ளுவர் தமிழ் சங்கத்தின் பொறுப்பாளர் திரு. ரவிச்சந்திரன், தமிழ் நாட்டில் திராவிடம் தனது இறுதிகட்ட சூழ்ச்சி வேலைகளை செய்கிறது . இந்த ஆணையானது ரத்து செய்யப்படவேண்டிய ஒன்றும் . தமிழ் வழி கல்வியினை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் எனவும் பேசினார். அடுத்ததாக தமிழர் களத்தின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. தமிழ் முதல்வன் பேசுகையில் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கான தமிழர் ஆட்சி வரும் வரை திராவிட அரசியல் வந்தேறிகள் வாழவும் ஆளவும் தங்களது சொந்த நலன்களுக்காக தமிழர் அழிவதை பற்றி கவலை கொள்ள மாட்டார்கள் என்றும், இந்த நிலை மாற தமிழர்கள் தங்கள் சாதி , மதம், கடந்து இன பற்று கொண்டு ஒன்று திரண்டு போராட முன் வர வேண்டும் .என்றும் வரும் தேர்தலில் திராவிட அரசியலுக்கு முற்றுபுள்ளி வைப்போம் எனவும் பேசினார். இறுதியாக கருவை முருகு நன்றி கூறி கண்டன முழக்கமிடபட்டு ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது. கூட்டத்தில் தமிழர் முன்னணியை சேர்ந்த திரு. தமிழ் சேரன் , திரு. முருகேசன், செந்தில் உள்ளிட்ட தமிழ் பற்றாளர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்பாட்டத்தை கரூர் மாவட்ட தமிழர் களம் ஏற்பாடு செய்திருந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக